குர்ஆன் கூறும் இறைவன் YDM vs TNTJ 2

 முந்தைய பாகம் Part 1



29.புகாரி 6069 இலே தன் சமூதாயத்தில் பாவம் செய்யும் அனைவரும் மன்னிக்கப்படுவர் பகிரங்கப்படுத்துவோரை தவிர என்று கூறப்பட்டதை வைத்து அல்லாஹ் பாவம் செய்ய தூண்டுவதாக உருட்டுகிறார்.

பொதுவாக மனிதன் பாவம் செய்பவனே.  பாவம் செய்வான் என அறிந்தே இறைவன் படைத்தான் ... அதனால் விசுவாசிகள் சிறு பாவங்களை மன்னிப்பதும் பெரும்பாவங்களுக்கு தண்டனைக்கு பின் மன்னிப்பதும் இறைவனின் கடமை தானே

தன் பாவத்தை பகிரங்கப்படுத்தி தற்பெருமை கொள்ளாதவரை அவன் மன்னிக்கப்படுவது ஆதரவு வைக்கப்பட கூடியது. ஆனாலும் தனித்திருக்கும் போது இப்படி பெரும்பாவம் புரிகிறவர்கள் மறுமையில் மலையளவு நற்செயல்களோடு வருவார்கள் ஆனால் அல்லாஹ் அதை தூசிகளாக ஆக்கி நரகத்தில் தள்ளிவிடுவான் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது-இப்னுமாஜா 4245

ஏன் முஸ்லிம்களை இறைவன் மன்னிப்பான்? ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவி கட்டுப்படாமல் நடக்கிறாள் ஆனால் ஒழுக்க விசயத்தில் அவனுக்குரியதை அவனுக்கு மட்டுமே செலுத்துகிறாள் அவனை மட்டுமே நேசிக்கிறாள். இவளை அவன் முழுமையாக அறிந்தால், அவளை மன்னிக்க மாட்டானா?

இன்னொரு கணவனுக்கு வேறொரு மனைவி இருந்து அவள் அனைத்திலும் அவனுக்கு அடிபணிகிறாள். ஆனால் வேறொருவனை காதலித்து அவனோடு விபச்சாரமும் செய்கிறாள். இதை முறையாக அறிந்த கணவன் அவளை மன்னிப்பானா?

அதுபோன்றே இறைவனும் தன் அடியார்களை தம் தண்டனைகளை பெற்ற பின் மன்னிப்பான்.

கொலைசெய்து மாற்றான் மனைவியை பறித்தபோதும் தேவன் தாவீதை மன்னித்தாரே

பிறகு அதே பெண்ணை மீண்டும் கர்ப்பமாக்கிய போதோ குழந்தையை நேசித்தாரே

2 சாமுவேல் 12:13, 24 IRVTam

[13] அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, யெகோவா உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார்.

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

https://bible.com/bible/1899/2sa.12.13-24.IRVTam

இதையே தேவன் மன்னித்தார் என்றால் ஏன் தம் பாவங்கள் மறைக்கப்பட்ட நபர்கள் மன்னிக்கப்படுவதை விமர்சிக்க வேண்டும்?

சங்கீதம் 32:1 IRVTam

[1] எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.

https://bible.com/bible/1899/psa.32.1.IRVTam

சங்கீதம் 32:2 IRVTam

[2] எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

https://bible.com/bible/1899/psa.32.2.IRVTam

சங்கீதம் 85:2 IRVTam

[2] உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா

https://bible.com/bible/1899/psa.85.2.IRVTam

இப்படி இதே விசயத்தை வைத்துக்கொண்டு??

30.குர்ஆனில் முரண்பாடு என கலாலா பற்றி குர்ஆன் 4:12இலே சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு  என்றும் 4:176இலே பாதி என்றும் உள்ளது. இது முரண்பாடு என்கிறார்

 ஒரு செயலை செய் என்று கட்டளையாக கூறப்படுவதில் இரண்டு விசயங்கள் மாற்றமாக வந்தால், இரண்டும் வெவ்வேறு காலத்திற்குரியது என்றோ அல்லது இரண்டும் வெவ்வேறானது என்றுமே அர்த்தமாகும்.

இதிலே 4:12 கூறுவது தாய்வழி சகோதரி (தந்தை வேறு), 4:176 கூறும் சகோதரி ஒரே தாய் தகப்பனின் பிள்ளையான உடன் பிறந்த சகோதரி. இதுவே சட்டமானது.

இதேபோல் பைபிளில் சகல மிருகங்களும் உணவு என்கிறார் (ஆதி 9:3) ஆனால் அதே பைபிளிலே உபாகமம் 11:4-20 இலே எல்லா மிருகங்களும் உணவாக எடுக்க கூடாது என்கிறார்.

அத்தோடு முரண்பாடு என்றால் கர்த்தர்

முரண்பாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?

தாவீதை ஜனங்களை கணக்கெடுக்க ஏவியபடி கணக்கிட்டபோது பட்டயம் தூக்கும் இஸ்ரேல் ஜனத்தார் 8 லட்சமும், பட்டயம் தூக்கும் யூதா ஜனத்தார் 5 லட்சம் பேர் இருந்தனர் (2 சாமுவேல் 24:1,9)

இதே தாவீதை ஏவியது சாத்தான் தான். அப்போது கணக்கிட்ட போது, பட்டயம் தூக்கும் இஸ்ரேல் ஜனத்தார் 11 லட்சம், பட்டயம் தூக்கும் யூதா ஜனத்தார் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் (1 நாளாகமம் 21:1,5)

8,00,000 & 5,00,000 & தேவனா?, 11,00,000& 4,70,000 & சாத்தானா?

 

 

31..ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார் என்று (17:15), மற்றவர் பாவத்தை சுமப்பார்கள் என்று (குர்ஆன் 5:29,16:25, புகாரி 3335) என முரண்படுகிறது என்கிறார்.

பொதுவாக ஒருவர் பாவத்தை மற்றொருவர் சுமக்க மாட்டார்.

ஆனால் வழிகெடுத்தால் வழிகெடுத்த பாவத்திற்கு தண்டனையாக , கொலை செய்தால் அதற்குரிய தண்டனையாக, பாவத்தில் முன்மாதிரியாக இருந்தால் அதற்கான தண்டனையாக அதற்கேற்ற பாவங்கள் சுமத்தப்படும். அதுவும் அவர்களது பாவங்களுக்கான தண்டனை..

 

இப்படி தாவீது செய்த பாவத்துக்கு தண்டனையாக பொது ஜனங்களுக்கு தண்டனையை வருவிக்கிறார். அதிலே தேவன் கொடுத்த தேர்வு,

ஏழு வருடம் பஞ்சம் வரவேண்டுமா மூன்று மாதம் எதிரிகள் வச்சு செய்ய வேண்டுமா அல்லது மூன்று நாட்கள் நோயால் தேவன் வச்சு செய்ய வேண்டுமா என்பதே அதன் தேர்வுகள்- 2 சாமுவேல் 24:13

மூன்று வருடம் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதம் எதிரிகள் வச்சு செய்ய வேண்டுமா அல்லது மூன்று நாட்கள் நோயால் தேவன் வச்சு செய்ய வேண்டுமா என்பதே அதன் தேர்வுகள்- 1 நாளாகமம் 21:11-12

இதே தேவன் தான் பாவம் செய்யும் ஆதாதுமாவே சாகும் என்கிறவர் (எசேக்கியேல் 18:4,20). ஆனால் இங்கே தாவீதின் பாவத்திற்காக இஸ்ரவேலருக்கு தண்டனை கொடுத்து கொன்றார் (1 நாளாகமம் 21:14, 2சாமுவேல் 24:15)

முரண்பாடுனா இப்படி இருக்க வேண்டும்.

32.முந்திய விவாதத்தில் குர்ஆன் 7:137 இலே பிர்அவ்னும் அவனது அவனுடைய சமூதாயமும் கட்டயவற்றை அழித்து விட்டதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் பிரமிட்கள் இன்னும் இருக்கிறதே என்கிறார்

இவ்வசனம் மூஸா நபியும் சம்பந்தப்பட்ட பிர்அவ்னும் அவனது படையினரும் கட்டியவற்றை அழித்ததாகவே கூறுகிறது.

இப்போதுள்ளவை அந்த பிர்அவ்னும் அவனது சமூதாயமும் கட்டியவை என்பதை இவர்கள் நிரூபித்து விட்டு தான் இவ்வாதத்தை வைக்க வேண்டும்.

 

பைபிள் கி.மு. 2458 இலே உலகம் முழுதும் பெருவெள்ளம் ஏற்பட்டு எட்டு மனிதர்களும் சில பறவை மிருக ஜோடிகளுமே எஞ்சின என கதை விடுகிறது.

இதைவிட வரலாற்றுப் பிழை வேறு எது? அக்காலத்தில் எகிப்திலே ஆட்சி தொடர்ச்சியாக நடந்துள்ளதை வரலாறு காண்பிக்கிறது.

(நோவாவின் 600ம் வயதில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்திலிருந்து ஆபிரகாம் வரை 292 வருடங்கள் (ஆதி 11:10-26).

ஆபிரகாம் 100வது வயதில் ஈசாக்கை பெற்றார்(ஆதி 21:5),ஈசாக் 60வது வயதில் யாக்கோபை பெற்றார்(ஆதி 25:26) யாக்கோபு 130வது வயதில் எகிப்துக்கு குடும்பத்தோடு போனார் (ஆதி 47:9) இஸ்ரேலியர் எகிப்தில் 430 வருடம் தங்கினர் (யாத்திராகமம் 12:40-41), இஸ்ரேலியர் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து சொலமோன் ராஜாவாகிய 4ம் வருடம் 480 வருடங்கள் (1 இராஜாக்கள் 6:1) ஆக 1200 வருடங்கள்..

 சொலமோன் ராஜாவானது கி.மு 970.

ஆக அனைத்தையும் கூட்டினால்  (966+1200+292= 2458. அதாவது கி.மு 2458)

அப்போது தான் தேவன் தன் வில்லை மேகத்தில் வைத்தார் என்கிறது பைபிள். ஆதி 9:11-14.

ஆனால் வானவில் உருவாவதோ ஒளிமுறிவினால். வேடிக்கையாக அது வில் வடிவமே கிடையாது. அது பூரணமான வட்டம் ஆகும். பூமியிலிருந்து பார்க்கும்போது அதன் கீழ் பகுதி தெரிவதில்லை.. மலைமேலே சென்று பார்த்தால் பூரணமாக தெரியும்.

 

33.குர்ஆன் 2:125,3:97 மக்காவில் நுழைந்தால் அபயமளித்கப்படும் என்பது நிறைவேறா தீர்க்கதரிசனம் என்கிறார்

இது சட்டமாகும். அதாவது அங்கே யுத்தம் செய்யவோ கொலை செய்யவோ கூடாது அபயம் கொடுக்க வேண்டும் என்பதே அதன் கருத்து

அதை நபிகளாரது கருத்து தெளிவாக விளக்கியுள்ளது.

இங்கே கொலை செய்ய கூடாது யுத்தம் செய்ய கூடாது எனக்கு முன் யாருக்கும் இங்கே யுத்தம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. எனக்கும் பகலின் சிறு நேரமே அனுமதிக்கப்பட்டது. எனக்கு பின்பு யாருக்கும் இங்கே யுத்தம் செய்ய அனுமதி இல்லை. இதன் முட்செடிகள் அகற்றப்பட கூடாது மரங்கள் வெட்டப்பட கூடாது. ஆனால் கொலை செய்யப்பட்டால் உறவினர் பழிவாங்குவது அல்லது நட்டயீடு பெறுதல் ஆகியவற்றில் ஒன்றை தெரிவு செய்துகொள்ளலாம் (புகாரி 112,மேலும் இதே கருத்தில் புகாரி 1349,1833,1834,2090,2434,3189,4313,6880)

கொலை நடக்காது என்றோ யுத்தம் நடக்காது என்றோ விபத்துக்கள் நடக்காது என்றோ கூறப்படவில்லை.

 

 

கள்ள தீர்க்கதரிசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தாவீதின் வம்சத்தில் எப்போதும் ஆட்சி இருந்துகொண்டே இருக்கும். அரசர் வந்துகொண்டே இருப்பார் என்றார் கர்த்தர்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:16 TAERV

[16] உனது குடும்பத்தினர் ராஜாக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

https://bible.com/bible/3154/2sa.7.16.TAERV

ஆனால் கி.மு. 586 இதே சேதேக்கியா என்ற தாவீது மகனான ராஜாவை பாபிலோனியர் பிடித்து சென்ற பின் இதுவரை 2611 வருடமாகிவிட்டது. தாவீதின் வம்சத்தில் எந்த ராஜாவும் இப்போது இல்லை.

இனி இயேசு ராஜாவாக வந்து ஆயிரம் வருடம் ஆட்சி செய்வார் என கதைவிட கூடாது . ஏனெனில் 2600+ வருடங்களாக தேவன் கூறியது நிறைவேறவில்லை.

34.குர்ஆன் 24:32 திருமணம் முடித்தால் செல்வந்தர்களாக ஆக்கிவைப்பான் என்பதால் அது நிறைவேறாதது என்கிறார்

ஆனால் இது வறுமைக்கு பயந்து திருமணம் முடிக்காதிருப்போருக்கு ஆர்வமூட்டுவதே இது.

அடுத்ததாக செல்வமென்பது போதுமென்ற மனமே என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள்  (புகாரி 6446,6447)

-முஸ்லிமாக இருந்து முறையான நோக்கத்தில் இறைவனது வாக்குறுதியை நம்பி திருமணம் முடிப்பவர் வசதியில்லாதவராக இருந்தாலும் இறைவன் போதுமாக்கிவைப்பான். காரணம் உணவளிப்பவன் இறைவனே.

ஆனாலும் சோதனைக்காக செல்வங்களில் உயிர்களில் இழப்புகள் ஏற்பட்டதே தீரும் (குர்ஆன் 2:155, 3:186)

நபிகளார் எளிமையாக இருந்ததற்கு காரணம், தனக்கு கிடைப்பதை தர்மம் செய்து விடுவதால் தான் . ஏனெனில் உஹது மலையளவு தங்கம் இருந்தாலும் அதிலே தேவைகள் போக எதுவும் எஞ்சியிருப்பதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்கள் (புகாரி 7228). அவ்வாறே தர்மம் செய்துவிடுவார்.

ஆகவே வறுமைக்கு பயந்து திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டாம் என ஊக்குவிக்கும் வசனமே இது. பொய்யான வாக்குறுதி அல்ல.

பொய்யான வாக்குறுதி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

விசுவாசிகள் விசத்தை குடித்தாலும் விச ஜந்து கடித்தாலும் எந்த பாதிப்பும் வராது என இயேசு சொல்கிறார்:

மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:17-18 TAERV

[17] விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், [18] அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.

https://bible.com/bible/3154/mrk.16.17-18.TAERV

இதை நம்பி அநேக விசுவாசிகள் செத்து போகின்றனர்... இதற்காகவே சிலர் இதை உவமை என்று கதை விடுவார்கள்.

-பழைய ஏற்பாட்டு பொய் வாக்குறுதிகள்

நீதிமொழிகள் 10:3-4, 27, 30 IRVTam

[3] யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். [4] சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

[27] யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

[30] நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

https://bible.com/bible/1899/pro.10.3-30.IRVTam

இயேசுவே பசியால் வாடி அத்திமரத்தில் பழம் இல்லாத காலத்தில் பழம் தேடி போனார். உலகில் அநேக குழந்தைகள் பசியால் இறக்கின்றன.  எத்தனையோ பக்திமான்கள் குறுகிய ஆயுளில் இறந்து போகிறார்கள். எத்தனையோ திருடர்களும் விபச்சாரகர்களும் நீண்ட ஆயுள் வாழ்கின்றனர்.. எத்தனையோ சோம்பேறிகள் செல்வந்தர்களாக உள்ளனர். சுருசுருப்பான எத்தனையோ வேலைக்காரர்கள் உணவின்றி அலைகிறார்கள்.

35.ஐந்துவிடயங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்பதிலே கர்ப்பப்பைக்குள் இருப்பதையும், மழை வருவதையும் சேர்த்து கூறுகிறது இப்போது மனிதனால் அறிய முடியும் ஆகவே இது பொய் என்றனர்

-அல்லாஹ் வெளிப்படுத்தாமல் எதுவும் யாருக்கும் தெரியாது.

கர்ப்பத்திலுள்ள சிசுவிடம் வானவர் அனுப்பி வைக்கப்பட்டு அவரிடம் அக்குழந்தை பற்றி அனைத்தும் எழுதப்படும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 6595)

மழை பெய்விக்கும் வானவர்களுக்கு இறைவன் கட்டளையிட்ட படி அறிந்துகொள்வார்கள்

உயிரை கைப்பற்றும் வானவருக்கோ மனிதன் மரணிக்க முன் எங்கே மரணிக்க போகிறான் என அறிவிக்கப்பட்ட படி தான் உயிரை எடுப்பார்.

சிலபோது  வானவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு ஜின்கள் சில மறைவானவற்றை அறிந்துகொள்வது போல (புகாரி 7561, முஸ்லிம் 4487 (2229 ஆங்கிலம்)), 

இறைவன்  அறிவிப்பதாலும் உழைப்பு மற்றும் முயற்சியாலும் சிலவற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில்

கர்ப்பப்பையிலுள்ளதை கருவிகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடிய நேரம் வரை அது ஆணா பெண்ணா கறுப்பா வெள்ளையா என அறியமுடியாது. படைப்பு அதன் பூரண நிலையை அடைந்த பின்பே இதை அறிய முடியும்.  ஆனால் இறைவனுக்கு மட்டுமே படைப்பு முழுமையடைய முன்பே அறிய முடியும். அதாவது இறைவன் வெளிப்படுத்திய பின்னரே ஏனையோருக்கு அறிய முடியும். அப்போதும் கருவிகளால் தவறுகள் ஏற்படவும் முடியும். இக்கருவிகளால் வயிற்றிலுள்ள சிசுவின் எல்லாவற்றையும் அறிய முடியாது . அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவே அதனாலும் முடிகிறது.-- இதுகூட இறைவன் வெளிப்படுத்தியது தான் (மனிதனின் செயல்களை படைப்பவனும் இறைவன் தான்-37:96)

அத்தோடு மழை வருவதை அதன் அடையாளங்கள் மேகங்களின் நகர்வுகளை வைத்து கணிப்பதன் மூலம் ஊகித்து கணிக்க முடியும். ஆனால் பூரணமாக அறிய முடியாது. சிலநேரம் கணிப்பு தவறாகவும் போகலாம்.

ஆகவே அவற்றை பூரணமாக இறைவனை தவிர வேறு யாரும் அறிய முடியாது என்பது உண்மையே. இறைவன் வெளிப்படுத்தும்போதே ஏனையோருக்கு அறிய முடியும்

பைபிள் படி கர்த்தருக்கு எல்லாமே தெரியுமா?

மனிதனை படைத்த போது நல்லதாக கண்டார்

ஆதியாகமம் 1:31 TAERV

[31] தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.

https://bible.com/bible/3154/gen.1.31.TAERV

மனிதன் குழப்பம் பண்ணியதாலும் அவனது எண்ணம் எல்லா காலத்திலும் தீயதாகவும் இருப்பதால் படைத்ததற்காக வருத்தப்பட்டார்

ஆதியாகமம் 6:5-7 TAERV

[5] பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். [6] கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். [7] எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.

https://bible.com/bible/3154/gen.6.5-7.TAERV

பிறகு அவனது எண்ணம் எப்போதும் தீயது தான் என்பதை உணர்ந்துகொண்டு இனிமேல் அழிக்க மாட்டேன் என முடிவெடுக்கிறார்:

ஆதியாகமம் 8:21 TAERV

[21] கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன்.

https://bible.com/bible/3154/gen.8.21.TAERV

எப்படி ஞானம்? செமயாக இருக்குல்ல?

 

36.குர்ஆன் 3:178 இலே அல்லாஹ் குற்றவாளிகளை தாமதப்படுத்துவது அவர்கள் பாவத்தை அதிகப்படுத்தி நோவினை தரும் வேதனையை கொடுப்பதற்கு எனறிருப்பதை காட்டி , கடவுள் இப்படி இருப்பாரா என்கிறார்?

*திருந்தாத குற்றவாளிக்கு அவனது பாவத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் அதனால் கடுமையாக தண்டிக்கவும் செய்வான். குற்றம் செய்பவன் தன் சுயதேர்விலேயே செய்கிறான். அதனால் இறைவன் நிந்திக்கப்படுபவனல்ல.

ஆனால் நல்லவர்களுக்கோ தம்மை திருத்திக்கொள்ள  அவகாசமாக இருக்கும்

இவர்களது வாதம் எவ்வளவு வேடிக்கையானது எனில்,

இறைவன் என்றாலே அவன் எதிர்காலத்தை அறிந்தவனாகவே இருப்பான். குற்றம் செய்பவனுக்கு தண்டனையை பிற்படுத்தினால், அவன் இன்னும் அதிகம் செய்வான் என அறிந்தே பிற்படுத்துவதாக தானே இருக்கும். அப்படி செய்தால் பாவத்தை நிறைவாக்குவதற்காக தானே பிற்படுத்துகிறான் என்று தெளிவாகவே வந்து விடுமே

ஆனாலும் குற்றவாளி தன் குற்றச் செயல்களுக்கே தண்டிக்கப்படுவான். நிர்ப்பந்திக்கப்பட்டதினால் அல்ல.

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

அதே அல்லாஹ், தமக்கு தாமே அநீதி இழைத்துக் கொண்ட அடியார்களை அழைத்து அவனுடைய கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் அனைத்து பாவங்களையும் (திருத்திக் கொண்டால்) மன்னித்துவிடுவான் என அழைக்கப்படுகிறது (குர்ஆன் 39:53)

அத்துடன் தன்னிடம் நேர்வழியை கேட்குமாறும் அப்படி கேட்டால் நேர்வழி காட்டுவதாகவும் வாக்களிக்கிறான் (முஸ்லிம் 5033)

உயிர் தொண்டைக்குழியை அடையும்வரை மனந்திருந்தி மீளுவோரை மன்னிக்க காத்திருக்கிறான் (குர்ஆன் 4:17-18, திர்மிதீ 3537, இப்னுமாஜா 4253)

ஆக ஆயுட்காலம் முழுவதும் மனம் திருந்துவதற்கும் பாவத்தை அதிகப்படுத்துவதற்கும் அவகாசம் உண்டு.  பாவத்தை அதிகப்படுத்துபவன் அதை அதிகப் படுத்திக் கொள்ளலாம். தன்னை திருத்திக்கொள்ளாதவர்களுக்கு ஆயுள் கூட கூட பாவம் அதிகரிக்க தானே செய்யும். அது அவன் சம்பாதிப்பது தானே தவிர நிர்ப்பந்திக்கப்படுவதல்ல

இதே போல் இன்னும் குற்றம் பெருகும் படி தேவனே அவகாசம் கொடுத்ததாக பைபிள் கூறுகிறது:

ஆதி 15:16 IRVTam

[16] நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார்.

https://bible.com/bible/1899/gen.15.16.IRVTam

முழு இனத்தையும் அழித்துப் போடுவதற்காக கர்த்தர் அதன் ராஜாவின் இருதயத்தை கடினப் படுத்தினார். இதை காரணமாக வைத்து பிள்ளைகளையும் கொன்றார்கள்:

உபா 2:30-34 IRVTam

[30] ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார். [31] அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார். [32] சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான். [33] அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து, [34] அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.

https://bible.com/bible/1899/deu.2.30-34.IRVTam

 

கர்த்தர் தாமதிப்பதும் இதற்கு தான்:

வெளிப்படுத்தின விசேஷம் 22:11 IRVTam

[11] “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

https://bible.com/bible/1899/rev.22.11.IRVTam

 

*உண்மையில் இயேசு அப்படி கருதவில்லையா?..  தன்னை ஏற்காதவன் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது என்ற எண்ணமுள்ள கடும் அன்பாளர்:

மாற்கு 4:11-12 IRVTam

[11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12]  அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறதுஎன்றார்.

https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam

அதாவது அவன் திருத்தவும் கூடாது. மன்னிக்கப்படவும் கூடாது. கண்டும் காணாதவனாக கேட்டும் உணராதவனாக இருக்க வேண்டும். இது தான் இயேசுவின் அன்பு

*துன்மார்க்கனை படைத்ததே தீங்கு நாளுக்காக தான்

நீதிமொழிகள் 16:4 IRVTam

[4] யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

https://bible.com/bible/1899/pro.16.4.IRVTam

37.இணைவைக்காதவன் நரகம் போக மாட்டான் என்ற ஹதீஸின்படி திருடுவது விபச்சாரம் செய்வது சரியானது என்று அர்த்தம் இருப்பதாக தற்குறித்தனமாக உலரினார்

 

-திருடனின் கை துண்டிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை குர்ஆன் வழங்குகிறது-5:38

-விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்றும் (குர்ஆன் 17:32), அவ்வாறு விபச்சாரம் செய்தவர் திருமணமாகாதவர் எனின் 100 கசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும் தண்டனையாக கிடைப்பதோடு திருமணமானவர் எனின் கல்லெறிவதன்மூலம் மரணதண்டனை கிடைக்கும் (புகாரி 2695-2696,2724-2725,)

-மறுமையிலும் இதுபோன்று குற்றம் செய்த முஸ்லிம்கள் நரகத்தில் தம் பாவத்திற்கேற்ப தண்டனை பெற்று வெளியேறுவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன (புகாரி 44,7439,7440,6550 முஸ்லிம் 326 (193e), 322 (193a,b), 316 (191a), 306-310, (185a),302 இப்னுமாஜா 60) அத்தோடு ஏகத்துவவாதிகளை இறைவன் நகரத்திலிருந்து தண்டனை முடிந்து வெளியேற்றுவான் (திர்மிதீ 2597)

இப்படி பாவங்களினால் நரகம் போகிறவர்கள் இருப்பார்கள். ஆனால் அதிலே நிரந்தரமாக இருக்கமாட்டார்கள் என்பதால் தான் நரகம் புக மாட்டார்கள் என்றும் சுவர்க்கம் புகமாட்டார்கள் என்றும் கூறுகிறது. ஏனெனில் அவர்கள் தற்காலிகமாக தண்டிக்கப்படுவார்கள் என்பதே இதன் விளக்கம்

-ஏன் முஸ்லிம்களை மன்னிக்க வேண்டும்?

ஒரு கணவனுக்கு கட்டுப்படாமல் மாறு செய்யும் மனைவியானவள் ஒழுக்க விசயத்தில் அவனை தவிர வேறு யாருக்கும் எந்த இடமும் கொடுக்காமல் இருக்கிறாள் என்பதை அக்கணவன் அறிந்தவனாக இருக்கிறான் என்றால் அக்கணவன் அவளை மன்னிக்காமல் இருப்பானா?

அதுபோன்றே தன் கணவனுக்கு அனைத்திலும் கீழ்படியும் மனைவியானவள் உடலுறவிலும் காதலிலும் தன் கணவன் அல்லாத வேறொருவனுடன் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை அறிந்த கணவன் அவளை பொருந்திக் கொள்வானா?

கணவனை விட ரோசமுள்ள இறைவன் தன் படைப்பு விசயத்தில் இப்படி நடப்பதை விமர்சிக்க முடியாது

 

-பைபிளில் கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் பரிசம் கொடுத்தால் போதுமானது என கூறுவதால் நன்றியுடன் விபச்சாரம் கூடும் என எடுத்துக்கலாமா?

யாத்திராகமம் 22:16-17 IRVTam

[16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam

-இதேபோல் கன்னியை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக்காசுகளை கொடுத்து அவளை காலம் முழுதும் பலவந்தப்படுத்திக்கலாம்/திருமணம் செய்து உறவு கொள்ளலாம் என சட்டம் கூறுவதால், கன்னியை கற்பழிப்பை தேவன் சரி காண்கிறார் என எடுத்துக்கலாமா?

உபாகமம் 22:28-29 IRVTam

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam

-அத்தோடு எகிப்தியரின் சொத்துக்களை கொள்ளையடிக்க தேவன் சொன்னதால் கொள்ளையடிப்பதை தேவன் சரி காண்கிறார் என எடுத்துக்கலாமா?

யாத்திராகமம் 3:21-22 IRVTam

[21] அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. [22] ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.

https://bible.com/bible/1899/exo.3.21-22.IRVTam

*பைபிளில் சுவர்க்கம் நரகம் பற்றி விரிவாக இல்லை என்பதால் , அதை ஆதாரமாக எடுத்து இஸ்லாத்தை விமர்சிப்பது தற்குறித்தனமில்லையா?

38.யூதர்கள் மீது வறுமையை விதித்ததாக 2:61குர்ஆன் கூறுவது நிறைவேறாத தீர்க்கதரிசனம் என்கிறார்

யூதர்கள் மீதான ஏழ்மை ,இழிவு அல்லாஹ்வின் கயிற்றையும் மனிதர்களின் கயிற்றையும் பிடித்துக் கொண்டால் அவர்களுக்கு  இருக்காது எனும் கருத்தில் குர்ஆன் 3:112 கூறுகிறது.

அல்லாஹ்வின் கயிறு என்பது முஸ்லிம்களின் தயவில் இருத்தல். ஜிஸ்யா கொடுத்துக்கொண்டு செல்வமுடையோராகவும் இருந்தனர்.

மனிதர்களின் கயிறு என்பது கிறிஸ்தவர்கள் போன்றோரின் தயவில் இருத்தல்

இப்போது அவர்களுக்கு அமேரிக்கா ஐரோப்பா நாடுகள் உதவி பிச்சை போடுவதால் தான் வறுமையற்ற நிலை

முஸ்லிம்களோடு இருந்தபோது முஸ்லிம்கள் நல்ல முறையில் நடத்தியபோது வசதியாக இருந்தனர்.

அதுவல்லாத நிலையில் அவர்கள் ஒடுக்கப்பட்டு இழிவடைந்தோராகவே இருந்தனர் என்பதற்கு வரலாறு சாட்சி.

கள்ள தீர்க்கதரிசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஆமோஸ் தீர்க்கதரிசிமூலம்  கி.மு. 8ம் நூற்றாண்டில் இஸ்ரவேலர் நாட்டிலிருந்து பிடுங்கப்பட்ட பின் தேவன் நாட்டுவார் என்றும் அதன் பின் ஒருபோதும் பிடுங்கப்பட மாட்டார்கள் என கர்த்தர் கூறினார்:

ஆமோஸ் 9:15 IRVTam

[15] அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.

https://bible.com/bible/1899/amo.9.15.IRVTam

இதே கருத்தை எரேமியாவும் தன் புலம்பலில் பாடியுள்ளார்.

புலம்பல் 4:22 IRVTam

[22] மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது; அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்; மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

https://bible.com/bible/1899/lam.4.22.IRVTam

ஆனால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனியர்களால் பிடுங்கப்பட்டு மீண்டும் நாட்டப்பட்ட பின்னால் ரோமர்கள் வந்து பிடுங்கினார்கள். 1900 வருடங்கள் பிடுங்கப்பட்டிருந்தனர். இப்போது மீண்டும் பிடுங்கப்பட காத்திருக்கிறார்கள்.. யூதர்களை ஹிட்லர் சிறைப்பிடித்து கொன்று போட்டதற்கு வரலாறு சாட்சி

வேடிக்கையாக இயேசுவை மோசேயை போன்ற தீர்க்கதரிசி என்றும் அவரை ஏற்காதோர் அழிந்துபோவர் என புதிய ஏற்பாடு தீர்க்கதரிசனம் கூறுகிறது. அதுவும் பொய்யாய் போய் யூதர்கள் இன்னும் இருக்கிறார்கள்:

 அப்போஸ்தலர் 3:22-23 IRVTam

[22] மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள். [23] அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.

https://bible.com/bible/1899/act.3.22-23.IRVTam

இயேசுவை விசுவாசிக்காதோர் மீது தேவன் கோபமாயிருக்கிறார் என்கிறது புதிய ஏற்பாடு. தேவன் கோபமாயிருந்தும் தேவனை ஏற்றவர்கள் என நம்பியுள்ள கிறிஸ்தவர்களாலேயே பாதுகாக்கப்படுகிறார்கள்:

யோவான் 3:36 IRVTam

[36] குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

https://bible.com/bible/1899/jhn.3.36.IRVTam

39..ரமழான் மாதம் வந்துவிட்டால் சைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது என்றும் ஆனால் அக்காலத்தில் குண்டுவெடிப்பு வன்முறை வேறு குற்றங்கள் நிகழுதே என்று கூறுகிறார்

 

பாவங்களை சைத்தான் மட்டுமே செய்விப்பதில்லையே... சைத்தான் தீயதை நோக்கி வெறுமனே அழைப்பது மட்டுமே (குர்ஆன் 14:22)

ஏற்கனவே அதற்கு பதிலளித்தவன் அதே நிலையில் தான் இருப்பான் தன்னை தானே திருத்திக் கொள்ளும் வரைக்கும்.

மனிதனின் உள்ளமே பாவத்தை நோக்கி செல்லக்கூடியது தான்...(குர்ஆன் 12:53)

இயல்பாகவே குற்றம் செய்பவன் குற்றம் செய்வான். அதற்கும் சைத்தான் விலங்கிடப்படுவதற்கும் சம்பந்தம் கிடையாது

-சாத்தான் கர்த்தரையே ஏவிவிட்டு தீங்கு செய்ய தூண்டுபவன் என்றும் அவன் சொன்னபடியே தேவனும் அவன் பேச்சைக்கேட்டு செய்தார் என்றும் பைபிளே கூறுகிறது:

யோபு 2:3-7 IRVTam

[3] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். [4] சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். [5] ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். [6] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார். [7] அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

https://bible.com/bible/1899/job.2.3-7.IRVTam

சாத்தான் செய்வித்த தீங்கை வருவித்தவரே கர்த்தர் தான்:

யோபு 42:11 IRVTam

[11] அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன்பு அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனுடன் உணவருந்தி, யெகோவா அவன்மேல் வரச்செய்த எல்லா பாதிப்பினால் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

https://bible.com/bible/1899/job.42.11.IRVTam

தேவனையே தூண்டிவிடும் சாத்தானை விலங்கிடுவதால் பாவம் குறையவில்லை என குற்றம் சாட்டலாமா? தேவனே அதை செய்விப்பாரே.

 

40.ஆயிஷா () அவர்களை உம் வருங்கால மனைவி என அல்லாஹ் காட்டியதாக கொச்சையாக பேசுகிறார் வயோதிப போதகர்

 

*நடக்கவிருப்பதை முன்கூட்டியே கனவில் காட்டியிருந்தார்.. திருமணம் முடித்த பின்பே இத்தகவலை நபிகளார் தன் மனைவியிடமே கூறினார்

-நபிகளாருக்கு அன்னை ஆயிஷா திருமணம் பேசப்படும் முன்பே முத்யிம் இப்னு அதீ என்பவருடைய மகனுக்கு பேசப்பட்டிருந்தார்-- அத்தகைய திருமணப்பேச்சு செய்த காலத்தில் தான் நபிகளார் திருமணம் பேசினார்கள் (முஸ்னத் அஹ்மத் 25769)

-அக்காலத்தில் 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் இருந்தனர் (புகாரி 2664 இன் தலைப்பு)

-ஆயிஷா () அவர்களை 6 வயதில் திருமணம் செய்து ஒன்பதாம் வயதில் தான் நபிகளாரின் வீட்டுக்கு வந்து தாம்பத்யம் நிகழ்ந்தது(புகாரி 5133,5158)

-குடும்பவாழ்வுக்கு ஏற்ற உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் (அபுதாவுத் 3903, இப்னுமாஜா 3324

-அவரை அவரது தாய் அலங்கரிக்க அனுப்பிய போது அலங்கரித்த பெண்களும் வாழ்த்து கூறினார்கள் (புகாரி 5156). காரணம் அவர்குடும்பவாழ்வுக்கு தகுதியாக இருந்ததால் தான்.

-இதனால் அன்னை ஆயிஷா () பாதிக்கப்படவோ உரிமைகள் பறிக்கப்படவோ இல்லை... மாறாக அதன் பின்பும் தன் தோழியருடன் விளையாடுபவர் ஆக விடப்பட்டார் (புகாரி 6130), விரும்பும் அளவுக்கு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236), அவருடன் ஓட்டப்பந்தயம்த்தில் ஈடுபடும் அளவுக்கு நபிகளார் வயதிற்கேற்ப நடந்தார்கள்- அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979. அத்தோடு அவரையோ வேறு மனைவியையோ நபிகளார் அடித்ததேயில்லை என கூறுபவரும் அன்னை ஆயிஷா தான் (அபூதாவூத் 4786, இப்னுமாஜா 1984). அத்தோடு நபிகளாரை விட தன் இச்சையை கட்டுப்படுத்த வேறு யாராலும் முடியாது என்று கூறும் அளவுக்கு நபிகளார் நடந்தார்கள் (புகாரி 302,1927)

-ஆயிஷா () அவர்கள் நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவும் அவர் விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா அவர்களே இருந்தார்கள் (புகாரி 4789,6024,6030,6004)

ஆக இப்படி அன்னை ஆயிஷா அவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ அக்கால மக்களுக்கோ இதில் பிரச்சினை இல்லாதபோது ஏன் இவர்கள் கதற வேண்டும்?

அத்தோடு இளவயது திருமணங்கள் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றே:

. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.

https://cyh.rrchnm.org/primary-sources/24.html#:~:text=By%201880%2C%20the%20first%20date,of%2012%20or%2013%20years

.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது

https://www.asahi.com/sp/ajw/articles/14934890

.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்

https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent

ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?

-கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (புகாரி 5136,6946,6948)

சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.

பைபிளில் தான் சொந்த மகளை விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது யாத்திராகமம் 21:7-10

பைபிளில் எங்கேயும் எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை. மாறாக சொந்த மகளையே விற்பனை செய்வதை கூட கர்த்தர் ஆதரித்துள்ளார்-யாத்திராகமம் 21:7-10

-பைபிளிலே ஆகாஸ் ராஜா 11 வயதிலேயே அப்பாவாக ஆகியுள்ளார். அவன் 36 வயதில் இறந்தார் (2 இராஜாக்கள் 16:2), அவன் மரணித்த பின் அவனது மகன் எசேக்கியா ராஜாவானான் (2 இராஜாக்கள் 16:20) அப்போது அவனின் வயது 25 (2 இராஜாக்கள் 18:2). 

(உடனே அவன் கெட்டவன் என்று கதைவிட கூடாது. இப்படி திருமண வயது எதுவும் இருக்கவில்லை என்பதற்கு ஆதாரமே இது)

-ரிஃப்கா பாட்டியை ஈசாக்கு தாத்தா முடித்த போது அவரது வயது 3 என யூத அறிஞர் ராசி ஆதியாகமம் 25:20இற்கு விளக்கம் கூறுகிறார்.(https://www.sefaria.org/Rashi_on_Genesis.25.20.2?lang=en ) இது இன்றும் யூதர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே

-9வயது ஆண் பிள்ளையும், மூன்றுவயது பெண்குழந்தை உடலுறவுக்கு தகுதியானவர்கள் என தல்மூத் கூறுகிறது (avodah zarah 37a :1-2 (https://www.sefaria.org/Avodah_Zarah.37a.1?lang=en )

-அத்தோடு மரியாள் கர்ப்பமானது 12-14 வயதிலே என கத்தோலிக்க என்சைக்லோபீடியா கூறுகிறது https://www.newadvent.org/cathen/15464b.htm  (தலைப்பு Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph ))

மல்லாக்கப் படுத்துக் துப்பும் நிலமை தான் இவர்களுடையது.

41.சுவர்க்கத்தில் சிறுவர்கள் வேலையாட்களாக இருப்பார்கள் என்றும் இது உலகில் குற்றமாக உள்ளது என்றும் இத்தகைய சுவர்க்கத்திற்கு போக தன் சொத்தை வழங்க வேண்டும் என்று குர்ஆன் 9:111 கூறுவதாகவும் இப்படி காசு கொடுத்து சுகமனுபவிக்க போகுமிடம் எது என்று கேட்கிறார் வயோதிப போதகர்

உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அது குற்றமாக பார்க்கப்படுகிறது.

 

ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை... உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?.. இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும்??

 

*உலகில் நன்மை செய்தால் தான் சுவர்க்கம்.. தீமை செய்தால் நரகம் தான் கிடைக்கும்.

தப்பு செய்வதற்காக காசு கொடுத்து செல்வதும், இறைவனது திருப்தியை நாடி நன்மை செய்து அதனால் சுவர்க்கம் பெறுவதும் ஒன்று அல்லவே.

-கர்த்தர் முன்னோரின் தப்பிற்காக குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்லச்சொன்னவர் (1 சாமுவேல் 15:2-3)

இதை நம்பிக்கொண்டு , சுவர்க்கத்தில் ஊழியம் செய்வதற்கென்றே சிறுவர்களை இறைவன் படைப்பதை விமர்சிக்கலாமா?

உண்மையில் சிறுவர் துஷ்பிரயோகம் அவர்களை கொல்லுவதைவிடவா இருக்கும்?

 

-தனக்கு பலி கொடுத்து நறுமணத்தை கர்த்தருக்கு நுகரச்செய்யாவிட்டால் ஜனத்திலிருந்து அழிந்து போவான் கர்த்தரே சொல்லியுள்ளாரே:

லேவி 17:3-6 IRVTam

[3] இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், [4] முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான். [5] ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். [6] அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.

https://bible.com/bible/1899/lev.17.3-6.IRVTam

இதை வைத்து கொண்டு விமர்சிக்க முடியாது அல்லவா?

42.இத்தா விசயத்திலும் முரண்படுகிறது என்று குர்ஆன் 2:234 இலே இத்தா நான்கு மாதம் பத்து நாட்கள் என்றும் 65:4இலே மூன்று மாதம் என்றும் இருப்பதாக கூறுகிறார்

 

குர்ஆன் 2:234 கணவன் மரணித்த பெண்ணின் இத்தாவை கூறுகிறது. அது நான்கு மாதமும் பத்து நாட்கள்

குர்ஆன் 65:4 விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் இத்தாவை கூறுகிறது. மாதவிடாய் ஏற்படாதோருக்கும் நின்றுவிட்டவர்களுக்கும் இத்தா மூன்று மாதங்கள்

இதிலே முரண்பாடு எதுவுமே இல்லை. தற்குறித்தனமான வாதமே இது.

முரண்பாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து சொலமோன் ராஜா வரை எத்தனை வருடங்கள்?

-476 வருடம் (ஆலயம் கட்டியது நான்காம் ஆண்டு 480)

1 இராஜாக்கள் 6:1 IRVTam

[1] இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

https://bible.com/bible/1899/1ki.6.1.IRVTam

-570+ வருடங்கள்

அப்போஸ்தலர் 13:17-22 IRVTam

[17] இஸ்ரவேலராகிய இந்த மக்களுடைய தேவன் நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாக வாழ்ந்தபோது அவர்களை உயர்த்தி, தமது வல்லமையுள்ள கரத்தினால் அங்கிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, [18] நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து, [19] கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து, [20] பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார். [21] அதற்குப்பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாக அவர்களுக்குக் கொடுத்தார். [22] பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார்.

https://bible.com/bible/1899/act.13.17-22.IRVTam

40 வருடம் அலைந்து திரிதல்+ 450 வருடங்கள் சாமுவேல் வரை+ 40 வருடம் சவுல் ஆட்சி +பின்பு தாவீது.. அவரும் 40 வருடம் (1 நாளாகமம் 29:27 என பழைய ஏற்பாடு  சொல்கிறது

கூட்டினால்,570 வருடங்கள்.

இதை நியாயாதிபதிகள் கூறும் கணக்குகளோடு பார்த்தால் வேறொரு கணக்கு வரும்.

43.மிஃராஜ் விசயத்தில் ஒவ்வொரு வானத்திலும் யாரை கண்டனர் என்பதிலே இரண்டாம் வானம் நான்காம் வானம் ஐந்தாம் வானம் ஆகியவற்றில் மாற்றி மாற்றி அறிவிப்புகள் கூறப்படுவதை வைத்து இதை எப்படி நம்புவது தொழுகை கொடுக்கப்பட்ட மிஃராஜின் நிலை இது தான் என்கிறார்.

 

நபித்தோழரிடமிருந்து கேட்டு ஹதீஸ் தொகுப்பாளர் வரையிலுள்ள அறிவிப்பாளர்கள் தவறிழைப்பதால் இது ஏற்பட்டுள்ளது. அதிலே உறுதியானது முதல் வானத்தில் ஆதமும் இரண்டாம் வானத்தில் ஈஸா ,யஹ்யா ஆகியோரும் மூன்றாம் வானத்தில் யூஸுப் நபியும் நான்காவது வானத்தில் இத்ரீஸ் நபியும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் நபியும் ஆறாம் வானத்தில் மூஸா நபியும் ஏழாம் வானத்தில் இப்ராஹீம் நபியும் இருந்தனர்.

அறிவிப்பாளர் வானத்தின் இடத்தை மறதியால் மாற்றிக் கூறுவதால் அது பொய் என்றாகாது.

முரண்பாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஈசாயிற்கு எத்தனை மகன்கள்

1.ஏழு மகன்கள். ஏழாவது தாவீது

1 நாளாகமம் 2:13-15 IRVTam

[13] ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும், [14] நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும், [15] ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.

https://bible.com/bible/1899/1ch.2.13-15.IRVTam

2.எட்டு மகன்கள். எட்டாவது தாவீது

1 சாமுவேல் 16:10-13 IRVTam

[10] இப்படி ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: யெகோவா இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; [11] உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான். [12] ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார். [13] அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

https://bible.com/bible/1899/1sa.16.10-13.IRVTam

இது தானே முரண்பாடு. உடனே ஈசாயின்  மகளின் மகனை ஈசாயின் மகன் என நினைத்து சொன்னார் என கதைவிட கூடாது

44.யூதர்களை கொன்றொழிப்பீர்கள் எனும் கருத்தில் வரும் ஹதீஸ்

முதலில் யூதர்களே போரிடுவார்கள் (புகாரி 3593) என கூறப்படுகிறது

தம்மோடு யுத்தம் செய்யும் மக்களை எதிர்த்து கொல்லுவது எப்படி தப்பாக அமையும்?

நபிகளார் சிறுவர்கள் பெண்கள் போரிடாத கூலியாட்களை கொல்லக்கூடாது (புகாரி 3014-3015, அபூதாவூத் 2669) என தெளிவாக கூறியுள்ளார்கள் . ஆக போரிடுவோருடன் தான் போர்.

கர்த்தர் அமெலேக்கியரை கொன்றொழிக்க சொல்லி குழந்தைகளையும் கொல்ல சொன்னார்

1 சாமு 15:2-3 IRVTam

[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam

இப்படி போரிடாதோரையே கர்த்தர் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொல்லும்போது யுத்தம் செய்யும் யூதர்களை கொன்றால் விமர்சிக்க முடியுமா?

45.யூதகிறிஸ்தவர்களை நண்பர்களாக எடுக்க கூடாது, அவர்களுக்கு மாற்றம் செய்வது, அவர்களை பாதையின் ஓரம் வரை ஒதுக்குவது

-முஸ்லிம்களோடு யுத்தம் செய்யாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்யலாம்- குர்ஆன் 60:8

-அத்தகைய உறவினரை சேர்த்துக்கொள்ளலாம், உறவை பேணி வாழலாம்-புகாரி 5978-5979, 5981, 5990

-நட்பு பாராட்ட கூடாது என்பதற்கான காரணம்- எதிரிகள் தமக்கு சக்தி கிடைக்கும் போது நட்பையோ உறவையோ பேணமாட்டார்கள். தீங்கிழைப்பதில் குறைவைக்கவும் மாட்டார்கள் . பொதுவாக முஸ்லிம்களும் காஃபிர்களாக ஆகிவிட வேண்டும் என விரும்புவார்கள்(குர்ஆன் 60:2)

சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள் (குர்ஆன் 2:217)

நண்பர்களாக எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தம் இரகசியங்களை அவர்களிடம் கூற, அது பாதிப்பில் முடியும் (குர்ஆன் 60:1)

ஆக இத்தகைய தற்காப்பு நிலையில் அவர்களோடு நட்பு பாராட்டுவது அவர்களது பிழைகளை ஆதரிப்பதாக அமையும்.

ஆனாலும் அவர்களில் முஸ்லிம்களுக்கு எதிராக தீங்கிழைக்காதோருக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை (குர்ஆன் 60:8)

-அத்தோடு அவர்களின் உலக நலவுக்காகவும் நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம். நபிகளார் அவ்வாறு செய்தார்கள்-புகாரி 6397,4774

-அவர்களோடு வியாபாரம் செய்யலாம். அவர்களிடம் கடன் வாங்கலாம்- நபிகளார் மரணிக்கும் போது யூதரிடம் கடன் வாங்கி தன் கவசத்தை அடைமானம் வைத்திருந்தார்கள்-புகாரி 2916,2068,2096

*அவர்களுக்கு மாற்றம் செய்வதன் நோக்கம், நிராகரித்த மக்களுக்கு ஒப்பாக இருக்க கூடாது என்ற நோக்கில் தான். இல்லாவிட்டால் அவர்களை போலவே முஸ்லிம்களும் வழிதவறி போவார்கள்

*பாதையின் ஓரம் வரை ஒதுக்குவது குறித்து,  பாதையில் போகிறவர்களை எல்லாம் அப்படி செய்ததாக எந்த தகவலும் இல்லை. மாறாக முஸ்லிம்கள் பாதையில் உள்ளபோது அவர்கள் வந்தால் , ஓரமாக செல்ல வைக்க வேண்டும் என்பது நிராகரிப்புக்கான தண்டனை. நடுவால் வழி விட்டால் அவர்களுக்கான கண்ணியமாக அது இருப்பதோடு, அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை இழக்க செய்வதாக அமையும். அதாவது கண்ணியத்தை இறைவனின் மார்க்கத்தை ஏற்பதில் தேடாமல் விட்டுவிடுவர்

ஆனாலும் அவர்களின் மீது சுமக்க முடியாதவற்றை சுமத்தி அவர்களின் உரிமைகளை பறித்தால் அத்தகையோருக்கு எதிராக நானே வழக்காடுவேன் என நபிகளார் கூறியுள்ளார்கள் அபூதாவூத் 3052.

அவர்களை அடிமைகளை போல நடத்துக்கூடாது என்றே இஸ்லாம் கருதுகிறது. அதனால் தான் புகாரி 3052 இற்கு இதே தலைப்பை இடுகிறார்.

அத்தகையோரை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் புகாரி 3166

இதைவிட வேறு என்ன வேண்டும்?

 

-தப்பான கொள்கையுடையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அவர்களின் பாவங்களில் பங்காளியாக ஆவாய் (2 யோவான் 1:10-11)

2 யோவா 1:10-11 IRVTam

[10] ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். [11] அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

https://bible.com/bible/1899/2jn.1.10-11.IRVTam

-சிலைவணங்கியை விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து, அத்தகைய உறவினரோடு பழகவோ கூட்டாக உண்ணவோ கூடாது  அவனை துரத்திவிட வேண்டும்.(1 கொரிந்தியர் 5:11,13)

1 கொரி 5:11, 13 IRVTam

[11] நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.

[13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

https://bible.com/bible/1899/1co.5.11-13.IRVTam

-மாற்றுமதத்தவர்களை விட்டு வெளியேறி பிரிந்துவிட வேண்டும் (2 கொரிந்தியர் 6:17

2 கொரி 6:17 IRVTam

[17] எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

https://bible.com/bible/1899/2co.6.17.IRVTam

இது அவர்களிடம் அதிகாரம் இல்லாத போது கூறப்பட்டவை

 

ஆனால் பழைய ஏற்பாட்டில் அவர்களுக்கு அதிகாரம் இருந்தபோது நலவு நாட கூடாது என்றும் துரத்திவிட வேண்டும் என்றும் கூறுகிறார் கர்த்தர்:

எஸ்றா 9:12 IRVTam

[12] ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

https://bible.com/bible/1899/ezr.9.12.IRVTam

-மாற்றுமதத்தை ஏற்றுக்கொள்ளாத படிக்கு அவர்களை கொன்று போட்டு விடுமாறும் சொன்னார்:

உபாகமம் 20:16-18 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam

46.யூதனையோ கிறிஸ்தவனையோ பிடித்து இவன் தான் உன்னை நரகத்திலிருந்து மீட்டான் என ஒப்படைப்பது

யூதரும் கிறிஸ்தவரும் தம் பாவங்களினால் தான் நரகம் போவார்கள். காரணம் முகம்மது நபியை பற்றி கேள்விப்பட்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ மரணிப்பவர் நரகம் புகுவார்- முஸ்லிம் 240

ஆக முஸ்லிம்களின் பாவத்தை அவர்கள் சுமப்பதும் அவர்களுக்கான ஒரு தண்டனையே!

-எந்தவொரு மனிதனுக்கும் சுவர்க்கத்திலும் நரகத்திலும் ஒவ்வோர் இடம் உண்டு. (புகாரி 1338) ஒருவன் நரகம் புகுந்தால் அவனது சுவர்க்க இடத்தை சுவர்க்கவாதிகள் வாரிசாவார்கள். அதேபோல் சுவர்க்கம் புகுந்தால் அவனுடைய நரக இடத்தையும் நரகவாதி பெற்றுக்கொள்வான் (இப்னுமாஜா 4341).

அதன்படி தம் பாவத்தால் நரகம் போகும் யூத கிறிஸ்தவர்கள் இறைவனின் கருணையால் சுவர்க்கம் போகும் முஸ்லிம்களை நரகத்திலிருந்து மீட்கும்பொருளாவார்கள்.

-கர்த்தர் சவுலின் குடும்பத்தின் பாவத்திற்காக அவர்கள் செத்துப்போன பின் தாவீதின் காலத்திலே பஞ்சத்தை ஏற்படுத்தினார்- 2சாமுவேல் 21:1

-ஆகான் என்பவன் திருடியதற்காக  சக இஸ்ரவேலர்கள்மீது கர்த்தர் கோபமுற்று தோற்றுப்போக வைத்தார் கர்த்தர் -யோசுவா 7:1-7

-தாவீது பாவம் செய்ததற்காக எதுவுமறியாத பாலகனை கொன்றார் கர்த்தர் - பிறகு அதே பெண்ணை மீண்டும் புணர்ந்த போது பிறந்த குழந்தையை நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

-இதற்கு மேலதிகமாக நீதிமானை மீட்கும் பொருளாக துன்மார்க்கன் இருப்பான் என்கிறது பைபிள்:

நீதிமொழிகள் 21:18 IRVTam

[18] நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.

https://bible.com/bible/1899/pro.21.18.IRVTam

இதுபோன்றே யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களை மீட்கும்பொருளாவார்கள்.

47.சனிக்கிழமை மீன் பிடித்த யூதர்களை குரங்குகளாக பன்றிகளாக ஆக்கியதாக குர்ஆன் கூறுவது

*இறைவனது கட்டளையை நன்கறிந்துகொண்டே மீறியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

எச்சரிக்கப்பட்டும் அதை செய்துவந்தனர். அதனாலே தண்டனை கடுமையானது (குர்ஆன் 7:163-165

(சனிக்கிழமை வேலை செய்தால் கொல்லும்படி தோராவே சட்டம் போட்டுள்ளது. அந்த சட்டத்தை மீறியதால் தண்டனை)

-அண்ணீயை கர்ப்பமாக்காமல் விந்தை கீழே சிந்தியதற்காகவே கொன்றுள்ளார் கர்த்தர்:

ஆதி 38:8-10 IRVTam

[8] அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: “நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு” என்றான். [9] அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். [10] அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

 https://bible.com/bible/1899/gen.38.8-10.IRVTam   

 

-மோசே தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்யாததால் அவனை கொல்லப்பார்த்தார். நல்லவேளையாக அவரது மனைவி செஞ்சுட்டார்

யாத் 4:24-26 IRVTam

[24] வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார். [25] அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு முன்பாக போட்டு: “நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள். [26] பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.

https://bible.com/bible/1899/exo.4.24-26.IRVTam

-விழப்போன பெட்டியை பிடிக்கப்போனதற்காக கர்த்தர் கொன்றார்

2 சாமு 6:6-7 IRVTam

[6] அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான். [7] அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.

https://bible.com/bible/1899/2sa.6.6-7.IRVTam

*திரும்பிப் பார்த்த ஒரே காரணத்துக்காக லோத்துவின் மனைவியை கொன்றார்

ஆதி 19:26 IRVTam

[26] அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

https://bible.com/bible/1899/gen.19.26.IRVTam

 

48.குர்ஆன் மரணசாசனத்திற்கு பின் கடனை குறிப்பிடுகிறது ஆனால் முகம்மது நபியோ முதலில் கடனை நிறைவேற்ற சொன்னது

நபிகளார் குர்ஆனை விளக்கும்படிக்கு தான் குர்ஆன் இறக்கப்பட்டது -குர்ஆன் 16:44

அதன்படி வசன ஒழுங்கில் குர்ஆன் மரணசாசனம், கடன் (4:11,12) என கூறுகிறது. இப்படி சொல்வதால் அதுவே ஒழுங்கு முறை என்றாகாது

எது ஒழுங்கு முறை என நபிகளார் விளக்கி காட்டினார்கள். அதிலே முதலில் கடனை நிறைவேற்ற வேண்டும் . கடனுக்கு பின் மரணசாசனம். அதன்பின் சொத்துப்பங்கீடு

பைபிளில் காமை இளைய மகன் என கூறுகிறது. ஆனால் அவனை யாப்பேத்திற்கு முன்பே ஒழுங்கு வரிசையில் பைபிள் குறிப்பிடுகிறது:

ஆதி 5:32 IRVTam

[32] நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

https://bible.com/bible/1899/gen.5.32.IRVTam

இளைய மகன் காம்

ஆதி 9:22, 24 IRVTam

[22] அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான்.

[24] நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து:

https://bible.com/bible/1899/gen.9.22-24.IRVTam   

ஆக இப்படி சொல் ஒழுங்குவரிசையை வைத்து கேள்வி கேட்டு இதை முரண்பாடு என ஒப்புக்கொள்வார்களா?

49.கக்கூசுக்குப்போய் வந்தால் மண்ணை பூசிக் கொள்ள சொன்னது

மலஜலம் கழிக்க சென்றால் அக்காலத்தில் கற்களை டாய்லட் பேப்பரை போல பயன்படுத்தி சுத்தம் செய்வர்... காரணம் அவர்கள் வாழ்ந்தது பாலைவனம்

மண்ணினால் சுத்தம் செய்வதென்பது இறைவணக்கத்திற்காக தண்ணீரால் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் கிடைக்காத போதே கட்டளையிடப்படுகிறது. (குர்ஆன் 5:6) ஆன்மீக சட்டத்தில் காரணகாரியம் கூற முடியாது

கர்த்தர் ரத்தத்தால் சுத்தம் செய்ய சொன்னாரே

இரத்தத்தில் நோய்க்கிருமிகள் இருக்கும்போது , அதை தெளித்து சுத்தம் செய்வது எத்தகைய அறிவியல்?

லேவியராகமம் 14:50-53 TAERV

[50] அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். [51] பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். [52] குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். [53] பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.

https://bible.com/bible/3154/lev.14.50-53.TAERV

 

50.கொட்டாவி சைத்தானிடமிருந்து வருவதாகவும் , ஹா என சத்தமாக கொட்டாவி விடுபவனை பார்த்து சைத்தான் சிரிக்கிறான் என்று சொன்னது

எல்லா கெடுதிகளும் சோர்வுகளும் சைத்தானுடன் இணைத்து கூறப்படுகிறது.

சைத்தான் சிரிக்கிறான் என்று நபி சொன்னால் அது அப்படி அவன் சிரிப்பதால் தான் கூறியிருக்கிறார்.

-பைபிளில் சாத்தான் மற்றும் பிசாசுகள் மனிதனின் உடலுக்குள்ளேயே புகுந்து நோயேற்பட வைத்ததாக புதிய ஏற்பாடு சொல்கிறதே

மத்தேயு 8:28-33 பிசாசுகளை மனித உடலிலிருந்து பன்றிகளின் உடலுக்குள் மாற்றினாராம் இயேசு

மத்தேயு 17:15 வலிப்பு நோய் உள்ளிருக்கும் பிசாசால் வருகிறது

இதுபோன்று பிசாசு உடலுக்குள் புகுவதும் பேயோட்டுவதும் பைமிளிலே வைத்துக்கொண்டு, சத்தத்தோடு கொட்டாவி விடுபவனை பார்த்து சாத்தான் சிரிக்கிறான் என்பதை கேட்கலாமா?

 

51.வெள்ளிக்கிழமை மரணித்தால் கப்ர் வேதனை இல்லை என்றது

-இறைவனை நம்பியோருக்கு அந்நாளில் கிடைக்கும் விசேடமே அது.

இதை எந்த அடிப்படையில் விமர்சிக்க முடியும்??

ஏனெனில் மரண நேரத்தை தீர்மானிப்பவன் இறைவன். அதன்படி தன் நல்லடியார்களில் சிலரை வெள்ளிக்கிழமையில் மரணிக்க செய்வான். அவர்களுக்கு கப்ரில் எந்த குழப்பமும் இல்லை

ஆனால் பாவிகளுக்கோ காஃபிர்களுக்கோ அல்ல

-இயேசுவோடு சிலுவையில் மரித்த திருடன் அன்றைய தினமே இயேசுவோடு பரலோகத்தில் இருப்பான் என இயேசு சொன்னாரே

லூக்கா 23:39-43 IRVTam

[39] அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். [40] மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? [41] நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, [42] இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். [43] இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

https://bible.com/bible/1899/luk.23.39-43.IRVTam

ஆனால் இயேசுவோ அதன்பின் பரலோகம் போகாமல் நரகத்திற்கு போய் அங்கிருந்த பேய்களுக்கு உபதேசம் பண்ணியதாக பேதுரு உருட்டுகிறார்

1 பேது 3:18-19 IRVTam

[18] ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். [19] அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.

https://bible.com/bible/1899/1pe.3.18-19.IRVTam

இயேசுவுடன் மரணித்த திருடனும் வெள்ளிக்கிழமை தான் மரணித்தான். அவனை தான் அன்றைய தினமே என்னோடு பரதீசிலிருப்பாய் என இயேசு சொல்கிறார்.

இதை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கலாமா?

 

52.கற்பழிப்புக்கு நான்கு சாட்சி கேட்பதாக குர்ஆன் 4:15ஐ காட்டியது

*விபச்சாரம் செய்துவிட்டதாக அப்பெண்ணை குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவே நான்கு சாட்சிகளை கேட்கிறது (4:15)

எங்கேயோ தப்பாக வாசித்திருக்கிறான்

பைபிளோ அவள் கத்தாவிட்டால் அது கற்பழிப்பு அல்ல என்றும் விபச்சாரமே என்றும் கூறி அவளை தண்டிக்க சொல்கிறது

உபாகமம் 22:23-24 IRVTam

[23] “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால், [24] அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

https://bible.com/bible/1899/deu.22.23-24.IRVTam

வாயை பொத்திக்கொண்டு கற்பழித்தால்?

 

53.தொழுகைக்கு வராதோரை வீட்டோடு கொழுத்தி விடுவேன் இப்னுமாஜா 795

அது இஸ்லாத்தில் பெரும் பாவம் என்பதால் அவ்வாறு நபிகளார் நினைத்தார்கள். ஆனால் செய்யவில்லை....(புகாரி 644)

தொழுகையை விடுவதின் பாரதூரத்தை எச்சரிப்பதே இதன் நோக்கம்

 

தனக்கு பலி கொடுத்து நறுமணத்தை கர்த்தருக்கு நுகரச்செய்யாவிட்டால் ஜனத்திலிருந்து அழிந்து போவான் கர்த்தரே சொல்லியுள்ளாரே:

லேவி 17:3-6 IRVTam

[3] இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், [4] முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான். [5] ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். [6] அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.

https://bible.com/bible/1899/lev.17.3-6.IRVTam

 

54.அடிமையை கொன்றால் எஜமானுக்கு மரணதண்டனை இல்லை என்றது

இவ்வுலகில் மரண தண்டனை கிடைக்காது அவ்வளவே. காரணம், அடிமை என்பவன் மிகவும் பெறுமதியான சொத்து என்பதால் எஜமான் கொல்லுவது அரிது. ஆனால் மறுமையில் அநீதிக்கு தண்டனை உண்டு

இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது 

*அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662)

*அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585)

*அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) -

ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27)

*அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார்உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள்இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில்நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c)

ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22)

*தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

*அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186)

*அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும்நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192)

*பெற்றோர் உறவினர் அயலவருக்கு நலவான உபகாரம் செய்யுமாறு குர்ஆன் கூறுவதில் அடிமைகளையும் இணைத்து அவர்களுக்கும் நல்லுபகாரம் செய்யுங்கள் என்கிறது (குர்ஆன் 4:36

*அடிமைப்பெண்களுக்கும் அடிமை ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு எஜமான்களுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது (குர்ஆன் 24:32)...  தோராவும் இந்தவிசயத்தை அனுமதிக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் காயடித்து விடுவார்கள்.  அத்தோடு எவருமே  திருமணம் செய்யாது துறவிகள் போல இருப்பதே நலம் என்கிறது (மத்தேயு 19:10-12, 1கொரிந்தியர் 7:26,28,37,38)

*அடிமைகளை விடுதலை செய்வதை சிறப்பித்து, அவ்வாறு விடுதலை செய்யுமாறும் (புகாரி 1054,2503,6715) ,சம்பாதித்து தன் பெறுமதியை செலுத்தி விடுதலை பெற விரும்பும் அடிமைகளுக்கு அதற்காக வாய்ப்பளிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகிறது (புகாரி 2492)  ஆண் அடிமை பெண் அடிமை இருவருக்குமே இது பொதுவானது

.. அத்தோடு குற்றப் பரிகாரங்களில் ஒன்றாக அடிமைவிடுதலையை இஸ்லாம் ஆக்கியுள்ளது (உதாரணமாக குர்ஆன் 4:92)

இஸ்ரேலியரான ஆண் அடிமைகள் மட்டும் ஆறு வருடம் அடிமையாக இருந்துவிட்டு விடுதலை பெறலாம் என பைபிள் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:1-6)

*அடிமையாக இருப்பவர் இறைவனுக்குரியவற்றையும் தன் எஜமானுக்குரியவற்றையும் சரிவர நிறைவேற்றினால் அவருக்கு இரண்டு நற்கூலி உண்டு என்பதாக நபிகளார் கூறியுள்ளார்கள். இதை அறிவிக்கும் நபித்தோழர் இதன் சிறப்பினால் ஜிகாது செய்வதும் தாயுக்கு உபகாரம் செய்வதும் இல்லையென்றால் நானும் அடிமையாக இருப்பதை விரும்பியிருப்பேன் என்கிறார் (புகாரி 2548)

*தன் அடிமைப்பெண்ணுக்கு கற்பித்து விடுதலை செய்து அவளை திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இறைவனிடம் இரு நன்மைகள் உள்ளன என ஊக்குவிக்கிறது (புகாரி 97)

ஆனால் பைபிளோ சொந்த மகளையே அடிமையாக விற்றுப் போடும் உரிமையை தகப்பனுக்கு வழங்கியுள்ளது (யாத்திராகமம் 21:7-10)

*ஆனாலும் அடிமைகள் எஜமானின் சொத்துக்கள் என்பதால், அவர்களை வாங்குவது விற்பது கூடும்.

பைபிளும் புறஜாதியார்களை காலம் காலமாக அடிமைகளாக வாங்கி விற்று அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என்கிறது (லேவியராகமம் 25:44-46)

ஆகவே பைபிளை விட இஸ்லாம் அடிமைகள் விசயத்தில் சிறப்பாகவே போதிக்கிறது.

 

கர்த்தர் குழந்தைகளை பெண்களையே வெறும் பகைமைக்காக கொல்லும்படி சொன்னவராயிற்றே.

1 சாமுவேல் 15:2-3 IRVTam

[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam

-குழந்தைகளையும் கல்லில் மோதியடிக்க வைத்து கொல்லுவார். கர்ப்பினிகளின் வயிற்றை கிழிக்க வைப்பார்

ஓசியா 13:16 IRVTam

[16] சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும்.

https://bible.com/bible/1899/hos.13.16.IRVTam

அதை தண்டனையாக தேவன் கொடுக்கிறார். இந்த தண்டனைக்காக அதே போல் எதிரிகளின் குழந்தைகளையும் கல்லில் மோதியடிக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள்:

சங்கீதம் 137:8-9 IRVTam

[8] பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். [9] உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

https://bible.com/bible/1899/psa.137.8-9.IRVTam

55.முகம்மது நபி நபீத் பானம் குடித்ததும் அதை மது என போதகர் உருட்டியதும்

-தண்ணீரில் பழத்தை ஊறவைத்தால் வரும் பானமே நபீத். அது போதையேற்படுத்த முன்பே நபிகளார் குடிப்பார்கள். போதையேற்படுத்தும் மதுவாக மாறும்போது கொட்டிவிடுவார்கள்

*போதை தரக்கூடிய எதையும் பருக வேண்டாம் என்று நபிகளார்

கூறியுள்ளார்கள் (முஸ்லிம் 3995) போதை தரக்கூடியவை மது (கம்ர்) ஆகும். அதை அருந்துவது தடை செய்யப்பட்டதாகும் (ஹராம் ஆகும்) (முஸ்லிம் 4076,4077,4078)

*இந்த பழச்சாறை நபிகளார் மூன்று நாளைக்கு அருந்துவார் என்றும் அதிலே எஞ்சினால் தன் ஊழியருக்கு கொடுப்பார்கள் அல்லது கொட்டி விடுவார்கள் (முஸ்லிம் 4082,4083,4086,)

இந்த பழச்சாறு ஆகிய நபீத் வேறு மதுவாகிய கம்ர் வேறு (முஸ்லிம் 4086).

ஆக போதை தராத நிலையில் அதை அருந்துவார்கள். அது போதை தரக்கூடியதாக ஆகிவிட்டால் அது மது என்பதில் வந்துவிடும். அது ஹராமாகும். அதனால் தான் நபிகளார் நபீத் எனும் ஊறவைக்கப்பட்ட பழச்சாறை மூன்று நாளைக்கு பின் அருந்தாமல் பணியாளுக்கோ அல்லது கொட்டிவிடவோ செய்வார்கள்.

அது மதுவானால் பணியாளருக்கு அருந்த கொடுக்க மாட்டார்கள்.

(ஆனால் மதுவுக்கு நபீத் என பெயரை மாற்றிக்கொண்டு குடிக்க முடியாது.. ஏனெனில் போதை தரக்கூடிய அனைத்தும் ஹராம் -முஸ்லிம் 4076,4077,4078)

 

-கர்த்தர் குடித்து சந்தோசமாக இரு என்று சொன்னதாக பைபிள் சொல்கிறது

உபாகமம் 14:26 IRVTam

[26] அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக.

https://bible.com/bible/1899/deu.14.26.IRVTam

(இங்கே குடிக்க சொல்லவில்லை. சாப்பிடத்தான் சொல்கிறது என சமாளிக்க பார்க்கலாம். ஆனால் உணவுகளோடு குடிபானத்தையும் சேர்த்து வரும்போது சாப்பிடுதல் என்பதை தான்   கூறும் (உதாரணமாக ஆதி 18:8 ))

*சோகத்தில் இருப்பவன் சரக்கு அடிக்கலாம் :

நீதி மொழிகள் 31:6-7 IRVTam

[6] மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; [7] அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.

https://bible.com/bible/1899/pro.31.6-7.IRVTam

 

போதையை தடைசெய்யும் மார்க்கத்தின் மீது இதை வைத்துக்கொண்டு அவதூறு கூறலாமா?

56.அல்லாஹ் ஆகு என சொன்னால் ஆகிவிடும், பிறகு ஏன் அவனுக்கு மனைவி இல்லாதிருக்க மகனுண்டாக முடியும் என 6:101 கேட்பது தர்க்கம் பிழை என்றனர்

ஆகு என்பதால் உருவாகுவது படைப்பு....(குர்ஆன் 3:47)

 பிள்ளை வேண்டுமென்றால் மனைவி தான் பெற்றெடுக்க வேண்டும். குறிப்பாக இறைவனது பிள்ளை என கூறப்பட்டோர் எல்லோருமே மனிதர்களாகவே இருந்தனர்... அவர்களது அம்மாக்கள் கடவுளின் மனைவியாக இருந்தால் தானே இது சாத்தியம்? அப்படியில்லாதபோது எப்படி மனித மகன்கள் வருவர்?

கடவுளே கொல்லுபவராக இருக்கிறார்-உபாகமம் 32:39, 1சாமுவேல் 2:6

எந்த நல்ல தகப்பனாவது தன் குழந்தைகளை கொல்லுவானா? கொல்லுவதற்கு அனுமதிப்பானா?  அல்லது தனக்கு தானே நரபலி இடுவானா?

ஆனால் புதிய ஏற்பாடோ , தேவன் தன் மகனை நரபலியாக அனுப்பினார் என்கிறது -1 யோவான் 4:10.  யாருக்கு பலி? தனக்கு தானே செலுத்திக் கொள்வது. தன் மகனை தனக்கே நரபலியாக்க அனுப்பியவர் நல்ல தகப்பனா?

57.பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைத்த சமூதாயம் உருப்படாது எனும் ஹதீஸ்

-பெண் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆளுவதற்கு அல்ல. அதனால் அப்படி செய்தால் அந்த சமூகம் உருப்படாது என்று கூறினார்கள்.

-இந்த செய்தி பொதுவாக கூறப்படும் ஒன்றேயாகும். விதிவிலக்காக சிறந்த பெண் ஆட்சியாளர்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அந்தவகையில் சிறந்த ஆட்சியாளரான பெண்ணாக ஸபா நாட்டு அரசியை குர்ஆன் குறிப்பிடுகிறது (குர்ஆன் 27:23-44)

பைபிள் அப்படியே அனுமதித்து கிழித்து விட்டது போலும்.

பெண்ணுக்கு பேசவோ கற்பிக்கவோ ஆணின் மீது அதிகாரம் செலுத்தவோ உரிமை இல்லை

1 கொரிந்தியர் 14:34-35 IRVTam

[34] சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. [35] அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.

https://bible.com/bible/1899/1co.14.34-35.IRVTam

 

1 தீமோத்தேயு 2:11-14 IRVTam

[11] பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். [12] உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். [13] ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். [14] மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

https://bible.com/bible/1899/1ti.2.11-14.IRVTam

 

அவளது பாவத்தின் காரணமாக அவளை அவளது புருசன் ஆண்டுகொள்வான் என்பது கர்த்தரின் சாபம்:

ஆதியாகமம் 3:16 IRVTam

[16] அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார்.

https://bible.com/bible/1899/gen.3.16.IRVTam

 

இதை வச்சுக்கிட்டு தன் சமூகம் தோற்றுவிட கூடாது என்பதற்காக வழிகாட்டியதை குற்றம் சொல்லலாமா?

58.பெண்ணின் சாட்சியம் ஆணின் சாட்சியத்தின் பாதி என கூறுவது

-வியாபாரம் போன்றவற்றிற்கான சாட்சியே அவ்வாறு பாதியாக இருக்கும்

படைத்த இறைவன் தன் ஞானத்தால் இவ்வாறு நியமித்தான்.   பெண்கள் இதிலே ஒருத்தி தவறினால் மற்றவள் நினைவூட்டுவதற்காக நியமித்தான்

ஆனால் மற்ற விடயங்களில் அவர்களது சாட்சி எடுத்துக்கொள்ளப்படும்

-உதாரணமாக நான் இவருக்கும் இவரது மனைவிக்கும் பாலூட்டினேன் என ஒரு பெண் சொன்னபோது அதை ஏற்றார்கள்(புகாரி 5104)

-மனைவி மீது விபச்சாரம் செய்ததாக கணவன் குற்றம் சாட்டும் போது அதை மறுத்து  சமமாக அவள் சாட்சி கூறுவதற்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. (குர்ஆன் 24:6-9)

பைபிள் பெண்ணுக்கு சாட்சி சொல்லும் உரிமையே கிடையாது தன் சொந்த விசயத்தில் கூட

அதாவது உடலுறவில் கன்னியாக இல்லாவிட்டால் அதை குற்றச்சாட்டு வைத்தால் அப்போது அவளது பெற்றோர் தான் இரத்தம் தோய்ந்த துணியை காட்டவேண்டும்

உபாகமம் 22:13-17 IRVTam

[13] “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து: [14] நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; [15] அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். [16] அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, [17] நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.

https://bible.com/bible/1899/deu.22.13-17.IRVTam

சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. அவர்களுக்கு சாட்சி கூறவும் முடியாது இச்சட்டத்தின் படி.

பெண்ணுக்கு பேசவோ கற்பிக்கவோ அதிகாரம் செலுத்தவோ உரிமை இல்லை

1 கொரிந்தியர் 14:34-35 IRVTam

[34] சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. [35] அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.

https://bible.com/bible/1899/1co.14.34-35.IRVTam

1 தீமோத்தேயு 2:11-14 IRVTam

[11] பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். [12] உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். [13] ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். [14] மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

https://bible.com/bible/1899/1ti.2.11-14.IRVTam

சாட்சி கூற அனுமதியே கொடுக்காத பைபிளை வைத்துக் கொண்டு இதை பேசலாமா?

59.தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்தால் மனைவியை மலக்கு சபிப்பபதாக வந்த ஹதீஸ்

திருமணத்தின் நோக்கமே விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்வது என்பது மிகவும் விசேஷமானது

அப்படி மனைவி மறுத்தால் அவன் தப்பான வழியில் செல்வதற்கு வழிவகுக்கும்.

ஆனால் தன் இயலாமையாலோ நோயாளோ மறுத்து தெளிவு படுத்தினால் இதில் குற்றம் இல்லை.. காரணம் எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி சிரமப்படுத்தப்பட மாட்டாது (குர்ஆன் 2:286, 2:233 ,65:7)

ஆக இது வீம்புக்காக அப்படி நடக்கும் பெண்ணையே குறிக்கிறது. அப்போது கூட மனைவியை  பலவந்தப்படுத்தி கற்பழிக்க  வழிகாட்டவில்லை..

ஆக வானவர்கள் சபித்தால் இந்த போதகர்கள் ஏன் கதற வேண்டும்?

 

பைபிள் கன்னிப் பெண்ணை கற்பழித்தாலே அவளை கல்யாணம் முடிப்பதை ஃபைன் என்று விதிக்கிறது.

உபாகமம் 22:28-29 IRVTam

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam

கன்னிப்பெண் தகப்பனின் சொத்து என்பதால் அவளை கற்பழித்தால் தகப்பனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும்.

பிறகு காலம் மூழுதும் இவன் கற்பழிப்பான்

இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு மலக்கு சபிப்பதை பேசலாமா?

60.ஜிகாத் பற்றிய ஹதீஸ்களையும் குர்ஆன் வசனங்களையும் குறிப்பிட்டு விமர்சனம் வைத்தார்

-இஸ்லாத்தில் ஆரம்பத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் , காஃபிர்களால் அவர் கொல்லப்படுவார் அல்லது குழப்பத்திற்குள்ளாக்கப்படுவார் (புகாரி 4514,4650,4651). சமூகபகிஷ்கரிப்பு செய்து சகலத்திலும் ஒதுக்கி வைத்தனர் (புகாரி 1590,3058).

-இஸ்லாத்தை ஏற்றதற்காக கடுமையாக வேதனை செய்தார்கள் காஃபிர்கள் (புகாரி 3612,3852,3522).

-இஸ்லாத்தை ஏற்றதற்காக வேதனை செய்ததால், முஸ்லிம்கள் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக தப்பியோடினர்(புகாரி 3900,4312). இப்படி தப்பியோடுவோரை கூட தடுத்து பிடித்துக்கொள்வதற்கு முயற்சித்தார்கள் (புகாரி 3906,3922)

-இஸ்லாத்தை எத்திவைக்க சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள் (புகாரி 2801,3064),

-ஆனாலும் இஸ்லாம் இத்தகைய காஃபிர்களை மன்னித்துவிடுமாறு ஆரம்பத்தில் கூறியது (நஸாயீ 3086)

-உறுதியான நிலையை அடைந்த பின், போரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. காரணம் அவர்கள் நியாயமின்றி, ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதும், இவ்வாறு அல்லாஹ் சிலரை கொண்டு சிலரை தடுக்காவிட்டால், யூத கிறிஸ்தவ ஆலயங்களும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டுப்போயிருக்கும்- குர்ஆன் 22:39-40

-பலவீனமான முஸ்லிம்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் வேண்டியிருந்தது. அதற்காகவும் இறைவன் போரிடுமாறு கூறினான்-குர்ஆன் 4:75)

-அத்தோடு காஃபிர்கள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்ஙளோடு அவர்களையும் காஃபிராக்கும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்-குர்ஆன் 2:217, 60:2

இதன்காரணமாக ஜிஹாதை இஸ்லாம் கடமையாக்கியது.

*அப்போது கூட, பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்றும் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்களை (மந்தை சேர்ப்பார்,விவசாயி) கொல்லக்கூடாது (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்ற வயோதிபரை கொல்லக்கூடாது (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்த துறவிகளை கொல்லக்கூடாது (முஸ்னத் அஹ்மத் 2728) என ஒழுங்குமுறை விதித்தது.

இதைத்தவிர மற்றவர்கள் போரிடக்கூடிய ஆண்கள் மட்டுமே. அத்தகையோருடனே போர் நிகழும். (பைபிளை போல குழந்தைகளை கொல்லு குழந்தையை கல்லில் மோதியடித்து கொல்பவன் பாக்கியவான் என இஸ்லாம் சொல்லவில்லை)

-அத்தோடு இஸ்லாம் தோன்றிய காலத்தில் சிற்றரசுகளும் பேரரசுகளும் கோத்திரங்களும் மற்றவர்களை கீழ்ப்படுத்தி ஆக்கிரமிப்பதை வழமையாக கொண்டிருந்தனர். அத்தருணத்தில் மார்க்கத்தை பாதுகாக்கவும் அவர்களுக்குள்ளும் மார்க்கத்தை கொண்டு செல்லவும் அவர்களை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை. -இல்லாவிட்டால் தமது ஆட்சிக்கு அச்சுறுத்தல் என அவ்வரசுகள் கருதினால் அப்போதே இஸ்லாம் முடிந்திருக்கும்.

ஆனாலும் இதை நபிகளார் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்

-அதாவது அக்கூட்டங்களுக்கு படைகளை அனுப்பி இஸ்லாத்தை நோக்கி அழைப்பர். அதை ஏற்க மறுத்தால் வரி கட்டுமாறு கோருவர். அதையும் மறுத்து போருக்கு தயாரானால் போர் நிகழும்-முஸ்லிம் 3566 (1731a,b), அபூதாவூத் 2612, புகாரி 3159)

-அத்தோடு வரி குறித்து எப்படி நீதமாக இஸ்லாம் நடக்க வழிகாட்டியது என ஜிஸ்யாவின் கீழே 61ம் குறிப்பில்  கூறியிருக்கிறேன்.

-அரபு இணைவைப்பாளர்களை குறித்தோ, அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை போர் நிகழ்த்துமாறு நபிகளார் ஏவப்பட்டார்கள். காரணம் அவர்களே முதலில் யுத்தத்தை தொடங்கி வைத்ததோடு (குர்ஆன் 9:13,60:1), தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்ளோடு அவர்களை காஃபிராக்கும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள் (குர்ஆன் 2:217, 60:2).  அதனால் இதை தவிர வேறு பாதுகாப்பான வழி இல்லை.

மெய் இறைவனைவிடுத்து சிலை வணக்கத்தை தன் உரிமை என கருதுவதென்பது, திருமணம் முடித்துவிட்டு மற்ற காதலர்களை தம் கணவர்களாக நினைத்து விபச்சாரம் செய்வதை தம் உரிமை என வாதிடுவது போன்றது தானே (பைபிள் அதை தான் கூறுகிறது). அதனால் இஸ்லாம் சிலைவணக்கத்தை அனுமதிக்கவில்லை!!

அத்தோடு திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதெல்லாம் குற்றம் செய்த கைபர் வாழ் யூதர் மீதும் , போருக்கு தயாராகிக்கொண்டிருந்த பனுமுஸ்தலிக் மீதும் தான். அப்போது கூட அவர்களில் போர் செய்யும் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்(புகாரி 2541,610,947)

ஆகவே இதை குற்றஞ்சாட்ட முடியாது. காரணம் இஸ்லாம் அன்மீகத்தோடு ஆட்சியதிகாரத்தையும் நீதித்துறையையும் உள்ளடக்கியது. இஸ்லாமிய அரசே அதை நீதமாக செய்து முடித்தது

பைபிளில் கர்த்தர் இஸ்ரவேலருக்கு கொடுக்கும்  மாற்றுமத நாடுகளிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்று போட வேண்டும் என்றார் கர்த்தர் -உபாகமம் 20:16-18

-தூரத்திலுள்ள நாடுகளுக்கோவென்றால், அவர்களை கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதை அவர்கள் ஏற்க மறுத்தால் ஆண்களை கொன்று சொத்துக்களை சூறையாட வேண்டும் என்கிறார் கர்த்தர் -உபாகமம் 20:10-15

-வெறும் பகைக்காக கூட கர்த்தர் குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி மூலம் அவர்களின் ராஜாவுக்கு சொன்னார். ராஜா செய்யாததால் அவனை ராஜாவாக்கியதற்கே மனஸ்தாபப்பட்டார்- 1 சாமுவேல் 15:2-3&11

-இஸ்ரவேலர் போர் செய்ய பயந்ததால், முழு இஸ்ரவேலர்தளையும் கொன்று போட முடிவெடுத்தார். நல்லவேளையாக மோசே அவருக்கு அட்வைஸ் பண்ணி, மனதை மாற்றினார்(எண்ணாகமம் 14:11-19). பிறகு அவர்களை நாப்பது வருடத்தில் கொன்று போட முடிவெடுத்தார். அத்தோடு போர் செய்ய பயப்படாத காலேபை தன்னை முறையாக பின்பற்றியவன் என்றார்(எண்ணாகமம் 14:22-24). ஏனெனில் கர்த்தரை யுத்த வீரன் என்கிறது பைபிள் (யாத்திராகமம் 15:3).

-மோவாபியருடன் யுத்தத்தில் இரத்தம் சிந்தாதவன் சபிக்கப்பட்டவன் என்றும் எரேமியா 48:10 .

*அத்தோடு இவர்களின் குழந்தையை கொல்லும் வெறி காலம் காலமாக இவர்களின் மனதில் இருந்து வந்ததொன்றே.

-அதனால் , பாபிலோனியர்களை பழிவாங்கும் நோக்கில், அவர்களின் குழந்தைகளை கல்லில் மோதியடிப்பவன் பாக்கியவான் என்கிறது சங்கீதம் 137:9

*இவையனைத்தும் கர்த்தரின் வழிகாட்டலில் உள்ள ஈவிரக்கமற்ற செயலே (1 சாமுவேல் 15:3, உபாகமம் 20:16-17)

இது தான் பழைய ஏற்பாட்டு நிலை..

*புதிய ஏற்பாட்டில் ஆட்சியதிகாரம் இல்லாததால் ஆன்மீகம் மட்டும் பேசப்பட்டு இருக்கிறது

ஆனால் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவர் அதிகாரத்தோடு வருவதால்,

-அவரும் இப்படி ஈவிரக்கமின்றி கொலை பண்ணுவார்-வெளி 19:18-21

-அத்தோடு குழந்தைகளையும் கொல்லுவேன் என்கிறார் இயேசு-வெளி 2:23

அதனாலோ தெரியவில்லை பாலஸ்தீனத்தில் கொலை செய்யும்போது எவான்ஜலிஸ்டுகள் ஆதரித்து நியாயப்படுத்துகிறார்கள்.

(நேர்மையானவர்களும் உள்ளனர்)

*இவற்றை சரி கண்டுவிட்டு ஐஸ்ஐஸ் போகோஹராம் போன்ற தற்குறிகளை விமர்சிப்பதற்கு கூட இவர்களுக்கு தகுதி இல்லை. அவர்களைவிட கேவலமாக நடந்துகொள்ள பைபிள் சொல்லியுள்ளது.

 

குறிப்பு: பைபிள் எதிரிகளை நரகத்தில் தள்ளுவதற்காக போர் செய்யும்படி சொன்னது. அதாவது அவர்கள் சிலைவணங்கிகளாக இருந்தனர். அவர்களை கொன்றால் அத்தகைய கொல்லப்பட்டவர்கள் போகுமிடம் நரகமே (காரணம்:விக்கிரக ஆராதனைக்காரன் நரகத்தில் தள்ளப்படுவான் -வெளி 20:8, 1கொரிந்தியர் 6:9)

ஆனால் இஸ்லாமோ சுவர்க்கத்தை நோக்கி அழைப்பதற்காக மார்க்கத்தை கெடுங்கோலர்களிடமும் கொண்டு சேர்க்க போரை பயன்படுத்தியது.

61.ஜிஸ்யா வரி பற்றிய வசனத்தை குறிப்பிட்டர்

இஸ்லாம் ஆன்மீகமும் நீதித்துறையும் ஆட்சியதிகாரமுடைய மார்க்கமாகும்.

எந்த ஆட்சியும் குடிமக்களிடம் வரி வாங்குவர்

*குர்ஆன் 9:29 நபிகளார் நடைமுறைப்படுத்திய விதமானது, யுத்தத்திற்கு சென்றால் முதலில் இஸ்லாத்தை நோக்கி அழைப்பார்கள். அதை அவர்கள் மறுத்தால், அவர்களிடம் வரி செலுத்துமாறு கோருவார். அதையும் மறுத்தாலே யுத்தம் நிகழும் (முஸ்லிம் 3566 (1731a,b) , அபூதாவூத் 2612,புகாரி 3159)

இதன் நோக்கம், இஸ்லாத்தை திணிப்பது அல்ல.. காஃபிர்களான எதிரித்தலைமைகள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217, 60:2). ஏற்கனவே செய்து கொண்டும் இருந்தார்கள்.

அந்நிலைமை ஏற்படாதிருக்க,   ஆட்சியும் ஆன்மீகமும் உடைய இஸ்லாமிய அரசு இவ்வாறே செய்ய வேண்டியதாக இருந்தது

-இத்தகையோரை அடிமைகளாக நடத்த கூடாது என்பதையே இமாம் புகாரி 3052வது ஹதீஸுக்கு தலைப்பாக போடுகிறார். (ஆனால் பைபிளோ அடிமைகளாக வேலைக்காரராக ஆக்கிக்கொள்ளுமாறே கூறுகிறது. இரண்டும் நேரெதிரான து)

-இத்தகைய மக்களுக்காக இஸ்லாமிய அரசு இம்மக்களின் எதிரிகளுக்கு எதிராகவும் போரிடுவதோடு, அம்மக்களின் மீது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது என்கிறது (புகாரி 3052,3700)

-இத்தகையோரின் உரிமைகளில் குறைவைத்தாலோ அவர்களது சக்திக்கு மீறி எதையாவது சுமத்தினாலோ, அம்மக்களுக்காக அத்தகையவனுக்கு எதிராக நானே இறைவனிடம் வாதிடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்- (அபூதாவூத் 3052)

-வரி செலுத்தாததற்காக அவர்களை நியாயமின்றி வேதனை செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-முஸ்லிம் 5096-5097

-இத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் -புகாரி 3166

எந்தளவுக்கென்றால் யூதரிடம் தன் கவசத்தை அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு நபிகளார் நடந்துகொண்டார்கள்-புகாரி 2096,2068,2916

இப்படி வரி செலுத்தும் வேதக்காரர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் பாதுகாப்பையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியது.

ஆனாலும் கண்ணியமும் மரியாதையும் இறைவனுக்கும் தூதருக்கும் விசுவாசிகளுக்குமே உரியது. காரணம் அவர்கள் நிரந்தர நரகத்தில் விழாதிருக்கும்படி சத்தியத்தை உணர்வதற்கே இது. (ஏனெனில் அதிகாரத்தோடும் கண்ணியத்தோடும் இருக்கும்போதும் சத்தியத்தை உணரும் வாய்ப்பு குறைவு)

ஆட்சியதிகாரம் உள்ள மதத்தை வெறும் ஆன்மீகம் மட்டுமேயுள்ள மதத்தை வைத்து விமர்சிக்க முடியாது

அதிகாரம் இருந்தபோது, இஸ்ரவேலரோடு சமாதானமான மக்களிடம் கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது பைபிள்- உபாகமம் 20:10-11

இவ்வாறே யோசுவா நபி தன்னோடு சமாதானமான அப்பாவி மக்களை வேலைக்காரர்களாக ஆக்கிக் கொண்டதாக யோசுவா 9:15-21 கூறுகிறது. இதேபோல் தாவீதும் அயல்நாட்டவர்களை வேலைவாங்கினான்-1 நாளாகமம் 22:2

(அத்தோடு அருகிலுள்ள மாற்றுமதத்தவர்களை கொன்றுபோட்டுவிட்டு குடியேறுமாறும் , துரத்தி விட்டு அவர்களது ஆலயங்களை உடைத்து போடுமாறும் கர்த்தரே சொன்னார் -உபாகமம் 20:16-18, யாத்திராகமம் 23:31-33,&23:24

இது மாற்றுமதத்தவனை மனிதனாக கூட மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது)

-புதிய ஏற்பாட்டிலோ, மாற்றுமத சிலைவணங்கி உறவினருடன் சேர்ந்து பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிட வேண்டும் என்றும் (1கொரிந்தியர்5:11,13), அவர்களைவிட்டு பிரிந்து வாழுமாறும் (2 கொரிந்தியர் 6:17), அத்தகையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் (2யோவான் 1:10-11) கூறுகிறது.

வெறும் ஆன்மீகம் மட்டுமேயுள்ள இந்த மதமே இப்படி பேசும்போது இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டுவது அபத்தமே!

62.கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை நிர்ப்பந்தித்து மதமாற்றுவதாக  உருட்டியது

-இந்த ஹதீஸ் புகாரி 4557 இலுள்ளது

-கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு மதம் மாற்றப்படவில்லை.

மாறாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும்போது உண்மையை உணர்வதால் அவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்.

இதன் நோக்கம் அவர்கள் சுவர்க்கம் போக வேண்டும் என்பதே.

போரிட்டவர்களே இப்படி கைதிகளாக பிடிக்கப்படுவார்கள் . போரிடாமல் இஸ்லாமிய அரசுக்கு வரி செலுத்துவோர் கைது செய்யப்படுவதில்லை (ஜிஸ்யா பற்றி குறிப்பு 61 பார்க்கவும்)

பைபிளை போல நரகத்திற்கு அனுப்புவதற்காக கொல்லச்சொல்லவில்லை.

-பைபிளிலே மாற்று மதத்தை கற்றுக்கொண்டு விட கூடாது என்பதற்காகவே அவர்களை கொன்றொழிக்குமாறு கூறுகிறது:

உபாகமம் 20:16-18 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam

இப்படி கொல்லப்பட்ட சிலை வணங்கி எங்கே போவான்? பைபிள் சொல்கிறது அவன் நரகம் போவான் (வெளி 21:8, 1கொரி 6:9)

ஆக அவனை நரகத்திற்கு அனுப்ப கொல்லச்சொல்லும் பைபிளை வைத்துக்கொண்டு, கொல்லாமல் சுவர்க்கத்தினுள் நுழைவிப்பதற்காக அக்கால சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக மார்க்கத்தை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க படைகளை அனுப்பி அதிலே எதிர்த்து போரிட்டவர்களில் கைதிகளாக பிடிபட்டவர்களை மனமுவந்து இஸ்லாத்தை ஏற்பதற்கு வழிகாட்டியதை குற்றம் படுத்தலாமா?

63.குளிர்காலத்தில் ஏற்படும் கடும் குளிரும், வெப்ப காலத்தில் ஏற்படும் கடும் வெப்பமும் நரகத்தின் மூச்சுக்காற்றினால் உண்டாவதாக வரும் ஹதீஸ்

-இது மறைவான ஞானத்தோடு சம்பந்தப்பட்டதாகும்

எம் கண்ணால் பார்க்காத இறைவனை , எம் கண்ணால் பார்க்காத வானதூதர்களை, எம் கண்ணால் பார்க்காத சுவர்க்கம் நரகத்தை நம்பும் போது , அல்லாஹ்வின் தூதர் இதை சொன்னதை நம்புகிறோம்.

(சூரியனால் மட்டுமே வெப்பம் பூமியில் உண்டாகிறது என்றில்லையே)

-இது நரகத்தின் கொடூரத்தை முஃமின்கள் உணர்ந்து பயந்து கொள்வதற்காக நபிகளார் கற்றுத் தந்தார்கள்.

மனிதனை கடவுளாக்கிக்கொண்டு கடவுள் தான் மனிதராக வந்தார் என்று கதை விடக்கூடிய இவர்கள் ஏற்றுக்கொண்டால் தான் நாம் நம்ப முடியும் என்பதில்லையே

கடும் குளிர் கர்த்தரின் மூச்சுக்காற்றினால் உருவாவதாக பைபிள் சொல்கிறது:

யோபு 37:10 IRVTam

[10] தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும்.

https://bible.com/bible/1899/job.37.10.IRVTam

மழைகாலத்தில் ஒளிமுறிவால் ஏற்படும் வானவில்லை தேவன் தன்னுடைய வில்லை மேகத்தில் வைத்தார் என்று கதை விடுகிறது:

ஆதியாகமம் 9:13-16 IRVTam

[13] நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். [14] நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். [15] அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். [16] அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன்.

https://bible.com/bible/1899/gen.9.13-16.IRVTam  

உண்மையில் இது வில் வடிவமே கிடையாது... மாறாக பூரண வட்டம் ஆகும். நிலத்திலிருந்து பார்ப்பவருக்கு வில் போன்று தெரிவதால் கதை எழுதியவர் இதை தேவன் வைத்த வில் என எழுதிவிட்டார்.

 

64.குர்ஆன் 4:23 மனைவியை கழட்டிவிட்டு மகளை முடிக்கும் சட்டம் என உருட்டியது

-ஒரு பெண்ணை திருமணம் செய்து உறவுகொண்டுவிட்டால், அவளது தாயும் , அவளுக்கு வேறு திருமணம் மூலம் பிறந்த மகளும் இவனுக்கு நிரந்தரமாக ஹராம் ஆகிவிடுவார்கள். அதாவது அவர்கள் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்கள் (குர்ஆன் 4:23)

ஆனால் ஒரு பெண்ணோடு திருமண ஒப்பந்தம் நடந்து உறவு கொள்ளாமலே விவாகரத்து ஆகிவிட்டால்,  அப்போது அவளுடைய மகளுக்கும் இவனுக்கும் எத்தகைய உறவு முறையும் இல்லை. அதாவது அவளும் ஓர் அந்நியப்பெண்ணே ஆவாள். அதனால் அவளை திருமணம் முடிப்பது கூடும் என்ற சட்டத்தையே 4:23 கூறுகிறது

குறிப்பாக திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம் (புகாரி 5136,6946,6948). அத்தோடு பொறுப்பாளரான அவளின் ஆண் உறவினனே அதை செய்துவைக்க வேண்டும். ஆக இதில் ஆட்டையப்போடும் கதைகளுக்கு இடமில்லை..

கன்னிப் பெண்ணை கற்பழித்து முடிக்கும் சட்டம் உபாகமம் 22:28-29

கன்னியை ஏமாற்றி விபச்சாரம் செய்து முடிக்கும் சட்டம் - யாத்திராகமம் 22:16-17

இது செமயாக இருக்குதே?

 

65.அடிமையுடன் உடலுறவு

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது.

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

 

66.முத்ஆ திருமணம் பற்றிய விமர்சனம்

முத்ஆ என்பது அரபுகள் தூர பயணங்களின் போது கடைபிடித்துவந்த திருமண முறையாகும். 

சொந்த ஊரல்லாத வேறு ஊரில் தற்காலிகமாக இருக்கும் காலத்தில் தற்காலிகமாக அங்கே குறித்த பெண்ணின் சம்மதத்தோடு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்து கொள்வர். பிறகு தன் தேவை முடிந்து ஊரிலிருந்து வெளியேறும்போது மனைவியிடமிருந்தும் பிரிந்து விடுவர்..

இதை நபிகளார் கைபர் யுத்தத்தின்போது தடை செய்தார்கள் (புகாரி 5115,5523,6961 முஸ்லிம் 2738,2739,2740-2741,3920). 

பிறகு அவ்தாஸ் போரின்போது மூன்று நாட்களுக்கு மட்டும் இத்திருமணத்தை அனுமதித்தார்கள் பிறகு அதை தடை செய்தார்கள்.(முஸ்லிம் 2727) மக்கா வெற்றியின் போது மக்காவிற்கு சென்றவர்களுக்கு சில நாட்களுக்கு அனுமதித்தார்கள். பிறகு தடை செய்துவிட்டார்கள் (முஸ்லிம் 2728,2729),

 குறிப்பாக அப்போது இத்திருமணத்தை மறுமைவரைக்கும் அல்லாஹ் தடைசெய்து விட்டான் என அறிவித்தார்கள் (முஸ்லிம் 2730 &2733-2735,2737)

சில நபித்தோழர்களுக்கு இறுதியாக தடைசெய்த தகவல் கிடைக்காததால், அது கூடும் என கருதி செய்துவந்தனர் (முஸ்லிம் 2724,2725.) 

அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் தான் என்றே கருதினர் (புகாரி 5116, முஸ்லிம் 2736 ) 

அதை உமர் (ர) தன் ஆட்சியில் மீண்டும் தடைசெய்தார்கள் (முஸ்லிம் 2725,2726 ).

 அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆட்சிக்காலத்தில், அவ்வாறு செய்தால் விபச்சாரமாக கருதப்பட்டு கல்லெறி தண்டனை வழங்குவேன் என அப்துல்லாஹ் கூறினார் (முஸ்லிம் 2736).

இதை நன்கு அறிந்த அபூஅம்ரா எனும் நபித்தோழர் இதுபற்றி கூறும்போது ,இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவர்களுக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம்,பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டது போன்று தான் முத்ஆவும் அனுமதிக்கப்பட்டது என்றும், பிறகு அல்லாஹ் இம்மார்க்கத்தை உறுதியாக்கியதும் தடைவிதித்து விட்டான் என்றார்கள் (முஸ்லிம் 2736).

அத்துடன் முத்ஆ சம்பந்தமான அறிவிப்பை பதித்துவிட்டு இமாம் புகாரி, இந்த திருமணத்திற்கு அனுமதி மாற்றப்பட்டு விட்டது என அலீ (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் என புகாரி 5119 இலே இறுதியில் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது விபச்சாரம் செய்யாமலிருக்க குடும்பத்தவர்களை விட்டும் தூரமாக உள்ளவர்களுக்கு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு மாற்று வழியாக தற்காலிக திருமணம் நடைமுறையில் இருந்தது. அதை நபிகளார் இறுதியில் தடைசெய்துவிட்டார்கள்

 

பைபிள் வைப்பாட்டி வைத்தால் கொள்வதையே தடைசெய்யாதபோது, அதைவிபச்சாரமாக கருதாத போது , தற்காலிகமாக திருமணம் செய்ததை விமர்சிக்க தகுதி உண்டா?

அத்தோடு கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் கூட , தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது கன்னியின் மஹரை கொடுத்துவிட்டு போக வேண்டும் என யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது. விபச்சாரம் செய்த கன்னிப் பெண்ணுக்கு தண்டனையும் கிடையாது. மாறாக உடலுறவுக்கான கூலியை பெற்றுக்கொள்ள சொல்லி , இந்தக்கால விலைமாதுகளின் நடத்தையான போதனையை வழங்கியுள்ளது பைபிள்.

ஆனால் இஸ்லாமோ விபச்சாரம் செய்தால் திருமணமாகாதவராக இருந்தால் நூறுகசையடிகளும் (குர்ஆன் 24:2) திருமணமானவராயின் கல்லெறி தண்டனையும் வழங்குகிறது (புகாரி 6633-6634). இதிலே எது ஒழுக்கமானது? குறைசொல்ல தகுதியுண்டா?

 

67.சுவர்க்கத்தில் மதுவும் கண்ணழகிகளும் கொடுக்கப்படுவதை கேலி செய்து இதை விபச்சார விடுதிக்கு ஒப்பிட்டனர்

-சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)

-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)

-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)

வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது. மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.

(ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும்.  ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை..

இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.

இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு..)

-உலகத்தில் போதை மது குடிக்க அனுமதித்து (உபாகமம் 14:26), தன் கூடப்பிறந்த சகோதரிகளை மணந்து பிள்ளை பெற வைத்ததை நம்பிக்கொண்டு இதை விமர்சிக்கலாமா?

இவர்கள் தங்கள் மகள்மாருக்கு திருமணம் செய்து வைப்பதில்லையா? அப்படியானால் இவர்கள் விபச்சார விடுதி நடத்தி ஒரு ஆணுக்கு கூட்டிக்கொடுக்கிறார்கள் என்று திருமணத்தை பேசினால் ஒப்புக்கொள்வார்களா?

68. இணைவைப்போரை அரேபிய தீபகற்பத்தில் இருந்து வெளியேற்றுதல்

அரேபிய தீபகற்பம் என்று நபியவர்கள் கூறியது ஹிஜாஸ் மாநிலத்தை குறிக்கும். அதாவது மக்கா,மதீனா,யமாமாவும் அதன் சூழ்ந்த பகுதிகளும்.

இதனால் தான் உமர் (ர) அவர்கள் யூதர்களை ஹிஜாஸிலிருந்து  தைமாவுக்கும், அரீஹாவுக்கும் (ஜெரிகோ) நாடுகடத்தினர்.(புகாரி 2338,3152)

இறுதியாக கைபரிலிருந்து தான் யூதர்களை உமர் (ர) அவர்கள் வெளியேற்றினார்கள். அதுவும் அவர்கள் அவருடைய மகனின் கையின் மூட்டுகளை  பிசகச்செய்ததன் பின்னரே நிகழ்ந்தது.. அதுவரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.(புகாரி 2730). நபியவர்களுக்கு அவர்கள் சேர்ந்து விசம் தடவிய இறைச்சியை சாப்பிட கொடுத்ததன் பின்னரும் அங்கே விடப்பட்டிருந்தார்கள் (புகாரி 3169)

யுத்தங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்த அந்த  காலகட்டத்தில் யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் இணைவைப்பவர்களாலும் புனித பூமிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்காகவும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் இவர்களின் வைராக்கிய துர்ப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதை தடுப்பதற்கும் இதை தவிர வேறு வழி இல்லை!  அதனால் தான் நபிகளார் மரணிக்கும் முன் அதை உபதேசமாக கூறினார்கள்.(முஸ்லிம் 3626)

அவர்கள் ஒரேயடியாக துரத்தப்படவுமில்லை.... துரோகங்கள் செய்தபோது தான் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர் (புகாரி 4028)

பொதுவாக அரசுகள் தமக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது கொலை செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும். ஆனால் இஸ்லாமோ அவர்களுக்கு வேறு இடத்தில் குடியமர்த்தியது.

ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் வசிக்கலாம். அப்படி வசிக்கும் போது  கூட , முஸ்லிம்கள் அவர்கள் மீது நல்ல முறையில் நடந்துகொண்டு, அம்மக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் யுத்தம் செய்யும்படி வழிகாட்டப்பட்டிருந்தார்கள்.(புகாரி 3052,3700).

-அதிகாரம் இருந்த காலத்தில், கர்த்தர் மாற்றுமதத்தவர்களை தம் வசிப்பிடத்திலிருந்து துரத்திவிட வேண்டும் என்றும் உங்களின் ஊர்களில் வசிக்க விட கூடாது என்றும் , இல்லாவிட்டால் உங்களை வழிகெடுத்துவிடுவார்கள் என்கிறார்

யாத் 23:31-33 IRVTam

[31] செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். [32] அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. [33] உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.

https://bible.com/bible/1899/exo.23.31-33.IRVTam

யாத் 34:12-16 IRVTam

[12] நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். [13] அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள். [14] யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். [15] அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்; [16] அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.

https://bible.com/bible/1899/exo.34.12-16.IRVTam

 

-அதிகாரம் இல்லாதபோது கூட, அவர்களில் இருந்து வெளியேறி விடுமாறும் (2 கொரிந்தியர் 6:17),  அத்தகைய குடும்பஸ்தனை விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து கூறி அத்தகையவனோடு பழகவோ சேர்ந்து ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்தி விட வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 5:11,13).. இயேசுவை முறையாக ஏற்றுக்கொள்ளாதவனை வஞ்சகன் என்றும் அத்தகையோரை வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்றும் அப்படி செய்தால் அவர்களது பாவங்களில் பங்காளிகளாகிவிடுவீர் என்றும் 2 யோவான் 1:7,10-11 கூறுகிறது.

மல்லாக்கப் படுத்து துப்பி விடவும்

69.ஸஃபிய்யா () அவர்களை முடித்தது பற்றிய விமர்சனம்

-நபிகளார் அன்னை ஸஃபிய்யாவை விடுதலை செய்து திருமணம் செய்துகொண்டார்கள்- (புகாரி 371,947)

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம் (புகாரி 5136, 6966,6968) ஆகவே அன்னை ஸஃபிய்யாவின் சம்மதம் இல்லாமல் இது நடக்காது

-இஸ்லாத்தில் போரில் பிடிபட்ட பெண்ணின் இத்தா அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரையும் , கர்ப்பிணி அல்லவென்றால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமாகும் வரையிலும் ஆகும் (அபூதாவூத் 2157)

இதன்படி ஸஃபிய்யா (ர) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமான பின்பே நபிகளார் இல்லறத்தில் ஈடுபட்டார்கள் (புகாரி 2235,2893)

-முதலில் ஸஃபிய்யா (ர) அவர்களை திஹ்யா எனும் நபித்தோழருக்கு கொடுத்தார்கள். ஆனால் மக்கள் இவர் நபியவர்களுக்கு தான் பொருத்தமானவர் என்றும் குரைளா நளீர் கோத்திரத்தலைவி என நபிகளாரிடம் கூறியபோதே தனக்கு தேர்ந்தெடுத்தார்கள் (புகாரி 371)

அத்தோடு அன்னையவர்களின் அழகும் நபிகளாருக்கு கூறப்பட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன (புகாரி 2235).

அதாவது நபிகளாருக்கு மட்டுமே இவர் பொருத்தமானவர் என கூறிய பின்பே தேர்ந்தெடுத்து திருமணம் செய்தார்கள். 

 

இதிலே கற்பழிப்போ கள்ள உறவோ எதுவும் கிடையாது.

ஆனால் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவரான (1 சாமுவேல் 13:14, அப்போஸ்தலர் 13:22) தாவீதோ அழகான பெண் குளிப்பதை கண்டபோது அவளை கூப்பிட்டு விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4)

இதன்பின் இவளை தன் மனைவியாக்கி மீண்டும் பாலுறவு கொண்டபோது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் (2 சாமுவேல் 12:24)

இதையெல்லாம் நம்பிக்கெண்டு நபிகளார் முறையாக திருமணம் செய்ததை விமர்சிக்கலாமா?

70.குர்ஆன் 2:230 , புகாரி 5265 மூன்றாம் தடவை விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை மீண்டும் திருமணம் செய்வதற்கு அவள் வேறொரு திருமணம் செய்து அவனும் விவாகரத்து செய்தாலே முடியும் என்ற சட்டம்

-விவாகர்த்து செய்வதும் சேர்த்துக்கொள்வதுமாக  மனைவி பழிவாங்கப்படாமல் இருப்பதற்காக ஆண்களுக்கான விவாகரத்து செய்து மீண்டும் சேர்த்துக்கொள்ளும் உரிமையை இரண்டு தடவையே இஸ்லாம் வழங்கியுள்ளது.

இல்லாவிட்டால் அவளோடு வாழாமலும் அவளை வாழவிடாமலும் இருப்பதற்காக விவாகரத்து செய்வதும் அவளது காத்திருப்புக்காலம் முடியும்போது மீண்டும் சேர்த்துக் கொள்வதும் பிறகு மீண்டும் விவாகரத்து செய்வதும் என தொடர்ந்து செய்து அவள் பாதிக்கப்படாது இருக்கும்படி இத்தகைய சட்டத்தை இஸ்லாம் வழங்கியது.

மூன்றாம் தடவை விவாகரத்து செய்துவிட்டால் அவளோடு மீண்டும் சேரமுடியாது. அவள் வேறு திருமணம் முடித்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு அவளுடைய இரண்டாம் கணவனும் விவாகரத்து செய்தால் அதன் பின் வேண்டுமானால் முதல் கணவருக்கு இவளை திருமணம் முடிக்க முடியும் அவளுக்கு சம்மதம் இருந்தால்.

முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076)

 

பைபிள் கற்பழிப்பையே திருமணம் முடிப்பதற்கு சட்டமாக கொடுத்துள்ளது-

உபா 22:28-29 IRVTam

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam

இதை வச்சுக்கிட்டு இஸ்லாத்தை விமர்சிக்கலாமா?

 

தீவிரவாதிகளும் இஸ்லாமும்

-இஸ்லாம் பெண்களையும் சிறுவர்களையும் (புகாரி 3014,3015) போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்றவர் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ள துறவிகள் (முஸ்னத் அஹ்மத் 2728) போன்றோரை கொல்லுவதை தடை செய்துள்ளது. (இக்கட்டான நிலையில் இரவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்போது குதிரையின் காலில் மிதிபட்டு பாதிக்கப்படுவதை மட்டும் நபிகளார் அனுமதித்தார்கள் (திர்மிதீ 1570)

-இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத பிரஜையை கொல்லுபவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166), அத்தகையோரை பாதுகாக்க அவர்களுக்காக இஸ்லாமிய அரசு போரிடுவதோடு அவர்களின் சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது (புகாரி 3052, அபூதாவூத் 3052)

ஆக தற்குறிகள் செய்வதற்கு இஸ்லாம் பொறுப்பு ஆகாது

-இஸ்லாம் தற்கொலையை பெரும் பாவமாக கருதுகிறது (புகாரி 5778,6493). ஆக தற்கொலை தாக்குதலும் இந்த பெரும் பாவத்திலேயே வரும்.

-தீவிரவாதிகளை தீர்மானிப்பது யார்?- தம் சொந்த நலனுக்காகவும் கொள்ளையடிக்கவும் ஈவிரக்கமின்றி கொல்லும் அரசபயங்கரவாதிகள் (அமெரிக்கா,ரஷ்யா, பிரிட்டிஷ் இங்கிலாந்து, இஸ்ரேல்) தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தப்படுவதில்லை .

இதே செயலை சாதாரண கீழ்த்தட்டு மக்கள் செய்தால் தீவிரவாத முத்திரை குத்தப்படும்.

அதாவது ஐநா அங்கீகரித்த தீவிரவாதிகள் அரசதலைவர்கள் எனப்படுவர். ஐநா அங்கீகரிக்காதவர்களோ தீவிரவாதிகள் என பெயரிடப்படுவர். இது தான் யதார்த்தம்.

-ஏன் தீவிரவாதிகள் உருவாகிறார்கள்?

தன் சகோதர மக்கள் ஒடுக்கப்படும் போதும் தன் இன மக்கள் தாக்கப்படும் போதும் அவர்களை பாதுகாத்து எதிரிகளை எதிர்க்க சிலர் முன்வருவர். இவர்கள் தான் காலப்போக்கில் இலட்சியம் மாறிப்போய் இப்படியாகிறார்கள்.

தீவிரவாதம் எப்படி தவறானதோ, தீவிரவாதிகளை உருவாக்கும் ஒடுக்குமுறையும் தவறானதே!

-பைபிள் கர்த்தர் பழைய பகைக்காக பெண்களையும் குழந்தைகளையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னார் -1 சாமுவேல் 15:2-3

இதை தானே தீவிரவாதிகள் செய்கிறார்கள்

-பைபிள் கர்த்தர் ஆதரித்த சாம்சன் (சிம்சோன்) நியாயாதிபதி சொந்த இனப்பகைக்காக மாற்றுமத கோவிலில் தன் உயிரை மாய்த்து தற்கொலை தாக்குதலை எதிரிகளிடம் நடாத்தி 3000 பேரை பெண்களுட்பட கொன்றான்-நியாயாதிபதிகள் 16:28-30. இவனையும் புதிய ஏற்பாடு பரிசுத்தவான் லிஸ்டில் சேர்க்கிறது-எபிரேயர் 11:32

இதை தானே தீவிரவாதிகள் சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் செய்கின்றனர்.

ஆக இவர்கள் மல்லாக்கப் படுத்து எச்சில் துப்புவது போன்றதே.

 

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1