பைபிள் கூறும் இறைவன் YDM vs TNTJ 2

முந்தைய Part 1



22.முகம்மது நபி தன் மனைவியரை யூசுஃபின் தோழியர் என சொல்லியது (புகாரி 679) விபச்சாரிகள் என்று கூறியதாக உருட்டுகிறார்

ஒருவனை சிங்கம் என்று சொன்னால் அவன் இருபது மணிநேரம் தூங்குபவன் என்றோ அடிக்கடி தன் மனைவியை புணர்வான் என்றோ அர்த்தமாகுமா?  அதுபோன்றே உவமைகளை புரிய வேண்டும்!

யூசுபின் தோழியானவள் விபச்சாரம் செய்யவில்லை... மாறாக தன் மனதில்  நான் யூசுஃப் விசயத்தில் விமர்சிக்கப்படதக்கவள் அல்ல என நிரூபிப்பதை உள்நோக்கமாக வைத்துக்கொண்டு வெளிரங்கமாக ஊர் பெண்களுக்கு விருந்துபச்சாரம் செய்தார். (குர்ஆன் 12:30-32)

அதேபோன்று அன்னை ஆயிஷா (ர) அவர்கள் தன் மனதில் உள்நோக்கம் வைத்துக்கொண்டு, வெளிரங்கமாக தன் தந்தை தொழுகை நடாத்தினால் அழுவதனால் சரியாக கேட்கச் செய்ய மாட்டார் அதற்கு பதிலாக உமரை நியமியுங்கள் என்று சொன்னார். ஆனால் உள்நோக்கம், தன் தந்தை தொழுகை நடத்த முன்வந்து அதன் பின் முகமது நபி மரணித்து விட்டால் தன் தந்தை துர்க்குறியாக மக்களிடையே கருதப்படுவார் என்று பயந்ததால் தான் என் முஸ்லிம் 710  (418e) கூறுகிறது

இந்த உள்நோக்கத்தில் தன் தந்தை துர்குறியாக மக்களிடையே கருதப்படக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு, தன் தந்தை அழுவதால் தொழுகையில் ஓதும் போது மக்களுக்கு கேட்க செய்ய மாட்டார் என்றும் அதற்கு பதிலாக உமரை நியமிக்குமாறு கூறினார்கள்.

இச்செயல் யூசுஃபின் தோழியான பெண்ணின் செயலுக்கு ஒத்திருப்பதால் நபிகளார் அவ்வாறு கடிந்து கூறினார்கள்.

(இங்கே நீ என்பதும் பன்மையிலேயே உள்ளது தோழியர் என்பதும் பன்மையிலேயே உள்ளது...)

 

தன் இருதயத்திற்கேற்ற தாவீது மாற்றான் மனைவியுடன் விபச்சாரம் செய்ததற்காக, அவருடைய மனைவிகளோடு இன்னொருத்தனை விபச்சாரம் செய்விப்பேன் என்றும் அதை மக்களுக்கு காண்பிப்பேன் என்றும் சொல்கிறார்:

2 சாமு 12:11-12 IRVTam

[11] யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். [12] நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/2sa.12.11-12.IRVTam

இப்படி சும்மா இருந்த மனைவியரையே கர்த்தர் வேசியாக ஆக்கி மக்களுக்கு காண்பிப்பேன் என்கிறார். (பட்டப்பகலில் இஸ்ரவேலர் முன்பாக விபச்சாரம் செய்விப்பேன் என்றால் நீலப்படமா தயாரிக்கிறார்?)

சும்மா இருந்தோரை விபச்சாரியாக்குவேன் என கூறுவதை வைத்துக்கொண்டு, குறித்த செயலுக்காக தன் மனைவியின் பேச்சை கண்டிப்பதற்காக அதற்கு முன்பே அவ்வாறு நடந்துகொண்ட பெண்ணை உவமையாக கூறுவதை விமர்சிக்கலாமா?

23.கற்பழிப்புக்கு ஃபைன் கொடுக்குமாறு புகாரி 6949 சொல்வதாக உருட்டல்

கற்பழித்தவனுக்கு  தண்டனை கொடுத்துவிட்டே நஷ்டயீடு கன்னிப்பெண்ணுக்கு வழங்கப்படும் என்பதை அதே ஹதீஸிலேயே உள்ளது . கற்பழித்த அடிமைக்கு   கசையடி கொடுத்து நாடுகடத்தினார்கள் என அதிலேயே உள்ளது.

இதே வேலையை திருமணமானவன் செய்தால், கல்லெறி தண்டனை மூலம் கற்பழித்தவன் கொல்லப்படுவான் (அபூதாவூத் 4379). திருமணமானவர் விபச்சாரம் செய்தாலும் இதே கல்லெறிவதன் மூலம் மரண தண்டனை தான் (புகாரி 6812,6814, 6831-6833)

 

பைபிளிலேயே கன்னியை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக் காசுகளை தகப்பனிடம் கொடுத்து காலம் முழுதும் என்ஜாய் பண்ணலாம் என்று சட்டம் உள்ளது. அவனுக்கு எந்த தண்டனையும் இங்கே கூறப்படவில்லை.. மாறாக ஆஃபர் (Offer) தான் கொடுக்கப்பட்டுள்ளது

உபாகமம் 22:28-29 IRVTam

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam

24.ஆதி 1:28 பூமியிலே பலுகி பெருக சொல்வதற்கு மாற்றமாக ஒரே இடத்தில் இருக்கபார்த்ததாலே பாசைகளை தாறுமாறாக்கியதாக ஆதி 11:4-6 குறிப்பிட்டார்

பல பாசைகள் பேசுவது தண்டனை என இஸ்லாம் கூறவில்லை.

மாறாக இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்று என்றே கூறுகிறது (குர்ஆன் 30:22)

பூமியில் பலுகி பெருகுவதற்கு ஆசீர்வதித்தார் கர்த்தர்.

ஆனால் பூமியில் பலுகி பெருகுவது வேறு பூமியில் சிதறடிக்கப்படுவதும் பிரிவுகளை ஏற்படுத்திவிடுவதும் வேறு.

இங்கே கர்த்தர் மனிதர்களை ஒரே இடத்தில் இருக்காமல் சிதறடித்து பிரித்து விடுவதற்கே இவ்வாறு செய்தார்:

ஆதி 11:3, 5-8 IRVTam

[3] அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.

[5] மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். [6] அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். [7] நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். [8] அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.

https://bible.com/bible/1899/gen.11.3-8.IRVTam  

இப்படி கர்த்தரின் தீங்கிழைப்பு இதுவே முதல் முறை அல்ல... இதற்கு முன்பே மனிதன் நிரந்தரமாக மரணமற்று இருந்துவிட கூடாது என்பதற்காகவே மனிதனை ஏதேனிலிருந்து வெளியேற்றினார்:

 ஆதியாகமம் 3:22-24 IRVTam

[22] பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும் என்று, [23] அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். [24] அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

https://bible.com/bible/1899/gen.3.22-24.IRVTam

இப்படி மனிதனுக்கு தீங்கு நினைப்பதே அவரது வேலை.

அதனால் தான் மிருகங்களை போல அம்மணமாக வெட்கமில்லாதவர்களாக ஏதேன் தோட்டத்தில் விட்டிருந்தார்- ஆதி 2:25

25.இறைவன் தாமதிப்பது எல்லோரும் திருத்த வேண்டும் என்பதற்காக என்று 2 பேதுரு 3:9 சொல்வதாகவும் குர்ஆன் 3:178 இன்னும் பாவம் செய்வதற்காக என்றும் உருட்டினர்

*திருந்தாத குற்றவாளிக்கு அவனது பாவத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் அதனால் கடுமையாக தண்டிக்கவும் செய்வான். குற்றம் செய்பவன் தன் சுயதேர்விலேயே செய்கிறான். அதனால் இறைவன் நிந்திக்கப்படுபவனல்ல.

ஆனால் நல்லவர்களுக்கோ தம்மை திருத்திக்கொள்ள  அவகாசமாக இருக்கும்

இவர்களது வாதம் எவ்வளவு வேடிக்கையானது எனில்,

இறைவன் என்றாலே அவன் எதிர்காலத்தை அறிந்தவனாகவே இருப்பான். குற்றம் செய்பவனுக்கு தண்டனையை பிற்படுத்தினால், அவன் இன்னும் அதிகம் செய்வான் என அறிந்தே பிற்படுத்துவதாக தானே இருக்கும். அப்படி செய்தால் பாவத்தை நிறைவாக்குவதற்காக தானே பிற்படுத்துகிறான் என்று தெளிவாகவே வந்து விடுமே

ஆனாலும் குற்றவாளி தன் குற்றச் செயல்களுக்கே தண்டிக்கப்படுவான். நிர்ப்பந்திக்கப்பட்டதினால் அல்ல.

 

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

அதே அல்லாஹ், தமக்கு தாமே அநீதி இழைத்துக் கொண்ட அடியார்களை அழைத்து அவனுடைய கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் அனைத்து பாவங்களையும் (திருத்திக் கொண்டால்) மன்னித்துவிடுவான் என அழைக்கப்படுகிறது (குர்ஆன் 39:53)

அத்துடன் தன்னிடம் நேர்வழியை கேட்குமாறும் அப்படி கேட்டால் நேர்வழி காட்டுவதாகவும் வாக்களிக்கிறான் (முஸ்லிம் 5033)

உயிர் தொண்டைக்குழியை அடையும்வரை மனந்திருந்தி மீளுவோரை மன்னிக்க காத்திருக்கிறான் (குர்ஆன் 4:17-18, திர்மிதீ 3537, இப்னுமாஜா 4253)

ஆக ஆயுட்காலம் முழுவதும் மனம் திருந்துவதற்கும் பாவத்தை அதிகப்படுத்துவதற்கும் அவகாசம் உண்டு.  பாவத்தை அதிகப்படுத்துபவன் அதை அதிகப் படுத்திக் கொள்ளலாம். தன்னை திருத்திக்கொள்ளாதவர்களுக்கு ஆயுள் கூட கூட பாவம் அதிகரிக்க தானே செய்யும். அது அவன் சம்பாதிப்பது தானே தவிர நிர்ப்பந்திக்கப்படுவதல்ல!

இதே போல் இன்னும் குற்றம் பெருகும் படி தேவனே அவகாசம் கொடுத்ததாக பைபிள் கூறுகிறது:

ஆதி 15:16 IRVTam

[16] நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார்.

https://bible.com/bible/1899/gen.15.16.IRVTam

முழு இனத்தையும் அழித்துப் போடுவதற்காக கர்த்தர் அதன் ராஜாவின் இருதயத்தை கடினப் படுத்தினார். இதை காரணமாக வைத்து பிள்ளைகளையும் கொன்றார்கள்:

உபா 2:30-34 IRVTam

[30] ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார். [31] அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார். [32] சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான். [33] அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து, [34] அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.

https://bible.com/bible/1899/deu.2.30-34.IRVTam  

 

*பைபிளும் இதே நோக்கத்துக்காக தான் கூறுகிறது:

வெளிப்படுத்தின விசேஷம் 22:11 IRVTam

[11] “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

https://bible.com/bible/1899/rev.22.11.IRVTam

(பேதுரு கூறுவது தேவன் தாமதிப்பதற்கு பாசிடிவ் காரணம் கூறுகிறார்.  இயேசு உடனே வந்துவிட்டால் இயேசுவின் செய்தி கேள்விப்படாதோரும் அழிவார்களே. அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதாக கூறுகிறார்.

*உண்மையில் இயேசு அப்படி கருதவில்லை.. மாறாக தன்னை ஏற்காதவன் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது என்ற கடும் அன்பாளர்:

மாற்கு 4:11-12 IRVTam

[11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12]  அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.

https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam

*துன்மார்க்கனை படைத்ததே தீங்கு நாளுக்காக தான்

நீதிமொழிகள் 16:4 IRVTam

[4] யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

https://bible.com/bible/1899/pro.16.4.IRVTam

இந்த லட்சனத்துல இப்படி உருட்டலாமா?

 

26.அலிகளை விரட்டுமாறு இஸ்லாம் சொல்வதாகவும் ஆனால் பைபிளோ ஆலயத்தில் இடம் கொடுத்ததாக ஏசாயா 56:4-6 குறிப்பிட்டனர்

ஆரம்பத்தில் அலிகள் பெண்களோடு இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  ஆனால் குடும்ப பெண்களின் அழகை மற்ற ஆண்களிடம் வர்ணித்ததால், அந்நியரான் இதுபோன்றோரை பெண்களுள்ள வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு கூறினார்கள் (புகாரி 4324,5887), இப்படி பாலுறவு வேட்கையுள்ளவர்களை பெண்களிடம் விட்டுவிட கூடாது அல்லவா? அதை தான் நபிகளார் செய்தார்கள். காரணம் ஆரம்பத்தில் அத்தகையோர் பாலியல் வேட்கை இல்லாதோர் என்று கருதியதால் தான் பெண்களிடையேயும் வர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் (முஸ்லிம் 4396)

ஆண்மையற்று இருப்பதாலோ பாலியல் குறைபாடு இருப்பதாலோ அல்ல!

மற்றபடி பெண்களை அண்டி வாழும் பெண்கள் மேல் நாட்டமில்லாத ஆண்களை குறித்தோ அவர்களிடம் பெண்கள் தம் அலங்காரங்களை வெளிப்படுத்துவதும் தவறு கிடையாது என்றே குர்ஆன் 24:31 கூறுகிறது

பெண்கள் மேல் நாட்டமில்லாதவர்கள் வேறு ,பெண்களை போல பாவனை செய்வோர் வேறு.

 இயல்பாகவே உடலமைப்பில் பெண்ணியல்பு உள்ளவர் நிந்திக்கப் பட மாட்டார் காரணம் அது அவரது சக்திக்கு அப்பாற்பட்டது.. ஆனால் பெண்களுக்கு ஒப்பாக நடக்க முயலும் ஆண்கள் பெண்களை போல உடையணிந்து அவர்களுக்கு ஒப்பாகவே நடப்பதை சாபத்திற்குரிய செயலாகவே இஸ்லாம் பார்க்கிறது.

 

பைபிள் கூறும் அண்ணகர் வேறு திருநங்கைகள் திருநம்பிகள் எனும் அலிகள் வேறு.

ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்களையும் பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும் பைபிள் கர்த்தரால் அருவறுக்குப்படுபவர்கள்:

உபாகமம் 22:5 IRVTam

[5] “ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

https://bible.com/bible/1899/deu.22.5.IRVTam

விசுவாசியான பாலியல் தேவைகளற்ற நபர்களை குறித்தே ஆலயத்தில் இடம் கொடுப்பதாக சொல்கிறது.

அலியாக இருந்து ஆணுடன் உறவு கொள்ளும் மனிதனையோ அல்லது பெண்களை போல நடந்துகொள்ளும் ஆணையோ அல்ல...

27.மக்காவுக்கு காஃபிர்கள் வரக்கூடாது என்பது போன்று தான் அங்கவீனர் பலி செலுத்த வரக்கூடாது என்பதாக உருட்டல்

மக்காவின் புனித ஆலயத்திற்கு காஃபிர்கள் வரக்கூடாது என்பது நிராகரிப்பு எனும் அசுத்தத்திற்கான தண்டனையே. (29வது குறிப்பை பார்க்கவும்)

அதுவும் அங்கவீனமும் ஒன்றாகாது.

கர்த்தர்  இஸ்ரவேலர் குடியேறும் ஊரிலுள்ள சில மாற்றுமத மக்களை கொன்று போடவும் (உபாகமம் 20:16-18), வேறு சில மாற்றுமத மக்களை துரத்தி விடவும் (யாத்திராகமம் 23:31-33) கட்டளையிட்டார்.

அத்தோடு வெறும் நானூறு வருட பழைய பகைக்காக குழந்தைகளையும் பெண்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னார்:

1 சாமுவேல் 15:2-3 IRVTam

[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam

இதுவும் அதுவும் ஒன்றா?

அங்கவீனர்கள் அப்பம் செலுத்துவது கர்த்தருக்கு பரிசுத்த குலைச்சலாம்.

லேவியராகமம் 21:17-21, 23 IRVTam

[17] “நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது. [18] ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட உறுப்புள்ளவனானாலும், [19] கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும், [20] கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது. [21] ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.

[23] ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.

https://bible.com/bible/1899/lev.21.17-23.IRVTam

 

ஆனால் மாற்றுமத சிலை வணங்கிகளை கொன்று போட்டு விடுமாறும் அவர்களை துரத்திவிடுமாறுமே கர்த்தர் சொன்னார்:

உபாகமம் 20:16-18 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam

யாத்திராகமம் 23:31-33 IRVTam

[31] செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். [32] அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. [33] உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.

https://bible.com/bible/1899/exo.23.31-33.IRVTam

28.முகம்மது நபியை ஏசிக்கொண்டேயிருந்த பெண் கொல்லப்பட்டாள்

பேச்சுரிமை எனும் பெயரில் இறைவனையோ இறைவனின் தூதரையோ நிந்திக்க முடியாது.

அத்தகைய நிந்தனைக்கு இஸ்லாமிய அரசு மரண தண்டனை விதிக்கிறது.

இஸ்லாம் வெறுமனே ஆன்மீகம் மட்டுள்ளபோது கொடுத்த சட்டமல்ல இது. மாறாக ஆன்மீகமும் ஆட்சியுமுடைய தேசத்திலேயே இக்குற்றத்திற்கு மரண தண்டனையாக வழங்கியது.

கர்த்தரை தூசிப்பவன் கொல்லப்பட வேண்டும் என்று தமக்கு அதிகாரம் இருந்த போது கர்த்தரே கட்டளையிட்டாரே

லேவியராகமம் 24:15-16, 23 IRVTam

[15] மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான். [16] யெகோவாவுடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியவேண்டும்; அந்நியனானாலும் இஸ்ரவேலனானாலும் யெகோவாவின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.

[23] அப்படியே, நிந்தித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் மக்களிடம் சொன்னான்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

https://bible.com/bible/1899/lev.24.15-23.IRVTam

 

29.யூதகிறிஸ்தவர்களை இணைவைப்பாளர்களை அரேபிய தீபகற்பத்தில் இருந்து வெளியேற்றல்

அரேபிய தீபகற்பம் என்று நபியவர்கள் கூறியது ஹிஜாஸ் மாநிலத்தை குறிக்கும். அதாவது மக்கா,மதீனா,யமாமாவும் அதன் சூழ்ந்த பகுதிகளும்.

இதனால் தான் உமர் (ர) அவர்கள் யூதர்களை ஹிஜாஸிலிருந்து  தைமாவுக்கும், அரீஹாவுக்கும் (ஜெரிகோ) நாடுகடத்தினர்.(புகாரி 2338,3152)

இறுதியாக கைபரிலிருந்து தான் யூதர்களை உமர் (ர) அவர்கள் வெளியேற்றினார்கள். அதுவும் அவர்கள் அவருடைய மகனின் கையின் மூட்டுகளை  பிசகச்செய்ததன் பின்னரே நிகழ்ந்தது.. அதுவரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.(புகாரி 2730). நபியவர்களுக்கு அவர்கள் சேர்ந்து விசம் தடவிய இறைச்சியை சாப்பிட கொடுத்ததன் பின்னரும் அங்கே விடப்பட்டிருந்தார்கள் (புகாரி 3169)

யுத்தங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்த அந்த  காலகட்டத்தில் யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் இணைவைப்பவர்களாலும் புனித பூமிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்காகவும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் இவர்களின் வைராக்கிய துர்ப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதை தடுப்பதற்கும் இதை தவிர வேறு வழி இல்லை!  அதனால் தான் நபிகளார் மரணிக்கும் முன் அதை உபதேசமாக கூறினார்கள்.(முஸ்லிம் 3626)

அவர்கள் ஒரேயடியாக துரத்தப்படவுமில்லை.... துரோகங்கள் செய்தபோது தான் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர் (புகாரி 4028)

பொதுவாக அரசுகள் தமக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது கொலை செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும். ஆனால் இஸ்லாமோ அவர்களுக்கு வேறு இடத்தில் குடியமர்த்தியது.

ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் வசிக்கலாம். அப்படி வசிக்கும் போது  கூட , முஸ்லிம்கள் அவர்கள் மீது நல்ல முறையில் நடந்துகொண்டு, அம்மக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் யுத்தம் செய்யும்படி வழிகாட்டப்பட்டிருந்தார்கள்.(புகாரி 3052,3700).

-அதிகாரம் இருந்த காலத்தில், கர்த்தர் மாற்றுமதத்தவர்களை தம் வசிப்பிடத்திலிருந்து துரத்திவிட வேண்டும் என்றும் உங்களின் ஊர்களில் வசிக்க விட கூடாது என்றும் , இல்லாவிட்டால் உங்களை வழிகெடுத்துவிடுவார்கள் என்கிறார்

யாத்திராகமம் 23:31-33 IRVTam

[31] செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். [32] அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. [33] உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்என்றார்.

https://bible.com/bible/1899/exo.23.31-33.IRVTam

யாத்திராகமம் 34:12-16 IRVTam

[12] நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். [13] அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள். [14] யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். [15] அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்; [16] அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.

https://bible.com/bible/1899/exo.34.12-16.IRVTam

 

-அதிகாரம் இல்லாதபோது கூட, அவர்களில் இருந்து வெளியேறி விடுமாறும் (2 கொரிந்தியர் 6:17),  அத்தகைய குடும்பஸ்தனை விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து கூறி அத்தகையவனோடு பழகவோ சேர்ந்து ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்தி விட வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 5:11,13).. இயேசுவை முறையாக ஏற்றுக்கொள்ளாதவனை வஞ்சகன் என்றும் அத்தகையோரை வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்றும் அப்படி செய்தால் அவர்களது பாவங்களில் பங்காளிகளாகிவிடுவீர் என்றும் 2 யோவான் 1:7,10-11 கூறுகிறது.

மல்லாக்கப் படுத்து துப்பி விடவும்

30.கலா 3:28 யூதனெனஂறும் கிரேக்கர் என்றும் எதுவுமில்லை எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஒன்று

இஸ்லாம் அனைத்து மனிதர்களும் ஒரே பெற்றோரின் பிள்ளைகள் என்றும் குலம் கோத்திரம் என்பவை ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்வதற்கே என்றும் மனிதர்களில் சங்கைக்குரியவர் அவர்களில் அதிகம் இறையச்சமுடையோரே என்று குர்ஆன் 49:13 கூறுகிறது.

இதேபோல் நபிகளார் கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமில்லை வெள்ளையரை விட கறுப்பருக்கு எந்த சிறப்புமில்லை. அரபியரைவிட அரபியல்லாதவருக்கு எந்த சிறப்புமில்லை. அரபியல்லாதவரை விட அரபியருக்கு எந்த சிறப்புமில்லை இறையச்சத்தைக்கொண்டே தவிர என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்

கிறிஸ்தவராகவுள்ள மக்களில் இனவேறுபாடு இல்லை என்றே பவுல் இங்கு கூறுகிறார்.

*ஆனால் சிலைவணங்கியையோ பவுல் அவர்கள் விபச்சாரகனோடும் திருடனோடும் கொள்ளைக்காரனோடும் சேர்த்து, அத்தகையவனோடு பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்தி விட வேண்டும் என்கிறார்:

1 கொரிந்தியர் 5:11, 13 IRVTam

[11] நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.

[13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

https://bible.com/bible/1899/1co.5.11-13.IRVTam

*இதை நன்கறிந்த யோவானோ, இயேசுவை பற்றி இவர்களது நம்பிக்கையை கொண்டிராதோரை வீட்டுக்குள் எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்றும் அத்தகையவனுக்கு வாழ்த்து சொன்னால் தீமையில் பங்கு கிடைக்கும் என்கிறார்:

2 யோவானா 1:10-11 IRVTam

[10] ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். [11] அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

https://bible.com/bible/1899/2jn.1.10-11.IRVTam

*பழைய ஏற்பாட்டிலோ அந்நியன் சொந்த மதத்துக்காரன். அவனிடம் வட்டி வாங்கவும் காலம் முழுதும் அடிமையாக வைத்திருக்கவும் அனுமதிக்கிறார் கர்த்தர். ஆனால் இஸ்ரவேலருக்கோ அப்படி செய்யக்கூடாது என்கிறார் (உபாகமம் 23:19-20, லேவியராகமம் 25:42-44)

*மாற்றுமதத்துக்காரனையோ ஈவிரக்கமின்றி கொன்று போட்டு விடவும் துரத்திவிடவுமே கூறுகிறார் (உபாகமம் 20:16-18 , யாத்திராகமம் 23:31-33)

31..முஸ்லிம் 882 பெண்ணும் நாயும் குறுக்கே வந்தால் தொழுகை முறியும்

ஆணுக்கு பெண்ணின் மீதுள்ள ஈர்ப்பினால் அவள் அவனுக்கு குறுக்காக சென்றால் தொழுகை பாதிக்கப்படும். நாய் திடுக்கத்தை ஏற்படுத்துவதால் அவனது தொழுகை பாதிக்கப்படும். இதே போன்றே கழுதையும் .

ஆனாலும் நபிகளார் இரவுத் தொழுகை தொழும்போது மாதவிடாயில் இருக்கும் மனைவி வீடு சிறியது என்பதால் அவருக்கு குறுக்கே காலை நீட்டி உறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது-புகாரி 513,519

பொதுவாக கவனம் சிதறுவதை குறித்தே கூறப்படுகிறது.

பைபிள் பெண்ணை மதித்து கிழித்து விட்டது

பெண்குழந்தை பெற்றால் ஆண்குழந்தை பெறுவதை விட இரண்டு மடங்கு தீட்டு ஏற்படும் என லேவியராகமம் 12:1-5 கூறுகிறது

மாதவிடாய் பெண்ணோ ஒட்டுமொத்த அசுத்தப்பிராணியாக சித்தரிக்கப்படுகிறாள்- லேவியராகமம் 15:19-28

(இது அவளுக்கு ஓய்வு கொடுப்பது அல்ல.. அவளை அசுத்தம் என்று சொல்கிறது)

32.புழாஆ (بضاعة) எனும் குப்பைகள் வீசப்பட்ட கிணற்றிலுள்ள நீர் சுத்தம் என்பதை சுட்டிக்காட்டினர்

தண்ணீரின் நிறம் சுவை வாடை

ஆகியன மாறாதவரை தண்ணீர் சுத்தமானதாகவே கருதப்படும். (புலூகுல் மராம் 4)

இத்தகைய தண்ணீரை வுழூ (அங்கச்சுத்தம் செய்வதற்காக) செய்வதற்காக பயன்படுத்தலாம் என்றே கூறப்படுகிறது

(பைபிளும் இதுபோல் கிணற்றில் அசுத்தம் விழுந்தாலும் தண்ணீர் சுத்தம் என்றே கூறுகிறது -லேவியராகமம் 11:36. இதை தெரியாமல் தற்குறித்தனமான வாதம் ஏன்?)

பைபிளிலும் ஊற்று நீரிலும் கிணற்று நீரிலும் இறந்த அசுத்தமான பிராணி  விழுந்தாலும் தண்ணீர் சுத்தமே என்றே கூறுகிறது:

லேவியராகமம் 11:31-32, 35-36 IRVTam

[31] சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். [32] அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

[35] அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. [36] ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.

https://bible.com/bible/1899/lev.11.31-36.IRVTam

 33.குர்ஆன் 7:73-78 ஒட்டகத்துக்காக அக்கப்போர் என்றும் பசிக்காக அறுத்ததற்காக தண்டனை என்றும் உருட்டல்

ஒட்டகத்தை பசிக்காக அறுக்கவில்லை

இறைவன் தன்னிடமிருந்து தன் தூதரின் உண்மைக்கு அத்தாட்சியாக ஓர் ஒட்டகத்தை வழங்கினான். அதை தீங்கு செய்து தண்டனைக்கு உள்ளாக வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களோ அதை அறுத்தது மட்டுமின்றி , வாக்களித்த தண்டனையை கொண்டுவாருங்கள் என்று அறைகூவல் விட்டனர். அத்தோடு இறைவனது செய்தியையும் நிராகரித்தனர். அத்தகைய கொடுமைக்கான தண்டனையே அவர்கள் அழிக்கப்பட்டது. காரணம் அவர்கள் அத்தாட்சி கொடுக்கப்பட்டும் நம்ப மறுத்து அத்தாட்சியையே கொன்று அறைகூவல் விட்டனர்- (குர்ஆன் 7:73-78,11:64-66)

பசிக்காக அறுத்தது என்பது குடிகார போதகரின் உருட்டு.

*விந்துக்காக அக்கபோரை கர்த்தர் செய்துள்ளார்:

ஆதியாகமம் 38:9-10 IRVTam

[9] அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். [10] அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

https://bible.com/bible/1899/gen.38.9-10.IRVTam

*ஆணுறுப்பு நுனித்தோலுக்கு அக்கப்போர்

யாத்திராகமம் 4:24-26 IRVTam

[24] வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார். [25] அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு முன்பாக போட்டு: “நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள். [26] பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.

https://bible.com/bible/1899/exo.4.24-26.IRVTam

*இறைச்சிக்காக அக்கப்போர்

எண்ணாகமம் 11:18-20, 31-33 IRVTam

[18] நீ மக்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாக இருந்தது என்றும், யெகோவாவுடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி யெகோவா உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். [19] நீங்கள் ஒருநாள், இரண்டுநாட்கள், ஐந்துநாட்கள், பத்துநாட்கள், இருபதுநாட்கள் மட்டும் இல்லை, [20] ஒரு மாதம்வரை சாப்பிடுவீர்கள்; அது உங்களுடைய மூக்கிலிருந்து புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகும்வரை சாப்பிடுவீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற யெகோவாவை அசட்டைசெய்து, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல்” என்றார்.

[31] அப்பொழுது யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. [32] அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள். [33] தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே யெகோவாவுடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; யெகோவா மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

https://bible.com/bible/1899/num.11.18-33.IRVTam

 

 

34.குருடரான தோழரை பள்ளிக்கு வரும்படி கூறியதை தற்குறித்தனமாக விமர்சித்தார்

எந்த ஆத்மாவும் அதன் சக்திக்கு மீறி சுமத்தப்பட மாட்டாது (குர்ஆன் 2:286, 2:233, 65:7)

அந்த மனிதர் அக்காலத்தில் ஒலிபெருக்கி இல்லாமல் வாயால் கூறும் தொழுகை அழைப்பை கேட்கும் தூரத்திலேயே இருந்தார். அதனால் தான் "தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்! வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்!" என்பதை கேட்கிறாயா என்று கேட்டார்கள்.-நஸாயீ 850-853

ஆனால் மழை பெய்யும் போதோ குளிரான நேரத்திலோ வீட்டில் தொழுதுகொள்ள அனைவருக்குமே அனுமதி உண்டு-புகாரி 901,632

அத்தோடு குருடராக இருந்த இத்பான் என்ற தோழருக்கு வீட்டில் தொழுதுகொள்ள அனுமதியும் வழங்கினார்கள் (புகாரி 425) அவரவர் வசதியை பொறுத்து இஸ்லாம் வழிகாட்டியுள்ளது

 

குருடன் பலி செலுத்த வருவது கர்த்தருக்கு பரிசுத்த குலைச்சல்

லேவியராகமம் 21:18-21, 23 IRVTam

[18] ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட உறுப்புள்ளவனானாலும், [19] கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும், [20] கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது. [21] ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.

[23] ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.

https://bible.com/bible/1899/lev.21.18-23.IRVTam

நபிகளார் போருக்கு சென்றால் மதீனாவில் தலைமையேற்று தொழுகை நடத்துபவராக குருடராக இருந்தவரே இருந்தார்-அபூதாவூத் 595.. இதனால் பரிசுத்தகுலைச்சல் இஸ்லாத்தில் இல்லை.

35.இணைகற்பிப்பவன் அசுத்தவான் 9:28

ஆன்மீக அசுத்தமே அது.

ஆன்மீக அசுத்தத்தில் உள்ளவன் அசுத்தனாக கூறப்படுகிறது

*பைபிள் இணைவைத்தவனை பெரிய ஆணுறுப்புக்கு ஆசைப்பட்டு கணவனை கழற்றிவிட்ட பெண்ணுக்கு ஒப்பாக பேசி நீலப்பட வர்ணனையே செய்துள்ளது:

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 16:25-26 TAERV

[25] ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். [26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய்.

https://bible.com/bible/3154/ezk.16.25-26.TAERV

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 23:20-21 TAERV

[20] கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக்கொண்டாள். [21] “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள்.

https://bible.com/bible/3154/ezk.23.20-21.TAERV

 

36..முஸ்லிம் 4376 யூத கிறிஸ்தவர்களை பாதையின் ஓரம்வரை ஒதுக்குதல்

*பாதையின் ஓரம் வரை ஒதுக்குவது குறித்து,  பாதையில் போகிறவர்களை எல்லாம் அப்படி செய்ததாக எந்த தகவலும் இல்லை. மாறாக முஸ்லிம்கள் பாதையில் உள்ளபோது அவர்கள் வந்தால் , ஓரமாக செல்ல வைக்க வேண்டும் என்பது நிராகரிப்புக்கான தண்டனை. நடுவால் வழி விட்டால் அவர்களுக்கான கண்ணியமாக அது இருப்பதோடு, அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை இழக்க செய்வதாக அமையும்.

ஆனாலும் அவர்களின் மீது சுமக்க முடியாதவற்றை சுமத்தி அவர்களின் உரிமைகளை பறித்தால் அத்தகையோருக்கு எதிராக நானே வழக்காடுவேன் என நபிகளார் கூறியுள்ளார்கள் அபூதாவூத் 3052.

அவர்களை அடிமைகளை போல நடத்துக்கூடாது என்றே இஸ்லாம் கருதுகிறது. அதனால் தான் புகாரி 3052 இற்கு இதே தலைப்பை இடுகிறார்.

அத்தகையோரை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் புகாரி 3166

அவர்களோடு வியாபாரம் செய்யலாம். அவர்களிடம் கடன் வாங்கலாம்- நபிகளார் மரணிக்கும் போது யூதரிடம் கடன் வாங்கி தன் கவசத்தை அடைமானம் வைத்திருந்தார்கள்-புகாரி 2916,2068,2096

இவர்களை இவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இஸ்லாமிய அரசு போர் செய்ய வேண்டும் என்றும் அவர்களால் சுமக்க முடியாததை சுமத்த கூடாது என்றும் புகாரி 3052 கூறுகிறது

இதைவிட வேறு என்ன வேண்டும்?

 

-தப்பான கொள்கையுடையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அவர்களின் பாவங்களில் பங்காளியாக ஆவாய் (2 யோவான் 1:10-11)

2 யோவா 1:10-11 IRVTam

[10] ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். [11] அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

https://bible.com/bible/1899/2jn.1.10-11.IRVTam 

-சிலைவணங்கியை விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து, அத்தகைய உறவினரோடு பழகவோ கூட்டாக உண்ணவோ கூடாது  அவனை துரத்திவிட வேண்டும்.(1 கொரிந்தியர் 5:11,13)

1 கொரி 5:11, 13 IRVTam

[11] நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.

[13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

https://bible.com/bible/1899/1co.5.11-13.IRVTam 

-மாற்றுமதத்தவர்களை விட்டு வெளியேறி பிரிந்துவிட வேண்டும் (2 கொரிந்தியர் 6:17

2 கொரி 6:17 IRVTam

[17] எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

https://bible.com/bible/1899/2co.6.17.IRVTam 

இது அவர்களிடம் அதிகாரம் இல்லாத போது கூறப்பட்டவை

 

ஆனால் பழைய ஏற்பாட்டில் அவர்களுக்கு அதிகாரம் இருந்தபோது நலவு நாட கூடாது என்றும் துரத்திவிட வேண்டும் என்றும் கூறுகிறார் கர்த்தர்:

எஸ்றா 9:12 IRVTam

[12] ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

https://bible.com/bible/1899/ezr.9.12.IRVTam

-மாற்றுமதத்தை ஏற்றுக்கொள்ளாத படிக்கு அவர்களை கொன்று போட்டு விடுமாறும் சொன்னார்:

உபாகமம் 20:16-18 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam  

37.கர்த்தருக்கு சமானம் இல்லை ஏசாயா 40:25

அவர் பொய்சொல்ல மனிதனும் அல்ல மனம் மாற மனுச் குமாரனும் அல்ல-எண் 23:19

அல்லாஹ்வுக்கு சமானமோ அவனைப் போன்றோ எதுவுமே இல்லை என்பதையே குர்ஆனும் கூறுகிறது -112:4& 42:11

மனம் மாறுவதில்லை என சொல்லும் அதே பைபிள் தான் கர்த்தர் மனம் மாறுவார் என்றும் சொல்லப்படுகிறது:

சவுல் அழகாக இருக்கிறார் என்பதற்காக அவனை ராஜாவாக்கினார்:

1 சாமுவேல் 9:2, 15-17 IRVTam

[2] அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.

[15] சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே யெகோவா சாமுவேலின் காது கேட்கும்படி: [16] நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். [17] சாமுவேல் சவுலைக் கண்டபோது, யெகோவா அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.

https://bible.com/bible/1899/1sa.9.2-17.IRVTam

*அவன் சொன்னபடி கொலைபண்ணாததால் அவனை ராஜாவாக்கியதற்காக மனஸ்தாபப்பட்டார்:

1 சாமுவேல் 15:10-11 IRVTam

[10] அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: [11] நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.

https://bible.com/bible/1899/1sa.15.10-11.IRVTam

பிறகு தாவீது எனும் பேரழகனை தேர்வு செய்கிறார்:

1 சாமுவேல் 16:12-13 IRVTam

[12] ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார். [13] அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

https://bible.com/bible/1899/1sa.16.12-13.IRVTam

இங்கே தெளிவாக மனம் மாறியுள்ளார்.

மனம் மாறுவேன் என்று எரேமியா 18:7-10 இலே தெளிவாக சொல்லியும் உள்ளார்.

கர்த்தர் பொய் சொல்ல மனிதனல்ல.. ஆனால் மனிதனை பொய் சொல்ல வைப்பதற்காக பொய்யின் ஆவியை அனுப்புவார்- 1 இராஜாக்கள் 22:19-23

38.மறுமையில் நிர்வாணமாக எழுப்பப்படுவார்கள் என்பதை ஆபாசமாக உருட்டல்

மறுமையில் நிர்வானமாக எழுப்பப்பட்டாலும் ஒருவர் மற்றவரை பார்த்துக்கொள்ளும் நிலை இருக்காத அளவுக்கு பயங்கரமாக இருக்கும் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது - புகாரி 6527

பிறகு இறைவன் ஆடை அணிவிப்பான். முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் ஆவார் -புகாரி 3349

 

கர்த்தர் தன் சந்நிதியில் ஏதேன் தோட்டத்தில் மனிதர்களை நிர்வாணமாக வைத்திருந்தார் என்றே பைபிள் சொல்கிறது:

ஆதியாகமம் 2:25 IRVTam

[25] ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்

https://bible.com/bible/1899/gen.2.25.IRVTam

39.பாவம் செய்யாவிட்டால் அல்லாஹ் போக்கி விடுவான் முஸ்லிம் 5304

பொதுவாக பாவம் செய்யாத மனிதன் இல்லை.

ஒரு பேச்சுக்காக அப்படி இருந்தால், பாவம் செய்யாத மனிதனுக்கு இறைவன் தேவைப்பட மாட்டான்.  பாவம் செய்யும் மனிதனுக்கு தான் தன்னை மன்னிப்பதற்கு இறைவன் தேவை.

இறைவன் மீது தேவைப்படாத மனிதர்களை இறைவன் ஏன் வைக்க வேண்டும்? அத்தோடு பாவம் செய்யாதவனாக இருந்தால் தன்னை குறித்து யோக்கியன் என கருதி தற்பெருமையடித்துக்கொள்வான் . இதனால் வேறொரு பெரும்பாவம் ஏற்பட்டு அழிவையே சந்திப்பான்.

ஆனால் இறைவனோ அப்படி பாவம் செய்து திருந்துவோரை மன்னிக்கவே நாடுகிறான். அதை தான் முஸ்லிம் 5304 கூறுகிறது.

 

பைபிளிலே கர்த்தரே பாவத்தை செய்வித்துள்ளார்:

எசேக்கியேல் 20:25-26 IRVTam

[25] ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். [26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.25-26.IRVTam  

40.மாதவிடாய் பெண் தொழ கூடாது என்றும் தொழாததால் அவள் நரகம் போவாள் என்று கூறுவதாக உருட்டல்

மாதவிடாய்ச் பெண் தொழக் கூடாது நோன்பு பிடிக்க கூடாது என்பது அவர்களுக்கான சலுகை.

மாதவிடாயின் போது தொழாததால் நரகம் அனுப்புவதாக எங்கேயும் கூறப்படவில்லை.

 

பைபிளில் தான் இதுபோன்று கடவுள் அறிவீனமாக நடப்பதாக சித்தரிக்கப்படுகிறது.

பிலேயாமை கர்த்தரே போகச் சொல்கிறார். அவன் போனதால் அவன் மீதே கோபப்படுகிறார்:

எண்ணாகமம் 22:20-22 TAERV

[20] அன்று இரவு தேவன் பிலேயாமை நோக்கி, “மீண்டும் தங்களோடு வரும்படி உன்னை அழைக்க அந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள். நீ அவர்களோடு போகலாம். ஆனால் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார். [21] மறுநாள் காலை பிலேயாம் எழுந்து தன் கழுதையைத் தயார் செய்துகொண்டு மோவாபின் தலைவர்களோடு சென்றான். [22] பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவதூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான்.

https://bible.com/bible/3154/num.22.20-22.TAERV

41.குர்ஆன் 32:13 அவன் நாடியிருந்தால் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பார்

ஆனால் இவர்களில் ஒருவரும் கெட்டுப் போவது பிதாவின் சித்தமல்ல மத்தேயு 18

இறைவன் விரும்பினால் அனைவரையும் ஒரே மார்க்கத்தில் நிலைத்திருக்க செய்ய முடியும். காரணம் அவன் சர்வ சக்தியுள்ளவன். ஆனால் மனிதர்களுக்கு சுயதேர்வையும் அதன்படி நடக்கும் ஆற்றலையும் இறைவன் வழங்கியுள்ளான் சோதனைக்காக. (67:2, 6:165, ). அதன்படி அவர்கள் செய்தவற்றுக்கு கூலியாக அவன் குற்றவாளிகளை தண்டிப்பான் நல்லவர்களை மன்னிப்பான்.

இறைவன் எந்த அளவு கருணையாளன் என்றால் ஒரு நன்மை செய்தால் பத்து மடங்கு அதிகமாக கூலி தருவான். பாவத்திற்கோ அதேயளவு மட்டுமே உண்டு (குர்ஆன் 6:160

*ஓர் இரக்கமுள்ள பாலூட்டும் தாய் தன் குழந்தையை நெருப்பில் போட மாட்டாள். அவள் தன் குழந்தைமீலுள்ள கருணையை விட , தன் அடியார்கள் மீது இறைவன் கருணையுள்ளவன் (புகாரி 5999) ஆனாலும் சுய தேர்வின் அடிப்படையில் பாவம் செய்து அதனாலேயே தண்டிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக இறைவன் தன் அடியார்கள் இடமிருந்து நிராகரிப்பை பொருந்திக்கொள்ள மாட்டான்

 நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை  கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.

(அல்குர்ஆன் : 39:7)

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

 

 

 

*பைபிளிலும் கர்த்தரே விசுவாசிக்காதபடி இருதயத்தை கடினப்படுத்துபவர்

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

*பொய்யை விசுவாசிக்கவேண்டி வஞ்சகத்தையும் அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12).  *நியாயமின்றி உத்தமமான யோபுவை நிர்மூலமாக்க சாத்தான் ஏவியதை செய்தவர் (யோபு 2:3)..

*அத்தோடு தம் பிள்ளைகளை நரபலி கொடுக்க வைத்து வழிகெடுத்தவரும் அவரே(எசேக்கியேல் 20:25-26). *ஜனங்களை வழி தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17,)

 *கெடுதியை படைத்தவர் (ஏசாயா 45:7), *கெடுதியாக நடந்துகொள்ள வைப்பவர் (சங்கீதம் 105:25)

*பொல்லாத ஆவியை அனுப்பி ஜனங்களை பாவம் செய்ய வைப்பவர் (1 சாமுவேல் 18:10, 19:9, 1 இராஜாக்கள் 22:18-23) இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

ஆதலால் இது தற்குறித்தனமானது .

தேவனது விருப்பம் என்பது வேறு தீர்மானம் என்பது வேறு. தீர்மானத்தின்படி இப்படி நரகத்திற்குரிய செயல்களை செய்வித்தார்.

 

42.ஏசாயா 20:2 ஏசாயா வை நிர்வாணமாக நடக்கசொன்னதற்கு  புகாரி 278 இலே மூஸா நபியை நிர்வாணமாக ஓடவைத்ததாக காட்டினார்

அக்காலத்தில் அவர்கள் நிர்வானமாக தான் கூட்டாக குளிப்பார்கள். மூஸா நபி மீது அவர் தனியாக குளிப்பதால் அந்த மக்கள் அவரை விரைவீக்கமுடையவர் என கூறினர். அது பொய் என்றும் அவர் இந்த அவதூறிலிருந்து தூயவர் என காட்டும்படி மூஸா நபி தன் துணியைவைத்த கல்லை நகர வைத்தான்.

ஆனால் எமக்கு வழங்கப்பட்ட சட்டத்திலோ, ஓர் ஆண் மற்றைய ஆணின் அந்தரங்க உறுப்பை பார்க்கவோ ஒரே போர்வைக்குள் தூங்கவோ கூடாது என்றும் ஒரு பெண் மற்றைய பெண்ணின் அந்தரங்க உறுப்பை பார்க்கவோ ஒரே போர்வைக்குள் தூங்கவோ கூடாது என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள் (முஸ்லிம் 565 (338a), அபூதாவூத் 4018, திர்மிதீ 2793,இப்னுமாஜா 661)

 

*பைபிளிலே முதல் மனிதர்களையே நிர்வாணமாக தோட்டத்தில் விட்டதாக பைபிள் சொல்கிறது

ஆதியாகமம் 2:25 IRVTam

[25] ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

https://bible.com/bible/1899/gen.2.25.IRVTam

*அத்தோடு பைபிளிலே கர்த்தர் சிலைவணங்கிகளின் பாவாடையை முகம் வரை தூக்கி காண்பிப்பேன் என்றெல்லாம் பேசியுள்ளார்:

எரேமியா 13:26 IRVTam

[26] உன் மானம் காணப்பட நான் உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை எடுத்துப்போடுவேன்.

https://bible.com/bible/1899/jer.13.26.IRVTam

நாகூம் 3:5 IRVTam

[5] இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,

https://bible.com/bible/1899/nam.3.5.IRVTam

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1