குர்ஆனா பைபிளா Dr Fazl vs YDM 1

 இந்த விவாதத்தை செய்த டாக்டர் ஃபஸ்லுக்கு இஸ்லாம் பற்றி தெரியாது. Ydm தரப்பிற்கு பைபிள் பற்றி தெரியாது




1.பவுல் பிரசங்கிக்காத சுவிசேஷத்தை வேறு யாராவதோ அல்லது தேவதூதனோ பிரசங்கித்தாலும் அவன் சபிக்கப்பட்டிருப்பானாக என (கலாத்தியர் 1:7-9) கூறியிருப்பதால் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என குர்ஆன் சொல்வதால் (4:157-159) அது தள்ளப்பட்ட தூதனின் சொல்

-பவுலும் குழுவும் பிரசங்கிக்காததை வானத்திலிருந்து வரும் தூதன் பிரசங்கித்தாலும் அவனும் சபிக்கப்பட வேண்டும் என்று சொல்ல என்ன அதிகாரம் உள்ளது?- காரணம் அக்காலத்திலேயே இவர் பிரசங்கிக்காததை பிரசங்கித்த மக்கள் இருந்துள்ளனர். வானலோகத்திலிருந்து வரும் தூதர் சொன்னதாக அத்தகையோர் கூறியிருப்பார்கள். அதனாலேயே இவ்வாறு எழுதுகிறார்

-பவுல் பிரசங்கித்த சுவிசேஷம் என்ன? கடவுளை ஒரு மாபெரும் டுபாக்கூராக புத்தியில்லாத அவசரக்காரனாக ரத்த ஆசை பிடித்து தன் மகனையே பலி கொடுத்தவராக சித்திரிக்கிறது.

அதாவது தேவன் தன் மகனை பாவசரீர சாயலாகவும் பலியாகவும் அனுப்பினார் (ரோமர் 8:3), இயேசு தன்னை தேவனுக்கு பலியாக செலுத்தினார் (எபேசியர் 5:2)  இயேசு  சாபமானார் (கலாத்தியர் 3:13) தேவன் இயேசுவை பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21) , முதல் மனிதனின் மீறுதலால் பாவம் செய்யாதவர்களும் பாவிகளாகி மரணிக்கவேண்டியேற்பட்டது என்றும் இயேசு எனும் ஒரு மனிதனின் கீழ்படிதலால் அநேகர் நீதிமான்களாக ஆகுவார்கள் (ரோமர் 5:12-20) என்றெல்லாம் எழுதியுள்ளார்.

இதன்படி கடவுள் சர்வஞானி எனின் , மனிதனை படைத்தால் அவன் பாவம் செய்வதால் தன்னால் இரத்தமின்றி மன்னிக்க முடியாமல் போகும் (எபிரேயர் 9:22) என்பதையும் அறிந்திருப்பார். அதனால் தன் மகனை தனக்கே நரபலியிடாமல் மன்னிக்க முடியாது என்றும் அறிந்திருப்பார் அல்லவா? அப்படி அறிந்தே படைத்தால், தன் மகனை தனக்கே நரபலி கொடுப்பதற்காகவே மனிதனை படைத்தார் என்பது தெளிவாகும். இப்படி தன் மகனை தனக்கே நரபலி கொடுப்பதற்காக மனிதனை படைத்தார் என்றாலே அவரை சைக்கோவாக காட்டுகிறது. இப்படி கடவுளை ஒரு சைக்கோவாக காட்டும் பவுல் எப்படி இறைவனிடமிருந்துள்ளவராக இருப்பார்?

-அப்போஸ்தலர்களுககு கிடைத்த கண்ணியத்தை தானும் பெற்று தனக்கும் ஒரு பெயர் கிடைக்க,புகழ் கிடைக்க ,தன்னை பின்பற்றும் மக்களை உருவாக்க உழைத்தவரே பவுல் என ஆராய்ந்தால் தெளிவாகும்.

 -குர்ஆன் சிலுவைப் பலி விசயத்தில் , அவ்வாறு இயேசுவுக்கு நிகழவில்லை என்றும், அதுபோன்று வேறொருவரே சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அவரை இறைவன் தன்பக்கம் உயர்த்திக்கொண்டான் (4:157-158) என்று கூறுகிறது.

இஸ்லாம் இவரைப்பற்றி கூறும் விதத்தோடு ஒத்துப் போகும் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக முதல்நூற்றாண்டின் எபியோனிய கிறிஸ்தவர்கள் (யூத-கிறிஸ்தவர்கள்) இருந்தார்கள். அவர்கள் அவரை தெய்வீகமற்றவர் என்றும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் , ஒரு தீர்க்கதரிசி மற்றும் மெசியா என்றும் அவர் சிலுவையில் அறையப்படாமல் அவருக்கு பதிலாக வேறொருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்பினார்கள்.  அவர்கள் பவுலை சரியான மதத்திலிருந்து வெளியேறியவர் என்றும் கருதினார்கள். இவை இரனேயுஸ் (தனது against heresies 1.26.1-2 இலும்) , யூஸிபீயஸ் (சபை வரலாறு Church history3.27இலும்) , எபிஃபானியஸ் (Panarion 30 இலும்) போன்ற சபை பிதாக்களும் குறிப்பிட்டுள்ளனர்.

* பவுல் நம்பும் பிரகாரம் பார்த்தால் பவுலுடைய இச்சிலுவைக்கொள்கை அறிவுக்கு பொருந்தாததாக தெளிவாக புரியும்

உதாரணமாக

1.பாவிக்காக நல்லவனை தேவன் கொலைசெய்ய/தண்டிக்க மாட்டான் (யாத்திராகமம் 32:32-34), மாறாக நீதிமானை மீட்கும்பொருளாக துன்மார்க்கன் தான் இருப்பான் (நீதிமொழிகள் 21:18).

பாவிகளை மன்னிக்க நீதிமானை தண்டித்து ரத்தம் சிந்த வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்தால் , அவரை விட பைத்தியம் வேறு யார்?

2.ஆதிபாவம் உண்மை எனின் அதே பாவம் இயேசுவுக்கு கடத்தப்பட்டிருக்கும். காரணம் அவரும் ஆதாமின் பிள்ளைகளில் ஒருத்திக்கே பிறந்தார். பெண்ணே ஆதாமை பாவம் செய்ய வைத்தாள். பிறகு எப்படி அவர் பலியாக தகுதியாவார்?

3.இயேசுவுக்கு பாவம் கடத்தப்படவில்லை எனின் , மற்றவர்களுக்கும் கடத்தபப்டாமல் ஆக்குவதற்கு இறைவனுக்கு முடியாதா? ஆகவே இது கற்பனை கதையே! இது உண்மை என்றால் மகனை போட்டுத்தள்ள போட்ட இரத்தவெறி என்று தானே அர்த்தம்.

4.பலி யாருக்கு செலுத்தப்படும்? கடவுளுக்கு தானே? (எபேசியர் 5:2) கடவுள் தன் மகனை தனக்கே பலி கொடுக்க வைத்தான் என்றால், கடவுளை இதைவிட பைத்தியம் என்று யாரும் சொல்ல மூடியாது.

5.பைபிள் படி இயேசுவை அவர் தேவதூசனம் சொன்னார் என்றும் அவருடைய பாவத்திற்காக கொல்வதாக கூறியே கொன்றனர் (மத்தேயு 26:65, மாற்கு 14:64, லூக்கா 22:71, யோவான் 19:7).   மரத்தில் தொங்கவிடப்பட்டவன் சபிக்கப்பட்டவன் (உபாகமம் 21:23, கலாத்தியர் 3:13) என்பதால் இயேசு இவ்வாறு சிலுவையில் தொங்கவிடப்பட்டார் என்று பவுல் நம்பியதால், இயேசு  நிரபராதி என்பதால்  , இயேசு தம் பாவத்துக்காக சாபமானார் (கலாத்தியர் 3:13) என்று உருட்டினார்.

இயேசு ஏன் சாக வேண்டும்? சாகாமல் மன்னிக்க முடியாதா என்ற கேள்வி வரும் அல்லவா? (அதாவது சுன்னத் செய்தபோது வந்த ரத்தத்தை வைத்தும் மன்னிக்க முடியும் தானே)

இதனால் எல்லோரையும் பாவியாக ஆக்குவதற்காக ஆதாமுடைய மீறுதலால் எல்லோருக்கும் மரணம் உண்டானது என்றார் (ரோமர் 5:12-14). இந்த மரணத்தை ஜெய்ப்பதற்காக இயேசு மரணித்து உயிர்த்தெழுந்தால் எல்லோரையும் நீதிமானாக ஆக்கலாம் என்றார் (ரோமர் 5:15-19)… உண்மையில் ஆதாம் பழத்தை சாப்பிட முன்பே மரணம் இருந்தது. மரணம் உண்டாகாமல் இருப்பதற்காக ஜீவ மரத்திலிருந்து சாப்பிட்டாலே சாத்தியம் (ஆதி 3:22). அத்தோடு ஆதாம் செய்த பாவத்தால் பைபிளின் படி அறிவு தான் வந்தது (ஆதி 3:22). ஆதாம் செய்த பாவத்துக்காக மற்றவர்களை தண்டித்தால் அது யாருடைய தப்பு? தேவனுடைய தப்பு தானே? அப்படியென்றால் தேவனின் பாவத்துக்கு இயேசுவை தேவன் பலியாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆக தள்ளப்பட்ட தூதனின் சொல்லாக பவுலின் கூற்றும் போதனையும் தான் இருக்க முடியும்

 

2.குர்ஆன் 16:106 நிர்ப்பந்தத்தின்போது உள்ளத்தில் ஈமானுடன் வாயளவில் நிராகரித்தால் குற்றமில்லை என சொல்கிறது. ஆனால் தானியோல் 3:17-18 இலே தானியேல் உயிரச்சுருத்தல் உள்ளபோதும் கர்த்தரை மறுதலித்து சிலையை வணங்கவில்லை என்கிறார். அதனால் குர்ஆன் தள்ளப்பட்ட தூதனின் சொல் என்கிறார். வெளி 2:10 இலே மரணம் வரை உண்மையாகவிரு என்று சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்

-பொதுவாக இஸ்லாம் பொய்யை பெரும் பாவமாகவே கருதுகிறது (முஸ்லிம் 144, புகாரி 6919)

-பொய் பேசி பொய்யை பரப்புபவனுக்கு நரகத்தில் வாய் கிழிக்கப்படும் தண்டனை வழங்கப்படுவதை நபிகளார் கண்டார்கள் (புகாரி 7047)

-ஆனால் மார்க்கத்தை விடுமாறு வேதனை செய்வதை தாங்கமுடியாத நிலையில் உள்ளவருக்கு வாயளவில் மார்க்கத்தை மறுத்துக்கொள்ளும் சலுகையை இறைவன் தன் கருணையின் காரணமாக வழங்கியதே குர்ஆன் 16:106 கூறுகிறது . அதாவது அப்படி நடந்துகொண்டால் இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். அவ்வளவே.

இதை விமர்சிப்பது தற்குரித்தனமும் கயமையுமே ஆகும்.

தானியேல் சிலையை வணங்கினால், சிலைவணக்கத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும்.  ஆனால் சாதாரண பொதுமகன் நிர்ப்பந்திக்கப்படுவதால் வாயளவில் அவர்களிடம் மறுப்பது அது போன்றதல்ல.

பைபிளில் கர்த்தரும் ஆவியும் தாவீதும் எப்படி நடந்தனர்?

-பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்கின்றார் பவுல் - 2 தெசலோனிக்கேயர் 2:11-12

-பொய் சொல்லும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்து ஆகாபை கொன்றார் (1 இராஜாக்கள் 22:19-23)

-பரிசுத்த ஆவியானவர் தாவீதின் மீது இறங்கிய பின்னர் (1 சாமுவேல் 16:13& சங்கீதம் 51:11), பைத்தியகாரனை போல பொய்யாக நடித்தார் (1 சாமுவேல் 21:13-15), ராஜாவின் மக்களையே கொள்ளையடித்து மக்களை பெண்களோடு சேர்த்து கொன்று யூதர்களை கொள்ளையடித்ததாக பொய் சொன்னார் (1 சாமுவேல் 27:9-12).

இப்படி செய்த தாவீதை உரியாவின் மேட்டரை தவிர வேறு பாவமே செய்யாமல் கர்த்தரின் பார்வையில் சரியாக நடந்தான் என்கிறது 1 இராஜாக்கள் 15:5.

இப்படி பொய் சொல்லி எதிரிகளை ஏமாற்றுவதை தேவனே செய்துள்ளார். தேவனது ஆவியை பெற்ற தாவீதும் செய்துள்ளார். தேவன் இனியும் செய்வார்.

ஆனால் வெளி 21:8 கூறும் பொய்யர்கள் இந்த பொய்யர்கள் அல்ல.. மாற்றுமத பொய்யர்கள். வெளி 2:10 கடவுளை ஏமாற்ற பார்க்காமல் உண்மையாக இருப்பதையே கூறுகிறது. மாற்றுமதத்தவர்களை அல்ல... அதனால் தான் தேவனே வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12

 

3.யோவான் 8:44 சாத்தானை பொய்யன் என்றும் பொய்யிற்கு பிதா என்றும் தன் சொந்தத்தில் இருந்து எடுத்து பேசுபவன் என்கிறதாம். ஆனால் குர்ஆன் 8:44 இலே எதிரிகளின் எண்ணிக்கையை குறைவாக காண்பித்தோம் என பொய்க்காட்சியை அல்லாஹ் காட்டினான் என்கிறார்.

யுத்தத்தில் தன் பாதையில் போரிடக்கூடியவர்களுக்கு தைரியமூட்டுவதற்காக இறைவன் அவர்களின் எதிரிகளின் எண்ணிக்கையை குறைவாக காட்டினால் என்ன தவறு?  இப்படி செய்யாவிட்டால் விசுவாசிகள் தைரியமிழந்து பிணங்கிக்கெண்டிருந்திருப்பார்கள் என 8:43 கூறியுள்ளது. அதனால் இதிலே எத்தவறும் இல்லை!

ஆனால் பைபிள் படி கர்த்தர் பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை அனுப்புபவர்:

2 தெசலோனிக்கேயர் 2:11-12 IRVTam

[11] ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, [12] அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

https://bible.com/bible/1899/2th.2.11-12.IRVTam

பொய் பேசும் ஆவியை அனுப்பி பொய் தீர்க்கதரிசனம் செய்ய வைத்தார்

1 இராஜாக்கள் 22:19-23 IRVTam

[19] அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். [20] அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். [21] அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. [22] எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். [23] ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

https://bible.com/bible/1899/1ki.22.19-23.IRVTam

இப்படி பொய்யின் பிதாவாக பைபிள் தேவனே சித்தரிக்கிறது

 

 

4.நரகத்தை மனிதர்கள் ஜின்களை கொண்டு நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு பூர்த்தியாகிவிடும் என 11:119  என சொல்கிறதாம். ஆனால் 1 யோவான் 2:25 நித்தியஜீவனை அளிப்பேன் என வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் 

இறைவனுக்கு தன் படைப்புகளை படைக்க முன்பே அவர்கள் எப்படி நடப்பார்கள் எங்கே செல்வார்கள் என பூரணமாக அறிந்தே படைத்தான்

-அத்தோடு அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40

-நரகத்தில் பாவிகள் தம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்பே நுழைவார்கள் (39:71,40:11,67:11,6:30). அத்தோடு தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40)

-நரகத்திற்கென்றே படைத்திருப்பதென்பது, இறைவனது முன்னறிவினால் அவர்கள் தம் பாவங்களால் நரகத்நிற்கே செல்வார்கள் என அறிந்து படைத்ததாலும், இறைவன் அனுமதியின்றி அவன் ஆற்றல் வழங்காமல் எதையும் யாருக்கும் செய்ய முடியாது என்பதால் மட்டுமே. ஆனாலும் அவனவன் தன் சுய தேர்வின் படியே தன் விருப்பத்தின் படியே பாவம் செய்கிறான். நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம் செய்வதில்லை!

விசுவாசிகளுக்கோ  நல்லதையே  வாக்களிக்கிறான் (குர்ஆன் 4:95,57:10), மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களிக்கிறான் (குர்ஆன் 5:9,48:29),சுவர்க்கத்தை வாக்களிக்கிறான் (குர்ஆன் 9:72), பூமியில் கலீஃபாக்களாக ஆக்குவதாக வாக்களிக்கிறான் (24:55),

அத்தோடு சுவர்க்கம் நரகம் இரண்டும் நிரப்பப்படும் என்றும் வாக்களித்தான் (புகாரி 4850)

ஆக இறைவன் தன் முன்னறிவினால், தம் பாவங்களால் நரகத்திற்கு போகக்கூடிய மனித ஜின்களை கொண்டு நரகம் நிரப்பப்படும் என்பதை  அறிந்தே படைத்தான் என்பதாலே இவ்வாறு கூறப்படுகிறது.

பைபிளின்படி கர்த்தருக்கு பாவிகளை படைக்கும் முன்பே அவர்கள் நரகம் தான் போவார்கள் என்று தெரியாதா? அறிந்துகொண்டே படைத்தார் என்றால் அவர்களை நரகத்திற்காக படைத்தார் என்று தெளிவாகிவிடுமே!

நித்தியஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது விசுவாசிகளுக்கு தானேயன்றி அனைவருக்கும் அல்ல!

விசுவாசிக்காதவர்களை பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை தேவனே அனுப்பி வைப்பார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12),

அத்தோடு இஸ்ரவேலரையே நரபலி கொடுத்து தீட்டுப்படுத்தியவரே தேவன் தான்

எசேக்கியேல் 20:26 IRVTam

[26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.26.IRVTam

அத்தோடு அவிசுவாசிகளுக்கு இயேசுவின் வாக்குத்தத்தம்: அவர்கள் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது-இயேசு உவமையாக பேசியதன் நோக்கம்:

மாற்கு 4:12 IRVTam

[12]  அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறதுஎன்றார்.

https://bible.com/bible/1899/mrk.4.12.IRVTam

இதை வைத்துக்கொண்டு பேசலாமா?

 

5. குர்ஆன் 57:22 இலே எந்த காரியமும் அது நடக்கமுன்பே நம்மிடம் எழுதப்படாமல் இல்லை என்பதை குறிப்பிட்டு உள்ளத்தில் முத்திரையிடுவது காது இருந்தும் கேட்கமாட்டான் என்பதெல்லாம் அல்லாஹ் படைக்கும் போதே தப்பாக படைத்துவிட்டான் என்கிறார். ஆனால் வெளி 22:12 அவனவன் கிரியைக்கு தக்க பலன் அளிக்கப்படும் என்கிறது என்கிறார். அதேபோல் குர்ஆன் 9:51

-அல்லாஹ் சர்வஞானியாக இருப்பதால், முன்பே நடக்கவிருப்பதை அறிவான். அவன் அறிந்ததை விதியாக எழுதினான்.

விசுவாசிக்காமல் இருப்பவனை அவன் விசுவாசிக்காதபோது இருதயத்தில் முத்திரையிடுவான் (6:110, 7:101,10:74). செவிடர்களாக குருடர்களாக ஊமையர்களாக அவர்கள் ஆகும்போது இறைவனும் அவ்வாறே ஆக்கி விடுவான்.  (குர்ஆன் 7:179)

இது அவர்களுக்கான தண்டனை.

அவர்கள் திருத்திக்கொள்ள விரும்பினால் அதையே இறைவன் விரும்புகிறான்

-அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டவும் தெளிவுபடுத்தவும் மன்னிக்கவுமே நாடுகிறான் - குர்ஆன் 4:26-27

26.அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்தவர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

27.மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

(அல்குர்ஆன் : 4:26-27)

 அடியான் மனந்திரும்பி பாவமன்னிப்புத் தேடி மீளும்போது இறைவன் பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை கண்டடையும்போது சந்தோசப்படுவதை விட அதிகம் சந்தோசப்படுகிறான் (புகாரி 6308- 6309)

-பாவிகள் திருந்தி மீளும்போது அவர்களின் பாவங்களையும் நன்மைகளாக்குவான்

68.அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

69.கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவார்

70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 25:68-70)

 

*அத்தோடு மறுமையில் கைசேதப்படுமுன்னே நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கப்படுகிறது (குர்ஆன் 39:54-59

அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40

-நரகம் செல்லும் பாவிகள் தம் பாவங்களை ஒப்புக்கொள்வதோடு (குர்ஆன் 67:11), நாங்கள் தாம் மறுத்தோம் என்றும் தூதர்கள் சொல்வதை நாம் கேட்டு சிந்தித்தித்திருந்தால் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் என்றும் (குர்ஆன் 67:9-10), அநியாயக்காரனாகியவன் மறுமையில், நானும் அத்தூதருடன் நேரான வழியை எடுத்திருக்க கூடாதா? என்னை நல்லுபதேசம் வந்த பின் வழிகெடுத்த  அவனை நண்பனாக எடுத்திருக்காதிருக்க வேண்டாமா?  என புலம்புவான் (குர்ஆன் 25:27-29), அத்தோடு நரகத்தில் முகங்கள் புரட்டப்படும்நாளில் , நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! என் கூறுவார்கள் என்றும் நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (அதிகாரிகளுக்கும்), எங்கள் பெரியவர்களுக்கும் (அறிஞர்கள்/மதகுருக்கள்) கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள் என்றும் கூறுவார்கள் (குர்ஆன் 33:66-67). அத்தோடு தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40)

அனைவரும் தம் செயல்களுக்கேற்ப கூலிகொடுக்கப்படுவார்கள். விசுவாசம் கொண்டு நற்செயல் செய்தவர்களுக்கு நற்கூலி/சுவர்க்கமும் (குர்ஆன் 32:17,46:14,56:24, 10:4, 13:24,16:32...) தீமை செய்து வாழ்ந்தவர்களுக்கு தண்டனையும்/நரகமும் வழங்கப்படும் (குர்ஆன் 41:28, 3:106, 6:30,49,93,124,157; 7:39,16:88 ,8:35, 10:4,8,70,....)

விதியின் நோக்கமே, தவறிப்போனதை குறித்து கைசேதப்படாமல் இருப்பதற்காகவும், இறைவன் கொடுத்த  விசயத்திற்காக கர்வம் கொள்ளாத இருப்பதற்காகவும் தான் (குர்ஆன் 57:23)

பைபிளில் கர்த்தரே இருதயத்தை  விசுவாசிக்காதபடி கடினமாக்கி கண்களை குருடாக்குபவர்:

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

ஜனங்களை வழி தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17)

-தன் ஜனங்களை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தினார்:

எசேக்கியேல் 20:26 IRVTam

[26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.26.IRVTam

 

-தன் மக்களை பகைக்கவும் வஞ்சனையாக நடத்தவும் எதிரிகளின் (எகிப்தியரின் இதயங்களை மாற்றினார்:

சங்கீதம் 105:25 IRVTam

[25] தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

https://bible.com/bible/1899/psa.105.25.IRVTam

-எதிரி ராஜாக்களின் இருதயத்தை கடினமாக்கி அதன்மூலம் குழந்தைகள் பெண்களை கொல்ல வைக்கும்படி வைக்கிறார்:

உபாகமம் 2:30, 32-35 IRVTam

[30] ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார்.

[32] சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான். [33] அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து, [34] அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம். [35] மிருகஜீவன்களையும், நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருட்களையும் மாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.

https://bible.com/bible/1899/deu.2.30-35.IRVTam

இதை வைத்துக்கொண்டு பேசலாமா

 

6.துன்மார்க்கன் திருந்துவதையே நான் விரும்புகிறேன் என எசேக்கியேல் 33:11  என்கிறதாம். ஆனால் குர்ஆன் 7:179 மனிதர்களிலும் ஜின்களிலும் அதிகமானோரை நரகத்திற்கென்றே படைத்திருக்கிறோம் என்கிறது

-இறைவனுக்கு தன் படைப்புகளை படைக்க முன்பே அவர்கள் எப்படி நடப்பார்கள் எங்கே செல்வார்கள் என பூரணமாக அறிந்தே படைத்தான்

-அத்தோடு அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40)

-இந்த வசனத்திலேயே அவர்கள் நரகம் போவதற்கான காரணம், அவர்கள் கண்களிருந்தும் பார்க்காமலும் காதுகளிருந்தும் கேட்காமலும் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காமலும் இருந்ததால் தான் என அவ்வசனமே சொல்கிறது. (7:179)

-நரகத்தில் பாவிகள் தம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்பே நுழைவார்கள் (39:71,40:11,67:11,6:30). அத்தோடு தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40)

-நரகத்திற்கென்றே படைத்திருப்பதென்பது, இறைவனது முன்னறிவினால் அவர்கள் தம் பாவங்களால் நரகத்நிற்கே செல்வார்கள் என அறிந்து படைத்ததாலும், இறைவன் அனுமதியின்றி அவன் ஆற்றல் வழங்காமல் எதையும் யாருக்கும் செய்ய முடியாது என்பதால் மட்டுமே. ஆனாலும் அவனவன் தன் சுய தேர்வின் படியே தன் விருப்பத்தின் படியே பாவம் செய்கிறான். நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம் செய்வதில்லை!

பைபிளில் தேவன் தான் பொய்யை விசுவாசிக்கவேண்டி வஞ்சகத்தையும் அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12).  நியாயமின்றி உத்தமமான யோபுவை நிர்மூலமாக்க சாத்தான் ஏவியதை செய்தவர் (யோபு 2:3).. அத்தோடு தம் பிள்ளைகளை நரபலி கொடுக்க வைத்து வழிகெடுத்தவரும் அவரே(எசேக்கியேல் 20:25-26). ஜனங்களை வழி தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17,) கெடுதியை படைத்தவர் (ஏசாயா 45:7), கெடுதியாக நடந்துகொள்ள வைப்பவர் (சங்கீதம் 105:25) பொல்லாத ஆவியை அனுப்பி ஜனங்களை பாவம் செய்ய வைப்பவர் (1 சாமுவேல் 18:10, 19:9, 1 இராஜாக்கள் 22:18-23) இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

பாலி திருந்துவதும் இறைவனது விருப்பமும்

-அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டவும் தெளிவுபடுத்தவும் மன்னிக்கவுமே நாடுகிறான் - குர்ஆன் 4:26-27

 அடியான் மனந்திரும்பி பாவமன்னிப்புத் தேடி மீளும்போது இறைவன் பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை கண்டடையும்போது சந்தோசப்படுவதை விட அதிகம் சந்தோசப்படுகிறான் (புகாரி 6308- 6309)

-பாவிகள் திருந்தி மீளும்போது அவர்களின் பாவங்களையும் நன்மைகளாக்குவான்

68.அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

69.கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவார்

70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 25:68-70)

 

*அத்தோடு மறுமையில் கைசேதப்படுமுன்னே நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கப்படுகிறது (குர்ஆன் 39:54-59) 

*தமக்கு தாமே அநீதமிழைத்துக்கொண்ட அடியார்கள் இறைவனின் அருளில் நம்பிக்கையிழக்க வேண்டாம் என்றும் சில பாவங்களையும் மன்னித்து விடுவான் என திருத்துவதற்கு அழைக்கிறான் இறைவன் (குர்ஆன் 39:53)

 

 

7.கர்த்தர் மனிதனை செம்மையானவனாக உண்டாக்கினார் அவர்களோ பல உபாயங்களை தேடிக்கொண்டார்கள்ஸ(பிரசங்கி 7:29)

-கர்த்தர் ஆதாம் ஏவாளை நன்மை தீமையை அறியாதோராக அம்மணமாக இருப்பதை கூட தெரியாதவராக படைத்தார் (ஆதி 2:25 & 3:22)

இது தான் செம்மையா?

-இதனால் பாம்பு அவர்களை ஏமாற்றிப்போட்டது (நன்மைதீமை அறிய வழிகாட்டியது) (ஆதி 3:1-4,22)

பாம்பு சொன்னதை கேட்டதால் ,மனிதன் நன்மை தீமை அறிந்துகொண்டு தேவனை போல ஆகிவிட்டான் என தேவனே வாக்குமூலம் கொடுக்கிறார். இதனால் அவன் என்றென்றும் உயிரோடு இருந்துவிட கூடாது என்பதற்காகவே அவனை தோட்டத்திலிருந்து விரட்டினார் (ஆதி 3:22)

ஆனால் பாம்பை குறித்து எச்சரிப்பு வழங்கப்படவுமில்லை. நல்லது கெட்டது அறியாதவர்களாக படைத்து விட்டு பேசும் தந்திரமான பாம்பை உள்ளே விட்டு இதனால் குழந்தை போன்றவர்கள் ஏமாற்றப்படுவது தப்பா? ஏமாற்ற விட்டவரின் தப்பா?

(ஒருவேளை பாம்பு இல்லாவிட்டால் இன்றும் இவர்கள் அம்மணமாக தான் அழைந்து திரிவார்கள். . ஆனால் குர்ஆன் படி அங்கே ஆடை அணிவிக்கப்படிருந்தனர். அதை கழற்றுவதற்காகவும் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்ற வைப்பதற்காககவும் தான் சைத்தான் அவர்களை ஏமாற்றினான். அதுவும் இறைவனால் எதிரி என ஆதமுக்கு அறிவிக்கப்பட்ட பின்னால் (குர்ஆன் 20:117-118 &  7:20,22,27)

*காமெடியான விசயம் என்னவென்றால், கடவுளுக்கு முன்னறிவு உண்டு. ஆதாமை படைத்து பாம்பை உள்ளே விட்டு மேஜிக் மரத்தையும் படைத்த போதே ஆதாம் சாப்பிடுவார் என்பதையும் கடவுள் அறிவார். அப்படி சாப்பிட்டால் பிற்காலத்தில் தன் மகனை தனக்கே பலியிட வேண்டும் என்பதையும் பலியிடாமல் அவரால் மன்னிக்க முடியாது என்பதையும் அவர் அறிவார். அப்படி அறிந்திருந்தே இப்படி படைத்தால், தன் மகனை தனக்கு நரபலியிட்டு இரத்த வெறியை தீர்த்துக் கொள்வதற்காகவே படைத்தார் என தெளிவாக வந்துவிடும்.

இஸ்லாம் என்ன கூறுகிறது

*அனைவரும் இயற்கையான மார்க்கத்திலேயே பிறக்கிறார்கள். அவர்களது பெற்றோர் தான் அவர்களை வழி மாற்றுகிறார்கள் (புகாரி 1385) என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

*ஆதம் வழி தவறாது இருப்பதற்காக, சைத்தானை அடையாளப்படுத்தி இவன் உமக்கும் உம் மனைவிக்கும் எதிரி என்றும் அவன் உங்களை சுவர்க்கத்தில் இருந்து வழிகெடுத்து வெளியேற்றிவிட வேண்டாம் என எச்சரிப்பும் வழங்கினான் (குர்ஆன் 20:117 & 7:22)

*ஆதம் வழி தவறிய போது அவருக்கு பாவமன்னிப்பு கேட்பதையும் கற்றுக்கொடுத்து, அவரை மன்னித்து நல்வழி காட்டினான். அத்தோடு தன்னிடமிருந்து நேர்வழி வரும் என்றும் அதை பின்பற்றுவோர் வழிதவற மாட்டார் என்றும் அதை மறுப்போர் நரகம் புகுவர் என எச்சரித்தான்(குர்ஆன் 2:37-39 & 20:122-124)

இதை படிப்பினையாக கொண்டு, ஆதமுடைய பிள்ளைகளை நோக்கி, உங்கள் பெற்றோரை சைத்தான் ஏமாற்றி சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றியது போல உங்களை குழப்பி விட வேண்டாம் என நமக்கு வழி காட்டுகிறான் (குர்ஆன் 7:27)

இதிலிருந்து இறைவன் எதை சொன்னாலும் அதிலே நலவே இருக்கும் என்பதையும் அதற்கு கீழ்படிந்தால் சுவர்க்கம் கிடைக்கும் என்பதையும் இறைவன் சொன்னதை மீறி நடந்தால் அது நல்லது போன்று சைத்தான் காட்டினாலும் அது கெடுதியிலேயே முடியும் என்பதை படிப்பினையாக்கி வழிகாட்டுகிறது குர்ஆன்

 

8.குர்ஆன் 9:29 யூதகிறிஸ்தவர்களோடு அவர்கள் ஜிஸ்யா வரி கட்டும் வரை போரிடுமாறு சொல்கிறது. இதுவே தீவிரவாதத்திற்கு காரணமாக உள்ளது என்கிறார். குர்ஆன் 9:30 இலே யூதர்கள் உஸைரை அல்லாஹ்வின் மகன் என்பதாகவும் கிறிஸ்தவர்கள் மஸீஹை அல்லாஹ்வின் மகன் என்கிறார்கள் என கூறிவிட்டு அவர்களை அல்லாஹ் அழிப்பானாக என்று கூறுகிறது

இஸ்லாம் ஆன்மீகமும் நீதித்துறையும் ஆட்சியதிகாரமுடைய மார்க்கமாகும்.

எந்த ஆட்சியும் குடிமக்களிடம் வரி வாங்குவர்

*குர்ஆன் 9:29ஐ நபிகளார் நடைமுறைப்படுத்திய விதமானது, யுத்தத்திற்கு சென்றால் முதலில் இஸ்லாத்தை நோக்கி அழைப்பார்கள். அதை அவர்கள் மறுத்தால், அவர்களிடம் வரி செலுத்துமாறு கோருவார். அதையும் மறுத்தாலே யுத்தம் நிகழும் (முஸ்லிம் 3566 (1731a,b) , அபூதாவூத் 2612,புகாரி 3159)

இதன் நோக்கம், இஸ்லாத்தை திணிப்பது அல்ல.. காஃபிர்களான எதிரித்தலைமைகள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217, 60:2). ஏற்கனவே செய்து கொண்டும் இருந்தார்கள்.

அந்நிலைமை ஏற்படாதிருக்க,   ஆட்சியும் ஆன்மீகமும் உடைய இஸ்லாமிய அரசு இவ்வாறே செய்ய வேண்டியதாக இருந்தது

-இத்தகையோரை அடிமைகளாக நடத்த கூடாது என்பதையே இமாம் புகாரி 3052வது ஹதீஸுக்கு தலைப்பாக போடுகிறார். (ஆனால் பைபிளோ அடிமைகளாக வேலைக்காரராக ஆக்கிக்கொள்ளுமாறே கூறுகிறது. இரண்டும் நேரெதிரான து)

-இத்தகைய மக்களுக்காக இஸ்லாமிய அரசு இம்மக்களின் எதிரிகளுக்கு எதிராகவும் போரிடுவதோடு, அம்மக்களின் மீது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது என்கிறது (புகாரி 3052,3700)

-இத்தகையோரின் உரிமைகளில் குறைவைத்தாலோ அவர்களது சக்திக்கு மீறி எதையாவது சுமத்தினாலோ, அம்மக்களுக்காக அத்தகையவனுக்கு எதிராக நானே இறைவனிடம் வாதிடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்- (அபூதாவூத் 3052)

-வரி செலுத்தாததற்காக அவர்களை நியாயமின்றி வேதனை செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-முஸ்லிம் 5096-5097

-இத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் -புகாரி 3166

எந்தளவுக்கென்றால் யூதரிடம் தன் கவசத்தை அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு நபிகளார் நடந்துகொண்டார்கள்-புகாரி 2096,2068,2916

இப்படி வரி செலுத்தும் வேதக்காரர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் பாதுகாப்பையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியது.

-குர்ஆன் 9:30 இறைவன் விசயத்தில் அவனுக்கு மகன் இருப்பதாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூறும் அவதூறுகளுக்காக அவர்களை "அல்லாஹ் அழிப்பானாக"  என்று கண்டிக்கிறது. திருத்துவதற்கு வழிகாட்டுகிறது.

அதிகாரம் இருந்தபோது, இஸ்ரவேலரோடு சமாதானமான மக்களிடம் கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது பைபிள்- உபாகமம் 20:10-11

இவ்வாறே யோசுவா நபி தன்னோடு சமாதானமான அப்பாவி மக்களை வேலைக்காரர்களாக ஆக்கிக் கொண்டதாக யோசுவா 9:15-21 கூறுகிறது. இதேபோல் தாவீதும் அயல்நாட்டவர்களை வேலைவாங்கினான்-1 நாளாகமம் 22:2

(அத்தோடு அருகிலுள்ள மாற்றுமதத்தவர்களை கொன்றுபோட்டுவிட்டு குடியேறுமாறும் , துரத்தி விட்டு அவர்களது ஆலயங்களை உடைத்து போடுமாறும் கர்த்தரே சொன்னார் -உபாகமம் 20:16-18, யாத்திராகமம் 23:31-33,&23:24

இது மாற்றுமதத்தவனை மனிதனாக கூட மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது)

-புதிய ஏற்பாட்டிலோ, மாற்றுமத சிலைவணங்கி உறவினருடன் சேர்ந்து பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிட வேண்டும் என்றும் (1கொரிந்தியர்5:11,13), அவர்களைவிட்டு பிரிந்து வாழுமாறும் (2 கொரிந்தியர் 6:17), அத்தகையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் (2யோவான் 1:10-11) கூறுகிறது.

வெறும் ஆன்மீகம் மட்டுமேயுள்ள இந்த மதமே இப்படி பேசும்போது இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டுவது அபத்தமே!

 

9.சனிக்கிழமை வரம்பு மீறியோரை குரங்குகளாக பன்றிகளாக ஆகிவிடுமாறு அல்லாஹ் சொன்னான்.

அவர்கள் வரம்பு மீறியதற்கான தண்டனையே அது (குர்ஆன் 7:163-166)

இவ்வாறு உருமாற்றிய எவருக்கும் சந்ததியை உண்டாக்க மாட்டான் (முஸ்லிம் 5176 (2663b,d)

இதனால் என்ன பிரச்சினை? இறைவன் விரும்பியவாறு தண்டிப்பான்.

ஆனால் பைபிளோ குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார் (1 சாமுவேல் 15:2-3) இது பழைய பகைக்காக .

பைபிளிலே அவிசுவாசிகளை பன்றிகள் (மத்தேயு 7:6) என்றும் நாய்கள் (மத்தேயு 7:6, பிலிப்பியர் 3:2, வெளி 22:15) என்றும் பாம்புகள் (மத்தேயு 23:33)என்றும் இயேசுவும் பவுலும் யோவானும் கூறியுள்ளார்கள்.

 

10.இயேசு என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று தகறியது மனுகுல பாவத்துக்காக தேவன் பாவமாக்கியதால் என்கிறார்

தன்னை தேவன் கைவிட்டார் என உணர்ந்ததால் தான் தேவனிடம் ஏன் கைவிட்டீர் என கேட்கிறார். தன் மகனை தனக்கே நரபலி கொடுக்கும் தகப்பன் எத்தகைய தகப்பன்? (ரோமர் 8:3, எபேசியர் 5:2)

 

11.எல்லா யூதர்களும் ஒரே மாதிரி இருப்பதால் யூதாஸ் முத்தம் கொடுத்து காட்டிக்கொடுத்தார் என்கிறார்

யூதாஸ் கதையே காமிடி தான்.

.இந்த யூதாஸ் யேசுவை 30 வெள்ளி காசுகளுக்காக யூதர்களிடம் காட்டிகொடுக்க முன்வந்தான் என்கிறது வேதாகமம்.

(Matthew 26:14-15 Mark 14:10-12)

காமிடி என்னவென்றால்யேசுவை யூதர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்.

(Mark 14:49 Matthew 26:55-56)

ஏற்கனவே தெரிந்த ஒருவரை காட்டி கொடுத்ததற்கு யாராவது காசு கொடுப்பாங்களா

. Mark, Luke & John  யேசுவை யூதாஸ் காட்டி கொடுத்ததுவரை யூதாஸை பற்றி கூறுகின்றனர். ஆனால் Matthew ஒரு படி மேலே போய்,

மனந்திருந்தி 30 காசையும் தேவாலயத்தில் வீசிவிட்டு தூக்கில் தொங்கி செத்தான். அந்த காசை ஆசாரியர் எடுத்துகுயவனின் நிலத்தை வாங்கி இரத்த நிலம் என்று பெயரிட்டார்கள்” (Matthew 27:3-8)

என்கிறார்.

ஆனால் அப்போஸ்தலர் 1:16-19 இல் Luke சொல்கிறார், அவன் காசை திருப்பி கொடுக்காமல் அவனாகவே நிலத்தை வாங்கி வயிறு வெடித்து செத்து போனான் இதனால் அந்த நிலம் ரத்த நிலம் என பெயர் வந்தது என்கிறார்!

.இதற்கும் முறண்பட்டு திரும்ப கூறும் வேதாகமம்:

இதிலும் குளருபடி இருக்கிறது.

.யேசு உயிர்தெழுந்த பின்பு, 11 சீடர்களுக்கும் தரிசனமானார் என்கிறது வேதகாமம்.

(Mark 16:14 Luke 24:33)

இல்லாமல் போன சீடர் யூதாஸ் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது தவறு

அங்கே இல்லாத சீடன் திதிமு எனப்பட்ட தோமா என்கிறது வேதாகமம்

(John 20:24)

ஆனால் பவுல் 12 பேருக்குமே தரிசனமானார் என்கிறார்

(I Corinthians 15:5)

அதிலே மெத்தியாஸ் அடங்க மாட்டார். bcoz யேசு உயிர்த்தெழுந்து சில 40 நாட்களுக்கு பின்பே தெரிவானார்.(Acts 1)

எனவே யூதாசுக்கும் யேசு தரிசனமானார். எனவே யூதாஸ் யேசு உயிரத்தெழும்வரை  செத்திருக்க முடியாது.

யேசு இவனுக்கும் தரிசனமானதால்இவன் தற்கொலை செய்திருக்க முடியாது.

ஏனெனில் யூதாஸ்

தற்கொலை பண்ணியதாக கூறப்படும் காரணம், பாவமற்றவரின் இரத்தப்பலிக்கு காரணமாகிவிட்டேனே என்ற மனவருத்தத்தில் தான்.

(Matthew 27:3-4).

யேசு இவனுக்கு தரிசனமானால், இவன் மனவருத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

எனவே தற்கொலை என்பது பொய்.

அவன் வயிறு வெடித்து செத்தான் என்பதும் கேள்விக்குறியே ஆகிறது

இயேசுவை எப்போது யூதர்கள் பிடித்தார்கள்?

.யூதாஸ் அவரை முத்தமிட்டு ரபீ வாழ்க என்று சொன்னவுடன்யேசு அவனிடம் எதற்காக வந்திருக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவரை அவர்கள் பிடித்து கொண்டார்கள்.

(Matthew 26:49,50 Mark 14:45,46)

 

.அவன் முத்தம் செய்ய நெருங்கியபோதே பிடித்தார்கள்

(Luke 22:47,48,)

 

.யூதாஸ் முத்தம் செய்வதற்கு முன்புயூதாசும் படைகளும் வந்த போது நான் தான் யேசு என்று கூறியபோது பிடித்தார்கள்.

(John 18:3-8)

 

 

 

12.இயேசு வருவதற்கு தாமதப்படுத்த காரணம், எல்லேரும் திருந்த வேண்டும் என்பதே என 2 போதுரு 3:9 சொல்வதாக கூறுகிறார்

*ஆனால் இயேசு தன்னை ஏற்காதோர் திருந்தி விடவோ மன்னிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே உவமையாக பேசினேன் என்கிறார்:

மாற்கு 4:11-12 IRVTam

[11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12]  அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறதுஎன்றார்.

https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam

-தேவன் தான் விசுவாசிக்காதபடிக்கு கண்களை குருடாக்கி இருதயத்தை கடினமாக்குபவர்:

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

-அவிசுவாசிகளை திருத்த விடமாட்டார். மாறாக வஞ்சகத்தை அனுப்பி பொய்யை விசுவாசிக்க வைப்பார்:

2 தெசலோனிக்கேயர் 2:11-12 IRVTam

[11] ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, [12] அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

https://bible.com/bible/1899/2th.2.11-12.IRVTam

-இஸ்ரவேல் மக்களை இவர் தான் கர்த்தர் என் அறிய வைப்பதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தினேன் என்கிறார்:

எசேக்கியேல் 20:26 IRVTam

[26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.26.IRVTam

-சிலைவணங்கி அவிசுவாசிகளை காம இச்சைகளுக்கும் பொல்லாத பாவங்களுக்கும் தேவனே ஒப்புக்கொடுக்கிறார்:

ரோமர் 1:24, 26-28 IRVTam

[24] இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

[26] இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். [27] அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். [28] தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

https://bible.com/bible/1899/rom.1.24-28.IRVTam

இப்படி இவரே வழிகெடுத்து வஞ்சகத்தை அனுப்பும் போது எவன் விசுவாசிப்பான்?

 

*பழைய ஏற்பாட்டிலோ, மாற்றுமத சிலை வணங்கிகளை நாடு பிடிப்பதற்காக ஈவிரக்கமின்றி கொன்றுபோடுமாறும் துரத்தி விடுமாறும் கூறுகிறார் கர்த்தர்:

உபாகமம் 20:16-18 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam

இத்தகைய சிலை வணங்கிகளின் இடம் எரிநரகம் (வெளி 21:8)

ஆக பேதுரு இயேசுவின் வருகை தாமதமாவதை நியாயப்படுத்த கூறும் ஒரு காரணமே இது. ஆனால் காலம் தாமதிக்க தாமதிக்க அவிசுவாசிகள் அதிகமதிகம் பலுகி பெருகி மேலும் நரகம் தான் போவார்கள் (அதாவது கி.பி. 70 இற்கு முன்பே இயேசு வந்திருந்தால், அதன் பின் வந்தவர்களில் பல நூறு கோடிப்பேர் நரகம் போவார்களா?) என்பதை கூட அறியாத பாமரனாக பேதுரு எழுதியுள்ளார். (பொய்யை விசுவாசிக்க வஞ்சகத்தை அனுப்புபவரும் தேவன் தான் என் பவுல் ஐயா எழுதியுள்ளார்.)

இஸ்லாமோ

*-இறைவன் காஃபிர்களுக்கு மறுமை வருமுன்னே திருந்தி விடுமாறு அழைப்பு விடுக்கிறார்:

54.ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

55.நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

56.“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

57.அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

58.அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

59.(பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.” (குர்ஆன் 39:54-59)

இப்படி மறுமையில் கைசேதப்பட்டுவிடாமல் இருப்பதற்காக அழைப்பு விடுக்கிறது.

*அத்தோடு, இறைவனின் அருளின் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுவான் என்று ஆர்வமூட்டி அழைக்கிறது (குர்ஆன் 39:53)

 

*அத்தோடு மரணம் வரை திருந்துவதற்கு பாவமன்னிப்புக்கான வாசலை இறைவன் திறந்துவைத்து காத்திருக்கிறான்- ( குர்ஆன் 4:17-18)

 

13.ஏசாயா 6:10 இலே இஸ்ரவேலர்களின் இருதயம் கொழுத்ததாக இருந்ததாக சொல்வதாக உருட்டிவிட்டு தப்பிக்க பார்க்கிறார்

உண்மையில் கொழுத்ததாக ஆக்குமாறே அவ்வசனம் சொல்கிறது.

ஏசாயா 6:10 IRVTam

[10] இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார்.

https://bible.com/bible/1899/isa.6.10.IRVTam

போதகர் ஐயா ஒரு புழுகாண்டி.

அத்தோடு கர்த்தர் தான் விசுவாசிக்காதபடி இருதயத்தை கடினப்படுத்தி குருடாக்குவார் -யோவான் 12:40

பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை அனுப்புபவர் (2 தெசலோனிக்கேயர் 2:11-12)

 

14.அல்லாஹ் மனிதனை அழகான அமைப்பில் படைத்துவிட்டு தாழ்ந்தோரிலும் தாழ்ந்தோராக ஆக்கினோம் (95:4-5)  என்பதை குறிப்பிட்டு விதி என கூறி குற்றப் படுத்த பார்க்கிறார்

இறைவன் முன்கூட்டியே சகலத்தையும் அறிந்தவன்.

அதன்படி தாழ்ந்துபோகவேண்டியவன் யாரென முன்பே அறிந்து அவனது செயல்களால் அவனை தாழ்ந்தோரிலும் தாழ்ந்தோர் ஆக்கினான். அதனால் தான் விசுவாசம் கொண்டு நற்செயல் செய்பவர்கள் அப்படி அல்ல (95:5-6) என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான்.

விசுவாசிகளையும் அவர்களில் அறிவு கொடுக்கப்பட்டவர்களையும் உயர்த்துவான் (குர்ஆன் 58:11), நபிகமார்களின் அந்தஸ்த்துகளை உயர்த்துகிறான் (குர்ஆன் 2:253, 19:57,94:4) இறைவன் நாடியவர்களை அந்தஸ்த்தால் உயர்த்துகிறான் (குர்ஆன் 6:83,165& 12:76, 43:32)

ஆக தன்னை விசுவாசித்து நற்செயல் செய்யாதோரை இறைவன் தாழ்ந்தோராக ஆக்கினால் , அதிலென்ன பிரச்சினை? 

பைபிளும் கர்த்தர் தாழ்த்துபவர் என்று சொல்கிறது

1 சாமுவேல் 2:7 IRVTam

[7] யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

https://bible.com/bible/1899/1sa.2.7.IRVTam

சங்கீதம் 75:7 IRVTam

[7] தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

https://bible.com/bible/1899/psa.75.7.IRVTam

தாழ்த்துபவரும் தரித்திரம் அடையச்செய்திறவரும் என்று பைபிளே தேவனை வர்ணிக்கும்போது அதை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்கலாமா?

 

15.பைபிளில் கர்த்தர் சோந்துபோவதுமில்லை களைப்படைவதுமில்லை என ஏசாயா 40:28

ஆறு நாட்களில் வானங்கள் பூமியை இறைவன் படைத்தான். ஆனாலும் அவனுக்கு எந்த சோர்வும் ஏற்படவில்லை (குர்ஆன் 50:38)

ஆனால் கர்த்தர் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார்.(ஆதி 2:2, யாத்திராகமம் 20:11, 31:17,34:21) இதனால் யூதர்கள் ஏழாம் நாள் ஓய்வெடுக்க வேண்டும் (யாத்திராகமம் 34:21)

இதேபோல் கர்த்தருக்கு களைப்பும் வருகிறது: நான் பொறுத்து பொறுத்து களைத்துப் போனேன் (எரேமியா 15:6). சிலபோது கர்த்தருக்கு தூக்கமும் வந்துவிடும். இதனால் தாவீது "ஏன் நித்திரை கொள்கிறீர்? விழித்துக்கொள்ளுவீராக" என்கிறார் (சங்கீதம் 44:23)

ஆக பைபிளில் கடவுளை பற்றியே முரண்படுகிறது. கர்த்தர் மனஸ்தாபப்படமாட்டார்  அப்படி மனஸ்தாபப்பட அவரென்ன மனிதனா? என்று ஓரிடத்தில் சொல்லும் (1 சாமுவேல் 15:29, எண்ணாகமம் 23:19) , ஆனால் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் படுவார் என இன்னொரு இடத்தில் சொல்லும் (எரேமியா 18:8,10& 1 சாமுவேல் 15:11ஆதி 6:6)

 

16. யோபு 26:7 பூமி அந்தரங்கத்திலே தொங்குகிறது

பூமியை அந்தரத்தில் தொங்க வைத்திருப்பதாக சொல்வது மாபெரும் காமடி ஆகும்.

பூமி எங்கும் தொங்கிக்கொண்டு இல்லை.. மாறாக இயங்கிக் கொண்டே உள்ளது. வானத்திற்கு கீழே நிலம் (பூமி) இருப்பதால் அது தொங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், கயிறு எதுவும் தென்படாததால் அந்தரத்தில் தொங்குகிறது என்று எழுதியுள்ளனர்

குறிப்பு: பைபிள் பூமி என்பது நிலத்தை தான். நிலத்தை தான் கர்த்தர் எரெத்ஸ் (ארץ) என பெயரிட்டார்:

ஆதி 1:10 IRVTam

[10] தேவன் வெட்டாந்தரைக்கு பூமிஎன்றும், சேர்ந்த தண்ணீருக்கு சமுத்திரம்என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

https://bible.com/bible/1899/gen.1.10.IRVTam

போதகர்கள் உருட்டுவது போல கடலையும் நிலத்தையும் உள்ளடக்கிய கோள வடிவத்தை இப்படி சொல்லவில்லை.

இந்த பூமியை  தான் தண்ணீரில் பரப்பி வைத்திருப்பதாகவும் (சங்கீதம் 136:6) அத்திவாரத்தில் வைத்திருப்பதாகவும் (சங்கீதம் 82:5) அதற்கு தூண் இருப்பதாகவும் (யோபு 9:6) பைபிள் சொல்கிறது

 

17.சுவர்க்கத்திலும் அதிகமானோர் இருப்பார்கள் என்று குர்ஆனிலிருந்து காட்டப்பட்டதும் விதியின் அடிப்படையில் எப்படி தீர்மானிக்க முடியும் அது தவறு என்கிறார்

சுவர்க்கவாதிகள் நிறையப் பேர் இருப்பார்கள் என குர்ஆன் 56:13,39-40 இருப்பதாலும் சுவர்க்கத்தையும் இறைவன் நிரப்புவான் (புகாரி 4850)

மனிதர்களை படைக்க முன்பே அவர்களில் யார் சுவர்க்கம் போவார் என இறைவனுக்கு முன்பே தெரியும். அப்படி அறிந்த படியால் சுவர்க்க வாசிகளை சுவர்க்கத்திற்கும் நரகவாசிகளை நரகத்திற்கும் நியமித்தான்.

ஆனாலும் இது நிறைவேறுவது மனிதர்களின் செயல்பாடுகளாலும் இறைநீதியாலும்

-நரகம் செல்லும் பாவிகள் தம் பாவங்களை ஒப்புக்கொள்வதோடு (குர்ஆன் 67:11), நாங்கள் தாம் மறுத்தோம் என்றும் தூதர்கள் சொல்வதை நாம் கேட்டு சிந்தித்தித்திருந்தால் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் என்றும் (குர்ஆன் 67:9-10), அநியாயக்காரனாகியவன் மறுமையில், நானும் அத்தூதருடன் நேரான வழியை எடுத்திருக்க கூடாதா? என்னை நல்லுபதேசம் வந்த பின் வழிகெடுத்த  அவனை நண்பனாக எடுத்திருக்காதிருக்க வேண்டாமா?  என புலம்புவான் (குர்ஆன் 25:27-29), அத்தோடு நரகத்தில் முகங்கள் புரட்டப்படும்நாளில் , நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! என் கூறுவார்கள் என்றும் நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (அதிகாரிகளுக்கும்), எங்கள் பெரியவர்களுக்கும் (அறிஞர்கள்/மதகுருக்கள்) கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள் என்றும் கூறுவார்கள் (குர்ஆன் 33:66-67). அத்தோடு தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40)

அனைவரும் தம் செயல்களுக்கேற்ப கூலிகொடுக்கப்படுவார்கள். விசுவாசம் கொண்டு நற்செயல் செய்தவர்களுக்கு நற்கூலி/சுவர்க்கமும் (குர்ஆன் 32:17,46:14,56:24, 10:4, 13:24,16:32...) தீமை செய்து வாழ்ந்தவர்களுக்கு தண்டனையும்/நரகமும் வழங்கப்படும் (குர்ஆன் 41:28, 3:106, 6:30,49,93,124,157; 7:39,16:88 ,8:35, 10:4,8,70,....)

விதியின் நோக்கமே, தவறிப்போனதை குறித்து கைசேதப்படாமல் இருப்பதற்காகவும், இறைவன் கொடுத்த  விசயத்திற்காக கர்வம் கொள்ளாத இருப்பதற்காகவும் தான் (குர்ஆன் 57:23)

 

18.குர்ஆன் 5:116 திரித்துவத்தை தப்பாக புரிந்து , ஈஸா மர்யம் அல்லாஹ் என்று திரித்துவம் என்கிறது என்கிறார்

குர்ஆன் 5:116 மர்யமையும் ஈஸாவையும் வணங்கியோரிடமிருந்து ஈஸா நபியின் தூய்மையை அறிவிக்கப்போகும் மறுமை விசாரணை பற்றிய வசனமே இது.

இங்கே கடவுள் மரியாள் இயேசு ஆகிய மூவரும் ஒரே கடவுள் என்று நம்பினர் என்று கூறவில்லை..

மாறாக நீர் தான் உம்மையும் உம் தாயையும் அல்லாஹ்வை விடுத்து இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு மனிதர்களுக்கு கூறினீரா என்று கேட்கும் விசாரணை பற்றிய வசனமே இது.

அன்றைய கால அரேபியாவில் மரியாவுக்கு அப்பம் செலுத்தி ஜெபம் செய்துவந்தனர். அத்தகைய கிறிஸ்தவர்களுக்கான எப்சரிக்கையே இது. இன்றுகூட கத்தோலிக்கர்கள் மரியாள் வழியாக இயேசுவிடம் ஜெபம் செய்வதோடு மரியாவை கடவுளின் தாய் என்றே அழைக்கிறார்கள்.

திரித்துவமே தப்பாக தானே உள்ளது

வெவ்வேறு  தனிநபரான மூவரில்  ஒவ்வொருவருமே கடவுள் என்றும் மொத்தமாக ஒரே கடவுள் என்று அறிவிற்கே ஒவ்வாத நம்பிக்கையே இது.

1 கடவுள் + 1 கடவுள் + 1 கடவுள் = 1 கடவுள்

??

 

 

 

19.குர்ஆன் 35:3 அல்லாஹ்வையன்றி படைப்பாளன் இல்லை என்கிறது ஆனால் 37:125 அல்லாஹ்வை படைப்பாளர்களில் சிறந்தவன் என்கிறது முரண் என்கிறார். அத்தோடு படைப்பு என்பது ஒன்றுமில்லாத நிலையிலிருந்து படைக்கப்படுவது என்று சம்பந்தமேயில்லாமல் 19:67ஐ குறிப்பிடுகிறார்

 

*சகலத்தையும் படைத்தவன் அல்லாஹ்வாகிய ஒரே இறைவன் (குர்ஆன் 6:102, 13:16,39:62, 40:62, 35:3).

*அவனது படைப்புகளின் செயல்களை படைப்பவனும் அவனே (37:96).

*அவனுடைய படைப்புகளில் அவனுடைய அனுமதியால் படைப்பவர்கள் இருப்பார்கள். உதாரணமாக வாகனங்களை படைப்பார்கள்,கட்டிடங்களை உண்டாக்கும்வர்கள், இயந்திரங்களை உண்டாக்குவோர் இருப்பர். இப்படி படைக்கும் படைப்பாளர்களில் இறைவனே அழகான படைப்பாளன் என்கிறது குர்ஆன். அத்தோடு அவர்களது செயல்களை படைப்பவனும் அவனே (37:96)

இந்த தற்குறி சம்பந்தமே இல்லாமல், படைத்தல் என்றால் ஒன்றுமில்லாமல் படைப்பதை குறிக்கும் என்று குர்ஆன் 19:67ஐ குறிப்பிடுகிறார். ஆனால் அவ்வசனம் மனிதனை அவன் ஒரு பொருளும் இல்லாதிருந்த நிலையில் படைத்தான் என்றே கூறுகிறது. அதாவது மனிதனை படைக்க முன் அவன் எதுவாகவும் இருக்கவில்லை... அதன் பின் பூமியை படைத்து மண்ணை படைத்து  மனிதனை மண்ணிலிருந்தே படைத்தான். மூலப்பொருள் உண்டு.     மனிதர்களும் மூலப்பொருள் இலிருந்து படைக்கிறார்கள். அதனால் இறைவனே படைப்பாளர்களில் சிறந்தவன். அத்தோடு அவர்களது செயலையும் இறைவனே படைப்பதால் இறைவன் மட்டுமே படைப்பாளன்.   ஆக இரண்டுமே உண்மையானது

பைபிளிலோ, வானத்திலும் பூமியிலும் பலதேவர்கள் இருந்தாலும் நமக்கு பிதாவாகிய ஒரே தேவன் இருக்கிறார் என்கிறார் பவுல் -1 கொரிந்தியர் 8:5-6).. இப்படி பல தேவர்களில் ஒருவராக தான் பிதாவை பைபிள் தான் சொல்கிறது - இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு தேவனே கிடையாது (குர்ஆன் 2:163,255.…..)

 

இதே விதமாக பைபிளையும் அணுகினால்,

-நானே கர்த்தர்,என்னை தவிரதேவன்  (எலோஹிம்) இல்லை (ஏசாயா 44:6, 45:5,), அதே கர்த்தர், "நீங்கள் தேவர்களாக (எலோஹிம்) இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் (சங்கீதம் 82:6), மோசேயை பார்வோனுக்கு தேவனாக (எலோஹிம்) ஆக்கினார் (யாத்திராகமம் 7:10) இதை வைத்து எலோஹிம் யார் என்பதிலேயே பைபிள் முரண்படுகிறது என்று சொன்னால் ஏற்பார்களா?

 

 

20.ஏசாயா 40:22 இலே பூமி உருண்டை என சொல்வதாக உருட்டுகிறார்

பூமி உருண்டை என்பது மொழிபெயர்ப்பாளர்களின் தில்லுமுல்லு. இது வட்டத்தையே குறிக்கும்.

நிலம் வட்டம் என்று இவ்வசனம் கூறுகிறது.

அந்த வட்ட நிலத்தை சுற்றி தான் கடல் இருப்பதாக பைபிள் கூறுகிறது:

நீதிமொழிகள் 8:27 TAERV

[27] கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.

https://bible.com/bible/3154/pro.8.27.TAERV

நிலத்தை தான் கர்த்தர் பூமி (ארץ) என்று பெயரிட்டார் (ஆதி 1:10)

உயரமான இடத்தில் ஏறினால் நம்மை சுற்றி வட்டவடிவத்திலே பூமி தென்படுவதால், பூமி வட்டம் என்றே இவ்வசனம் சொல்கிறது.

நிலத்தை சூழ தண்ணீர் இருப்பதை கண்டதால்,

இந்த பூமி தண்ணீருக்கு மேலே பரப்பப்பட்டுள்ளது (சங்கீதம் 136:6).என எழுதியுள்ளனர்.

வானம் எமக்கு வெள்ளையாக /இளநீலமாக தென்படுவதாலும் பூமியின் ஓரத்தில் அவை இணைவது போன்று தென்படுவதால், அதை கூடாரத்தின் துணி போல தென்படுவதாக தான் இந்த புத்தகம் சொல்கிறது.

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 40:22 TAERV

[22] கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள். அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார். அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார்.

https://bible.com/bible/3154/isa.40.22.TAERV

 

21.லூக்கா 9:5 இலே ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கால் தூசியை உதறிவிட்டு செல்லுமாறு கூறுகிறது வற்புறுத்த சொல்லவில்லை என்கிறார். குர்ஆன் 8:39 தீன் அல்லாஹ்வுக்கு ஆகும்வரை போரிடுமாறு சொல்கிறது

பலவீனமான நிலையில் இருந்த மக்களிடம் வேறு என்ன போதனையை செய்யுமாறு கொடுக்க முடியும்?  அவர்களிடம் திணிக்க முனைந்தால் அப்போதே இவர்களை அழித்திருப்பார்கள்.

பலவீனமானோர் சமாதானமாக நடந்துகொண்டனர் என்பது சாதாரண விடயம் தான். காரணம் அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை!!

ஆனால் சக்தி இருந்தபோது எப்படி தேவன் சொல்லியிருந்தார் என்பதையும் பாருங்கள்!

12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்ட மனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,

13நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,

14நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,

15அந்தப் பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

16அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே, கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது. உபாகமம் 13:12-16

அதாவது ஊர் மக்களையே வெட்டி கொன்று மிருகங்களையும் கொன்று ஊரையே தீயிட்டு கொழுத்த வேண்டும் என்று சொன்னதே இவர்கள் நம்பிக்கை பிரகாரம் இயேசு தானே?

சமாதானம் பண்ணாமல் மாற்று மதத்தவர்களது சிலைகளை உடைத்து அவர்களது வணக்கத்தலமாக இருக்கும் தோப்புகளை வெட்டிப்போடுமாறும் சொன்னது யார்?

12நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

13அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். யாத்திராகமம் 34:12-13

நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும். உபாகமம் 7:5

2நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

3அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள். உபாகமம் 12:2-3

 

அத்தோடு, இவர்கள் இனத்தவர் மதம் மாறி சூரிய சந்திரனை வணங்கினால், அத்தகையவனை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று சொன்னதும் அவரே!

3நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

5அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். உபாகமம் 17:3,5

 

அத்தோடு சக்தியில்லாதபோது கூட சிலை வணங்கிகளான உறவுகளை துரத்திவிட வேண்டும் என்றும் அவர்களோடு சேர்ந்து பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்பதையும் பவுல் கூறுகிறார்- 1 கொரிந்தியர் 5:11,13

இவர்கள் நம்பியடி நம்பாத தப்பறைகளை வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்கிறார் யோவான். அப்படி செய்தால் அவர்களின் பாவத்தில் பங்காளியாகிவிடுவார்களாம்.2 யோவான் 1:10-11

இயேசு வல்லமையோடு வரும்போது காலை உதரிப்போட்டு போகாமல் கொன்று போடுவார் என்று தான் வெளிப்படுத்தின விசேஷம் 19:18-21 &2:23 கூறுகிறது

ஆகவே , சக்தி இல்லாதவன் தன் மதத்தை திணிக்கவில்லை என்பதற்காக அதை சிறந்ததாக கூற முடியாது. காரணம் அவனுக்கு சக்தி இல்லை.. அத்தகையோர் சக்தியோடு இருந்த போது  கொல்ல சொன்னதற்கு முரணாகவே இது அமைந்துள்ளது.

குர்ஆன் 8:39 பற்றி:

ஆரம்பத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது குழப்பத்திற்குள்ளாகப்படுவார் (புகாரி 4514).

அத்தோடு காஃபிர்கள் தமக்கு சக்தி இருந்தால் முஸ்லிம்களோடு அவர்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள் (குர்ஆன் 2:217)

அதனால் இந்த குழப்பம் நீங்கி , தீன் அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆகும்வரை போரிடுமாறு குர்ஆன் சொன்னது.. இல்லாவிட்டால் எதிரிகள் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வேதனை செய்தே வெளியேற்றி இருப்பார்கள்..

இதை விமர்சிப்பதற்கு இந்த தற்குறிகளுக்கு தகுதி உண்டா?

ஏனெனில், மாற்றுமதத்தவனை உயிரோடு விட்டால் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரும் கெட்டுப் போவார்கள் என்று ஒரே காரணத்துக்காக அவர்களில் மூச்சு விடும் எதையும் உயிரோடு வைக்காமல் கொல்லுமாறு கர்த்தர் சொன்னார் (உபாகமம் 20:16-18)

இதை சரி கண்டுகொண்டு , தமது நீதிக்காக போரிடச்சொன்ன இல்லாமை குறை சொல்லலாமா?

 Part 2

 

 

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1