குர்ஆன் இறைவேதமா 2015 IPC vs TNTJ 1

 


விவாதம் 1- குர்ஆன் இறைவேதமா?

1.முகம்மது நபியிடம் ஹிரா குகையில் இருக்கும்போது வந்தவர் இருக்க அணைத்து ஓதுவீராக என சொன்னார். அவர் தன்னை இறைவனிடமிருந்து வந்தவர் என சொல்லவில்லை.. முகம்மது நபி பயந்து போயிருந்தார். வரகா என்ற கிறிஸ்தவர் தான் இது மூஸாவிடம் வந்த நாமூஸ் என சொன்னார். இதன்பின் இரண்டாம் தடவையாக அதே நபரை வானத்தில் கண்டபோதும் மயங்கி விழுந்தார். பிறகு தற்கொலை செய்துகொள்ள முற்பட்டார். ஆகவே இது இறைவனிடமிருந்து வந்ததல்ல என (10+ நிமிடம்) பேசினார் மூத்த போதகர்

பதில்:

1.வந்தவர் வானவர் (அல்மலக்) என பிற்காலத்தில் முகம்மது நபியின் மூலமாக அன்னை ஆயிஷா அவர்களே இச்செய்தியை அறிவிக்கிறார்- (புகாரி 3)

2.முதலாவது இறங்கிய வசனமே "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!- அவன் மனிதனை அலக்கிலிருந்து படைத்தான்- ஓதுவீராக. உமது இறைவன் சங்கையானவன்-"(96:1-5) என்பது தான். இது வந்தவர் மனிதனோ சாத்தானோ அல்ல என்பதற்கும் இறைவனுடன் தொடர்புடையவர் என்பதற்கும் சான்றாகும்.

3.வரகா என்பவர் கதீஜா () அவர்களின் உறவினராகவும், அறியப்பட்டவராகவும் இருந்ததால் கதீஜா () அவர்கள் முகம்மது நபியை அவரிடம் அழைத்து சென்றார். அவர் வேதத்தை கற்றறிந்த கிறிஸ்தவராக இருந்ததால், அவற்றில் முன்னறிவிக்கப்பட்ட தூதர் என்பதை அறிந்துகொண்டு, உம்மிடம் வந்தவர்/வந்தது மூஸாவிடம் வந்த நாமூஸ் (தூதர்/வஹீ) தான் என்பதை அறிவித்தார். (பார்க்க புகாரி 3)

வானவர் நபிகளாரை இறுக்கி அணைத்தது: நபிகளாரை ஆறுதல் படுத்துவதற்கும், வஹீயை பெற்றுக்கொள்ள தயார்படுத்துவதற்கும் ,அதுவல்லாத காரணங்களுக்காகவும் இருக்கிறது. அதாவது வெறும் பிரம்மை அல்ல என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

4.வஹீ வருவது நின்றுவிட்ட ஆரம்ப காலத்தில் தற்கொலை செய்துகொள்ள மலையில் ஏறியதாக வரும் செய்தியில் கூட, ஜிப்ரீல் (அலை) வந்து "நீர் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்" என்று சொன்னதாக தெளிவாக உள்ளது (பார்க்க புகாரி 6982).

5.இந்த ஒரு தடவையோடு இந்த வஹீ முடிந்துவிடவில்லை.. 23 வருடம் தொடர்ந்தது. நபியிற்கு வஹீ வருவதை அவரது தோழர்கள், மனைவி நேரடியாக உணர்ந்தும் கண்டும் இருக்கிறார்கள்.

நபிகளாருக்கு குளிர்காலத்தில் இறைச்செய்தி இறங்கினாலும் அப்போது குளிரிலும் வியர்வை வடியும் நிலை ஏற்படும். இதை நபியின் மனைவியே சான்று பகர்ந்துள்ளார்கள்-(புகாரி 2,2661,4141, 4750.. முஸ்லிம் 4658 (2333a).

நபிகளாருக்கு வஹீ வரும்போது அதன் கடுமை காரணமாக அவர் ஒட்டகத்தின் மீது இருந்தால், அது கீழே அமர்ந்துவிடுவதை பார்த்திருக்கிறார்கள்-(முஸனத் அஹ்மத் 24868,அல்ஹாகிம் 3865)

நபியின் தொடை தன் தொடை மீது இருக்கும்போது நபிகளாருக்கு வஹீ இறங்கியபோது, தன் தொடை நசுங்கி விடுமோ என்று அஞ்சும் நிலைக்கு சென்றது என ஸைத் இப்னு ஸாபித் கண்டார்கள் (புகாரி 2832,4592)

நபிகளாருக்கு வஹீ இறங்கும்போது அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். அதனால் அவரது முகம் சாம்பல் நிறமாகிவிடுவதை நபித்தோழர்கள் கண்டுள்ளனர்-(முஸ்லிம் 4660 (2334))

வஹீ வரும்போது முகம் சிவந்து குறட்டை விடுவது போல் நிலை ஏற்படுவதை தோழர்கள் கண்டுள்ளனர்- (புகாரி 1536)  (அதாவது ஆரம்பத்தில் முகம் சிவந்து பிறகு சாம்பல் நிறம் போல் ஆகிவிடும்)

வஹீ இறங்கும் போது நபியிடமிருந்து சத்தம் ஒட்டகத்தின் குறட்டை சத்தம் போன்று தோழர்கள் தம் காதுகளால் கேட்டுள்ளனர்-(புகாரி 1789)

இவ்வாறு நபிகளாருக்கு இறைச்செய்தி வஹீ வருவதை தன் தோழர்கள் கண்ணால் கண்டு காதால் கேட்டு,தோலினால் உணர்ந்திருக்கிறார்கள்.

6.நபியிற்கு குர்ஆனை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறக்கி வைப்பது ஜிப்ரீல் என்றும் (குர்ஆன் 2:97), இறக்கி வைப்பவர் அதே  பரிசுத்த ஆவி என்றும் (16:102), இது இறைவனிடமிருந்து இறக்கிவைப்பட்டது என்றும் நம்பிக்கைக்குரிய ஆவி இதை இறக்கினார் (26:192-193) கூறுகிறது. (வானவர் ஜிப்ரீல்-பரிசுத்த ஆவி-நம்பிக்கைக்குரிய ஆவி)

நபிகளார் தம்மிடம் வருபவர் ஜிப்ரீல் என அறிவித்திருக்கிறார்கள்:

அண்டைவீட்டாரைக்குறித்து ஜிப்ரீல் எனக்கு உபதேசித்துக்கொண்டேயிருந்தார். எந்தளவுக்கென்றால் அண்டைவீட்டானை வாரிசாக ஆக்கிவிடுவாரோ என நினைக்கும் அளவுக்கு -புகாரி 6014-6015

ஹஸ்ஸான் எனும் தோழரிடம் எதிரிகளுக்கு கவிதையில் பதிலடி கொடுக்குமாறு கூறிவிட்டு, உன்னுடன் ஜிப்ரீல் இருக்கிறார் என கூறியுள்ளார் (புகாரி 3213, 4123)

ஜிப்ரீல் தனக்கு ஒரே ஹர்ஃபில் (ஒரே விதத்தில்) ஓதிக்காட்டியதாகவும், நான் அதை அதிகப்படுத்துமாறு கேட்க , ஏழு ஹர்ஃப் (விதங்கள்) வரை சென்றது என நபிகளாரே சொல்லியுள்ளார்கள் (புகாரி 3219&4991)

ஜிப்ரீல் என்னை அழைத்து, "உங்கள் கூட்டத்தாரின் கூற்றையும் அவர்கள் உமக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவியேற்றான்" என்று கூறியதாக நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 7389)

இதோ ஜிப்ரீல். அவர் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என நபிகளார் அன்னை ஆயிஷாவிடம் கூறினார்கள் (புகாரி 3768,6201&6253)

பத்ர் யுத்தத்தின் போது ஜிப்ரீல் குதிரையை பிடித்தவாறு போருக்காக நிற்கிறார் என மக்களுக்கு அறிவித்தார்கள்-புகாரி 3995

மனிதரூபத்தில் நபிகளார் கனவில் அவரை கண்டபோது தன்னை ஜிப்ரீல் என அறிமுகமும் செய்துள்ளார்-புகாரி 3236). மார்க்கத்தை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு ஜிப்ரீல் மனிதரூபத்தில் நபிகளாரிடம் வந்து கேள்விகேட்டு பதில் பெற்றதும் பிறகு நபிகளார் மக்களுக்கு இவர் ஜிப்ரீல் உங்களுக்கு கற்றுக்கொடுக்க வந்தார் என அறிவித்தார் -புகாரி 50&4777

அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் புகுவார் என ஜிப்ரீல் என்னிடம் நற்செய்தி சொன்னார்- புகாரி 7487

ஜிப்ரீல் தம்மை அடிக்கடி சந்திப்பதை நபிகளார் விரும்பினார். அவ்வாறு வருமாறு கேட்டார். அப்போது தான் குர்ஆன் 19:64 "நாம் உம்முடைய இறைவனின் கட்டளையின்றி இயங்குவதில்லை..." என வசனமும் இறங்கியது -புகாரி 3218&4731&7455

ஒவ்வொரு வருடமும் ஒரு முறை குர்ஆனை ஜிப்ரீல் ஓதிக் காட்டி சரிபார்ப்பார். இந்த வருடம் (கடைசி வருடம்) இருமுறை சரிபார்த்தார் என தன் மகளிடம் சொன்னார்.(புகாரி 3623-3624&6285-6286

தம்மிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது ஜிப்ரீல் வந்து அறிவித்து கொடுத்ததாக சொன்னார்கள் -புகாரி 3329&3938&4480

ஆக நபிகளார் தன்னிடம் வந்தது ஜிப்ரீல் என பிறகு அறிந்தேயிருந்தார் .

7.முகம்மது நபியை நோக்கி, "மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன் என்று கூறுவீராக -7:158 என குர்ஆன் தெளிவாக கூறுவதோடு,

 இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றும் அல்லாஹ் இறக்கி வைத்தது என்றும் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கிறது என்றும் கூறுகிறது (2:91,99, & 3:3-4,7....)

(முந்திய வேதங்கள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசன நிறைவேற்றமாக இருப்பதன் மூலம் குர்ஆன் அவற்றை மெய்ப்பிக்கிறது.)

இப்படி குர்ஆன் இறைவேதம் என்றும் முகம்மது நபி இறைவனின் தூதர் என்றும் குர்ஆனும் சான்று பகர்ந்துள்ளது. மக்களும் முகம்மது நபியிற்கு வஹீ வருவதை கண்டும் உணர்ந்தும் உள்ளனர்.

மலக்கு இறைவனின் கட்டளைப்படியே இறங்குவதால், முதல் முறையின் போது 96ம் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஹிரா குகையில் கொடுத்தார். இதன்பின் வஹீ வருவது நின்றது. (புகாரி 3). அதன்பின் சில காலம் கழித்து அதே மலக்கு வானத்தை அடைத்த நிலையில் காட்சியளித்தார். அதனால் நபிகளார் பயந்தார். அப்போதே 74ம் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் இறங்கியது (புகாரி 3238,4925,4926,4954). அதன்பின் வஹீ தொடர்ச்சியாக வர ஆரம்பித்தது (புகாரி 4,).. இங்கே வானவர் அவரை கைவிட்டுவிட்டு ஓடவில்லை..  அவர் பயந்து வீட்டுக்கு சென்ற பின் மீண்டும் வஹீ வந்தது. அதுவே 74ம் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள்.

எதிர்வாதம்:

1.பைபிளிலேயே தேவதூதன் தன்னை தேவன் அனுப்பினார் என்றும் தன்னை தேவதூதன் என அடையாளப்படுத்தாமலும் பேசிய கதைகள் உண்டு

உதாரணமாக சிம்சோனின் பிறப்பு பற்றி கூறுவதற்கு வந்த தேவதூதன் தன்னை தேவதூதன் என தன்னை அறிமுகப்படுத்தவேயில்லை- நியாயாதிபதிகள் 13:3-6,9-16. அவனுடைய பெயரை கேட்ட போது கூட சொல்லவில்லை (நியா 13:18)- வானத்திற்கு ஏறிப்போனதை கண்ட பின்பே தேவதூதன் என அவர்கள் அறிந்தனர்-நியா 13:20-21

2.யாக்கோபுடன் மாறுவேடத்தில் வந்து சண்டை பிடித்து தொடைச்சந்தை தொட்டுள்ளார். இதனால் யாக்கோபு நொண்டி நொண்டி நடந்தார் என்றும் யாக்கோபு அவருடைய  பெயரை கேட்டபோது, ஏன் பெயரை கேட்கிறாய் என்று கேட்டார். பெயரை சொல்லவேயில்லை.- இதன் பின்பு இஸ்ரேல் என பெயரை மாற்றியதால் வந்தது தேவன் என புரிந்துகொண்டார் யாக்கோபு -ஆதி 32:24-30&31

வேடிக்கையாக வந்து பெயரை மாற்றிய பின் தேவன் மீண்டும் பெயரை மாற்றுகிறார்.. இனி யாக்கோபு என அழைக்கப்படாமல் இஸ்ராஏல் என்று அழைக்கப்படுவாய். (ஆதி 35:10). இதை மறந்துவிட்டு அவனை யாக்கோபு என 500+ தடவைகள் குறிப்பிட்டுள்ளார். வேடிக்கையாக யாக்கோபே யாக்கோபே என அவரே கூப்பிடுகிறார் (ஆதி 46:2), பிறகு மோசேயிடம் தன்னை அடையாளப்படுத்தும் போது ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் என்றே சொல்கிறார் (யாத் 3:6)

தேவதூதன் போன்றோர் தம்மை பற்றி கேட்கப்படும் போது கூட சொல்லாமல் போயுள்ளார்கள். அம்மக்களாக தான் இது தேவனா தேவதூதனா என கண்டுபிடித்துச் கொள்வார்கள்.

அதுபோன்றே முதல் தடவை முகம்மது நபியிடம் வந்தபோது ஜிப்ரீல் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்பதற்காக அதை பொய் என எப்படி கூறமுடியும்? 23 வருடகாலமாக தொடர்ந்து ஜிப்ரீல் வந்தார். அத்தோடு வந்தவர் மலக்கு தான் என் நபிகளார் மூலமாக அறிவிக்கப்பட்டே உள்ளது.

3.வேடிக்கையாக பரிசுத்த ஆவி இறங்கிய பின், பைபிளின் புனிதர்கள் எப்படி நடந்து கொண்டனர்?

*மோசே மீது கர்த்தரின் ஆவி இருந்தது.(எண் 11:17,25). அப்படியிருந்தும் தேவனை விசுவாசிக்காமல் போனார். பரிசுத்தம்பண்ணாமல் தேவனது கட்டளையை மீறினார் . இதனால் தான் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் நுழையவில்லை (எண் 20:12, உபாகமம் 32:50)

*கர்த்தருடைய பரிசுத்தர் (சங்கீதம் 106:16) என ஆரோனை பைபிள் சொல்கிறது. அந்த பரிசுத்தர் மாட்டுக்குட்டியை தேவன் என கூறி வணங்கவைத்தார் (யாத்திராகமம் 32:1-5)

*தாவீதின் மீது பரிசுத்த ஆவியானவர் ஏவ தொடங்கினார் (1 சாமுவேல் 16:13), அவர் தொடர்ந்தும் தாவீதுக்குள்ளே இருந்தார் (சங்கீதம் 51:11). ஆவியானவர் வந்த பின் குளிக்கிற பேரழகியான மாற்றான் மனைவியை பார்த்து  அவளோடு விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4). இதன் பின் ஆவிக்கு சொந்தக்காரனாகிய தேவன், தாவீதின் மனைவியரை பக்கத்து வீட்டுக்காரனுக்கு சப்லை செய்து விபச்சாரம் செய்விப்பேன் என்றார்-2 சாமுவேல் 12:11-12.

*சிம்சோனை ஆவியானவர் ஏவத்தொடங்கினார் (நியாயாதிபதிகள் 13:24-25). இதன் பின் பிலிஸ்திய பெண்ணை பார்த்து காதலில் விழுந்தார். (இது தெய்வீக காதல்). ஏனெனில் இது கர்த்தர் பிலிஸ்தியருக்கும் சிம்சோனுக்கும் இடையில் சண்டையை மூட்டி அவர்களை பழிவாங்காவதற்காக போட்ட திட்டம். அதாவது கர்த்தர் போட்ட ஸ்கெட்ச் (நியாயாதிபதிகள் 14:1-4).  இதன் பின்னும் வேசிகளுடன் உறவுகளை பேணினார் (நியா 16)

*யெப்தா என்பவரின் மீது ஆவியானவர் இறங்கினார். (நியா 11:29). இதன்பின் தன் மகளை கர்த்தருக்கு நரபலியிட்டார் (நியா 11:30-40). இதுபோல் இஸ்ரவேலரையும் தம் குழந்தைகளை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தியதே நான் தான் என்கிறார் கர்த்தர் (எசேக்கியேல் 20:26). அதன் பின் தன் மகனையே நரபலியாக பூமிக்கு அனுப்பினார் (ரோமர் 8:3, 1யோவான்4:10) என்றும் அந்த மகன்  தேவனுக்கு தன்னை பலியாக செலுத்தினார் (எபேசியர் 5:2) கிறிஸ்தவர்களே நம்புகிறார்கள்.

*தேவனை நம்பி அவரது கட்டளைப்படி போன மக்களை தேவனே அடிவாங்க வைத்துள்ளார் . அதாவது பென்யமீன் கோத்திரத்தார்மீது மற்ற கோத்திரத்தார் யுத்தம் செய்ய போகவைத்து இரண்டு தடவை அடிவாங்க வைத்தார். (நியாயாதிபதிகள் 20:18-25).  இதேபோல் பிலேயாமை கர்த்தரே போக சொன்னார். அவன் போனதால் கர்த்தருக்கு கோபம் மூண்டது (எண்ணாகமம் 22:20-22)

*தம்மா துண்டு ஆணுறுப்பு நுனித்தோலுக்காக மோசேயையே கொல்லப்பார்த்தார். நல்லவேளையாக மோசேயின் மனைவி மகனின் ஆணுறுப்பு நுனித்தோலை அறுத்து சுன்னத் செய்து காப்பாற்றினாள்.(யாத்திராகமம் 4:24-26)

 

ஒரு குஞ்சி ஆணுறுப்புக்காக தான் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசியையே அதுவும் எகிப்திலிருந்து மீட்க தானே அனுப்பிய நபரையே கொல்லப்பார்த்தார் என்பதை வைத்துக்கொண்டே ஜிப்ரீல் அவர்கள் செய்ததை விமர்சிக்கலாமா? அது நியாயமா? அப்படி பார்த்தால் முழு பைபிளுமே போலி என்றாகிவிடும். காரணம் பைபிளின் அடிப்படை ஆரம்பமே மோசே தான்.  .

*புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவி வந்தவுடன் இயேசுவை சாத்தானிடம் சோதனைக்காக ஒப்புக்கொடுத்துள்ளார் தேவன்/ஆவியானவர்

மத்தேயு 4:1 TAOVBSI

[1] அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

https://bible.com/bible/339/mat.4.1.TAOVBSI

சாத்தானுக்கே ஆவியானவர் இயேசுவை கொடுத்துள்ள போது இதை வைத்துக்கொண்டு ஜிப்ரீல் தன்னை ஜிப்ரீல் என சொல்லவில்லை. பயந்தபோது ஒன்றும் சொல்லவில்லை என சொன்னால் எப்படி?

இதன்பின்பு கூட, இயேசுவை தேவன் கைவிட்டார் என இயேசுவே கருதியுள்ளார்:

மத்தேயு 27:46 TAOVBSI

[46] ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

https://bible.com/bible/339/mat.27.46.TAOVBSI

இது ரொம்ப கேவலமாக இருப்பதால் லூக்காவும் யோவானும் இந்த வாசகத்தையே தூக்கிவிட்டு, ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக்கா 23:46) என்றும் முடிந்தது (யோவான் 19:30) என்றும் மாற்றியுள்ளானர்

ஆனால் முகம்மது நபியோ இறைவன் தன்னை கைவிட்டார் என ஒருபோதும் கருதியதில்லை!

 

முதல் தடவை வந்தபோது தன்னை ஜிப்ரீல் என்றும் தூதர் என்றும் சொல்லாததால் எப்படி இறைவேதம் இல்லை என்றாகும்?  தான் கண்டிராத மனிதரல்லாத பூமியை சேராத வேறொரு இனத்தை முதலில் காண்பவர் பயப்படத்தானே செய்வார்! இதிலே இறைவேதம் இல்லை என்பதற்கு எப்படி சான்றாகும்? ஆனாலும் வந்த வானவர் 23 வருடங்களாக வந்தார் என்பதுடன் அவர் ஜிப்ரீல் தான் என நபிகளாரே கூறியுள்ளார் குர்ஆனும் கூறியுள்ளது

2.முகம்மது நபியிடம் "சந்தேகிப்போரில் ஒருவராக ஆகிவிட வேண்டாம்- 2:147,3:60,6:114,10:94 என கூறுவதால் முகம்மது நபி நம்பவில்லை ஆகவே இறைவேதம் இல்லை என்கிறார்.

ஏன் சந்தேகப்படுகிறீர் என்று கேட்டால் சந்தேகப்பட்டுள்ளார் என்று அர்த்தம் வரும்.

ஆனால் சந்தேகப்படாதீர் என்று சொன்னால், இது உண்மையாக இருப்பதால் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்ற உபதேசமே அடங்கியுள்ளது.

இதேபோன்று இணைவைப்பவர்களில் ஆகிவிட வேண்டாம் (6:14 &10:105, 28:87), அல்லாஹ்வின் வசனங்களை பொய்யாக்குவோரில் ஆகிவிட வேண்டாம் (10:95), மோசடிக்காரருக்கு வாதாடுபவராக ஆகவேண்டாம்(4:105), பாராமுகமானவராக ஆகிவிட வேண்டாம் (7:205),மீனுடையவர் (யூனுஸ்) போன்று ஆகிவிட வேண்டாம் (68:48).. இவையெல்லாம் இறைவன் தன் தூதருக்கு கூறும் நல்லுபதேசங்களேயாகும்.

*முகம்மது நபியவர் சந்தேகப்படவில்லை.. மாறாக உறுதியாக நம்பினார்கள் என்பதை குர்ஆன் 2:285 கூறுகிறது.

"இத்தூதர் தன்மீது தன் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதை விசுவாசிக்கிறார். விசுவாசிகளும் விசுவாசிக்கிறார்கள்"-2:285

இதன் வெளிப்பாடாக, முகம்மது நபி தன் கால்கள் வீங்கும் அளவுக்கு இறைவனை நின்று வணங்குவார்கள் புகாரி 4837

நான் தான் முதலாவது சுவர்க்கம் நுழைவேன் தனக்கு  முன் யாருக்கும் அதன் கதவு திறக்கப்படாது என்பதையும் (முஸ்லிம் 333 < ஆங்கிலம் 197>), நான் தான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் என்றும் இறைவனிடம் முதலாவது பரிந்துரைப்பவரும் நானே என்றும் தெளிவாக சொல்லியுள்ளார்கள் (புகாரி 3340)

ஆக முகம்மது நபி சந்தேகப்படவும் இல்லை... சந்தேகப்பட்டு யாரிடமும் கேட்கவுமில்லை!!

எதிர்வாதம்

பைபிளில் விபச்சாரம் செய்யாத இருப்பாயாக என்று சொன்னதை வைத்து தற்போதுள்ள போதகர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். அப்படி விபச்சாரம் செய்கிற போதகர்களிடமே இப்படி பேசுகிறது என்று சொன்னால் போதகர் ஏற்பாரா?

பைபிளிலே கர்த்தரின் முதலாவது வேதம் கொடுத்த மோசே தேவனை விசுவாசிக்கவில்லை என்கிறது பைபிள்:

எண்ணாகமம் 20:12 TAOVBSI

[12] பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

https://bible.com/bible/339/num.20.12.TAOVBSI

புதிய ஏற்பாட்டின் கதாநாயகன் இயேசுவே கர்த்தரை நம்பவில்லை. அதனால் தான் என்னை ஏன் கைவிட்டீர் என்று கூறினார்:

மத்தேயு 27:46 TAOVBSI

[46] ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

https://bible.com/bible/339/mat.27.46.TAOVBSI

இது அவமானமாக இருப்பதால் லூக்காவும் யோவானும் இந்த வாசகத்தை நீக்கிவிட்டு "ஆவியை ஒப்படைககிறேன்" என்றும் "முடிந்தது" என்றும் சொன்னதாக எழுதியுள்ளனர்.

 

முகம்மது நபி சந்தேகப்பட்டதாக எதுவுமில்லை.. சந்தேகப்படாதே என்று இறைவன் சொன்னதால் எப்படி இறைவேதம் இல்லை என்றாகும்?

பைபிளின் அடிப்படை தொடக்கம் மோசே. அவரே தேவனை நம்பாதவர் என்பதால் தான் அவரை வாக்களிக்கப்பட்ட தேசத்தில் நுழையவில்லை. அவர்களின் அளவுகோளின்படி பைபிள் தான் இறைவேதம் இல்லை என்றாகும்.

அத்தோடு இயேசுவே கடைசி நேரத்தில் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என கேட்பதிலிருந்து அவரே தேவனை முறையாக நம்பவில்லை என காட்டுகிறது. (இது அசிங்கமாக இருப்பதால் லூக்காவும் யோவானும் தூக்கிவிட்டு வேறு வார்த்தைகளை இயேசு கூறியதாக கதை விடுகிறார்கள்.

3.மரியாளிடம் வந்தவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என லூக்கா 1:27 இலே உள்ளதாம். ஆனால் வந்த ஜிப்ரீலை பற்றி அப்படி இல்லை என்கிறார் தற்குறி

புகாரி 3 மற்றும் 4 இலேயே வந்தவர் மலக்கு என்று தெளிவாக உள்ளது. மலக்குகள் என்போர் இறைவன் கட்டளையிட்டபடியே செய்கிறவர்கள் (குர்ஆன் 21:27), இறைவனது கட்டளையின்றி (பூமிக்கு) இறங்குவதுமில்லை (குர்ஆன் 19:64).

மரியாளிடம் தேவதூதன் அனுப்பப்பட்டதாக லூக்கா தான் சொல்கிறார்.  அதுவும் அவர் விசாரித்து எழுதினேன் என்றே கூறியுள்ளார் (லூக்கா 1:3)

மரியாளிடம் தன்னை தேவதூதன் என அங்கே அறிமுகப்படுத்தவேயில்லை!

இதனாலோ என்னவோ மரியாள் இயேசுவை பற்றி சிமியோன் சொன்னதை கேட்டு யோசேப்புடன் சேர்ந்து ஆச்சரியப்படுகிறார் (லூக்கா 2:33)

யோசேப்பிடம் கனவில் வந்த தூதன் தன்னை தேவதூதன் என அறிமுகப்படுத்தியதாக எதுவுமே இல்லை.(மத்தேயு 1:20-21, 2:13-14,19-21)

 

தூதன் தன்னை முதல் தடவையில் அறிமுகப்படுத்தாதுவிட்டாலும் 23 வருடகாலமாக தொடர்ந்து அறிமுகமானவராகவே இருந்தார். இதனால் எப்படி இறைவேதம் இல்லை என்றாகும்?

4.குர்ஆன் 2:144 இலே"நீர் விரும்பிய கிப்லாவின் திசையில் உம்மை திருப்பி விடுகிறோம்" என சொல்லி நபியின் விருப்பப்படி இருப்பதால் அது இறைவேதம் அல்ல என்கிறார். (பைபிளிலே மோசே இஸ்ரவேலர் கேட்டதற்கு பயந்ததால் கர்த்தர் தண்ணீர் கொடுத்ததை சுட்டிக்காட்டியதும் , தொழுகை விசயங்களில் மனித விருப்பம் இருக்க கூடாது. ஆனால் மற்ற விசயங்களில் இருக்கலாம் என உருட்டினார். கடவுள் வானத்திலிருந்தால் ஏன் கஃபாவை நோக்கி தோழவேண்டும் என்கிறார். தானியேல் அப்படி தொழுதார் அது யூத வழமை. ஆனால் கர்த்தர் அப்படி சொல்லவில்லை என்கிறார்

-முகம்மது நபி கஃபாவை நோக்கி தொழுவதற்கு விரும்பினார்.  ஆனாலும் 16 மாதங்கள் கழித்தே இவ்வாறு இறைவன் தொழும் திசையை எருசலேமிலிருந்து கஃபாவின் திசையாக மாற்றினான். (புகாரி 4492,4486)

-முகம்மது நபி தன் இஷ்டப்படி தொழும் திசையை மாற்றிக் கொள்ளாமல், இறைவன் அனுமதியை எதிர்பார்த்து வானத்தை நோக்கி தன் முகத்தை திருப்புபவராக தான் இருந்தார். அதையே 2:144 கூறுகிறது.

 இது தெளிவான முகம்மது நபி இறைவனின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்படுபவராக தான் காட்டுகிறது.

தன் கட்டளைக்கு கட்டுப்படுபவருக்கு அவர் விரும்பிய கஃபாவை நோக்கி தொழ அனுமதிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது.

அத்தோடு இறைவனின் தீர்மானத்தில் இருந்ததையே நபிகளார் விரும்பினார்கள்.

-இறைவன் வானத்தில் இருந்தாலும், தொழும்போது நமக்கு முன்னால் இருப்பதாக கருதியே தொழுகிறோம்.(புகாரி 405,416).. அனைவரும் நேராக நின்று ஒரே திசையில் தொழும்போதே கூட்டாக ஒற்றுமையாக ஓரிடத்திலிருந்து  தொழ முடியும் . அதற்காக தான் அந்த திசையாக எருசலேம் ஆலயத்தை நோக்கி தொழுத 16 மாதம் கழித்து அன்றுமுதல் கஃபாவை நோக்கி தொழுகிறார்கள்..

-முதலில் எருசலேம் ஆலயத்தை நோக்கி பிரார்த்தனை செய்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தேவனுக்கு கூறியது சாலமோன் ராஜா (1 இராஜாங்கள் 8:33-38,42-45,48-50& 2நாளாகமம் 6:24-30,34-39), அவர் சொன்னபடியே விரும்பிய படியே தேவனும் செய்வித்தார்.. அதனால் தான் தானியேல் பாபிலோனிலிருந்து எருசலேமை நோக்கி ஜெபம் செய்தார் (தானியேல் 6:10) கூறுகிறது

இவர்களின் வாதப்படி பைபிள் தான் இறைவேதம் இல்லை என்றாகும்

முகம்மது நபி தன் விருப்பப்படி தொழும் திசையை மாற்றாமல் இறைவன் கட்டளையிடும்வரை காத்திருந்தார். பைபிளிலே சாலமோனின் விருப்பமான வேண்டுதலின் படியே எருசலேம் ஆலயத்தை நோக்கி தொழும் வழமையே உண்டானது. இவர்களின் இந்த அறிவீன வாதப்படி பைபிள் தான் இறைவேதம் அல்ல என்றாகும்.

5.புகாரி 5113 இலே"நபியே! உமது விருப்பத்தை நிறைவேற்றுவதில் உமது இறைவன் விரைந்து செயற்படுவதாக காண்கிறேன் என ஆயிஷா () அவர்கள் 33:51 குறித்து சொன்னதை குறிப்பிட்டு அது இறைவேதம் அல்ல என்கிறார்.

இந்த ஹதீஸில் கூட, நபியவர்கள் தன் விருப்பத்திற்காக இட்டுக்கட்டுகிறார் என அவரை நன்கு அறிந்த மனைவி கருதவில்லை.... மாறாக இறைவனே நபிகளாரது விருப்பத்தை நிறைவேற்றுவதாக சொல்கிறார்கள்.

இறைவன் தன் தூதருக்கு விரும்பியதை தேர்வு செய்ய உரிமை கொடுத்து, அவர் எதை தெரிவு செய்தாலும் குற்றமில்லை எனும் விதமாக 33:51 இறக்கினான்

அதாவது அவர் விரும்பினால், அவரது மனைவியரில் சிலரை ஒதுக்கி வைக்கலாம். அல்லது அவர்களை சேர்த்துக்கொள்ளலாம். விரும்பினால் அவர் ஒதுக்கியவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என தேர்வை வழங்கினான்.

இது குறித்து தான் அன்னை ஆயிஷா அவர்கள் கூறினார்கள் (புகாரி 4788,5113)

இப்படி தன் தூதர் நேர்மையாக தான் நடப்பார் என அறிந்ததால் இறைவன் தேர்வை வழங்கியுள்ளான்.

அப்படி தேர்வு வழங்கப்பட்ட பின்பும் நபிகளார் அதை பயன்படுத்தவில்லை என்பதை அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார் - புகாரி 4789

இது குறித்து குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை...

-கர்த்தர் தாவீது ராஜாவின் ஆசையை நிறைவேற்றினேன் என சொன்னாரே

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:7-8 TAERV

 

[7] அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். [8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.

https://bible.com/bible/3154/2sa.12.7-8.TAERV

அத்தோடு தாவீது உரியாவின் மனைவியுடன் இரண்டாம் தடவை உடலுறவு கொண்டு பிறந்த குழந்தையை கர்த்தரே நேசித்தார் - 2 சாமுவேல் 12:24

முகம்மது நபியின் விருப்பப்படி அவருடைய மனைவியருடன் நடப்பதற்கு அனுமதித்தும் கூட நபிகளார் அந்த சலுகையை பயன்படுத்தவில்லை.. இறைவன் தன் தூதருக்கு அவர் குடும்ப விசயத்தில் அவர் இஷ்டப்படி நடப்பதற்கு அனுமதிக்க கூடாது என்று எப்படி தீர்மானித்தார்? அவரது வாதப்படியே தாவீதுக்கு அவரது ஆண்டவரின் மனைவிகளை கொடுத்து ,பினா தன் இஷ்டப்படி மாற்றான் மனைவியை தன் மனைவியாக ஆக்கிய போது பிறந்த குழந்தையை நேசித்தார் என்றும் உள்ளதே. இவர்களின் வாதப்படி பைபிள் தான் இறைவேதம் இல்லை என்றாகும்.

6.புகாரி 3047 இலே காஃபிரை கொன்றதற்காக முஸ்லிம் கொல்லப்பட மாட்டான் என்று உள்ளது. இது எல்லா காலத்திற்கும் பொருந்துமா என கேட்கிறார். அபூதாவூத் 2751 உம் இதே விசயத்தை தான் சொல்கிறது. அதையும் பிறகு குறிப்பிட்டு அவர்களுடன் கலந்திருக்க கூடாது என சொல்வதாக மாற்றி கூறுகிறார் (நான்காம் வீடியோ)

-இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவரை கொல்பவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166)

-இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை பறிப்பவருக்கு எதிராக நானே வழக்காடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள் (அபூதாவூத் 3052)

-அப்படி கொல்லப்பட்ட நபருக்காக நஷ்டயீடு கொடுக்க வேண்டும். அது முஃமினின் நஷ்டயீட்டின் பாதி (அபூதாவூத் 4542, திர்மிதீ 1413)

இறைநம்பிக்கை மீதுள்ள கண்ணியத்தின் காரணமாக காஃபிரை கொன்றவன் கொல்லப்பட மாட்டான். ஆனால் அப்படி செய்தவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் என்றும் நஷ்டயீடும் வழங்கப்படும்.

(ஆனால் பைபிளிலோ கொழந்தைகளை கூட ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார் -1 சாமுவேல் 15:2-3, உபாகமம் 20:16-18)

-இஸ்ரவேலர் வசிக்கும் இடத்திலுள்ள பூர்வகுடிகளான மாற்றுமதத்தவர்களை ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் விடாமல் கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார் . இல்லைனா இஸ்ரவேலர் கெட்டுப் போவார்கள் ஆம்

உபாகமம் 20:16-18 TAOVBSI

[16] உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/339/deu.20.16-18.TAOVBS  

பைபிளின் சமத்துவம்:

பைபிளிலே கர்த்தர் தெளிவாக அந்நியனையும் இஸ்ரவேலனையும் பிரித்தே பார்க்கிறார்

1.அந்நியனிடம் வட்டி வாங்கலாம். ஆனால் இஸ்ரவேலனிடம் வாங்க கூடாது(உபாகமம் 23:19-20)

2.அந்நியனிடம் செத்துப்போன மிருகத்தையும் விற்றுப் போடலாம். ஆனால் இஸ்ரவேலனுக்கு செய்ய கூடாது (உபாகமம் 14:21)

3.இஸ்ரவேலன் அடிமைப்பட்டால் ஆறு வருடம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அந்நியனை காலம் முழுதும் அடிமைப்படுத்தலாம் (லேவியராகமம் 25:42-46)

4.அந்நியன் ஆலயத்தில் பரிசுத்தமானதை உண்ணக்கூடாது(யாத்திராகமம் 29:33, லேவியராகமம் 22:10)

இத்தனைக்கும் இருவரும் ஒரே கர்த்தரை வணங்கும் மக்கள் தான். அப்படியிருந்தும் தெளிவான பாரபட்சத்தை பைபிள் காட்டுகிறது.

(மாற்றுமதத்தவர்களையோ ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் விடாமல் கொல்லுமாறு ஏற்கனவே சொல்லிவிட்டார்- உபாகமம் 20:16-18,

அத்தோடு துரத்திவிடவும் சொல்லி அவர்களது ஆலயங்களையும் உடைத்துப்போட சொல்லியுள்ளார்- யாத்திராகமம் 23:31-33&23:24

அத்தோடு இவர்களில் உள்ளவன் வேறு கடவுளை வணங்கினாலும் பாரபட்சமின்றி கொல்லுமாறும் ஊரையே கொளுத்தி போடுமாறும் சொல்கிறது -உபாகமம் 13:6-10,&13:12-16)

வேடிக்கையாக சொந்த மதத்தில் சொந்த இனத்தில் சொந்த கோத்திரத்தில் கூட பாரபட்சமே. அதாவது அங்கவீனர் யாரும் பலி செலுத்த வரகூடாது என்றும் அப்படி வந்தால் பரிசுத்த குளைச்சல் என்கிறார் -லேவியராகமம் 21:16-23)

இதை வைத்து கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்கலாமா?

 

இஸ்லாம் இறைநம்பிக்கைக்கு உள்ள கண்ணியத்தினால் முஃமின் காஃபிரையை கொன்றதற்காக கொல்லப்பட மாட்டான் என்று சொன்னாலும், அப்படி  ஒப்பந்த பிரஜையான அவனை கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் என்றும் நட்டயீடு கொடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது.

ஆனால் பைபிள் தான் மாற்றுமதத்தவனை உயிரோடு விட்டால் அவனோடு சேர்ந்து கெட்டுப்போய் விடுவாய் என கூறி அவர்களின் ஊரில் மூச்சு விடும் எதையும் உயிரோடு வைக்காமல் அழித்துப் போடுமாறு சொன்னார் கர்த்தர். இவர்களின் வாதப்படி பைபிள் தான் இறைவேதம் இல்லை என்றாகும்.

7.குர்ஆன் 4:15,24:4 போன்றவற்றில் விபச்சாரத்திற்கு நான்கு சாட்சிகளை கேட்கிறது. இப்போது அறிவியல் காலத்தில் இது பொருந்துமா என கேட்கிறார்

அறிவியல் காலத்திலும் தண்டனை நிறைவேற்றுவதற்கு வீடியோவை காட்டினால் , அது உண்மை தான் போலியாக தயாரிக்கப்பட்டதல்ல என்பதை நிரூபிப்பதற்கும் சாட்சி தேவைப்படும் அல்லவா?

அதனால் தான் கண்ணால் கண்ட  நான்கு முஸ்லிமான நம்பிக்கைக்குரிய ஆண்களின் சாட்சியத்தை இஸ்லாமிய சட்டம் கோருகிறது...

ஆக இஸ்லாம் பொருத்தமாக தான் 1400+ வருடங்கள் முன்பே சட்டம் போட்டுள்ளது

 

-முதலிரவில் ரத்தம் வருவதை கன்னித்தன்மைக்கு ஆதாரமாக பைபிள் சொல்வது எப்படி அக்காலத்திற்கேனும் பொருந்தும்?

காரணம் சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது என்பது அறிவியல் உண்மை.

உபாகமம் 22:14-21 TAOVBSI

[14] நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; [15] அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். [16] அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, [17] நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள். [18] அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, [19] அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. [20] அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால், [21] அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

https://bible.com/bible/339/deu.22.14-21.TAOVBSI

 

இஸ்லாம் விபச்சாரத்திற்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு  நான்கு முஸ்லிம்களின் சாட்சியத்தை கோருவது எக்காலத்திற்கும் பொருந்துவது தான். ஆனால் பைபிள் கூறும் கன்னிச்சோதனை தான் பொருந்தாது

 இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

8.முஸ்லிம் 2999 இலே ஒருவர் தன் மனைவியுடன் அந்நியன் விபச்சாரம் செய்வதை காண்டால் நான்கு சாட்சி கொண்டு வருமாறு சொன்னதாக உள்ளதை குறிப்பிட்டு இது தான் எல்லா காலத்திற்கும் பொருந்துமா என கேட்கிறார்.

நான்கு சாட்சி இல்லாமல் அந்த நபரை கொல்லக்கூடாது என்பதை தான் அந்த ஹதீஸ் கூறுகிறது . அதை முஸ்லிம் 3000,2998 ஹதீஸ்கள் கூறுகின்றன.

(இல்லாவிட்டால் கொலை செய்துவிட்டு இதற்காக தான் கொன்றேன் என சொல்லுவோரும் உருவாகி விடுவார்கள்)

ஆனால் இதற்கு மாற்றாக நான்கு சாட்சி இல்லாதபோது "சாப அழைப்பு சத்தியம்" செய்யப்படும்.

அதாவது கணவனை தவிர வேறு சாட்சி இல்லாத நிலையில் விபச்சாரம் செய்தது பிடிக்கப்பட்டு மனைவி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் மறுத்தால்,  சபையோர் முன்பாக அல்லாஹ்வின் மீது நான்கு தடவை சத்தியம் செய்து குற்றச்சாட்டை வைக்க வேண்டும். ஐந்தாவது தடவையாக நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என்மீது உண்டாகட்டும் என கூறுவார். அதை மறுக்கும் மனைவி நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை மறுத்து ஐந்தாவது தடவையாக கணவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும் என கூற வேண்டும் (குர்ஆன் 24:6-9, புகாரி 4747)

சாட்சி இல்லாத போது நடந்து கொள்வதற்கு பொருத்தமான முறையையே இறைவன் காட்டியுள்ளான்.

 

பைபிளிலே மனைவி முதலிரவில் கன்னியாக இருக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தால் , அவளது பெற்றோர் அவள் கன்னியாக தான் இருந்தாள் என்பதற்கு ஆதாரமாக உடலுறவு ரத்தம் படிந்த துணியை விரித்து சபையோருக்கு காட்ட வேண்டும் என்கிறது. அப்படி இல்லாவிட்டால் அவள் வேசி என தீர்ப்பளித்து கொல்லுமாறு கூறுகிறது -உபாகமம் 22:13-21

ஆனால் சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. இதனால் பைபிளை நம்புவோர் தன் அப்பாவி மனைவி மீது இத்தகைய சந்தேகம் கொள்வதற்கு பைபிள் காரணமாக உள்ளது.

அத்தோடு தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் (எண்5:14), அவளை ஆசாரியனிடம் (பாதிரியார்) அழைத்துச்சென்று மண் கலந்த தண்ணீரை குடிக்க வைத்து பாதிரியார் இடும் சாபங்களுக்கு ஆமென் சொல்லி அந்த சாபம் எழுதிய துண்டுச்சீட்டையும் கழுவி குடிக்க வைக்க வேண்டும் (எண்ணாகமம் 5:14-24)

இங்கே பெண்களுக்கு அதை மறுத்து சாட்சி கூறும் எந்த உரிமையையும் பைபிள் வழங்கவில்லை....

தண்டனை வழங்குவதற்கு சாட்சிகள் தேவை. அதை தான் முஸ்லிம் 2999 ஹதீஸ் கூறுகிறது. ஆனால் பைபிளோ பெண் மீது அவதூறு சொன்னால் கூட முதலிரவில் கன்னியாக இருந்தாள் என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மடத்தனமாக கூறுகிறது. சந்தேகம் வந்தால் கசப்பு நீரை குடிக்க வைத்து சபை முன்பு பாதிரியார் கூறும் சாபங்களுக்கு ஆமென் ஆமென் என்று மட்டுமே கூறமுடியும்.

இதை வைத்துக்கொண்டு விமர்சிக்கலாமா? இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

9.புகாரி 4955 இலே வஹீயின் ஆரம்பம் நல்ல கனவுகளாக இருந்ததாகவும், பிறகு குகையில் 96:1-5 இறங்கியதாக உள்ளது. ஆனால் புகாரி 4922 இலே 96:1-5& 74ம் அத்தியாயத்தின் ஆரம்பவசனங்கள் இலே எது முதலில் வந்தது என கூறும்போது ஜாபிர் எனும் நபித்தோழர் 74ம் அத்தியாயத்தை குறிப்பிடுவதாக குறிப்பிட்டு முரண்பாடு என்கிறார்.

வஹீயின் ஆரம்பம் நல்ல கனவுகளாக இருந்தது.

குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய வசனம் 96:1-5 (புகாரி 3), அதன்பின் வஹீ நின்று விட்டிருந்தது. அதன் பின்பு (மூன்று வருடம் கழித்து) ஜிப்ரீலை வானத்தை அடைத்திருக்கும் நிலையில் கண்டு பயந்து ஓடினார்கள். அதன் பின்பே 74:1-5 இறங்கியது. அதன்பின் வஹீ தொடர்ச்சியாக இறங்கியது (புகாரி 4)

இதை தெரியாத இரண்டு தோழர்கள் கருத்துவேறுபாடு கொண்டதை வாதமாக வைப்பது எவ்வளவு தற்குரித்தனமானது?

முரண்பாடுனா எப்படி இருக்க வேண்டும்?

சாத்தான் இயேசுவை சோதிக்க கூட்டிச்சென்ற ஒழுங்கு எது?

1.எருசலேம் ஆலய கூரையில் ஏற்றி கீழே குதிக்க சொன்னான். பிறகு மலைக்கு மேலே ஏற்றி சகல ராஜ்யங்களையும் காட்டி தன்னை பணிந்துகொண்டால் அதை இயேசுவுக்கு தருவதாக சொன்னான். "அப்பாலே போ சாத்தானே!" என்றார். அவன் போய்ட்டான் (மத்தேயு 4:5-11)

2.முதலில் மலைக்கு மேலே ஏற்றி ராஜ்யத்தை காட்டி தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு அவனுக்கு "பின்னாலே போ சாத்தானே!" என்றார். (ஆனால் அவன் போகாமல் மீண்டும்) பிறகு மீண்டும் எருசலேம் ஆலய கூரைக்கு மேலே ஏற்றி கீழே குதிக்க சொன்னான் (லூக்கா 4:5-9)

முரண்பாடு இப்படி இருக்க வேண்டும். யோவான் இயேசுவை வார்த்தையின் அவதாரமாக கருதுவதால் அவரை சோதிக்க முடியாது என்பதால் அந்த கதையை தூக்கிவிட்டார்.. மாற்கோ இந்த மூன்று சோதனைகளை கூறாமல் 40 நாள் சோதனை என பொதுவாக கூறிவிட்டார்.

இரண்டாபேர் எந்த வசனம் முதலில் வந்தது என்பதில் கருத்துவேறுபாடு கொண்டால் அது இறைவேதம் இல்லை என்றாகுமா? என்ன லாஜிக் இது?

ஆனால் பைபிளோ தெளிவாக சாத்தான் எந்த வரிசையில் சோதித்தான் என்பதில் முரண்படுகிறது.

10. முஸ்லிம் 5146 இலே விந்து 40-45 நாள் கருப்பையில் இருக்கும் என்று சொன்னதாகவும் அதன் பின் வானவர் வந்து விதியை எழுதுவதாக உள்ளதை வைத்து மூன்று நாளிலே விந்து இறந்துவிடும். இது அறிவியல் பிழை என்கிறார்.

விந்து எனும் நிலையிலேயே அது இருக்கும் என கூறப்படவில்லை. கருக்கட்டல் நிகழ்ந்த பின்னுள்ள நிலையையே இது குறிப்பிடுகிறது.

இறைவனுக்கு நிகழ இருப்பவை நிகழ முன்பே தெரியும் என்பதால் கருவில் உள்ள போதே செயல்கள் நிகழ முன்பே வானவர் மூலம் எழுதப்படுகிறது.

தம்பியின் விந்தால் அண்ணனுக்கு சந்ததி உண்டாகும் என அற்புத அறிவியல் பைபிளிலேயே உள்ளது.

ஆதி 38:8-10 IRVTam

[8] அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: “நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்குஎன்றான். [9] அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். [10] அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

https://bible.com/bible/1899/gen.38.8-10.IRVTam

 

கரு உருவாகி 40 நாள் கழித்து விதி எழுதப்படுவதாக ஹதீஸ் சொல்வதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

ஆனால் பைபிள் அருமையாக விந்தியல் விஞ்ஞானத்தை விளக்கியுள்ளது.

11.முஸ்லிம் 525 இலே ஆண் குழந்தை பெண் குழந்தை பிறக்க காரணம் ஆணின் வெள்ளை நீர் பெண்ணின் மஞ்சள் நீரை மிகைத்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் பெண்ணின் நீர் மிகைத்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் முகம்மது நபி சொன்னதை வைத்து பெண்ணுக்கு விந்து இல்லை.  முட்டை தான் இருக்கு. அது கருப்பைல தான் இருக்கும் வெளியே வராது என்கிறார்.

ஆணுடைய விந்தணுக்கள் (sperms) விந்து திரவத்திலேயே (semen) பெண்ணுறுப்பு வழியாக உள்ளே செல்கிறது.

பெண்ணின் கருமுட்டையும் திரவத்தின் மூலமாக தான் சூதகத்திலிருந்து கருப்பையிற்கு செல்கிறது. இந்த திரவமே மஞ்சள் நிறம் என் கூறப்படுகிறது. .

இதிலே ஆணுடைய திரவம் மேலோங்கினால் ஆண்குழந்தை பிறக்கும். பெண்ணுடைய திரவம் மேலோங்கினால் பெண்குழந்தை பிறக்கும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

ஆண் குழந்தை பெண்குழந்தை இரண்டையும் தீர்மானிப்பது ஆணின் விந்தைக் கொண்டே என்பதையும் குர்ஆன் சொல்கிறது (குர்ஆன் 53:45-46, 75:37-39).  இதை திரவம் மேலோங்குவதோடு நபிகளார் விளக்கியுள்ளார்கள்.

இதிலே என்ன குழப்பம்?

பைபிளில் வரிவரி கொண்ட மரக்கட்டைகளை ஆடுகள் பார்த்தவண்ணம் உடலுறவு கொண்டதால் அவை போட்ட குட்டிகளின் உடலிலும் வரிவரி தோன்றியது என பைபிள் அருமையாக விந்தியல் விஞ்ஞானத்தை விளக்கியுள்ளது

ஆதி 30:37-39, 41-42 IRVTam

[37] பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து, [38] தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு. [39] ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

 

[41] பலத்த ஆடுகள் சினையாகும்போது, அந்தக் கிளைகளுக்கு முன்பாக சினையாகும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். [42] பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

https://bible.com/bible/1899/gen.30.37-42.IRVTam

குழந்தை பிறப்பு பற்றி இவர்களுக்கு அறிவில்லாத விடயங்களை முகம்மது நபி சொன்னாதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

பைபிள் கூறும் ஜெனடிக்ஸ் படி வரிவரி உண்டாகுவது எந்தவித அறிவியல்?

12.புகாரி 3238 இலே முகம்மது நபி மூர்ச்சையுற்று மயங்கி விழுந்தார் என பொய் சொல்லி அவர் அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார் என்பதாக உருட்டுகிறார்.

அந்த ஹதீஸிலே முகம்மது நபி திடுக்கத்தால் கீழே விழுந்தார் என்று தான் உள்ளது. மயங்கி விழுந்தார் என எங்கேயும் இல்லை.

அதன்பின் மீண்டும் வஹீ வந்ததாக அதே ஹதீஸிலேயே உள்ளது.

பவுலை இயேசு சந்தித்து (சப்பாத்து போடாமல்) முள்ளில் உதைப்பது கடினம் என்று சொன்னபோது தன்னை சுற்றி ஒளி வீசியதால் கீழே விழுந்ததாக (அப்போஸ்தலர் 9:4, 22:7,26:14) எழுதப்பட்டுள்ளதே.

ஒரு தம்மா துண்டு ஆணுறுப்பு நுனித்தோலுக்காக மோசேயையே கர்த்தர் கொல்லப்பார்த்துள்ளார் (யாத்திராகமம் 4:24-26)

இதை வைத்து விமர்சிக்கலாமா?

 

பிரம்மாண்டமான உருவத்தை காண்கிற மனிதன் கீழே விழுந்தார் என்பதால் இறைவேதம் இல்லை என்றாகுமா?   அதன் பின்பும் வஹீ தொடர்ந்து வந்தது.

ஆனால் பைபிளோ கர்த்தர் மோசேயை வெறும் ஆணுறுப்பு நுனித்தோலுக்காக கொல்ல பார்த்தார் என்பது எவ்வளவு கேவலம்.

13.முஸ்லிம் 5145 இலே கருப்பையில் சிசுவின் 120வது நாளிலே உயிர் ஊதப்படுவதாக உள்ளது எந்த அறிவியல் என கேட்கிறார்.

உயிர் என்பதே அறிவியலுக்கு அப்பாற்பட்டது தான்.

மனித உடலை நிர்வகிக்கும் உயிர், அசைவுகள் மூச்சு போன்ற இயக்கங்களை நிர்வகிக்கக்கூடிய இரு உயிர்கள் இருப்பதாக இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது... இரண்டாவது உயிர் விந்து தொடக்கம் உள்ளது. முதலாவது உயிர் வானவரால் ஊதப்படுவது.

இது ஆன்மீகத்துடன் சம்பந்தமானது. அறிவியலால் உணர முடியாது.

பைபிளும் இரண்டு வித உயிர்களை கூறுகிறது. ருஆக் ,நெபெஷ் (ஆவி ,ஆத்மா)

யோபு 7:11 IRVTam

[11] ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.

https://bible.com/bible/1899/job.7.11.IRVTam

ஏசாயா 57:16 IRVTam

[16] நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

https://bible.com/bible/1899/isa.57.16.IRVTam

1 தெசலோனிக்கேயர் 5:23 IRVTam

[23] சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

https://bible.com/bible/1899/1th.5.23.IRVTam

எபிரேயர் 4:12 IRVTam

[12] தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

https://bible.com/bible/1899/heb.4.12.IRVTam

அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயத்தை குர்ஆன் ஹதீஸ் சொல்வதால் குர்ஆன் எப்படி இறைவேதம் இல்லை என்றாகும்?

உயிர் விசயத்தில் பைபிளும் இரண்டு வித உயிர்களை கூறுகிறதே. அது எந்த வகை அறிவியல்?

14.புகாரி 3175,3728..... போன்ற ஹதீஸ்களில் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதாக

நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதால் தாம்பத்யத்தில் ஈடுபடாமலே ஈடுபட்டதாக நினைத்தார்கள்.  அதை நபிகளார் உணர்ந்தே இருந்தார். அதன்காரணமாக தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் சுகத்தை கொடுத்தான் (புகாரி 5765,5766,5763)

நபிகளார் மற்றவர்களை போன்ற ஒரு மனிதர் தான். உலகில் ஏற்படும் துன்பங்கள் அவருக்கும் ஏற்படும்.

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

இயேசுவை சாத்தானே தூக்கி சென்றுள்ளான் சோதித்தான் (மத்தேயு 4:3-11)

கர்த்தரையே யோபிற்கு தீங்கு செய்ய தூண்டி விட்டான்

யோபு 2:3-6 IRVTam

[3] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். [4] சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். [5] ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். [6] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார்.

https://bible.com/bible/1899/job.2.3-6.IRVTam

நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டு அதன்பின் இறைவன் சுகத்தையும் கொடுத்தான். இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

கர்த்தரையே சாத்தான் தூண்டியுள்ளானே

15.குர்ஆன் 24:46 "தெளிவான வசனங்கள்" 6:114 "விளக்கமான வேதம்"  12:111, "ஒவ்வொரு விசயத்தையும் விவரித்து காட்டுகிறது" மேலும் 16:89, குர்ஆன் 4:166 அறிவுடன் அல்லாஹ் இறக்கி வைத்தான் என்கிறது. ஆனால் குர்ஆன் 3:7 இலே குர்ஆன் அறிவாளிகளுக்கும் விளங்காது என்கிறது. ஆகவே முரண்பாடு என்கிறார்

குர்ஆன் தெளிவான வசனங்கள் விளக்கமான வசனங்கள் என்பது குர்ஆன் 3:7 இதே குறிப்பிடும் முஹ்கமாத் எனும் முதல்வகை வசனங்களாகும். அதாவது ஏகத்துவம் , ஹராம் ,ஹலால், நல்லது ,கெட்டது  ஆகியவை. இதுவே வேதத்தின் அடிப்படை.

எல்லா வசனங்களுமே முஹ்கமாத் என இங்கே கூறப்படவேயில்லை!

இரண்டாம் வகை வசனங்கள் முதசாபிஹாத் அதையும் குர்ஆன் 3:7 குறிப்பிடுகிறது. அதன் அர்த்தம் புரியக்கூடியதாக இருக்கும். ஆனால் அதன் விளக்கத்தை இறைவனே பூரணமாக அறிந்தவன். அதை விசுவாசித்தால் மட்டும் போதுமானது.

வழிகேடர்கள் தான் அத்தகைய வசனங்களை தேர்ந்தெடுத்து பின்பற்றுவார்கள் .

எல்லா வசனங்களுமே புரியும் என கூறிவிட்டு எல்லா வசனமும் புரியாது என சொன்னால் தான் முரண்பாடு ஆனால் இங்கே இரண்டு வகை வசனங்களை குறிப்பிட்டு இரண்டாவது வகை தான் இறைவனை தவிர வேறு யாரும் விளக்கத்தை அறியமாட்டார்கள் என்கிறது.

அதனால் இதிலே எந்த முரணும் இல்லை!!

முரண்பாடு எப்படி இருக்க வேண்டும்?

கர்த்தர் மனம் மாறுவதற்கு மனிதன் அல்ல! (எண்ணாகமம் 34:19, 1 சாமுவேல் 15:29)

ஆனால் நான் மனம் மாறுவேன் என கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 18:8,10)

இரண்டு வகை வசனங்களில் அடிப்படையான சட்டங்கள் ஏகத்துவம் ஏவல் விலக்கல் ஆகியனவே தெளிவான வசனங்கள்.

இறைவன் மட்டுமே விளக்கத்தை அறியக்கூடிய வசனங்களை கூறியபடி நம்பினாலே போதுமானது. இதிலே எந்த முரணுஉம்  இல்லை

16.குர்ஆன் 10:94 நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்பு வேதம் ஓதியோரிடம் கேட்பீராக" என்பது 16:44 "நீர் அவர்களுக்கு விளக்குவதற்காக உமக்கு அருளினோம்" என்பதுடன் முரண்படுகிறது என்பதற்காக தான் 10:94 காட்டியதாக பொய் சொல்கிறார்

சந்தேகமிருந்தால் கேட்டுப்பார்க்காமாறு தான் கூறுகிறது. ஆனால் நபிகளார் சந்தேகப்படவில்லை!  சந்தேகப்பட்டதாக இல்லாதபோது இந்த வாதமே அபத்தமானது.

குர்ஆனை அதற்குரிய விளக்கத்துடன் நபிகளார் கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் நபிகளாரே குர்ஆனை விளக்குவதற்காக நபிகளார்மீது இறக்கப்பட்டது.

இதிலே எம்முரணும் இல்லை.

முரண் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

3.மோசே ஏன் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையவில்லை

1.தேவனை பரிசுத்தம் பண்ணும் படி  மோசே விசுவாசிக்கவில்லை என்பதால்

எண்ணாகமம் 20:12 IRVTam

[12] பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லைஎன்றார்.

https://bible.com/bible/1899/num.20.12.IRVTam

2.தேவனுடைய கட்டளையை மோசே மீறியதால்

உபாகமம் 32:50-52 IRVTam

[50] நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, [51] உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய். [52] நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லைஎன்றார்.

https://bible.com/bible/1899/deu.32.50-52.IRVTam

3.இஸ்ரவேலர் யுத்தம் செய்து நாட்டை பிடிக்க பயந்ததால், அவர்கள் காரணமாக மோசே மீது தேவன் கோபம் கொண்டதால் (உபா 1:37)-இஸ்ரேலியர் செய்த தப்பிற்காக

உபாகமம் 1:34, 36-38 IRVTam

[34] “ஆகையால் யெகோவா உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

[36] எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் வாக்களித்தார். [37] அன்றியும் உங்கள் நிமித்தம் யெகோவா என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் நுழைவதில்லை; [38] உனக்கு முன்பாக நிற்கிற நூனின் மகனாகிய யோசுவா அதில் நுழைவான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சொந்தமாகப் பங்கிடுவான்.

https://bible.com/bible/1899/deu.1.34-38.IRVTam

உண்மையில் இஸ்ரவேலரை மட்டுமே அழிப்பேன் என்று தான் சொன்னார். மோசேயை பெரிய ஜாதியாக்குவேன் என்று தான் சொன்னார் -எண்ணாகமம் 14:12 அது எமோரியரா கானானியரும் அமெலேக்கியருமா என்பதையும் மாற்றி சொல்கிறது

ஆக முரண்பாடு இப்படி இருக்க வேண்டும்

குர்ஆன் 10:94ஐ உண்மையில் இவர்கள் சுட்டிக்காட்டியது முகம்மது நபி சந்தேகப்பட்டார் என்று காட்டுவதற்காக தான். அது பல்பு வாங்கியதும் பொய்யாக முரண்பாடு என்பதை காட்டுவதற்காக தான் கூறியதாக உருட்டினார் .

ஆனால் அதிலே எம்முரணும் இல்லை.

17.குர்ஆன் 39:42 மரணிக்காதவர்களின் உயிர்களை தூக்கத்தில் கைப்பற்றுவதாக சொல்கிறது. அதனால் பொய் என்கிறார். (ஐந்தாம் வீடியோவில் ஒரு உயிர் இருப்பது என்பது தான் விஞ்ஞானம் என்றும் இரண்டு உயிர் என்பது பொய் என்றும் உருட்டுகிறார் பைபிளை அறியாமல்)

உயிர் என்பதே அறிவியலுக்கு அப்பாற்பட்டது தான்.

மனித உடலை நிர்வகிக்கும் உயிர், அசைவுகள் மூச்சு போன்ற இயக்கங்களை நிர்வகிக்கக்கூடிய இரு உயிர்கள் இருப்பதாக இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது... இரண்டாவது உயிர் விந்து தொடக்கம் உள்ளது. முதலாவது உயிர் வானவரால் ஊதப்படுவது.

முதலாவது வகை உயிரே தூக்கத்தின் போது கைப்பற்றபடுகிறது..

இது ஆன்மீகத்துடன் சம்பந்தமானது. அறிவியலால் உணர முடியாது.

பைபிளும் இரண்டு வித உயிர்களை கூறுகிறது. ருஆக் ,நெபெஷ் (ஆவி ,ஆத்மா)

யோபு 7:11 IRVTam

[11] ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.

https://bible.com/bible/1899/job.7.11.IRVTam

ஏசாயா 57:16 IRVTam

[16] நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

https://bible.com/bible/1899/isa.57.16.IRVTam

1 தெசலோனிக்கேயர் 5:23 IRVTam

[23] சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

https://bible.com/bible/1899/1th.5.23.IRVTam

எபிரேயர் 4:12 IRVTam

[12] தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

https://bible.com/bible/1899/heb.4.12.IRVTam

அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயத்தை குர்ஆன் ஹதீஸ் சொல்வதால் குர்ஆன் எப்படி இறைவேதம் இல்லை என்றாகும்?

உயிர் விசயத்தில் பைபிளும் இரண்டு வித உயிர்களை கூறுகிறதே. அது எந்த வகை அறிவியல்?

18.குர்ஆன் 2:193,8:39 போன்றவ மார்க்கத்தை நிலைநாட்ட போர் செய்ய சொல்கிறது. இறைவன் அப்படி சொல்வானா என்கிறார்.

-மார்க்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக காஃபிர்கள் யுத்தம் செய்தார்கள்.

தமக்கு சக்தி இருந்தால் முஸ்லிம்களோடு அவர்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள் (குர்ஆன் 2:217)

இத்தகையோருடன் அவர்கள் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவதற்காக போரிடுவது போல , அவர்களை நுழைவிப்பதற்காக போரிடுமாறு கட்டளையிட்டான்.

குறிப்பாக,  உங்களோடு போர்புரிவோருடன் நீங்களும் போரிடுங்கள் (2:190) சமாதனமாக இருப்போருடன் அல்ல!

முஸ்லிம்களோடு போரிடாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்க வில்லை (குர்ஆன் 60:8)

ஆனாலும் போர்க்களத்தில் பெண்கள் சிறுவர்கள் (புகாரி 3014,3015) போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்ற வயோதிபர்கள் (முவத்தா மாலிக் பாடம் 21 ஜிகாத் , ஹதீஸ் 10) போன்றோரை கொல்லக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசின் கீழுள்ள மாற்றுமத பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166)

இதிலே என்ன தவறு?

ஆனால் பைபிளோ மாற்றுமதத்தவர்களை உயிரோடு விட்டால் அவர்களோடு சேர்ந்து கெட்டுப்போய் விடுவார்கள் என கூறி அவர்களை ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் விடாமல் கொல்லுமாறு சொன்னார்

உபாகமம் 20:16-18 IRVTam

 

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam

போர்க்களத்தில் கூட பெண்கள் சிறுவர்கள் போரிடாத கூலியாட்களை கொல்லக்கூடாது என இஸ்லாம் கூறுகிறது. பைபிளோ மூச்சுவிடும் எதையும் உயிரோடு வைக்காமல் கொல்லுமாறு சொல்கிறது.

 

19.குர்ஆன் 4:89 அல்லாஹ்வின் பாதையில் புறப்படாதவர்களை கண்ட இடத்தில் கொல்லுமாறு கூறுகிறது . 4:94 முஸ்லிம் யார் முஸ்லிமல்லாதவர் யார் என பிரித்தறிந்து போரிட சொல்கிறது என்கிறார். 47:4 காஃபிர்களை சந்தித்தால் கழுத்தை வெட்டுங்கள் என்றும் 8:12 காஃபிர்களின் கணுக்களை வெட்டுங்கள்

தங்களைப் போல முஸ்லிம்களும் காஃபிர்களாக ஆக வேண்டும் என்று விரும்பி செயற்படுபவர்களையே குர்ஆன் 4:89 கூறுகிறது. அவர்களில் முஸ்லிம்களுடன் சமாதானமான மக்களோடு சேர்ந்துகொண்டோருடனும், முஸ்லிம்களிடம் முஸ்லிம்களையும் எதிர்க்காமல் தம் கூட்டத்தையும் எதிர்க்காமல் வந்தவர்களையும் ஒன்றும் செய்யக்கூடாது என்று 4:90 கூறுகிறது.

போர் என்பது முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் இடையிலேயே நடந்ததால், அவர்களை வேறு பிரித்து பார்த்தே போரிட 4:94 வழிகாட்டுகிறது.

குர்ஆன் 47:4 இலேயே முழுமையா படித்தால் போர்  (போர் தன் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை) என தெளிவாக உள்ளது. போர்க்களத்தில் எதிரியான காஃபிரை கண்டால் பிடரியில் வெட்டுமாறு கூறுகிறது. போரில் வேறு எதை செய்வார்கள்?

குர்ஆன் 8:12 பத்ர் யுத்தத்தில் வானவர்களிடம் இறைவன் கட்டளையிட்டதாகும்.

முஸ்லிம்களோடு போரிடாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்க வில்லை (குர்ஆன் 60:8)

ஆனாலும் போர்க்களத்தில் பெண்கள் சிறுவர்கள் (புகாரி 3014,3015) போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்ற வயோதிபர்கள் (முவத்தா மாலிக் பாடம் 21 ஜிகாத் , ஹதீஸ் 10) போன்றோரை கொல்லக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசின் கீழுள்ள மாற்றுமத பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166)

போரிலுள்ளவர்களையும் போரிலுள்ளவர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக துணைபுரிவோரையும் தண்டிக்க சொல்வதை எப்படி தவறு என கூறமுடியும்?

இதிலே என்ன தவறு

சிலை வணங்கி கானானிய மக்களை விட்டால் வழிகெடுப்பார்கள் என்பதால், அவர்களை மூச்சு விடும் எதையும் உயிரோடு வைக்காமல் அழித்துப் போடுமாறு கர்த்தர் சொல்லுகிறார்

உபா 20:16-18 IRVTam

 

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam

-இவர்களில் வேறு கடவுளை வணங்க தூண்டிவிட்டால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் (உபாகமமம் 13:6-10)

-ஊராக சேர்ந்து வேறு கடவுளை வணங்கினால் ஈவிரக்கமின்றி அனைவரையும் குழந்தைகளுட்பட மிருகங்களையும் சேர்த்து வெட்டி கொன்றுஸூரையே கர்த்தருக்கு பலியாக எரித்து போடவேண்டும் என்கிறார் கர்த்தர் (உபாகமம் 13:12-16)

வேறு கடவுளை வணங்கினால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் (உபாகமமம் 17:3,5)

-நூனுறு வருட பகைக்காக குழந்தைகளை பெண்களை மிருகங்களை ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொன்னார் 1 சாமுவேல் 15:2-3

இதை வைத்துக்கொண்டு பேசலாமா?

 

முஸ்லிம்களோடு யுத்தத்திலுள்ளவர்களை போரில் தண்டிப்பதற்கு குர்ஆன் சொல்வதால் இறைவேதம் இல்லை என்றாகுமா?  ஆனால் பைபிள் தெளிவாக குழந்தைகளையும் அல்லவா கொல்ல சொல்கிறது. இதை வைத்துக்கொண்டு பேசலாமா?

20.புகாரி 7517 இலே முகம்மது நபியிற்கு 50 நேர தொழுகை வழங்கப்பட்டது என்றும் மூஸா நபி சொல்லி குறைத்து கேட்டது இறைவனை அறிவற்றவனாக காட்டுவதாகவும் ஐம்பது நேர தொழுகை சாத்தியமில்லை என்றும் உருட்டுகிறார்.

முதலில் இறைவன் செய்வது குறித்து விசாரணை செய்யப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்க படுவார்கள் (குர்ஆன் 21:23).

இறைவன் விரும்பியதை கட்டளையிடுகிறான்/சட்டமாக்குகிறான் (குர்ஆன் 5:1)

இறைவன் விரும்பியதை செய்வான் (2:253,3:40, 22:14,18)

*இறைவன் சகலத்தையும் முன்கூட்டியே அறிந்தவனும் அவற்றை  படைக்க முன்பே எழுதிவிட்டவனும் ஆவான் (புகாரி 3409, குர்ஆன் 57:22)

இறைவன் கேள்வி கேட்பது கூட அவன் அறிந்துகொண்டே கேட்பான் (புகாரி 3223)

 

-ஐம்பது நேர தொழுகையை நிறைவேற்ற முடியும் என்பதால் தான் நபிகளார் எடுத்துக்கொண்டு திரும்பினார்கள்.

அவர்களுடைய மக்களில் அனைவரையும் கருத்தில்கொண்டு விசுவாசித்தில் பலவீனமுள்ளோரும் இருப்பர் என்பதால் தான் மூஸா நபியை வைத்து குறைத்து கேட்பதற்கு ஆக்கினான் இறைவன்

-நாம் தொழும் ஐந்து நேர தொழுகை கூலியால் ஐம்பது நேர தொழுகைக்கு சமானமானது என்பதையும் நிலைநாட்டுவதற்கும் மக்களிற்கு இலகுவையே இறைவனும் இறைத்தூதரும் நாடுவார்கள் என்பதை தெளிவாக்குவதுமே இவ்வேற்பாடு.. இதை அவர் குறிப்பிடும் புகாரி 7517 இலேயே காணலாம்.

2.மனிதனை படைத்துவிட்டு அவன் கொடூரமாக நடந்தபோது அவனை படைத்ததற்தாக மனஸ்தாபப்பட்டார்.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

ஆதியாகமம் 6:5-6

3.இஸ்ரவேலர் தப்பு செய்தபோது அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்து மோசேயை மட்டும் பெரிய ஜாதியாக ஆக்க நினைத்து மோசேயிடம் சொன்னார். மோசேயோ தேவன் அப்படி செய்தால், தேவனுக்கு காப்பாற்ற இயலாமல் கொன்றுபோட்டார் என பேசுவார்கள் என்றும் முன்பு ஆபிரகாமுக்கு செய்த சத்தியத்தை நினைவூட்டி வேண்டினார். அப்போது மனதை மாற்றிக்கொண்டார்:

10.ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

11.மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

12. மலைகளில் அவர்களைக்கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்

.13.உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

14.அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

யாத்திராகமம் 32:10-14

இதேபோல் மீண்டும் பல தடவை நடந்தது .. இவர் அவசரப்படுவார். மோசே அவர் செய்த சத்தியத்தை நினைவூட்டுவார். பிறகு மனஸ்தாபப்படுவார் (எண்ணாகமம் 14:12-20

இறைவன் விசுவாசிகள் மீது  தன் கருணை வெளிப்படும் விதமாக நடந்துகொண்டால் இறைவேதம் இல்லை என்றாகுமா?

பைபிள் தான் கடவுளை எதிர்காலம் பற்றிய அறிவற்றவராக அவசரக்காரனாக சித்தரிக்கிறது.

part 2

Part 3

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1