YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary
Claim 1.இஸ்லாம் மாற்று மதத்தவர்களை நண்பர்களாக எடுக்க கூடாது என்கிறது
-முஸ்லிம்களோடு
யுத்தம் செய்யாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்யலாம்- குர்ஆன் 60:8
-அத்தகைய உறவினரை சேர்த்துக்கொள்ளலாம்,
உறவை பேணி வாழலாம்-புகாரி 5978-5979,
5981, 5990
-நட்பு பாராட்ட கூடாது என்பதற்கான காரணம்- எதிரிகள் தமக்கு சக்தி கிடைக்கும் போது நட்பையோ உறவையோ பேணமாட்டார்கள். தீங்கிழைப்பதில் குறைவைக்கவும் மாட்டார்கள் . பொதுவாக முஸ்லிம்களும்
காஃபிர்களாக ஆகிவிட வேண்டும் என விரும்புவார்கள்(குர்ஆன் 60:2)
சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள்
(குர்ஆன் 2:217)
நண்பர்களாக எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தம் இரகசியங்களை அவர்களிடம் கூற, அது பாதிப்பில் முடியும் (குர்ஆன் 60:1)
ஆக இத்தகைய தற்காப்பு நிலையில் அவர்களோடு நட்பு பாராட்டுவது அவர்களது பிழைகளை ஆதரிப்பதாக அமையும்.
ஆனாலும் அவர்களில் முஸ்லிம்களுக்கு எதிராக தீங்கிழைக்காதோருக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை (குர்ஆன் 60:8)
-அத்தோடு அவர்களின் உலக நலவுக்காகவும்
நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம். நபிகளார் அவ்வாறு செய்தார்கள்-புகாரி 6397,4774
-அவர்களோடு வியாபாரம் செய்யலாம். அவர்களிடம் கடன் வாங்கலாம்- நபிகளார் மரணிக்கும் போது யூதரிடம் கடன் வாங்கி தன் கவசத்தை அடைமானம் வைத்திருந்தார்கள்-புகாரி
2916,2068,2096
தப்பான கொள்கையுடையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அவர்களின் பாவங்களில் பங்காளியாக ஆவாய் (2 யோவான் 1:10-11)
-சிலைவணங்கியை
விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து, அத்தகைய உறவினரோடு பழகவோ கூட்டாக உண்ணவோ கூடாது அவனை துரத்திவிட வேண்டும்.(1 கொரிந்தியர் 5:11,13)
Claim 2.கிறிஸ்தவம் எதிரியை நேசிக்க சொல்கிறது. சபிப்போரையும் ஆசீர்வதிக்க சொல்கிறது. வேறு மதங்கள் அப்படி கூறவில்லை.
-ஆரம்பத்தில் இஸ்லாமும் தீங்கிழைக்கும் காஃபிர்களை கூட மன்னித்துவிடுமாறே கூறியது-(நஸாயீ 3086, குர்ஆன் 5:13, 2:109,
3:186)
-இறைவன் அதிகாரத்தை கொடுத்தபோது, நீதித்துறையும் உள்ளடங்கியதால், குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்படுவர்.
-தனிப்பட்டரீதியாக தீங்குகளை நல்லதைக்கொண்டு தடுக்குமாறும் (குர்ஆன் 23:96&
41:33-35)
-தீங்கிழைத்தவரை பழிவாங்காமல் மன்னித்தால் நற்கூலி உண்டு (குர்ஆன் 42:40,&
5:45)
-தீங்கு செய்யும் உறவினரையும் சேர்ந்து வாழ்வதையும் அவர்களுக்கு நலவு செய்வதையும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5000)
-இவை அனைத்தையும் உள்ளடக்கி, உனக்கு விரும்புவதையே
உன் சகோதரனுக்கும்
விரும்ப வேண்டும் என்கிறார் நபிகளார் (புகாரி 13). -காரணம் யாருமே தமக்கு கெடுதியை விரும்புவதில்லை. அதுபோன்றே மற்றவருக்கும்
இருக்க வேண்டும்.
-இயேசு யூதாசுக்காக வேண்டவில்லை (ரோம் சிப்பாய்களாக்காக வேண்டியதாக லூக்கா 23:34 கூறுகிறது. காரணம் இயேசு குற்றவாளி என நினைத்து அவர்கள் தண்டனை வழங்கிவதாக கருதியதால்)
ஆனால் முகம்மது நபியோ தன் நண்பனை போல நடித்து நயவஞ்சகராக இருந்து தனக்கு காலம் முழுதும் தீங்கிழைத்த எதிரிக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு
தேடி மன்னிக்கப்படுவதை விரும்பினார்.(புகாரி 4672)
-தேவன் தன் எதிரியை நேசிக்க மாட்டார். மாறாக கோபமே கொள்வார் (யோவான் 3:36)
-இயேசுவும் தன் எதிரியை நேசிக்க மாட்டார்.
மாறாக அவர்கள் திருந்திவிட கூடாது என்றும் தேவனால் மன்னிக்கப்பட
கூடாது என்றும் விரும்பி அதனாலே உவமையாக பேசினார்-(மாற்கு 4:11-12)
-இயேசுவை காட்டிக்கொடுக்க முற்பட்ட யூதாசுக்காக இயேசு வேண்டுதல் செய்யவும் இல்லை. மாறாக தனக்கு உதவி புரியும் பேதுருவுக்கு
தான் சாத்தானிடமிருந்து பாதுகாக்க தேவனிடம் வேண்டிக்கொண்டார்- (லூக்கா 22:31-32,
22:3)
*ஆக மதரீதியாக அல்லாமல் சொந்த பிரச்சினைகளுக்காக எதிரியாக இருப்பேரையே நேசிக்கவும் ஜெபிக்கவும் சொல்கிறது . .
மாற்றுமத்தவர்களை குறித்தோ, அவர்களை விட்டு விலக வேண்டும் என்றும் ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது என்றும் அவனை துரத்தி விடவேண்டும் என்றும், அத்தகையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் அப்படி செய்தால் அவர்களது பாவங்களில் பங்காளிகளாகிவிடுவீர் என்றும் சீடர்களும் பவுலும் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது (2 கொரிந்தியர்
6:17,& 1கெரிந்தியர்5:11,13, &2யோவான்1:10-11)
சொந்த பிரச்சினைக்காக எதிரிகளை நேசிக்க கூற காரணம், கிறிஸ்தவம் வெறுமனே ஆன்மீகம் மட்டுமே. அதிலே அதிகாரமும் நீதித்துறையும் இல்லை என்பதால் இதை தவிர வேறு வழியில்லை.
-இயேசு அதிகாரத்தோடு
வரும் இரண்டாம் வருகையில் மாற்றுமத எதிரியை நேசிக்காமல் கொல்லுவார் (வெளி 19:18-21, &
2:22-23)
-அதிகாரம் இருந்தபோது , 400 வருடம் பழைய பகைக்காக, கர்த்தர் குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி
மூலம் ஏவினார்-1 சாமுவேல் 15:2-3
Claim 3.கிறிஸ்தவம் யாவரோடும் சமாதானமாக இருக்கும்படி கூறுகிறது. இஸ்லாம் அப்படி கூறவில்லை
-இஸ்லாம் சகோதரர்களிடையே சமாதானம் பண்ணி வைக்குமாறும்,(குர்ஆன் 49:10), சமாதானத்தை ஏற்படுத்த பொய் சொல்வதை கூட இஸ்லாம் அனுமதிக்கின்றது (புகாரி 2692). அந்தளவுக்கு சமாதானத்தை மதிக்கிறது
-மாற்றுமத உறவினரையும் சேர்ந்து நடக்க இஸ்லாம் கூறுகிறது (புகாரி 5978-5979,
5981)
-அவர்களின் உறவை பசுமையாக்குவேன் அதாவது பேணி நடப்பேன் என்றார் நபிகளார் (புகாரி 5990)
-இஸ்லாத்தை ஏற்றதற்காக முஸ்லிம்களோடு
சண்டையிடாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை -குர்ஆன் 60:8
-இஸ்லாமிய அரசின் கீழுள்ள மாற்றுமத பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166)
-இயேசுவின் வருகையின் நோக்கமே சமாதானம் அல்ல.... மாறாக உலகில் பட்டயத்தை அனுப்பவும் குடும்பத்தில்
பிரிவினையை உண்டாக்கவுமே தான் வந்தேன் என்கிறார் இயேசு- மத்தேயு 10:34-36, லூக்கா 12:51-53
வேடிக்கையாக தன் தாய் சகோதரர்களையே
தன் தாயும் சகோதரரும் அல்ல என்றும் தேவனின் சித்தபடி செய்வோரே தன் தாயும் சகோதரர்களும்
ஆவார்கள் என்கிறார் -மத்தேயு 12:47-50 இயேசு.
-இதை அறிந்ததால் தான் மாற்றுமத சிலை வணங்கி உறவினரோடு பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிட வேண்டும் என்றும் (1 கொரிந்தியர்
5:11,13), அவர்களை விட்டு பிரிந்துவிட வேண்டும் என்றும் (2 கொரிந்தியர் 6:17), அவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் (2 யோவான் 1:10-11) சீடர்களும் பவுலும் எழுதினர்.
அதிகாரம் இல்லாத போதே இந்த நிலை எனின்,
-தமக்கு அதிகாரம் இருந்தபோது, அத்தகைய மாற்றுமதத்தவனுக்கு சமாதானத்தையோ நன்மையோ நாட கூடாது (எஸ்றா 9:12), அவர்களோடு உடன்படிக்கை பண்ணாமல் அவர்களது கோவில்களை இடித்து போட வேண்டும் என்கிறார் (யாத்திராகமம்
34:12-13)
Claim 4.பைபிள் சுதேசிக்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் என்கிறது -எண்ணாகமம்15:14-16 இது பைபிள் காட்டும் நல்வழி
-இஸ்லாம் அனைவரையும் ஒரே தாய் தந்தையரின் பிள்ளைகள் என்றும் கோத்திரங்கள்
குலங்கள் எல்லாம் ஒருவரையொருவர்
அறிந்து கொள்வதற்கு மட்டுமே என்றும் இறையச்சம் உடையவரே சங்கைக்குரியவர் என்கிறது -குர்ஆன் 49:13
-இஸ்லாத்தில் குருடனும் முஸ்லிம்களுக்கு தலைமையேற்று தொழுகை நடாத்தலாம்.(அபூதாவூத் 595).
ஆனால் பைபிளிலோ இது பரிசுத்த குளைச்சல்!
-எவரிடமும் வட்டி வாங்க கூடாது (குர்ஆன் 2:275)
-வரிசெலுத்தும்
மாற்றுமத்தவரை
கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான்
புகாரி 3166
ஆக உண்மையான சமத்துவம் இஸ்லாத்தில் தான் உள்ளது.
உண்மையில் இவ்வசனம் பஸ்காவை ஆசரிப்பதற்கும் பலி செலுத்துவதற்கும் அந்நியனுக்கும் ஊர்காரனுக்கும் ஒரே சட்டம் என்பதையே கூறுகிறது. (எண்ணாகமம் 15:2-13).
இதற்கெல்லாம் அடிப்படை அவனுக்கு பாரபட்சம் பார்க்காமல் சுன்னத்து பண்ணிவிட வேண்டும் என்கிறார் (யாத்திராகமம்
12:48-49) இது தான் சமத்துவம். 😂
-ஆனால் பைபிளிலே கர்த்தர் தெளிவாக அந்நியனையும்
இஸ்ரவேலனையும்
பிரித்தே பார்க்கிறார்
1.அந்நியனிடம் வட்டி வாங்கலாம். ஆனால் இஸ்ரவேலனிடம்
வாங்க கூடாது(உபாகமம் 23:19-20)
2.அந்நியனிடம் செத்துப்போன மிருகத்தையும்
விற்றுப் போடலாம். ஆனால் இஸ்ரவேலனுக்கு
செய்ய கூடாது (உபாகமம் 14:21)
3.இஸ்ரவேலன் அடிமைப்பட்டால் ஆறு வருடம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அந்நியனை காலம் முழுதும் அடிமைப்படுத்தலாம் (லேவியராகமம்
25:42-46)
4.அந்நியன் ஆலயத்தில் பரிசுத்தமானதை
உண்ணக்கூடாது(யாத்திராகமம் 29:33, லேவியராகமம் 22:10)
இத்தனைக்கும் இருவரும் ஒரே கர்த்தரை வணங்கும் மக்கள் தான். அப்படியிருந்தும் தெளிவான பாரபட்சத்தை பைபிள் காட்டுகிறது.
(மாற்றுமதத்தவர்களையோ ஈவிரக்கமின்றி மூச்சுவிடும்
எதையும் விடாமல் கொல்லுமாறு ஏற்கனவே சொல்லிவிட்டார்- உபாகமம் 20:16-18,
அத்தோடு துரத்திவிடவும் சொல்லி அவர்களது ஆலயங்களையும்
உடைத்துப்போட
சொல்லியுள்ளார்- யாத்திராகமம்
23:31-33&23:24
அத்தோடு இவர்களில் உள்ளவன் வேறு கடவுளை வணங்கினாலும்
பாரபட்சமின்றி
கொல்லுமாறும்
ஊரையே கொளுத்தி போடுமாறும் சொல்கிறது -உபாகமம்
13:6-10,&13:12-16)
வேடிக்கையாக சொந்த மதத்தில் சொந்த இனத்தில் சொந்த கோத்திரத்தில்
கூட பாரபட்சமே. அதாவது அங்கவீனர் யாரும் பலி செலுத்த வரகூடாது என்றும் அப்படி வந்தால் பரிசுத்த குளைச்சல் என்கிறார் -லேவியராகமம்
21:16-23)
Claim 5.இஸ்லாம் மாற்றுமதத்தவர்களை வரி செலுத்தும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது என்றும் அதற்கு ஆதாரமாக குர்ஆன் 9:29ஐ கூறினர்
இஸ்லாம் ஆன்மீகமும் நீதித்துறையும் ஆட்சியதிகாரமுடைய மார்க்கமாகும்.
எந்த ஆட்சியும் குடிமக்களிடம்
வரி வாங்குவர்
*குர்ஆன் 9:29ஐ நபிகளார் நடைமுறைப்படுத்திய விதமானது, யுத்தத்திற்கு சென்றால் முதலில் இஸ்லாத்தை நோக்கி அழைப்பார்கள். அதை அவர்கள் மறுத்தால், அவர்களிடம் வரி செலுத்துமாறு
கோருவார். அதையும் மறுத்தாலே யுத்தம் நிகழும் (முஸ்லிம் 3566
(1731a,b) , அபூதாவூத் 2612,புகாரி 3159)
இதன் நோக்கம், இஸ்லாத்தை திணிப்பது அல்ல.. காஃபிர்களான எதிரித்தலைமைகள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217,
60:2). ஏற்கனவே செய்து கொண்டும் இருந்தார்கள்.
அந்நிலைமை ஏற்படாதிருக்க,
ஆட்சியும் ஆன்மீகமும் உடைய இஸ்லாமிய அரசு இவ்வாறே செய்ய வேண்டியதாக இருந்தது
-இத்தகையோரை அடிமைகளாக நடத்த கூடாது என்பதையே இமாம் புகாரி 3052வது ஹதீஸுக்கு தலைப்பாக போடுகிறார். (ஆனால் பைபிளோ அடிமைகளாக வேலைக்காரராக
ஆக்கிக்கொள்ளுமாறே கூறுகிறது. இரண்டும் நேரெதிரான து)
-இத்தகைய மக்களுக்காக இஸ்லாமிய அரசு இம்மக்களின் எதிரிகளுக்கு
எதிராகவும் போரிடுவதோடு, அம்மக்களின் மீது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது என்கிறது (புகாரி 3052,3700)
-இத்தகையோரின்
உரிமைகளில் குறைவைத்தாலோ
அவர்களது சக்திக்கு மீறி எதையாவது சுமத்தினாலோ, அம்மக்களுக்காக அத்தகையவனுக்கு எதிராக நானே இறைவனிடம் வாதிடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்-
(அபூதாவூத் 3052)
-வரி செலுத்தாததற்காக அவர்களை நியாயமின்றி வேதனை செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-முஸ்லிம் 5096-5097
-இத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் -புகாரி 3166
எந்தளவுக்கென்றால் யூதரிடம் தன் கவசத்தை அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு நபிகளார் நடந்துகொண்டார்கள்-புகாரி
2096,2068,2916
இப்படி வரி செலுத்தும் வேதக்காரர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் பாதுகாப்பையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியது.
ஆனாலும் கண்ணியமும் மரியாதையும் இறைவனுக்கும்
தூதருக்கும் விசுவாசிகளுக்குமே உரியது. காரணம் அவர்கள் நிரந்தர நரகத்தில் விழாதிருக்கும்படி சத்தியத்தை உணர்வதற்கே இது. (ஏனெனில் அதிகாரத்தோடும் கண்ணியத்தோடும் இருக்கும்போதும் சத்தியத்தை உணரும் வாய்ப்பு குறைவு)
அதிகாரம் இருந்தபோது, இஸ்ரவேலரோடு சமாதானமான மக்களிடம் கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது பைபிள்- உபாகமம் 20:10-11
இவ்வாறே யோசுவா நபி தன்னோடு சமாதானமான அப்பாவி மக்களை வேலைக்காரர்களாக ஆக்கிக் கொண்டதாக யோசுவா 9:15-21 கூறுகிறது. இதேபோல் தாவீதும் அயல்நாட்டவர்களை வேலைவாங்கினான்-1 நாளாகமம் 22:2
(அத்தோடு அருகிலுள்ள மாற்றுமதத்தவர்களை கொன்றுபோட்டுவிட்டு குடியேறுமாறும் , துரத்தி விட்டு அவர்களது ஆலயங்களை உடைத்து போடுமாறும் கர்த்தரே சொன்னார் -உபாகமம் 20:16-18, யாத்திராகமம்
23:31-33,&23:24
இது மாற்றுமதத்தவனை மனிதனாக கூட மதிக்கவில்லை
என்பதை காட்டுகிறது)
-புதிய ஏற்பாட்டிலோ, மாற்றுமத சிலைவணங்கி உறவினருடன் சேர்ந்து பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிட வேண்டும் என்றும் (1கொரிந்தியர்5:11,13),
அவர்களைவிட்டு
பிரிந்து வாழுமாறும் (2 கொரிந்தியர் 6:17), அத்தகையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் (2யோவான் 1:10-11) கூறுகிறது.
Claim 6.ஜிஹாது எனும் பெயரில் திடீர் தாக்குதல்களும் மதத்தை பரப்புவதற்கு போர் செய்யவும் இஸ்லாம் சொல்கிறது என்றான்
இஸ்லாத்தில் ஆரம்பத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் , காஃபிர்களால்
அவர் கொல்லப்படுவார் அல்லது குழப்பத்திற்குள்ளாக்கப்படுவார் (புகாரி
4514,4650,4651). சமூகபகிஷ்கரிப்பு செய்து சகலத்திலும் ஒதுக்கி வைத்தனர் (புகாரி 1590,3058).
-இஸ்லாத்தை ஏற்றதற்காக கடுமையாக வேதனை செய்தார்கள் காஃபிர்கள் (புகாரி
3612,3852,3522).
-இஸ்லாத்தை ஏற்றதற்காக வேதனை செய்ததால், முஸ்லிம்கள் சொந்த நாட்டைவிட்டு
அகதிகளாக தப்பியோடினர்(புகாரி 3900,4312). இப்படி தப்பியோடுவோரை
கூட தடுத்து பிடித்துக்கொள்வதற்கு முயற்சித்தார்கள் (புகாரி 3906,3922)
-இஸ்லாத்தை எத்திவைக்க சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள் (புகாரி 2801,3064),
-ஆனாலும் இஸ்லாம் இத்தகைய காஃபிர்களை மன்னித்துவிடுமாறு ஆரம்பத்தில் கூறியது (நஸாயீ 3086)
-உறுதியான நிலையை அடைந்த பின், போரிடுவதற்கு
அனுமதி வழங்கப்பட்டது. காரணம் அவர்கள் நியாயமின்றி, ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதும், இவ்வாறு அல்லாஹ் சிலரை கொண்டு சிலரை தடுக்காவிட்டால், யூத கிறிஸ்தவ ஆலயங்களும் மஸ்ஜிதுகளும்
அழிக்கப்பட்டுப்போயிருக்கும்- குர்ஆன் 22:39-40
-பலவீனமான முஸ்லிம்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் வேண்டியிருந்தது. அதற்காகவும் இறைவன் போரிடுமாறு கூறினான்-குர்ஆன் 4:75)
-அத்தோடு காஃபிர்கள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்ஙளோடு அவர்களையும் காஃபிராக்கும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்-குர்ஆன் 2:217, 60:2
இதன்காரணமாக ஜிஹாதை இஸ்லாம் கடமையாக்கியது.
*அப்போது கூட, பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்றும் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்களை (மந்தை சேர்ப்பார்,விவசாயி) கொல்லக்கூடாது (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்ற வயோதிபரை கொல்லக்கூடாது (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்த துறவிகளை கொல்லக்கூடாது (முஸ்னத் அஹ்மத் 2728) என ஒழுங்குமுறை விதித்தது.
இதைத்தவிர மற்றவர்கள் போரிடக்கூடிய
ஆண்கள் மட்டுமே. அத்தகையோருடனே
போர் நிகழும். (பைபிளை போல குழந்தைகளை கொல்லு குழந்தையை கல்லில் மோதியடித்து கொல்பவன் பாக்கியவான் என இஸ்லாம் சொல்லவில்லை)
-அத்தோடு இஸ்லாம் தோன்றிய காலத்தில் சிற்றரசுகளும்
பேரரசுகளும் கோத்திரங்களும் மற்றவர்களை கீழ்ப்படுத்தி ஆக்கிரமிப்பதை
வழமையாக கொண்டிருந்தனர். அத்தருணத்தில்
மார்க்கத்தை பாதுகாக்கவும்
அவர்அகளுக்குள்ளும் மார்க்கத்தை கொண்டு செல்லவும் அவர்களை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை. -இல்லாவிட்டால்
தமது ஆட்சிக்கு அச்சுறுத்தல்
என அவ்வரசுகள் கருதினால் அப்போதே இஸ்லாம் முடிந்திருக்கும்.
ஆனாலும் இதை நபிகளார் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்
-அதாவது அக்கூட்டங்களுக்கு படைகளை அனுப்பி இஸ்லாத்தை நோக்கி அழைப்பர். அதை ஏற்க மறுத்தால் வரி கட்டுமாறு கோருவர். அதையும் மறுத்து போருக்கு தயாரானால் போர் நிகழும்-முஸ்லிம் 3566
(1731a,b), அபூதாவூத் 2612, புகாரி 3159)
-அத்தோடு வரி குறித்து எப்படி நீதமாக இஸ்லாம் நடக்க வழிகாட்டியது
என ஜிஸ்யாவின் கீழே குறிப்பு 5இல் கூறியிருக்கிறேன்.
-அரபு இணைவைப்பாளர்களை குறித்தோ, அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை போர் நிகழ்த்துமாறு
நபிகளார் ஏவப்பட்டார்கள். காரணம் அவர்களே முதலில் யுத்தத்தை தொடங்கி வைத்ததோடு (குர்ஆன் 9:13,60:1), தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்ஙளோடு அவர்களை காஃபிராக்கும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள் (குர்ஆன் 2:217,
60:2). அதனால் இதை தவிர வேறு பாதுகாப்பான வழி இல்லை.
மெய் இறைவனைவிடுத்து சிலை வணக்கத்தை தன் உரிமை என கருதுவதென்பது, திருமணம் முடித்துவிட்டு மற்ற காதலர்களை தம் கணவர்களாக நினைத்து விபச்சாரம் செய்வதை தம் உரிமை என வாதிடுவது போன்றது தானே (பைபிள் அதை தான் கூறுகிறது). அதனால் இஸ்லாம் சிலைவணக்கத்தை
அனுமதிக்கவில்லை!!
அத்தோடு திடீர் தாக்குதல்கள்
நடத்தப்பட்டதெல்லாம் குற்றம் செய்த கைபர் வாழ் யூதர் மீதும் , போருக்கு தயாராகிக்கொண்டிருந்த பனுமுஸ்தலிக் மீதும் தான். அப்போது கூட அவர்களில் போர் செய்யும் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்(புகாரி 2541,610,947)
பைபிளில் கர்த்தர் இஸ்ரவேலருக்கு
கொடுக்கும் மாற்றுமத நாடுகளிலுள்ள
அனைத்து உயிர்களையும்
கொன்று போட வேண்டும் என்றார் கர்த்தர் -உபாகமம் 20:16-18
-தூரத்திலுள்ள
நாடுகளுக்கோவென்றால்,
அவர்களை கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதை அவர்கள் ஏற்க மறுத்தால் ஆண்களை கொன்று சொத்துக்களை சூறையாட வேண்டும் என்கிறார் கர்த்தர் -உபாகமம் 20:10-15
-வெறும் பகைக்காக கூட கர்த்தர் குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி
மூலம் அவர்களின் ராஜாவுக்கு சொன்னார். ராஜா செய்யாததால் அவனை ராஜாவாக்கியதற்கே மனஸ்தாபப்பட்டார்- 1 சாமுவேல் 15:2-3&11
-இஸ்ரவேலர் போர் செய்ய பயந்ததால், முழு இஸ்ரவேலர்தளையும் கொன்று போட முடிவெடுத்தார். நல்லவேளையாக மோசே அவருக்கு அட்வைஸ் பண்ணி, மனதை மாற்றினார்(எண்ணாகமம் 14:11-19).
பிறகு அவர்களை நாப்பது வருடத்தில் கொன்று போட முடிவெடுத்தார். அத்தோடு போர் செய்ய பயப்படாத காலேபை தன்னை முறையாக பின்பற்றியவன்
என்றார்(எண்ணாகமம் 14:22-24).
ஏனெனில் கர்த்தரை யுத்த வீரன் என்கிறது பைபிள் (யாத்திராகமம் 15:3).
-மோவாபியருடன்
யுத்தத்தில் இரத்தம் சிந்தாதவன் சபிக்கப்பட்டவன் என்றும் எரேமியா 48:10 .
*அத்தோடு இவர்களின் குழந்தையை கொல்லும் வெறி காலம் காலமாக இவர்களின் மனதில் இருந்து வந்ததொன்றே.
-அதனால் , பாபிலோனியர்களை பழிவாங்கும் நோக்கில், அவர்களின் குழந்தைகளை கல்லில் மோதியடிப்பவன்
பாக்கியவான் என்கிறது சங்கீதம் 137:9
*இவையனைத்தும்
கர்த்தரின் வழிகாட்டலில்
உள்ள ஈவிரக்கமற்ற செயலே (1 சாமுவேல் 15:3, உபாகமம் 20:16-17)
இது தான் பழைய ஏற்பாட்டு நிலை..
*புதிய ஏற்பாட்டில் ஆட்சியதிகாரம்
இல்லாததால் ஆன்மீகம் மட்டும் பேசப்பட்டு இருக்கிறது
ஆனால் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவர் அதிகாரத்தோடு
வருவதால்,
-அவரும் இப்படி ஈவிரக்கமின்றி
கொலை பண்ணுவார்-வெளி 19:18-21
-அத்தோடு குழந்தைகளையும் கொல்லுவேன் என்கிறார் இயேசு-வெளி 2:23
அதனாலோ தெரியவில்லை பாலஸ்தீனத்தில் கொலை செய்யும்போது எவான்ஜலிஸ்டுகள் ஆதரித்து நியாயப்படுத்துகிறார்கள்.
(நேர்மையானவர்களும் உள்ளனர்)
Claim 7.இரவு நேர போரில் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதை முகம்மது நபி அனுமதித்தார் என முஸ்லிம் 3591 ஐ காட்டினார்
-பொதுவாக இஸ்லாம் பெண்களை சிறுவர்களை கொல்லக்கூடாது
என்றே சொல்கிறது (புகாரி 3014,3015)
-ஆனால் இரவு நேரத்தில் போர்செய்யவேண்டி ஏற்பட்டபோது, குதிரைகளின் கால்களில் சிக்கி குழந்தைகளும்
பெண்களும் பாதிப்படைவார்கள் என்பதை குறித்தே அவ்வாறு பரவாயில்லை என நபிகளார் கூறியுள்ளார்கள் -திர்மிதீ 1570
இது வேண்டுமென்றே தாக்குவதோ கொல்லுவதோ அல்ல... மாறாக விபத்து.. அதாவது குதிரையின் காலில் மிதிபட்டு பாதிப்படைதலை
குறித்ததே. தற்குறித்தனமான தாக்குதல் அல்ல!!. அதை காரணமாக வைத்து எதிரிகளை தண்டிக்காமல்
விட கூடாது அல்லவா. அதற்காகவே அப்போது அவ்வாறு கூறினார்கள்.
பைபிள் கர்த்தர் பெண்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் வெறும் பகைமைக்காக ஈவிரக்கமின்றி
கொல்லும்படி சொன்னார்-1 சாமுவேல் 15:2-3
-பாபிலோனிய எதிரிகளின் குழந்தைகளை கல்லில் மோதியடிப்பவன்
பாக்கியவான் என சங்கீதம் 137:9 கூறுகிறது
Claim 8.பெண்ணுடன் உடலுறவை தவிர மற்ற தவறுகளை செய்த நபருக்கு தொழுவதை பரிகாரம் என சொல்லி அதை இஸ்லாம் ஒழுக்கக்கேட்டுக்கு வழிகாட்டுவதாக உருட்டி முஸ்லிம் 5335 ஐ கூறினார்
-இஸ்லாம் அந்நிய பெண்ணை (மனைவி மற்றும் நெருங்கிய உறவினரான தாய்,மகள் சகோதரி மாமி போன்ற உறவினர் அல்லாதோரை) உரிமையின்றி தொடுவதை விட இரும்பு ஊசியால் தலை துளைக்கப்படுவது சிறந்தது என எச்சரித்துள்ளது இஸ்லாம் -ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா 226
-அது போன்று அந்நிய பெண்ணுடன் தனித்திருக்க
கூடாது என்றும் அவர்களிடம் ஆண் உறவினர் இல்லாத நேரத்தில் செல்லக்கூடாது
என்றும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது (புகாரி
5233,3006,5232)
-அத்தோடு ஆண்கள் தம் பார்வைகளை தாழ்த்தியும், பெண்கள் தம் பார்வைகளை தாழ்த்தி அலங்காரங்களை
மறைத்து உடையணிந்து கொள்ளவும் வழிகாட்டியுள்ளது (குர்ஆன் 24:30-31)
-அத்தோடு விபச்சாரம் செய்தவர் திருமணமாகாதவராயின் நூறுகசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும், திருமணமானவராயின் கல்லெறிந்து மரணதண்டனையும் இஸ்லாம் கூறுகிறது (புகாரி 6633,6634)
-ஆனாலும் இப்படி விபச்சாரம் செய்யாமல் முத்தமிட்டதற்காக அதன்பின் மனம்வருந்தி பரிகாரம் கேட்டு வந்தவரிடமே அவ்வாறு தொழுகை அதற்கு பரிகாரம் என கூறப்பட்டது. ஏனெனில் அவர் பரிகாரம் கேட்டு வருவதே தவறை உணர்ந்து மனந்திருந்தி
வருவது தான்.
பைபிளிலே கன்னியை கற்பழித்தால், 50 சேக்கல் வெள்ளியை அவளது தகப்பனுக்கு கொடுத்து அவளை திருமணம் செய்ய சொல்கிறது- உபாகமம் 22:28-29
இதை வைத்து பைபிள் கற்பழிப்போருக்கு தண்டனை கொடுக்காமல் பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறது என சொல்லலாமா?
-கன்னியோடு விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் தகப்பனிடம் மஹரை கொடுத்துவிட்டு செல்லலாம்-யாத்திராகமம் 22:16-17
இதை வைத்து, பைபிள் கன்னியுடன் விபச்சாரம் செய்துவிட்டு , கூலி கொடுத்து புது பிஸ்னஸை காட்டுது என சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?
Claim 9.குர்ஆன் மனைவியை அடிப்பதை ஆதரிப்பதாக கூறி குர்ஆன் 4:34ஐ காட்டி குற்றச்சாட்டு வைத்தனர்
-இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை
முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:
அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல்
அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன்
முஸ்லிம் 2334
(1218a), அபூதாவூத் 1905)
இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.
கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142,
2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)
அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..
ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் (குர்ஆன் 4:19 இப்னுமாஜா 1851....), அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் (இப்னுமாஜா 1978,திர்மிதீ 1162) என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல (அபூதாவூத் 2146) என்றும் நல்வழிப்படுத்தியது
பைபிள் மனைவியை அடிக்காதே என எங்கேயும் சொன்னதில்லை.
பைபிள் காலத்தில் பெண்கள் தம் கணவரின் அடிமை போன்றும் கணவன் எஜமான் போன்றுமே இருந்தனர். அதனால் தான் கர்த்தருக்கு
கீழ்படிவது போல மனைவியர் புருஷனுக்கு எதிலும் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சாரா பாட்டி ஆபிரகாம் தாத்தாவை தன் ஆண்டவன் என கூப்பிட்டதாகவும் புதிய ஏற்பாடு கூறுகிறது (எபேசியர் 5:22-24
& 1 பேதுரு 3:5-6)
தகப்பன் விரும்பினால் அவளை விற்பனை செய்வதற்கும்
பைபிள் அனுமதிக்கிறது (யாத்திராகமம்
21:7-10)
Claim 10.தீவிரவாதிகள் என முஸ்லிம் பெயர்கொண்ட அமைப்புகளை காட்டி இதற்கு காரணம் இஸ்லாம் என்றனர்
இஸ்லாம் பெண்களையும் சிறுவர்களையும் (புகாரி 3014,3015) போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்றவர் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ள துறவிகள் (முஸ்னத் அஹ்மத் 2728) போன்றோரை கொல்லுவதை தடை செய்துள்ளது
-இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத
பிரஜையை கொல்லுபவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166), அத்தகையோரை பாதுகாக்க அவர்களுக்காக
இஸ்லாமிய அரசு போரிடுவதோடு அவர்களின் சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது (புகாரி 3052, அபூதாவூத் 3052)
ஆக தற்குறிகள் செய்வதற்கு இஸ்லாம் பொறுப்பு ஆகாது
-இஸ்லாம் தற்கொலையை பெரும் பாவமாக கருதுகிறது (புகாரி 5778,6493). ஆக தற்கொலை தாக்குதலும் இந்த பெரும் பாவத்திலேயே வரும்.
-தீவிரவாதிகளை
தீர்மானிப்பது
யார்?- தம் சொந்த நலனுக்காகவும்
கொள்ளையடிக்கவும் ஈவிரக்கமின்றி கொல்லும் அரசபயங்கரவாதிகள் (அமெரிக்கா,ரஷ்யா, பிரிட்டிஷ் இங்கிலாந்து, இஸ்ரேல்) தீவிரவாதிகள்
என அடையாளப்படுத்தப்படுவதில்லை .
இதே செயலை சாதாரண கீழ்த்தட்டு மக்கள் செய்தால் தீவிரவாத முத்திரை குத்தப்படும்.
அதாவது ஐநா அங்கீகரித்த தீவிரவாதிகள்
அரசதலைவர்கள்
எனப்படுவர். ஐநா அங்கீகரிக்காதவர்களோ தீவிரவாதிகள் என பெயரிடப்படுவர். இது தான் யதார்த்தம்.
-ஏன் தீவிரவாதிகள்
உருவாகிறார்கள்?
தன் சகோதர மக்கள் ஒடுக்கப்படும்
போதும் தன் இன மக்கள் தாக்கப்படும்
போதும் அவர்களை பாதுகாத்து எதிரிகளை எதிர்க்க சிலர் முன்வருவர். இவர்கள் தான் காலப்போக்கில்
இலட்சியம் மாறிப்போய் இப்படியாகிறார்கள்.
-பைபிள் கர்த்தர் பழைய பகைக்காக பெண்களையும் குழந்தைகளையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னார் -1 சாமுவேல் 15:2-3
இதை தானே தீவிரவாதிகள்
செய்கிறார்கள்
-பைபிள் கர்த்தர் ஆதரித்த சாம்சன் (சிம்சோன்) நியாயாதிபதி சொந்த இனப்பகைக்காக
மாற்றுமத கோவிலில் தன் உயிரை மாய்த்து தற்கொலை தாக்குதலை எதிரிகளிடம் நடாத்தி 3000 பேரை பெண்களுட்பட கொன்றான்-நியாயாதிபதிகள்
16:28-30. இவனையும் புதிய ஏற்பாடு பரிசுத்தவான்
லிஸ்டில் சேர்க்கிறது-எபிரேயர் 11:32
இதை தானே தீவிரவாதிகள்
சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் செய்கின்றனர்.
Claim 11.ஆயிஷா(ர) அவர்களின் போர்வைக்குள் இருக்கும்போது வஹீ வந்திருக்கிறது என்பதை அசிங்கமாக சித்தரித்தனர்
பொதுவாக ஜிப்ரீல் (அலை) அன்னை ஆயிஷா முறையாக மறைக்காத போது வரமாட்டார்கள்
என ஸஹீஹ் முஸ்லிம் 1774 எனும் நீண்ட ஹதீஸிலே இடம்பெற்றுள்ளது.
பைபிளில் அநேக ஆபாசங்களை காணமுடியும்.
சிலை வணக்கத்தை விமர்சிப்பதற்கு, ஆணுறுப்பு பெருத்த எகிப்தியனோடு
விபச்சாரம் செய்தாய் என்றும் அந்த எகிப்திய காதலனின் ஆணுறுப்பு கழுதை ஆணுறுப்பு என்றும் அவனுடைய விந்து குதிரை விந்து என்றும், காதலர்கள் இவளின் முலைகளை அமுக்கி முலைக்காம்புகளை தடாவியதாக நீலப்பட வர்ணனை பைபிளில் காணப்படுகிறது-எசேக்கியேல்
16:25,& 23:3,19-21
அத்தோடு நினிவேயை கண்டிப்பதாக கூறி, அதையும் பெண்ணாக உருவகித்து, அவளின் பாவாடையை முகம் வரை தூக்கி அம்மணத்தை காண வைப்பேன் என கர்த்தர் சொல்வதாக கூறப்படுகிறது (நாகூம் 3:5)
அத்தோடு காதலனும் காதலியும் தம் சேட்டைகளை கூறுவதை புனித நூலாக உன்னதப்பாட்டு 7:7-8 கூறுகிறது. அத்தோடு காதலன் கிச்சிலி மரம் என்றும் அவனது கனி என் வாய்க்குள் மதுரமாக இருக்கும் என்றும் காதலி செமயாக(உன்னதப்பாட்டு 2:3 ) கூறுகிறாள்
Claim 12.அரேபிய தீபகற்பத்திலிருந்து யூத கிறிஸ்தவர்களையும் இணைவைப்பாளர்களையும் வெளியேற்றுவேன் என நபி சொன்னதை குறித்து குற்றச்சாட்டு வைத்தனர்
அரேபிய தீபகற்பம் என்று நபியவர்கள் கூறியது ஹிஜாஸ்
மாநிலத்தை குறிக்கும். அதாவது மக்கா,மதீனா,யமாமாவும் அதன் சூழ்ந்த பகுதிகளும்.
இதனால் தான் உமர் (ர) அவர்கள் யூதர்களை
ஹிஜாஸிலிருந்து தைமாவுக்கும், அரீஹாவுக்கும் (ஜெரிகோ) நாடுகடத்தினர்.(புகாரி 2338,3152)
இறுதியாக கைபரிலிருந்து தான் யூதர்களை உமர் (ர) அவர்கள்
வெளியேற்றினார்கள். அதுவும் அவர்கள் அவருடைய மகனின் கையின் மூட்டுகளை பிசகச்செய்ததன் பின்னரே நிகழ்ந்தது.. அதுவரை தற்காலிகமாக
தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.(புகாரி 2730). நபியவர்களுக்கு அவர்கள் சேர்ந்து விசம் தடவிய இறைச்சியை சாப்பிட கொடுத்ததன்
பின்னரும் அங்கே விடப்பட்டிருந்தார்கள் (புகாரி 3169)
யுத்தங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும்
இணைவைப்பவர்களாலும் புனித பூமிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்காகவும், ஹஜ்ஜுக்கு
வருவோரிடம் இவர்களின் வைராக்கிய துர்ப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதை தடுப்பதற்கும்
இதை தவிர வேறு வழி இல்லை! அதனால் தான்
நபிகளார் மரணிக்கும் முன் அதை உபதேசமாக கூறினார்கள்.(முஸ்லிம் 3626)
அவர்கள் ஒரேயடியாக துரத்தப்படவுமில்லை.... துரோகங்கள்
செய்தபோது தான் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர் (புகாரி 4028)
பொதுவாக அரசுகள் தமக்கு அச்சுறுத்தல் என்று
வரும்போது கொலை செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும். ஆனால் இஸ்லாமோ
அவர்களுக்கு வேறு இடத்தில் குடியமர்த்தியது.
-அதிகாரம் இல்லாதபோது கூட, அவர்களில் இருந்து வெளியேறி விடுமாறும் (2 கொரிந்தியர்
6:17), அத்தகைய குடும்பஸ்தனை
விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து கூறி அத்தகையவனோடு
பழகவோ சேர்ந்து ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்தி விட வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர்
5:11,13).. இயேசுவை முறையாக ஏற்றுக்கொள்ளாதவனை வஞ்சகன் என்றும் அத்தகையோரை வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்றும் அப்படி செய்தால் அவர்களது பாவங்களில் பங்காளிகளாகிவிடுவீர் என்றும் 2 யோவான் 1:7,10-11 கூறுகிறது.
Claim 13.ஆயிஷா (ர) அவர்களை ஆறு வயதில் திருமணம் முடித்தது பற்றி அதிகமாக உருட்டினர்
-நபிகளாருக்கு
அன்னை ஆயிஷா திருமணம் பேசப்படும் முன்பே முத்யிம் இப்னு அதீ என்பவருடைய மகனுக்கு பேசப்பட்டிருந்தார்--
அத்தகைய திருமணப்பேச்சு செய்த காலத்தில் தான் நபிகளார் திருமணம் பேசினார்கள் (முஸ்னத் அஹ்மத் 25769)
-அக்காலத்தில் 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் இருந்தனர் (புகாரி 2664 இன் தலைப்பு)
-ஆயிஷா (ர) அவர்களை 6 வயதில் திருமணம் செய்து ஒன்பதாம் வயதில் தான் நபிகளாரின் வீட்டுக்கு வந்து தாம்பத்யம் நிகழ்ந்தது(புகாரி 5133,5158)
-குடும்பவாழ்வுக்கு ஏற்ற உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் (அபுதாவுத் 3903, இப்னுமாஜா 3324
-அவரை அவரது தாய் அலங்கரிக்க அனுப்பிய போது அலங்கரித்த பெண்களும் வாழ்த்து கூறினார்கள் (புகாரி 5156). காரணம் அவர்குடும்பவாழ்வுக்கு தகுதியாக இருந்ததால் தான்.
-இதனால் அன்னை ஆயிஷா (ர) பாதிக்கப்படவோ
உரிமைகள் பறிக்கப்படவோ
இல்லை... மாறாக அதன் பின்பும் தன் தோழியருடன் விளையாடுபவர்
ஆக விடப்பட்டார் (புகாரி 6130), விரும்பும் அளவுக்கு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236), அவருடன் ஓட்டப்பந்தயம்த்தில் ஈடுபடும் அளவுக்கு நபிகளார் வயதிற்கேற்ப நடந்தார்கள்- அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979. அத்தோடு அவரையோ வேறு மனைவியையோ நபிகளார் அடித்ததேயில்லை என கூறுபவரும் அன்னை ஆயிஷா தான் (அபூதாவூத் 4786, இப்னுமாஜா 1984). அத்தோடு நபிகளாரை விட தன் இச்சையை கட்டுப்படுத்த
வேறு யாராலும் முடியாது என்று கூறும் அளவுக்கு நபிகளார் நடந்தார்கள் (புகாரி 302,1927)
-ஆயிஷா (ர) அவர்கள் நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவும் அவர் விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும்
அன்னை ஆயிஷா அவர்களே இருந்தார்கள் (புகாரி
4789,6024,6030,6004)
ஆக இப்படி அன்னை ஆயிஷா அவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ
அக்கால மக்களுக்கோ இதில் பிரச்சினை இல்லாதபோது ஏன் இவர்கள் கதற வேண்டும்?
அத்தோடு இளவயது திருமணங்கள் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றே:
அ. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.
ஆ.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது
https://www.asahi.com/sp/ajw/articles/14934890
இ.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்
https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent
ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே
நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும்
மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?
-கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம்
(5136,6946,6948)
சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும்
இருக்க வேண்டும்.
பைபிளில் எங்கேயும் எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை. மாறாக சொந்த மகளையே விற்பனை செய்வதை கூட கர்த்தர் ஆதரித்துள்ளார்-யாத்திராகமம் 21:7-10
-பைபிளிலே ஆகாஸ் ராஜா 11 வயதிலேயே அப்பாவாக ஆகியுள்ளார். அவன் 36 வயதில் இறந்தார் (2 இராஜாக்கள் 16:2), அவன் மரணித்த பின் அவனது மகன் எசேக்கியா ராஜாவானான் (2 இராஜாக்கள் 16:20) அப்போது அவனின் வயது 25 (2 இராஜாக்கள்
18:2).
(உடனே அவன் கெட்டவன் என்று கதைவிட கூடாது. இப்படி திருமண வயது எதுவும் இருக்கவில்லை
என்பதற்கு ஆதாரமே இது)
-ரிஃப்கா பாட்டியை ஈசாக்கு தாத்தா முடித்த போது அவரது வயது 3 என யூத அறிஞர் ராசி ஆதியாகமம் 25:20இற்கு விளக்கம் கூறுகிறார்.(https://www.sefaria.org/Rashi_on_Genesis.25.20.2?lang=en)
இது இன்றும் யூதர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே
-9வயது ஆண் பிள்ளையும், மூன்றுவயது பெண்குழந்தை உடலுறவுக்கு தகுதியானவர்கள் என தல்மூத் கூறுகிறது (avodah
zarah 37a :1-2 (https://www.sefaria.org/Avodah_Zarah.37a.1?lang=en)
-அத்தோடு மரியாள் கர்ப்பமானது 12-14 வயதிலே என கத்தோலிக்க என்சைக்லோபீடியா கூறுகிறது https://www.newadvent.org/cathen/15464b.htm (தலைப்பு Mary's
Pregnancy becomes known to Joseph (last Paragraph))
Claim 14.இரண்டு திருமணம் முடித்தல் ஒழுக்கக்கேடு என்றார். அதை மீண்டும்மீண்டும் உருட்டினர்.
முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும் அரேபியாவிலும் இருந்தது. இஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும் அனுமதித்ததோடு
நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே அனுமதி (குர்ஆன் 4:3)
-பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும் பயனுள்ளதுமாகும்
இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே
மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும்
பிள்ளை பெற வைக்க முடியும். ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை சேர்ந்தாலும் ஒருத்தனுக்கே பிள்ளை
பிறப்பதோடு அதை கண்டுபிடிக்க வேறு பரிசோதனைகளும் செய்ய வேண்டி வரும்..
அத்தோடு குடும்பம் நிலைபெறவும் மனித இனம்
நிலைபெறவும் அடிப்படையான அம்சம் இனப்பெருக்கமாகவுள்ளது. இதை விரைவுபடுத்துவதற்கு ஒரு முறையே பலதாரமணம்.
-பலதாரமணத்தினால் முதல் மனைவி பாதிக்கப்படுதலும் பெரு நன்மைக்குள் சிறு
தீமையும்
இதனால் முதல் மனைவியின் கணவன் மீதான உரிமை
குறைவடைவதால் பாதிக்கப்படுகிறாள் என தற்குரித்தனமாக பேசுவதாயின், இரண்டாம் மூன்றாம்
குழந்தைகளை பெற்றோர் ஈன்றெடுக்கும்போது முதல் குழந்தைக்கு பெற்றோர் மீதான
உரிமையும் சொத்தின் மீதான உரிமையும் குறைந்து பாதிப்படைவானே. அப்படி பார்த்தால்
ஒரு தம்பதியினர் ஒரே குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்று இவர்கள்
கூறவேண்டும்
அத்தோடு எந்த பெரிய நலவுக்குள்ளும் சிறு தீமைகள் இருக்கத்தான்
செய்கின்றன. உதாரணமாக பிள்ளையை பெற்றெடுக்கும் போது தாய் பெரும் வேதனையை அடைகிறாள். சிலபோது குழந்தை
பெறும்போதே உயர்ந்த அன்னை இறக்கிறாள். இதனால் உயர்ந்த தாயினம் பாதிக்கப்படுகிறது என குழந்தை பெறுவதை எந்த
தற்குரியாவது நல்லதல்ல என்பானா? அதே போன்று தான் பலதாரமணமும் சமூக ஒழுக்கம் கருதி ஒப்பற்ற இறைவன் அனுமதித்தான்.
-பலதாரமணமும் விதவைகளும்
பலதார மணம் இல்லாத மக்களிடையே விதவை இல்லற
மறுவாழ்வு மிகவும் குறைவாகவே காணப்படும். இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரித்ததன் மூலம் விதவை மறுவாழ்வை இயல்பானதாக
தொடரச்செய்தது. பலதாரமணமில்லாத
மக்களிடையே விதவையை மணப்பதை ஏதோ ஆணின் தியாகம் போன்று சித்தரித்து விதவையை அற்பமாக
கருதக்காரணமாகவுள்ளது
-பலதாரமணமும் விபச்சாரமும்
விலைமாதுக்களிடம் செல்வோரில் அநேகர் திருமணமான
ஆண்களாக இருப்பர். இதிலே ஆண் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை இல்லாததாலும் , அந்த பெண்கள் முறையாக கணவனெனும் ஆணின் கீழே இல்லாததாலுமே அதை தொழிலாக
செய்கின்றதோடு ஆண்களும் விரும்பிச் செல்கின்றனர். அதனால் இஸ்லாம் இவற்றை நெறிப்படுத்தும் ஒரு வழியாக
பலதாரமணத்தை அனுமதித்தது.
ஆனாலும் நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே
பலதாரமணம் கூடும் (குர்ஆன் 4:3)
பைபிள் பலதாரமணத்தை ஆதரிக்கிறது என்ற அடிப்படை
அறிவு இல்லாமையாலே இஸ்லாத்தின் பக்கம் விரலை நீட்டுகின்றனர்.
-கர்த்தர் இரண்டு மனைவியுடையவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சட்டம்
கொடுத்து , அதை ஆதரிக்கிறார் (உபாகமம் 21:15-19)
இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல்
விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப்
பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
உபாகமம் 21:15
-தாவீது ராஜாவுக்கு அவரது ஆண்டவரின் மனைவிகளை மடியில் கொடுத்ததே தேவன் தான்
2 சாமுயேல் 12:8 TCV
[8] உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல்
குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன்
அல்லவா?
https://bible.com/bible/2730/2sa.12.8.TCV
-தாவீது ராஜா உரியாவின் மனைவியை விபச்சாரத்தில் கர்ப்பமாக்கிய போது குழந்தையை
கொன்றார் கர்த்தர். அதே பெண்ணை பத்தோடு பதினொன்றாக சேர்த்து மனைவியாக்கி கர்ப்பமாக்கியபோது பிறந்த
குழந்தையை கர்த்தர் நேசித்தார். இதன் மூலம் பலதாரம் அல்ல பிரச்சினை என்பதை காட்டி , பிரச்சினை தன்
இனத்தவரின் மனைவி என்பதில் தான் உள்ளது
என்பதை வெளிப்படுத்துகிறார்.
2 சாமுயேல் 12:13-15, 24-25 TCV
[13] உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான். அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை
அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய். [14] ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை
முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார். [15] இவ்வாறு சொன்னபின்
நாத்தான் தன் வீட்டிற்குப் போனான். அதன்படி உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை யெகோவா தண்டித்ததினால்
அவன் நோயுற்றான்.
[24] அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப்
பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில்
அன்புகூர்ந்தார். [25] யெகோவா அப்பிள்ளையில் அன்பாயிருந்தபடியால், அவர் அப்பிள்ளைக்கு
யெதிதியா எனப் பெயரிடும்படி இறைவாக்கு உரைப்பவனான நாத்தான் மூலம் தாவீதுக்குச்
சொல்லி அனுப்பினார்.
https://bible.com/bible/2730/2sa.12.13-25.TCV
-அத்தோடு தாவீது பல மனைவியரையும் பல வப்பாட்டிகளையும் ஏற்படுத்திக் கொண்டார். (2 சாமுயேல் 5:13) அவற்றையும் சேர்த்து
உரியா மேட்டரை தவிர வேறு பாவமே செய்யவில்லை என்றும் கர்த்தரின் பார்வையில்
சரியாக நடந்தான் என்கிறது பைபிள்:(1 இராஜாக்கள் 15:5)
-அத்தோடு பைபிளில் அநேக பரிசுத்தவான்கள் பலதார மனைவியுடையோராகவும்
வைப்பாட்டியுடையோராகவுமே இருந்துள்ளனர் உதாரணமாக
ஆதியாகமம் 25:6
TCV
[6] ஆனால் அவன் உயிரோடிருக்கும்போதே, ஆபிரகாம் தன் வைப்பாட்டிகளின் மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்து, தன் மகன்
ஈசாக்கிடமிருந்து விலக்கி, அவர்களைக் கிழக்கு நாட்டுக்கு அனுப்பிவிட்டான்.
https://bible.com/bible/2730/gen.25.6.TCV
இந்த ஆபிரகாம் தான் கர்த்தரின் நண்பர் (2 நாளாகமம் 20:7)
-பைபிளில் எங்கேயும் ஒரே திருமணம் தான்
செய்ய வேண்டும் என கிடையாது. மாறாக துறவறத்தை ஊக்குவிக்கும் புதிய ஏற்பாடு கூட எங்கேயும் பலதாரமணம் கூடாது
என சொல்லவில்லை
இயேசு மனைவியை தள்ளிவிடுவதையும் அப்படி
தள்ளிவிடப்பட்ட பெண்ணை முடிப்பதையுமே விபச்சாரம் என்கிறார் (மத்தேயு 5:32), அத்தோடு தள்ளிவிட்டு
வேறு பெண்ணை முடிப்பதையும் தள்ளிவிடப்பட்ட பெண்ணை முடிப்பதையும் விபச்சாரம்
என்கிறார் (மத்தேயு 19:9). இவை இரண்டிலுமே தள்ளிவிடுதலை குறித்தே பேசுகிறது. அதாவது தன் தள்ளிவிட்டு வேறு திருமணம் முடித்தாலும்
முடிக்காவிட்டாலும் அது விபச்சாரம் என்றும் தள்ளிவிடப்பட்ட பெண்ணை முடிப்பதும்
விபச்சாரம் என்பதே இதன் அர்த்தம் . அதாவது இதற்கும்
பலதாரமணத்திற்கும் சம்பந்தமில்லை...
பவுல் கூட சபையின் கண்காணி, சபை உதவியாளன்,சபை மூப்பர் போன்றோர் ஒரே மனைவியுடையவராக இருக்கவேண்டும் என
நிபந்தனை விதித்தார்.(1 தீமோத்தேயு 3:2,12 தீத்து 1:6). ஆனாலும் அது கூடாது என்றோ பாவம் என்றோ எங்கேயும் சொல்லவில்லை. பவுல் துறவறமே சிறந்தது என்று கூறுகிறார்.. ஆனாலும் பலதாரமணம் கூடாது என்று கூறவில்லை.
-சிலர் தற்குறித்தனமாக கடவுள் ஆதாமுக்கு ஒரே மனைவியை தானே கொடுத்தார். ஆகவே அவரது
விருப்பம் ஒரு ஆணுக்கு ஒரே மனைவி தான் என சொந்தத்திலிருந்து எடுத்து பேசுவார்கள். ஆனால் அதே தேவன்
தான் ஆதாமின் பிள்ளைகளுக்கு வேறு பெண்பிள்ளைகளை படைக்காமல் சொந்த சகோதரிகளை
முடிக்க வைத்து ஜனத்தை பெருக்கினார். இதை வைத்து அவர்களின் முறையிலே பேசுவதென்றால், கடவுளுக்கு மனிதன்
தன் சொந்த சகோதரிகளை திருமணம் முடிப்பதே விருப்பமானது என கூற வேண்டியேற்படும். அவ்வாறு கூறுவார்களா?
ஆகவே இது தற்குறித்தனமானது. ஆதாமுக்கு ஒரே
மனைவியும் காயீனுக்கும் சேத்துக்கும் அவரது தம்பிகளுக்கும் உடன்பிறந்த சகோதரிகளை
மனைவியாக்கியதற்கும் ஒரே காரணம், அனைவருக்கும் ஒரே பெற்றோர் இருப்பதற்கும் தேவபக்தியுள்ள ஒரே சந்ததியாக
இருப்பதற்கும் தான்
(அவரே தாவீதுக்கு ஆண்டவனின் மனைவிகளை கொடுத்து (2 சாமுவேல் 12:8), பலதாரத்தின்போது
எப்படி நடக்கவேண்டும் என்று சட்டமும் வழங்கினார் (உபாகமம் 21:15)
-ஆனாலும் ராஜாவின் இருதயம் பின்வாங்கும் அளவுக்கு அதிக மனைவிகளையும் அதிக
குதிரைகளையும் வைக்க கூடாது என உபாகமம் 17:17
கூறுகிறது.. தாவீது 8++ மனைவிகள் (எப்ரோனில் :2 சாமுவேல் 3:2-5 இலே ஆறுமனைவிகள், பாத்சபா, மீக்காள், இன்னும் அநேக மனைவியர் (2 சாமுவேல் 5:13), 10++ வப்பாட்டிகள் (2 சாமுவேல் 5:13 இதிலே பத்து பேரை வீட்டைக்காக்க வைத்து தப்பி ஓடினார் (2 சாமுவேல் 20:3) வைத்திருந்தார். ஆனாலும் அவரது
இருதயம் தேவனை விட்டும் பின்வாங்கவில்லை அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் (1 இராஜாக்கள் 11:4-6,15:5)..
-சாலமோன் 700 மனைவியரையும் 300 வப்பாட்டிகளையும் வைத்திருந்தார். (1 இராஜாக்கள் 11:3). ஆனாலும் தேவன் இதை கண்டிக்காமல் அந்நியமத பெண்களை மணந்து சிலை வணக்கம் செய்தததை கண்டித்ததாகவே பைபிள்
கூறுகிறது (1 இராஜாக்கள் 11:9-11). காரணம் மாற்றுமதத்து பெண்களை மணப்பதையும் மாற்றுமதத்தவர்களுக்கு
சமாதானத்தையும் நன்மையையும் நாடுவதை கர்த்தர் தடுத்திருக்கிறார் (எஸ்றா 9:12, யாத்திராகமம் 34:12,16). மற்றபடி சாலமோனின் பலதாரமணத்தை கண்டிக்கவில்லை
-அத்தோடு மலாக்கி (மல்கியா) 2:15 இலே உன் இளவயது மனைவிக்கு துரோகம் செய்யாதே என்றிருப்பது பலதாரமணத்தை
குறிப்பதன்று. அவளை ஒதுக்கி விடுவது , முறையின்றி தள்ளிவிடுவது, ஏமாற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் பலதாரமணத்தை
கர்த்தரே ஆதரித்து சட்டம் வழங்கியிருந்தார் (உபாகமம் 21:15-19). அத்தோடு மாற்றான் மனைவியை விபச்சாரத்தில் கர்ப்பமாக்கிய போது குழந்தையை கொன்ற
தேவன், பத்தோடு பதினொன்றாக
அவளை திருமணம் முடித்து கர்ப்பமாக்கிய போது பிறந்த குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24). அத்தோடு ஆண்டவனின்
மனைவியரையும் தாவீதுக்கு அவரே கொடுத்தார் (2 சாமுவேல் 12:8) ஆகவே இதற்கும் பலதார எதிர்ப்புக்கும் சம்பந்தமில்லை
-பைபிளில் மனைவிகள் என கூறாமல் மனைவி என் ஒருமையில் சில இடங்களில் (சங்கீதம் 128:3, மலாக்கி 2:15, நீதிமொழிகள் 5:18, பிரசங்கி 9:9) கூறப்படுவதால்
தேவனது விருப்பம் ஒரு மனைவியே என கதைவிடுவர். ஆனால் உண்மை
என்னவென்றால் அனைவரும் பலதாரமணம் புரிவதில்லை என்பதால் பேச்சுநடைமுறையில் உள்ளதே
அவ்வாறு ஒருமையாக பேசுவதும். இதேபோன்று சில இடங்களில் எபிரேய பாசையில் கணவன் என்பதை பன்மையிலும் பைபிள்
கூறுகிறது (ஏசாயா 54:5). இதை வைத்து கர்த்தரின் விருப்ப மென்பது ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதே
என சொன்னால் காறித்துப்பமாட்டார்களா?
அத்தோடு உன் மக்கள் (மகன்கள்) உன்னை திருமணம்
செய்வார்கள் என தேவன் வாழ்த்து தெரிவிக்கிறார் (ஏசாயா 62:5). இதை வைத்து ஒரே தாயை
அவளுடைய பல மகன்கள் திருமணம் முடிக்கலாம் என்றும் அதுவே தேவனின் விருப்பம் என்றும்
தற்குறித்தனமாக பேசித்தான் பார்க்கட்டுமே.
Claim 15.நபியின் ஆசையை நிறைவேற்ற அல்லாஹ் வஹீ இறக்கினான் என கூறி புகாரி 4788ஐ காட்டினர்
இறைவன் தன் தூதருக்கு விரும்பியதை தேர்வு செய்ய உரிமை கொடுத்து, அவர் எதை தெரிவு செய்தாலும் குற்றமில்லை எனும் விதமாக 33:51 இறக்கினான்
அதாவது அவர் விரும்பினால், அவரது மனைவியரில் சிலரை ஒதுக்கி வைக்கலாம். அல்லது அவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
விரும்பினால்
அவர் ஒதுக்கியவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என தேர்வை வழங்கினான்.
இது குறித்து தான் அன்னை ஆயிஷா அவர்கள் கூறினார்கள் (புகாரி 4788)
இப்படி தன் தூதர் நேர்மையாக தான் நடப்பார் என அறிந்ததால் இறைவன் தேர்வை வழங்கியுள்ளான்.
அப்படி தேர்வு வழங்கப்பட்ட பின்பும் நபிகளார் அதை பயன்படுத்தவில்லை என்பதை அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார் - புகாரி 4789
கர்த்தர் தாவீது ராஜாவின் ஆசையை நிறைவேற்றுவேன் என சொன்னாரே
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:7-8
TAERV
https://bible.com/bible/3154/2sa.12.7-8.TAERV
Claim 16.விவாகரத்தை இஸ்லாம் அனுமதித்ததால் அநேகர் பாதிக்கப்படுவதாக உருட்டினர்
விவாகரத்து முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள
ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.
விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க
இஸ்லாம் விரும்பவில்லை.
ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை
ஏற்படுத்திக்கொடுக்கிறது.
அதாவது மனைவி மாதவிடாயிலிருந்து
தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332
அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று
மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன்
மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)
அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்
அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக
திருமணம் செய்து வாழலாம்.
இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229). ஏனெனில் மனைவியை
பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம்
செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான
சட்டமே இது.
மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை
வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர
இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள்
இருக்க வேண்டும் (65:2)
மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும்
பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது
மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும்
மீள எடுக்க கூடாது (4:20)
அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும்
போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ). அதற்காக அவள்
காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.) கண்டிக்கப்ப
மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ
அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)
அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது
கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில்
ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்..
அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு
நியாயமான கொடையை கணவன் தன் வசதிக்கேற்ப
வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)
தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும்
இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை.
(2:236).
இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை
பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து
அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)
*விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில்
சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது.
*இதன்மூலம் பெண்கள்
பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள். ஆனால் இஸ்லாம்
அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது.
1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி
எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)
2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை
வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய
செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)
3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.
4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.
5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால்
பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே
இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ
இறந்துவிட்டாலுமோ ஏற்படும்!
தோராவில் விவாகரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது (உபாகமம் 24:1-3).. ஆனாலும் அதை
கர்த்தர் வெறுக்கிறார் என மல்கியா 2:16 என்கிறார். ஆனால் தடை செய்யவில்லை காரணம் தோரா அனுமதித்துள்ளது.. ஆனால் புறஜாதி
மாற்றுமதப்பெண் என்றால் அது ஓகே (எஸ்ரா 10:3,11)
Claim 17.அல்லாஹ் கற்பழிப்பை விதியாக்கியதாக கூறி குர்ஆன் 4:24ஐ குற்றச்சாட்டாக வைத்தனர்.
அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து
என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது.
இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு
வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....
அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது
அதாவது: அவ்வடிமை
கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத
பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க
கூடாது (அபூதாவூத் 2157).
இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து
விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில்
மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)
ஆனாலும்
* தன் அடிமைப்பெண்ணுக்கு
கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு
இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)
பைபிள் கர்த்தர் கற்பழிப்பை விதியாக்கிய விதம்
பின்வருமாறு
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:11-12 TAERV
[11] “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது
குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான
ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! [12] நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தைச்
செய்வேன்’ என்றார்” என்றான்.
https://bible.com/bible/3154/2sa.12.11-12.TAERV
இதற்கு முன்பு சவுலின் மனைவிகளையும் தாவீதுக்கு
கொடுத்தார்:
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV
https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV
-கற்பழிப்பதற்கே ஐடியா கொடுக்கும் விதமாக, கற்பழித்தவனுக்கே
கன்னியை கொடுக்க வேண்டும் என்று உபாகமம் 22:28-29
கூறுகிறது
Claim 18.முகம்மது நபி தன் பார்வையை தாழ்த்தவில்லை என கூறி முஸ்லிம் 2718 ஹதீஸை வாதமாக வைத்தனர்;
முகம்மது நபி 100% மனிதர் ஆவார். மனிதர் எனும் ரீதியில் தற்செயலாக எதிர்பாராவிதமாக பார்வையில் சில காட்சிகள் தென்படும்.
-அந்த வகையில் ஒரு பெண்ணை பார்த்து ஈர்ப்பு வந்தால், தன் மனைவிடமே செல்ல வேண்டும் என்பதை நபிகளார் நடந்து காட்டிவிட்டு
முஸ்லிம்களுக்கும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று போதித்தார் -முஸ்லிம் 2718,2719
-ஈர்ப்பு ஏற்படுவதற்கு
காரணம் ஹோமோன்களே. ஈர்ப்பு ஏற்படுவதனால்
ஒரு நபரை குற்றம் சாட்ட முடியாது. மாறாக செயல்களுக்கும் பேச்சுகளுக்குமே குற்றஞ்சாட்ட
முடியும். அதனால் இவ்விசயத்தில்
நபிகளாரை குற்றப்படுத்துவது தற்குறித்தனமானது. காரணம் அவர் நல்லொழுக்கமாக
தன் மனைவியிடமே சென்றார்.
ஏன் இவர்கள் இதை விமர்சிக்க வேண்டுகிறோம்?
பைபிளிலே விபச்சாரத்தையே வர்ணித்துக்காட்டும்
வசனங்களை வைத்துக்கொண்டு இப்படி பேசலாமா?
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 23:3, 20-21 TAERV
[3] அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள்
முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர்.
[20] கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற
தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள்
நினைத்துக்கொண்டாள். [21] “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன்
நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள்.
Claim 19.எந்த பாவம் செய்தாலும் முஸ்லிம் சுவர்க்கம் போவான் அல்லது நரகம் போக மாட்டான் என்றும் அவர்களின் பாவத்தை யூதன் மேலும் கிறிஸ்தவன் மேலும் வைத்துவிடுவான் என்றும் முஸ்லிம்களை நரகத்திலிருந்து மீட்கும் பொருளாக யூதரும் கிறிஸ்தவரும் இருப்பார்கள் என்ற ஹதீஸ்களை வைத்து குற்றம் சாட்டினர்.
இணைவைக்காமல் எந்த பாவம் செய்தாலும் நரகம் புக மாட்டான் அல்லது சுவர்க்கம் புகுவான் என்பது முஸ்லிம்கள் நரகத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்பதை குறிக்கிறது.
அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல்
மரணித்த முஸ்லிம் இந்த பாவங்களை செய்தாலும், அதற்காக நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார். மாறாக தண்டனை அனுபவித்து விடுதலை பெறுவார் (புகாரி 7439),
அதேபோல் தவ்ஹீதுடைய மக்களில் சிலர் (அதாவது இணைவைக்காதவர்கள்) தம் பாவத்திற்காக
நரகத்தில் வேதனை செய்யப்பட்டு, இறைக் கருணையால் சுவர்க்கத்தில் நுழைவர் என்பது திர்மிதி 2597)
ஆகவே இந்த பாவங்களை செய்தவர் இணைவைக்காவிட்டால், நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார். மாறாக தண்டனைக்கு பிறகு சுவர்க்கத்தில் நுழைவார். அதை தான் இந்த ஹதீஸ் கூறுகிறது.
-யூதரும் கிறிஸ்தவரும்
தம் பாவங்களினால்
தான் நரகம் போவார்கள். காரணம் முகம்மது நபியை பற்றி கேள்விப்பட்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ மரணிப்பவர் நரகம் புகுவார்- முஸ்லிம் 240
ஆக முஸ்லிம்களின் பாவத்தை அவர்கள் சுமப்பதும் அவர்களுக்கான
ஒரு தண்டனையே!
-எந்தவொரு மனிதனுக்கும்
சுவர்க்கத்திலும் நரகத்திலும் ஒவ்வோர் இடம் உண்டு. ஒருவன் நரகம் புகுந்தால் அவனது சுவர்க்க இடத்தை சுவர்க்கவாதிகள் வாரிசாவார்கள். அதேபோல் சுவர்க்கம் புகுந்தால் அவனுடைய நரக இடத்தையும் நரகவாதி பெற்றுக்கொள்வான் (இப்னுமாஜா 4341).
அதன்படி தம் பாவத்தால் நரகம் போகும் யூத கிறிஸ்தவர்கள்
இறைவனின் கருணையால் சுவர்க்கம் போகும் முஸ்லிம்களை நரகத்திலிருந்து மீட்கும்பொருளாவார்கள்.
கர்த்தர் சவுலின் குடும்பத்தின்
பாவத்திற்காக
அவர்கள் செத்துப்போன பின் தாவீதின் காலத்திலே பஞ்சத்தை ஏற்படுத்தினார்- 2சாமுவேல் 21:1
-ஆகான் என்பவன் திருடியதற்காக சக இஸ்ரவேலர்கள்மீது கர்த்தர் கோபமுற்று தோற்றுப்போக வைத்தார் கர்த்தர் -யோசுவா 7:1-7
-தாவீது பாவம் செய்ததற்காக எதுவுமறியாத பாலகனை கொன்றார் கர்த்தர் - பிறகு அதே பெண்ணை மீண்டும் புணர்ந்த போது பிறந்த குழந்தையை நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24
-இதற்கு மேலதிகமாக நீதிமானை மீட்கும் பொருளாக துன்மார்க்கன்
இருப்பான் என்கிறது பைபிள்:
நீதிமொழிகள் 21:18 IRVTam
[18] நீதிமானுக்கு
பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
https://bible.com/bible/1899/pro.21.18.IRVTam
Claim 20.அல்லாஹ் விபச்சாரத்தை விதியாக்கியுள்ளான் என புகாரி 6612 ஐ சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினர்
அல்லாஹ் படைப்புகளை படைக்க முன்பே அவற்றை பற்றி நன்கறிந்தவன். அவன் அறிந்ததையே எழுதினான்.
-ஆகவே ஒவ்வொரு மனிதனும் விபச்சாரத்தின் ஒரு பங்கை அடைவான் என்பதை இறைவன் அறிந்ததால் தான் விதித்தான். அதன்படி மனிதன் அடைந்து கொள்வான். அதாவது தப்பான பார்வை ,தப்பான பேச்சு, தப்பான இடத்திற்கு செல்லுதல், தப்பான தொடுகை போன்றவை அந்தந்த உறுப்புகளின்
விபச்சாரம் என ஹதீஸ் கூறுகிறது.
இவற்றை அடைபவன் நிர்ப்பந்திக்கப்பட்டு அடைபவனல்ல.. மாறாக அந்த மனிதன் தன் சுயதேர்வில் சுய இச்சையின் படியே நடக்கிறான். -யாரும் என்னை மீறி அந்நிய பெண்ணை தப்பான எண்ணத்தில் பார்த்தேன் என கூறமுடியாது. காரணம் அவனாக இஷ்டப்பட்டே அதை செய்கிறான்.
கர்த்தர் விபச்சார வர்ணனை எனும் ஆபாசப் பேச்சை பேசுவதாக பைபிள் சித்தரிக்கிறது
[3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.
[20] கழுதையின் உறுப்புப்போல
உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற
விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக
இருக்கும்படி
அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [எசேக் 23:21 IRVTam
[21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
https://bible.com/bible/1899/ezk.23.21.IRVTam
இத்தகைய பேச்சை வாயின் விபச்சாரம் என இஸ்லாம் கூறுகிறது
-கர்த்தர் விபச்சாரத்தை
தண்டனையாக செய்விப்பார்
*பைபிள் தேவனும் விபச்சாரத்தை
விதியாக்கிய கதை பைபிளுலும் உள்ளது
இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக்
கேள்; இஸ்ரவேலுக்கு
விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றான்.ஆமோஸ் 7:16-17
அதாவது தீர்க்கதரிசனம் சொல்லாதே என்பதால், இதற்காக வேசியாக்குவதாக சொல்கிறது.
அத்தோடு விபச்சாரம் செய்விப்பேன்
என்றும் சொல்லியுள்ளார்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே
உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.2 சாமுவேல் 12:11
Claim 21.மஹர் உடலுறவுக் கூலி என குர்ஆன் ஹதீஸ் கூறுகிறது. இரும்பு மோதிரம் செருப்பு ஆடை என்பதையெல்லாம் மஹராக கொடுத்திருக்கிறார்கள் என்பதை கூறினர்
-ஆனாலும் முன்பே மஹரை பொருந்தி விட்டால், உடலுறவு நடக்காமலே விவாகரத்து ஆகிவிட்டால் மஹரின்
பாதியை அப்பெண்ணுக்கு செலுத்த வேண்டும் என குர்ஆன் 2:237 கூறுகிறது.
-எளியவர்கள் தம் வசதிக்கேற்ப மஹர் கொடுக்கலாம். அதை பெண் தரப்பு
ஒப்புக்கொண்டால் அது செல்லும். அனைவராலும் தங்கக்
குவியலை கொடுக்க முடியாது அல்லவா?
பைபிளிலே கன்னியை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக் காசுகளை கொடுக்கச் சொல்லி
இருக்கிறதே (உபாகமம் 22:28-29) இதை கற்பழிப்புக்கான கூலி என எடுக்கலாமா?
-கன்னிப்பெண்ணோடு விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் மஹரை
கொடுத்துவிட்டு போகுமாறு பைபிள் கூறுகிறதே- யாத்திராகமம் 22:16-17
இதெல்லாம் எந்த வகை கூலி?
22.சில்லரைத்தனமான
வாதங்கள் சில
*இதற்கு மேலதிகமாக வேடிக்கையான குற்றச்சாட்டுகளாக இஸ்லாம் என்றால் சமாதானம்
என்று முஸ்லிம்கள் பொய் சொல்லி திரிகிறார்கள் என்றனர். ஆனால்
இஸ்லாம் என்ற பெயருக்கு வேறொரு பெயராக அஸ்ஸில்ம் என குர்ஆன் 2:208
கூறுகிறது. அதன் அர்த்தம்
சமாதானம் என்பதே
*அத்துடன் நிகாஹ் என்றால் புணர்தல் என்று கூறினர். இதெல்லாம் வாதமா? பைபிள்
கழுதை ஆணுறுப்பு குதிரை விந்து என்று ஆபாசமாக பேசுது. இதிலே
இதெல்லாம் வாதமென நினைத்து தற்குறிகள் பேசினர். நிகாஹ்
என்றால் மொழிரீதியாக உடலுறவை குறித்தாலும் , இஸ்லாமிய
பரிபாசையில் திருமண ஒப்பந்தத்தை குறிக்கும் திருமணத்தையும் நிகாஹ் என
சொல்லப்படுகிறது. உதாரணமாக குர்ஆன்
33:49, 24:32,33 போன்றவற்றில்
நகஹ/நிகாஹ் என்பது திருமணத்தை குறிப்பதாகவே உள்ளது. இதனால்
தான் இன்றும் முஸ்லிம்கள் திருமணத்தை நிகாஹ் என கூறுவார்கள். இதற்கு
உடலுறவு என்ற அர்த்தமும் உண்டு. அவ்வர்த்தத்தில்
ஹதீஸ்களும் உள்ளன. குர்ஆன் வசனமும்
உண்டு உதாரணமாக குர்ஆன் 4:6.
*விவாதத்தின் தொடக்கத்தில் தேவனை குறித்து, அடிமைகளை ஏற்படுத்திக் கொள்ளாத இறைவன் என தற்குறித்தனமாக துவங்கினர்.
பழைய ஏற்பாட்டில் தேவனை நம்பியோரை தேவனது ஊழியக்காரன்/தாசன் (servant)
எனும் வாசகத்தை காணமுடிகிறது
. உதாரணமாக
இஸ்ரவேலரை என் ஊழியாக்காரர் (servants) என்கிறார் (லேவியராகமம்
25:42),யாக்கோபின் வித்துக்களை அவருடைய ஊழியக்காரர்கள்
(his servant) என 1 நாளாகமம்
16:13 கூறுகிறது. மோசேயை
அவருடைய (கடவுளுடைய) ஊழியக்காரன்
(his servant) என்கிறது தோரா (யாத்திராகமம்
14:31 ; யோசுவா புத்தகமும் 9:24,
11:15, சங்கீதம் 105:26), தாவீது
ராஜாவை கர்த்துருடைய ஊழியக்காரன் (his servant) என்கிறது
2 இராஜாக்கள் 8:19 சங்கீதம்
78:70 ,144:10,, அதேபோல்
தீர்க்கதரிசி எலியாவை அவருடைய தாசன் (his
servant) என 2 இராஜாக்கள் 9:36,
10:10 கூறுகிறது, தீர்க்கதரிசி யோனாவை அவருடைய
ஊழியக்காரன் (his servant) என 2 இராஜாக்கள்
14:25 கூறுகிறது
ஆபிரகாம் எனும் அவருடைய நண்பரை அவருடைய ஊழியக்காரன் (his
servant) என சங்கீதம் 105:6,42 கூறுகிறது
.
அதே போல் ஆபிராகமை என் ஊழியக்காரன் (my
servant) (ஆதி 26:24),மோசேயை என்
ஊழியக்காரன் (my servant) (எண்ணாகமம் 12:7,8
யோசுவா 1:2,7; 2 இராஜாக்கள்21:8),
காலேபை என் ஊழியக்காரன் (எண்ணாகமம்
14:24), தாவீது ராஜாவை என் ஊழியக்காரன் (my
servant) (2 சாமுவேல் 3:18;7:5,8,; 1 இராஜாக்கள்
11:13,3234,36,38;
2 இராஜாக்கள் 19:34,... சங்கீதம்89:3,20,)
நீதிமான் யோபுவை என் ஊழியக்காரன் (யோபு 1:8,
2:3, 42:7), ஏசாயா தீர்க்கதரிசியை என் தாசன் (my
servant) (ஏசாயா 20:3) யாக்கோபு
எனும் இஸ்ரவேலரை என் ஊழியக்காரன் my servant (ஏசாயா 41:8,9,
; 44:1,2,21, 45:4) , கொடூர மன்னன் நேபுகாத்நேச்சரை என் ஊழியக்காரன் (my
servant) (எரேமியா 25:9,27:6), மேசியாவை
என் ஊழியக்காரன் (my servant) (சகரியா 3:8)
என கர்த்தரே சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.
இதே எபிரேய வாசகம் தான் அடிமைகளை குறிக்கவும்
பாவிக்கப்படும். (பார்க்க
யாத்திராகமம் 21:2,5,20,26; லேவியராகமம் 25:44)
அடுத்ததாக, கடவுளுக்கு நம்மை
பிள்ளைகளாக பார்க்கிறார் என்பதும் மிகவும் தவறானது. காரணம்
எந்த தகப்பனும் தன் குழந்தைகளை கொல்லுவதில்லை. ஆனால் கடவுள்
கொல்லுபவராக இருக்கிறார் (1 சாமுவேல் 2:6,
உபாகமம் 32:39). குழந்தைகள்
உட்பட.

Comments
Post a Comment