பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

 


என்னுரை

: அனைவருக்கும் ஒரே இறைவனே உள்ளார். அரபியில் அத்தகையவரை அல்லாஹ் என்கிறோம். எபிரேயத்தில் எலோஹிம்,யெகோவா/யாஹ்வே (ஹாசேம் -The Name) ,அதோனாய் என்பர்.

குர்ஆன் முந்திய வேதங்களில் புகுத்தப்பட்ட பொய்த்தகவல்களை தவறுகளை திருத்துவதோடு , அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் வந்ததாக அறிவிக்கிறது. அதாவது முந்திய வேதங்கள் ஏக இறைவனை தூய்மையாக வணங்குவதும், நல்லொழுக்கமாக இருப்பதும் ,தீமையிலிருந்து விலகியிருப்பதும், இறைவனின் சட்டத்திற்கு கீழ்படிவதும் , மெய் நபி சொல்வதை கேட்டு நடக்கவும் கூறியிருப்பவற்றை மெய்ப்பித்து அந்த இறுதி மெய்நபி முகம்மது நபி தான் என்றும் அவரை பின்பற்றினாலே ஈடேற்றம் பெறலாம் என்கிறது.

முந்தைய வேதங்களில் மனிதன் தன் அறிவிலிருந்து தவறாக சேர்த்ததும் உண்டு. வேண்டுமென்று புகுத்தியதும் உண்டு. அவற்றை இஸ்லாம் திருத்துகிறது

உதாரணமாக

1.மோசே எகிப்தியனை வேண்டுமென்றே கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்று புதைத்தார் (யாத்திராகமம் 2:11-12, அப்போஸ்தலர் 7:24) என பைபிள் சொல்கிறது. ஆனால் அவர் அடித்ததால் எதிர்பாராவிதமாக எகிப்தியன் இறந்துபோனான் என்றும் அதற்காக மோசே இறைவனிடம் பாவமன்னிப்பு தேடியதாகவும் இறைவன் மன்னித்ததாகவும் (குர்ஆன் 28:15-17) என குர்ஆன் கூறுகிறது .

2.ஆரோன் (ஹாரூன்) நபி தான் மாட்டு கன்றின் சிலையை செய்வித்து மக்களை கெடுத்தார் (யாத்திராகமம் 32:1-5) என பைபிள் சொல்கிறது. ஆனால் குர்ஆனோ ஹாரூன் அதை எச்சரித்தார் என்றும் அதை செய்வித்தவன் சாமிரீ என்பவனே என்கிறது (குர்ஆன் 20:87-96, 7:148-151) .

3.மோசே வாக்களிக்கப்பட்ட புனித  இடத்தினுள் நுழையாமல் மரணித்ததற்கு காரணமாக மோசேயும் ஆரோனும் இறைவனை  பரிசுத்தம்பண்ணாமல் அவருடைய கட்டளையை மீறியபடி இருந்ததே என உபாகமம் 32:48-52 என்கிறதோடு எண்ணாகமம் 20:11-12 கூறும்போது மோசேயும் ஆரோனும் இறைவனை பரிசுத்தம்பண்ணும்படி விசுவாசம் கொள்ளவில்லை என்கிறது.  ஆனால் இஸ்லாமோ இறைவன் மரணத்தை விதித்தபோது, மோசே விரும்பி  கேட்டுக்கொண்ட இடத்திலே மரணிக்க வைத்ததாக புகாரி 1339 கூறுகிறது

4.மோசேயிற்கு வழங்கப்பட்ட இரண்டாம் அடையாளம் தன் கையை மடியில் போட்டு வெளியே எடுத்தால் வெண்குஷ்டம் பிடித்திருந்தது என்றும் மறுபடியும் போட்டால் அது பழையதுபோன்றே இருந்தது என்று யாத்திராகமம் 4:5-7 கூறுகிறது. குர்ஆனோ எந்தவித கெடுதியுமின்றி வெண்மையாக வெளிப்படும் என குர்ஆன் 20:22,28:32 கூறுகிறது

5.சாலமோன் ராஜா தன் மனைவியரின் பேச்சைக்கேட்டு சிலைவணங்கியாகி கர்த்தர் கனவில் தோன்றி இரண்டுமுறை எச்சரித்தும் கேட்காமல் கர்த்தரின் கோபத்திற்காளானார் என 1 இராஜாக்கள் 11:4-10 என்கிறது. ஆனால் குர்ஆன் 2:102 கூறும்போது சாலமோன் ஒருபோதும் நிராகரிக்கவில்லை என கூறுகிறது

6.இஸ்ஹாக் தாத்தாவின் பிறப்பு பற்றி வயதான  சாரா பாட்டி கேட்டதும் சிரித்தார் எனும் செய்தியை பைபிள் கூறும்போது, அவர் பயந்து நான் சிரிக்கவில்லை என பொய் சொன்னதாக ஆதியாகமம் 18:12-14 கூறுகிறது. இஸ்ஹாக் எனும் பெயருக்கான காரணம் கூறப்படவில்லை. ஆனால் குர்ஆன் 11:71 "(சாரா பாட்டி) சிரித்தார். ஆகவே அவளுக்கு இஸ்ஹாக்கையும் அவருக்கு பின் யஃகூபையும் நன்மாராயம் கூறினோம் " என்கிறது. எபிரேயத்தில் இஸ்ஹாக் என்றால் சிரிப்பு.. சாரா பாட்டி சிரித்ததால் அதே பெயரை இறைவன் வழங்கினான்.

7.பைபிள் யஃகூபை குறித்து அவரது பெயருக்கான காரணமாக தன் அண்ணன் ஏசாவின் குதிகாலை பிடித்துக்கொண்டு வெளி வந்தவர் என்பதை குறிக்கும் விதமாக யஃகூப் என பெயரிடப்பட்டதாக ஆதி 25:26 கூறுகிறது. (அதாவது அண்ணனை வஞ்சித்து துரோகத்தின் மூலம் வீழ்த்துபவன் எனும் கருத்து இதிலே மறைந்துள்ளது. அதன்படியே ரிப்கா பாட்டியின் உதவியுடன் ஏமாற்றி அண்ணுடைய ஆசீர்வாதத்தை திருடிக்கொண்டார் என ஆதி 26:1-28 என்கிறது). ஆனால் குர்ஆன் அவரை இஸ்ஹாக்குக்கு பின்னால் வரும் வாழ்த்து என்றே கூறுகிறது 11:71. யஃகூப் என்றால் எபிரேயத்தில் பின்னால் வருபவன் எனும் அர்த்தம் உண்டு. அதன்படி இஸ்ஹாக்கின் பின் வருபவர் என்பதே இதன் அர்த்தம். (ஏசா சொன்னது போல திருடனோ வஞ்சகனோ துரோகியோ அல்ல.)

8.அதேபோல் பைபிள் தாவீது எனும் கடவுளின் இருதயத்திற்கேற்றவனான தீர்க்கதரிசி ராஜாவை கள்ளதனமாக மற்றவன் மனைவியை அபகரித்து விபச்சாரம் செய்து பிறகு மனைவியாக்கினார் என கூறுகிறது (2 சாமுவேல் 11:2-4,26-27) . இதற்காக கடவுள் அவரது மற்றைய மனைவிகளை இன்னொருவனோடு பட்டப்பகலில் விபச்சாரம் செய்வித்து காட்டுவேன் என சொன்னதாக 2 சாமுவேல் 12:11-12 கூறுகிறது. ஆனால் இஸ்லாமோ இதுபோன்ற அவதூறுகளை மறுக்கிறது.

9.புதிய ஏற்பாட்டிலோ இறைவன் தன் மகனை தனக்கே நரபலியிட்டார் (ரோமர் 8:3 & 1 யோவான் 4:10) என்றும் இயேசு தன்னை கடவுளுக்கு நர பலியாக செலுத்தினார் (எபேசியர் 5:2) என்றும் கூறுகிறது. இஸ்லாமோ அவர் கொல்லப்படவுமில்லை சிலுவையில் அறையப்படவுமில்லை என்றும் அவரை போன்ற ஒருவர் ஒப்பாக்கப்பட்டார் என்கிறது. (4:157-159) அதாவது வேறொருவரை  சிலுவையில் அறைந்து விட்டு  அவரையே கொன்றதாக  நம்பினர். . இதனாலேயே வரலாற்றிலும் அவர் சிலுவையில் அறையப்பட்டதாக எழுதப்பட்டுள்ளன. அத்தோடு இறைவனுக்கு மகன் இருப்பதை மறுக்கிறது (4:171)

இத்தகைய திருத்தங்கள் முகம்மது நபி கூறும் இறைவனும் முகம்மது நபியும் இவர்களின் வேதத்திலுள்ளதை அறிந்து வேண்டுமென்றே திருத்துவதன் மூலம்  அதுகுறித்த ஞானமுடையோரே என்பதை காட்டுகிறது.

முகம்மது நபியை குறித்து தம் வேதத்தில் அறிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட யூத கிறிஸ்தவர்கள் விசயத்திலேயே நபிகளாருக்கு இறங்கியதில் சந்தேகம் இருந்தால் விசாரித்து பார்க்குமாறு குர்ஆன் 10:94 கூறியது. மறுத்தவனையோ அறிவிலியை குறித்தோ அல்ல. ஏனெனில் மறுத்தவர் வேண்டுமென்றே பொய் சொல்வான். அறிவிலியோ தன்னை அறியாமலேயே பொய்சொல்வான். ஆனாலும் நபிகளார் சந்தேகப்படவோ எவரிடமும் கேட்கவோ இல்லை.

*குர்ஆன் இன்ஜீல் என்பதை ஈஸா நபிக்கு கொடுத்த வேதம் என்றும் அவருக்கு இறைவனால் கற்றுக்கொடுக்கப்பட்ட வேதம் என்றும் குர்ஆன் 3:48,5:110 கூறுகிறது .

அத்தோடு இன்ஜீலையுடைவர்களுக்கு அதிலே இறைவன் இறக்கியதை கொண்டு தீர்ப்பளிக்குமாறு கூறியது. அதாவது முகம்மது நபியிற்கு முன்னுள்ளவர்களை குறித்தே இது.  ஆனால் முகம்மது நபியின் பின் அவரை குறித்து கேள்விப்பட்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ மரணிப்பவர் நரகமே நுழைவார்-(முஸ்லிம் 240). 

தோரா அதிகாரம் உள்ளபோது  பழிக்கு பழியும் கொலைக்கு கொலை என சட்டம் கொடுத்தது. இன்ஜீலோ அதிகாரம் இல்லாத பலவீனமாக இருந்த காலத்தில் எதிரியை (கெலைகாரனை) மன்னிக்குமாறும் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுமாறும் கூறியது. இது இன்றும் மத்தேயு 5 இதே உண்டு.

ஆனால் இஸ்லாமோ பலவீனமாக இருந்தபோது மன்னிக்கவும் (நஸாயீ 3086), அதிகாரம் பெற்ற பின் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் உரிமையை வழங்கியது. விரும்பினால் மன்னிக்கலாம். மன்னித்தால் கூலி உண்டு. விரும்பினால் தண்டிக்கலாம். அதிலே குற்றம் இல்லை என்றது. (குர்ஆன் 42:40, 2:178)

அல்லாஹ்வும் பிதாவும் அடிமைகளும் குமாரரும்

அல்லாஹ் பைபிள் கூறும் பிதா அல்ல என்ற கருத்தையும் அடிக்கடி போதகர்கள் உருட்டுவர்.ஏனெனில் குர்ஆன் அல்லாஹ்வுக்கு மகனிருப்பதை மறுப்பதோடு சகலரும் அவனது அடியார்கள் என்கிறது.

ஆனால் பழைய ஏற்பாட்டில் பிதா-குமாரன் உறவு என்பது தவறு செய்தால் தண்டித்து திருத்துவது எனும் அதிகாரத்தை குறிப்பதாகவே உள்ளது. அத தான் 2 சாமுவேல் 7:14 கூறுகிறது. அதாவது சோலமோனையும் அவரது சந்ததியான யூத ராஜாக்களையும் என் குமாரன் நான் அவனது பிதா என கூறிவிட்டு ,அவன் தவறு செய்தால் அவனை மனித அடிகளால் உதைகளால் தண்டிப்பேன் என்பதை கூறுகிறார். இதேபோல் கடவுளை புருசன் என்றும் அவரை வணங்குவோரை அவரது மனைவி என்றும் (எரேமியா 3:1,8) கூறியது. இதன் அர்த்தம் தவறு செய்தால் தள்ளுதல் சீட்டு கிடைப்பது போல இவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவர் என்பதை உணர்த்துவதற்கே.

இதுபோன்றே பாகால் (Ba'al -בעל) என்பது கணவனை குறிக்க பைபிள் பாவித்தது (ஏசாயா 54:5), ஆனால் பாகால்கள் எனும் வேறு கடவுள்களை இவர்கள் வணங்கி கெட்டுப்போன போது, பாகாலீ (என் புருசன்)  என்று கூறாமல் ஈசீ (என் புருசன்) என்று கூறுவார்கள் என்றும் இவ்வாறே பாகால்களை அவர்களின் வாயிலிருந்து ஒழியப்பண்ணுவேன் என்று ஓசியா 2:16-17 கூறுகிறது.

இதுபோன்று தான் பிதா குமாரன் உறவு அர்த்தம் மாறி ரோம் கிரேக்க மத சித்தாத்தங்களுடன் கலந்த பின் இஸ்லாம் பயன்படுத்துவதில்லை...

காரணம் இவர்கள் நேரடி அப்பா பிள்ளை உறவு போல் கருதி விட்டனர். உண்மையில் தகப்பன் தன் மகனை தண்டித்து திருத்தும் அதிகாரத்தையே இவை கூறுகிறது.

எந்த தகப்பனும் தன் குழந்தையை கொல்ல மாட்டான். ஆனால் கடவுளை தவிர வேறு கொல்லுபவரே கிடையாது (உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6). அப்படி பார்த்தால் கெட்ட தகப்பனாகவே கடவுள் ஆகிவிடுவார்.

தேவனது ஊழியக்காரன்/தாசன் (servant)

இதேபோல  தான் பழைய ஏற்பாட்டில் தேவனை நம்பியோரை தேவனது ஊழியக்காரன்/தாசன் (servant) எனும் வாசகத்தை காணமுடிகிறது

. உதாரணமாக இஸ்ரவேலரை என் ஊழியாக்காரர் (servants) என்கிறார் (லேவியராகமம் 25:42),யாக்கோபின் வித்துக்களை அவருடைய ஊழியக்காரர்கள் (his servant) என 1 நாளாகமம் 16:13 கூறுகிறது. மோசேயை அவருடைய (கடவுளுடைய) ஊழியக்காரன் (his servant) என்கிறது தோரா (யாத்திராகமம் 14:31 ; யோசுவா புத்தகமும் 9:24, 11:15, சங்கீதம் 105:26), தாவீது ராஜாவை கர்த்துருடைய ஊழியக்காரன் (his servant) என்கிறது 2 இராஜாக்கள் 8:19 சங்கீதம் 78:70 ,144:10,,  அதேபோல் தீர்க்கதரிசி எலியாவை அவருடைய தாசன் (his servant) என 2 இராஜாக்கள் 9:36, 10:10 கூறுகிறது,  தீர்க்கதரிசி யோனாவை அவருடைய ஊழியக்காரன் (his servant) என 2 இராஜாக்கள் 14:25 கூறுகிறது

ஆபிரகாம் எனும் அவருடைய நண்பரை அவருடைய ஊழியக்காரன் (his servant) என சங்கீதம் 105:6,42 கூறுகிறது .

அதே போல் ஆபிராகமை என் ஊழியக்காரன் (my servant) (ஆதி 26:24),மோசேயை என் ஊழியக்காரன் (my servant) (எண்ணாகமம் 12:7,8 யோசுவா 1:2,7;  2 இராஜாக்கள்21:8), காலேபை என் ஊழியக்காரன் (எண்ணாகமம் 14:24), தாவீது ராஜாவை என் ஊழியக்காரன் (my servant) (2 சாமுவேல் 3:18;7:5,8,; 1 இராஜாக்கள் 11:13,3234,36,38;  2 இராஜாக்கள் 19:34,... சங்கீதம்89:3,20,) நீதிமான் யோபுவை என் ஊழியக்காரன் (யோபு 1:8, 2:3, 42:7), ஏசாயா தீர்க்கதரிசியை என் தாசன் (my servant) (ஏசாயா 20:3) யாக்கோபு எனும் இஸ்ரவேலரை என் ஊழியக்காரன் my servant (ஏசாயா 41:8,9, ; 44:1,2,21, 45:4) , கொடூர மன்னன் நேபுகாத்நேச்சரை என் ஊழியக்காரன் (my servant) (எரேமியா 25:9,27:6), மேசியாவை என் ஊழியக்காரன் (my servant) (சகரியா 3:8) என கர்த்தரே சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.

இதே எபிரேய வாசகம் தான் அடிமைகளை குறிக்கவும் பாவிக்கப்படும். (பார்க்க யாத்திராகமம் 21:2,5,20,26; லேவியராகமம் 25:44)

 

ஆகவே  குர்ஆன் இந்த உயர்வான ஊழியக்காரன் என்ற வார்த்தையையே அரபியில் (عبد) அடியார் என பாவிக்கிறது. மகன் என்ற வார்த்தையின் அர்த்தம் ரோம் கிரேக்க மதங்களால் யூதகிறிஸ்தவரிடம் குழம்பியுள்ளதால் அதை முற்றாக தவிர்க்கிறது.

அல்லாஹ்வும் அகிலத்தாரின் இறைவனும் உலகின் அதிபதியும்

அல்லாஹ்வை அகிலத்தாரின் இறைவன் என குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிளிலே உலகத்தின் தேவன் சாத்தான் என்றும் உலகத்தின் அதிபதி சாத்தான் என்றும் கூறுகிறது (2 கொரிந்தியர் 4:4, யோவான் 12:31) என தற்குரித்தனமாக பேசுவர்.

அகிலத்தாரின் இறைவன் என்பதன் அர்த்தம் என்ன என்பதை குர்ஆன் 26:23-24 இலே கூறப்பட்டுள்ளது. அதாவது வானங்கள் பூமி மற்றும் அவற்றிற்கிடையே உள்ளவை என அனைத்திற்கும் இறைவன் என்பதே அதன் அர்த்தம்.

இதே வார்த்தையை தான் இயேசு தேவனுக்கு பாவிக்கிறார்:

“அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.”

மத்தேயு 11:25

இந்த தற்குறித்தனமான வாதத்தின்படி பிதாவே சாத்தான் என கூறவேண்டி வரும்.

(புதிய ஏற்பாடு சாத்தானை உலகின் அதிபதி, பிரபஞ்சத்தின் தேவன் என கூற காரணம், இவர்கள் நம்பிக்கைப்பிரகாரம் விசுவாசிகள் உலகத்தார் அல்ல (யோவான் 15:19, 17:14), அவிசுவாசிகளே உலகமும் உலகத்தாரும் (1 யோவான் 3:1,13, யோவான் 15:19..) என நம்புவதால், அந்த அவிசுவாசிகளின் தலைவன் தேவன் எனும் அர்த்தத்தில் தான் இவ்வாறு எழுதியுள்ளனர். காரணம் சாத்தானுக்கு சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன என லூக்கா 4:5-6 காட்டுகிறது... இதற்கும் இந்த தற்குரிகளின் வாதத்திற்கும் சம்பந்தம் இல்லை)

அல்லாஹ் படைப்புகளின் மீது சத்தியம் செய்தலும் பைபிளும்

அல்லாஹ் படைப்புகளின் மீது சத்தியம் செய்கிறான். ஆனால் கர்த்தரோ தன்னைவிட பெரியவர் இல்லாததால் தன் மீதே ஆணையிட்டார் (எபிரேயர் 6:13). அதனால் இது நம் தேவனாக இருக்க முடியாது என தற்குரித்தனமாக பேசி தம் மதத்தவர்களை மூடர்களாக்குகின்றனர்.

-முதலில் இறைவன் செய்பவை பற்றி அவன் விசாரிக்கப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்கப்படுவார்கள் (குர்ஆன் 21:23).

-இறைவன் தன் படைப்புகள் மீது சத்தியம் செய்ய பூரணமாக உரிமை படைத்தவன். ஏனெனில் அவன் தான் விரும்பியதை கட்டளையிடுவான் சட்டமாக்குவான் (குர்ஆன் 5:1). படைப்புகளால் இறைவனுக்கு சட்டம் போட முடியாது.

-வேடிக்கையாக எபிரேயர் 6:13ஐ எழுதிய நபர் பழைய ஏற்பாட்டை எப்போதும் தப்பு தப்பாக படித்து கதை சொல்பவர். உதாரணமாக நோயாளி தேவனிடம் செய்யும் ஜெபமான சங்கீதம் 102:25-27ஐ அப்படியே தேவன் தன் மகனிடம் சொன்னது என உருட்டுவார் (எபிரேயர் 1:10-12). சேவகன் தன் ராஜாவை புகழ்ந்து பாடிய சங்கீதம் 45ஐ தேவன் தன் மகனை குறித்து கூறியதாக (எபிரேயர் 1:8-9) உருட்டுவார்.  ஏசாயா தன்னை குறித்து சொல்வதை (ஏசாயா 8:18) இயேசு ஏசாயா மூலம் பேசியதாக உருட்டுவார் (எபி 2:13), தாவீது தன்னை குறித்து சங்கீதம் 22:22இலே கூறுவதை இயேசு தன்னை குறித்து கூறவுதாக உருட்டுவார் (எபி 2:12). மெல்கிசேதேக் பற்றி வம்சவரலாறு பிறப்பு மரணம் பற்றி தோராவில் இல்லாததால் , அவர் தாய் தகப்பனற்றவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன் என உருட்டுவார் (எபி 7:3).  நான் அவர்களின் நாயகராக இருந்தேன் என எரேமியா 31:32 உள்ளதை நான் புறக்கணித்தேன் என உருட்டுவார் (எபி 8:9). என் செவிகளை திறந்தீர் என தாவீது வேண்டுவதை (சங்கீதம் 40:6) , அப்படியே எனக்கு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர் என இயேசு சொன்னதாக உருட்டுவார் (எபி 10:5).. இப்படிப்பட்ட நபரே இதன் ஆசிரியர். அதாவது வேதத்தை எப்படி படிக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமே இவர் தான்.

வேடிக்கையாக தேவன் தன் படைப்பாகிய யாக்கோபின் மகிமையின் மீது ஆணையிட்டுள்ளார்.

அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.

ஆமோஸ் 8:7

இதுவும் கர்த்தர் என் கிறிஸ்தவர்கள் உருட்டுவார்கள். ஆனால் அதே ஆமோஸ் 6:8 இலே கர்த்தர் இதே யாக்கோபின் மகிமையை (மேன்மை) வெறுப்பதாக சொல்கிறார்.

அப்படியென்றால் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறாரா என்ன?

மாறாக யாக்கோபின் மகிமை என்பது இஸ்ரவேலர் தம்மை உயர்வாக கருதுவதை குறிக்கிறது. அதாவது பிக்காளித்தனம். அதன்மீது தான் கர்த்தர் ஆணையிட்டார்.

கர்த்தரே இப்படி ஆணையிட்டுருக்க எபிரேய ஆசிரியர் இதை ஒழுங்காக படிக்காமல் எழுதியதை கர்த்தரே சொல்வதாக உருட்டுவது சரியல்ல!

அல்லாஹ்வை சாத்தான் என்று அடிக்கடி போதகர்கள் அடித்துவிடுவார்கள். அதற்காக ஒரு சிறு பரிசு:

பைபிள் கூறும் தேவனும் சாத்தானும் ஒப்பீடு

பைபிள் கூறும் சாத்தான்

பைபிள் கூறும் தேவன்

1.தேவனையே நியாயமின்றி உத்தமனை நிர்மூலமாக்க ஏவியவன் (யோபு 2:3)

அவன் ஏவியபடி செய்தவர் (யோபு 2:4-6 &  1:10-12)

2.இஸ்ரவேலரை கணக்குப் பார்க்க தாவீதை ஏவி விட்டவன் (1 நாளாகமம் 21:1)

இஸ்ரவேலரை கணக்குப் பார்க்க தாவீதை ஏவி விட்டவர் இவர் தான் (2 சாமுவேல் 24:1)

3.ஜனங்களை வஞ்சிப்பவன் (வெளி 12:9, ஆதி 3:13)

கர்த்தர் தன் ஜனங்களை வஞ்சித்தார் (எரேமியா 4:10), பொய்யை விசுவாசிக்க மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12)

4.அவன் பொய்யும் பொய்யின் பிதாவுமானவன் (யோவான் 8:44)

கர்த்தர் தன் பொய் சொல்லும் ஆவியை அனுப்பிவித்து தீர்க்கதரிசிகளை பொய்த்தீர்க்கதரிசனம் சொல்ல வைத்தார் (1 இராஜாக்கள் 22:18-23), பொய்யை விசுவாசிக்க வைக்க வஞ்சகத்தை அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12)

5.ஆதிமுதல் கொலைகாரன் (யோவான் 8:44), மரணத்தின் அதிபதி (எபிரேயர் 2:14)

கர்த்தர் தன் பொல்லாத ஆவியை சவுலின் மீது அனுப்பினார். அதனால் அவன் தாவீதை கொல்ல பார்த்தான் (1 சாமுவேல் 18:10-11, 19:9-10), கர்த்தரே கொலைபண்ணுபவர் (உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6), குழந்தைகளையும் கொல்லும்படி ஏவியவர் (1 சாமுவேல் 15:2-3)

6.சோதனைக்காரன் (1 தெசலோனிக்கேயர் 3:5, மத்தேயு 4:1-10)

அவரும் சோதிக்கும் சோதனைக்காரன் (ஆதி 22:1), சாத்தானின் சொல் கேட்டு யோபை தீங்கை அனுப்பி சோதித்தார் (யோபு 2:3-6)

7.வழிகெடுப்பவன். யாரை விழுங்கலாம் என பார்த்துக் கொண்டிருக்கிறான் (1 பேதுரு 5:8)

தேவன் தான் தன் ஜனங்களை வழி தப்பி போகப் பண்ணி தனக்கு பயப்படாத இருதயத்தை கொடுத்து கடினமாக்கினார் (ஏசாயா 63:17),  இஸ்ரவேலரை வழி கெடுத்து நரபலி கொடுக்க வைத்தவர் (எசேக்கியேல் 20:26)

8.இவ்வுலகின் தேவன். அவிசுவாசிகளின் மனதை குருடாக்குபவன் (2 கொரிந்தியர் 4:4)

அவிசுவாசிகளின் கண்களை குருடாக்கி இருதயத்தை கடினமாக்குபவர் (யோவான் 12:40)

9.கெடுதியானவன் (தீமை) -யோவான் 17:15

தேவனிடம் தீங்கான ஆவியும் உண்டு (1 சாமுவேல் 18:10, 19:9). தீங்கை உண்டாக்கியவரே தேவன் தான் (ஏசாயா 45:7)

கெடுதியாக நடக்கவும் வெறுக்கவும் வைப்பார் (சங்கீதம் 105:25)

10.தாழ்த்துபவன் , எதிரி

கர்த்தர் தாழ்த்துபவரும் தரித்திரம் அடையப்பண்ணுபவரும் ஆவார் (1 சாமுவேல் 2:7).

மனிதன் மரணமற்ற வாழ்வை அடையாமல் இருப்பதற்காக அவனை துரத்தி தேவதூதனை காவல் வைத்தார் (ஆதி 3:22-24)

11.பாவம் , கெடுதி செய்ய தூண்டுபவன் கொலை செய்விக்க தூண்டுபவன் (லூக்கா 22:1-2, யோவான் 13:26)

கெடுதி ,பாவம் கொலை கொள்ளை செய்வதற்காக  ராஜ்யத்தை எழுப்பி அவற்றை செய்வதற்கு கட்டளை கொடுப்பவர் (ஏசாயா 10:5-6)

சொந்த பிள்ளைகளை நரபலி கொடுத்து தீட்டுப்பட வைத்தவர் (எசேக்கியேல் 20:26)

பிள்ளைகளை கொலை செய்ய வைப்பதற்காக ராஜாவின் இருதயத்தை கடினமாக்குபவர் (உபாகமம் 2:30-32)

12.இப்பிரபஞ்சத்தின் தேவனும் வானலோக அதிகாரப்பிரபுவுமானவன் (2 கொரிந்தியர் 4:4, எபேசியர் 2:2), வானலோகத்திலும் இவனது பொல்லாத ஆவிகள் உண்டு (எபேசியர் 6:12). இவ்வுலகின் அதிகாரி/அதிபதி (யோவான் 12:31)

கர்த்தரே வானம் பூமியின் ஆண்டவர் (மத்தேயு 11:25)

13.சாத்தானும் ஒருவிதத்தில் பிதா தான் (யோவான் 8:44)

தேவனும் பிதா (யோவான் 8:42). அதேபோல் இவரும் வஞ்சிப்பார் (மேலே வஞ்சகனின் கீழே பார்க்கவும்)

14.அவன் தந்திரம் பிடித்தவன் (2 கொரிந்தியர் 2:11)

தேவனும் தந்திரமாக ஏமாற்றுவதற்கு தன் பொய் சொல்லும் ஆவியை அனுப்பி பொய் சொல்ல வைப்பார் (1 இராஜாக்கள் 22:18-23)

பொய்யை நம்ப வைப்பதற்கு மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12

எதிரிகள் திருந்தாமல் மன்னிக்கபடாமல் இருப்பதை விரும்பி உவமையாக பேசுபவர் (மாற்கு 4:11-12)

15.நோய்களை உண்டாக்குபவன் (லூக்கா 13:16,யோபு 2:7)

கர்த்தர் தான் நோய்களை உண்டாக்குபவர் (யாத்திராகமம் 15:26, உபாகமம் 28:27,60)

பைபிளில் எங்குமே சாத்தான் அசிங்கமாக பேசியதாகவோ விபச்சாரம் செய்விப்பதாகவோ கூறப்படவில்லை. ஆனால் கர்த்தர் அவ்வாறு வர்ணிக்கப்படுகிறார்

அதாவது பெண்ணாக உருவகித்து பாவாடையை முகம் வரை தூக்கி மானத்தை காட்டுவேன் (எரேமியா 13:26, நாகூம் 3:5), கால்களை விரித்துக் கொடுத்து ஆணுறுப்பு பெருத்த எகிப்தயனோடு உறவு கொண்டாய் (எசேக்கியேல் 16:25), கழுதை ஆணுறுப்புள்ள காதலர்களின் விந்து குதிரை விந்து (எசேக்கியேல் 23:20), காதலர்கள் முலைகளை அமுக்கினார்கள் (எசேக்கியேல் 23:3) என அசிங்கமாக பேசுவதாக சித்தரிப்பதோடு, தாவீது ராஜா விபச்சாரம் செய்ததற்காக , அவருடைய மனைவிகளை ஏதோ தாவீதின் சொத்து போன்று கருதி, அயலவனுக்கு பட்டப்பகலில் இஸ்ரவேலர் முன்பாக கொடுத்து விபச்சாரம் செய்விப்பேன் (2 சாமுவேல் 12:11-12) என கூறியதாக எழுதப்பட்டுள்ளது.

இப்படி இவர்களை போல காட்டுவதற்கு எமக்கும் முடியும்.

ஆகவே அவர்களின் உலரல்களை பார்ப்போம்:

 


1.வாழ்க்கைக்கும் இறைபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் அவருடைய இறைவல்லமை நமக்கு அளித்திருக்கிறது -2 பேதுரு 1:3 என பைபிள் சொல்வதால் பைபிள் இறைவேதம் என்கிறார் போதகர். அதாவது சகலத்திற்கும் இதிலே வழிகாட்டுதல் உண்டு என்கிறார்.

குர்ஆனும் இறையச்சமுடையோருக்கு வழிகாட்டுகிறது (குர்ஆன் 2:2),

குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்வழியை காட்டுகிறது (17:9)

மனிதர்களுக்கு வழிகாட்டுகிறது (குர்ஆன் 2:185)

இவர்களின் வாதப்படி குர்ஆன் இறைவேதம் என தெளிவாகிறது

(குர்ஆன் முதல் மனிதனான ஆதமை படைத்து கண்ணியம் படுத்தி , வானவர்கள் மற்றும் சாத்தான் அனைவரையும் ஆதமுக்கு சிரம்பணியுமாறு கூறி கண்ணியம் படுத்தினான் (2:34,&15:29-30& 7:11..)

சைத்தான் மறுத்து வழிகெட்ட போது,  திருந்தாமல்  இறைவனிடம் அவகாசம் கேட்டதோடு ,மனிதன் மீது குரோதம் கொண்டு அவனை வழிகெடுப்பேன் என்று சொன்னான். இறைவனும் அவகாசம் கொடுத்ததோடு (7:13-18& 15:32-43), ஆதமுக்கும் அவர் மனைவிக்கும் சைத்தான் எதிரி என அடையாளப்படுத்தினான் (20:117, 7:22), இப்படி அடையாளப்படுத்திய பின்பும் சைத்தான் கூறிய நிரந்தர வாழ்வு எனும் ஆசை வார்த்தையை நம்பி சாப்பிட்ட பின்புகூட , பாவமன்னிப்பு கேட்பதற்கான வார்த்தைகளையும் கொடுத்து, அவர்களின் பாவத்தையும் மன்னித்தான் (2:37, 20:122)

இதன்மூலம்  பாவம் செய்தவன் மன்னிப்பு கேட்டால், இறைவன் மன்னிப்பான் என்பதற்கு முழுமுதல் படிப்பினையாக இது உள்ளது. சைத்தான் திருந்தவில்லை. ஆதம் திருந்தினார். அதனால் அவர் மன்னிக்கப்பட்டார்!

சைத்தானை வழிகெடுத்தது குறித்து: சைத்தான் இறைவனிடம் " நீ வழிதவறச்செய்தாய்" என சொன்னான் (7:16,15:39)- சைத்தான் பெருமை பிடித்தவன் என இறைவன் முன்பே அறிந்திருந்தான். ஆனால் அது வெளிரங்கமாக வெளிப்பட்டிருக்கவில்லை! இறைவன் ஆதமுக்கு பணியுமாறு கட்டளையிட்டதால், சைத்தானின் பெருமையை வெளிரங்கமாக்கினான். அதனால் அவன் வழிகெட்டுப்போனான். இதற்கு முழு குற்றமும் சைத்தானையே சாரும். இறைவன் சைத்தானின் வழிகேட்டை வெளிரங்கமாக்கினான். அதனையே சைத்தான் குறிப்பிட்டான் . அப்போதும் அவன் திருந்தவில்லை!!

இவ்வாறு இறைவனை மனிதனுக்கு நலன்விரும்பியாகவும் சைத்தானையோ மனிதனது எதிரியாகவும் குர்ஆன் சரியாக அடையாளப்படுத்துகிறது.)

பைபிளில்

-ஏதேன் தோட்டத்தில் மனித பாசை பேசும் தந்திரமான பாம்பை உள்ளே விட்டார் (ஆதி 3:1-4),  ஆனால் மனிதனையோ அம்மணமாக ஆடையின்றி விட்டார் (ஆதி 2:25)

 பாம்பு நன்மை தீமை அறியும் பழத்தை சாப்பிட வைத்ததால் , அவர்கள் அம்மணமாக இருப்பதை அறிந்து கொண்டதோடு (ஆதி 3:7), நன்மை தீமை அறிந்து தேவனை போல (நம்மில் ஒருவர்) ஆகிவிட்டான் என கர்த்தரே வாக்குமூலம் கொடுக்கிறார் (ஆதி 3:22)

அத்தோடு மனிதன் நிலை வாழ்வை பெற்றுவிட கூடாது என்பதற்காகவே அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி கெரூபீனை காவலுக்கு வைத்தார் (ஆதி 3:22-24)

 (அதாவது பாம்பு மனிதனுக்கு நலவை விரும்புகிறது. ஆனால் பைபிள் அதை வில்லன் என்கிறது. தேவனோ மனிதனுக்கு நலவு நடக்க கூடாது என்பதற்காக நன்மை தீமை அறியாதவனாக படைத்து, அம்மணமாக ஆடையில்லாமல் விட்டு, நன்மை தீமை அறிந்து தன்னை போல ஆகிவிட்டதால், அவன் நிலை வாழ்வை பெற்றுவிட கூடாது என்ற எண்ணமுடையவர். அவரை ஹீரோ என்கிறது. பிறகு எப்படி இது வழிகாட்டும் வேதமாகும்?)

அதைவிட முக்கியமாக, பாவத்திற்கு காரணமான சாத்தானை அழித்துப் போடுவதை விட்டுவிட்டு, அவனையே உசுப்பேத்தி யோபுவை கவனித்தாயா என்றெல்லாம் கேட்டு கெடுதல் செய்வித்து சாத்தான் ஏவியதையே செய்வித்தார் (யோபு 1:6-7&2:1-6) என்பதோடு, இத்தகையவனை இன்றும் விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் தன் மகனை பலி கொடுக்கிறார் (ரோமர் 8:3, எபேசியர் 5:2, 1யோவான்4:10)

இவருக்கு முன்னறிவு இருந்தால், முதல் மனிதனை படைத்து பாம்பை உள்ளே விட்டால், தன் மகனை கொல்லாமல் அவரால் மன்னிக்க முடியாது என்று அவருக்கு தெரிந்திருக்கும் அல்லவா?  அப்படி தெரிந்துகொண்டே படைத்தால், தன் மகனை நரபலி கொடுப்பதற்காக மனிதனை படைத்தார் என்று தெளிவாகிவிடும்.

இப்படி தன் மகனை பலி கொடுப்பதற்காக மனிதனை படைத்தார் என சுட்டிக்காட்டும் பைபிள் எப்படி கடவுளின் வார்த்தையாக இருக்க முடியும்?

இதனால் பவுல் தேவனது பைத்தியம் மனித ஞானத்திலும் சுமார் என்கிறார் (1 கொரிந்தியர் 1:25)

ஆனால் நாம் தீர்க்கமாக ஆராய்ந்தால் , பவுல் சித்தரிக்கும் தேவஞானமே சுமார் தான் என புரியும்.

(ஜீவனில்லாத சட்டங்களை கொடுத்ததே தேவன் தான் என்கிறது பைபிள் -எசேக்கியேல் 20:25..... ஜீவனற்ற கட்டளைகள் வழிகாட்டுமா?)

முதல் மனிதனை பாவம் செய்வான் என அறிந்தே படைத்தால் தன் மகனை கொல்லாமல் மன்னிக்க முடியாது என்பதையும் சேர்த்து பார்த்தால், தன் மகனை கொல்லுவதற்காக மனிதனை படைத்ததாக ஆகிவிடும். இதுவே பைபிள் சித்தரிக்கும் விதம்.  அதாவது கடவுளையே ஒருவித மெண்டலாக புதிய ஏற்பாடு சித்தரிக்கிறது.- கடவுளை மெண்டலாக சித்தரிப்பது இறைவனிடமிருந்து வந்ததாக இருக்குமா?

2.முஸ்லிம்களிடம் விதி என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் சுவர்க்கம் போவீர்களா என கேட்டாலும், இறைவன் நாடினால் போவோம் என்று தான் கூறுகிறார்கள். அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை. ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ உறுதியான நம்பிக்கை உண்டு என்கிறார் போதகர்.

-இறைவன் சர்வஞானி. நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து அதை தான் விதித்தான்.

-எல்லா பாவிகளும் தம் பாவங்களை ஏற்றுக்கொண்டே நரகம் போவார்கள் (67:8-11)

-பொதுவாக இறை நம்பிக்கை வைத்து, நற்செயல் செய்வோர் சுவர்க்கமே போவர் (2:25,82,& 3:15....) கடுகளவு இறைநம்பிக்கையுள்ளவனும் தன் பாவத்திற்கேற்ப தண்டனை அனுபவித்த பின்பு சுவர்க்கம் போவான் (புகாரி 22)

-நான் சுவர்க்கம் போவேன் என மார்க்க அறிவுள்ள எந்த முஸ்லிமும் சொல்லாததற்கு காரணம், அப்படி சொல்வது "தன்னை தானே பரிசுத்தவான்" என்றும் "எதிர்கால ஞானம் தனக்கு உண்டு" என்றும் வாதிடும் தற்பெருமைக்குரிய  செயலாக இருப்பதால் தான். ஏனெனில் இறைவன் நேரடியாக அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். அதனால் தான் பணிவாக முஸ்லிம்கள் பதிலளிக்கிறார்கள். இறைவன் அறிவித்துக் கொடுத்தபடி இறைவனுடைய கருணையால் (புகாரி 5673) முகம்மது நபி தான் முதலில் சுவர்க்கம் நுழைவார் (முஸ்லிம் 333  (197))

பைபிளில்

-கிறிஸ்தவர்கள் தமக்குள்ள அறியாமையால் தான் தமக்கு பரலோகம் உறுதி என கூறுகிறார்கள்.

ஆனால் பைபிளிலே , தெரிந்தெடுக்கப்பட்டவர்களும் கெட்டுப் போவார்கள் என தெளிவாக உள்ளது. உதாரணமாக யூதாஸ். அவனை இயேசு தேர்ந்தெடுத்தார். ஆனால் அவன் கெட்டுப்போனான்

இப்படி கெட்டுப் போவார்கள் என்று ஆவியானவர் சொல்கிறார் என பவுலே சொல்கிறார் - 1 தீமோத்தேயு 4:1

ஆக இவர்கள் அறியாமையாலும் தற்பெருமையாலும் வாதிடுவதே இவர்களிடம் பரிசுத்த ஆவி கிடையாது என்பதற்கு ஆதாரம்.

அத்தோடு தேவனே இஸ்ரவேலரை குழந்தை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுக்கிறார் -எசேக்கியேல் 20:26

 

முஸ்லிம்கள் தற்பெருமை ,சுய பரிசுத்த வாதம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு இறைவனை பரிசுத்தப்படுத்தும்விதமாக பணிவாக கூறுவது குர்ஆன் வழிகாட்டல் சிறப்பாக உள்ளது என்பதை காட்டுகிறது. ஆனால் தம்மிடம் பரிசுத்த ஆவி உள்ளது என நம்பும் மடையர்களோ தமக்கு எதிர்கால அறிவு இருப்பதாக நம்பிக்கொண்டு பைபிளையும் படிக்காமல் வாதம் வைத்துள்ளார்கள்.

3.பைபிள் 40 இற்கு மேற்பட்ட நபர்கள் 1400 வருட கால இடைவெளியில் எழுதினார்கள் என்றும் அதிலே முரண்பாடு இல்லாதிருத்தல் இது இறைவேதம் என்பதற்கு ஆதாரம் என்கிறார் போதகர்

குர்ஆன் 23 வருடகாலமாக இறங்கியதோடு, நபிகளாருக்கு வஹீ (இறைச்செய்தி) வருவதை அவரது தோழர்கள் கண்டும் உணர்ந்தும் இருக்கிறார்கள் (புகாரி 2,2661,4141,4750, முஸ்லிம் 4658 (2333a),முஸ்னத் அஹ்மத் 24868, புகாரி 2832,4592, முஸ்லிம் 4660 (2334)

அத்தோடு முகம்மது நபி பொய்யரோ பைத்தியமோ சாத்தானால் பீடிக்கப்பட்டவரோ அல்ல என்பதற்கு அநேக  ஆதாரங்கள் இருந்தாலும், சிலை வணக்கத்தை எதிர்த்து ஒழுக்கக்கேடுகளை எதிர்த்து நடந்ததும், மக்கள் மத்தியில் தனக்கு சார்பான பிழையான தகவல்கள் பரவும் போது கூட சுட்டிக்காட்டியமையும் சிறந்த உதாரணம்.

உதாரணமாக நபியின் மகன் மரணித்த நாளில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது. மக்கள் நபியின் மகனின் மரணத்திற்காக சூரியக் கிரகணம் ஏற்பட்டது என்று பேசிக்கொண்டனர். இத்தகைய துக்கமான நிலையில் கூட முகம்மது நபி, சூரியக் கிரகணம் யாரினதும் பிறப்புக்கோ இறப்புக்கோ ஏற்படுவதில்லை என்று தெளிவாக கூறினார்கள் (புகாரி 1043,1060,1063)

-அத்தோடு குர்ஆனை புத்தகமாக தொகுக்கும்போது கூட ஒவ்வொரு வசனத்திற்கும் நபியிடம் நேரடியாக கேட்டு மனனம் செய்த எழுதிவைத்த  சாட்சிகள் மூலமாக பெற்றே தொகுக்கப்பட்டன (புகாரி 7191)

பைபிளில்

-பைபிளை யாரென்றே தெரியாத மக்கள் எழுதியவை ஆகும். அதிலே உண்மை பொய் என அனைத்தும் கலந்தே உள்ளன.

உதாரணமாக மோசே எழுதியதாக கூறும் உபாகமம் 34 மோசே மரணித்தார் அடக்கம் பண்ணப்பட்டார் என்றெல்லாம் கூறுகிறது. மோசேக்கு பின் யோசுவா காலத்தில் உருவான தாண் எனும் பெயரிடப்பட்ட ஊரை ஆதியாகமம் 14:14 கூறுகிறது. இது மோசே எழுதாமல் பிற்காலத்தில் யாரோ "தாண்" என பெயரிடப்பட்ட பின் எழுதியுள்ளனர் என்பதற்கு சான்று.

அத்தோடு மோசே வாக்களிக்கப்பட்ட தேசத்தினுள் நுழையாமல் மரணிக்க காரணம், அவர் தேவனை விசுவாசிக்காமல் போனதும் பரிசுத்தம் செய்யாததும் தான் என எண்ணாகமம் 20:12, உபாகமமம் 32:50-52 கூறுகிறது. ஆனால் இஸ்ரவேலர் எமோரியரை துரத்த பயப்பட்டதாலும் இஸ்ரவேலரின் நிமித்தம் தன் மீது கோபப்பட்ட தேவன் அவ்வாறு ஆக்கினார் என மோசே கூறுவதாக உபாகமம் 1:36-37 உள்ளது

ஒன்றொன்று முரண்பாடுகள் கூடியதாகவும் உள்ளன

உதாரணமாக கடவுளை பற்றியே முரண்படுகிறது.

கடவுள் மனஸ்தாபப்பட மாட்டார் மனம் மாற மாட்டார் என 1 சாமுவேல் 15:29 எண்ணாகமம் 23:19 சொல்கிறது. ஆனால் கர்த்தர் மனஸ்தாபப்படுவார் மனம் மாறுவார் என எரேமியா 18:8-10 கூறுகிறது

இப்படி நிறைய விசயங்களை சொல்லலாம்!

 

யாரென்றே தெரியாதவர்கள் முந்தைய தீர்க்கதரிசியின் பெயரால் அவர் எழுதுவது போல் இவர்களாக எழுதியுள்ளனர்.  ஆனால் குர்ஆனையோ நபியின் தோழர்கள் நேரடியாக கேட்டு எழுதியவை. அத்தோடு மனனத்தாலும் பாதுகாக்கப்பட்டது. இன்றும் முழு குர்ஆனையும் மனனமிட்ட மில்லியன் கணக்கானோர் உள்ளனர்.

4.பைபிள் உண்மை என்பதற்கு ஆதாரம் அதிலுள்ள கதைகள் தொல்லியளாளர்களால் நிரூபிக்கப்பட்டது என்கிறார் போதகர். இதேபோல் விஞ்ஞானிகளும் இதை வைத்து கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர் என்கிறார்.

பைபிளிலோ உலகம் பூராவும் வெள்ளம் நோவா காலத்தில் ஏற்பட்டு வெறும் 8 நபர்களும் சில ஜோடி மிருகங்களும் எஞ்சியிருந்தனர் என்கிறது பைபிள் (2 பேதுரு 2:5, ஆதி 7:1,7)

பைபிள் பிரகாரம் இந்த வெள்ளம் கி.மு 2458 அளவில் ஏற்பட்டது

வெள்ளத்திலிருந்து ஆபிரகாமுக்கு 292 வருடங்கள் (ஆதி 11:10-32), ஆபிரகாம் 100 வயதில் ஈசாக்கை பெற்றார் (ஆதி 21:5), ஈசாக்கு 60 வயதில் யாக்கோபை பெற்றார் (ஆதி 25:26), யாக்கோபு எனும் இஸ்ரவேல் 130 வயதில் எகிப்துக்கு போய் தங்கினார் (ஆதி 47:9), இஸ்ரவேலர் எகிப்தில் 430 வருடம் தங்கினர் (யாத்திராகமம் 12:40) இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு 480ம் வருடம் சாலமோன் ராஜாவாகிய நான்காவது வருடம் (1 இராஜாக்கள் 6:1), சாலமோன் ராஜாவானது கி.மு 970. ஆக கூட்டிக்கழிச்சால் இந்த வெள்ளம் ஏற்பட்டது கிமு 2458 என்று வரும்.

ஆனால் இக்காலகட்டத்தில் எகிப்திய old kingdom அரசுகள் தொடர்ந்து இருந்துள்ளன என்பது வரலாறு. இங்கே பைபிள் தொல்லியல் ரீதியில் பொய்யாகவே உள்ளது

 

பைபிளில் கூறப்பட்ட அநேக கதைகளை பைபிளை விட துல்லியமாக குர்ஆன் கூறுகிறது.

உதாரணமாக ஆபிரகாம் யோசேப்பு காலத்தில் கூட இருந்த எகிப்திய ராஜாவை பார்வோன் என பைபிள் சொல்கிறது (ஆதி 12:15,17& 37:36). ஆனால் New Kingdom காலமான கி.மு. 1550-1077 இலும் அதன் பின்புமே பார்வோன் என்ற பெயர் ராஜாவுக்கு பாவிக்கப்பட்டது.  ஆனால் குர்ஆனும் முகம்மது நபியும் மூஸா நபி காலத்து எகிப்திய ராஜாவை ஃபிர்அவ்ன் என்றும்  (2:49-50...)யோசேப்பு மற்றும் ஆபிரகாம் கால எகிப்திய ராஜாவை "அல்மலிக்-The King- ராஜா" என்று அழைக்கிறார்கள் (குர்ஆன் 12:43,50,54...)

(ஆபிரகாம் கி.மு. 2166-1991. யோசேப்பு காலம் கி.மு. 1876 அளவானது... அக்காலத்தில் எகிப்திய ராஜா பார்வோன் என அழைக்கப்பட்டதில்லை!

ஆக குர்ஆன் தான் இதனுடன் ஒத்துப் போகிறது.

 

பைபிள் தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது என்பது பச்சைப் பொய் ஆகும்.

5.முஸ்லிம் தரப்பு வாதம்- பைபிள் இறைவேதம் அல்ல என்பதற்கான சான்றுகள்

-போதகர் வாயினாலேயே 1400 கால இடைவெளியில் 40 இற்கு மேற்பட்ட மனிதர்கள் எழுதியதே பைபிள் என கூறியமை மனிதர்கள் எழுதிக்கொண்டது தான் இது என்பதற்கு ஓர் ஆதாரம்

-லூக்கா சுவிசேஷத்தை எழுதியவர் கூட , நான் தேடி விசாரித்து எழுதினேன் என்கிறார் (லூக்கா 1:3) இது ஆவி தூண்டி எழுதியதோ கடவுளின் வார்த்தையோ அல்ல என தெளிவு

-யோவான் எழுதும்போது , இயேசு அநேக காரியங்களை செய்தார் என்றும் அதை எழுதினால் புத்தகம் வைப்பதற்கு உலகம் தாங்காது என்கிறார்-(யோவான் 21:25). இறைவனுடைய வேதத்தை எழுதுவதாக இருந்தால் இவருக்கு இஷ்டமானதை எழுதி அநேகமானவற்றை விட்டுவிட முடியுமா? ஆக இதுவும் அவராக தன் இஷ்டப்படி எழுதியது தான்

-பவுலோ, கர்த்தர் அல்ல நானே சொல்கிறேன் என்றெல்லாம் எழுதியுள்ளார்-(1 கொரிந்தியர் 7:12) இது கடவுளின் வார்த்தை என்றால் அதிலே இவர் எப்படி தன் சொந்த அபிப்பிராயத்தை சொல்ல முடியும்?

-பைபிள் குறிப்பிடும்   அநேக புத்தகங்கள் பைபிளிலேயே இல்லை (கர்த்தரின் யுத்த புத்தகம்-(எண்21:14), யாசேரின் புத்தகம் (யோசுவா 10:13) நாத்தான் தீர்க்கதரிசியின் புத்தகம் (1நாள்29:29) , காத் தீர்க்கதரிசி புத்தகம் (1நாள் 29:29), என்பதும் பைபிளிலே 1600 வருடமாக இருந்த 4500+ வசனங்கள் கொண்ட ஆறு புத்தகங்களை நீக்கிவிட்டதும் அவர்களாக தமக்கு விருப்பமானதை சேர்ப்பதும் நீக்குவதும் செய்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது

ஆக பைபிளை எழுதியவர்களே இது இறைவேதம் அல்ல.. நாங்கள் தான் எழுதிக் கொள்கிறோம் என வாக்குமூலம் கொடுக்கின்றனர்.

பைபிளை எழுதியவர்களே இது நாங்களாக எழுதிக் கொள்வது சாட்சி பகர்கின்றனர்.  மத்தேயு மற்றும் மாற்கை தவிர மற்ற எல்லா புத்தகமும் நாங்களாக இந்த நோக்கத்திற்காக இவர்களுக்காக எழுதியது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் [ (லூக்கா 1:1-3, ; யோவான் 21:24-25, 20:30-31; அப்போஸ்தலர் 1:1-2; ரோமர் 1:1-2&16:1-26;   1கொரிந்தியர் 1:1-2 (கர்த்தர் சொல்லாததையும் சொல்வேன் 7:12) (நான் வருமுன்னே துட்டு சேர்த்துவிடுங்கள் 16:1-2)16:19-21;  2கொரிந்தியர் 1:1 ; கலாத்தியர் 1:1-2& ;  எபேசியர் 1:1&6:21-22 ; பிலிப்பியர் 1:1 &4:10-22; கொலோசெயர் 1:1-2&4:7-18 ; 1தெசலோனிக்கேயர் 1:1&5:27; 2தெசலோனிக்கேயர் 1:1&3:11-18;  1தீமோத்தேயு 1:1-2 ; 2தீமோத்தேயு 1:1-2 &4:9-22 ;  தீத்து 1:1 &3:12-15;  பிலோமோன் 1:1-25 (முழு புத்தகமும்); எபிரேயர் 13:22-25;  யாக்கோபு 1:1; 1பேதுரு 1:1-2& 5:12-14 ; 2பேதுரு 1:1; 1யோவான் 1:1; 2யோவான் 1:1-5,12-13 (இன்னும் நிறைய எழுத இருக்கிறாராம். நேரடியாகவே வந்து பேசுறாராம்);  3யோவான் 1:1-14 (இன்னும் நிறைய எழுத இருக்கிறதாம். நேரடியாகவே பேசிக்கொள்வோம் என்கிறார்);  யூதா 1:1 ; வெளி 1:4-6]

இப்படி அவர்களாக இது நாம் தான் கடிதமாக எழுதுறோம் என சொன்ன பின்னால் இது இறைவேதம் என்றால் எப்படி?

6.பைபிள் ஆவியானவர் தூண்டி எழுதினர் என்றும், லூக்கா தான்  உறுதியாக நம்பியதை விசாரித்து எழுதினார் என்றும் மத்தேயு பவுல் எழுதினார் என்றால் அவர்கள் மூலமாக கொடுக்கப்பட்ட இறைவார்த்தை என்று போதகர் கதைவிடுகிறார்

குர்ஆன் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது (76:23,17:106,20:4,26:192,32:2,39:1,41:2...)என்றும் அதை பரிசுத்த ஆவி/ஜிப்ரீல் இறக்கி வைத்தார் (16:102, 2:97)

பைபிளில் எங்கேயும் இவர்கள் தாம் ஆவி தூண்டி எழுதியதாக சொல்லவேயில்லை

பவுல் கூட வேதவாக்கியங்கள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதியதாக சொல்வது கூட பழைய ஏற்பாட்டை தான். ஏனெனில் அப்போது எந்த புதிய ஏற்பாட்டு நூலும் இருக்கவில்லை!

மத்தேயு பழைய ஏற்பாட்டை எப்படி திரிக்கிறார் என பார்த்தாலே இது ஆவியானவர் வேலையல்ல என புரிந்துவிடும்.

உதாரணமாக இஸ்ரவேலரை எகிப்திலிருந்து கொண்டு வந்ததை (ஓசியா 11:1) கூறுவதை இயேசுவை மரியாளும் யோசேப்பும் எகிப்துக்கு கூட்டிக்கொண்டு போய் திரும்ப கொண்டுவருவதை குறிக்கும் என்கிறார் (மத்தேயு 2:14-15), பாபிலோனியர்களால் எப்ராயீமியர் (இஸ்ரவேலர்) பிடித்துகொண்டு போகப்படுவதை குறித்து ராகேல் கதறுகிறாள் ராமாவில் புலம்பல் கேட்கப்பட்டது என்பதாக எரேமியா 31:15-17 சொல்வதை சம்பந்தமே இல்லாமல் ஏரோது பெத்லகேமில் யூத குழந்தைகளை கொன்றதை குறிப்பதாக உருட்டுகிறார். அதற்கும் ராக்கேலுக்கும் ராமாவுக்கும் சம்மந்தமே இல்லை!

இதிலே ஆவியானவர் தூண்டிய லட்சனத்தை முதலாம் அதிகாரத்திலேயே காணலாம். இயேசு தாவீதின் மகன் என நிரூபிப்பதாக கூறி யோசேப்புக்கு வம்ச வரலாற்றை எழுதி வைத்துள்ளார் (மத்தேயு 1:1-16) அதையும் தப்பு தப்பாக எழுதி யோராம் தன் பேரனின் பேரனான உசியாவை (அசரியா ) பெற்றெடுத்ததாக கதை விடுகிறார் (மத்1:8). யோசியா தன் பேரனான எக்கொனியாவை பெற்றெடுத்ததாக கதை விடுகிறார் (மத் 1:11). இவை அனைத்தையும் தப்பு தப்பாக கூறிவிட்டு யாரும் தப்பாக புரியாதபடிக்கு ஆபிரகாமிலிருந்து தாவீதுக்கு 14 தலைமுறை, தாவீதிலிருந்து பாபிலோன் சிறையிருப்பு வரை 14 தலைமுறை , பாபிலோன் சிறையிருப்பு முதல் இயேசுவரை 14 தலைமுறை என்றும் கதை விடுகிறார். (மத்தேயு 1:17)  ஆனால் தாவீதிலிருந்து எக்கொனியா வரை 18 தலைமுறையினர் உள்ளனர் (1 நாளாகமம் 3:10-17). இப்படி இருக்குற புத்தகத்தையே தப்பு தப்பாக எழுத ஆவியானவரால் தான் முடியுமா?

அத்தோடு பவுல்  அவரே ஒப்புக்கொள்கிறார் தன் கையால் கிறிஸ்தவ சபைகளுக்கும் தீமோத்தேயு தீத்து போன்ற தன் சீடர்களுக்கும் பிலோமோன் போன்ற ரசிகருக்கும் எழுதும் கடிதங்கள் என்று அவரே அறிமுகப்படுத்தியே எழுதுகிறார் அவற்றை முஸ்லிம் தரப்பு வாதத்தின் கீழே வசன எண்களை குறிப்பிட்டுள்ளேன்.

ஆக இவர்கள் சொல்வது முற்றிலும் சுத்தமான உருட்டு.  

பவுல் மத்தேயு உட்பட அனைவரும் தம் மனதுக்கு சரியென்று பட்டதையே எழுதியுள்ளனர். எவரும் இது தேவனால் எழுதுமாறு எனக்கு வெளிபப்படுத்தப்பட்டதை எழுதுவதாக எவரும் சொல்லவேயில்லை!  அனைவரும் தாம் சபைகளுக்கு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களேயாகும் (மாற்கு மத்தேயுவை தவிர) ஆக அதை இறைவேதம் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.

7.பவுல் தான் கர்த்தரின் கட்டளை இல்லாமல் சுயமாக பேசுகிறேன் (1 கொரிந்தியர் 7:12) என சொன்னது இறைவேதம் என்பதற்கு ஆதாரம் என்கிறார்.

பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது கடவுளின் கட்டளை இல்லாமல் சுயமாக என் சொந்த கருத்தை சொல்கிறேன் என்றும் என்னிடம் பரிசுத்த ஆவி இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்றும் ஒப்புக் கொள்வது வெறுமனே யூகத்தின் அடிப்படையில் எழுதும் கடிதங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இறைவேதம் அல்ல!

8.ஆயிஷா () அவர்களை திருமணம் முடிக்க போனபோது அபூபக்ர், நீங்கள் என் சகோதரராயிற்றே என்று சொன்னபோது ஒரு வஹீ வந்தது என கதைவிடுகிறார்

மார்க்கத்தில் சகோதரராக இருப்பதாலும், சொந்த சகோதரனின் மகளை திருமணம் முடிக்க முடியாது என்பதாலும் அபூபக்ர் அவ்வாறு சொன்னார். நபிகளார் மார்க்கரீதியிலான சகோதர்த்துவம் இரத்த சகோதரத்துவம் அல்ல என்பதால் ஆயிஷா எனக்கு ஆகுமானவள் தான் என தெளிவு படுத்தினார்கள். (புகாரி 5081)

இதிலே வஹீ வந்தது என்பது மாமாவின் உருட்டு.

 

-நபிகளாருக்கு அன்னை ஆயிஷா திருமணம் பேசப்படும் முன்பே முத்யிம் இப்னு அதீ என்பவருடைய மகனுக்கு பேசப்பட்டிருந்தார்-- அத்தகைய திருமணப்பேச்சு செய்த காலத்தில் தான் நபிகளார் திருமணம் பேசினார்கள் (முஸ்னத் அஹ்மத் 25769)

-அக்காலத்தில் 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் இருந்தனர் (புகாரி 2664 இன் தலைப்பு)

-ஆயிஷா () அவர்களை 6 வயதில் திருமணம் செய்து ஒன்பதாம் வயதில் தான் நபிகளாரின் வீட்டுக்கு வந்து தாம்பத்யம் நிகழ்ந்தது(புகாரி 5133,5158)

-குடும்பவாழ்வுக்கு ஏற்ற உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் (அபுதாவுத் 3903, இப்னுமாஜா 3324

-அவரை அவரது தாய் அலங்கரிக்க அனுப்பிய போது அலங்கரித்த பெண்களும் வாழ்த்து கூறினார்கள் (புகாரி 5156). காரணம் அவர்குடும்பவாழ்வுக்கு தகுதியாக இருந்ததால் தான்.

-இதனால் அன்னை ஆயிஷா () பாதிக்கப்படவோ உரிமைகள் பறிக்கப்படவோ இல்லை... மாறாக அதன் பின்பும் தன் தோழியருடன் விளையாடுபவர் ஆக விடப்பட்டார் (புகாரி 6130), விரும்பும் அளவுக்கு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236), அவருடன் ஓட்டப்பந்தயம்த்தில் ஈடுபடும் அளவுக்கு நபிகளார் வயதிற்கேற்ப நடந்தார்கள்- அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979. அத்தோடு அவரையோ வேறு மனைவியையோ நபிகளார் அடித்ததேயில்லை என கூறுபவரும் அன்னை ஆயிஷா தான் (அபூதாவூத் 4786, இப்னுமாஜா 1984). அத்தோடு நபிகளாரை விட தன் இச்சையை கட்டுப்படுத்த வேறு யாராலும் முடியாது என்று கூறும் அளவுக்கு நபிகளார் நடந்தார்கள் (புகாரி 302,1927)

-ஆயிஷா () அவர்கள் நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவும் அவர் விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா அவர்களே இருந்தார்கள் (புகாரி 4789,6024,6030,6004)

ஆக இப்படி அன்னை ஆயிஷா அவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ அக்கால மக்களுக்கோ இதில் பிரச்சினை இல்லாதபோது ஏன் இவர்கள் கதற வேண்டும்?

அத்தோடு இளவயது திருமணங்கள் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றே:

. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.

https://cyh.rrchnm.org/primary-sources/24.html#:~:text=By%201880%2C%20the%20first%20date,of%2012%20or%2013%20years  

.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது

https://www.asahi.com/sp/ajw/articles/14934890 

.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்

https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent 

ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?

-கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (புகாரி 5136,6946,6948)

சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.

பைபிளில் தான் சொந்த மகளை விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது யாத்திராகமம் 21:7-10

பைபிளில் எங்கேயும் எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை. மாறாக சொந்த மகளையே விற்பனை செய்வதை கூட கர்த்தர் ஆதரித்துள்ளார்-யாத்திராகமம் 21:7-10

-பைபிளிலே ஆகாஸ் ராஜா 11 வயதிலேயே அப்பாவாக ஆகியுள்ளார். அவன் 36 வயதில் இறந்தார் (2 இராஜாக்கள் 16:2), அவன் மரணித்த பின் அவனது மகன் எசேக்கியா ராஜாவானான் (2 இராஜாக்கள் 16:20) அப்போது அவனின் வயது 25 (2 இராஜாக்கள் 18:2). 

(உடனே அவன் கெட்டவன் என்று கதைவிட கூடாது. இப்படி திருமண வயது எதுவும் இருக்கவில்லை என்பதற்கு ஆதாரமே இது)

-ரிஃப்கா பாட்டியை ஈசாக்கு தாத்தா முடித்த போது அவரது வயது 3 என யூத அறிஞர் ராசி ஆதியாகமம் 25:20இற்கு விளக்கம் கூறுகிறார்.(https://www.sefaria.org/Rashi_on_Genesis.25.20.2?lang=en  ) இது இன்றும் யூதர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே

-9வயது ஆண் பிள்ளையும், மூன்றுவயது பெண்குழந்தை உடலுறவுக்கு தகுதியானவர்கள் என தல்மூத் கூறுகிறது (avodah zarah 37a :1-2 (https://www.sefaria.org/Avodah_Zarah.37a.1?lang=en  )

-அத்தோடு மரியாள் கர்ப்பமானது 12-14 வயதிலே என கத்தோலிக்க என்சைக்லோபீடியா கூறுகிறது https://www.newadvent.org/cathen/15464b.htm   (தலைப்பு Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph ))

மல்லாக்கப் படுத்துக் துப்பும் நிலமை தான் இவர்களுடையது.

 

இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா?

9.குர்ஆன் 33:37 மருமகளை திருமணம் முடிக்க ஒரு வஹீ வந்தது என கதைவிடுகிறார் போதகர்.

புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்

 

*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.

*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)

 

இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.

 

*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)

 

இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார்

*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:

 

"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)

 

அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.

 

*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420).

எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?

 

இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.

 

(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.

 

இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)

இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!

*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:

 

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

 

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.

 

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

 

(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :

 

ஆதி 16:5 IRVTam

 

[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராகஎன்றாள்.

 

https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam

 

(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)

 

*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

 

2 சாமு 12:14-15, 24 IRVTam

 

[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.

 

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

 

https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam  

 

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது

 

இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?

 

இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)

 

இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா

 

அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை

மறுமகள் என்பது போதகரின் சொந்த உருட்டு.  மருமகளை திருமணம் முடிக்க முடியாது (குர்ஆன் 4:23).  வளர்ப்பு மகனின் மனைவியை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தால் அதன்பின் அந்த கணவனை வளர்த்த இரத்த ரீதியாகவோ திருமண ரீதியாகவோ பால்குடி ரீதியாகவோ சம்பந்தமே இல்லாதவருக்கு திருமணம் முடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை காட்டவே இந்நிகழ்வு.

இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா?

10.பவுல் பொய் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்றும் இஸ்லாம் தான் நிர்ப்பந்த நிலையில் வாயளவில் மறுத்துக்கொள்ள அனுமதிக்கிறது என்றும் சொல்கிறார்

-பொதுவாக இஸ்லாம் பொய்யை பெரும் பாவமாகவே கருதுகிறது (முஸ்லிம் 144, புகாரி 6919)

-பொய் பேசி பொய்யை பரப்புபவனுக்கு நரகத்தில் வாய் கிழிக்கப்படும் தண்டனை வழங்கப்படுவதை நபிகளார் கண்டார்கள் (புகாரி 7047)

-ஆனால் மார்க்கத்தை விடுமாறு வேதனை செய்வதை தாங்கமுடியாத நிலையில் உள்ளவருக்கு வாயளவில் மார்க்கத்தை மறுத்துக்கொள்ளும் சலுகையை இறைவன் தன் கருணையின் காரணமாக வழங்கியதே குர்ஆன் 16:106 கூறுகிறது

இதை விமர்சிப்பது தற்குரித்தனமும் கயமையுமே ஆகும்.

 

-பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்கின்றார் பவுல் - 2 தெசலோனிக்கேயர் 2:11-12

-பொய் சொல்லும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்து ஆகாபை கொன்றார் (1 இராஜாக்கள் 22:19-23)

-பரிசுத்த ஆவியானவர் தாவீதின் மீது இறங்கிய பின்னர் (1 சாமுவேல் 16:13& சங்கீதம் 51:11), பைத்தியகாரனை போல பொய்யாக நடித்தார் (1 சாமுவேல் 21:13-15), ராஜாவின் மக்களையே கொள்ளையடித்து மக்களை பெண்களோடு சேர்த்து கொன்று யூதர்களை கொள்ளையடித்ததாக பொய் சொன்னார் (1 சாமுவேல் 27:9-12).

இப்படி செய்த தாவீதை உரியாவின் மேட்டரை தவிர வேறு பாவமே செய்யாமல் கர்த்தரின் பார்வையில் சரியாக நடந்தான் என்கிறது 1 இராஜாக்கள் 15:5.

இப்படி பொய் சொல்லி எதிரிகளை ஏமாற்றுவதை தேவனே செய்துள்ளார். தேவனது ஆவியை பெற்ற தாவீதும் செய்துள்ளார். தேவன் இனியும் செய்வார்.

ஆனால் வெளி 21:8 கூறும் பொய்யர்கள் இந்த பொய்யர்கள் அல்ல.. மாற்றுமத பொய்யர்கள். வெளி 2:10 கடவுளை ஏமாற்ற பார்க்காமல் உண்மையாக இருப்பதையே கூறுகிறது. மாற்றுமதத்தவர்களை அல்ல... அதனால் தான் தேவனே வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12

இறைவன் தன் கருணையால் நிர்ப்பந்திக்கப்படும் மனிதனிற்கு வாயளவில் மறுத்துக்கொள்ள அனுமதிக்கிறதால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? கர்த்தரே பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை அனுப்புவதாகவும் பொய் பேசவைப்பதற்கென்றே ஆவியை அனுப்பியதாகவும் பைபிளே சொல்கிறது. இதிலே பொய்யின் பிறப்பிடம் கர்த்தர் என பைபிள் காட்டுகிறதா?

11.முஸ்லிம் தரப்பு வாதம்

பைபிளின் சட்டங்களில் கட்டளைகளில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளதை சுட்டிக்காட்டினர்

பழைய பகைக்காக குழந்தைகள் பெண்கள் மிருகங்களை கொல்ல சொன்னார் (1 சாமுவேல் 15:2-3), தன் எதிரிகளின் குழந்தைகளை கல்லில் மோதியடிக்கிறவன் பாக்கியவான் (சங்கீதம் 137:8-9), மோவாபியருடன் சண்டையில் பட்டயத்தால் இரத்தம் சிந்தாதவன் சபிக்கப்பட்டவன் (எரேமியா 48:10)

பொய் சொல்லும்படி தீர்க்கதரிசிகளிடம் பொய் பேசும் ஆவியை அனுப்பியதே கர்த்தர் தான் என்பதாக 1 இராஜாக்கள் 22:19-23 சொல்கிறது

கர்த்தர் யாக்கோபுடன் மனித வேடத்தில் வந்து அவனை வெல்ல முடியாமல் தொடைச்சந்தை தொட்டார். அத்தோடு தன்னை போவதற்கு விடுமாறும் கேட்கிறார் (ஆதி 32:24-28). இப்படி நொண்டி நொண்டி நடக்கவைத்துவிட்டு போய்விட்டார். இப்படி தான் பைபிள் கடவுளை சித்தரிக்கிறது

12.பைபிள் தான் முதலில் யுத்தம் செய்யும் வழியை காட்டியது என்றும் முதலில் சமாதானம் கூறவேண்டும் என்றும் அதை ஏற்காவிட்டால் யுத்தம் செய்ய வேண்டும் என்றும் பெண்களை குழந்தைகளை கொல்ல கூடாது என்றும் உபாகமம் 20:10-15 கூறுவதாக கூறினார்

போரின்போது கூட பெண்கள் சிறுவர்கள் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்ற வயோதிபர் (முவத்தா மாலிக் பாடம் 21 ஜிகாத் ஹதீஸ் 10) போன்றோரை கொல்லக்கூடாது.

இஸ்லாமிய அரசின் கீழுள்ள ஒப்பந்த பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166)

இஸ்லாமிய அரசின் கீழுள்ள மாற்றுமத மக்களை பாதுகாக்க இஸ்லாமிய அரசு அவர்களுக்காக போரிட வேண்டும். அவர்களால் சுமக்க இயலாத வரியை சுமத்த கூடாது (புகாரி 3052). இந்த ஹதீஸுக்கான தலைப்பே இந்த மக்களுக்காக போரிடுவதும் அடிமைகளாக நடத்தக்கூடாது என்பதுமே.

அத்தகைய மக்களின் உரிமையை பறித்தவருக்கு எதிராக நானே மறுமையில் வழக்காடுவேன் என நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 3052)

இது தானே நல்ல போதனை.

தூரத்திலுள்ள ஜாதிகளுக்கே இவ்வாறு சமாதானம் கூறவேண்டும் என்கிறது. அப்படி சமாதானத்தை ஏற்றுக்கொண்டால் அவர்கள் யூதர்களுக்கு கப்பம் கட்டி சேவகம் செய்யவேண்டும் (உபாகமம் 20:10-12&15). அதாவது அடிமைகளாக வேலைவாங்க வேண்டும் என்பதே கூறப்படுகிறது. இவ்வாறே யோசுவா நபியும் மக்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார் (யோசுவா 9:3-24)

ஆனால் அருகிலுள்ள ஜாதியாரை குறித்தோ , அவர்களை ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் உயிரோடு வைக்காமல் கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார் (உபாகமம் 20:16-18)  அதாவது குழந்தை மிருகம் எதையும் உயிரோடு வைக்காமல் கொல்லுமாறு சொல்கிறார்.

இது தான் வழிகாட்டலா?

400 வருட பகைக்காக, அமலேக்கியரை குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் ஆடுமாடு ஒட்டகம் கழுதை என எதையும் உயிரோடு வைக்காமல் கொல்லுமாறு சொல்கிறார் கர்த்தர் (1 சாமுவேல் 15:2-3)

இவர்களின் குழந்தைக்கொலைவெறி கர்த்தரின் வழிகாட்டல் படியே தொடங்கியது.

இதனாலே பாபிலோனியர்களை பழிவாங்கும் நோக்கில், அவர்களது குழந்தைகளை கல்லில் மோதியடித்து கொல்லுபவன் பாக்கியவான் என்று பாடுகிறார்கள் (சங்கீதம் 137:9). வேடிக்கையாக இப்படி இஸ்ரவேலருக்கு பாபிலோனியரை வைத்து செய்விப்பதே கர்த்தர் தான். அது அவர்களின் பாவ தண்டனை (ஓசியா 13:16)

இப்படி குழந்தைக்கொலைவெறி , ஈவிரக்கமற்ற தன்மையையே குழந்தைகளை கொல்லவும் வழிகாட்டுகிறது பைபிள்.

இது தான் போர் சட்டங்களை போதிக்கும் லட்சனம்.

பைபிள் கூறும் கொலைவெறி சட்டங்கள் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னதே பைபிள் தான். ஆனாலும் இஸ்லாமே குழந்தைகள் பெண்கள் போரிடாத கூலியாட்களை கொல்லக்கூடாது என்கிறது.

இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா

13.பைபிள் மனிதர்கள் ஆவி தூண்டி எழுதியதை வேதமில்லை என்றால் குர்ஆனை அல்லாஹ் தான் எழுதி கொடுத்தாரா என்று கேட்டார்

அல்லாஹ் குர்ஆனை இறக்கி வைத்தான் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது

குர்ஆன் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது (76:23,17:106,20:4,26:192,32:2,39:1,41:2...)

பைபிளை ஆவி தூண்டி எழுதியதாக சொல்வது உருட்டு மட்டுமே..

பைபிளில் அப்படி எதுவும் இல்லை! பழைய ஏற்பாட்டை மட்டுமே பவுல் 2 தீமோத்தேயு 3:16 இலே எழுதுகிறார்.

பைபிளை ஆவி தூண்டி எழுதியதாக சொல்வது  இவர்களின் பொய்யான உருட்டு மட்டுமே. பைபிள் அதற்கு மாற்றமாகவே கூறுகிறது

next part

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1