Posts

Showing posts with the label God of the Quran

குர்ஆன் கூறும் இறைவன் YDM vs TNTJ 2

Image
 முந்தைய பாகம்  Part 1 29. புகாரி 6069 இலே தன் சமூதாயத்தில் பாவம் செய்யும் அனைவரும் மன்னிக்கப்படுவர் பகிரங்கப்படுத்துவோரை தவிர என்று கூறப்பட்டதை வைத்து அல்லாஹ் பாவம் செய்ய தூண்டுவதாக உருட்டுகிறார் . பொதுவாக மனிதன் பாவம் செய்பவனே.   பாவம் செய்வான் என அறிந்தே இறைவன் படைத்தான் ... அதனால் விசுவாசிகள் சிறு பாவங்களை மன்னிப்பதும் பெரும்பாவங்களுக்கு தண்டனைக்கு பின் மன்னிப்பதும் இறைவனின் கடமை தானே தன் பாவத்தை பகிரங்கப்படுத்தி தற்பெருமை கொள்ளாதவரை அவன் மன்னிக்கப்படுவது ஆதரவு வைக்கப்பட கூடியது. ஆனாலும் தனித்திருக்கும் போது இப்படி பெரும்பாவம் புரிகிறவர்கள் மறுமையில் மலையளவு நற்செயல்களோடு வருவார்கள் ஆனால் அல்லாஹ் அதை தூசிகளாக ஆக்கி நரகத்தில் தள்ளிவிடுவான் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது-இப்னுமாஜா 4245 ஏன் முஸ்லிம்களை இறைவன் மன்னிப்பான் ? ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவி கட்டுப்படாமல் நடக்கிறாள் ஆனால் ஒழுக்க விசயத்தில் அவனுக்குரியதை அவனுக்கு மட்டுமே செலுத்துகிறாள் அவனை மட்டுமே நேசிக்கிறாள். இவளை அவன் முழுமையாக அறிந்தால், அவளை மன்னிக்க மாட்டான...