YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1
கிறிஸ்தவ தற்குரிகளும் இஸ்லாமிய முகநூல் நண்பர்களும் "மனிதர்களுக்கு நல்வழிகாட்டுவது இஸ்லாமாகிறிஸ்தவமா?" எனும் தலைப்பில் விவாதம் செய்தனர்.
இந்த விவாதத்தில் முஸ்லிம் நண்பர்கள் இஸ்லாம் காட்டும் நல்வழிகளை சிறப்பாக எடுத்துவைத்ததோடு, கிறிஸ்தவ தரப்போ கிறிஸ்தவம் காட்டும் நல்வழி என கறிவேப்பிலைக்கும் உதவாத பயனற்ற போதனைகளையே தப்புதப்பாக எடுத்துவைத்தனர். முஸ்லிம்நண்பர்களுக்கு மறுப்பு கூறுவதாக கூறிக்கொண்டு "தமக்குத்தாமே கேள்விகேட்டு தம் சொந்த கேள்விக்கே தப்பா பதில்களை கூறினார்கள்.
இவர்கள் வைத்த வாதங்கள் எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பதை பைபிளையும் குர்ஆனையும் ஹதீஸையும் படித்த எல்லோராலும் புரிய முடியும்.
இதிலே நீலநிறத்தில் இருப்பவை எழுதிய என் குறிப்புக்கள் ஆகும். அவற்றில் பல இந்த விவாதத்தில் கிடைத்தவைகளே.
என்னுரை
இஸ்லாமும் கிறிஸ்தவமும் யூதமும் இறைவனின்
நண்பரான இப்ராஹீமுடன் தொடர்புபடுத்தப்படும் பிரபலமான மதங்களாக உள்ளன.
இதிலே இஸ்லாமும் யூதமும் ஆன்மீகத்துடன்
சேர்த்து ஆட்சியையும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் நீதித்துறையை உடைய
மதங்களாக உள்ளன.
கிறிஸ்தவமோ ஏனைய மதங்களான பௌத்தம் சமணம் போன்ற
ஆன்மீகத்தை மட்டும் உடையதாக உள்ள மதமாகும். நீதித்துறையோ
ஆட்சியோ இதில் இல்லாததால் வெறும் குற்றவாளிகளை இவ்வுலகில் தண்டிக்கும் நீதித்துறை
இதிலே இருக்காது.
ஆனால் தற்குறிகளோ, நீதித்துறையோ ஆட்சியோ தம் மதத்திலே
இல்லை என்பதை கூட உணராமல், எம் மதம் எதிரியை மன்னிக்க சொல்கிறது. ஆனால் இஸ்லாம்
அப்படி அல்ல அது தண்டனையை வழங்குகிறது என்கிறார்கள். ஆட்சியதிகாரம் இல்லாத மதத்தில் குற்றவாளியை
மன்னிப்பதை தவிர வேறு வழி இல்லை. காரணம், இவர்கள் தண்டிக்க முற்பட்டால், ஆட்சியும்
அதிகாரமும் உள்ளவர்கள் இவர்களின் கதையை முடித்து விடுவார்கள்.
ஆனால் இஸ்லாமோ ஆன்மீகத்துடன் சேர்த்து
மனிதர்களிடையே நீதியை நிலைநாட்டும் அரசாட்சியும் நீதித்துறையும் உள்ளடங்கிய
மார்க்கமாக இருப்பதால், அநீதியை ஒழிக்கவும் நீதியை நிலைநாட்டவும் யுத்தங்களும்
படையெடுப்புகளும் தண்டனை நிறைவேற்றல்களும் உள்ளடங்கியதாக அமைந்துள்ளது. அதை வைத்தே
தற்குறிகள் விமர்சிப்பார்கள்
இனி விவாதத்திற்குள் செல்வோம்:
YDM
கும்பலின் இஸ்லாமிய
முகநூல் நண்பர்களுடனான விவாதம் குறித்த என் கருத்து:
அவர்களுடைய தளத்தில் இந்த விவாத வீடியோக்கள்:
https://youtube.com/playlist?list=PL2qZo_qh4Qvt5xwIfJLStesYDpYbCCuaI&si=0frW-F_z8ItooPYE
1.கிறிஸ்தவ தரப்பின் முன்னுரையும் முதல் அமர்வும்.
1.முன்னுரையாக போதகர்
, "இஸ்லாம் என்பது முகம்மது நபியால்
உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ எதிர்ப்பு
பிரச்சாரம்" என்றும் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
என்பது பொய்ப் பிரச்சாரம் என்றும்
கூறுகிறார். (00:00-00.39)
பதில்: கிறிஸ்தவத்தை எதிர்ப்பது
மட்டுமே நோக்கமாக இருக்குமானால், ஈஸா (இயேசு) அவர்களை ஒரு தூய்மையாக்கப்பட்ட கன்னியிடம் பிறந்தார் (குர்ஆன்
3:42-45) என்றும் அவரை தூய்மையான குழந்தை (குர்ஆன் 19:19), இறைவனுடைய அனுமதியுடன் அற்புதங்கள்
செய்ததாகவும் (3:49,5:110), அல்லாஹ்வின் (ஏக இறைவனின்)
வார்த்தை (3:45,4:171), அல்லாஹ்வின் (ஏக இறைவனின்)
ஆத்துமா/உயிர் (4:171, புகாரி 7510), அவரது தாய் மீது அவதூறு
கூறப்பட்ட போது தொட்டிலில் குழந்தையாக இருந்தபோதே பேசியவர் (19:30), சைத்தானால் பிறப்பின் போது தீண்டப்படாத
குழந்தைகள் அவரும் அவரது அன்னை மர்யமும் மட்டுமே (புகாரி 3431,4548) , விசுவாசிகளுக்கு உதாரணமாக கூறப்படும் இரண்டு பெண்களில் ஒருவராக அவருடைய
தாயாகிய மர்யம் அவர்களை (குர்ஆன் 66:12) இஸ்லாம்
கூறியிருக்குமா?
முகம்மது நபி பொய்யராக தனக்கு ஆள் பிடிப்பதற்காக
பேசுபவராக இருந்தால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டார்
என்று கூறி கிறிஸ்தவர்களை ஈர்த்திருப்பார்.
ஆனால் அவர் உண்மையிலேயே சிலுவையில்
அறையப்படாமல், அவருக்கு பதிலாக அவருடைய உருவத்தையுடைய ஒரு நபர் சிலுவையில்
அறையப்பட்டார் என்று இஸ்லாம் கூறுகிறது.
கடவுள் தன் ஒரே மகனை மனிதனாக அனுப்பி தனக்கே
நரபலி கொடுத்தார் என்று கடவுளை ஓர் இறக்கமற்ற அறிவற்ற நபராக சித்தரிக்கும்
இந்த போதனையை (ரோமர் 8:3,3:26, எபிரேயர்
9:14, 1 யோவான் 2:2, எபேசியர் 5:2, யோவான் 3:17-18,36, 1 யோவான் 4:9-10) தோராவுக்கு
எதிரான போதனையை இஸ்லாம் ஏற்கவில்லை!
தன் மகனை தனக்கே நரபலி கொடுக்கிறார் என்றால்
அல்லது தன் பிதாவிடமிருந்து மக்களை பாதுகாக்க தன்னை நரபலி கொடுக்குமாறு பிதா
அனுப்பினார் என்றால் அவரை விட இரத்த வெறி பிடித்த மூடர் யார் இருக்க முடியும்? அதுவும் தன் மகனை தனக்கே நரபலியிட
வைப்பதென்பது மிகவும் சாத்தானியமானது (Satanic).
2.விவாதத்தை தொடங்கும்போது போதகர் , "தனக்கு அடிமைகளை ஏற்படுத்திக்கொள்ளாத கர்த்தராகிய
இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக!" என்று கூறி, குர்ஆன் 17:111 இல் "தனக்கு பிள்ளையை எடுத்துக் கொள்ளாதவனும்,
ஆட்சியில் தனக்கு இணையாளன் இல்லாதவனும் தனக்கு உதவியாளன் (வலீ)
இல்லாதவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக!" வசனத்தை மாற்றி
உல்டாவாக தொடங்குகிறார். (00:10:43-46& 00:17:25-28)
பழைய ஏற்பாட்டில் தேவனை நம்பியோரை தேவனது
ஊழியக்காரன்/தாசன் (servant) எனும் வாசகத்தை காணமுடிகிறது
. உதாரணமாக இஸ்ரவேலரை என் ஊழியாக்காரர்
(servants) என்கிறார் (லேவியராகமம் 25:42),யாக்கோபின் வித்துக்களை அவருடைய
ஊழியக்காரர்கள் (his servant) என 1 நாளாகமம் 16:13 கூறுகிறது. மோசேயை அவருடைய
(கடவுளுடைய) ஊழியக்காரன் (his servant) என்கிறது தோரா (யாத்திராகமம் 14:31 ;
யோசுவா புத்தகமும் 9:24, 11:15, சங்கீதம் 105:26), தாவீது ராஜாவை கர்த்துருடைய
ஊழியக்காரன் (his servant) என்கிறது 2 இராஜாக்கள் 8:19 சங்கீதம் 78:70
,144:10,, அதேபோல் தீர்க்கதரிசி எலியாவை
அவருடைய தாசன் (his servant) என 2 இராஜாக்கள் 9:36, 10:10 கூறுகிறது, தீர்க்கதரிசி யோனாவை அவருடைய ஊழியக்காரன் (his
servant) என 2 இராஜாக்கள் 14:25 கூறுகிறது
ஆபிரகாம் எனும் அவருடைய நண்பரை அவருடைய
ஊழியக்காரன் (his servant) என சங்கீதம் 105:6,42 கூறுகிறது .
அதே போல் ஆபிராகமை என் ஊழியக்காரன் (my servant)
(ஆதி 26:24),மோசேயை என் ஊழியக்காரன் (my servant) (எண்ணாகமம் 12:7,8 யோசுவா
1:2,7; 2 இராஜாக்கள்21:8), காலேபை என்
ஊழியக்காரன் (எண்ணாகமம் 14:24), தாவீது ராஜாவை என் ஊழியக்காரன் (my servant) (2
சாமுவேல் 3:18;7:5,8,; 1 இராஜாக்கள் 11:13,3234,36,38; 2 இராஜாக்கள் 19:34,... சங்கீதம்89:3,20,)
நீதிமான் யோபுவை என் ஊழியக்காரன் (யோபு 1:8, 2:3, 42:7), ஏசாயா தீர்க்கதரிசியை என்
தாசன் (my servant) (ஏசாயா 20:3) யாக்கோபு எனும் இஸ்ரவேலரை என் ஊழியக்காரன் my
servant (ஏசாயா 41:8,9, ; 44:1,2,21, 45:4) , கொடூர மன்னன் நேபுகாத்நேச்சரை என்
ஊழியக்காரன் (my servant) (எரேமியா 25:9,27:6), மேசியாவை என் ஊழியக்காரன் (my
servant) (சகரியா 3:8) என கர்த்தரே சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.
இதே எபிரேய வாசகம் தான் அடிமைகளை குறிக்கவும்
பாவிக்கப்படும். (பார்க்க யாத்திராகமம் 21:2,5,20,26; லேவியராகமம் 25:44)
அடுத்ததாக, கடவுளுக்கு நம்மை பிள்ளைகளாக
பார்க்கிறார் என்பதும் மிகவும் தவறானது. காரணம் எந்த தகப்பனும் தன் குழந்தைகளை கொல்லுவதில்லை. ஆனால் கடவுள் கொல்லுபவராக இருக்கிறார் (1
சாமுவேல் 2:6, உபாகமம் 32:39). குழந்தைகள் உட்பட.
அப்படி அவர் மனிதர்களை தம் பிள்ளைகளாக
பார்க்கிறார் என்றால், உலகத்தில் எந்த மனிதனும் பாதிக்கப்பட மாட்டான்
இதை குறித்து பவுல் இவ்வாறு எழுதுகிறார்:
ரோமர் 9:18-23 TRV
[18] எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட
விரும்புகின்றாரோ, அவருக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க
விரும்புகின்றாரோ, அவரைக் கடினமாக்குகிறார். [19] உங்களில் ஒருவன் என்னிடம்,
“அவ்வாறானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? இறைவனுடைய
திட்டத்தை எதிர்க்க யாரால் முடியும்?” என்று கேட்கலாம். [20] அவ்வாறானால் மனிதனே,
இறைவனை எதிர்த்துப் பேசுவதற்கு நீ யார்? வனைந்து உருவாக்கப்பட்டது தன்னை
வனைந்தவரிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினீர்?” என்று கேட்கலாமோ? [21] ஒரே
களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை மதிப்புக்காகவும், மற்றொன்றை அவமதிப்புக்காகவும்
உருவாக்குவதற்கு குயவனுக்கு களிமண்ணின்மீது உரிமை இல்லையோ? [22] இறைவன் தமது
கோபத்தை வெளிப்படுத்தவும் தமது வல்லமையை தெரியப்படுத்தவும் விரும்பி,
அழிக்கப்படுவதற்காகவே தயார் செய்யப்பட்ட கோபத்தின் பாத்திரங்களை, அதிக பொறுமையுடன்
சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? [23] அத்துடன் இறைவன், மகிமைக்கென முன்பே
ஆயத்தம் செய்த இரக்கத்துக்குரிய பாத்திரங்களுக்குத் தன் மகிமையின் பெருநிறைவை
வெளிப்படுத்தவும், அவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?
https://bible.com/bible/4245/rom.9.18-23.TRV
அவரை தகப்பன் என சொன்னால் கெட்ட தகப்பன்
லிஸ்டில் தான் வருவார்.. காரணம் தகப்பன் செய்யும் செயல் அல்ல இவர் செய்வது.
ஆகவே கடவுள் கடவுள் தான். தகப்பன் தகப்பன் தான்.
3.மேலும் போதகர் ,
உலகத்தில் தோன்றிய அனைவரும் நல்லவருக்கு நல்லவனாக கெட்டவனுக்கு கெட்டவனாக
இருக்குமாறு சொன்னதாகவும், இயேசு மட்டுமே கெட்டவனுக்கும் நல்லது செய்யுமாறு
சொன்னதாக தொடங்கி, மத்தேயு 5:44ஐ மேற்கோள் காட்டுகிறார்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை
ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்
ஜெபம்பண்ணுங்கள்.”
மத்தேயு 5:44
இது நல்ல போதனை என்பதில் சந்தேகமில்லை .. இதிலுள்ள எதிரிகள் என்பதற்கும்
மதத்திற்கும் சம்பந்தமில்லை..
ஆனால் இவர் நம்பும் இயேசுவின் பிதாவோ, 400
வருடங்கள் முன்பு வாழ்ந்த மாற்றுமத அமெலேக்கிய மக்கள் செய்த குற்றத்திற்கு
குழந்தைகளையும் கொல்லுமாறு சொன்னார்:
2 சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு
அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
3 இப்போதும் நீ போய், அமலேக்கை
மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம்
வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும்,
மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய்
என்கிறார் என்று சொன்னான்.
1 சாமுவேல் 15:2-3
இயேசு கூறும் எதிரிகள் என்பது சொந்த
பிரச்சினைகளுக்காக பகைத்திருப்பவர்களை குறித்தானது ஆகும்.
ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளாத எதிரிகளை இயேசு
ஆசீர்வதிக்கவோ ஜெபம் செய்யவோ சிநேகிக்கவோ நன்மை செய்யவோ எதுவும் செய்யவில்லை. மாறாக அவர்கள் மன்னிக்கப்படாமல்
திருந்தாமல் அழிந்து போகவேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்துகிறார்:
“அவர்கள் குணப்படாதபடிக்கும்,
பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும்
இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.மாற்கு 4:12
அதாவது இயேசு உவமையாக பேசியதன் நோக்கமே , அவரை
ஏற்காதவர்கள் மன்னிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் திருந்தவே கூடாது என்பதற்காகவும் தான்
என்கிறார்.
இயேசுவின் போதனையை நன்கு புரிந்த யோவான் கூட,
இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களை வஞ்சகர்கள் என்றும் இயேசுவின் எதிரிகள் (அந்திக்கிறிஸ்து) என்றும் அவர்களுக்கு
வாழ்த்து சொல்ல கூடாது வீட்டுக்குள் எடுக்க கூடாது என்கிறார்:
7.மாம்சத்தில் வந்த
இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்;
இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
10 ஒருவன் உங்களிடத்தில் வந்து
இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும்,
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய
துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.2 யோவான்
1:7,10-11
பொதுவான மாற்றுமத சிலை வணங்கி உறவினரை குறித்து,
அவனோடு பழகவோ கூட்டாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிடு என்கிறார் பவுல்.. இத்தகைய மாற்றுமத சிலை வணங்கி
ஓரினப்புணர்ச்சிக்காரன் விபச்சாரகன் திருடன் போன்றவர்களுக்கு ஒப்பானவன்
என்பதையும் பவுல் தெளிவாக சொல்கிறார்:
11நான் உங்களுக்கு
எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது,
பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது,
உதாசீனனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே
கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
13புறம்பே
இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத்
தள்ளிப்போடுங்கள்.1 கொரிந்தியர் 5:11, 13
*மாற்றுமதத்தவனோடு சம்பந்தம்
கலக்க கூடாது என்றும் விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் சம்பந்தம் கிடையாது என்றும்
அவர்களை விட்டு பிரிந்து வாழ வேண்டும் என்கிறார் பவுல்:
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன்
பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும்
இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே
விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும்
சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள்
தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி,
நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப்
பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.2 கொரிந்தியர் 6:14-17
அடுத்ததாக,
*எதிரியை நேசிப்பது என்பது யூதர்கள்
ரோமர்களுக்கு கீழே வரிசெலுத்துவோராக பலவீனராக உள்ளபோது சொல்லப்பட்டதாகும் .
அப்போது எதிரியை எதிர்த்தால் அவன் முற்றாக அழித்துப் போட்டு விடுவான். ஆனால்
அதிகாரத்தோடு இருந்த காலத்தில் எதிரிகளின் குழந்தைகளையும் இரக்கமின்றி கொல்லுமாறு
சொன்னதும் இதே தேவன் தான்- (1 சாமுவேல் 15:2-3)
இயேசு வல்லமையோடு வரும்போது உலகத்தில் எதிரிகளை
மன்னிப்பாரா? ஜெபம் செய்வாரா? ஆசீர்வதிப்பாரா?
இல்லை . மாறாக தேவன் வஞ்சகத்தை அனுப்பி , பொய்யை
விசுவாசிக்க வைப்பார். இதை காரணமாக வைத்து அவர்களை அழிப்பாராம்.
11ஆகையால் சத்தியத்தை
விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12அவர்கள் பொய்யை
விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.2
தெசலோனிக்கேயர் 2:12
இயேசுவோ தன் எதிரிகளை வெட்டியும், எரியும்
நெருப்பில் உயிரோடு தள்ளியும் கொல்லுவாராம்- (வெளிப்படுத்தின விசேஷம் 19:20-21)
ஆகவே இது சாதாரண சொந்த பிரச்சினைகளுகுக்காக
பகைப்பவர்களுக்கே இயேசு போதித்தார்.
இது எப்போதும் பொருந்தும் விடயம் அல்ல..
இது கறிவேப்பிலைக்கும் உதவாத போதனையே.,.
ஏனெனில்
எதிரிகள் கூட்டம் அழிப்பதற்காக வந்தால், இதே செயலை செய்ய முடியுமா? அது பிரயோசனமற்றது என்பதால் தான் கிறிஸ்தவர்கள்
தமக்கு ஆட்சி வந்த பின் எதிரியை நேசிப்பதோ அவனுக்காக ஜெபிப்பதோ எதுவுமில்லை... மாறாக தப்பறைகளை (heretics) கொன்றொழித்தனர். யூதர்களை மதமாற்றுவதற்காக திருச்சபை
கொன்றொழித்ததும் உண்டு. முஸ்லிம்களை சிலுவைப் போர் எனும் பெயரில் கொன்றொழித்ததும்
உண்டு.....
அடுத்ததாக எதிரியை நேசிக்க சொன்ன அதே நபர் மதம்
என்று வரும்போது குடும்பத்தை வெறுக்க சொன்னார்
“யாதொருவன் என்னிடத்தில் வந்து,
தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும்,
தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்”.லூக்கா 14:26
ஏனென்றால் இயேசு வந்ததன் நோக்கமே பூமியில்
சமாதானத்தை ஏற்படுத்த அல்ல. மாறாக பட்டயத்தை அனுப்பி குடும்பத்தில் பிரிவினை
உண்டாக்குவதற்கே என்கிறார் இயேசு. காரணம் குடும்பத்தார் தான் உண்மையான எதிரிகளாம்.
34“பூமியின்மேல் சமாதானத்தை
அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல,
பட்டயத்தையே (லூக்கா 12:51 பட்டயத்திற்கு பதிலாக
பிரிவினை என்று சொல்கிறது) அனுப்பவந்தேன்.” 35“எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.”
36 “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.” மத்தேயு 10:34-36
(இதே விடயம் லூக்கா 12:51-52இலும் கூறப்பட்டுள்ளது)
அதாவது உலகப்பிரகாரமாக பகைவர்களை நேசிக்க
சொன்னவர், மதம் எனும் வரும்போது குடும்பத்தையும் வெறுக்க சொல்லி, இப்படி
சமாதானத்தை ஏற்படுத்த வராமல் பிரிவினை உண்டாக்கவே நான் வந்தேன் என்கிறார்.
அத்தோடு அவரை ஏற்காமல் மறுத்த எதிரிகள் மன்னிக்கப்படவே
கூடாது திருந்தவும் கூடாது என்பதற்காக உவமையாகவும் பேசினார் என்பதை அவரே
கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, தன்னை மறுதலிப்பவனை அவரும் பிதாவிடம் மறுதலிப்பேன் என்று தான் சொன்னார்.
பிதாவிடம் இவருக்காக வேண்டுதல் செய்வேன் என்று அல்ல.
32“மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன்
எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.”
33 “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன்
எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” மத்தேயு
10:32-33
அதாவது
மதம் என்று வரும்போது எதிரியை நேசித்தல் என்பது கிடையாது என்பதை இயேசு
காட்டியுள்ளார் ...
இஸ்லாம் என்ன சொல்கிறது?
*தீமையை நன்மையானதை கொண்டு தடுக்குமாறு
கூறுகிறது:
நன்மையும்
தீமையும்
சமமாக
மாட்டா,
நீங்கள்
(தீமையை)
நன்மையைக்
கொண்டே
தடுத்துக்
கொள்வீராக!
அப்பொழுது,
யாருக்கும்
உமக்கிடையே,
பகைமை
இருந்ததோ,
அவர்
உற்ற
நண்பரே
போல்
ஆகிவிடுவார்.
(41:34)
(நபியே!)
நீர் அழகிய நன்மையைக்
கொண்டு தடுத்துக் கொள்வீராக!
அவர்கள் வர்ணிப்பதை நாம்
நன்கறிவோம் (:23:96)
*இவை அனைத்தையும் உள்ளடக்கும் விதமாக,
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே
தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி : 13)
எவரும் தனக்கு கெடுதியை விரும்புவதில்லை. அதேபோல் பிற சகோதரனுடனும் நடந்துகொள்ள வேண்டும் என சகலத்தையும்
உள்ளடக்கி கூறிவிட்டார்கள்.
*அனைவரையும் சகோதரர்களாக இருக்கும்படியே நபிகளார்
வழிகாட்டியுள்ளார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது
குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய
பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர்
பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,)
அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ்
புகாரி : 6064)
*கெடுதி செய்து தன்னை துண்டிப்பவருக்கும் நன்மை செய்து
சேர்ந்து நடக்குமாறு முகம்மது நபி வழிகாட்டினார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்,
"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி
உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம்
செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப்
புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்
கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு
நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொன்னதைப்
போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப்
போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர்
உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5000
4.இயேசுவை கைது செய்ய வந்தபோது பேதுரு கத்தியை உருவி காதை
அறுத்ததாகவும் இயேசு அதை கண்டித்ததாகவும் வருவதை மேற்கோள் காட்டி சமாதானத்தை
போதித்ததாக சொல்கிறார்
அவர் குறிப்பிடும் வசனம்:
அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை
உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு
மல்குஸ் என்று பேர்.
யோவான் 18:10
அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: “உன் பட்டயத்தைத் திரும்ப
அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.”
மத்தேயு 26:52
பதில்: முதலில் பட்டயத்தை ஆடையை விற்றாவது வாங்க சொன்னவரே இயேசு தான்
36அதற்கு அவர்: “இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும்
உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று
ஒன்றைக் கொள்ளக்கடவன்.”
38அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே
இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: “போதும்” என்றார். லூக்கா 22:36,38
போர் செய்வதற்கு பலமான படை தேவை. ஆனால்
இயேசுவும் அவரது சீடர்களும் ரோம் அரசுக்கு வரிசெலுத்துவோராக இருந்தவர்கள். அவர்கள்
போர் செய்தால் முற்றாக அழிக்கப்பட்டு, கிறிஸ்தவம் அப்போதே அழிந்திருக்கும். பலவீனமான நிலையில் எல்லோரும் பொறுமையையும்
அன்பையும் தான் போதிப்பார்கள். வேறு வழி இல்லை என்பதால்.
ஆனால் பழைய ஏற்பாட்டில், நாடு பிடிப்பதற்காக மாற்றுமத மனிதர்களை கொல்லுமாறும்
குழந்தைகளை கொல்லுமாறும் கொள்ளையடிக்குமாறும் சொன்னதே இவர்கள் நம்பிக்கை பிரகாரம்
இயேசுவும் சேர்ந்து தானே!
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக்
கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும்
ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், அவர்களை உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். உபாகமம் 20:16-17
அப்படி உயிரோடு வைத்தால் , அந்த மாற்றுமதத்தவர்களை போல கெட்டுப்போய்விடுவார்களாம்
உபாகமம் 20:18 TAOVBSI
[18] அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.
https://bible.com/bible/339/deu.20.18.TAOVBSI
நானூறு வருடம் முன்பு எதிர்த்த ஒரே
காரணத்திற்காக, அவர்களது சந்ததிகளின்
நான்காம் தலைமுறை காலத்தில் வாழும் அதே
இனத்தை கொல்லுமாறும் அவர்களது குழந்தைகளை கொல்லுமாறும் அவரே சொன்னார்.
2சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது
என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு
வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
3இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து,
அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல்,
புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும்,
ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று
சொன்னான். 1 சாமுவேல் 15:2-3
இரண்டாம் வருகையில் இயேசுவும் கொல்லும் நபராக
தான் வருவார் என்கிறது வெளிப்படுத்தின விசேஷம் 19:20-21.
சக்தி இல்லாதவன் அமைதியாக இருந்தான்
என்பதற்காகவோ அல்லது பலம் இல்லாமையினால் அழிவிலிருந்து தப்பிக்க சமாதானத்தை
போதித்தார் என்பதற்காகவோ அது உலகத்திற்கு பொருத்தமானது என்றாகாது.
இந்த போதனைகள் எல்லாம் பொருந்தாது என்பதை
உணர்ந்ததால் தான் தமக்கு ஆட்சி , பலம் வந்த போது கிறிஸ்தவர்கள் யுத்தம்
செய்தார்கள். நாடுகளை கைப்பற்றினார்கள். சிலுவை யுத்தங்களை மதத்திற்காக
செய்தார்கள்.
5.இயேசு மதத்தை திணிக்க சொல்லவில்லை என்பதை குறிப்பிடுகிறார். அதற்கான அவர் குறிப்பிடும் வசனம்:
“எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும்,
உங்கள் வசனங்களைக்கேளாமலும் இருந்தால், நீங்கள்
அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள்
கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே
அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது
இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். மாற்கு 6:11
இதை கூறிவிட்டு மற்ற மதங்கள், குறிப்பாக இஸ்லாம் செய்வது போல் திணிக்க சொல்லவில்லை என்று
குறிப்பிடுகிறார்.
பதில்:
பலவீனமான நிலையில் இருந்த மக்களிடம் வேறு
என்ன போதனையை செய்யுமாறு கொடுக்க முடியும்? அவர்களிடம் திணிக்க முனைந்தால்
அப்போதே இவர்களை அழித்திருப்பார்கள்.
பலவீனமானோர் சமாதானமாக நடந்துகொண்டனர் என்பது
சாதாரண விடயம் தான். காரணம் அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை!!
ஆனால் சக்தி இருந்தபோது எப்படி தேவன்
சொல்லியிருந்தார் என்பதையும் பாருங்கள்!
12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்
குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்ட
மனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
13நீங்கள் அறியாத வேறே தேவர்களைச்
சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற
செய்தியைக் கேள்விப்படும்போது,
14நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து,
அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று
காண்பாயானால்,
15அந்தப் பட்டணத்தின் குடிகளைப்
பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும்
பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,
16அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின்
நடுவீதியிலே, கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும்,
அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்;
அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது. உபாகமம் 13:12-16
அதாவது ஊர் மக்களையே வெட்டி கொன்று
மிருகங்களையும் கொன்று ஊரையே தீயிட்டு கொழுத்த வேண்டும் என்று சொன்னதே இவர்கள்
நம்பிக்கை பிரகாரம் இயேசு தானே?
சமாதானம் பண்ணாமல் மாற்று மதத்தவர்களது
சிலைகளை உடைத்து அவர்களது வணக்கத்தலமாக இருக்கும் தோப்புகளை வெட்டிப்போடுமாறும்
சொன்னது யார்?
12நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு
உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில்
கண்ணியாயிருக்கும்.
13அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள்
சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். யாத்திராகமம் 34:12-13
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள்
பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி,
அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும். உபாகமம் 7:5
2நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச்
சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின்
கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
3அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள்
சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள்
தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல்
அழியும்படி செய்யக்கடவீர்கள். உபாகமம் 12:2-3
அத்தோடு, இவர்கள் இனத்தவர் மதம் மாறி சூரிய
சந்திரனை வணங்கினால், அத்தகையவனை கல்லால் அடித்து
கொல்ல வேண்டும் என்று சொன்னதும் அவரே!
3நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது
சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக்
காணப்பட்டால்,
5அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது
ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி
கல்லெறியக்கடவாய். உபாகமம் 17:3,5
அத்தோடு சக்தியில்லாதபோது கூட சிலை வணங்கிகளான உறவுகளை
துரத்திவிட வேண்டும் என்றும் அவர்களோடு சேர்ந்து பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது
என்பதையும் பவுல் கூறுகிறார்- 1 கொரிந்தியர் 5:11,13
இவர்கள் நம்பியடி நம்பாத தப்பறைகளை
வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்கிறார் யோவான். அப்படி செய்தால் அவர்களின்
பாவத்தில் பங்காளியாகிவிடுவார்களாம்.2 யோவான் 1:10-11
ஆகவே , சக்தி இல்லாதவன் தன் மதத்தை
திணிக்கவில்லை என்பதற்காக அதை சிறந்ததாக கூற முடியாது. காரணம் அவனுக்கு சக்தி இல்லை.. அத்தகையோர் சக்தியோடு இருந்த போது நடந்து கொல்ல சொன்னதற்கு முரணாகவே இது
அமைந்துள்ளது.
அடுத்து இஸ்லாமும் மார்கத்தில் நிர்ப்பந்தம்
இல்லை என்று தான் சொல்கிறது:
மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை
(குர்ஆன் 2:256)
மேலும், உமதிரட்சகன் நாடியிருந்தால், பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் விசுவாசித்திருப்பார்கள், எனவே மனிதர்களை-அவர்கள் (அனைவருமே) விசுவாசிகளாகி விட வேண்டுமென்று நீர் நிர்ப்பந்திக்கிறீரா? (10:99)
ஆரம்பத்தில் இஸ்லாமும் முஸ்லிம்களை வேதனை செய்வோரை மன்னிக்குமாறே ஏவியது (நஸாயீ 3086, குர்ஆன் 2:109)
இஸ்லாத்தை ஏற்றதறகாக ஒருவர் கொல்லப்படுவார் அல்லது ஃபித்னாவுக்கு ஆளாக்கப்படுவார் . அந்த ஃபித்னா நீங்கி மார்க்கம் இறைவனுக்கேயாகும்வரை காஃபிர்களோடு போரிவேண்டி ஏற்பட்டது (புகாரி 4514). இல்லாவிட்டால், காஃபிர்கள் தமக்கு சக்தி இருந்தால், முஸ்லிம்களோடு முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை போரிடட்டுக்கொண்டே இருப்பார்கள் என இறைவன் அறிந்திருந்தான். (குர்ஆன் 2:217) இதனாலேயே இறைவன் போர்செய்வதை கடமையாக்கினான்.
----
6.இயேசுவின் போதனைகளை எடுத்துச்சொல்லும்போது வரும் சோதனைகளை
பொறுத்துக் கொள்ளுமாறு இயேசு சொன்னதாகவும் எதிர்த்து தாக்குமாறு சொல்லவில்லை
என்றும் குறிப்பிட்டு மத்தேயு 5:11-12ஐ குறிப்பிடுகிறார்.
பதில்: பலவீனமாக அதிகாரமற்ற நிலையில் இருப்பவர் எதிர்த்து
தாக்கினால், அழிவு அவர்களுக்கு
தான் வந்து சேரும்.
இஸ்லாமும் இஸ்லாத்தை எத்தி வைக்கும்போது
வரும் துன்பங்களை பொறுத்துக்கொள்ளுமாறு தான் சொன்னது..
விசுவாசங்கொண்டோரே!) உங்கள்
செல்வங்களிலும், உங்கள்
ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள்
சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு
முன்னர் வேதம் கொடுக்கப்டடவர்களாலும்,
இணைவைப்பவர்களாலும் (வசைமொழி
நிந்தனைகளான) அதிகமான
நோவினையை நிச்சயமாக நீங்கள்
செவியேற்பீர்கள், மேலும்,
(இத்தகைய கஷ்டங்களில்) நீங்கள்
பொறுமையை மேற்கொண்டு பயபக்தியோடும்
இருந்தீர்களானால், நிச்சயமாக
அதுதான் அனைத்துக் காரியங்களிலும்
ஆக்கமான செயலாகும் 3:186
ஆரம்பத்தில் மத ரீதியாக எதிர்த்து முஸ்லிம்களை கொன்றும்
நோவினை செய்தும் கொண்டிருந்த காஃபிர்களையும் மன்னிக்கும்படி தான் நபிகளார்
ஏவப்பட்டார்கள்-. நஸாயீ 3086... பிறகு போர் செய்யவேண்டிய
கடமைப்பாடு ஏற்பட்டது (கீழே தரப்படும்)
7.பைபிள் அனைவரோடும் சமாதானமாக இருக்க சொல்வதாக கூறி எபிரேயர்
12:14 ஐ குறிப்பிடுகிறார்:
யாவரோடும் சமாதானமாயிருக்கவும்,
பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத்
தரிசிப்பதில்லையே. எபிரெயர் 12:14
பதில்:
இதிலுள்ள யாவரும் என்பது மாற்று மதத்தவர்களோ
கள்ளப்போதகர்களோ அல்ல! எபிரேய ஆசிரியர் இந்த கடிதத்தை கிறிஸ்தவர்களாக வாழும்
மக்களுக்கு தான் எழுதி அனுப்பியுள்ளார். அதாவது சக கிறிஸ்தவர்களை குறித்தே இவ்வாறு
எழுதியுள்ளார்.
ஆனால் இவர்கள் போதிக்கும் போதனையை
ஏற்காதவர்களை வீட்டுக்குள் எடுக்கவோ சமாதான வாழ்த்து சொல்லவோ கூடாது என்பதையும்
யோவான் கிறிஸ்தவர்களுக்கு எழுதியுள்ளார்:
10ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த
உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும்,
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
11அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய
துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். 2 யோவான் 1:10-11
இயேசுவின் போதனைகளை ஏற்காதோரிடம் சமாதானம்
இருக்காமல் திரும்பி வந்துவிடட்டும் என்றும் இயேசு சொல்லியுள்ளார்:
“அந்த வீடு பாத்திரமாயிருந்தால்,
நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத்
திரும்பக்கடவது.” மத்தேயு 10:13
இயேசுவின் வருகையின் நோக்கமே விசுவாசி
அவிசுவாசி என குடும்பத்தில் பிரிவினையை உண்டாக்கவே வந்தேன் என்கிறார்:
34“பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன்
என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.”
35 “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும்,
மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.” மத்தேயு 10:34-35
அத்தோடு பவுலும் மாற்றுமத சிலை வணங்கி
குடும்பத்தவனை துரத்திவிடும்படியும், அவனோடு பழக கூடாது என்றும் சொல்கிறார். அவனை விபச்சாரகனோடும்
கொள்ளைக்காரனோடும் தான் சேர்த்து பேசுகிறார்-1 கொரிந்தியர்
5:11,13
ஆனால் வல்லமை இருந்த போது மாற்றுமதத்தவர்களது
சிலைகளை உடைக்கவும் அவர்களை கொல்லவும் வழிகாட்டியது அதே தேவன் தான் (உபாகமம்
12:2-3, 13:12-16, 17:2-5)
இஸ்லாமும் சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானம்
பண்ணி வைக்குமாறு கூறுகிறது:
நிச்சயமாக விசுவாசிகள்
(ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!
ஆகவே, (சண்டையிட்டுக்
கொள்ளும்) உங்களுடைய
இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்,
நீங்கள் அருள் செய்யப்படுவதற்காக
அல்லாஹ்வுக்குப் பயந்தும் கொள்ளுங்கள். 49:10
இரு சகோதரர்களை சமாதானப்படுத்தி வைப்பதற்காக
பொய் சொல்வதும் தப்பு கிடையாது என்று சமாதானத்திற்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
(புகாரி 2692)
முஸ்லிம்களோடு சமாதானமாக இருக்கும் முஸ்லிமல்லாத
ஒப்பந்தப்பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டான் என
கண்டித்து அத்தகையோருக்கான சமாதானத்தை வழங்குகிறது (புகாரி 3166)
யுத்தத்தின்போது கூட எதிரியாக இருக்கும் இணைவைப்பாளன் அபயம் தேடினால்,
அவனுக்கு பாதுகாப்பை கொடுக்குமாறு குர்ஆன் 9:6 சொல்கிறது.
8.முஸ்லிம்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக
எடுக்க கூடாது என்று குர்ஆன் 5:51 ஐ
குறிப்பிட்டு, இயேசு சமாதானத்தை போதிக்க, அல்லாஹ்வோ
பிரிவினையை உண்டாக்குகிறான் என்று வாதிக்கிறார் போதகர்.
பதில்:
ஆனால் இயேசு வந்ததே சமாதானத்தை அனுப்ப
வராமல், குடும்பத்துக்குள் பிரிவினையை ஏற்படுத்த தான் என்று தெளிவாக
சொல்லப்பட்டுள்ளது.(மத்தேயு 10:34-36)
மாற்றுக்கொள்கையுடையவர்களை வீட்டுக்குள்
எடுக்கவோ வாழ்த்துச்சொல்லவோ கூட வேண்டாம் என்பதையும் 2 யோவான் 1:10-11 சொல்கிறது.
பவுலும் மாற்றுமத சிலைவணங்கியை
விபச்சாரகனோடும் கொள்ளைக்காரனோடும் சேர்த்து கூறி, அத்தகையவனோடு பழகவோ , சேர்ந்து
உண்ணவோ கூடாது என்றும் அவனை துரத்தி விட வேண்டும் என்கிறார் -1 கொரிந்தியர்
5:11,13
மாற்றுமத கும்பலிடம் இருந்து புறப்பட்டு
தனியாக வாழவும் பவுல் கூறுகிறார் -
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே
விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும்
சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள்
தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி,
நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப்
பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2
கொரிந்தியர் 6:14-17
பழைய ஏற்பாட்டிலோ மாற்றுக்கொள்கையுடையவனோடு
சம்பந்தம் கலக்காமல் இருக்கும் படியே சொல்கிறார்.
12நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு
உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.
13அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள்
சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். யாத்திராகமம் 34:12-13
இனி இஸ்லாம் பற்றி பார்ப்போம்:
முஸ்லிம்களோடு யுத்தம் செய்யாமல் அவர்களை
சொந்த வீடுகளிலிருந்து விரட்டாத மக்களோடு நீதமாக நடப்பதையோ நலவு செய்வதையோ இஸ்லாம்
தடுக்கவில்லை.
(விசுவாசிகளே!)
மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும்,
உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமல்
இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள்
நன்மை செய்வதையும், அவர்கள்பால்
நீங்கள் நீதமாக நடந்துகொள்வதையும்
அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை,
நிச்சயமாக அல்லாஹ் நீதி
செய்வோரை நேசிக்கிறான். 60:8
இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத
ஒப்பந்தப்பிரஜையை கொல்லுபவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி
3166) என மிக பாதுகாப்பு நிலையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம்
செய்துகொண்டிருந்த காலத்தில் இத்தகையோரை நண்பர்களாக எடுக்கும்போது இரகசியங்கள்
வெளியே பரவுவதற்கும், மார்க்க ரீதியான அவர்களின் வழிகேடுகள் இங்கே நுழைவதற்கும் வாய்ப்பாக அமையும். இவை
இரண்டுமே மார்க்கரீதியாகவும் உலக ரீதியாகவும் அச்சுறுத்தலாக அமையாதிருக்கும்படி
இறைவன் கட்டளையிட்டு உள்ளான். பார்க்க குர்ஆன் 3:118, 60:1
ஆனால் அவர்களுக்கு நலவு செய்வதையோ நீதி
செலுத்தாவதையோ தடுக்கவில்லை!! பாதுகாப்பையும்
வழங்குகிறது.
9.பைபிள் சுதேசிக்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்குமாறு
கூறி சமத்துவத்தை போதிப்பதாக போதகர் அறியாமையால் சொல்கிறார். அவர் குறிப்பிடும்
வசனம்:
14ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை
ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின்
முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை
இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.
15சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற
அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய
கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே
இருக்கவேண்டும்.
16உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே
பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார். எண்ணாகமம் 15:14-16
பதில்:
இவை அனைத்தும் பஸ்காவை ஆசரிப்பதற்கும், பலி
செலுத்துவதற்குமானது. அதாவது மத கடமைகளில் உங்களைப்
போலவே அவர்களும் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டளையே இது. சுதந்திரம் அல்ல!
அதுவும் இவர்களது மதத்துக்காரர்களை குறித்தானது.
அதாவது யூத மதத்தை பின்பற்றும் இஸ்ரவேலனும்
புறஜாதிக்காரனும் மதரீதியாக இஸ்ரவேலரை போல இருக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால், இந்த புற ஜாதிகள் விடயத்தில் சமத்துவம் கிடையாது.
*யூதனிடம் வட்டி வாங்க கூடாதாம். ஆனால் அந்நியனிடம் வாங்கலாமாம்':
19கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும்,
ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில்
வட்டிவாங்காயாக.
20அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்
வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
உபாகமம் 23:19-20
*அதேபோல் செத்த மிருகத்தை இவர்கள் சாப்பிட
கூடாதாம். ஆனால் அந்நியனுக்கு விற்கலாமாம்:
தானாய் இறந்து போனதொன்றையும்
புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப்
புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள்
தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின்
பாலிலே சமைக்கவேண்டாம். உபாகமம் 14:21
*இஸ்ரேலியனை சதாகாலமும் அடிமைப்படுத்த
கூடாது. ஆனால் அந்நியனை அப்படி செய்துகொள்ளலாம்:
45உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற
அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய
குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச்
சுதந்தரமாக்கலாம்.
46அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள்
சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்;
என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல்
புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது. லேவியராகமம் 25:45-46
*அந்நியனுக்கு ராஜாவாகும் உரிமையே கிடையாது?:
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே
உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல்
ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக
ஏற்படுத்தக்கூடாது. உபாகமம் 17:15
இப்படி சொந்த மதத்துக்காரனாக இருந்தும்கூட
இரண்டு இனமாக பிரித்து தான் பைபிள் பிரிவினையை ஏற்படுத்துகிறது.
மத விசயத்தில் கூட சமத்துவம் பைபிளில்
கிடையாது.
*அங்கவீணனும் உடலில்
குறைபாடுள்ளவனும் தேவனுக்கு அப்பம் ,பலி செலுத்தினால்
பரிசுத்தக்குலைச்சல் என்று மாற்றுத்திறனாளிகளையும் கேவலப்படுத்துகிறது
(லேவியராகமம் 21:16-23)
*அந்நியன் ஆலயத்தின்
பரிசுத்தமானதை புசிக்க கூடாது என தடை விதிக்கிறது (யாத்திராகமம் 29:33, லேவியராகமம்
22:10)
*கர்த்தருடைய சபைக்கு
காயடிக்கப்பட்டவன் ஆணுறுப்பு அறுபட்ட வன், வேசிப்பிள்ளையும் அவனது பத்தாம்
தலைமுறைவரையும், அம்மோனியன் மோவாபியர் எப்போதும் ,
எகிப்தியனும் ஏதோமியனும் மூன்றாம் தலைமுறை வரை கர்த்தரின் சபைக்கு வரவே
கூடாதாம்(உபாகமம் 23:1-8)
இதை அறியாமல் , மதச்சடங்குகளில் ஒரே பிரமாணம்
என்பதை ஏதோ சமத்துவம் போல் அறியாமை வாதம் வைத்துள்ளார் போதகர்.
ஆனால் இஸ்லாமோ, விசுவாசிகள் அனைவரும் சகோதரர்கள் என்கிறது -குர்ஆன் 49:10
அனைவரும் ஒரே தாய் தந்தையரின் பிள்ளைகள் என்றும் கோத்திரங்கள் கிளைகள் எல்லாம்
ஒருவரையொருவர் அறிமுகப் படுத்திக் கொள்வதற்காகவே என்றும் உங்களில்
கண்ணியத்திற்குரியவர் இறையச்சமுடையவரே என்கிறது -குர்ஆன் 49:13
(ஆனால் பைபிளோ இந்த சமத்துவத்தை போதிக்கவில்லை)
10.தன் சொந்த வேதம் பற்றியே அறியாத போதகர் குர்ஆன் 9:29 ஐ
மேற்கோள் காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை வரி செலுத்தும் இரண்டாம் குடிமக்களாக
நடத்துவதாக குறிப்பிடுகிறார்:
பதில்:
பைபிளும் இதே போல் வரியை சமாதானத்தை
விரும்பும் மக்களிடம் வாங்கி, அவர்களை வேலைக்காரர்களாக ஆக்குமாறு சொல்லியுள்ளது:
[10] “நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய
நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக. [11] அவர்கள்
உனக்குச் சமாதானமான உத்திரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள்
எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள்.
(உபாகமம் 20:10-11)
https://bible.com/bible/1899/deu.20.10-11.IRVTam
இனி குர்ஆன் 9:29ஐ பார்ப்போம்:
விசுவாசிகளே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொள்ளாமலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலக்கியவைகளை விலக்கிக் கொள்ளாமலும், இந்த உண்மை மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காமலும் இருக்கின்றனரே, அத்தகையோரை-இழிவடைந்தவர்களாக அவர்கள் தங்கள் (கையால் ஜிஸ்வா) வரியை கொடுக்கும்வரை நீங்கள் (அவர்களுடன்) யுத்தம் புரியுங்கள். 9:29
இந்த வசனத்தை முகம்மது நபி எப்படி நடைமுறைப்
படுத்தினார்?
இஸ்லாமிய அரசை விரிவுபடுத்திக்கொண்டு
போகும்போது, அங்கேயுள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பார்கள். அதை ஏற்க
மறுத்தால் ஜிஸ்யா வரி கட்டுமாறு கோருவார்கள். அதையும் ஏற்கமறுத்தால் யுத்தம்
செய்வார்கள். (புகாரி 3159, முஸ்லிம் 3566)
இந்த ஜிஸ்யா வரி மக்களின் சக்திக்கு மீறி
இருக்க கூடாது என்பதே இஸ்லாமிய வழிகாட்டல், அதுமட்டுமின்றி அவர்களுக்காக வேண்டி முஸ்லிம்கள் யுத்தம் செய்ய வேண்டும்:
உமர்(ரலி) அறிவித்தார்.
(எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு
நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின்
பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட
வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின்
சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது
சுமத்தக் கூடாது. ஸஹீஹ் புகாரி : 3052.
இத்தகைய மக்களின் மீது சக்திக்கு மீறி
சுமைகளை சுமத்துபவனுக்கும்,உரிமைகளில்
குறைவைப்பவனுக்கும் எதிராக நானே வாதாடுவேன் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்-
அபூதாவூத் 3052
முஸ்லிம்கள் ஒப்பந்தப்பிரஜைகளோடு
உடன்படிக்கையை மீறி நடந்தால், அந்த மக்களுக்கு இறைவன் துணிவை கொடுத்து வரி
செலுத்துவதை எடுத்துக்கொள்ள வைப்பான் என்பதும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது (புகாரி
3180)
வரி செலுத்தாதவர்களை வேதனை செய்வதையும்
இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-(முஸ்லிம் 5096-5097)
இப்படி வரி செலுத்தும் ஒப்பந்தப்பிரஜையை
கொல்பவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி 3166)
அரசுக்கு வரி செலுத்தும் வழமை காலம் காலமாக
இருந்து வந்த ஒன்று தான். அதை இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களிடம் அவர்களின்
சக்திக்கு உட்பட்டவாறு வசூலிக்கும். அவர்களுக்கான பாதுகாப்பை கொடுத்து அவர்களுக்காக யுத்தம் செய்யும்.
ஆனால் முஸ்லிம்களோ , இஸ்லாமிய அரசுக்கு ஸகாத்
கொடை செலுத்துவார்கள்.
இஸ்லாமிய அரசு ஏன் நாடுகளை தமக்கு கீழே
இணைப்பதற்காக யுத்தம் செய்தனர்?
1.நாடுகளை கைப்பற்றும்
பேரரசுகள் அப்போது இருந்தன. அவர்களுக்குள் இறைவனது மார்க்கத்தை கொண்டுபோய்
சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை.
இல்லையென்றால் அவர்களே இஸ்லாமிய அரசை
கைப்பற்றியிருக்கும்.
குறிப்பாக காஃபிர்கள் தங்களுக்கு சக்தி
இருந்தால், முஸ்லிம்களை காஃபிராகும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்
(குர்ஆன் 2:217) என அல்லாஹ்
அறிந்துள்ளதால், இதை தவிர வேறு வழி இல்லை.
(கிறிஸ்தவத்திற்கு இந்த
பிரச்சினை இல்லை. காரணம் அது இஸ்ரவேலர்களுக்கானது. (மத்தேயு 15:24, 10:5-6).
யூதர்கள் மறுத்தபோது புறஜாதிகளிடம் சென்றனர். அத்தோடு அவர்கள்
பலவீனமானோராக அதிகாரமற்று இருந்தனர்.. )
2.இஸ்லாத்தை
எத்திவைக்கும்போது அதிகாரமுள்ளவன் பிடிவாதத்தால், அதை எதிர்த்து அழிக்க
முன்வருவான். இதையே மக்காவில் முஸ்லிம்களுக்கு செய்தனர். இதற்காகவே இஸ்லாம் போரை
அனுமதித்தது. இவ்வாறு செய்யாவிடில் பூமியில் பள்ளிவாசல்களும் யூதமடாலயங்கும்
கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்பட்டுப்போயிருக்கும் என்கிறது குர்ஆன் (22:39-40).
ஆனாலும் , .இஸ்லாத்தை ஏற்பதில் இந்த வரி
செலுத்துவோர் நிர்ப்பந்திக்கப்படுவதில்லை.. (2:256). அதற்கு பதிலாக அவர்கள் இஸ்லாத்தை
ஏற்க விரும்பாத போது அவர்களது சக்திக்கேற்ப வரி செலுத்துவர். அவர்களுக்காக
இஸ்லாமிய அரசு போராடும். பாதுகாப்பு வழங்கும்.
ஆகவே போதகர் காழ்ப்புணர்வினாலும்
அறிவின்மையாலுமே இப்படி பேசுகிறார். அவரது வேதமும் நாடு பிடித்து அவர்களிடம் வரி
வாங்கி வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ளும்படி அதிகாரம் இருந்த காலகட்டத்தில்
சட்டமாக கொடுத்திருக்கிறது.
பலவீனமான நிலையில் உள்ள இவர்களுக்கோ வரியை
செலுத்துமாறு வழிகாட்டப்படுகிறது. (மத்தேயு 17:27)
அதாவது பழைய ஏற்பாடு வரி வசூலிக்கவும், புதிய
ஏற்பாடு வரி செலுத்தவும் சொல்கிறது. இரண்டையும் இணைத்து இஸ்லாம் கூறுகிறது.
-----
11.மீண்டும் போதகர் தன் அறியாமையால், பைபிள் யாரும் வழிகாட்டாத
விதமாக திடீரென்று தாக்காமல் சமாதானம் கூற சொல்வதாக உபாகமம் 20:10-12ஐ
குறிப்பிடுகிறார்.
பதில்:
இது இவர்கள் கூறும் சமாதானம் என்ன? வரி
செலுத்தி சேவகம் செய்ய வேண்டும் என்பது தான். அதையே உபாகமம் 20:11 சொல்கிறது.
அவர்கள் ஏற்க மறுத்தால் ஆண்களை கொன்று கொள்ளையடிக்குமாறு கூறுகிறது.
[10] “நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய
நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக.
[11] அவர்கள் உனக்குச் சமாதானமான உத்திரவு
கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி
கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள். [12] அவர்கள் உன்னுடன்
சமாதானமாகாமல், உன்னுடன் போர் செய்வார்களானால், நீ அதை முற்றுகையிட்டு, [13] உன் தேவனாகிய
யெகோவா அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள ஆண்கள் எல்லோரையும்
பட்டயத்தால் வெட்டி, [14] பெண்களையும், குழந்தைகளையும் மிருகஜீவன்களையும்
மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன்
தேவனாகிய யெகோவா உனக்கு ஒப்புக்கொடுத்த உன் எதிரிகளின் கொள்ளைப்பொருளை
அனுபவிப்பாயாக.
உபாகமம் 20:11-14 IRVTam
https://bible.com/bible/1899/deu.20.10-14.IRVTam
ஆனால் வேறு சில மாற்றுமத ஊர்களையோ ஈவிரக்கமின்றி
உயிரோடு எதையும் வைக்காமல் அழிக்க இதே கர்த்தர் தான் சொல்லியுள்ளார்:
[16]
உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள்,
கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின்
பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும்
உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே
அழிக்கக்கடவாய். (உபாகமம் 20:16-17)
https://bible.com/bible/1899/deu.20.16-17.IRVTam
ஆனால், 400
வருடங்கள் முன்பு எதிர்த்த ஒரே காரணத்திற்காக, அவர்களின் நான்காவது தலைமுறையை குழந்தைகளோடு சேர்த்து ஈவிரக்கமின்றி கொல்ல
கட்டளையிட்டவரும் அதே பைபிளின் கர்த்தர் தான்.
[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.
(1 சாமுவேல் 15:2-3)
https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam
இதையெல்லாம் அப்படியே மூடிமறைத்து விட்டு வசனத்தையும்
ஒழுங்காக வாசிக்காமல் வாதம் வைத்துள்ளார் போதகர்..
அடுத்ததாக குழந்தைகளை பெண்களை
ஈவிரக்கமின்றி கர்த்தர் கொல்லுமாறு சொன்னவை திடீர் தாக்குதலே.... அந்த குழந்தைகள்
என்ன செய்யும்.?
குறிப்பு: கடவுள்
சொல்லி யுத்தம் செய்தல் என்றாலே அது மதத்திற்கான யுத்தம் தான். போதகர்கள் முட்டுக் கொடுத்தாலும் இதுவே
உண்மை.
அத்தோடு மாற்றுமதத்தவன் என்பதற்காகவே கொல்லுமாறு சொன்னார் (உபாகமம் 20:18, 13:6-10, ,13:12-16)
(கிறிஸ்தவ தரப்பின் முதல் அமர்வு முடிவு
00:35:00)
2.முஸ்லிம் தரப்பு முதல் அமர்வு
இஸ்லாம் மனிதனுக்கு தேவையான அனைத்து பகுதிகளுக்கும்
வழிகாட்டுவதாக கூற,
1.இறைவனுக்கு இணை வைக்காமல் இருப்பதற்கு
அடுத்தபடியாக, பெற்றோருக்கு உபகாரம் செய்வதையும் அவர்களுக்கு உபகாரம் செய்வதையும் அவர்களோடு
எப்படி பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகிறது (17:23)
2.வியாபாரத் துறையில் கூட மோசடி செய்யாமல்
பொய் சத்தியம் செய்யாமல் ஏமாற்றாமல் நடப்பதற்கு வழிகாட்டுகிறது (குர்ஆன் 83:1, புகாரி
7446)
3.பொருளாதார ரீதியில் முஸ்லிம்களில்
வசதிபடைத்தோரிடமிருந்து ஸகாத் வசூலித்து ஏழைகளுக்கு வழங்குவதை ஒரு கடமையாக
கூறுகிறது (9:60)
4.சமூக பொருளாதார அநீதியாகவுள்ள இந்த வட்டியை இஸ்லாம் தடைசெய்கிறது (2:275-279
(ஆனால் பைபிளிலோ இஸ்ரவேலனிடம்
வட்டி வாங்காமல் அந்நியனிடம் வாங்கலாம் என்ற அநீதியான போதனை கூறப்பட்டுள்ளது-
உபாகமம் 23:19-20)
பெண்களுக்கு சொத்துரிமையை கொடுப்பதாக இஸ்லாமே
உள்ளது (4:7) (ஆனால் பைபிளில் சொந்த
மகளையே சொத்தாக அடிமையாக விற்பதற்கு வழிகாட்டுகிறது -யாத்திராகமம் 21:7-10)
5.இஸ்லாத்தில் பெண்களுக்கு திருமணம்
செய்யும்போது பெண்களின் சம்மதம் கட்டாயமானதாக இஸ்லாம் வழங்குகிறது (புகாரி 5136. குர்ஆன்
4:19)
(ஆனால் பைபிள் தகப்பனுக்கு தன்
மகளை அடிமையாக விற்றுப் போடுவதற்கு அனுமதி வழங்குகிறது-யாத்திராகமம் 21:7-10
அவளை கற்பழித்தவனுக்கே அவளை கட்டி வைக்க வேண்டும்
என்று வழிகாட்டுகிறது -உபாகமம் 22:28-29
கன்னியான பெண்ணோடு ஒருவன் விபச்சாரம் செய்தால், அப்போது கூட அதற்கான மஹர் கூலியை
தகப்பனுக்கு கொடுக்கவும், தகப்பனுக்கு இஷ்டம் இருந்தால் மட்டுமே திருமணம் முடித்து
கொடுக்கவும் சொல்கிறது - யாத்திராகமம் 22:16-17)
6.ஒரு பெண்ணின் மீது அவதூறு கூறினால்
அத்தகையவனுக்கு என்பது கசையடி வழங்குவதோடு, கணவன் தன் மனைவி மீது விபச்சாரம்
குற்றச்சாட்டு வைத்தால், அதற்கெதிராக சாட்சி சொல்லும் உரிமையையும் பெண்ணுக்கு
வழங்குகிறது. (குர்ஆன் 24:4,6-9)
(ஆனால் பைபிளோ முதலிரவில்
மனைவியிடம் கன்னித்தன்மை இருக்கவில்லை என்று கணவன் குற்றச்சாட்டு வைத்தால் கூட,
அதற்கு எதிராக பேச அவளால் முடியாது. அவளது பெற்றோர் அவளது கன்னித்தன்மைக்கு
ஆதாரமாக முதலிரவில் வரும் இரத்தம் படிந்த துணியை காட்ட வேண்டும் என்றும் அதற்கு
ஆதாரம் இல்லாதபோது அவளை கொல்லவேண்டும் என்றும் அறியாமை போதனையை கூறுகிறது -உபாகமம்
22:13-21
இது எவ்வளவு மடத்தனமான போதனை? சில
பெண்களுக்கு உடலுறவில் இரத்தம் வருவதில்லை. இன்று கூட இதை வாசிக்கும் ஒருவன் தன்
மனைவியிடம் முதலிரவில் ரத்தம் வரவில்லை என்பதற்காக அவளை விபச்சாரம் செய்திருப்பதாக
சந்தேகிப்பதற்கு தூண்டுகிறது.
மேலும் ஒரு கணவன் தன் மனைவி மீது
சந்தேகப்பட்டால், அப்போதுகூட அவளுக்கு
பேச்சுரிமை பைபிளில் கிடையாது. மண் கலந்த கசப்பு நீரை குடித்து ஆசாரியன் கூறும்
சாபங்களுக்கு ஆமென் மட்டுமே கூற முடியும் -(எண்ணாகமம் 5:14-25)
புதிய ஏற்பாட்டில் எந்த சட்டமும் இது குறித்து
இல்லை)
7.இஸ்லாம் பெண்ணுக்கு கல்வி கற்கும் உரிமையை
கற்பிக்கும் உரிமையை வழங்கியுள்ளது . அன்னை ஆயிஷா அவர்களிடம் மக்கள் மார்க்க
விசயங்களில் அநேகமானவற்றை கற்றுக்கொண்டனர்.
(ஆனால் பைபிளோ, பெண் சபையில்
பேசுவது அயோக்கியம் என்றும் அவர்கள் கற்பிக்க அனுமதி கிடையாது என்கிறது- 1
கொரிந்தியர் 14:34-35, 1 தீமோத்தேயு 2:11-12)
இஸ்லாம் மனித ஒழுக்கத்திற்காக திருமணம் செய்ய
வழிகாட்டுகிறது. விருப்பம் இல்லாதபோது
விவாகரத்து செய்துகொள்ளவும் அனுமதிக்கிறது. (ஆனால் புதிய ஏற்பாடு
துறவறத்தையே ஊக்குவிக்கிறது . விவாகரத்து செய்வதை முற்றாக தடுக்கிறது. மத்தேயு 19:9-12, 1 கொரிந்தியர் 7:1,8.)
முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு (00:50:00)
3.கிறிஸ்தவ தரப்பு இரண்டாம் அமர்வு
13.அடுத்த போதகர் குர்ஆன் 9:23ஐ மேற்கோள் காட்டி ,
குடும்பத்தவர்களை பகைக்குமாறு குர்ஆன் சொல்வதாக உருட்டுகிறார்.
பதில்:
விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய
தந்தையர்களையும் உங்களுடைய சகோதரர்களையும்
விசுவாசத்தைவிட நிராகரிப்பை அவர்கள்
நேசித்தால்- நீங்கள்
அவர்களை (உங்கள்)
பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ள
வேண்டாம், உங்களில்
எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக
எடுத்துக் கொண்டால், அவர்கள்
தாம் அநியாயக்காரர்கள். 9:23
இஸ்லாத்திற்கு எதிராக சொந்த உறவினர்கள்
எதிர்த்து நடக்கும்போது அவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள கூடாது என்றே
கூறுகிறது.
ஆனால் முஸ்லிம்களை எதிர்த்து போர் செய்யாத
நபர்களுக்கு நலவு செய்வதையோ நீதியாக நடப்பதையோ குர்ஆன் தடுக்கவில்லை!
(விசுவாசிகளே!)
மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும்,
உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமல்
இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள்
நன்மை செய்வதையும், அவர்கள்பால்
நீங்கள் நீதமாக நடந்துகொள்வதையும்
அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை,
நிச்சயமாக அல்லாஹ் நீதி
செய்வோரை நேசிக்கிறான். 60:8
குடும்பத்தவர் இணைவைப்பாளராக இருந்தாலும்
அவர்கள் எதிர்த்து போரிடாதோராக இருந்தால், சேர்ந்து நடக்குமாறே நபிகளார்
வழிகாட்டியுள்ளார்கள் (புகாரி 5978,5979)
உறவுகளை சேர்ந்து வாழ்வதை முக்கிய போதனையாக
இஸ்லாம் கூறுகிறது (புகாரி 5980)
முஸ்லிமல்லாத உறவினரை சேர்ந்து வாழ்வதை
இஸ்லாம் தடுக்கவில்லை. அதை உமர் (ர) அவர்கள்
செய்திருக்கிறார்கள். நபிகளார் அதை தடுக்கவில்லை (புகாரி 5981)
குர்ஆன் 9:23 கூறுவது போல , நபிகளார் சிலரை
கூறிவிட்டு, ஆனாலும் அவர்களுடைய உறவை பசுமையாக்குவேன்.
உறவை பேணி நடந்து கொள்வேன் என்பதை சொல்லியுள்ளார்கள் (புகாரி 5990)
ஆகவே இவர் சொல்லுவது போல பகைக்க வேண்டும்
என்று கூறப்படவில்லை. சேர்ந்து நடப்பதற்கு
நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
ஆனால் இயேசு அவர்களோ, தெளிவாகவே பிரிவினையை உண்டாக்கவே
வந்தேன் என கூறி, குடும்பத்தவர்கள் தான் உண்மையான எதிரிகள் என்று சொன்னதாக மத்தேயு
10:34-36 கூறுகிறது:
[34] பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று
எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். [35]
எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும்
மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். [36] ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன்
குடும்பத்தாரே.
https://bible.com/bible/1899/mat.10.34-36.IRVTam
குறிப்பாக குடும்பத்தவர் அனைவரையும் விட
இயேசுவை நேசிக்க வேண்டும் என்பதையே இயேசு சொல்கிறார்:
மத்தேயு 10:37 IRVTam
[37] தகப்பனையாவது தாயையாவது என்னைவிட
அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட
அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
https://bible.com/bible/1899/mat.10.37.IRVTam
அத்தோடு தம் கொள்கையை ஏற்காத நபர்களை
வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்துப் சொல்லவோ வேண்டாம் என 2 யோவான் 1:10-11 சொல்கிறது.
மாற்றுமத குடும்ப சிலைவணங்கியை
விபச்சாரகனோடும் கொள்ளைக்காரனோடும் சேர்த்து அவனோடு பழகவோ கூட்டாக சேர்ந்து உண்ணவோ
கூடாது என்றும் அவனை துரத்தி விட பவுல் கூறுகிறார் -1 கொரிந்தியர் 5:11,13
பழைய ஏற்பாட்டிலோ, குடும்பத்தவர்
வேறு கடவுளை வணங்குவதற்கு சொன்னால் அப்போது முதலாவது கொல்லவேண்டியது குடும்பத்தவர்
தான் என தேவன் சொல்கிறார்:
உபாகமம் 13:6-9 IRVTam
[6] “உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய
சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன்
உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே
தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, [7] உன்னைச் சுற்றிலும் உனக்குச்
சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை துவங்கி
மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களில், நீயும் உன்
முற்பிதாக்களும் அறியாத அந்நிய தெய்வங்களை வணங்கும்படி இரகசியமாக உன்னைத்
தூண்டிவிட்டால், [8] நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன்
கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,
[9] அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும்
பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருப்பதாக.
https://bible.com/bible/1899/deu.13.6-9.IRVTam
ஆக மத விசயத்தில் பழைய ஏற்பாடு கொல்லும்படி
சொல்லும்போது, புதிய ஏற்பாடு பிரிவினை உண்டாக்குவதாகவும் உள்ளது. இதை
வைத்துக்கொண்டு இப்படி வாதம் வைக்கலாமா?
(00:51:10)
14.அடுத்த போதகர் தொடங்கும்போது, தம் தரப்பு வைத்த
வாதங்களுக்கு எந்த மறுப்பும் வைக்க முஸ்லிம் தரப்பு முயற்சிக்கவில்லை என்கிறார்.
ஆனால் இவர்கள் இஸ்லாமின் மீது அப்போது வைத்த
ஒரே குற்றச்சாட்டு 9:29 ஜிஸ்யா வரி பற்றியது தான். அதற்கு முஸ்லிம் தரப்பு பதில்
கொடுத்து, பைபிளிலும் இதுபோன்று கப்பம் கேட்கும் நடைமுறை உள்ளதே என்பதை
சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
அடுத்ததாக இவர்கள் வைத்ததெல்லாம், தப்பு
தப்பான மேற்கோள்கள் மட்டுமே. (மேலே சுட்டிக்காட்டியுள்ளேன்) (00:51:30)
15.அதே போதகர் , மதத்திற்காக போர் செய்வதாக குற்றச்சாட்டு
வைக்கும்போது பெற்றோரிடம் அனுமதி கேட்டு தான் ஜிகாதுக்கு செல்ல வேண்டும் என்பதை
பதிலாக சொன்னதாக பொய் கூறுகிறார்.
உண்மையில் பெற்றோரை சேர்ந்து நடப்பதை பற்றி
கூறும்போது தான் முஸ்லிம் தரப்பு ஜிகாதிற்கு செல்வதற்கும் பெற்றோரின் அனுமதி
குறித்து அவ்வாறு சொன்னார்கள்.
ஜிஸ்யா கொடுக்கும்வரை யுத்தம் செய்யுங்கள்
என்பதிலேயே மதத்தை திணிப்பது அல்ல என்று தெளிவாக புரிகிறது..
அந்த ஜிஸ்யாவும் மக்களின்
சக்திக்குற்பட்டதாகவும், வரிசெலுத்துவோரை இஸ்லாமிய
அரசு அம்மக்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக போரிடவும் வேண்டும் (புகாரி 3052,3700)
வரி செலுத்தாதவர்களை தண்டிப்பதையும் வேதனை
செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்திருக்கிறது (முஸ்லிம் 5096-5097)
இவ்வாறு சமாதானமானால் ,வரி செலுத்தி
சேவகர்களாக ஏற்படுத்திக்கொள்ளுமாறு தேவன் சொன்னதாக பைபிள் தான் முதலில் சொல்கிறது
(உபாகமம் 20:10-12) . இதை தான் கூறி முடிக்காமல் முதலாவது பேசிய போதகர் முதல்
அமர்வில் நிறுத்தினார். (00:51:50)
16.மீண்டும் அதே போதகர், மதத்திற்காக ஜிஸ்யா வரி கேட்பதை பற்றி
கேட்டால், வட்டி வாங்க கூடாது என்று இஸ்லாம் போதிப்பதை பதிலாக சொன்னதாக சொல்கிறார்.
ஆனால் பொருளாதாரத்திற்கு இஸ்லாம் காட்டும்
நல்வழியாக தான் வட்டியை தடைசெய்ததை முஸ்லிம் தரப்பு சொன்னது. ஜிஸ்யா குறித்தோ
பைபிளிலேயே உள்ளதே என்பதை பதிலாக வழங்கியிருந்தனர்.
இவ்வளவு மந்த புத்திகளே இவர்கள். (00:52:15)
இந்த லட்சனத்தில் அடுத்த அமர்வில் சொல்வதை உள்வாங்கி
பேசுமாறு இவரே சொல்வது வேடிக்கை (00:52:25)
மீண்டும் அதே போதகர் இஸ்லாம் மனிதர்களுக்கு
நல்வழிகாட்டுவதற்கும் இறைவனை அஞ்சி நடப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். ஞானத்தின் ஆரம்பமே
இறைவனை அஞ்சுவது தான் என்று பைபிள் தான் சொல்கிறது (சங்கீதம் 111:10).
முதலில் இறைவனுக்கு அஞ்சுபவன் தான் பிறகு
இறைவன் ஏவியதையும் தடுத்ததையும் எடுத்து நடப்பான் என்ற அறிவு கூட இவர்களுக்கு
இல்லை! (00:52:44)
17.இதே மடமையான போதகர், இஸ்லாம் விதவைகளுக்கு வாழ்வளிக்க
வழிகாட்டுது என்றால், ஏன் முகம்மது நபியின் மனைவியருக்கு வாழ்வளிக்க யாருக்கும்
கூறவில்லை என்பதை கேட்கிறார்.
இதற்கு பதில் இலகுவானது. அவர்கள்
முஸ்லிம்களின் அன்னையர்.(33:6), மேலும் அவர்களை
அவருக்கு பின் திருமணம் முடிப்பதை முஸ்லிம்களுக்கு தடையாக ஆக்கியுள்ளது குர்ஆன்
(33:53)
இஸ்லாம் சமூகத்திற்கு திருமணத்தை
வழிகாட்டுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ துறவறமே
சிறந்தது என்று பேசுகிறது. இது தோராவுக்கு மாற்றமானதும் கூட. ஏனெனில் கடவுள்
மனிதனை ஆண்பெண்ணாக படைத்ததன் நோக்கமே பூமியில் ஜனத்தை பெருக்கி சகலத்தையும் ஆண்டு கொள்வதற்காக
என்கிறது தோரா- ஆதியாகமம் 1:26-28
(00:53:30)
18.அதேபோதகர் முகம்மது நபி ,தான் யாருக்கும் தகப்பனாக இருக்க விரும்பவில்லை என்று சொல்வதாக
உருட்டுகிறார்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை. மாறாக ஆண்களில் யாருக்கும் தகப்பனாக இல்லை
என்றே (குர்ஆன் 33:40) கூறுகிறது. காரணம்
வளர்ந்த ஆண்பிள்ளைகள் எவரும் அவருக்கு உயிரோடு இருக்கவில்லை. அனைவரும் சிறுவயதிலேயே மரணித்து விட்டனர்.
இவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே முடியும். தங்கள் மதத்திலுள்ள நல்லவை என்று
உருப்படியாக எதையும் எடுத்துக்காட்ட முடியாது. அப்படி
செய்தாலும் பழைய ஏற்பாட்டில் இருந்தே காட்ட வேண்டி வரும். (00:54:30)
19.மீண்டும் முதலாம் போதகர் உருட்ட ஆரம்பிக்கிறார். இஸ்லாம்
தொழுகையை ஏன் தொழச்சொல்கிறது தெரியுமா என கூறி, முஸ்லிம் 5335 ஐ குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதர் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்துகொண்டுவிட்டு (உடலுறவு நடக்கவில்லை என தெளிவாக ஹதீஸ் கூறுகிறது), மன்னிப்பை
எதிர்பார்த்து குற்ற உணர்ச்சியோடு வந்துள்ளார். அவருக்கு மன்னிப்பாக பகலின் இரு
ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக. நன்மைகள் தீமைகளை
போக்கிவிடும் என்ற 11:114 வசனத்தை ஓதி காட்டியதாக வருகிறது.
இதை வைத்து கொச்சையாக பேசுகிறார்.
அவர் தவறு என்று உணர்ந்து வந்திருக்கிறார்.
அதற்குரிய தண்டனையாக எதுவும் இல்லை என்பதாலும் தீமைகளை அழிக்கும் காரியமாக தொழுகை
கூறப்படுகிறது.
அந்த நபர் தனக்கான பரிகாரத்தை கேட்டே
வந்தார். அந்த பரிகாரமாக தொழுகையை நிலைநாட்டுவதை கூறினார்கள்.
இவர் கூறுவது போல இப்படி நட்ந்துவிட்டு
தொழுது கொள்ள வழிகாட்டுகிறது அல்ல!
ஏற்கனவே குர்ஆன் விபச்சாரத்தை நெருங்கவும்
வேண்டாம் என்றும் (குர்ஆன் 17:32), பார்வைகளை ஆண்களும் பெண்களும் தாழ்த்திக்கொள்ள
வேண்டும் என்றும் (24:30-31), அந்நிய பெண்ணுடன் அப்பெண்ணின் மஹ்ரமான ஆண் துணை
இல்லாமல் தனித்திருக்கவும் வேண்டாம் என்பதையெல்லாம் நபிகளார் சொல்லியுள்ளார்கள்
(புகாரி 3006)
இவர் கூறுவது போல பேசுவதானால்,
யாத்திராகமம் 22:16-17 IRVTam
[16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு
கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப்
பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை
அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும்
பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam
இந்த வசனத்தை வைத்து விபச்சாரம் செய்துவிட்டு
பரிசம் கொடுக்க பைபிள் வழிகாட்டுகிறது என்று சொல்லலாமா?
வேசியிடம் உடலுறவின் பின் காசு கொடுப்பது
போல் இங்கேயும் தகப்பனுக்கு காசு கொடுக்க வேண்டும் என எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று சொன்னால் போதகர் ஏற்பாரா?
எல்லாம் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. (00:58:30)
20.மீண்டும் இஸ்லாம் அமைதிக்கு என்ன வழியை காட்டுகிறது
என்பதற்கு பதிலாக வியாபரம் பற்றி பேசுவதாக போதகர் உலரிவிட்டு, குர்ஆன் 9:111 இல்
அல்லாஹ் விசுவாசிகளின் உடமைகளையும் உயிர்களையும் சுவர்க்கத்திற்கு பதிலாக
வாங்கிக்கொண்டான் என்ற வசனத்தை காட்டி இது தான் அந்த வியாபாரம் என்கிறார் .
இதில் என்ன தவறு இருக்கிறது? இறைவனுக்காக சகலத்தையும் இழப்பதில் கெடுதி
இல்லையே.
இயேசுவும் தனக்காக வேண்டி குடும்பத்தை
சொத்துக்களை இழந்தவருக்கு நூறு மடங்கு கிடைக்கும் என்பதாக சொல்லியுள்ளார் அல்லவா?
மத்தேயு 19:29 IRVTam
[29] என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது,
சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது,
பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று,
நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
https://bible.com/bible/1899/mat.19.29.IRVTam
பைபிள் காட்டும் வியாபாரம் என்ன? எதுவுமே
புதிய ஏற்பாட்டில் இல்லை.... துறவறமே ஊக்குவிக்கப்படுகிறது.
பழைய ஏற்பாடோ, அந்நியனிடம் செத்ததை விற்கலாம்
என்றும் அந்நியனிடம் வட்டி வாங்கலாம் என்றும் எவ்வளவு நேர்மையாக போதிக்கிறது
அல்லவா? அதனால் தானோ இந்த விமர்சனம் (உபாகமம் 14:21, 23:19-20)
(1:00:25)
21.மீண்டும் முதலாவது பேசிய சுதாகர் அவர்கள், முஸ்லிம் தரப்பு
வரி கட்டும் நடைமுறை பைபிளில் கூறப்பட்டுள்ளதாக கூறியதற்கு பதில் சொல்ல
முற்படுகிறார்.
இஸ்லாம் மதத்திற்காக வரி கேட்கிறது. அதனால் அது தவறு. ஆனால்
பைபிளோ மதம் அல்லாததற்காக வரி கேட்கிறது . ஆகவே இரண்டும் வேறு வேறு என முட்டு
கொடுக்கிறார்.
பைபிள் சொந்த இனம் பிற இனத்திடம் வரி கேட்க
சொல்கிறது. ஆனால் வேறு கடவுளை வண்ங்குவதற்கு அனுமதி உண்டா?
அவர்களது ஊர்களில் அவ்வாறு சிலை வணக்கம்
நடந்தால், அவர்களை முற்றாக அழித்துப் போடவே பைபிள் சொல்கிறது. இதை போதகர் மறந்துவிட்டார் போலும்.
உபாகமம் 13:12-16 IRVTam
[12] “உன் தேவனாகிய யெகோவா நீ
குடியிருப்பதற்குக் கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் வீணர்களாகிய துன்மார்க்கர்கள்
உன்னிடத்திலிருந்து புறப்பட்டு, [13] நீங்கள் அறியாத வேறே தெய்வங்களை
வணங்குவதற்குப் போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிமக்களைத்
தூண்டினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, [14] நீ நன்றாக விசாரித்து,
ஆராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது உண்மையும்
நிச்சயமும் என்று கண்டால், [15] அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப் பட்டயக்கருக்கினால்
வெட்டி, அதையும் அதிலுள்ள அனைத்தையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால்
அழித்து, [16] அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன்
தேவனாகிய யெகோவாவுக்கென்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட
அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல்
என்றென்றைக்கும் மண்மேடாயிருக்கக்கடவது.
https://bible.com/bible/1899/deu.13.12-16.IRVTam
...
ஊரையே கொழுத்திப் போட தேவன் வழிகாட்டியுள்ளார்.
அடுத்ததாக, வரி கட்டி சேவகம் செய்பவர்களாக
அடுத்த மக்களை ஒடுக்குவது போதகருக்கு ஓகே. ஆனால் இஸ்லாம் ஜிஸ்யா வாங்கும்படி
சொன்னால் வலிக்கிறது.
இஸ்லாம் ஜிஸ்யா வாங்கிவிட்டு அவர்களுக்கு
பாதுகாப்பை வழங்கி, அவர்களுக்காக வேண்டி இஸ்லாமிய அரசு போர் செய்யும். (புகாரி 3052)
இப்படி தனது அதிகாரத்துக்கு உட்பட்ட முஸ்லிம்
அல்லாதவரிடம் இஸ்லாமிய அரசு வரி வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது?
ஆனால் தமக்கு கீழே இருப்போரிடம் பைபிள் வரி
கேட்கும்படி சொல்வதையோ இலேசாக சமாளித்து முட்டுக் கொடுக்க பார்க்கிறார்.
கடவுள் வரி வாங்க சொன்னார் என்றாலே மத வரி
தான். அதை தான் உபாகமம் 20:10-12 கூறுகிறது. அவர்கள் வரிசெலுத்துவதோடு அடிமைத்தன ஊழியமும் செய்ய வேண்டும் என்கிறார்
கர்த்தர்.
இஸ்லாம் வரி வாங்கி பாதுகாப்பு கொடுப்பதோடு,
பைபிளோ வரிவாங்கி அடிமைப்படுத்துகிறது. புகாரி 3052 பதியும் போது வரி செலுத்துவோரை அடிமை போல நடத்தக்கூடாது என
தலைப்பே போடப்பட்டுள்ளது.
அதாவது (باب يُقَاتَلُ عَنْ أَهْلِ الذِّمَّةِ، وَلاَ يُسْتَرَقُّونَ) - அஹ்லுஃதிம்மா
விசயத்தில் போரிடுதலும், அவர்களை அடிமையாக நடத்தாதிருப்பதும் பற்றிய பாடம் என
தலைப்பே போடப்பட்டுள்ளது.
(1:03:30)
அடுத்ததாக திடீர் தாக்குதல் செய்யாமல் முதலில் சமாதானத்தின்
பால் அழைக்க வேண்டும் என்று பைபிள் சொல்வதாக போதகர் சொல்கிறார்.
ஜிஸ்யா கட்டாமல் போய் யுத்தத்திற்கு வந்தால்
தான் இஸ்லாமும் போர் செய்வதற்கு முகம்மது நபி வழி காட்டியிருக்கிறார்.(புகாரி 3159)
ஆனாலும் பைபிளில் கர்த்தர் 400 வருடம்
முந்தைய பகைமைக்காக ஈவிரக்கமின்றி குழந்தைகளையும் கொல்லுமாறு சொன்னார். அங்கே போய் சமாதானம் கூறுமாறு கூறவில்லை!
1 சாமு 15:2-3 IRVTam
[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது
என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது,
அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
[3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று,
அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல்,
ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும்,
கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.
https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam
ஆகவே போதகர் தம் மதத்திலும் அறிவின்றி காழ்ப்புணர்வினால் உலறுகிறார்.
22.முகம்மது நபி தூங்கிக்கொண்டிருப்போரை தாக்கினார். வியாபாரக்
குழுக்களை தாக்கினார் என்றெல்லாம் உருட்டுகிறார்.
தம் சொத்துக்களை அபகரித்து ஊரைவிட்டு
துரத்திய மக்களின் வியாபாரக் கூட்டத்தை மறித்து கொள்ளை அடிப்பது மற்ற கொள்ளைகளை
போல வராது.
ஆனால் பைபிளும் இவ்வாறு எகிப்தியரை
கொள்ளையிடுவதை ஆதரித்ததே.
யாத்திராகமம் 3:21-22 IRVTam
[21] அப்பொழுது இந்த மக்களுக்கு
எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப்
போவதில்லை. [22] ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில்
தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு
வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக்
கொள்ளையிடுவீர்கள்” என்றார்.
https://bible.com/bible/1899/exo.3.21-22.IRVTam
பைபிள் குழந்தைகளையும் சேர்த்து கொல்லுமாறு
சொன்னபோது குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருக்குமல்லவா? (உபாகமம் 20:16-17, 1 சாமுவேல் 15:2-3)
ஆனால்
இஸ்லாமோ பெண்கள்
குழந்தைகள் (புகாரி 3014,3015), போரிடாத கூலிக்காரர் (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த
உறுதியற்றவர் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), போரிடாத துறவிகள்
(முஸ்னத் அஹ்மத் 2728) போன்றோரை போரிலும் கொல்லக்கூடாது என்றே இஸ்லாம் சொல்கிறது.
அதை தவிர்த்து மற்றவர்கள் போரிடக்கூடியவர்களே. அவர்களோடு தான் யுத்தமே.
ஆகவே போதகர் தம் வேதம் பற்றிய அறிவின்மையால்
அபாண்டமாக இஸ்லாத்தை குற்றப்படுத்த பார்க்கிறார். (1:04:25)
23.மீண்டும் அதே போதகர் முஸ்லிம் 3591 , இரவில் திடீர் தாக்குதல் நடத்தும்போது எதிரிகளின்
குழந்தைகளும் பாதிக்கப்படுவார்களே என கேட்கப்பட்ட போது, அவர்களும் அவர்களது
தந்தையை சார்ந்தவர்களே என நபியவர்கள் கூறியதை வைத்து, அனைத்துமே திடீர் தாக்குதல்
என்று உலருகிறார்.
ஆனால் இரவில் சிலபோது தாக்குதல் நடத்த வேண்டி
ஏற்படும்போது அவ்வாறு பாதிக்கப்படுவதில் குற்றமில்லை. ஆனால் மற்றபடி யுத்ததில் பெண்களையும்
குழந்தைகளையும் கொல்லுவதை நபிகளார் தடை செய்துள்ளார்கள். அவை இவர்குறிப்பிடும்
ஹதீஸ்களுக்கு முந்திய ஹதீஸ்களாக 3587-3588 (மேலும் புகாரி
3014,3015)ஆக இடம்பெறுகின்றன..
அத்தோடு பெண்களும் குழந்தைகளும்
பாதிக்கப்படுவார்களே எனக்கேட்ட ஹதீஸ் தெளிவாக திர்மிதீ 1570 இல் உள்ளது. அதிலே குதிரைக்கு
மிதிபட்டு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தே கூறப்பட்டுள்ளது. திட்டம் போட்டு தாக்குவது அல்ல!
இஸ்லாமிய அழைப்பு சேர்ந்து முஸ்லிம்களை
எதிர்க்க தயாராகிக்கொண்டிருந்த எதிரிகள்
மீதே திடீர் தாக்குதல் நிகழ்ந்தது
ஆனால் ஏனையோரையோ அவர்களை சந்தித்தால், இஸ்லாத்தை நோக்கி அழைப்பது, அதை
ஏற்காவிட்டால் ஜிஸ்யா வரி கட்டுமாறு கூறுவது. அதையும் ஏற்காவிட்டாலே போர் நடக்கும்
(முஸ்லிம் 3566)
இது ஏன் அவசியமானதாக இருந்தது என்பதை குறிப்பு 10 இன்கீழே குறிப்பிட்டுள்ளேன்.
ஆனால் பைபிளோ திட்டமிட்டு குழந்தைகளையும்
பெண்களையும் கொல்வதற்காக அவர்களிடம் போர் செய்தா கர்த்தர் கொல்லுமாறு சொன்னார்? (1
சாமுவேல் 15:2-3, உபாகமம் 20:16-17)
24.மீண்டும் போதகர் புகாரி 610 ஹதீஸின் சிறு பகுதியை மட்டும் எடுத்து, "திடீர்
தாக்குதல் நடத்துவதும் அவர்களது வழக்கமாக இருந்தது" என்ற
வாசகத்தை மட்டும் காட்டி, முகம்மது நபி செய்ததெல்லாம் திடீர் தாக்குதல் என்பது போல
சித்தரிக்க முற்படுகிறார்.
இந்த ஹதீஸில் தெளிவாக காலை வரை
பொறுத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு கைபர் யுத்தத்தை பற்றியது ஆகும்.
அப்போதுகூட எதிர்த்து போரிடுபவர்களையே
கொன்றார்கள்.(புகாரி 947)
ஒரு அநியாயம் இழைத்த கூட்டத்தையோ அல்லது
முன்பே தகவல் எத்திவைக்கப்பட்டு நிபந்தனைகளுக்கு மறுத்தவர்களையோ அல்லது எதிர்த்து
படைதிரட்டிக்கொண்டிருப்போர் மீது மட்டுமே திடீர் தாக்குதல் செய்துள்ளார்கள்.
அதிலும் போரிடுபவர்களை மட்டுமே
கொன்றுள்ளார்கள். சரணடைந்தவர்களையோ பெண்கள் குழந்தைகளையோ அல்ல! (புகாரி 947)
ஆனால் ஏனையோரை குறித்து அவர்களுக்கு
இஸ்லாத்தை எத்தி வைத்து இஸ்லாத்தின் பால் அழைப்பார்கள். அதை மறுத்தால் ஜிஸ்யா வரி
கட்டும்படி கூறுவார்கள். அதையும் மறுத்து எதிர்க்க வந்தாலே போர் செய்வதற்கு
வழிகாட்டினார்கள் (புகாரி 3159, முஸ்லிம் 3566)
ஜிஸ்யா வரி கூட அவர்களது சக்திக்கு ஏற்ப தான்
இருக்க வேண்டும் . அத்தோடு அவர்களுக்காக இஸ்லாமிய அரசு போராட வேண்டும்.(புகாரி 3052,3700)
ஜிஸ்யா கட்டாதவர்களை வேதனை செய்வதையும்
இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது (முஸ்லிம் 5096,5097)
ஆனால் இவர்கள் கூறும் பைபிளிலோ குழந்தைகளையும் பெண்களையும் நானூறு வருடங்கள்
முன்பு முன்னோர் செய்ததற்காக ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னார் தேவன். இது
எத்தகைய திடீர் தாக்குதல்? இஸ்லாத்தை போல போரிடுவோரை மட்டும் கொல்லப்
சொல்லவில்லையே! (1 சாமுவேல் 15:2-3)
இதுமட்டும் ஆண்மையான தாக்குதலா? (1:05:30)
25.பிறகு மீண்டும் போதகர், இஸ்லாம் என்றால் சரணடைதல், போரில்
பயந்து ஏற்றுக்கொள்ளல் என்று உருட்டுகிறார். இதை வாதமாக வைக்க வேண்டும் என்பதற்காக
சிறு பிள்ளையின் வீடியோ கிளிப்பை ஒளிபரப்புகிறார்.
உண்மையில் இஸ்லாம் என்பது "அஸ்லம"
என்ற சொல்லிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் "கட்டுப்பட்டான்" என்பதாகும். இஸ்லாம் என்பதன்
அர்த்தம் நடைமுறையில் இது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதை குறிக்கும்.
ஆனாலும் இஸ்லாம் என்பதற்கு மறுபெயராக குர்ஆன் 2:208 இல் அஸ்ஸில்ம் (السلم)
என கூறுகிறது. அதன் அர்த்தம் சமாதானம்
என்பதே.
இறைவனுக்கு கட்டுப்படுதலின் மூலமே சமாதானத்தை
பெற முடியும். காரணம் சமாதானத்தையும் தீங்கையும் படைத்ததே கடவுள் தான்
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன்,
சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே
இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா 45:7
இயேசுவின் வருகையின் நோக்கமே சமாதானத்தை
பூமியில் பரப்புவது அல்ல மாறாக பிரிவினையை ஏற்படுத்துவது தான் என இயேசுவே தெளிவாக
சொல்லியுள்ளார் (மத்தேயு 10:34-37, லூக்கா 12:51-52)
இதையெல்லாம் அறியாமல் காழ்ப்புணர்வு காரணமாக
இதுபோன்று உலரிக்கொட்டியுள்ளார் போதகர் சுதாகர். (1:07:47)
முதல் வீடியோ பகுதி முடிவு

Comments
Post a Comment