YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 6
21.கிறிஸ்தவ தரப்பு பதினொன்றாம் அமர்வு
148.இரண்டாம் போதகர், தன்
இஷ்டத்துக்கு அடித்து விடும்போது, யாரோடும் விவாதிக்க தமக்கு திராணி உள்ளதாக
பீத்திக் கொள்கிறார்.
ஆனால் சொன்னதை உள்வாங்க வக்கு கிடையாது. தம்
மதத்தை பற்றியும் தாம் வைத்த வாதம் குறித்தும் அடிப்படை அறிவும் கிடையாது. இதில் இந்த பினாத்தல் வேறு.
149.குர்ஆன் ஹதீஸில் இல்லாத சொந்த சரக்கை
போட்டு பேசுவதாக குற்றச்சாட்டு வைத்ததற்காக பதில் சொல்வதுபோல் வந்து, முகம்மது நபி
மனிதன் என்பதால் இச்சித்தார் என்று முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொண்டதாக கதை
விடுகிறார். முகம்மது நபி
இச்சித்தார் என்று அவர்கள் சொல்லவே இல்லை..
கடைசியில் அவர் பதில் சொல்ல வந்ததற்கும்
பதில் வரவில்லை.. அத்தோடு பொய்யை சேர்த்து
சொல்கிறார்.
(0:03:20)
150.ஆயிஷா (ர) உடனான திருமண விடயத்தில்
முஸ்லிம் தரப்பு தடுமாறியதாக கதை விடுகிறார் மூன்றாம் போதகர். ஆறு வயதில் நடந்தது திருமண ஒப்பந்தம் என
சொன்ன பின்பும் ஏன் ஆறு வயதில் இவர்களின் பாசையில் திருமணம் முடித்தார் என்று
உலருகிறார்.
(இது தொடர்பாக மேலே எழுதியுள்ளேன்)
(0:04:00)
151.கிறிஸ்தவர்கள் சொல்லும்பதிலோ , பைபிளில்
பலதாரமணம் இல்லை மதத்திற்காக போர் இல்லை என சொல்கிறோம் ஆனால் முஸ்லிம் தரப்பால்
பதில் தர முடியல என்கிறார்.
முதலில் இவர்களுக்கு பைபிளின் அடிப்படையே
தெரியல.
முஸ்லிம் தரப்பு தேவன் பலதாரத்தை அங்கீகரித்த
வசனங்களையும் தெளிவாக காட்டினார்கள். (நானும் மேலே எழுதியுள்ளேன்)
மதத்திற்காக போரை பைபிள் சொல்கிறது என்பதை
முஸ்லிம் தரப்பு நிரூபித்தது. அவை எதையும் முழுசாக டச் பண்ணவே இல்லை.. லேசாக டச் பண்ணிவிட்டு வசனத்தையும் மாற்றி படித்துவிட்டு,
எஸ்கேப் ஆகுவதற்காக இதெல்லாம் 144 சட்டம் என மலுப்பிவிட்டு தப்பிக்கப்பார்த்ததே
சுதாகர் எனும் பிஸ்கட் போதகர் தான்.
(4:30)
152.
.47வயதில் முதல் திருமணம் பண்ணிட்டாரு இரண்டாவது மூன்றாவது திருமணமாக
இருந்தாலாவது பரவாயில்லை என்று முஸ்லிம் தரப்பு வாதம் வைத்ததாக உலருகிறார்.
53 வயதில் திருமணம் முடிப்பதை
தவறு போல பேசியதற்காக தான் 47 வயதில் யாக்கோபு திருமணம் முடிந்தது, ஈசாக்கு 40
வயதில் திருமணம் முடித்தது முஸ்லிம் தரப்பு சுட்டிக்காட்டியது.
குடிபோதையில் உலருகிறாரா என்று தெரியல.
0:04:50.
153.தங்களுக்கு இயேசு மட்டுமே முன்மாதிரி என்றும் அவர் மட்டுமே
எந்த பாவமும் குறையும் இல்லாதவர் என்று கூறி பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள்
செய்ததை குறித்து தப்பிக்க பார்க்கிறார்.
யோவான் சுவிசேசமே இயேசுவை கடவுளின் வார்த்தை எனும்
மகன் மனுசனாக வந்தார் என்று சொல்வதாகும். அதிலே இயேசுவை எந்த பாவமும் அறிவீனமும் இல்லாதவராக
சித்தரிக்கப்பட்டிருங்கறது.
ஆனால் மற்ற சுவிசேசங்களிலோ,
தன்னை ஏற்றுக்கொள்ளாதவன் திருந்தவோ
மன்னிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே உவமையாக பேசினார் (மாற்கு 4:10-12)
அத்தி மரத்து சீசன் அல்லாத காலத்தில்
அத்திப்பழம் இருக்கும் என நினைத்துச்சென்று , ஏமாந்து போனதால், அத்தி மரத்தையே
சபித்தார் என்பதாக (மத்தேயு 21:19-20, மாற்கு 11:12-14)
அத்தோடு விசுவாசம் இருந்தால் தான் செய்தது
போல இன்னும் அழிவுகளை உண்டாக்க முடியும் என்பதை தான் சொன்னார். அதாவது அத்தி
மரத்துக்கு மட்டுமல்ல. மலையை கூட பிடுங்கி கடலில்
போடலாம் என்கிறார் (மத்தேயு 21:21)
தன்னிடம் அடையாளம் தேடியோரை பொல்லாத விபச்சார
சந்ததி என்று கடிந்து கொண்டார் (மத்தேயு 12:39)
அத்தோடு திருமண வாழ்க்கையிலோ சமூக வாழ்விலோ
எந்த முன்மாதிரியையும் இயேசுவிடம் காண முடியாது. அதாவது அந்நிய பெண்களை தொடுபவராக முத்தம் வாங்குபவராக (லூக்கா 7:37-46) , துறவறத்தை ஊக்குவிப்பவராகவும் தான் புதிய
ஏற்பாட்டு சொல்கிறது.
0:5:50
154.மீண்டும் பிஸ்கட் போதகர் லூசுத்தனமாக உலர் ஆரம்பிக்கிறார்.
ஃபாத்திமாவின் கணவர் அபூஜஹ்லின் மகளை முடிப்பது பற்றி அவர்
அந்நியச் பெண் என்பதற்காக முடிக்க கூடாது என்பதாக சொல்வதானால் முகம்மது நபி யூதப்
பெண்ணை முடித்திருக்கிறாரே போர்க்களத்தில் உறவு கொண்டிருக்கிறாரே என்கிறார்.
ஆனால் அந்நியப் பெண் என்று வாதம் வைக்கவே
இல்லை.. நபியின் எதிரியான அபூஜஹ்லின் மகள் என்று தான் முஸ்லிம் தரப்பு
சொல்லியிருந்தனர்.
இது இந்த பிஸ்கட் போதகர் மனநோயாளி போல தனக்கு
தானே கேள்வி வைத்து அதிலிருந்து எதிர்க் கேள்வி கேட்டு நேரத்தை வீணடிப்பார்.
அடுத்ததாக யூதப் பெண்ணாக (ஸஃபிய்யா) இருந்தவர் முஸ்லிமாகிவிட்ட பின்பே
நபிகளார் அவர்களை திருமணம் முடித்து தாம்பத்யத்தில் ஈடுபட்டார்கள்.
(0:08:25)
155.ஃபாத்திமா அவர்களை (அபூபக்ர் (ர) அவர்களும், பிறகு உமர் (ர) அவர்களும்)
பெண் கேட்ட போது சிறு பெண்ணாக இருப்பதாக கூறியதாகவும், ஆனால் ஆயிஷா அவர்களை
சிறுவயதிலேயே முடித்ததாக வாதம் வைக்கிறார்.
இதற்கு பதில் மிக இலகுவானது. தன் மகளுக்கு
பொருத்தமான கணவர் யார் என்பதை அப்பெண்ணின் தகப்பனுக்கு தெரியும். அதன்படி தன்
மகள் சிறு பெண்ணாக இருப்பதால் இளவயதுடைய
அலீ (ர) அவர்களுக்கு பொறுத்தமானதாக கண்டார்கள்.
அபூபக்ர் (ர) அவர்களோ, தன் மகளுக்கு முகம்மது
நபி அவர்களே பொருத்தம் என அறிந்து அதற்கு சம்மதித்தார்கள். அதற்கு முன்பே
அல்முத்யிம் இப்னு அதீ என்பவருடைய மகனுக்கு ஆயிஷா(ர) அவர்களை பேசியிருந்தார்.(முஸனத்
அஹ்மத் 25769)
இவை திருமண ஒப்பந்தமே.. தாம்பத்யத்திற்கு
தகுந்த உடல்தகுதியையும் மனத்தகுதியையும் அடைந்த பின் தான் குடும்ப வாழ்வு
நடைபெறும். அதற்கு கட்டாயம் அப்பெண்ணின் சம்மதம் அவசியம்.(புகாரி 5136,6946,6948)
156.ஆயிஷா (ர) அவர்கள் சிறு குழந்தை என்பதாக காட்டுவதற்கு
புகாரி 2661இன் ஒருபகுதியை குறிப்பிட்டு, மாவை குலைந்து
விட்டு உறங்கி விடுவார் அதை ஆடுதிண்பதை கூட அறியாத சிறு பிள்ளை என்று கூறப்பட்டதை
வைத்து ஏதோ தாம்பத்யத்திற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியில்லாத நபர் போல
சித்தரிக்க முற்படுகிறார் பிஸ்கட் போதகர்.
ஆனால் அன்னை ஆயிஷா அவர்கள் உடல்ரீதியாகவும்
மனரீதியாகவும் தாம்பத்யத்திற்கு தகுதியாக இருந்ததனால் தான், அவர் மீது விபச்சாரம்
செய்தாவிட்டதாக அவதூறு பரவியபோது,
1 நபியவர்கள் பரீராவிடமும்,
தன் மனைவி ஸைனபிடமும், தன் தோழர்களிடமும் தன் மனைவி ஆயிஷா குறித்து
விசாரித்துப்பார்த்தார். காரணம் தாம்பத்யத்தில்
ஈடுபடக்கூடியதகுதியுள்ள நிலையில் தான்
காணப்பட்டார்கள் என்பதால் தான்
2.. விபச்சாரம் செய்துவிட்டார்
என்று பரப்புவதாக இருந்தாலே தாம்பத்யத்தில் ஈடுபடக்கூடியநிலையில் ஆயிஷா (ர)
அவர்கள் இருந்தார்கள் என்பதை காட்டுகிறது
3.நீங்கள் தவறு
செய்திருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு
அவனிடம் திரும்பிவிடு என்று நபிகளார் சொன்னது அன்னையவர்கள்
தாம்பத்யத்திற்கு மனரீதியாகவும் சரி பிழை அறியக்கூடயவர் என்பதை காட்டுகிறது
4.அன்னையவர்களது பெற்றோரும்
தம் மகள் குழந்தையாயிற்றே. பிறகு எப்படி விபச்சாரம் செய்ததாக
செய்தி பரவியது என கேட்கவும் இல்லை... காரணம் அவர்
உடல்தகுதியுடடனும் மனத்தகுதியுடனும் இருந்தார் என்பதால் தான்.
ஆகவே உண்மையில் இந்த மாட்டுப்போதகர்
எடுத்துக்காட்டிய ஹதீஸ் உண்மையில் அவருக்கு எதிராக தான் இருப்பதோடு, நபியவர்கள்
உண்மையிலேயே இறைவனது வஹீ அடிப்படையில் தான் மார்க்கத்தை எத்திவைப்பார் என்பதற்கும்
சான்று. அதனால் தான் வஹீ வரும்வரை எந்த முடிவும் எடுக்காமல் நடந்துகொண்டார்.அத்தோடு
வஹீ வருவதை அன்னை ஆயிஷா அவர்களே கண்டார்கள்.
(0:09:25)
157.அடுத்ததாக பைபிளில் கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ளும் போது
சமாளிக்க 144 சட்டம் என கூறியது குறித்து கேட்டதற்கு பதில் கூற முற்பட்ட பிஸ்கட்
போதகர்,
பைபிளில் தேசிய சட்டம், ஆன்மீக சட்டம் என இரண்டு இருக்கிறது. ஆன்மீக சட்டத்தில் கொலைசெய்ய கூடாது, திருட கூடாது,
விபச்சாரம் செய்யக்கூடாது என்பவை வரும் என்றும் அது மாறாது என்றும் கூறுகிறார்.
தேசிய சட்டம் தான் மாறும் என்கிறார்.
ஆனால் கொலசெய்யக்கூடாது என்று சொன்ன அதே பைபிளில்
தான் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி பழிவாங்கும் எண்ணத்தில் கொல்லுமாறு
கட்டளையிட்டார் (1 சாமுவேல் 15:2-3), ஆன்மீகச் சட்டமாக மதத்திற்காக தான் வேறு கடவுளை ஊர்மக்கள் வணங்கினால்,
அனைவரையும் வெட்டிக்கொன்று ஊரையே தீயிட்டு கொளுத்தி போடவேண்டும்
என்று உபாகமம் 13:12-16 கூறுகிறது (இதை தான் ஏற்கனவே போதகர் பதிலெனும் பெயரில் 10ம் வசனத்தை வாசித்து தப்பிக்க பார்த்தார்.)
திருடக்கூடாது என சொன்ன அதே பைபிள்,
எகிப்தியரின் சொத்துக்களை கொள்ளயடிப்பீர்கள் என முன்கூட்டியே தேவன் சொன்னார். அதை
நியாயப்படுத்தலும் செய்தார் (யாத்திராகமம் 3:21-22)
விபச்சாரம் செய்யக்கூடாது என சட்டம் கூறிய
பின், கன்னியுடனான விபச்சாரத்திற்கு தகப்பனுக்கு இஷ்டமில்லைனா பரிசம் கொடுத்தால்
போதும் என கூறுகிறார் தேவன் (யாத்திராகமம் 22:16-17), அத்தோடு கற்பழித்தால், காலம்
முழுதும் கற்பழிப்பதற்கு வழியாக அவளையே கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் கட்டாயம்
ஐம்பது காசு கொடுக்க வேண்டும் என்றும் சொல்கிறார் (உபாகமம் 22:28-29)
அதுமட்டுமின்றி விபச்சாரத்தை நானே
செய்விப்பேன் என்பதையும் தாவீதுக்கு கூறினார் (2 சாமுவேல் 12:11-12). விபச்சார
வரண்னைகளையும் கூறினார். உதாரணமாக முலைக்காம்புகள் தடவப்பட்டன என்றும் முலைகள்
அமுக்க பட்டன என்றும் காதலர்களின் ஆணுறுப்பு கழுதை ஆணுறுப்பு போன்றதாகவும்
அவர்களின் இந்திரியம் குதிரை இந்திரியம் போன்றதாகவும் சித்தரிக்கப்படுகிறது. (வேடிக்கையாக சிலை வணக்கத்தை கண்டிப்பதாக
கூறி விபச்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது)(எசேக்கியேல் 23:3,20)
எசேக் 23:3, 20-21 IRVTam
[3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்;
தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள்
அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.
[20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும்,
குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி
அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின்
மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில்
செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
https://bible.com/bible/1899/ezk.23.3-21.IRVTam
(0:09:45)
158.உபாகமம் 17:17இற்கு மீண்டும் பதில் சொல்வதாக கூறி,
ஒன்றுக்கு மேற்பட்டது தான் அநேகம் என்றும்
அதையே செய்யக்கூடாது என்று அதே உபாகமம் 21:15-16இற்கு முரணாக விளக்கம்
கொடுக்கிறார். ஏனெனில்
இரண்டு மனைவியுடையவனுக்கு சட்டமே 21:15-16இலே கூறி இவர்களுக்கு செருப்படி வைத்துள்ளது பைபிள். அத்தோடு தாவீதுக்கு ஆண்டவரின் மனைவிகளை மடியில் கொடுத்ததே தேவன் தான் (2
சாமுவேல் 12:8), தாவீது விபச்சாரத்தில் இருந்தும் கொலையில்
இருந்தும் மனந்திரும்பிய பின், பாத்சபாவை
மீண்டும் சேர்த்துக் கொண்டபோது தேவன் , பிறந்த பிள்ளையையும் நேசித்தார் (2
சாமுவேல் 12:24), அதுமட்டுமின்றி தாவீது செய்த இவை அனைத்துமே
உத்தமம் என்று பைபிள் வாக்குமூலம் கொடுக்கிறது (1 இராஜாக்கள் 15:5)
(0:11:00)
159.போதகர்கள் எது விபச்சாரம் என்று கேட்டார்களாம். மஹர்னா
என்னவென்று கேட்டாகர்களாம் பதில் வரவில்லையாம்.
இவர்கள் மட்டும் அனைத்திற்கும் சொல்லி
கிழித்து விட்டார்கள்.
மனைவியுடனும் தனதுஸசொத்தான வலக்கரம் சொந்தமான
அடிமைப்பெண்ணுடனும் தவிர வேறு பெண்ணை நாடி உடலுறவு கொண்டால் அதுவே இஸ்லாத்தின்
படி விபச்சாரம்... ஆனால் கெட்ட பார்வை , கெட்டவற்றை தொடுவது
போன்றன விபச்சாரத்தின் பங்குகளாக பார்க்கிறது இஸ்லாம்.
திருமணத்தில் மஹர் என்பது கணவனால் மனைவிக்கு
கொடுக்கப்படும் கொடை... இதே மஹர் என்ற வார்த்தை
தான் உடலுறவுக்கு பின் கன்னியிற்காக அவளுடைய தகப்பனிடம் கொடுக்க வேண்டும் என்று
பைபிளில் பாவிக்கப்பட்டுள்ளது (யாத்திராகமம் 22:16-17)
(0:11:10)
160.அல்லாஹ் கற்பழிப்பை சட்டமாக்கியதாக வாதம் வைத்ததற்கு
முஸ்லிம் தரப்பு பதில் தரவில்லை என்கிறார்.
உண்மையில் கற்பழிப்பு சட்டம் அருமையாக
பைபிளில் தான் உள்ளது.
*அதாவது கன்னிப் பெண்ணை கற்பழிச்சால்
கற்பழிச்சவனுக்கே கட்டி வைக்கனும் என்று கூறி தன்னை விரும்பாத பெண்ணையும்
அடைவதற்கு வழிகாட்டுகிறது -உபாகமம் 22:28-29
*கன்னிப்பெண்ணுடனான விபச்சாரத்திற்கும் தண்டனை
இல்லாமல், பரிசம் கொடுக்கும்படி தான் சொல்கிறது (யாத்திராகமம் 22:16-17)
*உண்மையில் இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவும்
வேண்டாம் என்று தான் சொல்கிறது - குர்ஆன் 17:32
*விபச்சாரகனுக்கும் விபச்சாரிக்கும் 100
கசையடி வழங்கும்படி குர்ஆன் சொல்கிறது (24:2)
*திருமணமான பின் விபச்சாரம் செய்தால் கல்லெறி
தண்டனை வழங்குகிறது.(புகாரி 1329,2314,2315,2695,2696,2724,2725,5270)
*மனைவியி அடிமைப்பெண்ணாகிய தன் அடிமைப்பெண்
அல்லாத அடிமைப்பெண்ணோடு உடலுறவு கொண்டதற்காக நூறு கசையடிகள்
அடிக்கப்பட்டிருக்கிறது -புகாரி 2290.. தன் மனைவியின் அடிமைப்பெண் தன் அடிமைப்பெண் என நினைத்து அறியாமையால்
செய்ததால் இந்நிலை. இல்லையென்றால் கல்லெறி தண்டனை கிடைத்திருக்கும்
இப்படி விபச்சாரத்தை கன்னியோடு செய்தாலும்
அடிமையோடு செய்தாலும் கிழவியோடு செய்தாலும் இஸ்லாம் தண்டனை வழங்குகிறது.
0:11:50)
161.முஸ்லிம் தரப்பு நண்பர் 2 சாமுவேல் 12:11-12 ஐ குறித்து
புளூ ஃபிலிம் என்று சொனதற்கு , திருமணத்திற்கு வெளியிலேயே உறவு கொள்வதை பற்றி
பேசிக்கொண்டிருக்கிறோம் அதற்கு பதில் சொல்லாமல் இப்படி சொல்வதாக உலருகிறார்.
*ஆனால் உறவு கொண்டுவிட்டு திருமணம் செய்யவோ
அல்லது மஹரை மட்டும் கொடுக்கவோ சொல்வது தோரா தான் என்ற மேட்டரே ஐயாவுக்கு
புரியவில்லை (யாத்திராகமம் 22:16-17)
*அத்தோடு 2 சாமுவேல் 12:11-12உம் திருமணத்திற்கு வெளியே விபச்சாரம் செய்விப்பேன்
என்று தான் கர்த்தரே சொல்வதாக உள்ளது.
*இஸ்லாம் திருமணத்திற்கு வெளியே , தன் சொத்தாக
இருக்கிற தன் சொந்த அடிமைப்பெண்ணுடன் தாம்பத்யத்தில் ஈடுபட அனுமதிக்கிறது (70:30).
ஆனால் தன் அடிமை அல்லாமல் வேறு அடிமைப்பெண்ணுடன் செய்தாலோ தண்டனை உண்டு . அது தன் மனைவியின் அடிமைப்பெண்ணாக
இருந்தாலும் (புகாரி 2290).. மற்றவரின் அடிமைப்பெண் எனின் திருமணம் செய்தே
வாழ முடியும் (குர்ஆன் 4:25)
*பைபிளிலும் தாவீது ராஜாவுக்கு பல
வப்பாட்டிகள் இருந்ததாகவும் (2 சாமுவேல் 5:13-14) சொல்கிறதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம்
என்றோ அல்லது அது கூடாது என்றோ ஒரு வசனம் கூட பைபிளில் இல்லை... மாறாக இப்படி
செய்த தாவீது உரியா மேட்டர் தவிர மற்ற அனைத்து விசயத்திலும் குற்றமற்று வாழ்ந்ததாக
கூறி வப்பாட்டி மேட்டரையும் சரி காண்கிறது பைபிள் (1 இராஜாக்கள்
15:5)
0:12:20)
162.அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் மரணித்தவர் விபச்சாரம்
செய்தாலும் திருடினாலும் சுவர்க்கம் புகுந்தார் அல்லது நரகம் புக மாட்டார் எனும்
புகாரி 3222ஹதீஸை குறிப்பிட்டு, அல்லாஹ் விபச்சாரத்தை அனுமதிப்பதாக உலருகிறார்.
ஆனால் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம்
என்று கூறி (17:32), விபச்சாரகன் விபச்சாரி இருவருக்கும் 100 கசையடி தண்டனை என்று
கூறி (24:2), திருமணமானோராக இருந்தால் கல்லெறி தண்டனை வழங்கி (புகாரி5270, 1329,2314,2315,2695,2696,2724,2725) உலகத்திலேயே
எச்சரிக்கை செய்கிறது.
அதேபோல், அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் மரணித்த
முஸ்லிம் இந்த பாவங்களை செய்தாலும், அதற்காக நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார்.
மாறாக தண்டனை அனுபவித்து விடுதலை பெறுவார் (புகாரி 7439),
அதேபோல் தவ்ஹீதுடைய மக்களில் சிலர் (அதாவது
இணைவைக்காதவர்கள்) தம் பாவத்திற்காக நரகத்தில் வேதனை செய்யப்பட்டு, இறைக்
கருணையால் சுவர்க்கத்தில் நுழைவர் என்பது திர்மிதி 2597)
ஆகவே இந்த பாவங்களை செய்தவர்
இணைவைக்காவிட்டால், நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார். மாறாக தண்டனைக்கு பிறகு சுவர்க்கத்தில்
நுழைவார். அதை தான் இந்த ஹதீஸ் கூறுகிறது.
(0:13:10)
163.முஸ்லிம்களில் சிலர் மலையளவு பாவத்தோடு வருவார்கள் என்றும்
அல்லாஹ் அவர்களை மன்னித்து அவர்களது பாவங்களை யூதன் மீதும் கிறிஸ்தவன் மீதும்
வைத்துவிடுவான் எனும் முஸ்லிம் 5344
என்பதை வைத்து, இதனால் பாவத்தை குறித்து எச்சரிப்பு இருக்கிறதா? யூத
கிறிஸ்தவர்கள் இழிச்சவாயர்களா என கேட்கிறார்.
-உண்மையில் அனைத்து
முஸ்லிம்களை குறித்தும் இப்படி சொல்லப்படவில்லை. அவர்களில்
பாவம் செய்தவர்கள் நரகம் நுழைவர் என்பதையும் தண்டனை அனுபவித்து பின் சுவர்க்கம்
நுழைவர் என்றும் ஹதீஸ்களில் உள்ளன- புகாரி 7439, திர்மிதி 2597
-முஸ்லிம்களில் சிலர் என்றே
சொல்லப்பட்டுள்ளது. அவர்களின் பாவத்துக்கு யூதர்களும்
கிறிஸ்தவர்களும் காரணமாக இருக்கலாம்
-இந்த பாவம் இல்லாவிட்டாலும்
முகம்மது நபியின் வருகைக்கு பின் அவரை குறித்து கேள்விப்பட்டும் யூதராகவோ
கிறிஸ்தவராகவோ மரணிப்பவர் நரகம் புகுவார் (முஸ்லிம் 240). ஏற்கனவே தன் பாவத்தால் நரகம் புகுபவரின் மீது பாவத்தை வைப்பதால் அநியாயம்
ஆகிவிடாது. அதுவும் தண்டனை தான்
-பைபிளும் தெளிவாக, நீதிமானை
மீட்கும் பொருளாக துன்மார்க்கன் இருப்பான் என கூறுகிறது
நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப்
பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.நீதிமொழிகள் 21:18
இறைவனையும் தூதர்களையும் நம்பி நற்செயல்
செய்பவர் நீதிமான் அவன் தவறு செய்தாலும்.... இறைவனையும் தூதர்களையும் மறுத்து இணைவைத்து தீச்செயல் செய்பவர்
துன்மார்க்கன்.
164. முஸ்லிம் மரணித்தாலும் நரகத்தில் அவருடைய இடத்திற்கு யூதரோ
கிறிஸ்தவரோ அனுப்பப்படாமல் இல்லை என்ற முஸ்லிம் 5343வது ஹதீஸையும் குறிப்பிட்டு,
முன் சொன்ன வாதத்தை வைத்தார்.
-எல்லா மனிதருக்கும்
சுவர்க்கத்தில் ஒரு இடமும் நரகத்தில் ஒரு இடமும் இருக்கும். அவரது
செயல்களுக்கேற்ப அதில் ஒன்றை அடைந்து மற்றது ஏனையோரால் சுதந்தரிக்கப்படும்.
(இப்னுமாஜா 4341)
அதன்படி தன் நிராகரிப்பால், நரகம் போகும்
யூதரும் கிறிஸ்தவரும் (முஸ்லிம் 240), இறைவனின் கருணையாலும் நற்செயல்களாலும்
சுவர்க்கம் போகும் முஸ்லிம்களின் நரகத்து இடத்தை பெற்றுக்கொள்வார்கள். முஸ்லிம்கள்
தமக்குரிய சுவர்க்கத்து இடத்தையும் யூதகிறிஸ்தவர்களது சுவர்க்கத்து இடத்தையும்
அடைவர்.
-அத்தோடு இதை தான் பைபிளும்
சொல்கிறது,
நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும்,
செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
நீதிமொழிகள் 21:18
சோ இதில் எந்த குழப்பமும் தேவையில்லை.
(0:15:30)
164.அல்லாஹ் என்பது மெய்க்கடவுளை குறித்தாலும் முகம்மது நபி
காட்டிய அல்லாஹ்வை தாம் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார்.
கடவுளுக்கு சரியான இலக்கணத்தை இஸ்லாம்
வழங்குகிறது. கடவுளை ஒரு பைத்தியமாக, அதாவது
தன் மகனை தனக்கே நரபலி கொடுக்கும் கொடூரராக புதிய ஏற்பாடு தப்பான இலக்கணத்தை
வழங்குவதோடு, கடவுளுக்கு மகன் இல்லாதிருக்க கிரேக்க ரோம மதங்களால் ஈர்க்கப்பட்டு
கடவுளுக்கு மகனை உண்டாக்கி பலவீனராக சித்தரிக்கிறது.
ஆனால் இஸ்லாமோ இந்த அசுத்தங்களிலிருந்து
இறைவனை தூய்மைப்படுத்துகிறது.
0:15:55
165.கர்த்தர் விபச்சாரத்தை செய்விப்பேன் என 2 சாமுவேல் 12:11-12 இலே சொன்னது குறித்து, அதற்கு
பதில் சொல்லாமல், புளு பிலிம் என்று ஆயிஷா (ர) அவர்களின் போர்வைக்குள்
இருக்கும்போது வஹீ வந்ததாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். (புகாரி
3375)
ஆனால் ஆயிஷா (ர) அவர்கள் ஆடைகளை கலைந்து
இருக்கும்போது ஜிப்ரீல் (அலை) வரமாட்டார் என்பதையும் நபிகளாரே சொல்லியுள்ளார்கள்.
(முஸ்லிம் 1774)
ஆகவே முறையான ஆடையோடு உள்ளபோது போர்வைக்குள்
இருக்கும் நிலையில் வஹீ வருவது எப்படி ஆபாசமாக அமையும்?
ஆனால் புளூ ஃபிலிம் நேர்முக வர்ணனை
பைபிளிலேயே தெளிவாக காணப்படுகின்றன
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம்
16:25-26 TAERV
[25] ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த
மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப்
போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய்.
அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு
வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். [26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய்.
ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ
அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய்.
https://bible.com/bible/3154/ezk.16.25-26.TAERV
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 23:3,
20-21 TAERV
[3] அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில்
வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம்
மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர்.
[20] கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின்
ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின்
மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக்கொண்டாள். [21] “அகோலிபாளே, நீ உன்
இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன்
மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள்.
https://bible.com/bible/3154/ezk.23.3-21.TAERV
இப்படி சிலை வணக்கத்தை கண்டிப்பதாக கூறி
விபச்சார நேர்முக வர்ணனை செய்யப்பட்டுள்ளது.
அதனால் இதை தான் அந்த படம் என சொல்லவேண்டும்.
(0:16:30)
166.இறுதியாக புகாரி 6610 ஹதீஸை குறிப்பிட்டு அல்லாஹ்
விபச்சாரத்தை விதியாக்கியிருப்பதாக சொல்கிறார்.
இது மனிதனது இயல்பு நிலையை காட்டுகிறது. அதாவது எந்த மனிதனும் ஏதோ ஒருவிதத்தில்
இவைகளை செய்கிறான். அதை இறைவன் நிர்ப்பந்தித்து செய்விப்பதில்லை.. மனிதனாக
இச்சையோடு செய்வது தான்
இங்கே பேசிக்கொண்டிருந்த போதகர்களும் தம்
இச்சையோடு இவற்றில் ஏதோவொன்றை செய்தேயிருப்பர்.
-மனிதன் எவற்றை செய்வான் என்று இறைவனுக்கு
முன்கூட்டியே தெரியும்.
-அவன் முன்கூட்டியே செய்வான்
என்று அறிந்ததை இறைவன் விதித்துள்ளான்.
இதை குறைசொல்ல என்ன தகுதி இருக்கிறது?
*பைபிள் தேவனும் விபச்சாரத்தை விதியாக்கிய கதை
பைபிளுலும் உள்ளது
இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக்
கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின்
வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில்
வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால்
விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான
தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக்
கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.ஆமோஸ் 7:16-17
அதாவது தீர்க்கதரிசனம் சொல்லாதே என்பதால்,
இதற்காக வேசியாக்குவதாக சொல்கிறது.
அத்தோடு விபச்சாரம் செய்விப்பேன் என்றும்
சொல்லியுள்ளார்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ,
நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன்
ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய
வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.2 சாமுவேல் 12:11
ஆகவே இந்த ஹதீஸை குற்றம் சாட்ட போதக
கும்பலுக்கு எந்த தகுதியும் இல்லை!!!
(0:18:10)

Comments
Post a Comment