பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 2
14.பைபிள் மனைவியரை அன்போடு நடத்தவும் மனைவியர் கணவருக்கு கீழ்படிந்து நடக்கவும் , பிள்ளைகள் பெற்றோருடனும் பெற்றோர் பிள்ளைகளுடனும் , அடிமைகள் எஜமானுடனும் நல்லமுறையில் நடந்துகொள்ள பவுல் சொல்வதை (கெலோசெயர் 3:18-24) குறிப்பிட்டு அனைத்திற்கும் வழிகாட்டுகிறது என்கிறார். ஆனால் குர்ஆன் மனைவியை அடிக்க அனுமதிக்கிறது |
|
பவுல் மனைவியர் எப்படி நடக்க வேண்டும் பிள்ளைகள் எப்படி நடக்க வேண்டும் என்று கொலெசே ஊராருக்கு கடிதம் எழுதினால் இறைவேதம் வழிகாட்டுகிறது என்றாகுமா? அதே பைபிளிலே மனைவி மீது அவள் கன்னியாக இருக்கவில்லை என சொன்னால், அவளது பெற்றோர் முதலிரவில் இரத்தம் படிந்த துணியை விரித்து சபையோருக்கு காட்ட வேண்டும். அது இல்லாவிட்டால் அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் (உபாகமம் 22:14-21) சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. சொந்த மகளையே வேலைக்காரியாக விற்பனை செய்ய தகப்பனுக்கு முடியும் (உபாகமம் 21:7-10) இது தான் பைபிள் . மாற்றான் குழந்தைகளை ஊரை கைப்பற்றுவதற்காக பழைய பகைக்காக ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னதும் பைபிள் தான் (உபாகமம் 20:16-18, 1 சாமுவேல் 15:2-3) கன்னியை கற்பழித்தால், ஐம்பது காசு கொடுத்து அவளை திருமணம் முடிக்க வேண்டும் (உபாகமம் 22:28-29) என்பதன் மூலம் கற்பழித்தவனுக்கே கற்பழிக்க வழிகாட்டுவது போல உள்ளது. இஸ்லாமும் பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறும் அவர்களுக்காக பிராத்தனை செய்யுமாறும், அவர்களுக்கு சங்கையான வார்த்தையையே கூறவேண்டும் என்றும் கூறுகிறது (குர்ஆன் 17:23-24) உறவினருக்கும் வழிப்போக்கருக்கும் அவர்களுடைய உரிமையை கொடுக்குமாறும் (17:26) , மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறும் (4:19) , அடிமைகளுக்கும் நல்லுபகாரம் செய்யுமாறும் (4:36) கூறுகிறது. அடிமைகள் விசயத்தில்: *அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662)*அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585) *அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) - ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27) *அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார், உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள். இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில், நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c) ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22) *தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. *அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186) *அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும், நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192) பெண்கள் விசயத்தில்1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது. அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10) 2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631)) ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் (லேவியராகமம் 12:1-5) 3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946) ஆனால் பைபிளில் தகப்பனுக்கு அவளை விற்றுப்போடும் உரிமையே உண்டு(யாத்திராகமம் 21:7-10) அத்தோடு அவளை கற்பழித்தவனுக்கோ காலம் முழுதுமே மனைவியாக இருக்க வேண்டும் என அவளை பாழ் கிணற்றிலேயே தள்ளுகிறது (உபாகமம் 22:28-29) 4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின் குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948) பைபிளோ விதவை பெண்ணை அவளது கணவனின் சகோதரன் தான் முடிக்க வேண்டும் என நிர்ப்பந்தமான சட்டத்தை போடுகிறது (உபாகமம் 25:5-6). இங்கே அவளும் மனுசி தானே அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டுதானே என பைபிள் பார்க்கவில்லை. 5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763. பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. அவளை கற்பழித்ததற்கு நஷ்டயீடான ஐம்பது வெள்ளிக்காசுகளை கூட தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:29) . அவள் மீது விபச்சார அவதூறு கூறினால் கூட அபராதமாக நூறு வெள்ளிக்காசுகளை அவளது தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:19) 6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர் விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176) ஆனால் பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. தகப்பனுக்கு ஆண்குழந்தை இல்லாது போனால் மட்டும் தான் அவர்களுக்கு சொத்து கிடைக்கும்.(எண்ணாகமம் 27:8) (பெண்ணுக்கு ஆணின் சொத்தின் பாதி தானே இஸ்லாத்தில் கிடைக்கும் என நினைக்கலாம். காரணம் ஆண் மீதே குடும்பச் செலவை இறைவன் விதியாக்கியுள்ளதாலும் (குர்ஆன் 4:34), ஆணே தன் மனைவிக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்பதாலும் (குர்ஆன் 4:4), அவள் நஷ்டயீடு செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் அவளது தந்தைவழி உறவினரே (சகோதரன் போன்றோர்) அதை செலுத்தவேண்டும் என்பதாலும் (புகாரி 6730) இவ்வாறு இஸ்லாம் வழங்கியது நியாயமானதே!) 7.தன் மனைவியின் மீது விபச்சாரம் செய்துவிட்டாள் என குற்றச்சாட்டு வைத்தால், அவ்வாறு செய்யவில்லை என எதிர்த்து அவனுக்கு சமமாக சாட்சி கூறும் உரிமையை இஸ்லாம் வழங்கியது (குர்ஆன் 24:6-9). ஆனால் பைபிளோ அவள் முதலிரவிலே கன்னியாக இல்லை என கூறினால், அதற்கு உடலுறவில் வரும் இரத்தம் தேய்ந்த துணியை ஆதாரமாக அவளது பெற்றோர் காட்டவேண்டும். இல்லாவிட்டால் அவள் விபச்சாரி என தற்குரித்தனமான சட்டம் கூறுகிறது (உபாகமம் 22:14-21). சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. இதுபோன்ற அப்பாவிகளை அவதூறு கூறும் தற்குரித்தனமான போதனையை பைபிள் கூறுகிறது. அத்தோடு தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் கூட அவளை தான் மண்கலந்த கசப்பு நீரை குடிக்க வைத்து ஆசாமி கூறும் சாபவார்த்தைகளுக்கு ஆமென் மட்டுமே கூற முடியும்.மறுக்கும் உரிமை கிடையாது (எண்ணாகமம் 5:14-24) 8.இஸ்லாம் கர்ப்பிணி பெண்களை மதிக்கிறது. அவள் பிள்ளை பெற்றெடுக்கும் போது மரணித்தால் அவளை உயிர்த்தியாகி என்கிறது (நஸாயீ 1846,3194, அபூதாவூத் 3111) ஆனால் பைபிளோ கர்ப்பவேதனையை கடவுள் அதிகரிப்பார் காரணம், பெண் பாம்பிடம் ஏமாந்ததற்காக கடவுள் கொடுத்த சாபம் என்கிறது (ஆதி 3:16) 9.மாதவிடாய் பெண்களை இஸ்லாம் மதிக்கிறது. அது அல்லாஹ் ஆதமின் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திய காரியம் (புகாரி 294) என்றும், அதன்போது உடலுறவை தவிர அனைத்து விசயங்களிலும் அவளை சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம் (முஸ்லிம் 507 (302) புகாரி 295-297,299-303,) ஒரே போர்வைக்குள் தூங்கலாம் (புகாரி 298) ஆனால் பைபிளிலோ மாதவிடாய் பெண்ணின் முழு உடலுமே தீட்டு. அவளை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவள் படுக்கும் இடமும் அமரும் இடமும் தீட்டுப்படும். அவளது படுக்கையை ,அமரும் ஆசனத்தை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவளது ரத்தம் ஒர்த்தன் மேல் பட்டால் அவன் ஏழுநாட்களுக்கு தீட்டுப்படுவான். எவ்வளவு காலம் ரத்தம் வந்துகொண்டிருந்தாலும் அத்தனை காலத்திற்கும் இப்படி அவள் தீட்டுப்படுவாள். இரத்தம் நின்று ஏழாம் நாள் தான் அவள் சுத்தமாவாள் (லேவியராகமம் 15:19-28) இப்படி அவளை ஒட்டுமொத்த அசுத்த பிராணியாக ஆக்கியுள்ளது பைபிள். பன்றி போன்ற அசுத்தமான பிராணிகளை தொட்டால் தோராவின்படி மாலைவரை தீட்டுள்ளது போல இந்த பெண்ணை தொட்டாலும் மாலைவரை தீட்டு. 10.இஸ்லாம் திருமணமான பெண்களின் நிலையை சிறைக்கைதிகளுக்கு ஒப்பிடுகிறது. அதாவது திருமணத்தின் மூலம் அவர்களால் இன்னொரு ஆணை விரும்ப முடியாது கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள் போன்றவற்றினால். ஆகவே அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள் என்கிறது (இப்னுமாஜா 1851), அத்துடன் உங்களில் சிறந்தவர் தம் மனைவயரிடம் சிறந்தவரே ஆவார் (இப்னுமாஜா 1978,1977, திர்மிதீ 3895). அத்துடன் பெண்களுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள் ஏனெனில் பெண்ணானவள் (மனிதகுல தாயான ஹவ்வா) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார். அதன் மேல் பகுதியே மிகவும் வளைந்தது. அதை நேராக்க நினைத்தால் உடைத்துவிடுவாய் (புகாரி 3331). அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் , நீங்கள் ஒன்றை வெறுக்க கூடும் ஆனால் அதிலே அநேக நலவுகளை இறைவன் ஏற்படுத்தக்கூடும் (குர்ஆன் 4:19) இஸ்லாம் மனைவியர் கணவனுக்கு கட்டுப்படுவதற்கான காரணமாக பெண்களை குற்றப்படுத்தவில்லை . மாறாக ஆண்கள் மீதே செலவளிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கியதாலும் , சிலரைவிட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியதாலும் (உடலாலும் மனதாலும் வேறு விதமாகவும்) தான் (குர்ஆன் 4:34). அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குடும்பம் இயங்காது. ஆனால் பைபிளோ பெண் செய்த பாவத்தினாலே இந்த நிலைமை என்கிறது. அதனாலே அவள் ஆணுக்கு அடங்க வேண்டும் என்கிறது.: "உன் ஆசை உன் புருஷன் மீதிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்வான்"-ஆதி 3:16) ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.1 தீமோத்தேயு 2:11-14 11.மனைவியரை அடிப்பது குறித்து, குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள் குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம் மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான். *இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது: அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905) இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள். கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்) அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146).. ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது. பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும் உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ அதுவே பைபிளில் அவளது நிலை. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.1 பேதுரு 3:5-6 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.எபேசியர் 5:22-24 அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும். ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதியேயில்லை. இதுவே பைபிளினதும் இஸ்லாத்திற்கும் நிலை!! |
15.முஸ்லிம் தரப்பு |
|
-குர்ஆன் வானத்தில் இருந்து இறைவன் கொடுத்தது தான் இறக்கி வைத்தது தான் என்பதை சுட்டிக்காட்டினர். குர்ஆனும் அதை தான் சொல்கிறது. -ஆனால் பைபிளை எழுதியவர்களோ தாம் ஆராய்ந்து எழுதினோம் என்றும் கர்த்தர் சொல்லவில்லை நானே சொல்கிறேன் என கூறியுள்ளனர். இதன்படி கர்த்தரின் வார்த்தை அல்லாதவற்றை சுயமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினர். -மனைவியோடு நல்லாக இரு, புருசனோடு நல்லா இரு என்பதை கிழவிகளே சொல்வார்களே. பிறகு பைபிள் சொன்னால் மட்டும் இறைவேதமாகிவிடுமா என கேட்டனர் -பைபிளிலே முரண்பாடும் காணப்படுகிறது. 1.யூதாஸ் இயேசுவை முத்தமிட்டு ரபீ வாழ்க என கூறி காட்டிக்கொடுத்தான் என்றும் யூதர்கள் பிடித்துக்கொண்டார்கள் என மத்தேயு 26:48-50 (மாற்கு 14:44-46) கூறுகிறது. ஆனால் யோவானோ யூதாஸ் இடத்தை காட்டிக்கொடுக்கவே வந்தான் இயேசு தான் யாரை தேடுகிறீர் என கேட்டு நான் தான் இயேசு என கூறினார். அதனாலே பிடித்துக்கொண்டார்கள் (யோவான் 18:2-12). (லூக்கா 22:47-48 யூதாஸ் முத்தம் கொடுக்க நெருங்கிய போதே இயேசு மனிசகுமாரனை முத்தம் கொடுத்து காட்டிக்கொடுக்கிறாயா என கேட்கிறார். முத்தம் கொடுத்ததாக இல்லை) 2.என்னை குறித்து நானே சாட்சி சொன்னால் அது செல்லாது (யோவான் 5:31) அதே வாயால் என்னை குறித்து நானே சாட்சி சொன்னால் அது செல்லும் என்கிறார் (யோவான் 8:14) (ஏனென்றால் பிதாவையும் இவரையும் சேர்த்து இரண்டு சாட்சி வந்து விடுமாம். அப்போ செல்லாது என்று சொன்னபோது பிதா சாட்சி சொல்லாமல் இவர் மட்டும் சொல்வதா? இவருக்குள் பிதாவின் ஆவி ஏற்கனவே இருந்ததே.) ஆகவே இது தெளிவான முரண்
|
16.இஸ்லாம் மனைவியை சந்தேகப்பட்டாலே அடிக்க சொல்கிறது என்கிறார் போதகர் |
|
சந்தேகப்பட்டால் என்று 4:34 இலே இல்லை.. எந்த பெண்கள் விசயத்தில் அவர்கள் உங்களுக்கு மாறு செய்வதை பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்,படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள், அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் என்றே கூறுகிறது. இந்த உபதேசம்,ஒதுக்கிவைத்தல்,அடித்தல் எல்லாம் திருத்தும் நோக்கில் மட்டுமே என தெளிவாக கூறுகிறது. எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நபிகளார் வழியும் காட்டியுள்ளார் அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905) இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள். கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்) அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146).. ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது. பைபிள் தான் மனைவி மீது சந்தேகம் வந்தாலும் அவளை ஆசாரியனிடம் கூட்டி போய் மண் கலந்த நீரை குடிக்க வைத்து அவன் கூறும் சாபங்களுக்கு ஆமென் சொல்லவேண்டும் என்கிறது எண்ணாகமம் 5:14-24 கன்னியை கற்பழித்தாலே அவளை கல்யாணம் முடித்துக் கொள்ளலாம் என்ற அற்புத சட்டமும் பைபிள் தான் கூறுகிறது -உபாகமம் 22:28-29 (ஒரு பெண்ணை அடைவதற்கு கற்பழிப்பு பேதுமானது என சட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? இவற்றை வைத்துக்கொண்டு மனைவியோடு ஒழுங்காக வாழ்வதற்கு வழிகாட்டும் இஸ்லாத்தை குற்றப்படுத்தலாமா? இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? |
17.விவாகரத்து குறித்து இஸ்லாம் கழற்றிவிட சொல்கிறது என போறவாக்கில் அடித்து விடுகிறார் |
|
விவாகரத்தும் முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது. விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை. ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதாவது *மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332 *அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228) அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள் அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம். இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229). ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது. மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2) முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை (நிகாஹ் ஹலாலா) சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076) மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20) அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ). அதற்காக அவள் காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.) மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7) அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்.. அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236) தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236). இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255) *விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில் சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது. *இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள். ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது. 1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20) 2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233) 3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும். 4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது. 5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்! இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம். ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)). தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும். பைபிளும் விவாகரத்தும் தோரா விவாகரத்து செய்வதை அனுமதிக்கிறது -உபாகமம் 24:1-3. ஆனால் இயேசுவோ விவாகரத்தை விபச்சாரம் அல்லாத காரணத்திற்காக செய்வது விபச்சாரம் என சொன்னதாக மத்தேயு 19:9. ஆனால் மோசே அதை யூதர்களின் இதய கடினத்தின் காரணமாக அனுமதித்தார் என இயேசு சொல்கிறார் (மத்தேயு 19:8). அப்படியானால் இதய கடினத்திற்காக விபச்சாரம் கூடுமா? வேடிக்கையாக இயேசு காலத்தில் கூட யூதர்களின் இதயம் கடினமாக இருந்ததாக தான் யோவான் 12:40 சொல்கிறது. அப்படி பார்த்தால் இயேசு விவாகரத்தை தடை செய்வதே அறிவீனமாக தென்படுகிறது. அத்தோடு விபச்சாரம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்று சட்டம் போடும்போது, தன் மனைவியை பிடிக்காது போனவன் தன் மனைவி மீது விபச்சார அவதூறு சொல்லி விவாகரத்து பெறுவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இஸ்லாமோ காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் தம்பதியினர் பிரியும்போதும் அவர்களது privacy மீதான அவதூறுகள் கூறும் வாய்ப்பை இதன்மூலம் இல்லாமலாக்கியுள்ளது. மனைவியை விவாகரத்து செய்ய இயலாததால் கொலை செய்வது என்பனவும் நம் காலத்தில் காணப்படுகின்றன. அதற்கு மேலும் வழிவகுக்கும் காரணியாக பைபிளின் போதனை உள்ளது. இஸ்லாமே அதற்கும் சரியான தீர்வை காட்டுகிறது. இஸ்லாம் விவாகரத்தை நெறிப்படுத்தி அனுமதிக்கும்போது பைபிள் இறைவேதம் என்றாகுமா? |
18.பைபிள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட சொல்கிறதாம். வரி செலுத்த சொல்கிறதாம். |
|
இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? குர்ஆனும் அதிகாரம் உள்ளவர்களுக்கு கீழ்படியுமாறு சொல்கிறது (குர்ஆன் 4:59) . அத்தோடு பாவமான விசயத்தில் படைப்புகளுக்கு கட்டுப்பட தேவையில்லை என்றும் கூறுகிறது (புகாரி 2955) இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? |
|
|
19.பைபிள் 50 வயதிற்கு மேற்பட்டவர் வேலை செய்ய தேவை இல்லை என்கிறது (எண் 8:23-24)ஆசாரிய வேலை செய்பவன் அப்படி இருக்க கூடாது உதவி செய்யலாம் என சொல்வதால் இறைவேதம் என்றாகுமா? அவனால் வேலை செய்ய சக்தி இல்லாதபோது வேலை எடுத்தால் வேலை நடக்குமா? இதை சாதாரண முதலாளிகளுக்கும் தெரிந்த ஒன்று தானே. இஸ்லாமோ அடிமையானாலும் வேலைக்காரனானாலும் அவனது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது என்றும் அப்படி செய்தால் அதிலே அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள் (புகாரி 30,6050) 20.பைபிள் ஓய்வு நாளில் (சனிக்கிழமையில்) வேலைக்காரனுக்கும் மிருகத்திற்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்கிறது (உபாகமம் 5:14)- இப்படி சொன்னால் இறைவேதம் என்றாகுமா? அதே பைபிள் தானே எதிரிகளின் குழந்தைகள் பெண்கள்
சிறுவர்கள் ஆடுமாடுகள் ஒட்டகம் கழுதை என்பவற்றையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு
கர்த்தரே சொன்னதாக சொல்கிறது (1 சாமுவேல் 15:2-3). ஓய்வுநாள் என்பது
களைப்பாக இருப்பதால் ஓய்வு கொடுப்பதற்கு அல்ல... எகிப்திலே அடிமையாக இருந்ததையும் கர்த்தர் மீட்டார்
என்பதையும் நினைவுபடுத்துவதற்கானது (உபாகமம் 5:15). கர்த்தர் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்பதற்காக
செய்யப்படுகிறது (யாத்திராகமம் 20:11). அதை ஓய்வு நாளில் ஏதாவது லாபமான வேலை செய்தால் கூட கொல்லுமாறு பைபிள் கூறுகிறது (யாத்திராகமம் 31:14-15,35:2)
இஸ்லாம் கூறும்போது தாகித்த நாய்க்கு நீர்புகட்டியதால் மனிதனை இறைவன் மன்னித்தான் என்பதோடு உயிருள்ள எதற்கு நலவு செய்தாலும் கூலி வழங்கப்படும் என்றும் (புகாரி 2363), பூனையொன்றை கட்டி பட்டினி போட்டு கொன்ற பெண் பூனையாலே நரகத்தில் தண்டிக்கப்படுவதாக எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது (புகாரி 2365) ஒட்டகத்திடம் பால் கறக்கும்போது நீர்நிலைகளிலே செய்வது ஒட்டகத்தின் உரிமை (புகாரி 2378) 21.பைபிள் மாற்றான் தோட்டத்தில் மிருகம் மேய்ந்தால் மிருகத்தை தண்டிக்காமல் உரிமையாளனை தண்டிக்க சொல்கிறது என்கிறார் (யாத்திராகமம் 22:5)...உண்மையில் மிருகத்தை மேய விட்டால் மேய விட்டவன் பதில் செலுத்தவேண்டும் என்றே கூறுகிறது. மிருகத்தை தண்டிக்க கூடாது என்று சொல்லவில்லை. மாடு மனிதனை முட்டி மனிதன் செத்தால் , மாட்டை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்ற அருமையான சட்டத்தையும் பைபிள் சொல்கிறது (யாத்திராகமம் 21:28-29,31-32) மாட்டை ஏன் வேதனை செய்து கொல்ல வேண்டும்? இவருடைய வாதப்படி பைபிள் இறைவேதமாக இருக்க தகுதி உண்டா? 22.பைபிள் பூமிக்கு ஏழாம் வருடம் விவசாயம் செய்யாமல் ஓய்வு கொடுக்க சொல்கிறதாம் (லேவியர் 25:1-6)இதனால் இறைவேதம் என்றாகுமா? பூமி விளைச்சல் தர ஓய்வு தேவைனு சொல்லிச்சா? இஸ்லாமோ பூமியில் ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டி அதனால் மனிதனோ மிருகமோ பயன்பெற்றால் அதற்கும் இறைவனிடம் கூலி உண்டு என்கிறது (புகாரி 2320,6012) 23.அந்நியனை சுதேசியை போல நேசிக்க வேண்டும் (லேவியர் 19:34) என்கிறார்.ஆனால் அதே பைபிளிலே அந்நியனிடம் வட்டி வாங்கலாம் (உபாகமம் 23:19-20) அந்நியனுக்கு செத்ததை விற்கலாம் (உபாகமம் 14:21), அந்நியனை காலம் முழுதும் அடிமைப்படுத்தலாம் ஆனால் இஸ்ரவேலனை அப்படி செய்ய கூடாது (லேவியராகமம் 25:42-46) இது தான் சுதேசியை போல நடாத்தி உன்னை போல நேசிப்பதா? இஸ்லாம் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகள் என்கிறது. பிறப்பால் சங்கை வருவதில்லை.. இறையச்சத்தாலே சங்கை/கண்ணியம் உள்ளது என்கிறது (குர்ஆன் 49:13, புகாரி 3353) 24.மாற்றுதிரனாளிக்கு தீங்கு செய்ய கூடாது -லேவி 19:14மாற்றுத்திறனாளிக்கு தீங்கு செய்யக்கூடாது என்று
சொல்லிவிட்டு, பழைய பகைக்காக குழந்தைகளையும் பெண்களையும்
சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னதே கர்த்தர் தானே (1 சாமுவேல் 15:2-3) இஸ்லாம் மாற்றுத்திரனாளிகளை நிரந்தர நோயாளிகளை அவர்கள் அதிலே பொறுமையாக இருந்தால் சுவர்க்கத்தை பெற்றுத்தரும் செயலாக பார்க்கிறது (புகாரி 5652, 5653) 25.வயோதிபர்களை மதிக்க வேண்டும் (லேவியர் 19:32).அதே போல் இஸ்லாமும் கூறுகிறது "யார் எங்களுடைய பெரியவர்களை மதிக்காமலும் சிறியவர்களுக்கு
இரக்கம் காட்டாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எங்களை சேர்ந்தவர்கள் அல்ல (திர்மிதீ 1919,1920 அபூதாவூத் 4943)
26.எதிரிகளை நேசிக்க வேண்டும் நிலவு செய்ய வேண்டும் ஜெபம் செய்ய வேண்டும் -மத்தேயு 5:44-தேவன் தன் எதிரியை நேசிக்க மாட்டார். மாறாக கோபமே கொள்வார் (யோவான் 3:36) -இயேசுவும் தன் எதிரியை நேசிக்க மாட்டார். மாறாக அவர்கள் திருந்திவிட கூடாது என்றும் தேவனால் மன்னிக்கப்பட கூடாது என்றும் விரும்பி அதனாலே உவமையாக பேசினார்-(மாற்கு 4:11-12) -இயேசுவை காட்டிக்கொடுக்க முற்பட்ட யூதாசுக்காக இயேசு வேண்டுதல் செய்யவும் இல்லை. மாறாக தனக்கு உதவி புரியும் பேதுருவுக்கு தான் சாத்தானிடமிருந்து பாதுகாக்க தேவனிடம் வேண்டிக்கொண்டார்- (லூக்கா 22:31-32, 22:3) *ஆக மதரீதியாக அல்லாமல் சொந்த பிரச்சினைகளுக்காக எதிரியாக இருப்பேரையே நேசிக்கவும் ஜெபிக்கவும் சொல்கிறது . . மாற்றுமத்தவர்களை குறித்தோ, அவர்களை விட்டு விலக வேண்டும் என்றும் ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது என்றும் அவனை துரத்தி விடவேண்டும் என்றும், அத்தகையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் அப்படி செய்தால் அவர்களது பாவங்களில் பங்காளிகளாகிவிடுவீர் என்றும் சீடர்களும் பவுலும் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது (2 கொரிந்தியர் 6:17,& 1கெரிந்தியர்5:11,13, &2யோவான்1:10-11) சொந்த பிரச்சினைக்காக எதிரிகளை நேசிக்க கூற காரணம், கிறிஸ்தவம் வெறுமனே ஆன்மீகம் மட்டுமே. அதிலே அதிகாரமும் நீதித்துறையும் இல்லை என்பதால் இதை தவிர வேறு வழியில்லை. -இயேசு அதிகாரத்தோடு வரும் இரண்டாம் வருகையில் மாற்றுமத எதிரியை நேசிக்காமல் கொல்லுவார் (வெளி 19:18-21, & 2:22-23) -அதிகாரம் இருந்தபோது , 400 வருடம் பழைய பகைக்காக, கர்த்தர் குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி மூலம் ஏவினார்-1 சாமுவேல் 15:2-3 இது தான் எதிரியை நேசிக்கும் லட்சணம். -ஆரம்பத்தில் இஸ்லாமும் தீங்கிழைக்கும் காஃபிர்களை கூட மன்னித்துவிடுமாறே கூறியது-(நஸாயீ 3086, குர்ஆன் 5:13, 2:109, 3:186) -இறைவன் அதிகாரத்தை கொடுத்தபோது, நீதித்துறையும் உள்ளடங்கியதால், குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்படுவர். -தனிப்பட்டரீதியாக தீங்குகளை நல்லதைக்கொண்டு தடுக்குமாறும் (குர்ஆன் 23:96& 41:33-35) -தீங்கிழைத்தவரை பழிவாங்காமல் மன்னித்தால் நற்கூலி உண்டு (குர்ஆன் 42:40,& 5:45) -தீங்கு செய்யும் உறவினரையும் சேர்ந்து வாழ்வதையும் அவர்களுக்கு நலவு செய்வதையும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5000) -இவை அனைத்தையும் உள்ளடக்கி, உனக்கு விரும்புவதையே உன் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்கிறார் நபிகளார் (புகாரி 13). -காரணம் யாருமே தமக்கு கெடுதியை விரும்புவதில்லை. அதுபோன்றே மற்றவருக்கும் இருக்க வேண்டும். -இயேசு யூதாசுக்காக வேண்டவில்லை (ரோம் சிப்பாய்களாக்காக வேண்டியதாக லூக்கா 23:34 கூறுகிறது. காரணம் இயேசு குற்றவாளி என நினைத்து அவர்கள் தண்டனை வழங்கிவதாக கருதியதால்) ஆனால் முகம்மது நபியோ தன் நண்பனை போல நடித்து நயவஞ்சகராக இருந்து தனக்கு காலம் முழுதும் தீங்கிழைத்த எதிரிக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடி மன்னிக்கப்படுவதை விரும்பினார்.(புகாரி 4672) ஆனால் இயேசுவோ தன்னை ஏற்காத யூத தலைவர்கள் திருந்தி விடவோ மன்னிக்கப்படவோ கூடாது என்றே விரும்பினார்-மாற்கு 4:11-12 27.கிள்ர் சிறுவனை கொன்றதாக 18:74 வசனத்தை காட்டுகிறார்-முதலில் அவன் காஃபிராக இருக்கிறான் (புகாரி 3401) என்பதிலேயே அவன் குழந்தை அல்ல என்றும் தன் செயலுக்கு பொறுப்பான வயதை அடைந்தவன் என்பதை காட்டுகிறது. அந்த ஹதீஸிலேயே அவன் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான் என கூறும்போது கூட அவனுக்கு அதே வார்த்தையை பயன்படுத்தவுமில்லை. *அவன் தன் முஃமினான பெற்றோரை நிராகரிப்பிலும் வரம்பு மீறுவதிலும் தள்ளுவான் என (குர்ஆன் 18:80) கூறுகிறது. இதனால் தான் அவன் தண்டிக்கப்பட்டான்... அதாவது அவனது நல்ல பெற்றோரை பாதுகாப்பதற்காக தான் இது. *ஆனால் நபிகளாரோ போர்க்களத்திலும் சிறுவர்களை பெண்களை ,போரிடாத கூலியாட்களை கொல்லுவதை தடை செய்தார்கள் (புகாரி 3014-3015 & அபூதாவூத் 2669) *பைபிளும் பெற்றோருக்கு கீழ் படியாத பிள்ளைகளை கொல்ல சொல்கிறது: மாற்கு 7:9-10, 13 IRVTam [9] பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது. [10] எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. [13] நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார். https://bible.com/bible/1899/mrk.7.9-13.IRVTam *அடங்காத சொந்த மதத்துக்காரனான மகனை கொல்ல வேண்டும் -கர்த்தர் உபாகமம் 21:18-21 IRVTam [18] “தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால், [19] அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: [20] எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக. [21] அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள். https://bible.com/bible/1899/deu.21.18-21.IRVTam *ஆனால் மாற்றுமதத்துகாரனின் குழந்தைகளை கூட வெறும் பகைமைக்காக கொல்ல சொன்னார்: 1 சாமுவேல் 15:2-3 IRVTam [2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான். https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam இப்படி ரண கொடூரமாக போதித்த கர்த்தரின் போதனையை சரி கண்டுகொண்டு, புத்தியை அடைந்தவனும் பிற்காலத்தில் தன் பெற்றோரை பெரும்பாவத்தில் தள்ளுபவனுமானவனை முன்பே ஒரே ஒரு நபர் ஒரே ஒரு தடவை தண்டித்ததை எப்படி குறை சொல்லலாம்?) |
28.முஸ்லிம் தரப்பு வாதம்-இயேசு எதிரியை நேசிக்க சொல்லிவிட்டு , தன்னிடம் அடையாளம் கேட்டவர்களை "பொல்லாத விபச்சார சந்ததி" (மத்தேயு 12:39) என்று சொன்னதை சுட்டிக்காட்டினர் -யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டது யாக்கோபு பிரார்த்தனை மூலம் கெஞ்சியதை குறிப்பதாக ஓசியா 12:3-4 குறிப்பிட்ட போதகருக்கு மறுப்பாக , ஆதி 32:24-25 இலே யாக்கோபை வெல்ல முடியாததை கண்டு அவர் தொடைச்சந்தை தொட்டார் என்பதையும் , 28ம் வசனத்திலே "நீ தேவனோடும் மனிதரோடும் போராடி வெற்றிபெற்றாய்" என தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டி இது ஒன்றும் பிரார்த்தனை அல்ல.. அடிதடியில் தோற்று போனதை குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினர். (வேடிக்கையாக ஓசியா 12:3-4 இலே பிரார்த்தனை செய்து அழுது கெஞ்சி வெற்றி பெற்றான் என கூறப்படவில்லை.. தேவனோடு தன் பெலத்தால் போராடி தேவதூதனோடும் போராடி வெற்றி பெற்றான் என்றே உள்ளது. அதன்பின்பு தான் அழுது கெஞ்சியதை குறிப்பிடுகிறார் . அதாவது வெற்றிக்கு பிறகு தான் தாம் வீழ்த்திய நபரை அறிந்து அவ்வாறு நடந்துகொண்டார்.) -உன்னதப்பாட்டு 8:1-8 இலே காதலி காதலனை வழியில் சந்தித்து முத்தமிடுவதற்கு அவன் அவளுடைய சகோதரனாக இருக்கக்கூடாதா என்றும் அப்படி இருந்தால் யாரும் குறைகூற மாட்டார்களே என்றும் தாயின் வீட்டுக்கு கூட்டிச் செல்வேன் என்றும் கூறுவதாகவும் பிறகு காதலியின் சகோதரர்கள் "நம் சகோதரிக்கு இன்னும் முலைகள் கூட முளைக்கவில்லை" என்கின்றனர். காதலியோ "நான் சுவர். என் முலைகள் அதன் கோபுரங்கள்" என கூறுவதாக பச்சையாக ஆபாசமாக இருப்பதை சுட்டிக்காட்டினர். |
29.கர்த்தர் மீதியானியர்களை கொல்ல சொன்னதும் அமெலேக்கியரை கொல்ல சொன்னதும் தண்டனை என்பதால் ஓகே என்கிறார்.ஆனால் குழந்தைகளை பெண்களை சிறுவர்களை மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னது (1 சாமுவேல் 15:2-3) எப்படி நேர்மையான தண்டனையாக இருக்கும்? இதே அணுகுமுறையை ஏன் குர்ஆனும் ஹதீஸும் போர் செய்யும் ஆண்களுக்கு அத்தகைய ஆண்களை கொல்ல சொன்னதை அதேபோல் எடுப்பதில்லையே? (போர்க்களத்தில் கூட பெண்கள் சிறுவர்கள் போரிடாத கூலியாட்களை கொல்லக்கூடாது புகாரி 3014-3015& அபூதாவூத் 2669) அரசாங்கம் நடத்துறோம் எனும் பெயரில் குழந்தைகளை கொல்லுவதை அதுவும் திட்டமிட்டு கொல்லுவதை எவராவது சரிகாண்பார்களா? ஆனால் பைபிள் சரி காண்கிறது (1 சாமுவேல் 15:2-3). பெரிய ஆண்கள் தப்பு செய்ததற்காக இப்படி அப்பாவிகளை குழந்தைகளை வெட்டி கொல்ல சொல்வது சரியாகுமா? இதே போல் இவர்களுக்கு செய்தால் ஏற்றுக்கொள்வார்களா? 30.மதத்திற்காக கொல்லுமாறு சொல்லவில்லை என்று போறபோக்கில் அடித்து விடுகிறார்கானானிய மாற்றுமதத்தவர்களை உயிரோடு
விட்டால் உங்களையும் கெடுத்துக் போடுவார்கள் என கூறி அவர்களின் ஊரில் மூச்சு
விடும் எதையும் உயிரோடு வைக்காமல் கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார் -உபாகமம் 20:16-18 இவர்கள் வசிக்கும் ஊரில் வேறு
கடவுளை ஒருவன் வணங்கினால் வணங்க சொன்னால் அவனை கல்லெறிந்து கொல்ல வேண்டும் (உபாகமம் 13:6-10,
17:3,5) ஊராக சேர்ந்து வேறு கடவுளை
வணங்கினால் ஈவிரக்கமின்றி அனைவரையும் கொன்று (குழந்தைகளுட்பட) ஊரையே கர்த்தருக்காக கொளுத்தி போடவேண்டும் -உபாகமம் 13:12-16 இதையெல்லாம் தெரியாமல் கம்பு
சுத்துகிறார். 31.மனைவி மீது சந்தேகப்பட்டதற்காக அவளை பாதிரியாரிடம் கூட்டிப்போய் கசப்பு மண்கலந்த நீரை குடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றும் அப்பெண் தப்பு செய்ததற்கு சாட்சி இல்லாது விட்டால் தான் இப்படி செய்ய சொல்கிறது என எண்ணாகமம் 5:11-12 குறிப்பிடுகிறார்.ஆனால் 14ம் வசனத்திலே முஸ்லிம் தரப்பு வைத்த வாதம் உள்ளது எண்ணாகமம் 5:14
TAOVBSI [14] எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி
தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட
தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க,
எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து,
அவன் அவள்மேல்
குரோதங்கொண்டிருந்தாலும், https://bible.com/bible/339/num.5.14.TAOVBSI 32.ஆயிஷா அவர்கள் மீது சந்தேகம் வந்ததாக உருட்டுகிறார்.ஆனால் உண்மையில் அன்னை ஆயிஷா
அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டது. அதன் தாக்கம் நபியிடமும் ஏற்பட்டது. அதனால் "நீ பாவம் செய்தால் இறைவனிடம் மீண்டுவிடு. நீ பாவம் செய்யவில்லை என்றால் அல்லாஹ்
உன்னை தூய்மைப்படுத்துவான்" என்று தான் சொன்னார்கள். அதுபோன்றே
பேசிக்கொண்டிருக்கும்போதே வஹீ வந்ததை அடையாளங்களை வைத்து அன்னை ஆயிஷா அவர்களே
கண்டதாக கூறுகிறார். அதாவது
கடும் குளிர் நேரத்த்தில் வஹீ வந்தால் அடையாளமாக நபிகளாருக்கு வியர்வை கொட்டும். இவ்வாறு இறைவன் அன்னை ஆயிஷா குற்றமற்றவர்
என சான்றளித்தான். புகாரி
2661)- இது இறைவனின் ஒரு சோதனையும்
நபிகளாரின் உண்மைத்தன்மையும் ஆகும். 33.இயேசு காலத்தில் கூனன் நோயாளிகள் ஆலயத்தில் இருந்தனர் என்கிறார்.ஆனால் பலிசெலுத்த அவர்கள் வந்தால்
பரிசுத்தக்குளைச்சல் என்றும் (லேவியராகமம்
21:23)
ஆணுறுப்பு அறுபட்டவன் காயடிக்கப்பட்டவன் கர்த்தரின் சபைக்கு வர கூடாது. வேசிப்பிள்ளையும் வரக்கூடாது (உபாகமம் 23:1-2) என பைபிள் தான் சொல்கிறது 34.புகாரி 2581 இலே ஆயிஷா (ர) அவர்களின் படுக்கையில் இருந்தபோதேயன்றி வேறு எந்த மனைவியின் படுக்கையில் இருந்தபோதும் வஹீ வந்ததில்லை என கூறுவதை ஆபாசமாக சித்திரித்தார்ஜிப்ரீல் ஆயிஷா (ர) முறையாக ஆடை அணியாத நிலையில் வரமாட்டார் என
நபிகளார் கூறியுள்ளார்கள் முஸ்லிம் 1774 ஆகவே இது இவர்களின் ஆபாசப்
புத்தியை காட்டுகிறது. (மற்ற
மனைவியரோடு நபிகளார் இருக்கும்போது இப்படி வஹீ வந்ததில்லை என்கிற ஆயிஷா (ர) அவர்களின் தனிச்சிறப்பை கூறவே இத்தகவலை
நபிகளார் கூறினார்கள் கர்த்தரின் காமம் சொட்டும்
வசனங்கள் சில: உன் 7:7-8
IRVTam [7] உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள்
திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. [8] நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள்
திராட்சைக்குலைகள்போலவும், உன்
மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. https://bible.com/bible/1899/sng.7.7-8.IRVTam எசேக்கியேல் தீர்க்கதரிசியின்
புத்தகம் 16:25-26 TAERV [25] ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த
மேடைகளைக் கட்டினாய். பிறகு
நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப்
பயன்படுத்தினாய். நீ உனது
பாவாடையைத் தூக்கினாய். அதனால்
அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று
நடந்துகொண்டாய். [26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு
இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ
அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். https://bible.com/bible/3154/ezk.16.25-26.TAERV எசேக்கியேல் தீர்க்கதரிசியின்
புத்தகம் 23:3, 20-21 TAERV [3] அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில்
வேசிகள் ஆனார்கள், எகிப்தில்
அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும்
அனுமதித்தனர். [20] கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண்
குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற
தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள்
நினைத்துக்கொண்டாள். [21] “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு
கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில்
உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள். https://bible.com/bible/3154/ezk.23.3-21.TAERV இதை வைத்து காதலி காதலனின் விந்தை
வெளியேற்றிவிடும் காட்சியின் தீர்க்கதரிசனம் என எடுக்கலாமா? நாகூம் 3:5
TAERV [5] சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது ஆடைகளை உன் முகம்
மட்டும் தூக்குவேன். நான்
உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன். அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும். https://bible.com/bible/3154/nam.3.5.TAERV இப்படி செமயாக பேசியிருப்பது ஓகே.. கணவன் மனைவி முறையாக ஆடை
அணிந்திருக்கும் போது வஹீ வருவது கொச்சையானதாம். 35.வெங்காயம் பூண்டு சாப்பிட்டவர் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன ஹதீஸை அங்கவீனரால் பரிசுத்த குளைச்சலும் காயடிக்கப்பட்டவன் வரக்கூடாது என்பதோடு ஒப்பிடுகிறார்பூண்டு போன்றவற்றை சாப்பிட்டால்
ஏற்படும் துர்வாடையால் மற்றவர் நோவினைக்குள்ளாவதால் தான் பள்ளிவாசலுக்கு
வரவேண்டாம் என்று கூறப்படுகிறது (முஸ்லிம்
971,973,974,976,978) இதுவும் ஆணுறுப்பு அறுபட்டவன்
காயடிக்கப்பட்டவன் வேசிப்பிள்ளை போன்றோர் வரக்கூடாது (உபாகமம் 23:1-3)
என்பது அங்கவீனன் பலி
செலுத்துவதால் பரிசுத்தம் குளைச்சல் ஏற்படுகிறது (லேவியர் 21:23)
என்பதும் ஒன்றா?-இதனாலே பைபிள் இறைவேதம் என்றாகுமா? 36.குர்ஆன் 68:13 இலே இழிபிறப்புடையவன் என உள்ளதாக குறிப்பிடுகிறார்அரபியில் "ஸனீம்-زنيم"
என்பது விபச்சாரத்தில்
பிறந்தவனையும் குறிக்கும், மிகவும்
தீயசெயலையுடையவனையும் குறிக்கும்,கோத்திரத்தில்
சேர்ந்திருக்கும் அந்நியனையும் குறிக்கும். ஒரு பேச்சுக்கு விபச்சாரத்தில் பிறந்தவன்
என்றே கருதினாலும் , விபச்சாரத்தில்
பிறந்து தீயவனாக இருப்பவனை அப்படி பிறந்தவன் என்று சொல்வது தப்பாகாது. இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 37.கர்த்தர் பொய் சொல்லும் ஆவியை ஏவி விடவில்லை அனுமதியே கொடுத்தார் என்கிறார்பொய் சொல்ல வைக்கும் ஆவி பொய்
சொல்ல வைத்து ஏமாற்றப் போவதாக கூறவே
அவ்வாறே செய் என சொல்வது அனுமதி மட்டுமல்ல.. ஏவலும் சேர்த்தே. தேவன் தான் எப்படி ஆகாபை கொல்லலாம்
என்பதற்கு ஐடியா கேட்கிறார். அப்போது
தான் இந்த ஆவி பேசியது. அப்படி
தேவனே கட்டளையிட்டார் என்றும் பைபிள் சொல்கிறது 1 இராஜாக்கள்
22:20-23 TAOVBSI [20] அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். [21] அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. [22] எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். [23] ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். https://bible.com/bible/339/1ki.22.20-23.TAOVBSI இதுமட்டுமின்றி பொய்யை
விசுவாசிக்கவைப்பதற்காக மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12 என்றும் பவுல் கூறுகிறார் இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 38.எபிரேயர் 6:13 இலே கர்த்தர் தன்னை விட பெரியவர் இல்லாததால் தன் மீதே ஆணையிட்டார் என்கிறது. ஆனால் அல்லாஹ் காற்றின் மீது பேனை மீது வானத்தின் மீது எல்லாம் சத்தியம் செய்கிறான் என்கிறார்-முதலில் இறைவன் செய்பவை பற்றி அவன் விசாரிக்கப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்கப்படுவார்கள் (குர்ஆன் 21:23). -இறைவன் தன் படைப்புகள் மீது சத்தியம் செய்ய பூரணமாக உரிமை படைத்தவன். ஏனெனில் அவன் தான் விரும்பியதை கட்டளையிடுவான் சட்டமாக்குவான் (குர்ஆன் 5:1). படைப்புகளால் இறைவனுக்கு சட்டம் போட முடியாது. -வேடிக்கையாக எபிரேயர் 6:13ஐ எழுதிய நபர் பழைய ஏற்பாட்டை எப்போதும் தப்பு தப்பாக படித்து கதை சொல்பவர். உதாரணமாக நோயாளி தேவனிடம் செய்யும் ஜெபமான சங்கீதம் 102:25-27ஐ அப்படியே தேவன் தன் மகனிடம் சொன்னது என உருட்டுவார் (எபிரேயர் 1:10-12). சேவகன் தன் ராஜாவை புகழ்ந்து பாடிய சங்கீதம் 45ஐ தேவன் தன் மகனை குறித்து கூறியதாக (எபிரேயர் 1:8-9) உருட்டுவார். ஏசாயா தன்னை குறித்து சொல்வதை (ஏசாயா 8:18) இயேசு ஏசாயா மூலம் பேசியதாக உருட்டுவார் (எபி 2:13), தாவீது தன்னை குறித்து சங்கீதம் 22:22இலே கூறுவதை இயேசு தன்னை குறித்து கூறவுதாக உருட்டுவார் (எபி 2:12). மெல்கிசேதேக் பற்றி வம்சவரலாறு பிறப்பு மரணம் பற்றி தோராவில் இல்லாததால் , அவர் தாய் தகப்பனற்றவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன் என உருட்டுவார் (எபி 7:3). நான் அவர்களின் நாயகராக இருந்தேன் என எரேமியா 31:32 உள்ளதை நான் புறக்கணித்தேன் என உருட்டுவார் (எபி 8:9). என் செவிகளை திறந்தீர் என தாவீது வேண்டுவதை (சங்கீதம் 40:6) , அப்படியே எனக்கு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர் என இயேசு சொன்னதாக உருட்டுவார் (எபி 10:5).. இப்படிப்பட்ட நபரே இதன் ஆசிரியர். அதாவது வேதத்தை எப்படி படிக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமே இவர் தான். வேடிக்கையாக தேவன் தன் படைப்பாகிய யாக்கோபின் மகிமையின் மீது ஆணையிட்டுள்ளார். அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். ஆமோஸ் 8:7 இதுவும் கர்த்தர் என் கிறிஸ்தவர்கள் உருட்டுவார்கள். ஆனால் அதே ஆமோஸ் 6:8 இலே கர்த்தர் இதே யாக்கோபின் மகிமையை (மேன்மை) வெறுப்பதாக சொல்கிறார். அப்படியென்றால் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறாரா என்ன? மாறாக யாக்கோபின் மகிமை என்பது இஸ்ரவேலர் தம்மை உயர்வாக கருதுவதை குறிக்கிறது. அதாவது பிக்காளித்தனம். அதன்மீது தான் கர்த்தர் ஆணையிட்டார். கர்த்தரே இப்படி ஆணையிட்டுருக்க எபிரேய ஆசிரியர் இதை ஒழுங்காக படிக்காமல் எழுதியதை கர்த்தரே சொல்வதாக உருட்டுவது சரியல்ல! இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 39.இயேசு வருத்தப்பட்டு பாரம்சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறல் தருவேன் என்கிறார். ஆனால் அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை என்கிறார்.1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்? அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது. இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம். காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர்.. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி.. ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத்தில் தள்ளுவது சரியானதா? அல்லது நேசிப்பதில்லை என முன்பே அறிவித்து, இறைவன் நேசிக்கும் விதமாக வாழுவதற்கு தூண்டுவது நேசமா? 2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? அவனது கருணையின் அளவு இவ்வாறே இறைவன் யாரை நேசிப்பான் என்பதையும் குர்ஆன் கூறுகிறது. நன்மை செய்வோரை நேசிக்கிறான் (2:195), பாவத்தை விட்டு மனந்திரும்புவோரையும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான் (2:222), நபியை பின்பற்றுவோரை நேசிக்கிறான் (3:31), இறையச்சமுடையோரை நேசிக்கிறான் (3:76), பொறுமையாளர்களை நேசிக்கிறான் (3:146),இறைவன் மீது பொறுப்புச்சாட்டி முழு நம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான் (3:159), நீதமாக நடந்துகொள்வோரை நேசிக்கிறான் (5:42), பூமியில் உள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள் , வானத்திலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் (அபூதாவூத் 4941), கருணையுடையோருக்கு கருணையுள்ளவனான இறைவன் கருணை காட்டுவான் (திர்மிதீ 1924), இரக்கம் காட்டுங்கள் இரக்கம்காட்டப்படுவீர்கள். மன்னியுங்கள்.மன்னிக்கப்படுவீர்கள் (அதபுல் முஃப்ரத் ஹதீஸ் 380) இப்படி இறைவனது அன்பை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகுவதற்கு இறைவன் யாரை நேசிப்பான் என கூறி வழிகாட்டவும்பட்டுள்ளது. அத்தோடு பாவியானவன் திருந்தி வருவதை குறித்து , பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை மீண்டும் கண்டுபிடிக்கும்போது அடையும் மகிழ்ச்சியை விட அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைகிறான் ( புகாரி 6309, முஸ்லிம் ). கருணையுள்ள பாலூட்டும் பெண் தன் குழந்தையை நேசிப்பதை விட அல்லாஹ் தன் அடியார்களை நேசிக்கிறான் (புகாரி 5999) தன் அடியார்களை மன்னிக்கவும் நேர்வழியில் செலுத்தவும் இலேசாக்கவும் விரும்புகிறான் (குர்ஆன் 4:26-28) பாவம் செய்து தமக்கு தாமே அநீதம் இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அவன் எல்லா பாவங்களையும் மன்னித்துவிடுவான் (39:53) இவ்வாறு பாவிகளை மனந்திரும்பி வர அழைக்கிறது இஸ்லாம்! படைப்புகள் தமக்கிடையே அன்புகாட்டிக்கொள்வதற்கு காரணம் அல்லாஹ் படைத்த கருணையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே.(புகாரி 6000) அந்தளவுக்கு இறைவன் படைத்த கருணையும் விசாலமானது, கருணையையே படைத்த கருணையாளனின் கருணை விசாலமானது. இதனால் தான் அல்லாஹ்வின் கருணையை அறிந்த காஃபிர் கூட சுவர்க்கத்தில் அவநம்பிக்கை கொள்ளமாட்டான் (புகாரி 6469) அதாவது அவனையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவித்துவிடுவான் என்று எண்ணுமளவுக்கு கருணையுள்ளவன். 3.இந்த
தற்குரிகள் கூறுவது போல கர்த்தரோ இயேசுவோ பாவிகளை நேசிப்பார்களா? 1.புறஜாதிகள் பாவம் செய்ததாலும் தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினாலும் அவர்களை நேசிக்கவில்லை. அவர்களின் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (1 சாமுவேல்
15:2-3, உபாகமம் 20:16-18) 2.தான்
தேர்வுசெய்த மக்களில் எவராவது தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினால் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (உபாகமம்
13:6-10,12-16, 17:2-5) குறிப்பாக சாலமோன் தேவனின் கட்டளையை மீறியதாக பைபிள் கூறுகிறது. அத்தோடு தேவன் அவன்மீது கோபமானார் என
1 இராஜாக்கள் 11:10 3.இயேசு
தன்னை ஏற்காதோரை தேவன் மன்னித்துவிடவும் கூடாது அவர்கள் திருந்திவிடவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.(மாற்கு 4:11-12) 4.சிலைவணங்கிளை நரகத்தில் போட்டு கொல்லுவார் (வெளி 21:8) 5.ஏசா பிறந்து தீமை செய்ய முன்பே அவனை தன் தம்பிக்கு ஊழியம் செய்வான் என தீர்மானித்து கர்த்தர் வெறுத்தார் என்கிறார் பவுல் (ரோமர் 9:11-13) 6.அக்கிரமக்காரரை கர்த்தர் வெறுக்கிறார் (சங்கீதம்
5:5) 7.துன்மார்க்கரை கர்த்தரின் உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:5) 8.குடும்பத்திலுள்ள சிலைவணங்கிகள் மற்றும் பாவிகளோடு ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது. அவர்களை துரத்தி விட வேண்டும் (1 கொரிந்தியர் 5:11-13) 9.இயேசுவை மக்கள் நம்பாததற்கு காரணம், தேவன் அவர்களின் கண்களை குருடாக்கி இருதயத்தை கடினப்படுத்தியமையே (யோவான் 12:40) 10.அப்படி இயேசுவை நம்பாதோரின்மீது தேவனின் கோபம் இருக்கும் (யோவான்
3:36) அத்துடன் அவன்மீது ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகும் (யோவான் 3:18) அதாவது அவிசுவாசிமீது தேவனுக்கு அன்பு கிடையாது... மாறாக கோபமே இருக்கும் என பைபிளே சொல்லிவிட்டது (யோவான் 3:36) இயேசு பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைக்கவே வந்தார்.. மனந்திருந்தாதோரை நேசிக்கவில்லை. மாறாக அவர்கள் மன்னிக்கப்பட கூடாது என்ற கடுமையானவராக தான் இருந்தார் (மாற்கு 4:11-12) ஆகவே இயேசு பாவிகளை நேசித்தார் என்பது மனந்திருந்தாத பாவிகளை அல்ல.. மனந்திருந்துவோரை மட்டுமே. ஆகவே இதுவும் தற்குரித்தனமான குற்றச்சாட்டே. இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 40.அல்லாஹ் நரகத்திற்கென்று சிலரை படைத்தான். ஆனால் கர்த்தர் திருந்த வேண்டும் என எதிர்பார்க்கிறார் என்கிறார்இறைவனுக்கு தன் படைப்புகளை படைக்க
முன்பே அவர்கள் எப்படி நடப்பார்கள் எங்கே செல்வார்கள் என பூரணமாக அறிந்தே
படைத்தான் -அத்தோடு
அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49,
4:40) -இந்த
வசனத்திலேயே அவர்கள் நரகம் போவதற்கான காரணம், அவர்கள் கண்களிருந்தும் பார்க்காமலும்
காதுகளிருந்தும் கேட்காமலும் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காமலும் இருந்ததால்
தான் என அவ்வசனமே சொல்கிறது. (7:179) -நரகத்தில்
பாவிகள் தம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்பே நுழைவார்கள் (39:71,40:11,67:11,6:30).
அத்தோடு தாம் செய்த பாவங்களினால்
தான் நுழைவார்கள் (7:36-40) -நரகத்திற்கென்றே
படைத்திருப்பதென்பது, இறைவனது
முன்னறிவினால் அவர்கள் தம் பாவங்களால் நரகத்நிற்கே செல்வார்கள் என அறிந்து
படைத்ததாலும், இறைவன்
அனுமதியின்றி அவன் ஆற்றல் வழங்காமல் எதையும் யாருக்கும் செய்ய முடியாது என்பதால்
மட்டுமே. ஆனாலும் அவனவன் தன் சுய தேர்வின்
படியே தன் விருப்பத்தின் படியே பாவம் செய்கிறான். நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம் செய்வதில்லை! இது போன்றவற்றில் பொதுவாக
மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23
IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக
இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக
இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்
கண்டுபிடிக்கிறார்? அவருடைய
விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ
யார்? உருவாக்கப்பட்ட பொருள்
உருவாக்கினவனைப் பார்த்து: நீ
என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21]
மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே
குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான
காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக்
காண்பிக்கவும், தமது
வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா
பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட
கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக
இருந்தால் உனக்கு என்ன? https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam பைபிளிலும் கர்த்தரே விசுவாசிக்காதபடி
இருதயத்தை கடினப்படுத்துபவர் யோவான் 12:40
IRVTam [40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல்
இருப்பதற்கும், அவர்களுடைய
கண்களை அவர் குருடாக்கி, அவர்கள்
இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam
பொய்யை விசுவாசிக்கவேண்டி
வஞ்சகத்தையும் அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர்
2:11-12). நியாயமின்றி உத்தமமான யோபுவை நிர்மூலமாக்க
சாத்தான் ஏவியதை செய்தவர் (யோபு
2:3).. அத்தோடு தம் பிள்ளைகளை நரபலி கொடுக்க
வைத்து வழிகெடுத்தவரும் அவரே(எசேக்கியேல்
20:25-26). ஜனங்களை
வழி தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17,)
கெடுதியை படைத்தவர் (ஏசாயா 45:7),
கெடுதியாக நடந்துகொள்ள வைப்பவர் (சங்கீதம் 105:25)
பொல்லாத ஆவியை அனுப்பி ஜனங்களை
பாவம் செய்ய வைப்பவர் (1 சாமுவேல்
18:10, 19:9, 1 இராஜாக்கள்
22:18-23) இப்படி கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு மாற்றுமத ஜாதிகளை உயிரோடு
விட்டு வைத்ததே இஸ்ரவேலர் யுத்தம் செய்து பழகுவதற்கு தான் (நியாயாதிபதிகள் 3:1-3) ஆதலால் இது தற்குறித்தனமானது 41.உபாகமம் 33:14 இலே சூரியன் பக்குவப்படுத்தும் கனிகளாலும் சந்திரன் பக்குவப்படுத்தும் பலன்தளினாலும் என்று இருப்பது அறிவியல் என்கிறார்இது ஒளித்தொகுப்பை குறிக்கிறது
என்பதற்கு என்ன ஆதாரம்? சந்திரன்
பக்குவப்படுத்தும் பலன்கள் என்ன?. சூரியன் இரவில் தென்படாததால், சூரியனுக்கு கூடாரம் இருப்பதாக
எழுதியுள்ளனர் சங்கீதம் 19:4
TAOVBSI [4] ஆகிலும், அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக்
கடைசிவரைக்கும் சொல்லுகிறது; அவைகளில்
சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார் https://bible.com/bible/339/psa.19.4.TAOVBSI இதே போல் ஒளித்தொகுப்பை
கண்டுபிடித்த அறிஞர்கள் தேவர்களா? சூரிய ஒளி படாத இடஙாகளில் செடிகள் வாடுவதை
இறப்பதை அனுபவ ரீதியாகவே மக்கள் காணும் ஒன்று தான். இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 42.ஆமோஸ் 5:8 இலே கர்த்தர் சமுத்திரத்தின் தண்ணீரை பூமியின் மேல் ஊற்றுகிறவர் என்கிறது அறிவியல் உண்மை என்கிறார்கடல் நீர் மட்டுமே மழைக்கு காரணம்
அல்ல... ஆறு ஏரிகளில் இருந்து ஆவியாகும்
நீரும் காரணமே. இதேபோல் அரிஸ்டோட்டலும்
சொல்லியுள்ளாரே. அதாவது நீர் ஆவியாகி மழை பெய்வது
குறித்து சொல்லியுள்ளார். இதனால் அரிஸ்டோட்டல் தேவன்
என்றாவாரா? அவர் பைபிளை படித்து சொல்லவில்லை சூரியனை படைக்க முன்பே பகலை
படைத்தது எந்தவித அறிவியல்? (ஆதி 1:3,14-16) 43.தொழுபவருக்கு முன்னால் பெண்,நாய் ,கழுதை குறுக்கே சென்றால் தொழுகை துண்டித்து விடும் என்று சொல்வதை குறிப்பிடுகிறார் (முஸ்லிம் 886)ஆணுக்கு பெண்ணின் மீதுள்ள
ஈர்ப்பினால் அவள் அவனுக்கு குறுக்காக சென்றால் தொழுகை பாதிக்கப்படும். நாய் திடுக்கத்தை ஏற்படுத்துவதால்
அவனது தொழுகை பாதிக்கப்படும். இதே
போன்றே கழுதையும் . ஆனாலும் நபிகளார் இரவுத் தொழுகை
தொழும்போது மாதவிடாயில் இருக்கும் மனைவி வீடு சிறியது என்பதால் அவருக்கு
குறுக்கே காலை நீட்டி உறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது-புகாரி 513,519 பொதுவாக கவனம் சிதறுவதை குறித்தே
கூறப்படுகிறது. பைபிள் பெண்ணை மதித்து கிழித்து
விட்டது பெண்குழந்தை பெற்றால் ஆண்குழந்தை
பெறுவதை விட இரண்டு மடங்கு தீட்டு ஏற்படும் என லேவியராகமம் 12:1-5 கூறுகிறது மாதவிடாய் பெண்ணோ ஒட்டுமொத்த
அசுத்தப்பிராணியாக சித்தரிக்கப்படுகிறாள்- லேவியராகமம் 15:19-28 (இது
அவளுக்கு ஓய்வு கொடுப்பது அல்ல.. அவளை
அசுத்தம் என்று சொல்கிறது) 44.பைபிள் களைப்பிற்காக தான் சரக்கடிக்க அனுமதித்தது. ஆனால் குர்ஆன் மறுமையில் மது ஆறு ஓடும் இவ்வுலகில் குடிப்பனுக்கு அங்கே கொடுக்கப்படாது என்பதெல்லாம் குறிப்பிடுகிறார்கர்த்தர் குடித்து சந்தோசமாக இரு
என்று சொன்னதாக பைபிள் சொல்வதால் தானோ இதை விமர்சிக்கிறார்கள்? உபாகமம் 14:26
IRVTam [26] அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து
வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய
சந்நிதியில், நீயும்
உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச்
சந்தோஷப்படுவீர்களாக. https://bible.com/bible/1899/deu.14.26.IRVTam
(இங்கே
குடிக்க சொல்லவில்லை. சாப்பிடத்தான்
சொல்கிறது என சமாளிக்க பார்க்கலாம். ஆனால் உணவுகளோடு குடிபானத்தையும் சேர்த்து
வரும்போது சாப்பிடுதல் என்பதை தான்
கூறும் (உதாரணமாக
ஆதி 18:8 )) *சோகத்தில்
இருப்பவன் சரக்கு அடிக்கலாம் : நீதி மொழிகள் 31:6-7 IRVTam [6] மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத்
திராட்சைரசத்தையும் கொடுங்கள்; [7] அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம்
நினைக்காமல் இருக்கட்டும். https://bible.com/bible/1899/pro.31.6-7.IRVTam இப்படி மது குடிப்பதற்கு பைபிள்
முற்றாக தடுக்கவில்லை என்பதாலும் அடிமையாகாத அளவுக்கு குடித்துக் கொள்ளலாம்
என்று நம்புவதால் இது தப்பாக படுதோ? சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47,
52:23, 56:19) இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 45.எசேக்கியேல் 23 கர்த்தருடைய கண்டிப்பு என்கிறார். ஆபாசமல்ல என்கிறார்சிலை வணக்கத்தை கண்டிப்பதாக கூறிக்கொண்டு முலைகளை
அமுக்கினார்கள் கழுதை ஆணுறுப்பு காதலர்கள் அவர்களின் விந்து குதிரை விந்து என
சொல்வது கண்டிக்கும் முறையா? எசேக்கியேல் 23:3,
20-21 IRVTam [3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம்
செய்தார்கள்; அங்கே
அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள்
தொடப்பட்டது. [20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற
விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [21] எகிப்தியர்களால் உன்னுடைய
கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த
முறைகேடுகளை நினைத்துவருகிறாய். https://bible.com/bible/1899/ezk.23.3-21.IRVTam எசேக்கியேல் தீர்க்கதரிசியின்
புத்தகம் 16:25-26 TAERV [25] ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த
மேடைகளைக் கட்டினாய். பிறகு
நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப்
பயன்படுத்தினாய். நீ
உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால்
அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று
நடந்துகொண்டாய். [26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு
இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ
அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். https://bible.com/bible/3154/ezk.16.25-26.TAERV சிலை வணக்கத்தை கண்டிப்பதாக கூறி நீலப்படம் எடுத்தாலோ அதற்குரிய நேர்முக வர்ணனை எழுதினாலோ அது
கண்டிப்பாகுமா? இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 46.உன்னதப்பாட்டு 4:8 அப்பெண் அந்த ஆணின் மணவாளி என்று இருப்பதால் இப்படி முலை இடுப்பு தொடை வர்ணிப்பது வழிகாட்டல் என்கிறார் போதகர்அதிலே காதலியை தங்கச்சி என்றும்
கூப்பிடப்பட்டுள்ளது. உன்னதப்பாட்டு 4:9 IRVTam [9] என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள
ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். https://bible.com/bible/1899/sng.4.9.IRVTam
இதேபோல் 4:10,12&
5:1-2 இலும் சகோதரி என்றே காதலியை
கூப்பிடுகிறார். இதனால் தங்கச்சியோடு இப்படி நடக்க
வழிகாட்டுகிறது என்று எடுக்கலாமா? சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:5 TAERV [5] உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை
மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. https://bible.com/bible/3154/sng.4.5.TAERV (வாவ்) சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:1-3, 7-8 TAERV [1] இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக
அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில்
கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது. [2] உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான
கிண்ணம்போல உள்ளது. உன்
வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது. [3] உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு
குட்டிகள் போன்றுள்ளன. [7] நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள
கனிகளைப் போன்றுள்ளன. [8] நான் இம்மரத்தில் ஏற விரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள்
திராட்சைக் குலைகளைப் போலவும், உன்
சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக. https://bible.com/bible/3154/sng.7.1-8.TAERV சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:1-2 TAERV [1] நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய
சகோதரனைப்போன்று இருந்தால் நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட
முடியும். இதனைத் தவறு என்று எவரும்
சொல்லமாட்டார்கள். [2] நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு
அழைத்துச் செல்வேன். என்
தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன். நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக்
கொடுப்பேன். கந்தவர்க்கமிட்ட
திராட்சைரசத்தையும் கொடுப்பேன். (இது
பச்சை கள்ளக்காதல் என தெளிவாக புரிகிறது. கணவனாக இருந்தால் முத்தமிட யாராவது
விமர்சிப்பார்களா? https://bible.com/bible/3154/sng.8.1-2.TAERV எந்த கணவனாவது தன் மனைவியை இப்படி
வர்ணித்து மற்றவர்கள் வாசிக்க எழுதுவானா? தன் மனைவியின் முலை இப்படி தொப்புள் இப்படி
என சொல்வது கணவனா புரோக்கரா? 47.குர்ஆன் சுவர்க்கத்தில் மனைவியராக கொடுக்கப்படும் பெண்களை வர்ணிப்பது ஆபாசம் என்கிறார்அப்பெண்கள் திருமணம் முடித்தே
கொடுக்கப்படுவர் (குர்ஆன்
52:20) அதிலே அவர்களது அந்தரங்க
உறுப்புகளை வர்ணித்து எதுவும் கூறப்படவில்லை 78:33 இலுள்ள "கவாயிப்"
என்பது கூட முலைகள் முகிழ்ந்த
வயதுள்ள பெண்களை குறிக்கும். அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு
அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே. அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு
திரும்பியபோது அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள் முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை (78:33
இலுள்ள வாசகம்)- இளம்பெண்களை சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள் செய்தது மிகவும் கெட்டது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது (ولا محمدا قتلتم. أردفتمالكواعب ولا (சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது)
11083,தபரானீ (11/247) 11632) இப்படி இளவயது பெண்கள் மனைவியராக
சுவர்க்கத்தில் கிடைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது . உணவு பானங்கள் ஓய்வு என்பதோடு ஆணுக்கு
மிகவும் விருப்பமானது பெண் என்பதால் அவர்களையும் சுவர்க்கத்தில் கொடுப்பான். உலகில் கடவுள் ஆணுக்கு பெண்ணையும்
ஆணுறுப்பு பெண்ணுறுப்பு ஆகியவற்றை படைத்தது போன்றே அதுவும். 48.பைபிள் எருசலேம் அழியும் என்றும் திரும்ப இஸ்ரேல் தேசம் உருவாகும் என்றும் முன்னறிவித்தது நிறைவேறியது என்கிறார்பைபிள் கூறும் தீர்க்கதரிசனங்கள்
என்பவை உறுதியானவை அல்ல ஏனெனில் தேவன் வாக்குக்
கொடுத்துவிட்டு, மனம்
மாறி விடுவேன் என்று தெளிவாக சொல்லியுள்ளார் (எரேமியா 18:7-10) அதனால் நடந்துவிட்டால் தூக்கிப்
பிடிக்கவும் நிறைவேறாமல் போனால் கர்த்தர் மனதை மாற்றிக்கொண்டார் என கதைவிடவும்
வாய்ப்புண்டு. ஆனால் இதற்கு மாற்றமாக அதே
வசனங்களில் யூதர்கள் மீளவும் குடியேறுவதற்கு முன்பு மனந்திருந்தி கர்த்தர்
பொருந்திக் கொள்ளும் விதமாக மாற
வேண்டும் என்று உபாகமம் 30:1-4 சொல்கிறது. மனந்திருந்தி மீள் சேர்க்கப்பட்ட
பின் அவர்களின் இருதயங்கள் சுத்தமாக இருக்கும் என்றெல்லாம் அதே எசேக்கியேல் 11:17-20 சொல்கிறது ஆனால் குமாரனை விசுவாசிக்காதவன்
மேல் கர்த்தரின் கோபம் இருக்கும் என்று யோவான் 3:36 கூறுகிறது. அத்தோடு மோசேயை போன்ற தீர்க்கதரிசியை
நம்பாதவன் தன் ஜனத்தலிருந்து அழிந்து போவான் என்றும் அப்போஸ்தலர் 3:23 கூறுகிறது. ஆக கர்த்தர் தான் கோபமாக இருக்கிற
ஜனத்தை மீள் குடியேற்றினார் என கதைவிடுவது எவ்வளவு கேவலம்? உண்மையில் இஸ்ரேல் தேசம் உண்டாக
காரணம் கர்த்தர் பரிவு கொண்டதால் அல்ல.... பிரித்தானிய ஏகாதிபத்தியமும் ஐநாவும்
ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் கொண்ட பரிதாபவும் , அதிகார துஷ்பிரயோகமுமே காரணமாகும். இன்றுவரை அமெரிக்கா போடும்
பிச்சையில் தான் இஸ்ரேல் நிற்கிறது. இதற்கும் பைபிளுக்கும் சம்பந்தமில்லை! 49.பூமி உருண்டை என ஏசாயா 40:22 சொல்கிறதாம். குர்ஆன் 78:6 பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா என்கிறதாம்பூமி உருண்டை என்பது
மொழிபெயர்ப்பாளர்களின் தில்லுமுல்லு. இது வட்டத்தையே குறிக்கும். நிலம் வட்டம் என்று இவ்வசனம்
கூறுகிறது. அந்த வட்ட நிலத்தை சுற்றி தான்
கடல் இருப்பதாக பைபிள் கூறுகிறது: நீதிமொழிகள் 8:27
TAERV [27] கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய
நான் அங்கிருந்தேன். கர்த்தர்
கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான்
அங்கிருந்தேன். https://bible.com/bible/3154/pro.8.27.TAERV
நிலத்தை தான் கர்த்தர் பூமி (ארץ) என்று பெயரிட்டார் (ஆதி 1:10) உயரமான இடத்தில் ஏறினால் நம்மை
சுற்றி வட்டவடிவத்திலே பூமி தென்படுவதால், பூமி வட்டம் என்றே இவ்வசனம் சொல்கிறது. நிலத்தை சூழ தண்ணீர் இருப்பதை
கண்டதால், இந்த பூமி தண்ணீருக்கு மேலே
பரப்பப்பட்டுள்ளது (சங்கீதம்
136:6).என எழுதியுள்ளனர். வானம் எமக்கு வெள்ளையாக /இளநீலமாக தென்படுவதாலும் பூமியின்
ஓரத்தில் அவை இணைவது போன்று தென்படுவதால், அதை கூடாரத்தின் துணி போல தென்படுவதாக தான்
இந்த புத்தகம் சொல்கிறது. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 40:22 TAERV [22] கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல்
அமர்ந்திருக்கிறார். அவரோடு
ஒப்பிடும்போது, ஜனங்கள்
வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள். அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல்
பரப்புகிறார். அவர்
வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார். https://bible.com/bible/3154/isa.40.22.TAERV
இதிலே அறிவியல் ஏதுமில்லை. பூமியிலுள்ளவர்களுக்கு பூமி
விரிக்கப்பட்டுள்ளது விரிப்பாக உள்ளது. அது கோளமாக இருந்தாலும்
பூமியிலுள்ளவர்களுக்காக இறைவன் அவ்வாறு ஆக்கியுள்ளான். அதுவும்
நிலத்தையே குறிக்கிறது. 50.காற்றுக்கு நிறையுண்டு என பைபிள் சொல்கிறதாம்அப்படியென்றால் காற்றுக்கு நிறை
உண்டு என கண்டுபிடித்தவர் கடவுளாவாரா? அவர்களுக்கு அது பற்றிய அனுபவ அறிவு
இருந்திருக்கலாம். ஆனாலும் பைபிளில் இறைவனுடைய
வசனங்களும் உண்டு. காற்றின் காரணமாக மரங்கள் கீழே விழுவது
பொருட்கள் பறப்பது என்பதை அனுபவ ரீதியாக யோபு அறிந்திருப்பார். வானவில் மேகத்தில் வைக்கப்பட்டதாக
கதைவிடுவது எத்தகைய அறிவியல்? (ஆதி 9:13-16 உண்மையில் இது ஒளிமுறிவால்
ஏற்படுவதோடு, இது
வில் வடிவமே அல்ல... மாறாக பூரண முழு வட்டம் ஆகும். கீழிருக்கும் பகுதி நமக்கு தரையில்
இருந்து பார்த்தால் தென்படாது. உயர்ந்த
மலையில் ஏறினால் பூரண வட்டத்தையே பார்க்கலாம். 51.நாகூம் 2:4 போக்குவரத்து பற்றிய முன்னறிவிப்பு என உருட்டுகிறார்உண்மையில் இது நினிவே
அழிக்கப்படுவதற்கு எதிரிகள் இவ்வாறு வருவார்கள் என்றே உள்ளது. போக்குவரத்து முன்னறிவிப்பு என்பது
மாமாவின் உருட்டு மட்டுமே. 52.பூமி அந்தரத்தில் தொங்குகிறது என்று பைபிள் சரியாக சொல்கிறதாம்பூமியை அந்தரத்தில் தொங்க
வைத்திருப்பதாக சொல்வது மாபெரும் காமடி ஆகும். பூமி எங்கும் தொங்கிக்கொண்டு இல்லை.. மாறாக இயங்கிக் கொண்டே உள்ளது. வானத்திற்கு கீழே நிலம் (பூமி) இருப்பதால் அது
தொங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், கயிறு
எதுவும் தென்படாததால் அந்தரத்தில் தொங்குகிறது என்று எழுதியுள்ளனர் குறிப்பு: பைபிள் பூமி என்பது நிலத்தை தான். நிலத்தை தான் கர்த்தர் எரெத்ஸ் (ארץ) என பெயரிட்டார்: ஆதி 1:10
IRVTam [10] தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். https://bible.com/bible/1899/gen.1.10.IRVTam போதகர்கள் உருட்டுவது போல கடலையும்
நிலத்தையும் உள்ளடக்கிய கோள வடிவத்தை இப்படி சொல்லவில்லை. இந்த பூமியை தான் தண்ணீரில் பரப்பி வைத்திருப்பதாகவும் (சங்கீதம் 136:6)
அத்திவாரத்தில் வைத்திருப்பதாகவும்
(சங்கீதம் 82:5)
அதற்கு தூண் இருப்பதாகவும் (யோபு 9:6) பைபிள் சொல்கிறது 53.முகம்மது நபி நோன்பு போன்ற நிலையில் தன் மனைவியரை கட்டிப்பிடிப்பார்கள், ஆடையில் இந்திரியம் பட்டு அது கழுவப்பட்ட அடையாளமுள்ள நிலையிலே தொழுகைக்கு செல்வார்கள், மனைவிக்கு மாதவிடாய் நேரத்தின்போது மடியில் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதியிருக்கிறார், கருப்பையில் விந்து உள்ளபோது வானவர் இறைவனிடம் இது விந்து என்கிறார் என்பதை குறித்து கேலி செய்கிறார்நோன்பு வைத்த நிலையில் தன் மனைவியை கட்டிப்பிடித்தால் பைபிள் இறைவேதமாகுமா? நோன்பு வைத்த நிலையில் மனைவியை கட்டிப்பிடிப்பது கூடும் என்பதற்கு சான்றே இது. அந்த காலத்தில் ஒரே ஆடையே பொதுவாக அனைவருக்கும் இருந்தது புகாரி 352)(.. அப்படி இருப்பதால் விந்து பட்டால் கழுவிவிட்டு அல்லது சுரண்டி விட்டு அதை தான் அணிய முடியும்.
மாதவிடாய் பெண்ணை உடலுறவை தவிர மற்ற அனைத்திலும் சேர்த்துக்கொள்ளலாம் -முஸ்லிம் 507). அதனால் மடியில் படுத்து கொண்டு குர்ஆன் ஓதுவதால் எந்த பாதிப்பும் இல்லை.. கருப்பையில் வானவர் இறைவனிடம் விந்து நிலையிலுள்ள படைப்பை அதன் நிலையை குறித்து கூறினால் என்ன பிரச்சினை? அதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 54.அபிஷாக் என்ற அழகான பெண்ணை தாவீதின் மடியில் படுத்து சூடாக்குவதற்கு ஏற்படுத்தியதாக 1 இராஜாக்கள் 1:1-4 ஞொல்வதை உளவியல் என்கிறார். ஆயா வேலை என்கிறார்.அப்பெண்ணை மடியில் படுக்க வைத்து
சூடாக்குவது ஏன்? இப்படி
த் ஆயாமார் எஜமானின் மடியில் படுப்பார்களா? இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 55.இயேசு அத்திமரத்திடம் போய் ஏமாந்ததை அல்லாஹ் நரகத்திடம் நீ நிரம்பி விட்டாயா என்று கேட்பான் என்று உள்ளதே என்பதையும் விசம் தடவப்பட்ட கறியை நபி சாப்பிட்டாரே என்பதையும் குறிப்பிடுகிறார்இறைவன் நரகத்திடம் கேட்பதையும் அது
கூறும் பதிலையும் முன்பே குர்ஆன் கூறிவிட்டது. அதாவது நரகம் கூறும் பதிலையும் இறைவன்
நமக்கு கூறிவிட்டான் (குர்ஆன்
50:30) ஆக இது அறியாமையால் கேட்கும் கேள்வி அல்ல.. அதன் பிரம்மாண்டத்தை
வெளிப்படுத்துவதற்கு கேட்கும் கேள்வி. அத்தோடு முகம்மது நபி மனிதரேயாவார். அவருக்கு அவ்விசம் தடவப்பட்ட உணவை சாப்பிட
வைத்து அதன் பின்பும் அவரை காப்பாற்றி 4 வருடம் வாழவைத்தது அவரை உண்மை தூதர்
என்பதற்கு சான்று. இயேசுவோ பசியினால் போய் ஏமாந்தார். அதுவும் சீசனே அல்லாத காலத்தில்.. மாற் 11:12-13
IRVTam [12] அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து
திரும்பிவரும்போது, அவருக்குப்
பசியுண்டானது. [13] அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத்
தூரத்திலேப் பார்த்து, அதில்
அத்திப்பழம் கிடைக்குமா? என்று
பார்க்க வந்தார். அது
அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர்
மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை. https://bible.com/bible/1899/mrk.11.12-13.IRVTam இது அவர் கடவுளல்ல என்பதற்கு ஓர்
ஆதாரம். 56.யோயாக்கீன் ராஜாவானது இரண்டு தடவை அபிசேகம் பண்ணப்பட்டதை குறிப்பது போல உருட்டுதிறார்யோயாகீன் ராஜாவான போது எத்தனை வயது? அவன் எவ்வளவு காலம் ஆண்டான்? 1.பதினெட்டு
வயது- ஆட்சிக்காலம் மூன்று மாதம் 2 இராஜாக்கள்
24:8 TAOVBSI [8] யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு
வயதாயிருந்து, எருசலேமிலே
மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம்
ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின் பேர் நெகுஸ்தாள். https://bible.com/bible/339/2ki.24.8.TAOVBSI 2.எட்டு
வயது. ஆட்சிக்காலம் மூன்று மாதம் பத்து
நாட்கள் 2 நாளாகமம்
36:9 TAOVBSI [9] யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு
வயதாயிருந்து, மூன்று
மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்
செய்தான். https://bible.com/bible/339/2ch.36.9.TAOVBSI (எட்டு
வயது பாலகன் என்ன பொல்லாப்பை செய்தான்? வெட்கக்கேடு!!) உண்மையில் என்ன நடந்துள்ளது என்றால், "அசர்- பத்து"
என்பதை இடத்தை மாற்றி
எழுதியுள்ளார் 2 நாளாகமம்
ஆசிரியர். எட்டு என்பதற்கு பின் வரும் வுஅசரேஹ் (ועשרה) (பத்தும்) (எபிரேயத்தில் பதினெட்டு என்பதை எட்டு
பத்தும் (8+10) என்றே எழுதுவர்) என்பதை மூன்று மாதங்கள் என்பதற்கு பின்னால் வுஅசரேத்
(ועשרת) என்று தப்பாக எழுதிவிட்டு நாட்கள்
என்பதை மேலதிகமாக சேர்த்துள்ளார். இது தான் இந்த முரண்பாட்டிற்கான
காரணம்!! இதை சமாளிப்பதற்கு, தகப்பனாருடன்/பாட்டனாருடன் எட்டு வயதில் ராஜாவானதை
நாளாகமம் கூறுகிறது. தனி
ராஜாவாக 18 வயதில் ஆனதை ராஜாக்கள் புத்தகம்
கூறுகிறது என்பர். ஆனால்
அப்படி பார்த்தால் நாளாகமம் அவனது ஆட்சிக் காலத்தை பத்து வருடமும் மூன்று
மாதமும் பத்து நாள் என்று தானே சொல்ல வேண்டும்? ஆக
இந்த சமாளிப்பெல்லாம் சரிவராது. 57.பிஜெ "அன் தப்தஙூ ஃபள்லன் மின் ரப்பிகும் ஃபீமவாஸிமில் ஹஜ்" என்பதையும் ஹஃப்ஸ் வர்ஷ் வித்தியாசத்தையும் குறிப்பிடுகிறார்ஃபீ மவாஸிமில் ஹஜ் என்பது
அவ்வசனத்திற்கு விளக்கமாக மேலதிகமாக இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறியதாகும். ஹஃப்ஸ் வர்ஷ் என்பன வித்தியாசமான
ஓதல்கள். அவை ஒன்று மற்றொன்றை
உறுதிப்படுத்துவதாகவும் மேலதிக அரத்தத்தை ஒரே வசனத்திலே கொடுப்பதுமாக உள்ளது. உதாரணமாக ஹஃப்ஸ் 1:3 மாலிகி யவ்மித்தீன்-தீர்ப்புநாளின் அதிபதி என்கிறது. வர்ஷ் ஓதலில் "மலிகி யவ்மித்தீன்-தீர்ப்புநாளின் அரசன்" என்கிறது. மறுமையில் இறைவன் அந்நாளின் அரசனாகவும்
இருப்பான் அதிபதியாகவும் இருப்பான். இரண்டுமே இறைவனிடமிருந்து முகம்மது நபி
வழியாக மக்கள் கேட்டு மனனமிட்டு எழுதி ஓதியவையே. இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 58.புகாரி 268 முகம்மது நபி ஒரே இரவில் 9 மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள் என்பதை குறிப்பிடுகிறார்நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம்
வருபவர்களாக இருந்தார்கள். அப்போது
11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள். அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி
கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268 நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம்
சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக
இருந்தனர். இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என
அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது: ஒரு நாள் நபிகளார் அனைத்து
மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218) இது எப்போது நடந்தது என்றால்
நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை
அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம்
சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும் என ஆயிஷா (ர) கூறுகிறார்கள்- புகாரி 267,270 அதாவது இஹ்ராம் அணிவதற்கு முன் தன்
அனைத்து மனைவியருடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். வழமையாக நடப்பது போன்று (كان
يدور /كان يطوف ) என்று உள்ளதும் அந்த ஒரு நாளில் ஒரு தடவை
நிகழ்ந்தது என்பதையே இங்கு (அபூதாவூத்
218 -طاف ذات يوم -ஒரு நாள் <மனைவியர் அனைவரிடமும்> வலம்வந்தார்) குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக புகாரி 267 இலும் அன்னை ஆயிஷா (ர) மணம் பூசிவிட்டதை குறிப்பிடுவதற்காகவும் (كنت
أطيب) என்று இதே "كان" என்பதையே பாவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு தடவை நடந்ததே என
புகாரி 270 காட்டுகிறது (தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று
தவறியுள்ளார்கள். அரபியில்
(أنا طيبت-நான் மணம்பூசிவிட்டேன்") என்றே உள்ளது. இது ஆபாசமா?- நிச்சயமாக இல்லை.. இக்காலத்தில் நீலப்பட (2சாமு12:11-12)
கலாச்சாரத்தில் ஊறி இருப்பதால், உடலுறவு என்பதே நீலப்படம் என்று
நினைத்து விடுகிறார்கள். உண்மையில்
அது கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்மீதுமுள்ள உரிமை.. பல நாட்களுக்கு மீண்டும்
தாம்பத்யத்தில் ஈடுபட கிடைக்காது என்பதால் அவர்களுக்குரிய உரிமையை நபிகளார்
பூரணமாக நிறைவேற்றினார்கள். அது
தவறு அல்ல... நீதி. -வழமையாக
எப்படி நடப்பார்கள்? வழமையாக நபிகளார் அனைத்து
மனைவியரிடமும் தினமும் வருவார்கள் என்றும் ஆனாலும்அவர்களை தீண்ட மாட்டார்கள்
என்றும் இறுதியாக யாருடன் இரவு தங்கும் நாளுக்குரியதோ அவரோடே தாம்பத்யத்தில்
ஈடுபடுவார்கள் என அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்- அபூதாவூத் 2135 மனைவியரில் விரும்பியவர்களை (விரும்பும் காலம்) ஒதுக்கி வைக்கலாம் விரும்பியவர்களை
(விரும்பும் காலம்) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில்
யாரை விரும்புகிறீர்களோ அவர்களை உங்களுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம்
ஏதுமில்லை (குர்ஆன் 33:51)
இறங்கிய பின்பும், ஒரு மனைவியுடைய நாளில் மற்ற
மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை
விட்டுக்கொடுக்குமாறு அனுமதி கேட்பார்கள் என்கிறார் அன்னை ஆயிஷா (புகாரி 4789) நபிகளாரிடம் ஒன்பது மனைவியர்
இருந்த காலத்தில் ஒரு மனைவியிடம் சென்றால் மீண்டும் அவரிடம் செல்வதற்கு ஒன்பது
நாட்கள் எடுக்கும். அதனால்
அனைத்து மனைவியரும் அந்த நாளுக்குரிய மனைவியின் வீட்டில் இரவில் ஒன்று கூடுவர். ஆயிஷா (ர) அவர்களின் வீட்டில் ஸைனப் (ர) அவர்களை அன்னை ஆயிஷா என நினைத்து நபிகளார்
அவரிடம் கையை நீட்டினார்கள். அப்போது
அன்னை ஆயிஷா,"இவர் ஸைனப்"
என்றார்கள். உடனே நபிகளார் கையை விலக்கிக் கொண்டார்கள்.. முஸ்லிம் 2898
(1462 ஆங்கில அரபு) இதன்படி அந்த இரவுக்குரிய
மனைவியல்லாதவரை தொடவும் மாட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது. இது சம்பந்தமாக இன்னும் பல
ஹதீஸ்கள் உள்ளன. ஆகவே தன் மனைவியரின் உரிமைகளை
நீண்ட நாட்கள் கழித்தே கொடுக்கவேண்டிய நிலை இருக்கும்போது அனைவரிடமும் ஒரே
இரவில் சென்று வந்தார்கள். அது
அவர்களது நீதியை தான் காட்டுகிறது நீலப்பட (2 சாமுவேல் 12:11-12)
ஆதிக்கத்தினால் இது ஆபாசமாக
தென்படுகிறது: தாவீதின் அனைத்து மனைவியரையும் ஒரே
ஆணுக்கு சப்லை செய்து இஸ்ரவேலர் முன்பாக பட்டப்பகலில் உறவுகொள்ள வைப்பேன் என
கர்த்தர் சொன்னது குறித்து வெட்கமே இல்லை: 2 சாமுவேல்
12:11-12 IRVTam [11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல்
எழும்பச்செய்து, உன்னுடைய
கண்கள் பார்க்க, உன்னுடைய
மனைவிகளை எடுத்து, உன்னுடைய
அயலானுக்குக் கொடுப்பேன்; அவன்
இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை
இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார்
என்று சொன்னான். https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam
இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா 59.ஸுலைமான் நபி தன் 100 பெண்களுடனும் இல்லறத்தில் ஈடுபடுவேன் என சொன்னார் என்பதை குறிப்பிடுகிறார்சுலைமான் நபி தனக்கு பிள்ளை பிறக்க
வேண்டி அவ்வாறு நடந்து கொண்டார்கள். அவர் இவ்வாறு செய்யப்போவதாக சொன்னது
வானவரிடம் ஆகும் (புகாரி
5242) அவர் தன் மனைவிகளோடு பிள்ளை பெற
அவ்வாறு செய்தார். பைபிளிலே விபச்சாரம் செய்விப்பதாக
கர்த்தரே சொல்வதாக எழுதப்பட்டுள்ளதே -2 சாமுவேல் 12:11-12 60.குர்ஆன் 15:68 இலே லூத் நபி தன் மகள்களோடு செய்யுங்கள் என்று சொன்னதாக குறிப்பிடுகிறார்தன் மகள்களுடன் விபச்சாரம்
செய்யுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு நல்ல மனிதர் "இதோ என் மகள்கள். நீங்கள் செய்வதாக இருந்தால்" என்று சொன்னால் திருமணம் முடிப்பதை
தான் குறிக்கும். இவர்கள்
நினைப்பது போல் அல்ல. பைபிளிலே இதே வாசகம் அப்படியே
உள்ளது ஆதி 19:8
IRVTam [8] இதோ, கன்னிகைகளான இரண்டு மகள்கள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே
கொண்டுவருகிறேன், அவர்களுக்கு
உங்களுடைய இஷ்டப்படி செய்யுங்கள்; இந்த
மனிதர்கள் என்னுடைய கூரையின் நிழலிலே வந்ததால், இவர்களுக்கு மட்டும் ஒன்றும் செய்யவேண்டாம்” என்றான். https://bible.com/bible/1899/gen.19.8.IRVTam தன் மகள்களுக்கு இஷ்டப்படி
செய்யுமாறு சொன்னதாக பைபிள் சொல்கிறது. அத்தோடு இப்படி செய்யும் வழமை
இருந்துள்ளது என்பதை பைபிள் கூறுகிறது நியா 19:22-25
IRVTam [22] அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர்
அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத்
தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று
வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள். [23]
அப்பொழுது வீட்டுக்காரனான அந்த
மனிதன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச்செய்யவேண்டாம்; என் சகோதரர்களே, இப்படிப்பட்ட தீமையைச்
செய்யவேண்டாம்; அந்த
மனிதன் என்னுடைய வீட்டிற்குள் வந்திருக்கும்போது, இப்படிப்பட்ட மதிகேட்டைச் செய்ய வேண்டாம். [24] இதோ, கன்னிப்பெண்ணாகிய என்னுடைய மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும்
இருக்கிறார்கள்; அவர்களை
உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரியானபடி
அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும்
இந்த மனிதனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான். [25] அந்த மனிதர்கள் அவன் சொல்லைக்
கேட்கவில்லை; அப்பொழுது
அந்த மனிதன் தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து
விட்டான்; அவர்கள் அவளை பலாத்காரம் செய்து, இரவு முழுவதும் அவளை மோசமாக நடத்தி, அதிகாலையில் அவளைப் போகவிட்டார்கள். https://bible.com/bible/1899/jdg.19.22-25.IRVTam இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 61.துல்கலஸா என்ற சிலையை சுற்றி தவ்ஸ் குல பெண்களின் புட்டங்கள் அசையாதவரை மறுமை ஏற்படாது என்பது குறித்து பேசுகிறார்வயோதிப பெண்கள் அந்த சிலையை சுற்றி
வருவார்கள் அதனால் அவர்களது புட்டங்கள் அச்சிலையை சுற்றி அசையும். அல்லது அவர்களது அத்தகைய ஆட்டமே
அதன் வணக்கமாக கருதுவோராக இருக்கலாம். புட்டங்கள் என்பது பாலியல் உறுப்பா? இது விபச்சார காட்சி வர்ணனையா? அப்படி பைபிள் தானே உள்ளது எசேக்கியேல் 23:3
IRVTam [3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம்
செய்தார்கள்; அங்கே
அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள்
தொடப்பட்டது. https://bible.com/bible/1899/ezk.23.3.IRVTam இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா 62.சுவர்க்கத்தில் ஒரு மனிதன் தனக்கு குழந்தை வேண்டும் என விரும்பும்போது விரைவாக குழந்தை பிறந்து விடும் என்ற கருத்தில் வருவதை குறிப்பிட்டு ஆண்குறி பெண் குறியாக மாறி பிள்ளை பெறுமா என்கிறார் தற்குறிபிள்ளையை பெற்றெடுப்பது அந்த
மனிதனின் மனைவி. இந்த
சாதாரண மேட்டர் கூடவா புரியாது? பெண்ணுறுப்பு வழியாக கையை வெளியே
போட்ட அற்புத பிறப்பு ஆதி 38:27-30
IRVTam [27] அவளுக்குப் பிரசவநேரம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில்
இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. [28] அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன்
கையைப் பிடித்து, அதில்
சிவப்புநூலைக் கட்டி, “இது
முதலாவது வெளிப்பட்டது” என்றாள். [29] அது தன் கையைத் திரும்ப உள்ளே
வாங்கிக்கொண்டபோது, அதின்
சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது
அவள்: “நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும்” என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று
பெயரிடப்பட்டது. [30] பின்பு கையில் சிவப்புநூல்
கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது. https://bible.com/bible/1899/gen.38.27-30.IRVTam இதனால் பைபிள் இறைவேதம் என்றாகுமா? 63.யுத்தத்திலிருந்து வரும்போது உடனே வீட்டுக்கு செல்லாமல் இரவாகி செல்லுமாறும் பெண்கள் சவரக்கத்தி பயன்படுத்தி முடிகளை களையவும் தலைவாரிக்கொள்ளவும் இப்படி செய்யுமாறு கூறுவதை குறித்து ஆபாசம் என்கிறார்மற்ற தோழர்கள் அவரவர் தன் சொந்த
மனைவியரோடு தாம்பத்யத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தான் அவ்வாறு
வழிகாட்டினார்கள். சாதாரணமாக அவர்கள் அலங்கோலமாக
இருக்கும்போது கணவர்கள் சென்றால் வெறுப்பு தானே ஏற்படும். அதற்கு நல்ல பாடத்தை நபிகளார்
காட்டுகிறார்கள் இங்கே நபிகளார் பெண்களிடம் இப்படி
நடக்கட்டும் என கூறவில்லை... மாறாக அவர்களின் கணவர்களிடம் தாமதித்து
போனால் அப்பெண்களே அவ்வாறு தயாராகிக்கொள்வார்கள் என கருத்தை சொல்கிறார்கள். (முஸ்லிம் 2909) இதை விமர்சிக்க ஏதாவது தகுதி
இருக்கிறதா? இதென்ன பிரமாதம் கர்த்தரே சேவிங்
பண்ணுவிப்பாராம் ஏசாயா 7:20
IRVTam [20] அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின
சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா
ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் சிரைத்துப்போடுவிப்பார். https://bible.com/bible/1899/isa.7.20.IRVTam கால் மயிறு என்பது அந்தரங்க
உறுப்பின் மயிரை தான் என் நேரடியாகவே NIV மொழியாக்கம் சொல்கிறது: Isaiah 7:20 NIV [20] In that day the Lord will use a
razor hired from beyond the Euphrates River—the king of Assyria—to shave your
heads and private parts, and to cut off your beards also. https://bible.com/bible/111/isa.7.20.NIV அத்தோடு ஆபாச விபச்சார வர்ணனைகளை
வைத்துக்கொண்டு குடும்பவாழ்க்கைக்கு வழிகாட்டும் இஸ்லாத்தை கேலி செய்யலாமா? எசேக்கியேல் 23:3,20
என்பன கள்ள காதலியின்
முலையமுக்குவதையும் கழுதை ஆணுறுப்பு என காதலனின் ஆணுறுப்பை வர்ணித்து அவனுடைய
விந்தை குதிரை விந்து என்றும் இன்னொரு இடத்தில் பெருத்த ஆணுறுபுபுடையவனுக்கு
விரித்துக் கொடுத்தாள் என்றும் சொல்வதை வைத்துக்கொண்டு இதை விமர்சிக்க முடியாது எசேக்கியேல் தீர்க்கதரிசியின்
புத்தகம் 16:26 TAERV [26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு
இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ
அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். https://bible.com/bible/3154/ezk.16.26.TAERV 64.குர்ஆன் 42:39 பழிவாங்க சொல்கிறது. இதனால் குண்டு வைத்து கொல்கிறார்கள் ஆனால் பைபிள் அதிகாரத்தை தனிமனிதனிடம் கொடுக்கவில்லை என்கிறார்.உண்மையில் அதிகாரத்தை தனி
மனிதரிடம் கொடுத்தது பைபிள் தான் எண்ணாகமம் 35:21-27
IRVTam [21] அவனைப் பகைத்து, தன்னுடைய கையினால் அடித்ததினாலோ, அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக்
கண்டவுடன் கொன்றுபோடலாம். [22] “ஒருவன் பகையொன்றும் இல்லாமல் திடீரென
ஒருவனைத் தள்ளி விழச்செய்ததாலோ, பதுங்காமல்
எந்த ஒரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலோ, [23]
அவனுக்கு எதிரியாக இல்லாமலும்
அவனுக்குத் தீங்கு செய்ய நினைக்காமலும் இருக்கும்போது, ஒருவனைக் கொன்றுபோடும்படியான ஒரு கல்லினால்
அவனைபார்க்காமல் எறிய, அது
அவன்மேல் பட்டதினாலோ, அவன்
செத்துப்போனால், [24] அப்பொழுது கொலைசெய்தவனையும்
பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து, [25]
கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய
கைக்குத் தப்புவித்து, அவன்
ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்திற்கு அவனைத் திரும்பப்போகும்படி செய்யவேண்டும்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம்
பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அவன் அதிலே இருக்கவேண்டும். [26] ஆனாலும் கொலைசெய்தவன் தான்
ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது, [27] பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை
அடைக்கலப்பட்டணத்திற்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை. https://bible.com/bible/1899/num.35.21-27.IRVTam இஸ்லாம் இப்படி சொல்லவில்லை.. அதேபோல் பழிவாங்காமல் மன்னித்தால்
இறைவனிடம் கூலியுண்டு என்பதையும் குர்ஆன் 42:40 கூறுகிறது. சாட்சிகளின்றி அதிகாரிகளிடம் போகாமல்
இவ்வாறு தன்னிச்சையாக செய்வதற்கு இஸ்லாம் வழிகாட்டவில்லை! |

Comments
Post a Comment