YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 2
4.முஸ்லிம் தரப்பு இரண்டாம் அமர்வு
26.முஸ்லிம் தரப்பு வாதம்
*முகம்மது நபி செய்ததெல்லாம்
திடீர் தாக்குதல் என்றும் பைபிளில் சமாதானம் கூறிவிட்டு அதை ஏற்க மறுத்தாலே
தாக்குதல் செய்யவேண்டும் என்று போதகர் உருட்டியதற்கு பதிலாக,
-திடீரென்று ஆபிரகாம் இரவில்
தாக்குதல் நடத்தியுள்ளார் -ஆதி 14:15
-யோசுவா தீர்க்கதரிசி தன்
படையினரை ஒளிந்து இருக்க வைத்து ஒரு குழுவை தப்பி ஓடுவது போல ஓட வைத்து திடீர்
தாக்குதல் செய்விக்க வழிகாட்டினார்- யோசுவா 8:4-9. (பெண்களையும்
சேர்த்தே கொன்றுள்ளனர். அதுவும் கர்த்தரின் கட்டளைப்படி 8:25-27)
(அமெலேக்கியரின் குழந்தைகளை பெண்களை முற்றாக
கொன்றொழிக்குமாறு சொன்னபோது அவர்களை கொல்லுவது அப்பெண்களும் குழந்தைகளும்
எதிர்ப்பார்த்திருக்கும்போதா?
ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னதை அறியாதிருப்பார்களா? 1 சாமுவேல் 15:2-3)
8.இஸ்லாம் மதுபானத்தை தடை
செய்கிறது (5:90).
9.திருமணம் முடித்தவர்கள் ஒத்துவராத போது விவாகரத்து செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. (தோராவும் உபாகமம் 24:1-2 அனுமதிக்கிறது). ஆனால் புதிய ஏற்பாடு, விபச்சாரம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்கிறது. அதுவல்லாத காரணத்திற்காக விவாகரத்து செய்தால் அதுவும் விபச்சாரம் என்கிறது (மத்தேயு 19:9). ஒரு கணவன் குடித்துவிட்டு வந்து தன் மனைவியை அடிக்கிறவனாக இருந்தால் என்ன தீர்வு என்று கேட்கப்பட்டது.- அத்தோடு விவாகரத்து செய்ய முற்படுபவன் தன் மனைவி மீது அவதூறு சொல்லவேண்டியேற்படும் போதனையாக கிறிஸ்தவ போதனை அமைந்துள்ளது. (விவாகரத்து சம்பந்தமாக விரிவான விளக்கம் பிறகு கூறப்படும்)
*யோவான் 8 இல் விபச்சாரம் செய்து பிடிபட்ட பெண்ணை அவள் மனந்திருந்த முன்பே பாவம்
மன்னிக்கப்பட்டதாக சொல்லி இனி பாவம் செய்யாதே என்று சொன்னதாக வருவதை வைத்து போதகரை
போல இயேசுவை குற்றப்படுத்துவது குறித்து போதகரின் நிலைப்பாடு பற்றி கேட்டார்கள். (காரணம் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டு அந்த தவறை உணர்ந்து மனந்திருந்தி வந்தவருக்கு கூறப்பட்ட போதனையை விமர்சித்ததால் இவ்வாறு கேட்கப்பட்டது)
*ஜிஸ்யா வரி மார்க்கத்தை ஏற்காத
இனத்திற்கானது என்பது போல பைபிளில் கப்பம் கட்டுவது இஸ்ரவேலர் அல்லாத வேறு
இனத்தவர்களுக்கு தானே என்பது குறித்து
கேள்விகேட்டார்கள்.. முதலாவதை தவறு என்றால் இரண்டாவதும் தவறு
தானே. (இதை குறித்து மேலே எழுதியுள்ளேன்)
*முஸ்லிம் அல்லாத உறவினரையும்
பாதுகாப்பாளராக எடுக்க கூடாது என்ற குர்ஆன் 9:23 குறித்து, இயேசுவும்
இதுபோன்று பிரிவினை உண்டாக்க வந்ததாக சொல்லியிருக்கிறாரே என்று மத்தேயு 10:35-37,
லூக்கா 12:51-53 வசனங்கள் இருக்கின்றனவே. இதை வைத்துக்கொண்டு
இப்படி பேசலாமா என்று கேட்கப்பட்டது. (இது பற்றியும் முந்தியபாகத்தில் எழுதியுள்ளேன்)
முஸ்லிம் தரப்பு முடிவு (00:16:35)
5.கிறிஸ்தவ தரப்பு மூன்றாம் அமர்வு
27.முன்பு பேசிய மூன்றாம் போதகர், தமக்கு பதில்
கொடுக்கப்பட்டதை உள்வாங்காமல், எதிர்த்தரப்பு
பதில் கொடுக்கவில்லை என்று சாடுகிறார். இது இவர்களது நோய். எப்போதும் "பதில் வரவில்லை" என்பதை கூறி சமாளிப்பார்கள்.
முகம்மது நபியின் மனைவிகளுக்கு விதவை மறுவாழ்வு ஏன் இல்லை
என்று உலருகிறார்
விதவை தாம்பத்ய வாழ்வு முகம்மது நபியின்
மனைவியருக்கு அவரது மரணத்தின் பின் கிடையாது . காரணம் அவர்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் அந்தஸ்த்தில் தாய்மார்கள்.
ஓர் ஊரில் தாயும் தந்தையும் பத்து
ஆண்பிள்ளைகளும் அவர்களது மனைவிகளும் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது
தகப்பன் மரணித்தால், தாய்க்கு விதவை மறுவாழ்வு கொடுப்பதாக கூறி பிள்ளைக்கு
திருமணம் முடிக்க முடியுமா என்ன?
ஆனாலும் அவர்களுடைய வாழ்வுக்கு தேவையான
அனைத்து பொருளாதார உதவிகளும் அவர்களுக்கு இஸ்லாமிய அரசால் வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் அவர்களை தாய்மார்களாக மதித்து
நடந்து கொண்டார்கள்.
28.விவாகரத்து பற்றி ஏன் சம்பந்தமில்லாமல் பேசவேண்டும்
என்கிறார் போதகர். ஏனென்றால் புதிய ஏற்பாடு விவாகரத்து செய்வதை விபச்சாரம் என்று
சொல்வதால் மனித வாழ்வுக்கான தேவையான சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குவதை அவசியமில்லாத
வாதமாக கருதுகிறார். முதலில் விவாகரத்தை அனுமதித்தது தேவன் தான் (உபாகமம் 24:1-3). அதையும் அவர்களது இருதய
கடினத்திற்காக மோசே அனுமதித்தாக இயேசு சொன்னதாக மத்தேயு 19:8 கூறுகிறது.
அப்படி பார்த்தால் இருதய கடினத்திற்காக
விபச்சாரத்தை தேவன் அனுமதித்தாரா? என்ற பெரும் குற்றச்சாட்டு இவர்கள் தலையிலேயே
விழுந்துவிடுகிறது. (00:17;36)
29.ஆபிரகாம் இரவில் தாக்குதல் நடத்தியது பற்றி கேட்டதற்கு,
அவர்கள் முன்பு யுத்தம் செய்து லோத்துவை பிடித்துக்கொண்டு போனார்கள். அதற்காக தான்
என்று கூறி இது திடீர் தாக்குதல் அல்ல என்கிறார். காரணம்
எதுவாக இருந்தாலும் இரவில் தாக்குவது திடீர் தாக்குதல் தானே என்பதை போதகர்
உணரவில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது இதே நடைமுறையை கையில் எடுக்க
மாட்டார்கள். (திடீர் தாக்குதல்
குறித்து முந்திய பாகத்தில் எழுதியுள்ளேன்) (00:18:05)
30.மீண்டும் அதே மூன்றாம் போதகர், இவையெல்லாம் (யுத்தமும் வரியும்) மதத்திற்காக அல்ல என்பதால்
ஓகே என்கிறார். மதத்திற்காக அல்ல
என்றால் ஓகே என்பதை யார் தீர்மானிப்பார்? இவர்களது வேதம் அப்படி கடவுள் செய்ததாக
சொல்வதால் ஓகே என்கிறார். இஸ்லாத்தை
அவர்கள் ஒப்புக்கொள்ளாததால், இஸ்லாம் கூறுவதை தப்பு
என்கிறார்.
எதிரிகளை ஈவிரக்கமின்றி குழந்தகளை தேவன்
கொல்ல சொன்னாரே என்று கேட்டால்(1 சாமுவேல்
15:2-3), இது மதத்திற்காக அல்ல அல்லவா? அதனால் ஓகே என்கிறார். கடவுள் சொல்கிறார்
என்பதே மதம் சார்ந்தது தானே.
கடவுள் கொல்ல சொல்கிறார் என்றாலே
மதத்தாக்குதலும் மதத்திற்கான தாக்குதலும் தான்.
கடவுள், சமாதானத்தை ஏற்கும்
மக்களிடம் கப்பம் கேட்டு வேலைக்காரர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாலே (உபாகமம் 20:10-12) அது மதத்திற்கானது தான்.
இதுபோன்று இவர்களுக்கு கீழே உள்ள வேறு
ஊர்களில் வேறு கடவுளை வணங்கும் படி சொல்லி வணங்கினால், ஊரையே கொழுத்தி அனைத்து
மக்களையும் வெட்டிப் போட வேண்டும் என்பதை உபாகமம் 13:12-16 சொல்கிறதே.
அதுபோன்று சூரிய சந்திரனை வணங்கினால் அவனை
கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று உபாகமம் 17:3-5 சொல்கிறதே.
இதையெல்லாம் மதம் அல்லாமல் வேறு என்ன?
கடவுள் செய்ய சொல்லும் அனைத்துமே மதமும்
மதத்திற்கானதும் தான். இவர்கள் சமாளிப்பதற்காக அது மதமல்ல என்பார்கள் (பொய்
சொல்லியாவது சமாளிக்க வேண்டும் அல்லவா?)
(00:18:30)
31.முதல் மடையரான போதகர் மீண்டும் முஸ்லிம் 5335 ஹதீஸை வைத்து , ஒரு மனிதர் பாலியல் பலாத்காரம் செய்து
உடலுறவு இல்லாமல் வந்த நபர் என்று தான் இருப்பதாகவும், அவர் தனக்கு தண்டனை
கேட்டதாகவும் உள்ளது என்றும் ஆனால் மனத்திருந்தி வந்தார் என்று இல்லை என்று
காழ்ப்புணர்வை கக்கிச் சொல்கிறார்.
தண்டனை/பரிகாரம் கேட்டு வருகிறார் என்றாலே
மனந்திருந்தி அதை தப்பு என்று உணர்ந்து தானே வருகிறார் என்பது இவருக்கு புரியாதா?
(அதிலே பலாத்காரம் செய்ததாக
இல்லை... அனைத்தும் மாமாவின் உருட்டு)
ஆனால் மாமாவின் வேதத்திலோ, கன்னியை
ஆசைவார்த்தை சொல்லி அவளோடு உடலுறவு கொண்டால் கூட தண்டனை கிடையாது. தகப்பனுக்கு
இஷ்டம் இல்லை என்றால் தகப்பனுக்கு பரிசம் கொடுத்தால் மட்டுமே போதும் என்ககிறது-
யாத்திராகமம் 22:16-17
யாத் 22:16-17 IRVTam
[16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு
கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப்
பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை
அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும்
பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam
இங்கே அவன் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்றோ
அது தவறு என்றோ கூட கிடையாது. பரிசத்தை கொடுத்துவிட்டால் ஓகே என்றே
சொல்லப்பட்டுள்ளது.... இதைவைத்து கர்த்தர்
விபச்சாரம் செய்து பேமெண்ட் கொடுக்க சொல்கிறார் என்று எங்களுக்கும் சொல்ல முடியும்
அல்லவா?
(00:20:00)
32.இயேசு பிடித்து வரப்பட்ட விபச்சாரியிடம் இனி பாவம் செய்யாதே
என்று சொன்னார் என்பதால் விபச்சாரி மன்னிக்கப்பட்டது ஓகேயாம். ஆனால் தானாக
முன்வந்து தன் குற்றத்திற்காக தண்டனை கேட்டவருக்கு பரிகாரம் சொன்னதால் ஓகே
இல்லையாம். என்னவோர் கயமை மாமாவுக்கு. (0:20:50)
33.குடிகாரக்கணவன் பற்றி கேட்டால், அந்த பெண்ணின் பயபக்தியான
வாழ்வினால் அவனை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம் (1 பேதுரு 3:1-2) என்கிறார். பயபக்தியாக இருக்கிறவளுக்கே குடிச்சுட்டு வந்து
உதைச்சால் சாகும்வரை திருந்துவார் என்று எதிர்பார்த்துக்கொண்டு தன் வாழ்வை
நரகமாக்கிக்கொள்ள தான் முடியும். (0:21:46)
34.சாதாரண வரிகளோடு ஜிஸ்யாவை ஒப்பிட முடியாது என்று அடம்
பிடிக்கிறார் மாமா. ஜிஸ்யா
சக்திக்குட்பட்ட விதத்திலேயே இருக்கும் அவர்களை ஒடுக்கி வேதனை செய்ய கூடாது
அவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் எதிரிகளோடும் முஸ்லிம்கள் யுத்தம் செய்ய
வேண்டும் என்பதுமே இஸ்லாமிய அரசின் போதனை (புகாரி 3052, முஸ்லிம் 5096-5097)
முஸ்லிம்கள் செலுத்தும் ஸகாத் நன்கொடையை
முஸ்லிம் அல்லாதவர்கள் மீது திணிக்க முடியாது. வரியை அரசின் மக்கள் செலுத்தும்
வழமையே அப்போது கிடையாது. அதை முஸ்லிம்களிடம் வாங்கவும் முடியாது.
ஜிஸ்யா மதம் சார்ந்தது என்றால், சரணடைந்த வேறு
இன மக்களிடம் கப்பம் வாங்கி வேலைவாங்குமாறு கடவுள் சொல்வதும் மதம் சார்ந்தது தான்
(உபாகமம் 20:10-12).
(0:24:10)
35.குர்ஆன் 4:34 மனைவியை
அடிக்க அனுமதியாக சொல்கிறது. ஆகவே இது தவறு என்று பாய்கிறார்
போதகர்
. -இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:
அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905)
இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.
கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)
அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..
ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் (குர்ஆன் 4:19 இப்னுமாஜா 1851....), அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் (இப்னுமாஜா 1978,திர்மிதீ 1162) என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல (அபூதாவூத் 2146) என்றும் நல்வழிப்படுத்தியது.
அடிப்பதன் நோக்கம் காயம் ஏற்படுத்துவதல்ல..
அடங்க மறுக்கும் போது அதை தடுப்பதற்கே.
ஆனால் பைபிளிலோ மனைவி வேறு கடவுளை வணங்கினால்
அவளை சொல்லுவதற்கு கல்லால் முதலில் கணவனே
அடிக்க வேண்டும் (உபாகமம் 13:6-9)
மனைவி தன் கணவனை காப்பாற்றுவதற்காக தன் கணவனை
அடிக்கும் ஆணின் ஆண்குறியை பிடித்தால், அவளது கையை வெட்டுமாறு உபாகமம் 25:11-12)
பழைய ஏற்பாட்டில் மனைவிக்கு பேச்சுரிமையோ,
சொத்துரிமையோ வழங்கப்படாத போது , அடக்கப்பட்ட அவள் கணவனை
எதிர்த்துநிற்கப்போவதில்லை. அதனால் அடி வாங்குவதில்லை. காரணம் அவள் உயிரற்ற பொம்மை
போல இருப்பதால், எதிர்த்து நிக்காமையால் அடிக்கும்படி வழிகாட்டல் இல்லை.
ஆனால் இஸ்லாத்திலோ பெண்ணுக்கு சுதந்திரம் உள்ளதால்,
அவள் சிலபோது கணவனை எதிர்த்து நடக்க வாய்ப்பு உண்டு. இஸ்லாம் அவளை அடிக்க சொல்லாவிட்டாலும் கோபமுள்ளவன் அடிப்பான்.
ஆனால் இஸ்லாம் இதை செம்மையாக்குகிறது. அதாவது இலேசாக காயம் ஏற்படாமல் அடிக்க
வேண்டும் என்றும் அவர்களோடு நல்ல முறையில் உறவாட வேண்டும் என்றும்
கட்டளையிடுகிறது.
தன் மனைவியை ஒழுக்கப் படுத்துவதற்காக இலேசாக
அடிக்கலாம். ஆனாலும் அப்பெண்ணுக்கு இஸ்லாம் சட்டரீதியாக தன்
கணவனிடமிருந்து பிரிந்து செல்வதற்குரிய உரிமையான ஃகுலா (தலாக்கை கேட்டு பெறுவது) செய்வதற்குரிய வழிகளையும் இஸ்லாம் காட்டியுள்ளது.
(தன் கணவனுக்கு தன்னை திருப்திப்படுத்த சக்தி
இல்லை என்பதற்காக கூட தலாக் பெற்று பிரிந்து செல்ல உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது-
புகாரி 5275,5276)
ஆனால் பைபிளிலோ தன் மனைவி மீது சந்தேகம்
வந்தால் கூட, மண் கலந்த கசப்பு தண்ணீரை அவள் குடிப்பதற்கு வழிகாட்டல்
வழங்குகிறது.(எண்ணாகமம் 5:14-31)
அத்தோடு முதலிரவில் கன்னியாக இருக்கவில்லை
என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் கூட எதிர்த்து பேசுவதற்கு அவளுக்கு உரிமை
இல்லை. மாறாக முதலிரவில் வந்த
இரத்தம் வடிந்த துணியை காட்டும் அறிவீனமான செயலையே பெண்கள் மீது பைபிள்
திணிக்கிறது.(உபாகமம் 22:13-21)
இதையெல்லாம் அறியாமல் சந்தேகம் வந்தால்
அடிக்குமாறு குர்ஆன் சொல்வதாக உலருகிறார். (00:25:20)
36.இயேசு பிரிவினையை ஏற்படுத்த வந்தேன் என்று சொல்வது குறித்து, குர்ஆன் 9:23 சம்பந்தமான மடத்தனமான
வாதத்திற்கு பதில் கூறி கேட்கப்பட்ட போது, ஞானம் நிறைந்த இந்த போதகர், முஸ்லிம்
நண்பர் கொடுத்த விளக்கமான "புதிய கொள்கையை குடும்பத்தில் ஒருவர் ஏற்கும் போது
பிரிவினை வருவது தானே" என்று
கூறியதை பைபிளுக்கு மட்டும் மேட்ச் பண்ணிவிட்டு தப்பிக்க பார்க்கிறார். இது
போதகரின் தந்திரத்தையும் கயமையையும் காட்டுகிறது
ஆனாலும் பவுலோ மாற்றுமத சிலைவணங்கியை
விபச்சாரகனோடும் கொள்ளைக்காரனோடும் இணைத்து , அவனோடு பழகவோ ஒன்றாக சாப்பிடவோ
கூடாது என்றும் அவனை குடும்பத்தில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று 1 கெரிந்தியர் 5:11,13 இலே எழுதியுள்ளார்.இதையெல்லாம் அறியாத மூடர்களே இவர்கள்
.(0:26:00)
37.மீண்டும் குண்டு போதகர் அவர்கள் என்ன சொல்கிறோம் என்பதையே
உணராமல், இஸ்லாம் என்றால் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை முகம்மது அல்லாஹ்வின்
தூதர் என்று சஹாதா (சாட்சி) கூறி, ஐந்து
நேரம் தொழுது , நோன்பு பிடித்து, ஹஜ் செய்து, ஸகாத் கொடுப்பது என்று முஸ்லிம்கள்
சொல்வார்களாம். ஆனால் குர்ஆன் 8:74 விசுவாசம் கொண்டு, ஹிஜ்ரத் செய்து, ஜிஹாத்
செய்தவர்களே முஸ்லிம்கள் என்கிறது என்று கூறி தீவிரவாதமாக சித்தரிக்க
முற்படுகிறார்.
பதில்:
இஸ்லாம் என்றால், அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை முகம்மது நபி அல்லாஹ்வின்
தூதர் என சாட்சி கூறி, தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடையை கொடுத்து, ரமழான்
மாதத்தில் நோன்பு வைத்து, சக்தியுள்ளவர் ஹஜ் செய்வதும் தான் (முஸ்லிம் 1 (8) )
குர்ஆன் 8:74 கூறும் உண்மையான விசுவாசிகள்:
விசுவாசங்கொண்டு (தங்களுடைய) ஊரை விட்டும் வெளியேறி (ஹிஜ்ரத்தும் செய்து) அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிகின்றார்களே அத்தகையோரும் இன்னும், இவர்களுக்கு இடமளித்து(த் தங்களுடைய வீடுகளில்) வைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவியும் செய்கின்றார்களே அத்தகையோருமாகிய இவர்கள் தாம் உண்மையான விசுவாசிகள், அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான ஆகாரமும் உண்டு.
அதாவது உண்மையான விசுவாசிகள் நபியின்
தோழர்களான முஹாஜிர்களும் அன்ஸார்களும் என்பதை கூறுகிற வசனமே இது.
ஏன் ஹிஜ்ரத் செய்து, போர் செய்தனர்?
*அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று
சொன்ன ஒரே காரணத்திற்காக சொந்த வீடுகளிலிருந்து ஊரிலிருந்தே விரட்டப்பட்டார்கள். (22:40, 60:1)
*காஃபிர்களே முதலில் யுத்தத்தை தொடங்கி
வைத்து , தூதரையும் முஸ்லிம்களையும் விரட்டினார்கள் (9:13)
*அத்தோடு முஸ்லிம்களிலே பலவீனமானவர்கள்
ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இறைவனிடம் தம்மை இந்த
அநியாயகார்களைவிட்டும் பாதுகாக்குமாறு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் (4:75)
*எந்தளவுக்கென்றால் , ஒருவர் இஸ்லாத்தை
ஏற்றால் அவர் கொல்லப்படுவார் அல்லது குழப்பத்திற்கு உள்ளாக்கப்படுவார் எனும் நிலை
இருந்தது- புகாரி 4514
இத்தகைய நிலையில் அவர்களை எதிர்த்து போரிடும்
(2:190) படி கட்டளையிடப்பட்டது.
*இந்த காஃபிர்கள் தமக்கு சக்தி இருந்தால், முஸ்லிம்களை தம் மார்க்கத்தை விட்டும்
வெளியேற்றி காஃபிர்களாக ஆக்கும்வரை போரிடுவார்கள் (2:217) என அல்லாஹ்
அறிந்துள்ளான்.
இத்தகைய நிலையில் இந்த காஃபிர்களை
எதிர்த்து போரிடாமல் இருப்பது சரியாகுமா?
எதிர்த்து போரிடுதல் சரியாகுமா?
*இறைவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பதற்காக, பூமியில் நீதியை நிலைநாட்டுவதற்காக இவ்வாறு
செய்வது அவசியமாகிறது.
*அவ்வாறு போரில் கூட இஸ்லாத்தை எத்தி வைத்து,
அதை ஏற்க மறுத்தால்அவர்களது சக்திக்கு உட்பட்ட அளவில் ஜிஸ்யா வரி வசூலித்து, அவர்களுக்காக பாதுகாப்பை வழங்கி (புகாரி 3052), , ஜிஸ்யா கட்டாத தனி நபர்களை வேதனை செய்யாமலும் இருப்பதற்கு
இஸ்லாம் வழிகாட்டுகிறது.(முஸ்லிம் 5097) அதையும் ஏற்க
மறுத்தவர்களோடேயே யுத்தம்.
*அத்தகைய யுத்தத்திலும் பெண்கள், சிறுவர்கள் (புகாரி 3014,3015), போரிடாத
கூலியாட்கள் (அபூதாவூத் 2669), போரிடாத வயோதிகர்கள் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத்
21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ள துறவிகள்
(அஹ்மத் 2728) போன்றோரை கொல்ல கூடாது என்று தனிச் சட்டமும் போட்டுள்ளது.
இவர்களை தவிரவுள்ளவர்கள் ஆண்களிலுள்ள
போரிடுவோர் மட்டுமே... அவர்களோடே போரும் நிகழும்.
ஆனால் பைபிளோ, ஈவிரக்கமின்றி குழந்தைகளையும் பெண்களையும் மிருகங்களையும்
கர்த்தர் பழிவாங்குவதற்காக கொல்லும்படி சொன்னார். (1 சாமுவேல் 15:2-3)
இப்படி ஈவிரக்கமின்றி கொன்றுவிட்டு மிருகங்களை சொன்னபடி கொல்லவில்லை
என்பதற்காக கர்த்தர் சவுலை ராஜாவாக ஆக்கியதற்கே மனஸ்தாபப்பட்டார். (1 சாமுவேல் 15:11)
முஸ்லிம்கள் நீதிக்காக போர் செய்யும்படி
சொல்லப்பட்டதையே தீவிரவாதம் என்று சொல்லும் இவர், இவரது வேதம் கடவுளையே யுத்த
புருஷன் என்றே சொல்கிறதை மறந்துவிட்டார்
யாத்திராகமம் 15:3 TCV
[3] யெகோவா யுத்தத்தில் வீரர்; யெகோவா என்பதே
அவரது பெயர்.
https://bible.com/bible/2730/exo.15.3.TCV
எந்தளவு ரத்த வெறி பிடித்தவர் என்றால்,
மோவாபியரை கொல்லாமல் அவர்களது இரத்தத்தை சிந்தாமல் கத்தியை பிடித்திருப்பவன்
சபிக்கப்பட்டவன் என்கிறார்.
கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன்
சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை (மனிதனை வெட்டும்கத்தி) அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன். எரேமியா 48:10
*இதைவிட பெரிய அக்கப்போரொன்றை போர்
செய்யாததற்காக கர்த்தர் செய்துள்ளார்.
அதாவது , இஸ்ரவேலர் எதிரிகளை கொன்று
நாட்டை பிடிக்க பயந்ததற்காக, பயந்தவர்களையே அழித்துப்போட முற்படுகிறார் கர்த்தர்.(எண்ணாகமம் 14:1-4,11-12)
இதை கண்ட மோசே, அப்படி செய்தால் உங்களுக்கு
காப்பாற்ற வக்கில்லாமல் கொன்று போட்டீர் என்று எகிப்தியரும் மற்ற ஊராகும்
சொல்லுவார்கள் இதனால் அசிங்கமாக போய்விடும் என்று மன்னிக்குமாறும் கேட்கிறார்(எண்ணாகமம் 14:13-16,19)
இதற்காக மனதை மாற்றிக்கொண்டு போகும்
வழியிலேயே யுத்தம் செய்யாத இவர்களை படிப்படியாக கொன்று போட முடிவெடுக்கிறார் (எண்ணாகமம் 14:22-23)
ஆனால் யுத்தம் செய்து கொல்லுங்கள் என்று சொன்ன காலேபை தேவனாகிய
தன்னை உத்தமமாக பின்பற்றியவன் என்கிறார் (எண்ணாகமம் 14:24)
அதாவது போர் செய்து கொல்ல நினைத்த இவன் தான்
உண்மையான விசுவாசி. பயந்து ஓடியவர்கள் பாவிகள் என்று வெளிப்படுத்துகிறார்
கர்த்தர்.
இதை வைத்துக்கொண்டு தான் இந்த எருமை மாடு
கத்துகிறார்.
38.மீண்டும் சுதாகர்,
போர் செய்வதன் நோக்கமே அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்க வேண்டும் என்பதற்காக
போரிடுபவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் , மற்றவர்களுக்கு காட்டுவதற்காக , வீரத்திற்காக, இனவெறிக்காக போரிடுபவர் அல்லாஹ்வின் பாதையில்
போரிடுவோராக ஆக மாட்டார்கள் என்ற கருத்துப்பட வரும் புகாரி 7458 குறிப்பிட்டு, அறப்போர் என்றாலே அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக யுத்தம்
செய்வது தான் என்பதை குறிப்பிட்டு அதை கொச்சையாக்க பார்க்கிறார்.
எந்த செயலை செய்தாலும் அதை இறைவனுக்காக தானே
செய்ய வேண்டும்!
இஸ்லாம் கூறும் போர் அப்பாவிகளை
கொல்வதற்கானது அல்ல! ஏனெனில்
யுத்தத்திலும் பெண்கள், சிறுவர்கள் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்கள்
(அபூதாவூத் 2669), போரிடாத வயோதிகர்கள் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ்
10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ள துறவிகள் (அஹ்மத் 2728) போன்றோரை கொல்ல
கூடாது என்று தனிச் சட்டமும் போட்டுள்ளது.
இஸ்லாத்தை எதிர்த்து போரிடும் மக்களுக்கு
மத்தியில் தம் மார்க்கத்தை எத்தி வைப்பதற்கும் தம் மார்க்கத்தை பாதுகாப்பதற்கும்
போர் செய்யாமல் இருந்தால், எதிரிகள்
அப்போதே முடித்திருப்பார்கள்.
ஏனெனில்,
* அல்லாஹ்வை தவிர வேறு இறைவன்
இல்லை என்று சொன்னதற்காகவே ஊரைவிட்டு வெளியேற்றினர். முதலில் தொடங்கி வைத்தனர்
(குர்ஆன் 22:29-40, 9:13, 60:1)
*அவர்களுக்கு சக்தி இருந்தால், முஸ்லிம்களை
காஃபிராகும்வரைக்கும் யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217) .
*அப்பாவி முஸ்லிம்கள் தம்மை ஒடுக்கிய
மக்களிடமிருந்து பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். இதற்காக அவர்களை
காப்பாற்ற யுத்தம் செய்ய தானே வேண்டும்?(குர்ஆன் 4:75)
*அதுமட்டுமின்றி, காஃபிர்கள் அல்லாஹ்வையன்றி
வணங்கப்படுபவைகளின் பாதையில் (அவற்றுக்காகவே)
யுத்தம் செய்கிறார்கள் (4:76)
இந்த நிலையில் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்க
வேண்டும் என்று முஸ்லிம்கள் யுத்தம் செய்வது நியாயம் தானே. அதை தான் நபிகளார்
கூறுகிறார்கள்.
பைபிள் என்ன சொல்கிறது?
*தன்னை வணங்காமல் இஸ்ரவேலருக்கு கீழுள்ள
ஊரில் வேறு கடவுளை வணங்கினால், அவர்கள் அனைவரையும் வெட்டிக்கொன்று ஊரை கொழுத்த வேண்டும் என்று தேவன்
சொன்னது அவருடைய வார்த்தைக்கான போர் இல்லையா? (உபாகமம் 13:12-16)
*நானூறு வருடங்கள் முன்பு வாழ்ந்த
அமெலிக்கியர் செய்ததற்காக அவர்களின் நான்காம் தலைமுறை மக்களை குழந்தைகளை பெண்களை
ஈவிரக்கமின்றி கொல்லும்படி சொன்னதற்காக கொல்லுவது அவரது வார்த்தை மேலோங்குவதற்கான
கொலைகள் தானே? ( 1 சாமுவேல் 15:2-3)
(0:28:20)
39.மீண்டும் இதே மாமா, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சிலரை
காட்டுகிறார்.
இவரது தேவன் நானூறு வருடம் முந்திய பகைக்காக குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னதை
சரியென்று ஒப்புக்கொண்டு (1 சாமுவேல் 15:2-3),மற்ற மாற்றுமத ஊர் மக்களை ஈவிரக்கமின்றி
கொன்று குவித்து நாடுகளை கைப்பற்றி குடியேறும் படி சொன்னதை (உபாகமம் 20:16-18) சரி
தான் ஏற்றுக்கொண்டு , தன் நாட்டிலே வேறு கடவுளை வணங்கும் ஊரை அழித்து மக்களை
ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னதை (உபாகமம் 13:12-16)
தேவனின் வல்லமை என நம்பிக்கொண்டு, உலகத்தில் எந்த தீவிரவாதியையாவது
விமர்சிக்க தகுதி உண்டா?
கர்த்தர் சொன்னது போன்று தானே இந்த
தீவிரவாதிகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கின்றனர்? இவர்களை தவறு என்று கூறுவதற்கு
பைபிளை நம்பியோருக்கு தகுதி இல்லையே!
யுத்தத்திலும் பெண்கள், சிறுவர்கள் (புகாரி
3014,3015), போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), போரிடாத வயோதிகர்கள் (முஅத்தா
மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ள துறவிகள்
(அஹ்மத் 2728) போன்றோரை கொல்ல கூடாது என்று தனிச் சட்டமும் போட்டுள்ளது. இதன்படி
போரிடுவோருடனா தீவிரவாதிகள் என காட்டப்படுவோர் செய்கின்றனர்? பைபிள்
கூறியது போல ஈவிரக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் (1 சாமுவேல் 15:2-3) அவ்வளவே.
ஆனாலும் இஸ்லாம் இஸ்லாமிய அரசின் கீழ்
இருக்கும் முஸ்லிமல்லாத ஒப்பந்த பிரஜையை கொல்பவன், சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் புகாரி 3166 என்று
எச்சரிக்கை செய்கிறது.
அந்த மக்களின் உரிமைகளை பறித்தவர், குறைவைத்தவருக்கு எதிராக நானே வழக்காடுவேன்
என்று முகம்மது நபி எச்சரித்துள்ளார்கள்- அபூதாவூத் 3052
போரில் கூட குழந்தைகளையோ பெண்களையோ கொல்லுவதை
தடைசெய்திருக்கிறது.
இத்தகைய மார்க்கத்திற்கும், பழைய பகைக்காக
குழந்தைகளை பெண்களை ஈவிரக்கமின்றி கொல்லும்படி (I Samuel 15:2-3) சொன்னதை
ஏற்றுக்கொண்டு குற்றம்சாட்டலாமா?
40.குர்ஆன் 9:123ஐ மேற்கோள்காட்டி, சுற்றியிருக்கும்
காஃபிர்களோடு போர் புரியுங்கள் என சொல்லப்பட்டிருப்பதை தீவிரவாதமாக
சித்தரிக்கிறார்.
நபியவர்கள் எப்படி போர் செய்ய வேண்டும்
என்பதை காட்டியுள்ளார்கள்.
*யுத்தத்திலும் பெண்கள், சிறுவர்கள்
(புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), போரிடாத வயோதிகர்கள்
(முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ள
துறவிகள் (அஹ்மத் 2728) போன்றோரை கொல்ல கூடாது என்று தனிச் சட்டமும் போட்டுள்ளது.
இதன்படி போரே யுத்தம் செய்யக்கூடிய ஆண்களுடன்
தான்.
*நபிகளாரின் நடைமுறையில் முதலில் போருக்கு
சென்றால், இஸ்லாத்தை எத்தி வைத்து அழைப்பார்கள். அதை ஏற்க மறுத்தால், அவர்களது சக்திக்கு உட்பட்ட அளவில் ஜிஸ்யா
வரி கட்டுமாறு கோருவார்கள். அதையும் ஏற்க மறுத்தால் போர்
நிகழும்.
*குறிப்பாக இந்த காஃபிர்கள் தமக்கு சக்தி
கிடைத்தால், முஸ்லிம்களை அவர்களின் மதத்திலிருந்து வெளியேற்றும் வரை யுத்தம்
செய்து கொண்டே இருப்பார்கள் (குர்ஆன் 2:217) என்பதை இறைவன் அறிவான்.
அதை தடுக்க வேறு என்ன வழி?
*அப்போதிருந்த அரசர்கள் முதல் இன்று வரையுள்ள
சில ஜனாதிபதிகள் பிரதமர்கள் வரை மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதை செய்துவருகிறார்கள்.
அது போன்று தான் இறைவனது தூதுச்செய்தியை எடுத்துச் செல்வதற்கும், இறைவனது
தூதுச்செய்தியை எதிர்க்கும் தலைமைகள் ,படைகள் முஸ்லிம்களை ஆக்கிரமித்து மார்க்கம்
திரிபுக்கு உட்படாதவாறு பாதுகாப்பதற்கும் இதை தவிர வேறு வழி இல்லை!!
இதை விமர்சிக்கும் இந்த ஞானசூனியங்கள் தம் மத
நூலிலே தேவன் சொல்லியிருப்பதை அறியாத இருக்கிறார்களா?
10.நீ ஒரு பட்டணத்தின்மேல்
யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
11.அவர்கள் உனக்குச் சமாதானமான
உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப்
பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
12.அவர்கள் உன்னோடே
சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,
13.உன் தேவனாகிய கர்த்தர் அதை
உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும்
பட்டயக்கருக்கினால் வெட்டி,
14.ஸ்திரீகளையும்
குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள
எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன்
சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.
15.இந்த ஜாதிகளைச்சேர்ந்த
பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே
செய்வாயாக.
16.உன் தேவனாகிய கர்த்தர்
உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர்,
ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும்
உயிரோடே வைக்காமல்,
17.அவர்களை உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
18.அவர்கள் தங்கள்
தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய
உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப்
பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும். உபாகமம் 20:10-18
தங்களுக்கு தூரமாகவுள்ள மக்களோடு யுத்தம்
செய்வதற்கு, முதலில் சமாதானம் கூற வேண்டுமாம். அதை ஏற்றால் வரி வாங்கி வேலையும்
வாங்க வேண்டுமாம். இதற்கு மறுத்தால் ஆண்களை கொன்று, அவர்களது சொத்துக்களை கொள்ளை
அடிக்க வேண்டுமாம்.
ஆனால் இவர்கள் தாம் வசிப்பதற்கு நாடு
பிடிக்கும்போது, அங்கே உயிருள்ள எதையுமே விட்டு வைக்காமல் அழிக்க வேண்டுமாம்.
இல்லாவிட்டால் ஊர்மக்களின் மதத்தை இவர்கள் கற்று கெட்டு விடுவார்களாம்.
இது மட்டுமா என்றால், இவர்களுக்கு கீழே உள்ள ஊர்களில் வேறு
கடவுள்களை வணங்குவது கேள்விப்பட்டால், அவர்களை
வெட்டிக்கொன்று ஊரையே தீயிட்டு கொழுத்தி வேண்டுமாம். இதிலே குழந்தைகள் பெண்கள்
உட்பட.
12.உன் தேவனாகிய கர்த்தர்
உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய
துஷ்ட மனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
13.நீங்கள் அறியாத வேறே
தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை
ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
14.நீ நன்றாய் விசாரித்து,
கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும்
நிச்சயமும் என்று காண்பாயானால்,
15.அந்தப் பட்டணத்தின்
குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின்
மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,
16அதில் கொள்ளையிட்டதையெல்லாம்
அதின் நடுவீதியிலே, கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப்
பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில்
சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது.
உபாகமம் 13:12-16
*அதாவது தம் நாட்டுக்குள் மாற்றுமதத்தவர்களை
முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்பதை தேவன் காட்டுகிறார்.
இதையெல்லாம் வைத்துக்கொண்டு, நேர்மையாக வழிகாட்டும் இஸ்லாத்தை
கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்.
இவர்களது மதத்தில் மனித வாழ்வுக்கு என்ன
வழிகாட்டல் இருக்கிறது என்று கேட்டால்,
அப்போது கூட சொதப்பியே வைத்துள்ளனர். (தம் மத போதனை குறித்து பேசியதற்கு ஏற்கனவே
பதில் எழுதியிருக்கிறேன்.) (0:31:00)
41.யாரோ ஒரு லூசு முஸ்லிம்களால் கொல்லப்பட்டவர்கள் என்று
இரண்டு கோடி எழுபது லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக எழுதி வைத்துள்ளாராம். அதை
கொண்டுவந்து ஒரு வாதமாக வைக்கிறார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அனைத்துமே இஸ்லாத்தை முறையாக
பின்பற்றுவோரால் செய்ய்ப்பட்டவையும் இல்லை.
ஆனால் பைபிளிலோ கர்த்தரின் சொல்படி,
கணக்கில்லாத அளவு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
-மீதியானியர்களில் ஆண்கள்
அனைவரையும் கன்னி அல்லாத அனைத்து பெண்களையும் கொன்றார்கள். அதுவும் கர்த்தருடைய
சொற்படி செய்தார்கள். எண்ணாகமம் 31. இதற்கு
கணக்கு இல்லை
-பல ஊர்களை கைப்பற்றி அதிலுள்ள
ஊர்மக்கள் அனைவரையும் கொன்றார் யோசுவா தீர்க்கதரிசி. யோசுவா
10,11 அதிகாரங்கள். இதற்கு கணக்கு
இல்லை
-எரிகோ ஊர்மக்கள் அனைவரையும்
கொன்றனர் - யோசுவா 6. இதற்கு கணக்கு இல்லை
-ஆயி எனும் ஜனத்தின் 12000
ஊர்மக்களை கொன்றனர் -யோசுவா 8:25.
-பென்யமீன் மக்களுக்கு
மனைவிகள் தேடுவதற்கு சில ஊர்மக்கள் அனைவரையும் கொன்றனர்- நியாயாதிபதிகள் 21.
இதற்கு கணக்கு இல்லை
-இதே போல்
அமேலிக்கியர்களின் குழந்தைகள் உட்பட அனைவரையும் ஈவிரக்கமின்றி கொன்றனர். அதுவும்
கர்த்தர் சொற்படி- 1 சாமுவேல் 15:2-3
இப்படி எண்ணற்ற மக்களை கர்த்தரின்
தீர்க்கதரிசிகள் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கிறிஸ்தவ மன்னர்களால்
கொல்லப்பட்டவர்கள், ஹிட்லர் போன்ற கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டவர்கள் என லிஸ்ட்
போட்டால் மாமா கூறும் கணக்கை விட தாண்டி விடும். (0:32:30)
42.மீண்டும் மாமா, world dangerous terrorist என்று லிஸ்ட்
போட்டு அவர்கள் இஸ்லாமியர் என கூறுகிறார். உலகத்தில்
அமேரிக்கா , இஸ்ரேல் போன்ற
நாடுகளால் கொல்லப்படுபவர்கள் கொல்லப்பட்டவர்கள் என எடுத்துக்கொண்டால் முதலில்
வந்து நிற்பது ஜனநாயகம் பேசும் இவர்கள் தான்.
எந்த தீவிரவாதத்தையும் ஆட்சியை பிடித்த பின் செய்தால், தீவிரவாதமாக இவர்கள்
கருதுவதில்லை. ஆட்சி
யார் செய்கிறார் என்பதை பொருத்தே தீவிரவாதி என்ற பெயரும் தங்கி நிற்கும்.
இவர்கள் கூறும் முஸ்லிம் தீவிரவாத
குரூப்புகள் செய்த கொலைகள் 10,000ஐ தாண்டுவது கூட ஆச்சரியம் தான். ஆனால் இஸ்ரேல் பொதுமக்கள் 50,000இற்கு மேல் ஒரே வருடத்தில் கொன்றதையோ, அமேரிக்கா முஸ்லிம் நாடுகளிலும்
வியட்நாமிலும் கொன்றவர்களை பற்றியோ கணக்கிட்டு, ஜப்பானில் அணுகுண்டு போட்டது முதல்
கணக்கிட்டு பார்த்து தீவிரவாதப் பெயர் வழங்கப்பட்டதா?
இல்லையே...(
கிறிஸ்தவ அமர்வு முடிவு
6.முஸ்லிம் தரப்பு மூன்றாம் அமர்வு
43.முஸ்லிம் தரப்பு அமர்வு
-மனைவியை அடிப்பது
பற்றி, இலேசாக காயமேற்படாமல் அடிப்பதற்கே இஸ்லாம் அனுமதி வழங்கியது
சுட்டிக்காட்டப்பட்டது. (முஸ்லிம் 2334 நீண்ட ஹதீஸ்). அத்துடன் மனைவியரிடம் நல்லமுறையில் நடந்துகொள்ளும் படி
வழிகாட்டியதுடன், அவர்களிடம்
சிறந்த முறையில் நடந்துகொள்பர்களே சிறந்தவர்கள் என்ற நபிமொழியும்
சுட்டிக்காட்டப்பட்டது.(திர்மிதி 3895)
(இஸ்லாத்தில் ஒருவர் தன்
மனைவி மீது விபச்சார குற்றச்சாட்டு
வைத்தால், அதை எதிர்த்து சாட்சி சொல்லுவதற்கு (லிஆன்)
இஸ்லாம் உரிமை கொடுத்துள்ளது.(24:6-9). ஆனால் பைபிளிலோ ஒருவன் தன் மனைவி முதலிரவில்
கன்னியாக இருக்கவில்லை என்று சொன்னால், அப்போது கூட அவளது
ரத்தம் படிந்த துணியை ஆதாரமாக ஊர் பெரியவர்களுக்கு காட்டுமாறு சொல்கிறது
(உபாகமம் 22:13-21). சில பெண்களுக்கு இப்படி ரத்தம்
வருவது கிடையாது. அவர்களை கொச்சைப்படுத்தும் வழியாக
பைபிள் கூறியுள்ளது)
-போதகர் சுதாகர்
மடத்தனமாக முஸ்லிம் 5335இல் வரும் நிகழ்வு பற்றி உலரியதற்கு பதிலாக, அதிலேயே பாவம் செய்துவிட்டு
மனந்திருந்தி பரிகாரம் கேட்டு வந்ததாக தெளிவாக இருப்பதை சுட்டிக்காட்டினர். (அதற்கான பரிகாரம் தான் தொழுகையை நிலைநாட்டுவது.)
ஆனால் இயேசுவிடம் வந்த விபச்சாரி குறித்தோ
அவள் மனம் வருந்தி வந்தால் என்பதே கிடையாதே . அத்தோடு பாவமில்லாதவன் அவளை
தண்டிக்கட்டும் என்று சொன்னதை சுட்டிக்காட்டி, இப்படிப் பார்த்தால் உலகத்தில் எந்த
நீதிமன்றமும் செயற்பட முடியாதே என்பது சுட்டிக்காட்டினர்.
(ஆனால் கன்னிப்பெண்ணோடு
விபச்சாரம் செய்தால், தகப்பனுக்கு விருப்பம் இல்லாவிட்டால், பரிசம் கொடுத்தால்
போதுமானது என்று யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது. எந்த
தண்டனையும் இல்லை. இது எந்த வகை ஒழுக்கம்?
கன்னிப் பெண்ணை கற்பழித்தால், அப்போது கூட
அவளை திருமணம் முடிப்பதை தான் பைபிள் வழிகாட்டுகிறதே தவிர தண்டனை இல்லை... மாறாக
50 சேக்கல் வெள்ளி கொடுக்கும்படி தான் கூறுகிறது - உபாகமம் 22:28-29... அதாவது கற்பழிக்கப்பட்ட பெண்ணை காலம்
முழுவதும் கற்பழிக்கும் வழியாக இதை எடுக்கலாமா? )
-முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என
சித்தரிக்கும் முட்டாள் போதகருக்கு, அவர்களைவிட அதிககொலைகள்
செய்கிற இஸ்ரேலை அவ்வாறு ஏன் தீர்ப்பதில்லை என்றும் அவர்களும் தமக்கு தேவன்
கொடுத்த நிலம் என்று மதத்தை வைத்து தானே தீவிரவாதம் செய்வது
சுட்டிக்காட்டப்பட்டது.
-மதத்திற்காக கொலை செய்வதற்கு கர்த்தரே
வழிகாட்டி சட்டம் கொடுத்தது உபாகமம் 13:12-16இலே உள்ளதை சுட்டிக்காட்டப்பட்டது.
-இஸ்லாத்தில், ஒரு உயிரை
அநியாயமாக கொன்றவர் முழு மனிதர்களையும் கொன்றவர். ஒரு உயிரை வாழ வைத்தவர் முழு
மனிதர்களையும் வாழவைத்தவர் என்பது கூறப்பட்டது (குர்ஆன் 5:32)
(இதேபோல் முஸ்லிமல்லாத ஒப்பந்த
குடிமகனை கொன்றவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டான் என்றும் (புகாரி
3166), அப்படிப்பட்ட குடிமகனுக்கு அநீதி இழைப்பவனுக்கு உரிமைகளில் குறை
வைப்பவனுக்கு, அவனது சக்திக்கு மீறியவற்றை சுமத்துபவனுக்கு மறுமையில் நபிகளார் எதிராக வாதிடுவேன் என்று
எச்சரிக்கை செய்துள்ளார் (அபூதாவூத் 3052)
(இதுவும் யுத்தத்தில் மட்டும்,
அங்கே போரிடுபவர்களை கொல்லுவதை தான் இஸ்லாம் கூறுகிறது. இதை
தான் நல்ல அரசுகள் செய்யும். ஆனால் பைபிளிலோ யுத்தத்தில் பழிவாங்கும் ஒரே
நோக்கத்திற்காக,
அப்பாவி குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தரே
வழிகாட்டினார்- 1 சாமுவேல் 15:2-3... இதனால் தான்
இஸ்ரேலும் அதை சார்ந்த கிறிஸ்தவ நாடுகளும் தம் சொந்த இலாபத்திற்காக தமக்கு
பிடிக்காதவர்களின் குழந்தைகளையும் கொல்லுகிறார்கள். இத்தகையோர்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விமர்சிப்பதற்கு கூட தகுதி இல்லை.
ஐநாவில் பதிவு செய்த நாட்டு அரசு கொலை
செய்தால் தீவிரவாதம் அல்ல. ஐநா ஏற்காதோர் கொலை செய்தால் தீவிரவாதம். இது தான்
இவர்களது அநியாய நிலைப்பாடு.
வலியவனுக்கு ஒரு நீதி. எளியவனுக்கு வேறொரு
நீதி))
முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு
7.கிறிஸ்தவ தரப்பு நான்காம் அமர்வு
44.மூன்றாம் போதகர் மடத்தனமாக, தம்மிடம் கேட்கப்பட்டதற்கு பதில் சொல்லாதது குறித்து
கேட்டதற்கு, "விவாத நேரம் இன்னும் இருக்கிறதே"
என்று சொன்னார். இதே ஞானி தான் இரண்டாம் அமர்வில் பேசும்போது முஸ்லிம்
தரப்பு இன்னும் பதில் சொல்லவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தவர். (0:50:45)
45.மதத்திற்காக யுத்தம் பண்ணச்சொன்னதாக வைத்த
வாதத்திற்கு பதில் சொல்லவில்லை என்கிறார்.
ஆனால் வேறு கடவுளை வணங்கியதற்காக ஊர்மக்களை
குழந்தைகள் உட்பட கொன்று ஊரை கொளுத்திப்போடுமாறு கர்த்தர் சொன்ன வசனமாகிய உபாகமம்
13:12-16 வரை வாசித்துக்காட்டி, மதத்திற்கான யுத்தம் முதலில் தொடங்கியது பைபிள்
தான் என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது முஸ்லிம் தரப்பினரால். (0:51:00)
46.மதத்திற்காக வரி வாங்க சொன்னது குறித்து பதில் சொல்லவில்லை
என்கிறார்.
ஆனால் முஸ்லிம் தரப்பினரால் கர்த்தர் சொல்லி
வரி வாங்கும்படி சொன்ன உபாகமம் 20:10-12 சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது கடவுள் சொல்லி வாங்குறார் என்றாலே அது
மதத்திற்கானது தான். அதனால் அதை
விமர்சிக்கும் தகுதியே இவர்களுக்கு கிடையாது. (0:51:08)
47.கிறிஸ்தவத்தில் மனைவியை அடிக்கிற அதிகாரம் புருசனுக்கு
இல்லை என்கிறார் போதகர்.
அப்படி அடிக்க கூடாது என்று பைபிளில்
எங்கேயும் கிடையாது. கிறிஸ்தவ புதிய
ஏற்பாட்டு நூல்கள் துறவறத்தை முற்படுத்தி பேசுவதால், இல்லறத்தில் என்ன பிரச்சினை
வரும் என்று அதை எழுதியோருக்கு தெரியவில்லை.
கணவன் பயங்கர குடிகாரனாக இருந்து மனைவியை
அடிக்கிறான் என்றால், கிறிஸ்தவத்தின் படி அதற்காக பிரிய அனுமதி இல்லை. அப்படி பிரிந்தால் அதையே விபச்சாரம் என்று
சொல்லியிருக்கிறது குறித்து பதில் இந்த லட்சணத்தில் தான் உள்ளது.
அத்தோடு பைபிளில் பெண் என்பவள் ஆணின் உயிரற்ற
சொத்து போல தான் கருதப்படுகிறாள். அதனால்
தான் அவளை விற்றுப் போடுவதற்கும் கர்த்தர் தகப்பனுக்கு உரிமையை வழங்கியுள்ளார்
(யாத்திராகமம் 21:7-10).
அத்தோடு அவள் சபையில் பேசவோ ,சகலத்திலும் அடக்கமாக இருந்து கற்றுக்கொள்ள
வேண்டும் ஆனால் கற்பிக்கவோ ஆண்கள் மீது அதிகாரம் செலுத்தவோ கூடாது (1 கொரிந்தியர்
14:34, 1 தீமோத்தேயு 2:11-12
இப்படிப்பட்ட பெண் எதாச்சும் எதிர்த்து
பேசுவாளா?
ஆனால் இஸ்லாமோ,
1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே
பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843)
2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும்,
அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன்
16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும்
(புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை
அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும்
நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள்
(முஸ்லிம் 5127 (2631))
3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத
காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும்
அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது
(புகாரி 5136,5138, 6945,6946)
4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின்
குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை
நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948)
5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின்
சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763
6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர்
விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176)
இப்படி சுதந்திரம் உள்ளபோது தான் எதிர்த்து
நிற்பர். அப்போது கூட இலேசாக காயமேற்படாதவாறு அடிப்பதற்கே இஸ்லாம் அனுமதிக்கின்றது.
(52:00)
48.இஸ்லாத்தில் மனைவியை இலேசாக அடிப்பதற்கே அனுமதி
வழங்கியுள்ளது (முஸ்லிம் 2334) என்பதை
உணராமல், அப்படி மனைவியை கணவன் அடித்தால் என்ன தீர்வு என்று கேட்கிறார்.
இஸ்லாத்தில் மனைவியினால் விவாகரத்தை கேட்டு
பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவன் பொருத்தமற்றவனாக இருந்தால் பிரிந்துவிடலாம். ஆனால் கிறிஸ்தவத்தில்
இதற்கு எந்த தீர்வும் இல்லை.
(00:52:10)
49.கிறிஸ்தவம் பிரிவினைக்காக யுத்தம் செய்வதல்ல என்கிறார்.
*அதிகாரம் இல்லாத வல்லமை இல்லாத மக்களுக்கு போர்
செய்ய சொன்னால் அழிந்து தான் போவார்கள். ஆனால் வல்லமையோடு இருந்தபோது, மதத்திற்கான பிரிவினைக்காக
குடும்பத்தாரையும் கொல்லும்படி தான் உபாகமம் 13:6-10 சொல்கிறது.
அதுவும் அவர்கள் எதிர்த்ததற்காக அல்ல... வெறும் மத
வித்தியாசத்திற்காக பைபிள் கூறுவதாகும்.
*அத்தோடு இவர்கள் கைப்பற்றி வசிக்க போகும்
ஊரிலுள்ள மாற்றுமத இனங்களை முற்றாக கொன்றொழிக்கும்ப/டி சொல்கிறார் கர்த்தர். அதற்கு
காரணம் அவர்களின் மதத்திற்கு இவர்கள் சென்றுவிடுவார்கள் என்ற பயத்துக்காக (உபாகமம்
20:18)
இது மதத்துக்கான
பகை அல்லாமல் வேறு என்ன?
*அவர்களது தோப்புகளை வெட்டி சிலைகளை
உடைத்தும் போடும் படியும் கர்த்தர் சொன்னார் அல்லவா? (யாத்திராகமம் 34:13,உபாகமம்
7:5,12:3) இதெல்லாம் என்னவாம்?
*அத்தோடு பவுலும் மாற்றுமத சிலைவணங்கியை
விபச்சாரகனோடும் கொள்ளைக்காரனோடும் சேர்த்து கூறி அத்தகையவனோடு பழகவோ ஒன்றாக
சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்திவிடு என்கிறார் 1 கொரிந்தியர் 5:11,13
ஆனால் இஸ்லாத்திலோ, மார்க்கத்திற்காக யுத்தம் செய்து ஊரைவிட்டு
விரட்டாத முஸ்லிமல்லாதவர்களுக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை -குர்ஆன் 60:8
அத்தோடு, முஸ்லிமல்லாத ஒப்பந்த பிரஜையை
கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி 3166), அத்தகையோரின்
உரிமைகளில் குறைவைத்து, சக்திக்கு
மீறி பாரத்தை சுமத்தினால் அவர்களுக்கு எதிராக மறுமையில் நான் வழக்காடுவேன் என்று
நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார் -அபூதாவூத் 3052
(0:53:00)
..
50.மீண்டும் இதே மூன்றாம் போதகர், தங்களின் தரப்பு மதத்துகாக
போர் பற்றி பேசுவதாகவும் முஸ்லிம் தரப்பு அதற்கு பதில் தராமல் நாட்டுக்காக போரை
பற்றி பேசுவதாக குறிப்பிடுகிறார்.
ஆனால் உண்மையில் கடவுள் சொல்லி கொலை பண்ணுதல்
என்றாலே அது மதத்துக்கான போர் தானே. அதை பைபிளில் இருந்தே ஆதாரமாக உபாகமம்
13:12-16 வேறு கடவுளை வணங்கும் தமக்கு கீழே உள்ள ஊரை முற்றாக அழிந்து முழு
உயிர்களையும் கொல்லும்படி வழிகாட்டியது தேவன் தான் என்பதை
சுட்டிக்காட்டியிருந்தனர். இதை உணர்ந்து கொள்ள புத்தி
இல்லை!
உபாகமம் 20:16-18 மாற்றுமதத்தை கற்றுக்கொள்ளாமல்இருப்பதற்காகவே தாம் போர்செய்து கைப்பற்றும் ஊரிலுள்ள மாற்றுமதத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றுபோடுமாறு கர்த்தர் சொன்னார். இது தான் நாட்டுக்கான போரா?
(0:55:10)
51.மீண்டும் அறிவற்ற வாதமாக, முஸ்லிம் நாடுகளிலேயே பள்ளிவாசலுக்கு
நிம்மதியாக போக முடியாது. வெடிகுண்டு
வைக்கிறார்கள் என்று இதற்காக முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குறை சொல்கிறார்.
*இஸ்லாம் முஸ்லிமை கொல்லுவதே இறை நிராகரிப்பு
என்கிறது(புகாரி 48).
*முஸ்லிமல்லாத முஸ்லிம்களின் கீழுள்ள நபரை
கொல்லுபவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் என்று சொல்கிறது.(புகாரி 3166)
போர் செய்ய வேண்டிய சூழலில் போர் செய்யும்படி
வழிகாட்டல் அவசியம் தானே. அதை தான் இஸ்லாம் சொல்லியது.
அப்போது கூட யுத்தத்திலும் பெண்கள்,
சிறுவர்கள் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), போரிடாத
வயோதிகர்கள் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம்
புகுந்துள்ள துறவிகள் (அஹ்மத் 2728) போன்றோரை கொல்ல கூடாது என்று தனிச் சட்டமும்
போட்டுள்ளது.
பைபிள் கர்த்தரோ பழைய பகைக்காக குழந்தைகளையும்
பெண்களையும் மிருகங்களையும் கொன்று போடும்படி சொன்னார்-1 சாமுவேல் 15:2-3
இதை வைத்துக்கொண்டு இப்படி பேசலாமா? (0:55:30)
52.மீண்டும் முதல் போதகர் உலர ஆரம்பிக்கிறார். குர்ஆன் 4:34
மனைவியை அடியுங்கள் என்று தான் உள்ளது. இலேசாக அடியுங்கள் என்பது அடைப்புக்குள்
முஸ்லிம்களாக போட்டது என்கிறார்.
*உண்மையில் ஹதீஸில் நபிகளார் அதை
வழிகாட்டியுள்ளார்கள் (முஸ்லிம் 2334). அதிலிருந்து தான் இவர்களை போன்ற மடையர்கள் தப்பாக புரிந்துவிட கூடாது
என்பதற்காக அடைப்புக்குள் போட்டிருக்கிறார்கள்.
*பைபிளில் எந்த தப்புகள் செய்யக்கூடாது என்ற
லிஸ்டில் மனைவியை அடித்தலை கூறவே இல்லை. அடித்தாலும் வெளியில் முறையிடவோ
அவளாக பிரிவை கேட்கவோ பழைய ஏற்பாட்டிலும் அனுமதி இல்லை. புதிய
ஏற்பாட்டிலும் அனுமதி இல்லை.
*பெண்ணுக்கு சுதந்திரமே கொடுக்காமல் உள்ள
மதத்தில், அவள் எதிர்த்து நிற்பாள் எனும் பிரச்சினைக்கு தீர்வு கூறுமா? காரணம்
அவளை ஆணின் அடிமையாக தான் கருதுகிறது பைபிள். அதனால் தான் தகப்பனுக்கு தன் மகளை
விற்றுப் போட அனுமதிக்கிறார் கர்த்தர் - யாத்திராகமம் 21:7-10..
அடிமைப்பெண் தன் எஜமானை எதிர்க்க சக்தி பெறுவாளா? அதனால் அதற்கு தீர்வு கூறாது.
இஸ்லாம் பெண்களுக்கு உரிமையை வழங்கியதால் அவள் எதிர்த்து நிற்பாள். அப்போது
கூட இலேசாக காயமேற்படாதவாறு அடிப்பதற்கே இஸ்லாம் அனுமதிக்கின்றது. காரணம் குடும்பம் சேர்ந்து நடப்பதற்கு தான்.
(0:56:20)
53.மீண்டும் முதலாம் போதகர், முகம்மது நபி மனைவிகளிடத்தில்
நீதமாக நடக்கவில்லை. ஆயிஷாவை அதிகம் நேசித்தார். ஆயிஷா விசயத்தில் தன்னை நோவினை செய்ய வேண்டாம் என்றும் ஆயிஷாவின்
போர்வையில் இருக்கும்போது மட்டும் தான் தனக்கு வஹீ வந்துள்ளது (அதாவது மற்ற மனைவியரின் போர்வைக்குள் இருக்கும் போது வஹீ வந்ததில்லை)
என கூறி அல்லாஹ் பிரிவினை உண்டாக்குகிறார் என்கிறார்.
அன்பு , நேசம் , விருப்பம் என்பவை மனித
கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை. ஒருவர் திட்டம் போட்டு நேசிக்க முடியாது. அது இயல்பாகவே இறைவன் உண்டாக்கியது. ஒரு
மனிதரால் அனைவரையும் ஒரேயளவாக நேசிக்க முடியாது. ஆனால் நீதியாக நடந்து கொள்ளலாம்.
அதன்படியே முகம்மது நபி தன் மனைவிகளில் ஆயிஷாவை
மிகவும் நேசித்தார்கள். அது அவர்களது
கட்டுப்பாட்டுக்குள் வருவது அல்ல!!
போர்வைக்குள் இருக்கும்போது என்றால்
நிர்வாணமாக இருப்பது அல்ல.. ஆயிஷா (ர) அவர்களும் வீட்டுக்குள் முழுதாக மறைக்க
வேண்டியபடி மறைக்காத நேரங்களில் ஜிப்ரீல் (அலை) வீட்டுக்குள் வந்ததில்லை என்பதை
முஸ்லிம் 1774 நீண்ட ஹதீஸில் தெளிவாக உள்ளது.
மற்ற மனைவிமார்களுடன் இருந்தபோது தனக்கு
அவ்வாறு வஹீ வந்ததில்லை என்பதால் ஆயிஷா அவர்களுக்கு ஒரு சிறப்பு இருப்பதை தான்
நபிகளார் சுட்டிக்காட்டினார்கள்.
இயேசு தன் சீடர்களில் ஒருவனோடு மாத்திரம்
மிகவும் அன்பாக இருந்ததாக யோவான் 13:23,19:26,21:7,20-24
கூறுகிறதே. இதை வைத்து பார்த்தால் போதகரின்
அளவுகோலின்படி சீடர்களுக்குள் பிரிவினை உண்டாக்குகிறார் இயேசு என்று எடுக்கலாமா?
ஒழுக்கம் பற்றி, பழைய ஏற்பாடு மிகவும்
கேவலமான ஆபாசப் பேச்சுகளை கொண்டுள்ளது.
சாம்பிளுக்கு
மூன்று வசனங்கள்:
[3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்;
தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள்
அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.
[20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும்,
குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி
அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [எசேக் 23:21 IRVTam
[21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின்
மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில்
செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
https://bible.com/bible/1899/ezk.23.21.IRVTam
எருசலேம் சமாரியா மக்கள் சிலை வணக்கம்
செய்ததாக விமர்சிப்பதற்கு பதிலாக, அதை விபச்சாரத்திற்கு ஒப்பிட்டு, விபச்சார
காட்சிகள் வர்ணிக்கப்படுகிறது.
இதுவும் போர்வைக்குள் இருத்தலும் ஒன்றாக
இயலுமா? (0:58:10)
54.குடிகார கணவனை பற்றி கேட்டதற்கு 1 பேதுரு 3:1-2ஐ குறிப்பிடுகிறார்:
அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப்
புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது
திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள்
கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே
ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 1 பேதுரு 3:1-2
விசுவாசிக்காத கணவன் குறித்து சொல்லப்பட்டதை அப்படியே இதற்கு மேற்கோள்
காட்டுகிறார். குடித்து விட்டு
அடிப்பவனுக்கு பயபக்தி எடுபடாது. விசுவாசமில்லாதவனை ஈர்ப்பதற்காக தான் பயபக்தியோடு
கூடிய கற்புள்ள நடக்கை பயன்படும்.
ஏதோ பேச வேண்டும் என்பதற்காக சொல்கிறார்.
அதாவது மனைவியை குடித்துவிட்டு எவ்வளவு
அடித்தாலும், விவாகரத்து செய்யாமல்
பயபக்தியோடு இருக்க வேண்டும். இது நல்வழியா?
(59:30)
55.குர்ஆன் 9:123 பற்றி பதில் சொல்லவில்லை
வாய் திறக்க முடியவில்லை என்று மடத்தனமான குற்றச்சாட்டை வைக்கும் போதகர், முஸ்லிம் தரப்பு வைத்த உபாகமம் 13:12-16இற்கு வாய் திறக்கவில்லை..
(1:00:45)
(இதற்கு மேலே ஏற்கனவே
எழுதிவிட்டேன்)
56.மீண்டும் லூசுத்தனமாக போதகர் , குர்ஆன் 66:9 இலே காஃபிர்களுடனும் முனாஃபிக்குகளுடனும் (நயவஞ்சகர்கள்)
போரிடுமாறு சொல்கிறது என்கிறார்.
காஃபிர்களுடன் யுத்தம் நிகழும் சூழ்நிலையில்
அவ்வாறு சொல்லாமல், பொறுமையாக இருக்குமாறு இருங்கள் என்றா சொல்ல முடியும்?
இந்த காஃபிர்கள் தமக்கு சக்தி இருந்தால், முஸ்லிம்களை
இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாமல் யுத்தத்தை நிறுத்த மாட்டார்கள் (2:217) என இறைவன் அறிவான்.
அதனால் இதை தவிர வேறு வழி உண்டா?
57.போதகர் எதிர்தரப்பை பைபிளை வாசிக்காமல்
குற்றச்சாட்டு வைப்பதாக கூறி உபாகமம் 13:12-13 ஐ மட்டும்
வாசித்துவிட்டு, அதற்கு பின்னுள்ள வசனத்தை படிக்காமல், 13:10ம்
வசனத்தை கூறி எஸ்கேப் ஆகிறார்.
அதிலே தெளிவாக, வேறு கடவுளை வணங்கினால், அந்த
ஊர் மக்களை வெட்டி மிருகங்களை கொன்று ஊரை எரிக்க வேண்டும் என்று உள்ளதை அப்படியே
இருட்டடிப்பு செய்கிறார். அல்லது பைபிளை பற்றி அவருக்கே தெரியாமல் பதில் கொடுக்க
வந்துள்ளார்-
த்தூஊஊ
(1:02:39)
இதுகூட போர் கிடையாது. கொலை.. இதை
மறைத்துவிட்டு, அல்லாஹ்வை ஏற்காதவனை கொல்லு என சொல்வதாக உருட்டுகிறார்.
(ஏற்கனவே எழுதிவிட்டேன்)
58.மீண்டும் குண்டுப்போதகர் , முகம்மது நபி கூறும் அல்லாஹ்வை
தாம் மறுப்பதாகவும் அதற்கு காரணம் அவர் அருகாமையில் உள்ள காஃபிர்களை கொல்லும்படி
சொல்வதாகவும் உலருகிறார்.
ஆனால், தன் ஊரிலிருந்து புறப்பட்ட சிலர் வேறு கடவுள்களை வணங்கினால், வணங்கும்
ஊரையே கொளுத்திப் போட்டு , மக்களை குழந்தைகுட்டிகள் மிருகங்கள் உட்பட வெட்டிப்
போடும் படி கர்த்தர் சொன்னாரே- உபாகமம் 13:12-16 அதை ஏற்றுப்பாராம்.
ஆனால் குர்ஆன் அவ்வாறு கொல்லுமாறு
சொல்லவில்லை. போர்க்களத்தில் தான் கொல்ல
அனுமதிக்கிறது. அப்போது கூட யுத்தத்திலும் பெண்கள்,
சிறுவர்கள் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்கள் (அபூதாவூத் 2669), போரிடாத
வயோதிகர்கள் (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம்
புகுந்துள்ள துறவிகள் (அஹ்மத் 2728) போன்றோரை கொல்ல கூடாது என்று தனிச் சட்டமும்
போட்டுள்ளது.
இதைத்தவிர மற்றவர்கள் போர் செய்யும் ஆண்கள்
மட்டுமே. அவர்களோடு தான் போரும் நடந்தது.
மேலும் அநியாயமாக முஸ்லிமல்லாத ஒப்பந்த
பிரஜையை கொன்றவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி 3166 ) நபிகளார்
எச்சரித்து வழிகாட்டியுள்ளார்கள்
.(1:05:25)
59.மீண்டும் அதே போதகர், தம்மை மெய்யான
கடவுளை வணங்குபவர்கள் என்கிறார். ஆனால் இயேசுவோ பிதா ஒருவரே மெய்யான கடவுள்
என்று கூறியுள்ளார் (யோவான் 17:3)
அந்த பிதாவே இயேசுவின் தேவன் என்றும் இயேசுவே
சொன்னதாக யோவான் 20:17, வெளிப்படுத்தின விசேஷம் 3:12 கூறுகிறது
அந்த பிதாவும் இப்படி வேறு கடவுள்களை வணங்கும் ஊரை அழிக்க
சொன்னதற்கு (உபாகமம் 13:12-16) இந்த
மூடர்கள் சிந்திக்கவே இல்லை. (1:06:00)
60.மீண்டும் போதகர், புகாரி 2946, முஸ்லிம் 33 ஹதீஸாகிய "இந்த மனிதர்களுடன் அவர்கள்
,அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று கூறும்வரை போரிடுமாறு
ஏவப்பட்டுள்ளேன்" என்ற ஹதீஸை குறிப்பிடுகிறார்
பதில்:
*முதலாவது இதிலுள்ள வார்த்தை "அன் உகா(த்)தில" என்பது
போர் செய்வதை குறிக்கிறது. போர்/சண்டை
என்றாலே இரண்டு நபர்களோ இரண்டு கூட்டங்களோ ஒன்றை மற்றது எதிர்த்து போராடுவதை
குறிக்கும்.
அதாவது இஸ்லாத்தை எத்தி வைக்கும்போது அதை
எதிர்த்து நிற்போர் இருப்பதை குறிக்கிறது. அத்தகையோரே முஸ்லிம்களை "அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை"
என்று கூறியதற்காக வீடுகளிலிருந்து வெளியேற்றினார்கள் (குர்ஆன் 22:40)
*இந்த ஹதீஸில் உள்ள "அந்நாஸ் -இம்மனிதர்கள்" என்பது சிலை வணங்கிகளான அரபு இணைவைப்பாளர்களை
குறிக்கும். இதை
தெளிவாக நஸாயீ 3966யும் அந்நாஸ் என்பதற்கு பதிலாக அல்முஷ்ரீகீன் என கூறுகிறது .
இத்தகைய மக்களே முஸ்லிம்களையும் முகம்மது நபியையும் ஊரைவிட்டு வெளியேற்றி தொடங்கி வைத்தவர்கள்.(குர்ஆன் 9:13)
*ஏனையோரை பொருத்தமட்டில்,
அவர்கள் இஸ்லாத்தை ஏற்கலாம். அல்லது ஜிஸ்யா கட்டலாம் (குர்ஆன்
9:29, புகாரி 3159, முஸ்லிம் 3566)
,ஜிஸ்யா கட்டுவோர் பாதுகாக்கப்படுவார்கள்.(புகாரி 3052)
அவர்களை கொல்பவர்கள் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி 3166),
அவர்களின் உரிமைகளில் குறைவைப்பவரும், அவரது சக்திக்கு மீறி சுமைகளை
சுமத்துபவருமான மக்களுக்கு எதிராக நபிகளாரே வழக்காடுவேன் என்று கூறியுள்ளார்கள்
(அபூதாவூத் 3052)
*இந்த ஹதீஸ் இஸ்லாத்தை தம்
வைராக்கியத்திற்காக எதிர்த்து போர் செய்யும் மக்களான அரபு முஷ்ரிக்குகளுடன்
அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை தொடருமாறு கட்டளையிடப்படுகிறது.
(2:190-193). இல்லாவிட்டால், முஸ்லிம்களை காஃபிர்களாக ஆக்காமல்
அவர்கள் விடமாட்டார்கள். அதுவரைக்கும் அவர்கள் தொடர்ந்து போர் புரிவார்கள்.(குர்ஆன் 2:217)
இத்தகைய நிலையில் நபியவர்கள்
கட்டளையிடப்பட்டது போல செய்வதை தவிர வேறு ஏதாவது வழி உண்டா?
அப்படியானால், அவர்கள் அன்றே முஸ்லிம் அனைவரையும் காஃபிர்களாக
ஆக்கி, அவர்களை போல ஆக்கியிருப்பார்கள்.
இதை ஐயாவுக்கு விமர்சிக்க தகுதி இருக்கிறதா?
ஐயா நம்பும் பைபிளிலோ, இவர்களின் ஊர் மக்கள்
இவர்களது நம்பிக்கையை விட்டுவிட்டு , வேறு கடவுள்களை வணங்கினால், அந்த ஊர்மக்கள் அனைவரையும் வெட்டிக்கொன்று
(குழந்தைகள் உட்பட), ஊரையே கொளுத்திப் போடுமாறு தேவன் சொல்லியுள்ளார். (உபாகமம் 13:12-16). இந்த வசனத்தை மூடி மறைத்து 13:10
வாசித்து வஞ்சகமாக நடித்துள்ளார் போதகர் சுதாகர்.
இவர்கள் வசிக்க தேவன் கொடுக்கும் ஊரிலுள்ள
மக்கள் அனைவரையும் கொல்லுமாறு தேவன் சொல்லியுள்ளார். இல்லாவிட்டால் இந்த மடையர்கள்
அந்த மக்களின் மதத்தை கற்றுக்கொள்வார்களாம்- உபாகமம் 20:16-18
அந்தளவுக்கு வாயில் விரல் வைத்தாலும் கடிக்க
தெரியாதவர்கள் அல்லவா?
(1:07:00)
61.அரேபிய தீபகற்பத்திலிருந்து யூதரையும்
கிறிஸ்தவரையும் வெளியேற்றுவேன் என்றும் முஸ்லிமை தவிர வேறொருவரையும் அங்கே
விடமாட்டேன் (முஸ்லிம் 3626) என்ற ஹதீஸையும்
குறிப்பிடுகிறார் போதகர்.
அரேபிய தீபகற்பம் என்று நபியவர்கள் கூறியது
ஹிஜாஸ் மாநிலத்தை குறிக்கும். அதாவது
மக்கா,மதீனா,யமாமாவும் அதன் சூழ்ந்த பகுதிகளும்.
இதனால் தான் உமர் (ர) அவர்கள் யூதர்களை ஹிஜாஸிலிருந்து தைமாவுக்கும், அரீஹாவுக்கும் (ஜெரிகோ)
நாடுகடத்தினர்.(புகாரி 2338,3152)
இறுதியாக கைபரிலிருந்து தான் யூதர்களை உமர்
(ர) அவர்கள் வெளியேற்றினார்கள். அதுவும்
அவர்கள் அவருடைய மகனின் கையின் மூட்டுகளை
பிசகச்செய்ததன் பின்னரே நிகழ்ந்தது.. அதுவரை தற்காலிகமாக தங்குவதற்கு
அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.(புகாரி 2730). நபியவர்களுக்கு அவர்கள் சேர்ந்து விசம் தடவிய இறைச்சியை சாப்பிட
கொடுத்ததன் பின்னரும் அங்கே விடப்பட்டிருந்தார்கள் (புகாரி 3169)
யுத்தங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்த
அந்த காலகட்டத்தில் யூதர்களாலும்
கிறிஸ்தவர்களாலும் இணைவைப்பவர்களாலும் புனித பூமிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல்
இருப்பதற்காகவும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் இவர்களின் வைராக்கிய துர்ப்பிரச்சாரங்கள்
செய்யப்படுவதை தடுப்பதற்கும் இதை தவிர வேறு வழி இல்லை!
அவர்கள் ஒரேயடியாக துரத்தப்படவுமில்லை.... துரோகங்கள் செய்தபோது தான் படிப்படியாக
வெளியேற்றப்பட்டனர் (புகாரி 4028)
ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் வசிக்கலாம்.
அப்படி வசிக்கும் போது கூட , முஸ்லிம்கள்
அவர்கள் மீது நல்ல முறையில் நடந்துகொண்டு, அம்மக்களின் பாதுகாப்புக்காக
முஸ்லிம்கள் யுத்தம் செய்யும்படி வழிகாட்டப்பட்டிருந்தார்கள்.(புகாரி 3052,3700)
இதை குற்றச்சாட்டாக வைப்பதற்கு , போதகருக்கு தகுதி உண்டா?
எமோரியன்,கானானியன், ஏத்தியர் போன்ற மக்களை
அவர்களின் வசிப்பிடத்திலிருந்து துரத்தி, அங்கே இவர்கள் குடியேற வேண்டும் என்று
கர்த்தர் சொன்னார். அங்கே அவர்களோடு உடன்படிக்கை செய்யாமல் சிலைகளை உடைத்து
தோப்புகளை வெட்டிப் போட சொன்னார்.(யாத்திராகமம் 34:11-16)
நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள்
தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல
மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து, அவர்கள் பலிபீடங்களை
இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால்
சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும்
அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள். உபாகமம் 12:2-3
யாத்திராகமம் 23:27-33 IRVTam
[27] எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு
செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று,
உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன். [28] உன்னுடைய முகத்திற்கு
முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை
உனக்கு முன்னே அனுப்புவேன். [29] தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு
விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு
முன்பாக துரத்திவிடாமல், [30] நீ விருத்தியடைந்து, தேசத்தைச்
சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக
துரத்திவிடுவேன். [31] செங்கடல் துவங்கி
பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும்
உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை
உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய்.
[32] அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. [33] உன்னை
எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள்
குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய
தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.
https://bible.com/bible/1899/exo.23.27-33.IRVTam
அவர்களை துரத்துவதற்கு முக்கிய காரணமே மதமாக
தான் உள்ளது.
இதையெல்லாம் படிக்காமல், பெரிய ஞானி போல
கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார் .
இரண்டாம் வீடியோ முடிவு.

Comments
Post a Comment