இஸ்லாமும் பைபிளும் ஜிகாதும் தீவரவாதமும்
இஸ்லாம் என்றால் சமாதானமா?இஸ்லாம் என்றால் சமாதானம் என்று
முஸ்லிம்கள் பொய்யாக கூறி திரிகிறார்கள் என்று தற்காலத்தில் சில முட்டாள்களால்
குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இஸ்லாம் (الإسلام) என்றால்
"அடிபணிதல்" என்று அர்த்தம். குர்ஆன் இஸ்லாத்திற்கு இன்னொரு பெயராக அஸ்ஸில்ம்
(السلم) என்று
ஸூரதுல் பகராவின் 208வது (2:208) வசனத்தில்
குறிப்பிடுகிறது. அரபியில் ஸில்ம்
,ஸல்ம், ஸலாம் மூன்றிற்கும் "சமாதானம்" என்று அர்த்தம். அதன்படி
இஸ்லாம்-அடிபணிதலின் மறுபெயர் ஸில்ம்-சமாதானம் . |
இஸ்லாம் ஏன் ஜிஹாத் செய்யத் தூண்டுகிறது?இஸ்லாம் என்பது அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முகம்மது அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் தூதர் என்று சான்றுபகர்ந்து தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடையை நிறைவேற்றி ,ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று,சக்தியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும் (முஸ்லிம் 1 (8a)) -அக்காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் , ஒன்று அவர் கொல்லப்படுவார். அல்லது குழப்பத்திற்கு உள்ளாக்கப்படுவார் எனும் நிலை இருந்தது-(புகாரி 4514,4650,4651) -மார்க்கத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக சமூக பகிஷ்கரிப்பு செய்து அனைத்திலும் ஒதுக்கியும் வைத்தார்கள்-(புகாரி 1590,3058) -இஸ்லாத்தை ஏற்ற காரணத்திற்காக வேதனை செய்யப்பட்டார்கள் (உதாரணமாக அபூஜந்தல்).(புகாரி 2731,2732) -இஸ்லாத்தை எத்திவைக்க சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள்-(புகாரி 2801,3064) -நபிகளார் தன் பாட்டில் தொழுது கொண்டிருக்கும்போது கூட அவரை வேதனை செய்து ரசித்தார்கள்-(புகாரி
2934,3185,3854) அவரின் கழுத்தை நசுக்கி கொல்ல முயன்றனர் (புகாரி 3678,3856) -இஸ்லாத்தை ஏற்றதற்காக கடுமையாக அடிக்கப்பட்டார்கள்- உதாரணமாக அபூதர் (புகாரி 3522) -இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு தாங்கமுடியாத வேதனைகளை கொடுத்துவந்தார்கள்-உதாரணமாக கப்பாப் (புகாரி 3612,3852) -இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்களையே கொல்ல திட்டம் தீட்டினார்கள்-(புகாரி 3864) -இஸ்லாத்தை பின்பற்றுவோரை வேதனை செய்ததால் முஸ்லிம்கள் சொந்த ஊரைவிட்டு தப்பியோடி ஹிஜ்ரத் செய்தனர்-புகாரி 3900,4312 -இப்படி தப்பி ஓடுவதற்கு கூட இடமளிக்காமல், பிடித்து சிறை வைப்பதற்கு அல்லது கொல்வதற்கு முயற்சித்தனர். இவ்வாறே அபூஜந்தல் கட்டிவைக்கப்பட்டார்-(புகாரி2731-2732), முகம்மது நபியும் அவரது தோழர் அபூபக்ரும் தப்பி ஓடுவதை கூட தடுத்து நிறுத்தி பிடிப்பதற்கு திட்டம் தீட்டினர்-(புகாரி 3906,3922,) -இஸ்லாத்தை பின்பற்ற முடியாமல் ஊரைவிட்டு தப்பி ஓடவைத்ததையே குர்ஆன் அவர்கள் உங்களை ஊரைவிட்டு வெளியேற்றினார்கள் என்று கூறுகிறது. அதற்கான ஒரே காரணம் படைத்து பரிபாலித்து மரணிக்க செய்கின்றவனான அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று சொன்னது தான். (குர்ஆன் 60:1,9, 22:40, 9:13) -அத்தோடு ஆண்களிலுள்ள பலவீனர்கள், பெண்கள், சிறுவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்காக வேதனைப்படுத்தப்பட்டனர். அவர்களால் ஊரைவிட்டு வெளியே தப்பி வரவும் முடியாது.. இவர்களை போன்றோரை காப்பாற்றுவதற்காக யுத்தம் செய்யும்படி அல்லாஹ் கூறினான்-(குர்ஆன் 4:75). -போர் செய்ய அனுமதி வழங்கப்பட்டது கூட முஸ்லிம்கள் அநீதி இழைக்கப்பட்டு அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என நம்பியதற்காக ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட காரணம் தான்-குர்ஆன் 22:39-40 -அத்தோடு இந்த குழப்பவாதிகளான காஃபிர்கள் தமக்கு சக்தி இருக்கும்பட்சத்தில், முஸ்லிம்களை இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. (குர்ஆன்
2:217). அதனால் தான் தகுந்த பலம் வந்த பின் போர் செய்வதை அல்லாஹ் கடமையாக்கினான்.(குர்ஆன் 2:216) *அதாவது இஸ்லாத்தை நிம்மதியாக அதன் மக்கள் பின்பற்றும் நிலையை ஏற்படுத்துவதற்கே இந்த கடமை. இல்லாவிட்டால் முகம்மது நபி மரணித்தவுடனே முடிவுக்கு வந்திருக்கும். அல்லது மார்க்கம் கலப்படமாகியிருக்கும். இதனால் தான் இஸ்லாம் ஜிஹாத் செய்வதை தூண்டியது. இதனால் தான் அதை சிறப்பித்து அநேக ஹதீஸ்களை காணமுடியும். *பைபிள் ஜிஹாதை பற்றி என்ன சொல்கிறது?-நாடு இல்லாமல் இருந்த இஸ்ரவேலர்கள் குடியேறுவதற்காக, ஊர்மக்களை ஒட்டுமொத்தமாக அழித்துப் போடுமாறு பைபிள் சொன்னது- இல்லாவிட்டால் அவர்களை பார்த்து இவர்கள் கெட்டுப்போவார்களாம்.- கடவுள் சொல்லி கொல்லுதல் என்றாலே மத யுத்தம் தான். உபாகமம் 20:16-18 TCV [16] ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாடுகளின் பட்டணங்களில் உள்ள உயிருள்ள எதையும், எவ்வழியிலும் தப்பவிடவேண்டாம். [17] இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய எல்லோரையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். [18] ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதால் செய்கிற அருவருப்பான செயல்களை நீங்கள் பின்பற்றும்படி உங்களுக்கும் போதிப்பார்கள். நீங்களும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்வீர்கள். https://bible.com/bible/2730/deu.20.16-18.TCV -யுத்தம் செய்து மாற்றுமதத்தவர்களை கொன்று கடவுள் கொடுத்த ஊரில் நுழைய மறுத்ததற்காக கர்த்தர் நடந்துகொண்ட விதம்: இஸ்ரவேலர் எதிரிகளை கொன்று நாட்டை பிடிக்க பயந்ததற்காக, பயந்தவர்களையே அழித்துப்போட முற்படுகிறார் கர்த்தர்.(எண்ணாகமம் 14:1-4,11-12) இதை கண்ட மோசே, அப்படி செய்தால் உங்களுக்கு காப்பாற்ற வக்கில்லாமல் கொன்று போட்டீர் என்று எகிப்தியரும் மற்ற ஊராகும் சொல்லுவார்கள் இதனால் அசிங்கமாக போய்விடும் என்று மன்னிக்குமாறும் கேட்கிறார்(எண்ணாகமம் 14:13-16,19) இதற்காக மனதை மாற்றிக்கொண்டு போகும் வழியிலேயே யுத்தம் செய்யாத இவர்களை படிப்படியாக கொன்று போட முடிவெடுக்கிறார் (எண்ணாகமம் 14:22-23) ஆனால் யுத்தம் செய்து கொல்லுங்கள் என்று சொன்ன காலேபை தேவனாகிய தன்னை உத்தமமாக பின்பற்றியவன் என்கிறார் (எண்ணாகமம் 14:24) அதாவது போர் செய்து கொல்ல நினைத்த இவன் தான் உண்மையான விசுவாசி. பயந்து ஓடியவர்கள் பாவிகள் என்று வெளிப்படுத்துகிறார் கர்த்தர். -நானூறு வருடங்களுக்கு முன் அமெலேக்கியர் எனும் மாற்று மதத்தவர்கள் மோசேயும் இஸ்ரவேலரும் எகிப்திலிருந்து வந்தபோது எதிர்த்தனர். இதற்காக நானூறு வருடம் கழித்து வாழும் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் , மிருகங்கள் என ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார். அவ்வாறு சவுல் ராஜா மிருகங்களையும் ராஜாவையும் கொல்லாமல் விட்டதற்காக அவனை ராஜாவாக ஆக்கியதற்காக மனஸ்தாபப்பட்டார். 1 சாமுயேல் 15:2-3, 9-11 TCV [2] சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். [3] இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான். [9] ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள். [10] அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது. [11] “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான். https://bible.com/bible/2730/1sa.15.2-11.TCV
*மாற்றுமதத்தவர்களது கோவில்களை இடித்துப்போடவேண்டும் என்றும் அவர்களோடு சமாதானம் இருக்க கூடாது என்கிறார் கர்த்தர்: யாத்திராகமம் 34:12-13 TCV [12] நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள். [13] நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி அழித்துவிடவேண்டும். https://bible.com/bible/2730/exo.34.12-13.TCV உபாகமம் 12:2-3 TCV [2] அங்கே நீங்கள் வெளியேற்றும் நாடுகள் வழிபட்ட உயர்ந்த மலைகளிலும், குன்றுகளின்மேலும், படர்ந்த ஒவ்வொரு மரங்களின் கீழும் இருக்கும் தெய்வங்களின் வழிபாட்டிடங்களை எல்லாம் நீங்கள் முற்றிலும் அழித்துப்போடுங்கள். [3] அவர்களுடைய பலிபீடங்களை உடைத்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரகக் கம்பத்தை நெருப்பில் எரித்துப்போடுங்கள். அவர்களுடைய தெய்வங்களின் விக்கிரகங்களை வெட்டி வீழ்த்தி, அந்த இடங்களிலிருந்து அவர்களுடைய பெயர்களையே இல்லாமல் செய்துவிடுங்கள். https://bible.com/bible/2730/deu.12.2-3.TCV *இஸ்ரவேலரின் கீழுள்ள ஊரில் வேறு கடவுளை வணங்கினால், அந்த ஊர்மக்களை ஒட்டுமொத்தமாக வெட்டி கொன்று மிருகங்களையும் கொன்று ஊரை கர்த்தருக்கு பலியாக கொளுத்தி போட வேண்டும் என்கிறார்: உபாகமம் 13:12-16 TCV [12] நீங்கள் வாழும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றைப்பற்றி, இவ்வாறு சொல்லப்பட்டதாகக் கேள்விப்படலாம். [13] அதாவது, உங்கள் மத்தியில் கொடிய மனிதர் எழும்பி, “நாம் போய் வேறு தெய்வங்களை வழிபடுவோம்” என்று நீங்கள் அறிந்திராத வேறு தெய்வங்களைப் பற்றிச்சொல்லி, தங்கள் பட்டணத்து மக்களை வழிதவறப்பண்ணலாம்.
[14] அப்பொழுது நீங்கள் போய் தீர விசாரித்து, ஆராய்ந்து, சோதனைசெய்யுங்கள். அது உண்மையாயிருந்து, உங்கள் மத்தியில் அப்படிப்பட்ட அருவருப்பான செயல் நடந்தது என நிரூபிக்கப்பட்டால், [15] நிச்சயமாய் நீங்கள் அப்பட்டணத்தில் வாழும் யாவரையும் வாளினால் வெட்டிக் கொல்லவேண்டும். அப்பட்டணத்தையும் முற்றிலும் அழிக்கவேண்டும். அங்குள்ள மக்களையும், வளர்ப்பு மிருகங்களையும் அழிக்கவேண்டும். [16] பட்டணத்தின் கொள்ளைப்பொருட்களை ஒன்றுசேர்த்து, பட்டணத்தின் மத்தியிலுள்ள பொதுச் சதுக்கத்தில்போட்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கையாக அப்பட்டணத்தையும், கொள்ளையிட்ட யாவையும் நெருப்பினால் முற்றிலும் எரிக்கவேண்டும். அப்பட்டணம் ஒருபோதும் திரும்பவும் கட்டப்படாமல் என்றென்றும் பாழடைந்து கிடக்கவேண்டும். https://bible.com/bible/2730/deu.13.12-16.TCV *யூத மதத்தில் தானே இப்படி உள்ளது. இயேசு எதிரியை நேசிக்க தானே சொன்னார் என்று கிறிஸ்தவர்கள் சமாளிக்க பார்க்கலாம்- அல்லது இது 144 தடுப்புச் சட்டம் போன்றது என்று உருட்டலாம். ஆனால் இயேசு வந்தபோது இஸ்ரவேலர் மீண்டும் அடிமைகள் போல் தான் இருந்தனர். இந்த நிலையில் எதிர்த்து போரிடும் படி சொன்னால் அன்றே இவர்களின் கதை முடிந்திருக்கும் . ஆகவே இவர்களது இந்த வாதமே 420
தனமானது. ஏனெனில் அடிமையாகவுள்ள சக்தியில்லாத பலவீனர்களிடம் எதிரியை எதிர்க்க சொல்ல முடியாது . ஆனால் இயேசு வல்லமையோடு வரும்போது இப்படி எதிரியை நேசிக்க மாட்டார். மாறாக இயேசுவும் இப்படி கொலை பண்ணுவார் என்கிறார்: வெளிப்படுத்தல் 19:17-21 TCV [17] அப்பொழுது சூரியனிலே ஒரு இறைத்தூதன் நிற்கிறதை நான் கண்டேன். அவன் உரத்த குரலில் நடுவானத்தில் பறக்கின்ற பறவைகளையெல்லாம் பார்த்து, “வாருங்கள், இறைவனின் மகா விருந்திற்கு ஒன்றுகூடுங்கள். [18] அப்பொழுது நீங்கள் அரசர்களின் சதையையும், சேனைத்தலைவர்கள், வலிமையான மனிதர், குதிரைகள், குதிரைவீரர் ஆகியோருடைய சதையையும் சாப்பிடுவீர்கள். சுதந்திரக் குடிமக்கள், அடிமைகள், பெரியவர், சிறியவர் ஆகிய எல்லா மக்களுடைய சதையையும் சாப்பிடுவீர்கள்” என்றான். [19] பின்பு நான், அந்த மிருகத்தையும், பூமியின் அரசர்களையும், அவர்களின் இராணுவங்களையும் கண்டேன். அவர்கள் குதிரையில் ஏறியிருந்தவரையும், அவருடைய படையையும் எதிர்த்து யுத்தம் செய்யும்படி, ஒன்றுகூடி நின்றார்கள். [20] ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். [21] மிகுதியான அவர்களுடைய படை குதிரையில் ஏறியிருந்தவருடைய வாயிலிருந்து வெளியேவந்த வாளினால் கொல்லப்பட்டது. எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையைத் தின்று திருப்தியடைந்தன. https://bible.com/bible/2730/rev.19.17-21.TCV *அத்தோடு இயேசு ஒன்றும் எதிரிகள் என்று சொன்னது மாற்றுமதத்தவர்களையோ தப்பறைகளையோ (heretics) அல்ல.. தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களை எப்படி நேசித்தார்?. எதிரிகள் உண்மையை உணர கூடாது நாசமாக போகவேண்டும்,தேவனால் மன்னிக்கப்பட கூடாது என்ற நோக்கில் உவமையாக பேசினார்!: மாற்கு 4:11-12 TCV [11] இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது; ஆனால், வெளியில் இருக்கிறவர்களுக்கோ, எல்லா காரியங்களும் உவமைகள் மூலமாகவே சொல்லப்படுகின்றன. [12] இதனால், “ ‘அவர்கள் எப்பொழுதும் கண்டும், ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும், கேட்டும் ஒருபோதும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; இல்லாவிட்டால், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ ” என்றார். https://bible.com/bible/2730/mrk.4.11-12.TCV லூக்கா 8:10 TCV [10] அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகிறேன். இதனால் அவர்கள், “ ‘கண்டும் காணாதவர்களாகவும்; கேட்டும் விளங்கிக்கொள்ளதவர்களாகவும் இருப்பார்கள்.’ https://bible.com/bible/2730/luk.8.10.TCV -தப்பறைகள் (heretics) குறித்து அவர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை பாருங்கள் -இயேசுவின் சீடர் சொல்கிறார்: 10.ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 11.அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். 2 யோவான் 1:10-11 அதாவது அவனை வீட்டுக்குள் எடுக்கவும் கூடாது. வாழத்து சொல்லவும் கூடாது. *இயேசுவை சமாதானப்பிரபு என்பார்கள். ஆனால் அவரோ சமாதானத்தை பூமியில் அனுப்ப வரவில்லை என்றும் மதத்தால் விசுவாசி அவிசுவாசி எனும் பிரிவினையை உண்டாக்கி எதிரிகளாக்கவே வந்தேன் என்கிறார்: மத்தேயு 10:34-37 TCV [34] “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன். [35] “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்; [36] ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’ [37] “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; https://bible.com/bible/2730/mat.10.34-37.TCV லூக்கா 12:51 TCV [51] பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன். https://bible.com/bible/2730/luk.12.51.TCV -சிலைவணங்கியான சகோதரன் இருந்தால், அவனோடு கூடிப்பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்கிறார் பவுல். கொடிய மனிதன் எனும் வரிசையில் அவனும் வருகிறான். அவனை விரட்டி விட வேண்டும் என்கிறார் பவுல் . 1 கொரிந்தியர் 5:11 TCV [11] ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுகிறதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொண்டு, முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கிறவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகிறவனாகவோ, குடிவெறியனாகவோ, அல்லது ஏமாற்றுகிறவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப்பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடனே சாப்பிடவும் கூடாது. [13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் “அந்தக் கொடிய மனிதனை உங்கள் நடுவிலிருந்து துரத்திவிடுங்கள்.” https://bible.com/bible/2730/1co.5.11-13.TCV
-அவிசுவாசிகளோடு கலந்திருக்க கூடாது என்கிறார் பவுல்: 2 கொரிந்தியர் 6:14-17 TCV [14] அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில்,
பொதுவானது என்ன? [15] கிறிஸ்துவுக்கும்,
சாத்தானுக்கும் இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும்,
அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது? [16] இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு?
ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்:
“நான் அவர்களுடன் வாழுவேன்.
அவர்களிடையே உலாவுவேன். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.
அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.”
[17] ஆகவே,
“அவர்களைவிட்டு வெளியே வந்து,
பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்.” https://bible.com/bible/2730/2co.6.14-17.TCV
ஆகவே கிறிஸ்தவம் ஒன்றும் இவர்கள் வாதிடுவது போல் அல்ல..... அதிகாரம் இல்லாத மக்களால் எதுவும் செய்ய முடியாது. அதிகாரம் இருந்தபோது தேவனது சட்டங்கள் மாற்றுமதத்தவர்களை கொல்லுவதும் ஈவிரக்கமின்றி குழந்தைகளை கொல்லுவதும் தான். இயேசுவும் மீள்வருகையில் இப்படி கொல்லுபவர் என்றே வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. ***** இஸ்லாம் வாள் (sword ⚔) மூலம் பரப்பப்பட்டதா?இஸ்லாம் வாளினால் பரப்பப்பட்டதா? முகம்மது நபி
இறுதித் தூதர் என்பதால் முழு மனிதர்களுக்கும் இறைவனது தூதை எத்திவைப்பது
கடமையாகியிருந்தது. ஆனால் அதற்கு மாபெரும் தடுப்புகளாக சிற்றரசுகளும்
பேரரசுகளும் வலிமையான கோத்திரங்களும் இருந்தன. ஒன்று மற்றவைகளை ஆக்கிரமித்து
மேலோங்க முயற்சித்து கொண்டும் இருந்தன (உதாரணமாக ரோம், பாரசீகம்). அவற்றை
கட்டுப்பாட்டில் கொண்டுவராவிட்டால், எதிரிகள் மேலோங்கி மீண்டும் அடிமைகள் போன்றே
மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்ற முடியாதவர்களாக ஆகிவிடுவார்கள்.- ஏனெனில் பொதுவாக இஸ்லாத்தின் எதிரிகள் தங்களுக்கு
இயலுமென்றால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை தொடர்ந்து யுத்தம்
செய்வார்கள் என இறைவன் அறிந்திருந்தான் (குர்ஆன் 2:217) யூதரும் கிறிஸ்தவரும் கூட தம்மை பின்பற்றும் வரை முகம்மது
நபியையோ முஸ்லிம்களையோ பொருந்திக் கொள்ள மாட்டார்கள் (குர்ஆன் 2:120). முஸ்லிம்கள் இஸ்லாத்தில்
குழப்பம் அடைந்து இஸ்லாத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்பதற்காகவே யூதர்களில்
சிலர் இஸ்லாத்தில் நுழைந்து பிறகு இஸ்லாத்தில் இருந்து வெளியேறும் கபட நாடகத்தை
அரங்கேற்றினார்கள் (குர்ஆன் 3:72) இதற்காக அவற்றை கீழ்ப்படுத்தி நீதத்தை நிலைநாட்டி
மார்க்கத்தை மேலோங்க வைப்பதற்காக நபிகளார் படைகளை அனுப்பி வைத்தார்கள்.
அனுப்பும்படி உபதேசமும் செய்தார்கள். இதனால் தான் குர்ஆனும் உங்களைச் சூழவுள்ள காஃபிர்களுடன்
நீங்கள் போர் புரியுங்கள் என்றும் அவர்கள் உங்கள் கடுமையை காணவேண்டும் என்றும்
(குர்ஆன் 9:123), உங்களால் முடிந்தவரை
பலத்தை ஆயத்தப்படுத்திக்கொள்ளுமாறும் இதனால் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களின்
எதிரியையும் அவர்கள் அல்லாத நீங்கள் அறியாத ஆனால் அல்லாஹ் அறிந்தவர்களையும்
அச்சமடைய செய்யலாம் (குர்ஆன் 8:60) என்றும் வேதக்காரர்களில் அல்லாஹ்வையும்
மறுமையை நம்பாமலும் அல்லாஹ்வும் தூதரும் தடைசெய்தவைகளை
விலகிக்கொள்ளாதவர்களுடனும் அவர்கள் பணிந்தவர்களாக ஜிஸ்யா கட்டும் வரை
போரிடுங்கள் (குர்ஆன் 9:29) கூறியது. இதை செய்யாதுவிடின், எதிரிகள் பலம் பெறும்போது முற்றாக இஸ்லாத்தை
அழித்திருப்பார்கள். அல்லது அதனை சிதைத்திருப்பார்கள்..... ஆனாலும் நபிகளார் இதை சிறந்த முறையில்
நடைமுறைப்படுத்தி காட்டினார்கள். எந்த படையை அனுப்பினாலும் முதலில் இஸ்லாத்தை நோக்கி எதிரிகளை
அழைக்க வேண்டும் என்றும் அதற்கு உடன்படாவிட்டால் ஜிஸ்யா வரி கட்டுமாறு கோர
வேண்டும் என்றும் இந்த இரண்டில் எதை ஏற்றாலும் போர் செய்யக்கூடாது. இந்த
இரண்டையும் மறுத்து அவர்கள் போரிடுவதற்கு முன்வந்தால் அப்போது அல்லாஹ்வின் மீது
பொறுப்புச் சாட்டி எதிரிகளுடன் யுத்தம் செய்யுமாறு வழிகாட்டினார்கள். அந்த
யுத்தத்தில் கூட சிறுவர்களை கொல்லக்கூடாது என்றும் இறந்த எதிரிகளின் உடலை
அங்கவீனப்படுத்த கூடாது என வழிகாட்டினார்கள்.(பார்க்க , முஸ்லிம் 3566 (1731a,B), அபூதாவூத்
2612,புகாரி 3159) போர் செய்யக்கூடியவர்கள் உடன் தான் போர்! பலவீனர்களோடோ
ஒதுங்கி இருப்போரோடோ அல்ல! பெண்களை
,சிறுவர்களை கொல்லக்கூடாது (புகாரி 3014,3015,
முஸ்லிம் 3587,3588 (1744a,1744b)) போர் செய்யாத கூலிக்காரர்களை (மிருகங்களை
மேய்ப்போர்,விவசாயிகள்..) கொல்ல கூடாது (அபூதாவூத் 2669) போர் செய்யாத துறவிகளை கொல்ல கூடாது (முஸ்னத் அஹ்மத் 2728) இறைவனுக்காக தம்மை அர்ப்பணித்ததாக கூறிக்கொள்ளும்
துறவிகளையும், உறுதியற்ற வயது முதிர்ந்தோரை கொல்லுவதும் கூடாது. இதை அபூபக்ர் (ர)
தன் படையை அனுப்பும்போது உபதேசித்தார்கள் (முவத்தா மாலிக் ,பாடம் ஜிகாத் (21), ஹதீஸ் 10.) குர்ஆன் கூறும் , இணைவைப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள் (குர்ஆன்
9:5) வசனம் கூறுவதும் இவர்களை தவிரவுள்ள போர் செய்வோரை மட்டுமே குறிக்கும். அத்தகையவன்
கூட அபயம் கேட்டால், அவனுக்கு அபயம் கொடுக்கும் படியே குர்ஆன் கூறுகிறது (குர்ஆன்
9:6) *தாக்குதலில் பெண்கள் ,குழந்தைகள் பாதிக்கப்படுவது
குறித்து, அவர்களும் இணைவைப்போரை சார்ந்தவர்களே என்று கூறப்பட்டதானது, குதிகரைகளால் தவறுதலாக மிதிக்கப்படுபவர்களையே குறிக்கும்.(திர்மிதீ 1570). திட்டமிட்டு அவர்களை தாக்குவது கூடாது
என்பதை மேலே குறிப்பிட்ட புகாரி 3014,3015, அபூதாவூத்
2669 போன்ற ஹதீஸ்கள் சான்றாகும். அதுமட்டுமின்றி
ஜிஸ்யா கட்டுவோர் விசயத்தில் 1.அவர்களை
அவர்களின் எதிரிகளிடமிருந்து (அவர்களை கொள்ளையடிக்கும் கும்பலிடம்
இருந்து) பாதுகாப்பதற்காக இஸ்லாமிய அரசு போர் செய்ய வேண்டும் (புகாரி 3052) 2.அவர்களால் சுமக்க இயலாத அளவுக்கு வரிகளை சுமத்த கூடாது.(புகாரி 3052) 3.அவர்களது உரிமைகளை பறிக்க கூடாது . அப்படி செய்வோருக்கு
எதிராக நபிகளாரே அல்லாஹ்விடம் வழக்காடுவார்கள் (அபூதாவூத் 3052) 4.அவர்களில் ஒருவரை வேண்டுமென்றே கொன்றவன் சுவர்க்கத்தின்
வாடையை கூட நுகரமாட்டான். (புகாரி 3166,6194) 5.அவர்களில் ஒருவரை தவறுதலாக கொன்றுவிட்டால், அதற்கு
இரத்தப் பணம் செலுத்தவேண்டும் மற்றும் ஒரு விசுவாசியான அடிமையை விடுதலை செய்ய
வேண்டும்.(குர்ஆன் 4:92)- இவ்வசனத்தில் முஃமின்களை கொல்ல கூடாது என்று சொல்லிவிட்டு
, இரண்டு வகையான முஃமின்களை கூறிவிட்டு மூன்றாவதாக இந்த ஒப்பந்த பிரஜையான
முஸ்லிம் அல்லாதோரை குறித்து பேசுகிறது. ஹதீஸ்களில் இதன் அளவு முஃமினின் இரத்த பணத்தின் பாதியளவு
என கூறப்படுகிறது. (அபூதாவூத் 4542) 6.ஜிஸ்யா கட்டாத போது அல்லது கட்ட இயலாத போது அவர்களை
நியாயமின்றி வேதனை செய்ய கூடாது -(முஸ்லிம்
5096,5097 (2613b, 2613d) *தொழில் செய்யும் ஆண்கள் மீதே இஸ்லாமிய அரசு இதை வசூழித்துள்ளது. பெண்களிடமோ
சிறுவர்களிடமோ, உழைக்க இயலாதவர்கள் மீதோ அல்ல! 7.இந்த ஒப்பந்த பிரஜைகளுக்குரிய உரிமைகளை
கொடுக்காவிட்டால், அல்லாஹ் அவர்களுக்கு தைரியத்தை கொடுத்துவிடுவான் அதனால்
ஜிஸ்யா கிடைக்காமல் போய்விடும் (புகாரி
3180) 8.மார்க்க விசயத்தில் உங்களுக்கு எதிராக யுத்தம்
செய்யாதவர்களுக்கு நலவு செய்வதையோ அவர்களுக்கு நீதி செலுத்துவதையோ இஸ்லாம்
தடுக்க வில்லை(குர்ஆன் 60:8) அவர்களுடன் குடும்ப உறவை பேணி வாழலாம் (புகாரி 5978,5979,5989,5990) (இரகசியங்கள் பரிமாறிக்கொள்ளும் நண்பர்களாக
இருக்க கூடாது.(குர்ஆன் 3:28 , 4:144, 5:51,57, 60:1,4) ஆனால் உறவை
பசுமையாக்கலாம் (புகாரி 5990,5989).காரணம் அவ்வாறு நட்புபாராட்டுவது
தீங்கிழைப்பதில் முடிவடையும். அதாவது முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்க அது
காரணமாக்கப்படும் (குர்ஆன் 3:118,;
9:8,10; 60:2 ) 9.அவர்களுடன் நல்ல முறையில் கொடுக்கல் வாங்கல் செய்து
கொள்வதிலும் தவறில்லை. காரணம் நபிகளார் யூதரிடம் கடன் வாங்கிய நிலையில் தான்
மரணித்தார்கள் (புகாரி ,2916,2068, 2096) இணைவைப்போரிடம் ஆட்டை பணத்திற்கு வாங்கியிருக்கிறார்கள்.(புகாரி 2216,2217) 10.அவர்களின் உலக நலனுக்காகவோ நேர்வழிக்காகவோ பிரார்த்தனை
செய்யலாம். இவ்வாறு நபிகளார் அரபு கோத்திரங்களுக்கு செய்துள்ளார்கள்.(புகாரி 6397, 4774) 11.நபிகளார் யூதர்களிடம் அன்பளிப்பை பெற்றுள்ளார்கள்.
அப்போது தான் அவருக்கு விசம் கலந்த ஆட்டிறைச்சியை கொடுத்தார்கள். அதையும்
அவர்கள் சேர்ந்து செய்த சதியே. ஆனாலும் நபிகளார் அவர்களை தண்டிக்கவில்லை. (புகாரி 2617, 3169) 12.யூதர்கள் நபிகளாருக்கு வாழ்த்து சொல்வது போல் நடித்து
தந்திரமாக சபித்தார்கள். அவர்களை பதிலுக்கு அன்னை ஆயிஷா சபித்த போது மென்மையாக
நடந்துகொள்ளும் படியே சொன்னார்கள். (புகாரி
2935,6024,6256) நபியின் தோழர்கள் அவர்களை கொன்றுவிடட்டுமா என்று
கேட்க அதையும் வேண்டாம் என்றார்கள் (புகாரி
6926) 13.யூதரின் பிணம் கொண்டுசெல்லப்பட்ட போது கூட நபிகளார்
எழுந்து நின்றுள்ளார்கள் (புகாரி 1311,1312) 14.நிர்ப்பந்தித்து மதம் மாற்ற கூடாது. பனூநளீர் யூதர்கள்
யுத்தம் செய்ததால் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் (புகாரி 4028). அவர்களிடையே முஸ்லிம்களின்
பிள்ளைகளில் அவர்கள் முஸ்லிமாக முன்பு யூதமதத்திற்காக நேர்ந்துவிடப்பட்டு
யூதராக்கப்பட்டவர்கள் இருந்தனர். அவர்களை தடுத்து வைத்துக்கொள்ள முஸ்லிம்கள்
நினைத்த போது தான் "மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை-குர்ஆன்
2:256" எனும் வசனம் இறங்கியது -(அபூதாவூத்
2682) இவ்வாறு தேவையான அனைத்தையும் வழங்கியிருந்தது. ஆகவே வாளால்
நிர்ப்பந்திக்கப்பட்டு பரவியது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு *பைபிள் என்ன சொல்கிறது?வாளை வைத்து தான் தன் மதத்தவர்களுக்கான தேசத்தை உண்டாக்கி
மாற்றுமதத்தவர்களை கொன்றொழிக்காமாறு தேவன் தோராவில் சொன்னார். அதுவும் ஆண் பெண்
வேறுபாடில்லாமல் குழந்தைகளையும் சேர்த்து: பார்க்க உபாகமம் 20:16-18
(மேலேயும்
இவ்வசனங்களை முழுமையாக குறிப்பிட்டுள்ளேன்.) மாற்றுமதத்தவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களது
குழந்தைகளையும் பெண்களையும் கொன்று போடும்படி கர்த்தரே சொன்னதாக 1 சாமுவேல் 15:2-3 சொல்கிறது. கிறிஸ்தவத்தை பொருத்தமட்டில், அவர்களுக்கு அதிகாரம்
கிடைத்தபோது இதைவிட கடுமையாக கொன்றொழித்தனர் . ஆனால் இஸ்லாமோ அவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் ஈடேற்றம்
பெற வேண்டும் என்பதற்காக குழப்பவாதிகளை ஒடுக்குவதற்கே போரிட்டது. மனிதர்களுடன்
அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முகம்மது அல்லாஹ்வின் தூதர்
என்று சான்று பகர்ந்து, தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுக்கும் வரை போரிடுமாறு
ஏவப்பட்டுள்ளேன் -மனிதர்களுடன் அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை
என்றும் முகம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்ந்து, தொழுகையை நிலைநாட்டி
ஸகாத் கொடுக்கும் வரை போரிடுமாறு ஏவப்பட்டுள்ளேன் -புகாரி 25 *ஆரம்பத்தில் தங்களுக்கு தொந்தரவு செய்து வேதனை செய்து
கொலை செய்த எதிரிகளை (புகாரி
4514) மன்னிக்குமாறே நபிகளார் ஏவப்பட்டார்கள். போர் செய்ய வேண்டாம் என்று
ஏவப்பட்டார்கள்-(நஸாயீ
3086, புகாரி 4566, குர்ஆன் 2:109,3:186)) *பிறகு போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்ட போது அனுமதி
வழங்கப்பட்டது (குர்ஆன்
22:39-40) *முதலில் இதிலுள்ள வார்த்தை اقاتل-உக்காத்தில-
(நான் போரிடுவதற்கு) என்பது இரு தரப்பு சண்டையிடுவதையே குறிக்கும் . அதாவது
முஸ்லிம்களை எதிர்த்து அவர்களும் போரிடும் நிலையில் முஸ்லிம்களும் போரிடவேண்டும் *இங்கே மனிதர்கள் என்பது இணைவைப்பாளர்களை குறிக்கும்.
அதற்கு ஆதாரமாக தெளிவாக நஸாயீ
3966 ஹதீஸிலேயே உள்ளது. ஆனால் யூத கிறிஸ்தவர்களை பற்றியோ குர்ஆன் 9:29
ஜிஸ்யா வரி வாங்குவதே கூறப்பட்டுள்ளது. அதேபோல் நபிகளார் மஜூஸிகளிடம் (நெருப்பு
வணங்கிகள்) ஜிஸ்யா வாங்கி இருக்கிறார்கள் . *பொதுவாக இணைவைப்பாளர்கள் முஃமின்களை மிகவும் பகைமை
காட்டுவோராகவும் (குர்ஆன் 5:82), சக்தியிருந்தால் முஸ்லிம்களை எதிர்த்து
இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும்வரை போரிட்டுக்கொண்டே இருப்பார்கள் (குர்ஆன் 2:217). ஆகவே தான்
இத்தகையோர் இஸ்லாத்தை ஏற்கும் வரை போரிட நபிகளார் ஏவப்பட்டார்கள். --சக்தியிருந்தால்
முஸ்லிம்களை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் வரை போரிடக்கூடிய மனிதர்களை
இஸ்லாத்தை ஏற்கும் வரை போரிட ஏவப்படுவதை எப்படி தவறு என்று கூறமுடியும்??-- --ஆனாலும் அவர்களிலுள்ள பெண்களோ குழந்தைகளோ
கூலித்தோழிலாளர்களோ (உதாரணமாக மேய்ப்பர்கள்) தாக்கப்படவோ கொல்லப்படவோ
மாட்டார்கள். காரணம் அவர்கள் போரிடுவதில்லை--(அபூதாவுத் 2669, புகாரி
3014,3015, முஸ்லிம் 3587,3588 (1744a,1744b)), அத்துடன் உறுதியற்ற
கிழவர்களையும் கொல்லுவதை அபூபக்ர் (ர) தடை செய்தார்கள் (முவத்தா மாலிக் பாடம் ஜிகாத் (21)
ஹதீஸ் 10), போர் செய்யாத துறவிகளையும் கொல்லுவதை நபிகளார் தடுத்தார்கள் (முஸ்னத் அஹ்மத் 2728). --அதாவது எதிரிகளில் போரிடக்கூடியவர்களுடன் தான்
போரிடுதல் நடைபெறும். பலவீனர்களுடன் அல்ல!!-- அதனால் தான் குர்ஆன் 2:190 கூறும்போது,
"உங்களுடன்
போரிடுவோருடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். வரம்பு மீறாதீர்கள்" என்று
கூறுகிறது . எதிரி அபயம் கோரினாலும் அபயம் கொடுக்கும் படியும் (குர்ஆன்
9:6), அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் சமாதானத்தின் பக்கம்
சாய்வீராக என்றும் (குர்ஆன் 8:61) கூறுகிறது. --போரில் கைதிகளாக பிடிக்கப்படுபவர்கள்
முஸ்லிம்களிடையே வாழும்போது , அவர்களாகவே மனமுவந்து சத்தியத்தை
ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறே நிகழ்ந்தும் வந்தது. ஆக சொந்த மக்கள்
சுதந்திரமாக மார்க்கத்தை பின்பற்றுவதற்கும் மற்ற மக்கள் மார்க்கத்தை
நோக்கி கவரப்பட்டு ஈடேற்றமடைவதற்கே போர் செய்யப்பட்டது. ஆனால் பைபிளோ , வெறும் கொன்று அழிப்பதற்காகவே போர் செய்ய
சொன்னது. அதுவும் குழந்தைகள் பெண்கள் என போருக்கு சம்பந்தமே இல்லாத மக்களையும்
சேர்த்து கொல்ல சொன்னது-உபாகமம் 20:16-18,13:12-16, 1 சாமுவேல் 15:2-3 -------- திடீர் தாக்குதல்கள் ஏன்?நபிகளார் திடீர் தாக்குதல் நடத்திய அனைவரையும் பார்த்தால்
அவர்கள் ஒன்றில் முஸ்லிம்களை தாக்க படை தயாராக்கி கொண்டிருக்கிறார்கள் என்று
ஒற்றர்கள் வழியாக தகவல் கிடைத்ததாலும் (உதாரணமாக பனூமுஸ்தலிக் போர்), தம்மை
எதிர்த்த குரைசி எதிரிகளுக்கு உதவி புரிந்த அரபு கோத்திரங்கள் மற்றும் கைபர் வாழ்
யூதர்களுக்கும் தான். அப்போதுகூட போரிடக்கூடியவர்கள் தான் கொல்லப்பட்டனர்-(பார்க்க புகாரி 2541
<பனூமுஸ்தலிக்>, புகாரி 610&947 <கைபர்>- அதன்பின்பு
அவர்களிடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது புகாரி 5777) போருக்கு தயாராகிக்கொண்டிருக்கும் படையினரின் போரிடுவோரை
திடீரென தாக்குவது கோழைத்தனம் அல்ல.. மாறாக புத்திசாலித்தனமே.... இதையே எல்லா
நாட்டு படைகளும் செய்யும்.. ஆனால் பைபிள் குழந்தைகளையும் பெண்களையும் ஈவிரக்கமின்றி
கர்த்தர் கொல்ல சொன்னபோது அது அவர்களுக்கு திடீர் தாக்குதல் அல்லாமல் வேறு என்ன?
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் போருக்கு தயாராக முடியுமா என்ன? (உபாகமம் 20:16-18, 1 சாமுவேல் 15:2-3) *யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் இணைவைப்போரையும் அரேபிய தீபகற்பத்தில் இருந்து வெளியேற்றுதல்அரேபிய தீபகற்பம் என்று நபியவர்கள் கூறியது ஹிஜாஸ்
மாநிலத்தை குறிக்கும். அதாவது மக்கா,மதீனா,யமாமாவும் அதன் சூழ்ந்த பகுதிகளும். இதனால் தான் உமர் (ர) அவர்கள் யூதர்களை
ஹிஜாஸிலிருந்து தைமாவுக்கும்,
அரீஹாவுக்கும் (ஜெரிகோ) நாடுகடத்தினர்.(புகாரி 2338,3152) இறுதியாக கைபரிலிருந்து தான் யூதர்களை உமர் (ர) அவர்கள்
வெளியேற்றினார்கள். அதுவும் அவர்கள் அவருடைய மகனின் கையின் மூட்டுகளை பிசகச்செய்ததன் பின்னரே நிகழ்ந்தது.. அதுவரை
தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.(புகாரி 2730).
நபியவர்களுக்கு அவர்கள் சேர்ந்து விசம் தடவிய இறைச்சியை சாப்பிட கொடுத்ததன்
பின்னரும் அங்கே விடப்பட்டிருந்தார்கள் (புகாரி 3169) யுத்தங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் யூதர்களாலும்
கிறிஸ்தவர்களாலும் இணைவைப்பவர்களாலும் புனித பூமிகள் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகாமல் இருப்பதற்காகவும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் இவர்களின் வைராக்கிய
துர்ப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதை தடுப்பதற்கும் இதை தவிர வேறு வழி இல்லை! அதனால் தான் நபிகளார் மரணிக்கும் முன்
அதை உபதேசமாக கூறினார்கள்.(முஸ்லிம் 3626) அவர்கள் ஒரேயடியாக துரத்தப்படவுமில்லை.... துரோகங்கள்
செய்தபோது தான் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர் (புகாரி 4028) பொதுவாக அரசுகள் தமக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது
கொலை செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும். ஆனால் இஸ்லாமோ அவர்களுக்கு வேறு
இடத்தில் குடியமர்த்தியது. ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் வசிக்கலாம். அப்படி
வசிக்கும் போது கூட , முஸ்லிம்கள்
அவர்கள் மீது நல்ல முறையில் நடந்துகொண்டு, அம்மக்களின் பாதுகாப்புக்காக
முஸ்லிம்கள் யுத்தம் செய்யும்படி வழிகாட்டப்பட்டிருந்தார்கள்.(புகாரி 3052,3700). பைபிள் என்ன சொல்கிறது?கர்த்தர் கொடுத்த தேசத்தில் மாற்று மதத்தவர் இருக்கவே
கூடாது என்கிறது... அவர்களை கொன்றொழிக்க வேண்டும் அல்லது துரத்தி விட வேண்டும் என்கிறார். யாத்திராகமம் 23:31-33 TCV [31] “செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல் வரைக்கும்,
பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன்.
அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள்
அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள். [32]
அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம். [33]
உங்கள் நாட்டில் அவர்களை
வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள்
காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும்
வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார். https://bible.com/bible/2730/exo.23.31-33.TCV யாத்திராகமம் 34:12-16 TCV [12] நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த
விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள்
உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள். [13] நீயோ அவர்களுடைய பலிபீடங்களை
இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி
அழித்துவிடவேண்டும். [14] நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர்
என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன்.
[15] “நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு.
ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது,
பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து
அதைச் சாப்பிடுவீர்கள். [16] நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை
மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப்
பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும்
தூண்டுவார்கள். https://bible.com/bible/2730/exo.34.12-16.TCV இதை வேதம் என வைத்துக்கொண்டு, தற்பாதுகாப்புக்காக
முகம்மது நபி சொன்னதை குறைகூறலாமா? இவற்றை 144 தடைச்சட்டம் என்று கூற
முடியாது.. சக்தி இருந்த காலம் முதல் இப்படி இருக்க வேண்டும் என்றே
பழைய ஏற்பாடு சொன்னது. அதிகாரம் இழந்த பின் இயலாமையின் போது தான் அன்பு என்ற
பேச்சே அவர்களிடம் வந்தது. மீண்டும் அவர்களுக்கு அதிகாரம் வந்தபோது மீண்டும்
கொலைசெய்து கொண்டு தான் இருந்தனர் என்பதற்கு திருச்சபை வரலாறுகள் சாட்சி.... மதம் மாறியோரை கொல்லுவது:இஸ்லாத்தைவிட்டு வெளியேறுவோரை இஸ்லாமிய அரசு கொன்றுவிடும்
சட்டத்தை இஸ்லாம் வழங்கியது உண்மையே.. ஏனெனில் , இஸ்லாத்தை ஏற்று பிறகு அதிலிருந்து வெளியேறுவதை
பாமர மக்களை மார்க்கத்தில் குழப்பமடையச்செய்வதற்காகவும், தம் இனத்தவர்கள்
சத்தியத்தை ஏற்றுவிட கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் செய்துவந்தனர். வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்): “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்..(அல்குர்ஆன் : 3:72) -இதேபோல் ஒரு
கிறிஸ்தவர் இஸ்லாத்தை ஏற்று, குர்ஆனின் சில அத்தியாயங்களை மனனமிட்டுவிட்டு, மீண்டும் தன்
பழைய மார்க்கத்திற்கே சென்று, அவர்களிடம் "நான் முகம்மதுக்கு எழுதிக் கொடுத்ததை தவிர வேறு எதுவும்
முகம்மதுக்கு தெரியாது" என்று கூறித்திரிந்தார்-புகாரி 3617 -அத்தோடு இஸ்லாத்தை ஏற்று விட்டு வெளியே போகிறவர்கள் அநேகமானோர் முஸ்லிம்கள் யாரோடு போர்
புரிந்துகொண்டிருந்தார்களோ அவர்களோடு போய் சேர்ந்துகொள்வோராகவும் இருந்தனர். உதாரணமாக
இப்னு க(த)தல் (ابن خطل) . அத்தகையோரால்
இஸ்லாமிய அரசின் இராணுவ இரகசியங்கள் எதிரிகளுக்கு சென்றடைவதற்கு காரணமாக அமையும்
. எதிரிகளின்
நோக்கமே இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் வரை போர் செய்வது தான் என் இறைவன்
அறிந்துள்ளான் (குர்ஆன் 2:217) -தற்காலத்தில்கூட முர்தத்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் நபர்கள்
கூட, வயிற்றுப் பிழைப்புக்காக முஸ்லிம்களை சீண்டிக்கொண்டு, அவர்களையும்
தங்களைப் போல ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள். இதற்காக
சிலைகளை வணங்குவோருடனும் எதிர்ப்பதற்காக சேர்ந்து கொள்கிறதை பார்க்கிறோம். இதுபோன்ற காரணங்களால் இஸ்லாத்தில் இருந்து வெளியேறும் நபர்களை
இஸ்லாம் கொல்லுவதற்கு அதன் பொறுப்பாளர்களுக்கு ஏவியுள்ளது. பைபிள் மதம் மாறுவதை குறித்து என்ன சொல்கிறது?-ஊராக சேர்ந்து மதம் மாறினால், ஊரையே கொளுத்தி மக்களையும்
மிருகங்களையும் வெட்டி கொன்று போட வேண்டும் - உபாகமம் 13:12-16 TCV [12] நீங்கள் வாழும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா
உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றைப்பற்றி, இவ்வாறு சொல்லப்பட்டதாகக்
கேள்விப்படலாம். [13] அதாவது, உங்கள் மத்தியில் கொடிய மனிதர் எழும்பி, “நாம்
போய் வேறு தெய்வங்களை வழிபடுவோம்” என்று நீங்கள் அறிந்திராத வேறு தெய்வங்களைப் பற்றிச்சொல்லி,
தங்கள் பட்டணத்து மக்களை வழிதவறப்பண்ணலாம். [14] அப்பொழுது நீங்கள் போய் தீர
விசாரித்து, ஆராய்ந்து, சோதனைசெய்யுங்கள். அது உண்மையாயிருந்து, உங்கள்
மத்தியில் அப்படிப்பட்ட அருவருப்பான செயல் நடந்தது என நிரூபிக்கப்பட்டால், [15]
நிச்சயமாய் நீங்கள் அப்பட்டணத்தில் வாழும் யாவரையும் வாளினால் வெட்டிக்
கொல்லவேண்டும். அப்பட்டணத்தையும் முற்றிலும் அழிக்கவேண்டும். அங்குள்ள
மக்களையும், வளர்ப்பு மிருகங்களையும் அழிக்கவேண்டும். [16] பட்டணத்தின்
கொள்ளைப்பொருட்களை ஒன்றுசேர்த்து, பட்டணத்தின் மத்தியிலுள்ள பொதுச் சதுக்கத்தில்போட்டு,
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கையாக அப்பட்டணத்தையும், கொள்ளையிட்ட
யாவையும் நெருப்பினால் முற்றிலும் எரிக்கவேண்டும். அப்பட்டணம் ஒருபோதும்
திரும்பவும் கட்டப்படாமல் என்றென்றும் பாழடைந்து கிடக்கவேண்டும். https://bible.com/bible/2730/deu.13.12-16.TCV -தனி நபர்கள் மதம் மாறி வேறு கடவுளை வணங்கினால் கல்லெறிந்து கொல்ல வேண்டும்
என்கிறார் கர்த்தர்: உபாகமம் 13:6-10 TCV [6] உங்கள் சொந்தச் சகோதரன், உங்கள் மகன், மகள், உங்கள்
அன்புக்குரிய மனைவி, உங்கள் நெருங்கிய நண்பன் ஆகியோர், “நாம் போய், வேறு தெய்வத்தை
வணங்குவோம் வாருங்கள்” என்று நீங்களோ உங்கள் தந்தையோ அறியாத மற்ற தெய்வங்களைக்
குறித்துச் சொல்லி இரகசியமாய் வசீகரிக்கலாம். [7] உங்களைச் சுற்றிலும்,
உங்களுக்குச் சமீபத்திலும், தூரத்திலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைவரைக்கும் எவ்விடத்திலாகிலும் இருப்பவர்களின் தெய்வங்களை வணங்கவும்
சொல்லலாம். [8] அப்பொழுது அவனுக்கு விட்டுக்கொடுக்கவோ, செவிகொடுக்கவோவேண்டாம்.
அவனுக்கு இரக்கம் காட்டவும்வேண்டாம். அவனை விடுவிக்கவோ, பாதுகாக்கவோ வேண்டாம்.
[9] நிச்சயமாக நீங்கள் அவனைக் கொல்லவேண்டும். அவனைக் கொல்வதற்கு உன் கையே முந்தவேண்டும்.
அதற்குப்பின் எல்லா மக்களுடைய கைகளும் சேர்ந்துகொள்ள வேண்டும். [10] அவன்
சாகும்படி அவன்மேல் கற்களை எறியுங்கள். ஏனெனில் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து
உங்களை மீட்டு வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து உங்களை
விலகச்செய்ய அவன் முயற்சித்தான். https://bible.com/bible/2730/deu.13.6-10.TCV உபாகமம் 17:2-5 TCV [2] உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும்
பட்டணங்களில் ஒன்றில் உங்கள் மத்தியில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ உங்கள் இறைவனாகிய
யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, அவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதாகக்
காணப்படக்கூடும். [3] அல்லது எனது கட்டளைக்கு முரணான வேறு தெய்வங்களையோ,
சூரியனையோ, சந்திரனையோ, வானத்து நட்சத்திரங்களையோ வணங்கி, அவற்றை வழிபடக்கூடும்.
[4] அது உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படும்பொழுது, நீங்கள் அதை முற்றிலும்
விசாரணை செய்யவேண்டும். அந்த அருவருப்பான செயல் உண்மையாயிருந்து அது இஸ்ரயேலில்
செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், [5] அந்த தீமையான செயலைச் செய்த ஆணையோ,
பெண்ணையோ உங்கள் பட்டணவாசலுக்குக் கொண்டுபோய், அவர்களைக் கல்லெறிந்து
கொல்லவேண்டும். https://bible.com/bible/2730/deu.17.2-5.TCV ஆகவே இவற்றை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை குறைகூறலாமா? குறிப்பு: இஸ்லாத்தை விட்டு மக்கள் உலக இலாபங்களுக்காக
வெளியேறும் காலம் வரும் என்பதையும் நபிகளார் முன்னறிவித்துள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 186 (118)) இதனால்
ஒருத்தரோ ஒரு கூட்டமே மதமாறுவதால் இஸ்லாத்தின் சத்தியத்திற்கு எந்த மாற்றமும்
இல்லை!!! பேச்சுரிமையும் இஸ்லாமும்முகம்மது நபி (ﷺ) அவர்களை நோவித்தாலோ தூசித்தாலோ அவர்களை
நபிகளார் கொன்றிருப்பதாக குற்றஞ்சாட்டுவார்கள். எந்தவோர் அரசாக இருந்தாலும் அவர்கள் புனிதமாக கருதுவோரை
குறித்து தூசித்து பேசினால் தண்டனை கொடுக்கப்படுவது தற்காலத்திலும் நடைமுறையில்
உள்ளவொன்று தான். ஆனாலும்
சபித்ததற்காகவோ விசம் வைத்து அன்பளிப்பு கொடுத்ததற்காகவோ அப்படி
செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. உதாரணமாக ஸலாம் கூறுவதுபோல நடித்து மரணமுண்டாகட்டும் என
நிந்தித்த யூதர்களை தண்டிக்கவில்லை-(புகாரி 6024,6926). விசம் கலந்த
ஆட்டிறைச்சியை கொடுத்து பாதிப்பேற்படுத்திய யூதர்களையும் தண்டிக்கவில்லை. அதை
அவர்கள் சேர்ந்தே செய்திருந்தனர்.(புகாரி 5777) ஆனாலும் மக்களை தூண்டிவிடும்விதமாக நடந்து
கொண்டவர்கள் அல்லது தொடர்ந்து தொந்தரவு
செய்தவர்களே தண்டிக்கப்பட்டனர்.... குறிப்பாக பைபிளிலேயே கர்த்தரை தூசிப்பவன் கொல்லப்பட வேண்டும் என்று
தெளிவாக தோராவில் கூறப்பட்டுள்ளது.. லேவியராகமம் 24:16 TCV [16] யெகோவாவின் பெயரை நிந்திக்கிற எவனும்
கொல்லப்படவேண்டும். சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவன்
பிறநாட்டினனோ, தன் நாட்டினனோ யெகோவாவின் பெயரை நிந்தித்தால் அவன்
கொல்லப்படவேண்டும்” என்றார். https://bible.com/bible/2730/lev.24.16.TCV இந்த சட்டத்தை இறைவன் கொடுத்தார் என நம்பிக்கொண்டு
இஸ்லாத்தை விமர்சிக்கலாமா? மாற்றுமதத்தவர்களை கொள்ளையடிப்பது:முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு ஊரைவிட்டு
வெளியேற்றிய மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்களின் வியாபாரக் கூட்டங்கள் மீதே
வழிப்பறி செய்யப்பட்டது. ஆனால் பொதுவாக கொள்ளையடிப்பதை இஸ்லாம் தடுத்தே உள்ளது. கொள்ளையடிப்பதையும் ,அங்கங்களை சிதைப்பதையும் நபிகளார்
தடுத்தார்கள் (புகாரி 2474) நபியவர்கள் வாங்கிய உடன்படிக்கையில் கொலைசெய்ய மாட்டோம்
என்பதை தொடர்ந்து கொள்ளையடிக்க மாட்டோம் என்பதும் உள்ளது-(புகாரி 6873) கொள்ளையடிப்பவன் கொள்ளையடிக்கும் போது விசுவாசியாக (முஃமினாக)
இருக்க மாட்டான் (புகாரி 6772) இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத பிரஜையின்
உரிமைகளை குறைத்து, அவனிடமிருந்து எதையாவது பறித்துக்கொண்டால் , அவனுக்காக
வாதாடுபவராக நான் இருப்பேன் என நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 3052). அவர்களின் சக்திக்கு மீறி எதையும் அவர்கள் மீது
சுமத்தக்கூடாது என்றும் அவர்களுக்காவேண்டி இஸ்லாமிய அரசு போராடவேண்டும் என்பதே
இஸ்லாத்தின் நிலை-(புகாரி 3052) மற்றபடி யுத்தத்தில் கைப்பற்றப்படும் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின்
சொத்துக்கள் இந்த கொள்ளையில் வராது. பைபிள் இது பற்றி என்ன சொல்கிறது? எகிப்திய அயலவரின் நகைகளை கொள்ளையடிக்க வழிகாட்டிய கர்த்தர்: யாத்திராகமம் 3:21-22 TCV [21] “எகிப்தியர்கள் இந்த இஸ்ரயேல் மக்களுக்குத்
தயவுகாட்டும்படி நான் செய்வேன்; அதனால் நீங்கள் புறப்பட்டுப் போகும்போது,
வெறுங்கையுடன் போகமாட்டீர்கள். [22] ஒவ்வொரு பெண்ணும் தன் அண்டை வீட்டாரிடமும்,
தன் வீட்டில் தங்கியிருக்கும் அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி நகைகளையும், தங்க
நகைகளையும் உடைகளையும் கேட்டு வாங்கவேண்டும்; அவற்றை உங்கள் மகன்களுக்கும்
மகள்களுக்கும் அணிவிக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் எகிப்தியரைக்
கொள்ளையிடுவீர்கள்” என்றார். https://bible.com/bible/2730/exo.3.21-22.TCV -போருக்கு சென்றால் எதிரிகளுக்கு சமாதானம் கோர வேண்டும்
என்றும் அதை ஏற்றால் அவர்கள் அடிமைகளாகி கட்டாயவேலைக்குட்படுத்த வேண்டும்.. இதை
ஏற்காவிட்டால் அவர்களை கொன்று கொள்ளையடிக்கலாம் என்கிறார் உபாகமம் 20:10-14 TCV [10] ஒரு பட்டணத்தைத் தாக்குவதற்கு அணிவகுத்துச் செல்லும்போது,
அதைக் நெருங்கியவுடன் அதன் மக்களுடன் சமாதானத்துக்கு வர முயற்சி செய்யுங்கள்.
[11] அவர்கள் அதற்கு உடன்பட்டு தங்கள் வாசல்களைத் திறந்தால், அங்குள்ள யாவரும்
கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் உங்களுக்கு வேலைசெய்யவேண்டும். [12]
ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை
எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள். [13] உங்கள் இறைவனாகிய
யெகோவா அந்தப் பட்டணத்தை உங்களுக்குக் கொடுப்பார். அப்போது அங்குள்ள ஆண்கள்
யாவரையும் வாளால் வெட்டிப்போடுங்கள். [14] பட்டணத்திலுள்ள பெண்களையும்,
பிள்ளைகளையும், மிருகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் உங்களுக்காக
கொள்ளைப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள்
எதிரிகளிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளைப்பொருட்களை நீங்கள்
பயன்படுத்தலாம். https://bible.com/bible/2730/deu.20.10-14.TCV ஆகவே இதை கடவுள் கொடுத்தார் என நம்பிக்கொண்டு மற்றவர்களை
விமர்சிக்கலாமா? தீவிரவாதிகளும் இஸ்லாமும்இஸ்லாம் மார்க்கத்தை பாதுகாக்கவும் சத்தியம்
மேலோங்குவதற்கும் போர் செய்யச் சொன்னது உண்மையே. இல்லாவிடின் அப்போதே எதிரிகளான காஃபிர்கள் தம்மைப்போல முஸ்லிம்கள்
மாறிவிடும் வரை விட்டிருக்கவும் மாட்டார்கள். குர்ஆன் 2:217 கூறுவது போல, தமக்கு
சக்தியிருந்தால், உங்களை உங்கள் மார்க்கத்தில் இருந்து வெளியேற்றும் வரை தொடர்ந்து யுத்தம்
செய்பவர்களாகவேயிருப்பார்கள். ஆனாலும் போர்க்களத்தில் இத்தகைய காஃபிர்களை கொல்லச்சொன்ன
இஸ்லாம், பெண்கள், குழந்தைகள் (புகாரி 3014,3015), போர் செய்யாத
கூலியாளிகள் (அபூதாவூத் 2669), இதேபோல் உறுதியற்ற வயோதிகர்கள் (முவத்தா மாலிக்,பாடம்-ஜிஹாத்
21, ஹதீஸ் 10), யுத்தத்தில் கலந்து கொள்ளாத துறவிகள் (முஸ்னத் அஹ்மத் 2728) போன்றோர்களை
கொல்ல வேண்டாம் என தெளிவாக தடை செய்துள்ளது.
அத்துடன் போரின்போது கூட அபயம் தேடி வருபவருக்கு அபயம் கொடுத்து
பாதுகாப்பான இடத்தில் சேர்த்து விடுமாறு தான் குர்ஆன் சொல்கிறது (குர்ஆன் 9:6) அத்தகைய போரில் கூட எதிரிகள் சமாதானத்தின்பக்கம்
சாய்ந்தால், நீரும் சமாதானத்தின் பக்கம் சாய்வீராக என்று குர்ஆன் 8:61 கூறுகிறது. இவற்றை தவிரவுள்ளவர்கள் போர்செய்யக்கூடிய ஆண்கள் மட்டுமே.
அவர்களையே போர்க்களத்தில் கொல்லும்படி சொல்கிறது. அத்துடன் இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத
பிரஜையை கொல்லுபவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166,6194),
அவர்களை பாதுகாக்கவும் இஸ்லாமிய அரசு
போரிட வேண்டும் என்றும் அவர்களால் சுமக்க முடியாததை சுமத்த கூடாது என்றும் (புகாரி
3052) வழிகாட்டுகிறது. ஆனால்
தீவிரவாதிகளை பொருத்தமட்டில், அவர்கள் முஸ்லிம்களையும் கொல்கிறார்கள். பெண்கள்
குழந்தைகள் முதியோர்கள் போர் செய்யாத கூலியாட்கள், போர் செய்யாத துறவிகள்
போன்றோரையும் கொல்கிறார்கள். தம்மிடம்
அபயம் கோருவோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலையும் அவர்களுக்கு கிடையாது. தம்
கீழுள்ள முஸ்லிமல்லாத சாதாரண யூத கிறிஸ்தவ பிரஜைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவும்
அவர்களால் முடியாது. ஆகவே அவர்கள் செய்வதை இஸ்லாத்தோடு இணைக்க முடியாது. தீவிரவாதம் தோற்றம் பெற காரணமும்,
அப்பெயரை தீர்மானிப்பதும், இஸ்லாத்தை அதற்காக பயன்படுத்தவும் காரணம் பொதுவாக மனிதர்கள் ஒடுக்கப்படும் போது அவர்களில் இருந்து
சிலர் போராடுவது இயல்பானவொன்றே.. பிரித்தானியர்கள் போன்ற காலனித்துவ நாடுகள்
ஆசிய ஆபிரிக்க நாடுகளை கைப்பற்றியபோதும் இத்தகைய ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதம்
ஏந்தினர். ஆயுதம் ஏந்தியவர்களை காலனித்துவ அரசு தீவிரவாதிகள் என பட்டம் கொடுத்தன. ஆனால்
அந்நாடுகள் விடுதலை பெற்றபோதோ அதே நபர்கள் தேசிய தலைவர்களாகவும் மாவீரர்களாகவும்
கவுரவிக்கப்பட்டனர். இதுபோன்றே அமேரிக்கா,ரஷ்யா,இஸ்ரேல் போன்ற
நாடுகள் இஸ்லாமிய நாடுகளான ஈராக் , ஆப்கானிஸ்தான், சிரியா,ஃபலஸ்தீன்
போன்றவற்றில் ஆக்கிரமித்து இதே
கொடூரங்களை செய்து அப்பாவிகளை குறிப்பாக குழந்தைகளையும் குண்டுவீசி
கொல்லும்போது அதை எதிர்த்து ஆயுதம்
ஏந்துவோர் வரமாட்டார்களா என்ன? ஐஎஸ்ஐஎஸ் போன்றோர் செய்யும் அதே வேலையை தான் அமேரிக்கா
ரஷ்யா போன்ற நாடுகளும் செய்தன. செய்து கொண்டிருக்கின்றன. அப்படியானால் தீவிரவாதி
என தீர்மானிப்பது யார்? ஐநாவால்
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் உள்ளவர் எத்தகைய கொடூரத்தை செய்தாலும் அதற்கு
தீவிரவாதம் எனும் முத்திரை குத்தப்படாது. ஐநாவால் அங்கீகரிக்கப்படாத குழு அதே செயலை செய்தால் , தீவிரவாதம்
என்று லேபிள் குத்தப்படும். அவ்வளவு தான் வித்தியாசம். இஸ்லாத்தை பகடைக்காயாக இந்த குழுக்கள் பயன்படுத்த காரணம், எந்த
குழுவும் தமக்கு பலத்தை கூட்டிக் கொள்ள யுக்திகளை கையாள்வர். இதற்காக இனம்
கோத்திரம் நிறம் மொழி போன்றவற்றை பயன்படுத்துவர். இவற்றைவிட மிகவும்
உணர்ச்சிபூர்வமானது தான் மதம். அதை பயன்படுத்தினால் தான் தம் இயக்கத்தை
பலப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக தான் இஸ்லாத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால்
அவர்கள் செய்யும் செயல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் எதிராகவே காணப்படும். அவை மிகவும்
ஒத்துப் போவது யூதர்களின் வேகத்துடன் தான் என்பது வேடிக்கை. உதாரணமாக தற்கொலையை மிகப்பெரும் பாவமாக இஸ்லாம் கூறுகிறது. போர்க்களத்தில் காயப்பட்டவர் தற்கொலை செய்ததை
கூட இஸ்லாம் நரகத்திற்குரிய செயல் என்றே கூறுகிறது.(புகாரி 5778, 6493) ஆனால் பைபிளில் சிம்சோன் எனும் நியாயாதிபதி தன் எதிரிகளை
தற்கொலை தாக்குதல் மூலம் அழித்தார். புதிய ஏற்பாடு அவரையும் சிறப்பிக்கிறது நியாயாதிபதிகள் 16:28-30 TCV [28] அப்பொழுது சிம்சோன் யெகோவாவிடம், “என்னை
ஆட்சிசெய்கிற யெகோவாவாகிய ஆண்டவரே! என்னை நினைவுகூரும்; என் இறைவனே இன்னும்
ஒருமுறை மட்டும் என்னைப் பலப்படுத்தும். எனது இரு கண்களையும் எடுத்துப்போட்ட
பெலிஸ்தியரை ஒரேயடியில் பழிவாங்கவிடும்” என வேண்டுதல் செய்தான். [29] பின்பு
சிம்சோன் கோவிலைத் தாங்கிநின்ற நடுத்தூண்கள் இரண்டையும் எட்டிப்பிடித்தான்.
அவற்றில் ஒன்றைத் தனது வலதுகையாலும், மற்றொன்றை தனது இடதுகையாலும் இறுக்கிப்
பிடித்துக்கொண்டான். [30] பின் சிம்சோன், “நான் சாகும்போது பெலிஸ்தியருடனே
சாகவேண்டும்” என்று சொல்லி, தனது முழு பெலனையும் சேர்த்துத் தூண்களைத்
தள்ளினான். அப்பொழுது ஆளுநர்கள்மேலும், கூடியிருந்த எல்லா மக்கள்மேலும் கோயில்
இடிந்து விழுந்தது. இவ்வாறாக அவன் உயிருடன் இருக்கும்போது கொன்றவர்களைவிட, அவன்
இறந்தபோது அநேகரைக் கொன்றான். https://bible.com/bible/2730/jdg.16.28-30.TCV எபிரெயர் 11:32-33 TCV [32] இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக்,
சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுயேல் ஆகியோரைக்குறித்தும், மற்ற
இறைவாக்கினரைக்குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை. [33] இவர்களெல்லாரும்
விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள். நீதியை நடைமுறைப்படுத்தினார்கள்.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கங்களின் வாய்களைக்
கட்டினார்கள். https://bible.com/bible/2730/heb.11.32-33.TCV தற்கொலைத் தாக்குதலுக்கு கூட முன்மாதிரியான நிகழ்வாக
பைபிள் தான் சிறப்பித்து கூறுகிறது. அதனால் வயிற்றில் குண்டை கட்டிக்கொண்டு சிறுவர்களையும்
கொல்லும் நிகழ்வுக்கு உதாரணம் இவர்களின் புனித நூலில் தான் உள்ளது!! |
Comments
Post a Comment