குர்ஆனா பைபிளா Dr Fazl vs YDM 2
முந்தைய பாகம் Part 1
22.ஆதாம் ஏவாள் மகிமையால் மூடப்பட்டிருந்தார்கள் என உருட்டுகிறார்இது ஐயாவின் சொந்த உருட்டு. அவர்கள் அம்மணமாக இருந்தனர். ஆதியாகமம் 2:25 IRVTam [25] ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக
இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். https://bible.com/bible/1899/gen.2.25.IRVTam காரணம் அவர்களது கண்கள் நன்மை தீமை அறிந்து
திறக்கப்படவில்லை . பழத்தை சாப்பிட்டதுமே வெட்கம் ஏற்பட்டு மறைத்துக்
கொண்டேன் ஆதியாகமம் 3:7 IRVTam [7] அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும்
திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் சேர்த்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள். https://bible.com/bible/1899/gen.3.7.IRVTam இப்படி மனிதனை தன் சமூகத்தில் அம்மணமாக
வைத்திருப்பது தான் மகிமையா? ஆனால் குர்ஆன் தான் அவர்கள் மீது மகிமையான ஆடை
இருந்தது என்றும் சைத்தான் அதை கழற்றி வெட்க ஸ்தலங்களை வெளிப்படுத்த வைத்தான்
என்றும் கூறுகிறது (குர்ஆன் 7:27). |
|
|
23.பலவீனமாகவுள்ளபோது உங்கள் மார்க்கம் உங்களுக்கு சக்தியிருந்தால் ஜிஸ்யா கட்டும் வரை போரிட வேண்டும் என்கிறார்உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்பது
மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வது கிடையாது என்பதை கூறுவதாகும். அதாவது நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்க மாட்டீர்கள் என
சொல்வதாகும். இஸ்லாம் ஆன்மீகமும் நீதித்துறையும் ஆட்சியதிகாரமுடைய
மார்க்கமாகும். எந்த ஆட்சியும் குடிமக்களிடம் வரி வாங்குவர் *குர்ஆன் 9:29ஐ நபிகளார் நடைமுறைப்படுத்திய விதமானது, யுத்தத்திற்கு சென்றால் முதலில் இஸ்லாத்தை நோக்கி
அழைப்பார்கள். அதை அவர்கள் மறுத்தால், அவர்களிடம் வரி செலுத்துமாறு கோருவார். அதையும் மறுத்தாலே யுத்தம் நிகழும் (முஸ்லிம் 3566 (1731a,b) , அபூதாவூத் 2612,புகாரி 3159) இதன் நோக்கம், இஸ்லாத்தை திணிப்பது அல்ல.. காஃபிர்களான எதிரித்தலைமைகள் தமக்கு சக்தியிருந்தால்
முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217, 60:2). ஏற்கனவே செய்து
கொண்டும் இருந்தார்கள். அந்நிலைமை ஏற்படாதிருக்க, ஆட்சியும்
ஆன்மீகமும் உடைய இஸ்லாமிய அரசு இவ்வாறே செய்ய வேண்டியதாக இருந்தது -இத்தகையோரை அடிமைகளாக நடத்த கூடாது என்பதையே
இமாம் புகாரி 3052வது ஹதீஸுக்கு தலைப்பாக போடுகிறார். (ஆனால் பைபிளோ அடிமைகளாக வேலைக்காரராக ஆக்கிக்கொள்ளுமாறே
கூறுகிறது. இரண்டும் நேரெதிரான து) -இத்தகைய மக்களுக்காக இஸ்லாமிய அரசு இம்மக்களின்
எதிரிகளுக்கு எதிராகவும் போரிடுவதோடு, அம்மக்களின் மீது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது
என்கிறது (புகாரி 3052,3700) -இத்தகையோரின் உரிமைகளில் குறைவைத்தாலோ அவர்களது
சக்திக்கு மீறி எதையாவது சுமத்தினாலோ, அம்மக்களுக்காக அத்தகையவனுக்கு எதிராக நானே இறைவனிடம்
வாதிடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்- (அபூதாவூத் 3052) -வரி செலுத்தாததற்காக அவர்களை நியாயமின்றி வேதனை
செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-முஸ்லிம் 5096-5097 -இத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை
கூட நுகரமாட்டான் -புகாரி 3166 எந்தளவுக்கென்றால் யூதரிடம் தன் கவசத்தை அடைமானம்
வைத்து கடன் வாங்கும் அளவுக்கு நபிகளார் நடந்துகொண்டார்கள்-புகாரி 2096,2068,2916 இப்படி வரி செலுத்தும் வேதக்காரர்களுக்கும்
நெருப்பு வணங்கிகளுக்கும் பாதுகாப்பையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியது. அதிகாரம் இருந்தபோது, இஸ்ரவேலரோடு சமாதானமான மக்களிடம் கப்பம் வாங்கி
வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது பைபிள்- உபாகமம் 20:10-11 இவ்வாறே யோசுவா நபி தன்னோடு சமாதானமான அப்பாவி
மக்களை வேலைக்காரர்களாக ஆக்கிக் கொண்டதாக யோசுவா 9:15-21 கூறுகிறது. இதேபோல் தாவீதும் அயல்நாட்டவர்களை வேலைவாங்கினான்-1 நாளாகமம் 22:2 (அத்தோடு அருகிலுள்ள மாற்றுமதத்தவர்களை
கொன்றுபோட்டுவிட்டு குடியேறுமாறும் , துரத்தி விட்டு அவர்களது ஆலயங்களை உடைத்து போடுமாறும்
கர்த்தரே சொன்னார் -உபாகமம் 20:16-18, யாத்திராகமம் 23:31-33,&23:24 இது மாற்றுமதத்தவனை மனிதனாக கூட மதிக்கவில்லை
என்பதை காட்டுகிறது) -புதிய ஏற்பாட்டிலோ, மாற்றுமத சிலைவணங்கி உறவினருடன் சேர்ந்து பழகவோ ஒன்றாக
சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிட வேண்டும் என்றும் (1கொரிந்தியர்5:11,13), அவர்களைவிட்டு பிரிந்து வாழுமாறும் (2 கொரிந்தியர் 6:17), அத்தகையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ
கூடாது என்றும் (2யோவான் 1:10-11) கூறுகிறது. வெறும் ஆன்மீகம் மட்டுமேயுள்ள இந்த மதமே இப்படி
பேசும்போது இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டுவது அபத்தமே! |
|
|
24.காஃபிர்களின் உள்ளத்தில் திகிலை போடுவேன் என்று குர்ஆன் 3:151 கூறுவதை குற்றப்மடுத்துகிறார்-இறைவனை நம்பாமல் அவனுக்கு இணைவைபத்து வேறு
படைப்புகளை வணங்கினால் இறைவன் திகிலை போடுவான். (குர்ஆன் 3:151) இது அவர்களின் இணைவைப்புக்கான தண்டனை. ஆனால் விசுவாசத்துடன் இணைவைப்பு எனும் அநீதியை
கலக்காதவர்களுக்கோ, அபயம் (அச்சமற்ற தன்மை) உண்டு (குர்ஆன் 6:82) இதே போல் மோசே காலத்தில் இஸ்ரவேலர்களை பற்றிய
திகிலை மற்றவர் மீது போடுவதாக கர்த்தரே சொன்னார் உபாகமம் 2:25 IRVTam [25] வானத்தின்கீழ் எங்குமுள்ள மக்கள் உன்னாலே
திகிலும் பயமும் அடையும்படி இன்று நான் செய்யத் துவங்குவேன்; அவர்கள் உன்னுடைய புகழைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார். https://bible.com/bible/1899/deu.2.25.IRVTam இதையெல்லாம் வைத்துக்கொண்டு பேசலாமா? இவர்கள் பைபிளை பற்றி அறிவுசூனியங்களாக உள்ளார்கள். இவர்களுக்கு விவாதம் ஒரு கேடா? |
|
|
25.குர்ஆன் 70:5-6 வலக்கரம் சொந்தமானவர்களுடனும் மனைவியருடனும் கற்பை பாதுகாக்காதிருப்பதில் குற்றமில்லை என்பதை அசிங்கம் என்கிறார் பைபிளை மறந்துஅடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து
என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது
அனுமதிக்கப்பட்டது. இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு
வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை.... அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது
அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை
பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை
மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157). இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து
விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10) ஆனாலும் * தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு
என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446) ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த
சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே. *பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி
வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது
என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது. *தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த
அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும்
கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5)) *உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை
என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு
விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13) இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள்
வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ
பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை
விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி
வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது. இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான
அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா? |
|
|
26..ஆதி 3:21 இலே ஆதாம் ஏவாளுக்கு தோல் ஆடைகளை அணிவித்தார் என்பதால் அம்மணமாக இருக்கவிடவில்லை என்பது போல உருட்டுகிறார்ஆரம்பத்தில் அம்மணமாக தான் இருக்க வைத்தார் (ஆதி 2:25), அவர்கள் அம்மணமாக இருப்பதை அறிந்து அத்திமர
இலைகளால் முதலில் மறைந்தனர் (ஆதி 3:7). அதன் பின்பே அந்த ஆடை சரியாக இல்லை என்பதால் தோல் ஆடைகளை
அணிவித்தார். இதனால் தன் சந்நிதியில் அம்மணமாக ஆடையின்றி
இருக்க வைத்தார் என்பது இல்லை என்றாகுமா? |
|
|
27.கொலோசெயர் 3:11 இலே அடிமையும் இல்லை சுயாதீனனும் இல்லை எல்லோரும் சமம் என்பதாக உருட்டுகிறார். இவ்வாறு பைபிள் அடிமை முறையை ஒழித்தது என்று உருட்டுகிறார்முதலில் அடிமைகளை வாங்கவும் விற்கவும்
வழிகாட்டியதே தேவன் தான் (லேவியராகமம் 25:42-46), தகப்பன் தன் சொந்த மகளை வேலைக்காரியாக அடிமையாக
விற்பதற்கு கர்த்தர் அனுமதித்து சட்டம் போட்டுள்ளார் (யாத்திராகமம் 21:7-10) இதே பவுல் தான் அடிமைகள் எஜமானுக்கு எல்லா
காரியத்திலும் கீழ் படியுங்கள் என்று அதே கொலோசெயர் 3:22 இலே கூறுகிறார் கொலோசேயர் 3:22 TCV [22] அடிமைகளே, உங்கள் பூமிக்குரிய எஜமான்களுக்கு எல்லாவற்றிலும்
கீழ்ப்படிந்திருங்கள்; அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும், அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல, கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு
அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். https://bible.com/bible/2730/col.3.22.TCV எபேசியருக்கு எழுதிய கடிதம் 6:5 TAERV [5] அடிமைகளே பூமியில் உள்ள உங்கள் எஜமானர்களுக்கு
அச்சத்தோடும், மரியாதையோடும் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போன்று உண்மையான
மனதோடு கீழ்ப்படியுங்கள். https://bible.com/bible/3154/eph.6.5.TAERV தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 6:1 TAERV [1] அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள்
எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும். https://bible.com/bible/3154/1ti.6.1.TAERV தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:9 TAERV [9] அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக்
கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே
செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. https://bible.com/bible/3154/tit.2.9.TAERV பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 2:18 TAERV [18] அடிமைகளே, உங்கள் எஜமானர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை எல்லா மரியாதையோடும் செய்யுங்கள். நல்ல இரக்கமுள்ள எஜமானருக்குக் கீழ்ப்படியுங்கள். முரட்டுத்தனமான எஜமானருக்கும் கீழ்ப்படியுங்கள். https://bible.com/bible/3154/1pe.2.18.TAERV பைபிள் அடிமைத்தனத்தை ஒழித்தது என்பது ஐயாவின்
சொந்த உருட்டு. அடிமையும் சுதந்திரமானவனும் ஆணும் பெண்ணும்
தூதரும் யூதனல்லாதவனும் ஆன்மீக ரீதியாக சமம் என்றே பவுல் கூறியுள்ளார். உலகப்பிரகாரமாக அடிமைத்தனத்தை (கொலோசெயர் 3:22, எபேசியர் 6:5, 1 தீமோத்தேயு 6:1, தீத்து 2:9), பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவரே அவர் . (1 கொரிந்தியர் 14:34-35, 1 தீமோத்தேயு 2:11-12) இஸ்லாமோ அடிமைகள் விசயத்தில்: *அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420
(1661a,c,1662) *அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585) *அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) - ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27) *அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார், உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட ,
அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள். இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில், நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c) ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22) *தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. *அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186) *அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும், நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192) |
|
|
28.குர்ஆன் 4:3 ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடிப்பதை அனுமதிக்கிறது. ஆனால் பைபிள் இரண்டு திருமணம் முடிப்மதை விபச்சாரம் என்பதாக உருட்டுகிறார்முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும்
அரேபியாவிலும் இருந்தது. இஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும்
அனுமதித்ததோடு நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே
அனுமதி (குர்ஆன் 4:3) -பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும்
பயனுள்ளதுமாகும் இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே
மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு
மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும் பிள்ளை பெற வைக்க முடியும். ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை சேர்ந்தாலும்
ஒருத்தனுக்கே பிள்ளை பிறப்பதோடு அதை கண்டுபிடிக்க வேறு பரிசோதனைகளும் செய்ய
வேண்டி வரும்.. அத்தோடு குடும்பம் நிலைபெறவும் மனித இனம்
நிலைபெறவும் அடிப்படையான அம்சம் இனப்பெருக்கமாகவுள்ளது. இதை
விரைவுபடுத்துவதற்கு ஒரு முறையே பலதாரமணம். -பலதாரமணத்தினால் முதல் மனைவி பாதிக்கப்படுதலும்
பெரு நன்மைக்குள் சிறு தீமையும் இதனால் முதல் மனைவியின் கணவன் மீதான உரிமை
குறைவடைவதால் பாதிக்கப்படுகிறாள் என தற்குரித்தனமாக பேசுவதாயின், இரண்டாம் மூன்றாம் குழந்தைகளை பெற்றோர் ஈன்றெடுக்கும்போது
முதல் குழந்தைக்கு பெற்றோர் மீதான உரிமையும் சொத்தின் மீதான உரிமையும் குறைந்து
பாதிப்படைவானே. அப்படி பார்த்தால் ஒரு தம்பதியினர் ஒரே குழந்தையை
தான் பெற்றெடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறவேண்டும் அத்தோடு எந்த பெரிய நலவுக்குள்ளும் சிறு தீமைகள் இருக்கத்தான்
செய்கின்றன. உதாரணமாக பிள்ளையை பெற்றெடுக்கும் போது தாய்
பெரும் வேதனையை அடைகிறாள். சிலபோது குழந்தை பெறும்போதே உயர்ந்த அன்னை
இறக்கிறாள். இதனால் உயர்ந்த தாயினம் பாதிக்கப்படுகிறது என
குழந்தை பெறுவதை எந்த தற்குரியாவது நல்லதல்ல என்பானா? அதே போன்று தான் பலதாரமணமும் சமூக ஒழுக்கம் கருதி ஒப்பற்ற
இறைவன் அனுமதித்தான். -பலதாரமணமும் விதவைகளும் பலதார மணம் இல்லாத மக்களிடையே விதவை இல்லற
மறுவாழ்வு மிகவும் குறைவாகவே காணப்படும். இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரித்ததன் மூலம் விதவை மறுவாழ்வை
இயல்பானதாக தொடரச்செய்தது. பலதாரமணமில்லாத மக்களிடையே விதவையை மணப்பதை ஏதோ ஆணின்
தியாகம் போன்று சித்தரித்து விதவையை அற்பமாக கருதக்காரணமாகவுள்ளது -பலதாரமணமும் விபச்சாரமும் விலைமாதுக்களிடம் செல்வோரில் அநேகர் திருமணமான
ஆண்களாக இருப்பர். இதிலே ஆண் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை
இல்லாததாலும் , அந்த பெண்கள் முறையாக கணவனெனும் ஆணின் கீழே இல்லாததாலுமே
அதை தொழிலாக செய்கின்றதோடு ஆண்களும் விரும்பிச் செல்கின்றனர். அதனால் இஸ்லாம்
இவற்றை நெறிப்படுத்தும் ஒரு வழியாக பலதாரமணத்தை அனுமதித்தது. ஆனாலும் நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே
பலதாரமணம் கூடும் (குர்ஆன் 4:3) (இதற்கு மீறிய விபச்சாரத்திற்கு இஸ்லாம் தண்டனை
வழங்குகிறது) பைபிள் பலதாரமணத்தை ஆதரிக்கிறது என்ற அடிப்படை
அறிவு இல்லாமையாலே இஸ்லாத்தின் பக்கம் விரலை நீட்டுகின்றனர். -கர்த்தர் இரண்டு மனைவியுடையவன் எப்படி
நடந்துகொள்ள வேண்டும் என சட்டம் கொடுத்து , அதை ஆதரிக்கிறார் (உபாகமம் 21:15-19) இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும்
இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப்
பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின்
புத்திரனானாலும், உபாகமம் 21:15 -தாவீது ராஜாவுக்கு அவரது ஆண்டவரின் மனைவிகளை
மடியில் கொடுத்ததே தேவன் தான் 2 சாமுயேல் 12:8 TCV [8] உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான்
உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா? https://bible.com/bible/2730/2sa.12.8.TCV -தாவீது ராஜா உரியாவின் மனைவியை விபச்சாரத்தில்
கர்ப்பமாக்கிய போது குழந்தையை கொன்றார் கர்த்தர். அதே பெண்ணை பத்தோடு பதினொன்றாக சேர்த்து மனைவியாக்கி
கர்ப்பமாக்கியபோது பிறந்த குழந்தையை கர்த்தர் நேசித்தார். இதன் மூலம் பலதாரம் அல்ல பிரச்சினை என்பதை காட்டி , பிரச்சினை தன் இனத்தவரின் மனைவி என்பதில் தான் உள்ளது என்பதை
வெளிப்படுத்துகிறார். 2 சாமுயேல் 12:13-15, 24-25 TCV [13] உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான். அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய். [14] ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர்
முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார். [15] இவ்வாறு சொன்னபின் நாத்தான் தன் வீட்டிற்குப் போனான். அதன்படி உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை
யெகோவா தண்டித்ததினால் அவன் நோயுற்றான். [24] அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல்
சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில் அன்புகூர்ந்தார். [25] யெகோவா அப்பிள்ளையில் அன்பாயிருந்தபடியால், அவர் அப்பிள்ளைக்கு யெதிதியா எனப் பெயரிடும்படி இறைவாக்கு
உரைப்பவனான நாத்தான் மூலம் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார். https://bible.com/bible/2730/2sa.12.13-25.TCV -அத்தோடு தாவீது பல மனைவியரையும் பல
வப்பாட்டிகளையும் ஏற்படுத்திக் கொண்டார். (2 சாமுயேல் 5:13) அவற்றையும் சேர்த்து உரியா மேட்டரை தவிர வேறு
பாவமே செய்யவில்லை என்றும் கர்த்தரின் பார்வையில் சரியாக நடந்தான் என்கிறது பைபிள்:(1 இராஜாக்கள் 15:5) -அத்தோடு பைபிளில் அநேக பரிசுத்தவான்கள் பலதார
மனைவியுடையோராகவும் வைப்பாட்டியுடையோராகவுமே இருந்துள்ளனர் உதாரணமாக ஆதியாகமம் 25:6 TCV [6] ஆனால் அவன் உயிரோடிருக்கும்போதே, ஆபிரகாம் தன் வைப்பாட்டிகளின் மகன்களுக்கு
அன்பளிப்புகளைக் கொடுத்து, தன் மகன் ஈசாக்கிடமிருந்து விலக்கி, அவர்களைக் கிழக்கு நாட்டுக்கு அனுப்பிவிட்டான். https://bible.com/bible/2730/gen.25.6.TCV இந்த ஆபிரகாம் தான் கர்த்தரின் நண்பர் (2 நாளாகமம் 20:7) -பைபிளில்
எங்கேயும் ஒரே திருமணம் தான் செய்ய வேண்டும் என கிடையாது. மாறாக துறவறத்தை ஊக்குவிக்கும் புதிய ஏற்பாடு கூட
எங்கேயும் பலதாரமணம் கூடாது என சொல்லவில்லை இயேசு மனைவியை தள்ளிவிடுவதையும் அப்படி
தள்ளிவிடப்பட்ட பெண்ணை முடிப்பதையுமே விபச்சாரம் என்கிறார் (மத்தேயு 5:32), அத்தோடு தள்ளிவிட்டு வேறு பெண்ணை முடிப்பதையும்
தள்ளிவிடப்பட்ட பெண்ணை முடிப்பதையும் விபச்சாரம் என்கிறார் (மத்தேயு 19:9). இவை இரண்டிலுமே தள்ளிவிடுதலை குறித்தே பேசுகிறது. அதாவது தன்
தள்ளிவிட்டு வேறு திருமணம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் அது விபச்சாரம்
என்றும் தள்ளிவிடப்பட்ட பெண்ணை முடிப்பதும் விபச்சாரம் என்பதே இதன்
அர்த்தம் . அதாவது இதற்கும் பலதாரமணத்திற்கும் சம்பந்தமில்லை... பவுல் கூட சபையின் கண்காணி, சபை உதவியாளன்,சபை மூப்பர் போன்றோர் ஒரே மனைவியுடையவராக இருக்கவேண்டும்
என நிபந்தனை விதித்தார்.(1 தீமோத்தேயு 3:2,12 தீத்து 1:6). ஆனாலும் அது கூடாது என்றோ பாவம் என்றோ எங்கேயும்
சொல்லவில்லை. பவுல் துறவறமே சிறந்தது என்று கூறுகிறார்.. ஆனாலும் பலதாரமணம்
கூடாது என்று கூறவில்லை. -சிலர் தற்குறித்தனமாக கடவுள் ஆதாமுக்கு ஒரே
மனைவியை தானே கொடுத்தார். ஆகவே அவரது விருப்பம் ஒரு ஆணுக்கு ஒரே மனைவி தான்
என சொந்தத்திலிருந்து எடுத்து பேசுவார்கள். ஆனால் அதே தேவன் தான் ஆதாமின் பிள்ளைகளுக்கு வேறு
பெண்பிள்ளைகளை படைக்காமல் சொந்த சகோதரிகளை முடிக்க வைத்து ஜனத்தை பெருக்கினார். இதை வைத்து அவர்களின் முறையிலே பேசுவதென்றால், கடவுளுக்கு மனிதன் தன் சொந்த சகோதரிகளை திருமணம்
முடிப்பதே விருப்பமானது என கூற வேண்டியேற்படும். அவ்வாறு கூறுவார்களா? ஆகவே இது தற்குறித்தனமானது. ஆதாமுக்கு ஒரே மனைவியும் காயீனுக்கும் சேத்துக்கும் அவரது
தம்பிகளுக்கும் உடன்பிறந்த சகோதரிகளை மனைவியாக்கியதற்கும் ஒரே காரணம், அனைவருக்கும் ஒரே பெற்றோர் இருப்பதற்கும் தேவபக்தியுள்ள
ஒரே சந்ததியாக இருப்பதற்கும் தான் (அவரே தாவீதுக்கு ஆண்டவனின் மனைவிகளை கொடுத்து (2 சாமுவேல் 12:8), பலதாரத்தின்போது எப்படி நடக்கவேண்டும் என்று
சட்டமும் வழங்கினார் (உபாகமம் 21:15) -ஆனாலும் ராஜாவின் இருதயம் பின்வாங்கும் அளவுக்கு
அதிக மனைவிகளையும் அதிக குதிரைகளையும் வைக்க கூடாது என உபாகமம் 17:17 கூறுகிறது.. தாவீது 8++ மனைவிகள் (எப்ரோனில் :2 சாமுவேல் 3:2-5 இலே ஆறுமனைவிகள், பாத்சபா, மீக்காள், இன்னும் அநேக மனைவியர் (2 சாமுவேல் 5:13), 10++ வப்பாட்டிகள் (2 சாமுவேல் 5:13 இதிலே பத்து பேரை வீட்டைக்காக்க வைத்து தப்பி
ஓடினார் (2 சாமுவேல் 20:3) வைத்திருந்தார். ஆனாலும் அவரது இருதயம் தேவனை விட்டும் பின்வாங்கவில்லை
அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் (1 இராஜாக்கள் 11:4-6,15:5).. -சாலமோன் 700 மனைவியரையும் 300 வப்பாட்டிகளையும் வைத்திருந்தார். (1 இராஜாக்கள் 11:3). ஆனாலும் தேவன் இதை கண்டிக்காமல் அந்நியமத பெண்களை
மணந்து சிலை வணக்கம் செய்தததை
கண்டித்ததாகவே பைபிள் கூறுகிறது (1 இராஜாக்கள் 11:9-11). காரணம் மாற்றுமதத்து பெண்களை மணப்பதையும்
மாற்றுமதத்தவர்களுக்கு சமாதானத்தையும் நன்மையையும் நாடுவதை கர்த்தர்
தடுத்திருக்கிறார் (எஸ்றா 9:12, யாத்திராகமம் 34:12,16). மற்றபடி சாலமோனின் பலதாரமணத்தை கண்டிக்கவில்லை -அத்தோடு மலாக்கி (மல்கியா) 2:15 இலே உன் இளவயது மனைவிக்கு துரோகம் செய்யாதே
என்றிருப்பது பலதாரமணத்தை குறிப்பதன்று. அவளை ஒதுக்கி விடுவது , முறையின்றி தள்ளிவிடுவது, ஏமாற்றுவதை குறிக்கிறது. ஏனெனில்
பலதாரமணத்தை கர்த்தரே ஆதரித்து சட்டம் வழங்கியிருந்தார் (உபாகமம் 21:15-19).
அத்தோடு மாற்றான் மனைவியை விபச்சாரத்தில்
கர்ப்பமாக்கிய போது குழந்தையை கொன்ற தேவன், பத்தோடு பதினொன்றாக அவளை திருமணம் முடித்து கர்ப்பமாக்கிய
போது பிறந்த குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24). அத்தோடு ஆண்டவனின் மனைவியரையும் தாவீதுக்கு அவரே
கொடுத்தார் (2 சாமுவேல் 12:8) ஆகவே இதற்கும் பலதார எதிர்ப்புக்கும் சம்பந்தமில்லை -பைபிளில் மனைவிகள் என கூறாமல் மனைவி என்
ஒருமையில் சில இடங்களில் (சங்கீதம் 128:3, மலாக்கி 2:15, நீதிமொழிகள் 5:18, பிரசங்கி 9:9) கூறப்படுவதால் தேவனது விருப்பம் ஒரு மனைவியே என
கதைவிடுவர். ஆனால் உண்மை என்னவென்றால் அனைவரும் பலதாரமணம்
புரிவதில்லை என்பதால் பேச்சுநடைமுறையில் உள்ளதே அவ்வாறு ஒருமையாக பேசுவதும். இதேபோன்று சில இடங்களில் எபிரேய பாசையில் கணவன் என்பதை
பன்மையிலும் பைபிள் கூறுகிறது (ஏசாயா 54:5). இதை வைத்து கர்த்தரின் விருப்ப மென்பது ஒன்றுக்கு
மேற்பட்ட கணவர்கள் இருப்பதே என சொன்னால் காறித்துப்பமாட்டார்களா? அத்தோடு உன் மக்கள் (மகன்கள்) உன்னை திருமணம் செய்வார்கள் என தேவன் வாழ்த்து
தெரிவிக்கிறார் (ஏசாயா 62:5). இதை வைத்து ஒரே தாயை அவளுடைய பல மகன்கள் திருமணம்
முடிக்கலாம் என்றும் அதுவே தேவனின் விருப்பம் என்றும் தற்குறித்தனமாக பேசித்தான்
பார்க்கட்டுமே. ஆகவே பைபிளிலே பலதாரமணத்தை ஆதரித்து தேவன்
கொடுத்திருப்பதை அறியாமல், தற்குறித்தனமாக இஸ்லாத்தின் பொருத்தமான போதனையை
விமர்சிக்கலாமா? |
|
|
29.குர்ஆன் 16:44 நபி விளக்குவார் என்கிறது 10:94 நபியிற்கு சந்தேகம் என்கிறது என்பதாக
உருட்டுகிறார்
குர்ஆன் 10:94 முகம்மது நபியிற்கு சந்தேகம் இருப்பதாக சொல்லவேயில்லை.. சந்தேகமிருந்தால் வேதத்தை ஓதுவோரிடம் கேட்டுப்பார்க்க
சொன்னது. அதாவது தன்னை பற்றிய தீர்க்கதரிசனம் முந்தைய
வேதத்திலும் உள்ளது என்பதால் இஸ்லாத்தை ஏற்ற யூத கிறிஸ்தவ அறிஞர்களிடம்
கேட்டுப்பார்க்க சொன்னது. ஆனாலும் நபிகளார் சந்தேகப்படவோ யாரிடமும் கேட்கவோ
இல்லை! முகம்மது நபி மக்களுக்கு இறங்கிய வேதத்தை விளக்கி
கூறுபவர். இந்த இரண்டும் எந்த விசயத்திலும் முரண் இல்லை! முரண் என்றால் எப்படி இருக்க வேண்டும்? 3.மோசே ஏன் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள்
நுழையவில்லை 1.தேவனை பரிசுத்தம் பண்ணும் படி மோசே விசுவாசிக்கவில்லை என்பதால் எண்ணாகமம் 20:12 IRVTam [12] பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப்
பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள்
அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்றார். https://bible.com/bible/1899/num.20.12.IRVTam 2.தேவனுடைய கட்டளையை மோசே மீறியதால் உபாகமம் 32:50-52 IRVTam [50] நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே
மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, [51] உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும்
ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய். [52] நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள
தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார். https://bible.com/bible/1899/deu.32.50-52.IRVTam 3.இஸ்ரவேலர் யுத்தம் செய்து நாட்டை பிடிக்க
பயந்ததால், அவர்கள் காரணமாக மோசே மீது தேவன் கோபம் கொண்டதால்
(உபா 1:37)-இஸ்ரேலியர் செய்த தப்பிற்காக உபாகமம் 1:34, 36-38 IRVTam [34] “ஆகையால் யெகோவா உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக்
கேட்டு, கடுங்கோபங்கொண்டு: [36] எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரம் அதைக்
காண்பான்; அவன் யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவனுடைய
பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் வாக்களித்தார். [37] அன்றியும் உங்கள் நிமித்தம் யெகோவா என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் நுழைவதில்லை; [38] உனக்கு முன்பாக நிற்கிற நூனின் மகனாகிய யோசுவா அதில்
நுழைவான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சொந்தமாகப் பங்கிடுவான். https://bible.com/bible/1899/deu.1.34-38.IRVTam உண்மையில் இஸ்ரவேலரை மட்டுமே அழிப்பேன் என்று
தான் சொன்னார். மோசேயை பெரிய ஜாதியாக்குவேன் என்று தான் சொன்னார்
-எண்ணாகமம் 14:12 அது எமோரியரா கானானியரும் அமெலேக்கியருமா என்பதையும்
மாற்றி சொல்கிறது |
|
|
30..குர்ஆன் 2:282 ஒரு பெண்ணுடைய சாட்சி ஆணின் சாட்சியின் பாதியாக கருதப்படுவதை குறிப்பிடுகிறார் . இது கேவலப்படுத்துகிறதாக உருட்டுகிறார்-வியாபாரம் போன்றவற்றிற்கான சாட்சியே அவ்வாறு பாதியாக இருக்கும் படைத்த இறைவன் தன் ஞானத்தால் இவ்வாறு நியமித்தான்.
பெண்கள் இதிலே ஒருத்தி தவறினால் மற்றவள் நினைவூட்டுவதற்காக நியமித்தான் ஆனால் மற்ற விடயங்களில் அவர்களது சாட்சி எடுத்துக்கொள்ளப்படும் -உதாரணமாக நான் இவருக்கும் இவரது மனைவிக்கும் பாலூட்டினேன் என ஒரு பெண் சொன்னபோது அதை ஏற்றார்கள்(புகாரி
5104) -மனைவி மீது விபச்சாரம் செய்ததாக கணவன் குற்றம் சாட்டும் போது அதை மறுத்து சமமாக அவள் சாட்சி கூறுவதற்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. (குர்ஆன்
24:6-9) பைபிள் பெண்ணுக்கு சாட்சி சொல்லும் உரிமையே
கிடையாது தன் சொந்த விசயத்தில் கூட அதாவது உடலுறவில் கன்னியாக இல்லாவிட்டால் அதை
குற்றச்சாட்டு வைத்தால் அப்போது அவளது பெற்றோர் தான் இரத்தம் தோய்ந்த துணியை
காட்டவேண்டும் உபாகமம் 22:13-17 IRVTam [13] “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில்
உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து: [14] நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை
என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; [15] அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய
கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில்
கொண்டுவரக்கடவர்கள். [16] அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, [17] நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று
அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே
இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை
விரிக்கக்கடவர்கள். https://bible.com/bible/1899/deu.22.13-17.IRVTam சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில்
இரத்தம் வராது. அவர்களுக்கு சாட்சி கூறவும் முடியாது
இச்சட்டத்தின் படி. பெண்ணுக்கு பேசவோ கற்பிக்கவோ அதிகாரம் செலுத்தவோ
உரிமை இல்லை 1 கொரிந்தியர் 14:34-35 IRVTam [34] சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. [35] அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக
இருக்குமே. https://bible.com/bible/1899/1co.14.34-35.IRVTam 1 தீமோத்தேயு 2:11-14 IRVTam [11] பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக
இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். [12] உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி
கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். [13] ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். [14] மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். https://bible.com/bible/1899/1ti.2.11-14.IRVTam சாட்சி கூற அனுமதியே கொடுக்காத பைபிளை வைத்துக்
கொண்டு இதை பேசலாமா? |
|
|
31.குர்ஆன் 4:34 மனைவியரை திருத்துவதற்காக மூன்றாவது வழியாக அடிப்பதற்கு சொல்வதை குறித்து விமர்சிக்கிறார். பைபிள் மனைவியர் மீது அன்பு கூற சொல்கிறதாம்குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள்
குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம்
மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும்
அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான். *இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை
முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு
நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம்
அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே
சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது: அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே
தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி
வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு
எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334
(1218a), அபூதாவூத் 1905) இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன
நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும்
தடைவிதிக்கிறார்கள். கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த
வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது
என இமாம் அபூதாவூத் கூறுகிறார்) அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில்
நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146).. ஆக
மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில்
சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில்
சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது. பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும்
உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க
முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ
அதுவே பைபிளில் அவளது நிலை. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில்
நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக்
கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும்
பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.1 பேதுரு 3:5-6 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல
மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும்
கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.எபேசியர் 5:22-24 அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க
வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே
வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில்
எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக
இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும். ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை
விமர்சிக்க தகுதியேயில்லை. இதுவே பைபிளினதும் இஸ்லாத்திற்கும் நிலை!! |
|
|
32.முகம்மது நபியிற்கு ஒரு பெண் தன்னை அர்ப்பணித்தால்,நபி விரும்பினால் திருமணம் செய்துகொள்ளலாம் அது நபிக்கு மட்டுமானது (33:50) என்றிருப்பதை காட்டி இது தான் சிறப்புக்குரியவர் என உருட்டுகிறார்இப்படி இறைவன் சலுகை வழங்கியும் நபிகளார் அவ்வாறு
யாரையும் திருமணம் முடித்து தாம்பத்யத்தில் ஈடுபட்டதில்லை! கோத்திரங்களிடையே உறவுகளை ஏற்படுத்திக்
கொள்வதற்காக அல்லது அதுபோன்ற காரணங்களுக்காக இவ்வாறு இறைவன் சலுகை வழங்கினாலும் , நபிகளார் அதை செய்யவில்லை. பைபிள் கர்த்தர் தன் தீர்க்கதரிசியை வேசியை
காதலித்து திருமணம் முடிக்க சொன்னாரே: ஓசியா 1:2 TAERV [2] இது கர்த்தருடைய முதல் செய்தியாக ஓசியாவிற்கு
வந்தது. கர்த்தர், “நீ போய் தன் வேசித்தனத்தினால் குழந்தைகளைப் பெற்றெடுத்த
ஒரு வேசியை மணந்துகொள். ஏனென்றால் இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் எல்லோரும்
வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்ளாக
இருந்திருக்கிறார்கள்” என்றார். https://bible.com/bible/3154/hos.1.2.TAERV தாவீதின் ஆண்டவருடைய மனைவிகளை தாவீதுக்கு
கொடுத்தார் ஏ: சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV [8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும்
எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV இதையெல்லாம் வைத்துக்கொண்டு பேசலாமா |
|
|
33..குர்ஆன் 4:106,40:55, 47:19, நபி பாவமன்னிப்பு தேடவேண்டும் என சொல்வதால் பாவியாக சித்தரிக்க பார்க்கிறார். முன்பின் பாவத்தை மன்னித்து விட்டான் என 48:2 என்பதை காட்டி பாவம் செய்ய வழிகாட்டுவதாக சித்தரிக்கிறார். ஆனால் இயேசு தன்னிடம் பாவமில்லை என்றார் (யோவான் 8:46) குறிப்பிடுகிறார்.-மனிதர்கள் இறைவனிடம் தம்மை தாழ்த்தி பணிவாக இருக்க வேண்டும். அதிலே முதன்மையானது பாவமன்னிப்பு கேட்பதுவே. அதற்கு முன்மாதிரியாக நபிகளார் இருக்க வேண்டும். அதற்காக நபிகளார் பாவமன்னிப்பு கேட்கவேண்டும். யாருடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனே பாவியானவன். ஆனால் முகம்மது நபியின் முன்பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (குர்ஆன் 48:2) அப்படியிருந்தும் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு அதிகமாக இறைவனிடம் மீள்பவராகவும் பாவமன்னிப்பு கேட்பவராகவும் இருந்தார்கள்-புகாரி 6307 காரணம் அவர் பாவம் செய்பவர்கள் இறைவனிடம் மீளுவதற்கும் பாவமன்னிப்பு கேட்பதற்கும் நன்மை செய்வதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் என சகலத்திற்கும் அழகிய முன்மாதிரியாக இருக்கிறார்.(33:21) -பைபிளிலே மோசேயின் மீது பரிசுத்த ஆவியானவர் இருந்தும், தேவனை பரிசுத்தம்பண்ணும்படி விசுவாசிக்கவில்லை (எண்ணாகமம் 20:12, உபாகமம்
32:50-51) -ஆரோனை தேவன் தேர்வு செய்திருந்தும் அவர் மாட்டுக்கன்றை செய்து சிலை வணங்க வைத்தார் (யாத்திராகமம் 32:1-6) -தாவீதின்மீது பரிசுத்த இறங்கிய பின் (1 சாமுவேல் 16:13), அந்த ஆவியானவர் அவளுக்குள்ளே நீங்காமல் இருந்தும் (சங்கீதம்
51:11), குளிக்கும் பெண்ணின் அழகில் மயங்கி அவளை கூப்பிட்டனுப்பி மாற்றான் மனைவி என அறிந்தும் விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல்
11:2-4)- ஆவியானவர் கண்டித்து உணர்த்தாமல் என்ன பண்ணீட்டிருந்தார்? -சிம்சோனை ஆவியானவர் ஏவ தொடங்கினார்(நியாயாதிபதிகள்
13:24-25), அதன் பின் பிலிஸ்திய பெண்ணின் அழகில் மயங்கி காதலில் விழுந்தார் (நியாயாதிபதிகள்
14:1-3), இந்த காதல் தேவனது செயல் (நியாயாதிபதிகள் 14:4) இப்படி ஆவியானவரை பெற்ற இத்தகையவர்களே இப்படி இருந்துள்ளனர். இதே ஆவியானவர் இயேசுவின் மீதும் இறங்கினார் (மத்தேயு
3:16-17), இதன்பின் இயேசுவும் பாவியான பெண்ணிடம் முத்தம் வாங்கி தலைமுடிகளால் தடாவப்பட்டார்-லூக்கா
7:38. அத்தோடு தன் இறுதி காலத்தில் தேவன் மீதே நம்பிக்கை இழந்தார். அதாவது என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (மாற்கு
15:34, மத்தேயு 27:46) என கதறினார். இதை தீர்க்கதரிசன நிறைவேற்றம் என சமாளிக்க பார்ப்பார்கள். ஆனால் தீர்க்கதரிசனம் நிறைவேற்றுவதற்காக பொய்யாக கைவிடாத தேவனை ஏன் கைவிட்டீர் என கேட்டால் தேவன் மீதே அவதூறு எனும் பாவம் தானே வரும். இதை சமாளிக்க லூக்காவும் யோவானும் இயேசு அப்படி கதறாமல் என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறேன் என்றும் முடிந்தது என்றும் கூறியதாக எழுதியுள்ளனர். ஆனால் நபிகளாரோ இறைவனை ஒருபோதும் நம்பாமல் இருக்கவில்லை. உடன்படிக்கை எடுக்கும்போது கூட பெண்களின் கைகளை தொடமாட்டார்கள் (புகாரி
7214) ஆக உண்மையான பாவிகள் யார்? |
|
|
34.முகம்மது நபி கனிவுடன் நடக்காததால் கனிவுடன் நடக்குமாறு 26:214 சொல்வதாகவும் நபி குருடர் வந்தபோது கடுகடுத்ததையும் 80:1-2 குறிப்பிடுகிறார் . இயேசுவோ மக்களை கண்டு மனதுருகினார் என்பதாக உருட்டுகிறார். அத்தோடு இயேசு குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினார் என்கிறார்முகம்மது நபி கனிவுடன் இருக்குமாறு இறைவன்
கூறினான். இதன் அர்த்தம் அவர் கனிவுடன் இல்லை என்பதல்ல. மாறாக இப்படி தான் நடக்க வேண்டும் என்ற உபதேசமாகும். முகம்மது நபி இறைவனது கருணையால் நீர் மென்மையாக
நடந்துகொள்கிறீர் (குர்ஆன் 3:159), நீர் அழகான நற்குணத்தில் இருக்கிறீர் (குர்ஆன் 68:4) என்று இறைவனே கூறுகிறார் எந்தளவுக்கென்றால், தனிமையில் இருந்தபோது தன்னை கொல்வதற்கு வந்த
மனிதரையும் மன்னித்து அனுப்பி வைத்தார்கள் (புகாரி 2910), நபிகளார்
தன் சொந்த விஷயங்களுக்காக யாரையும் பழிவாங்கியதில்லை (புகாரி 3560). யாரையும் அடித்ததுமில்லை (அபூதாவூத் 4786,இப்னுமாஜா 1984) குருடர் வந்தபோது புறக்கணித்ததை கூட இறைவன்
கண்டித்து திருத்துவதே இது நீதியான இறைவனிடமிருந்து வந்தது என்பதற்கு சான்று. நபிகளார் மக்காவை சேர்ந்த மதிக்கப்பட்ட இணைவைப்பாளருக்கு
மார்க்கத்தை கூறிக்கொண்டிருந்தபோது குருடர் வந்து தனக்கு உபதேசம் செய்யுமாறு
கேட்டதால் மனிதன் என்ற ரீதியில் முகத்தை கடுகடுத்ததாக்கி திருப்பிக் கொண்டார். இது குருடருக்கு தெரியாவிட்டாலும் இறைவன் கண்டித்து
உணர்த்தினான். இயேசு குஷ்டரோகியை சுகப்படுத்தியது இருக்கட்டும். தன்னை ஏற்காத யூதர்கள் திருந்த கூடாது மன்னிக்கப்பட
கூடாது என்பதற்காகவே உவமையாக பேசுவதாக இயேசுவே வாக்குமூலம் கொடுக்கிறார்: மாற்கு 4:11-12 TAOVBSI [11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு
அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம்
உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12] அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். https://bible.com/bible/339/mrk.4.11-12.TAOVBSI |
|
|
35.வேதவாக்கியங்கள் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறதாக பவுல் 2 தீமோத்தேயு 3:16 இலே குறிப்பிடுவதால் யோவான் எழுதியதும் ஆவியால் அருளப்பட்டது என்கிற்ர்பவுல் இதை கடிதமாக தீமோத்தேயுவுக்கு எழுதும்போது
பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது. அதை தான் வேதவாக்கியம் என்கிறார். புதிய ஏற்பாட்டு சுவிசேஷங்கள் அனைத்தும்
பவுலுகக்கு பிறகு அவர்களாக எழுதிக்கொண்டவையே. யோவான் 21:24-25 TAOVBSI [24] அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச்
சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். [25] இயேசு செய்த வேறு அநேகக் காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள்
உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். https://bible.com/bible/339/jhn.21.24-25.TAOVBSI இவை வேதமாக இருந்தால் இவராக தீர்மானித்து எழுத
முடியுமா? |
|
|
36..ஹூருல்ஈன்களை கூலியாக கொடுக்கப்படுவதை கேலி செய்கிறார்அப்பெண்கள் திருமணம் முடித்தே கொடுக்கப்படுவர் (குர்ஆன் 52:20) அதிலே அவர்களது அந்தரங்க உறுப்புகளை வர்ணித்து
எதுவும் கூறப்படவில்லை 78:33 இலுள்ள "கவாயிப்" என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை
குறிக்கும். அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை
பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே. அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோது
அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள்
முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை (78:33 இலுள்ள
வாசகம்)- இளம்பெண்களை
சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள்
செய்தது மிகவும் கெட்டது" என்று
கூறியதாக இடம்பெற்றுள்ளது (ولا
محمدا قتلتم. ولا الكواعب أردفتم (சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது) 11083,தபரானீ (11/247) 11632) இப்படி இளவயது பெண்கள் மனைவியராக சுவர்க்கத்தில்
கிடைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . உணவு பானங்கள் ஓய்வு என்பதோடு ஆணுக்கு மிகவும்
விருப்பமானது பெண் என்பதால் அவர்களையும் சுவர்க்கத்தில் கொடுப்பான். உண்ணும் வேளையில் உணவும் ,பருகும் வேளையில் பானங்களும் , தாம்பத்ய வேளையில் தாம்பத்யமும், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தலும்
அதற்கேற்றபடி நடக்கும் (புகாரி 3245) உலகில் கடவுள் ஆணுக்கு பெண்ணையும் ஆணுறுப்பு
பெண்ணுறுப்பு ஆகியவற்றை படைத்தது போன்றே அதுவும். இதனால் என்ன பிரச்சினை? கர்த்தர் பெண்களை சப்ளை செய்ததாகவும் தாவீதின்
மனைவியரை பக்கத்துவீட்டுக்காரனுக்கு சப்ளை செய்யப்போவதாகவும் பச்சையாக பேசுவதை
வைத்துக்கொண்டு இதை பேசலாமா 2 சாமுவேல் 12:8, 11-12 TAOVBSI [8] உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். [11] கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். [12] நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான். https://bible.com/bible/339/2sa.12.8-12.TAOVBSI சிலை வணக்கத்தை கண்டிப்பதாக கூறிக்கொண்டு விபச்சார வர்ணனைகளை
பைபிள் கூறுகிறதே எசேக்கியேல் 23:3, 20-21 IRVTam [3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது. [20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள்
வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய
முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை
நினைத்துவருகிறாய். https://bible.com/bible/1899/ezk.23.3-21.IRVTam இதையெல்லாம் வைத்துக்கொண்டு பேசலாமா? |
|
|
37.ரோமர் 14:17 இலே தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல என பவுல் சொல்வதை குறிப்பிடுகிறார் , லூக்கா 20:35 அங்கே பெண்கொடுத்தல் பெண் எடுத்தல் இல்லைதேவனுடைய ராஜ்யத்தில் உண்ணுதலும் பருகுதலும்
உண்டு என்று இயேசு கூறுவதாக கூறப்படுகிறது மத்தேயு 26:29 IRVTam [29] இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக
உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப்
பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். https://bible.com/bible/1899/mat.26.29.IRVTam லூக் 14:13-15 IRVTam [13] நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும்
நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. [14] அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு
திரும்பச்செய்யப்படும் என்றார். [15] அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன்
இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான்
என்றான். https://bible.com/bible/1899/luk.14.13-15.IRVTam புதிய ஏற்பாடு துறவறத்தை தூக்கிப்பிடித்ததால்
சுவர்க்கத்திலும் துறவி போன்றே இருப்பர் என கூறப்படுகிறது. |
|
|
38..குர்ஆன் 47:15 இலே மது ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ளன என்பதை குறிப்பிடுகிறார்கர்த்தர் குடித்து சந்தோசமாக இரு என்று சொன்னதாக
பைபிள் சொல்வதால் தானோ இதை விமர்சிக்கிறார்கள்? உபாகமம் 14:26 IRVTam [26] அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற
லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக. https://bible.com/bible/1899/deu.14.26.IRVTam (இங்கே குடிக்க சொல்லவில்லை. சாப்பிடத்தான் சொல்கிறது என சமாளிக்க பார்க்கலாம். ஆனால் உணவுகளோடு குடிபானத்தையும் சேர்த்து வரும்போது
சாப்பிடுதல் என்பதை தான் கூறும் (உதாரணமாக ஆதி 18:8 )) *சோகத்தில் இருப்பவன் சரக்கு அடிக்கலாம் : நீதி மொழிகள் 31:6-7 IRVTam [6] மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; [7] அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். https://bible.com/bible/1899/pro.31.6-7.IRVTam இப்படி மது குடிப்பதற்கு பைபிள் முற்றாக
தடுக்கவில்லை என்பதாலும் அடிமையாகாத அளவுக்கு குடித்துக் கொள்ளலாம் என்று
நம்புவதால் இது தப்பாக படுதோ? சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19) இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? |
|
|
39.குர்ஆன் 56:17 இலே ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக இருப்பார்கள் என்பது பெண்களை வைத்திருப்பார்கள் என அரைகுறையாக வாசிக்கிறார்சுவர்க்க ஆண்களை பற்றியே அவ்வசனம் கூறுகிறது. ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் : 56:16) (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். (அல்குர்ஆன் : 56:22) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (அல்குர்ஆன் : 56:23) அத்தோடு அந்த மனைவியரை வேறு யாரும் பார்க்க
மாட்டார்கள் (புகாரி 3243,4879,4880) பைபிள் வசனங்களை படித்துக்கொண்டு அதே போன்று தான்
குர்ஆன் இருக்கும் என்று நினைப்பதாலே இதுபோன்ற தற்குறித்தனமாக கூறுகிறார் |

Comments
Post a Comment