YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 5

  முந்திய பாகத்தை காண



16 முஸ்லிம் தரப்பு எட்டாம் அமர்வு

118.முஸ்லிம் தரப்பு வாதம்

-தம் மத புத்தகத்தில் வரி இல்லை என நினைத்து, காலையில் வரி வாங்குவது தப்பு என சொல்லிக்கொண்டிருந்த போதகர் கும்பல், இறுதியாக முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் என பிரித்து வரி வாங்குவதை தப்பு என்று வாதம் வைக்கவே , முஸ்லிம் தரப்பினரால் முந்தின அமர்வுகளில், புறஜாதிகளிடம் மட்டுமே வரி வாங்கப்பட்டதற்கு வசன ஆதாரம் கொடுக்கப்பட்டது ஞாபகப்படுத்தி, முடிந்தால் இஸ்ரவேலர் இடம் வரி வாங்கியதற்கு ஒரே பிரமாணம் என வண்டி ஒட்டாமல் ஆதாரம் தருமாறு கேட்கப்பட்டது (0:01:30)

-நபியவர்கள் ஆறு வயது சிறுமியை மணம் புரிந்தது (9வயதில் தாம்பத்யம் நடத்தியது) பற்றி குற்றச்சாட்டும் இந்த போதகர்களிடம், பெண்களின் திருமண வயது இது தான் என பைபிளில் இருந்து காட்டுமாறு கேட்கப்பட்டது. அத்துடன் பருவ வயதை அடைந்துவிட்டால் (உடல்தகுதியும் மனரீதியான தகுதியும் இருந்தால்), திருமணம் செய்துகொள்வது தவறில்லை என்று கூறப்பட்டது

(0:02:50)

-ஆசைப்பட்டமாதிரி கண்ட கண்ட பெண்களை ஆசைப்பட்டு  திருமணம் செய்துகொள்ளலாம் என்பதுபோல இஸ்லாம் சொல்வதாக அறிவின்றி உருட்டிய போகருக்கு,  இஸ்லாம் ஆண்களுக்கு தான் முதலாவதாக தன் பார்வைகளை தாழ்த்தி வெட்கஸ்தலங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு (24:30) கூறுகிறது என்பது தெளிவாக்கப்பட்டது.

(0:06:45)

-பலதாரமணத்தை குறித்து கேவலமாக பேசியவருக்கு, ஏற்கனவே பலதிருமணம் முடித்த தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் விபச்சாரத்தில்  பிறந்த பிள்ளையை கொன்ற பின், தாவீது அந்த பெண்ணோடே மீண்டும் குடும்பம் நடத்தினார். அதன்மூலம் பிறந்த பிள்ளையையோ அவரே நேசித்தார் (2சாமுவேல் 12:24) கூறுவதை காட்டி கடவுளே அதற்கு ஆதரவு கொடுத்தது சுட்டிக்காட்டப்பட்டது.

(0:13:30)

-குடிக்கவேண்டாம் என்று சொன்னதற்காக தன் மனைவியை தலாக் விட்ட கணவனை பற்றி வீடியோ க்ளிப் போட்டு , இஸ்லாமிய சட்டத்தால் தான் இந்த நிலை என்று உருட்டிய போதகருக்கு, குடிப்பதையே இஸ்லாம் தடைசெய்திருக்க (5:90), அதை பின்பற்றாதவன் இதை செய்ததற்காக எப்படி சட்டத்தை குறைசொல்லலாம் என்று கேட்கப்பட்டது.

(0:14:45)

-நிகாஹ் என்றாலே புணரப்படுதல் என்ற அர்த்தம் என்று வைத்த போதருக்கு , பைபிளிலும் "அறிந்தான்" என்ற வார்த்தையை புணருதலுக்கு பாவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி (ஆதி 4:1,17) இது போன்று பைபிளிலும் இரு பொருளுள்ள சொற்கள் உள்ளதே என சுட்டிக்காட்டப்பட்டது. (0:15:30)

-இரும்பு மோதிரம் பேரீச்சப்பழமெல்லாம் மஹராக கொடுக்கப்படுது என்று வாதம் வைத்த போதகருக்கு பதிலாக,  தாவீது ராஜா மஹராக இருநூறு எதிரி மனிதர்களின் ஆணுறுப்புகளின் நுனித்தோலை வெட்டி மாமாவான சவுலுக்கு மஹராக செலுத்திய கதை காட்டப்பட்டது. (1 சாமுவேல் 18:25-28, 2 சாமுவேல் 3:14)

(இதிலிருந்து தேவன் தாவீதோடு இருப்பதை மாமாவான  சவுல் அறிந்துகொண்டானாம் 18:28.. அதாவது இந்த வேலைக்கு துணையாக கர்த்தரும் நின்றுள்ளார்.)

(0:16:55)

 

-பலதாரமணத்தை ஒழுக்கக்கேடு என்று சொன்ன போதகருக்கு, எந்த பைபிள் வசன அடிப்படையில் இந்த முடிவு எடுத்தீர்கள்? காமத்திற்காக தான் இதை செய்கிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? அப்படி பார்த்தால் பைபிளில் நியாயாதிபதிகளும், தீர்க்கதரிசிகளும் (ஆபிரகாம்,யாக்கோபு,தாவீது....) செய்திருக்கிறார்களே என கேட்கப்பட்டது. (0:17:45)

முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு.

(0:17:54)

 

17.கிறிஸ்தவ தரப்பு ஒன்பதாம் அமர்வு

 

119.மூன்றாம் போதகர், தாவீது பலதார திருமணம் செஞ்சது தவறு தான் என்கிறார்.

ஆனால் கர்த்தரோ நானே செய்வித்தேன் என்கிறார்:

2 சாமுயேல் 12:8 TCV

[8] உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா?

https://bible.com/bible/2730/2sa.12.8.TCV

தாவீது மேலதிகமாக இந்த பெண்ணோடு மீண்டும் கலவியில் ஈடுபட்ட போது, பிறந்த பிள்ளையையும் நேசித்தார்.(2 சாமுவேல் 12:24)

அதுமட்டுமின்றி, தாவீது உரியாவின் விசயத்தில் தவிர வேறு எந்த பாவமும் செய்யாமல் கர்த்தருக்கு ஏற்றபடி நடந்தான் என்கிறது பைபிள்

1 இராஜாக்கள் 15:5 TCV

[5] ஏனெனில் தாவீது ஏத்தியனான உரியாவின் விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வைக்குச் சரியானவற்றைச் செய்து, தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் கட்டளைகளில் எதையும் செய்யத் தவறவில்லை.

https://bible.com/bible/2730/1ki.15.5.TCV

அதாவது இத்தனை திருமணங்களும் வப்பாட்டி வைத்துக்கொண்டதும் (2 சாமுவேல் 5:12-14) சேர்த்து தான் கர்த்தரின் பார்வைக்கு சரியானவற்றை செய்தான் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து தாவீது இவையெல்லாம் தவறு என்றால் கடவுள் வாயை மூடி சும்மா இருப்பாரா? அதுவும் தன் தீர்க்கதரிசியிடம்.

இது இவர்கள் பைபிளில் சற்றும் ஞானமில்லாமல் மனோயிச்சைப்படி பேசுவோர் என தெளிவாகிறது.

(0:20:50)

 

120.சவுல் ராஜா கெட்டவன் என்றும் அவன் நுனித்தோலை கேட்டதற்கு கம்பெனி பொறுப்பாகாது என்கிறார். ஆனால் செய்தவர் கர்த்தர் கூட இருந்த தாவீது தான். இதன் முடிவில் சவுல் , தாவீதோடு கர்த்தர் இருப்பதாக அறிந்துகொண்டான் என்றும் உள்ளது (1 சாமுவேல் 18:28)

அத்தோடு இதுபோன்ற உன்னத மஹரை ஏன் பைபிளிலே கூறவேண்டும்? அதிலே கடவுளின் வல்லமை வெளிப்பட்டது என்பதை காட்டுவதற்காக தானே

(0:21:20)

121.முஸ்லிம்தரப்பு ராஜாக்கள் இஸ்ரவேலரிடம் வரி வாங்கவில்லை புறஜாதிகளிடம் மட்டுமே வரி வாங்கினர் என்பதற்கு, முட்டாள் போதகர் இஸ்ரவேலர்கள் இடமும் வரி வாங்கினார்கள் என்று 2 நாளாகமம் 24:9ஐ குறிப்பிடுகிறார்.

ஆனால் இது ஆலயத்தை பராமரிக்க சொந்த மதத்தாரிடம் வாங்கும் காணிக்கையான வரி ஆகும்.(2 நாளாகமம் 24:4-7 . மேலும் பார்க்க யாத்திராகமம் 30:12-16, 38:24-31

ஆனால் அந்நியனிடம் வாங்கும் வரி, அவனை சேவகனாக ஆக்கி கப்பம் வாங்குவது (உபாகமம் 20:10-12)

"வரி" என்று பைபிளில் search பண்ணி பதிலென உலரியுள்ளார் திரு பிஸ்கட் போதகர்.

அதிலும் வேடிக்கையாக இரண்டுமே என்று என் வெட்கமில்லாமல் கதை விடுகிறார்

இதை வைத்துக்கொண்டு ஜிஸ்யா ஸகாத் பற்றி பேச என்ன தகுதியுண்டு?

ஸகாத் என்பது இறைவனது திருப்திக்காக இறைவனை அஞ்சி கொடுப்பது.

பொதுவாக வரி  என்பது இறைவனது படைப்பின் திருப்திக்காக அவர்களிற்கு அஞ்சி கீழ்படிந்து கொடுப்பது.

ஆனாலும் இஸ்லாம் அதை கொடுத்தவர்களுக்காக இஸ்லாமிய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்காக போராட வேண்டும் என்றும் அவர்களுக்கு இயலாத சுமையாக வரியை ஆக்க கூடாது என வழிகாட்டியுள்ளது (புகாரி 3052, அபூதாவூத் 3052)

எந்த அளவுக்கென்றால், அவர்களை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டான்(புகாரி 3166)

இதுமட்டுமள்ள, முஸ்லிகள் தங்களது பொறுப்பை இவர்கள் விசயத்தில் செய்யாவிட்டால், அல்லாஹ் அவர்களது உள்ளத்திலிருந்து பயத்தை நீக்கி வரி செலுத்தாவர்களாக ஆக்கி விடுவான் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. (புகாரி 3180) இது இறைவனது நீதி எத்தகையது என வெளிக்காட்டுகிறது.

(ஆனால் பைபிளிலோ அந்நியனிடம் வட்டி வாங்கலாம் சதாகாலமும் அடிமையாக வைக்கலாம், இறந்து போனதை அவனுக்கு விற்கலாம் என அநீதமுள்ளவை போதனைகளாக கொடுக்கப்பட்டுள்ளது.

? (0:22:50)

122.போதகர் எந்தளவு மொக்கச்சாமி என்றால், முஸ்லிம் தரப்பு பெண்ணுக்கு திருமண வயது பைபிள்படி என்னவென்று கேட்டதற்கு பதில் சொல்வது போல் வந்து, ஆயிஷா ஒன்பது வயதில் பருவமடைந்தார் . ஏன் ஆறு வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என கேட்கிறார்.

ஆனால் இது இவர்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் அல்ல..

அத்துடன் ஆயிஷா (ர) அவர்களுடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கியது 9 வயதில் தான். அதுவரை அவர் தன் தாயின் வீட்டில் தான் இருந்தார்.(புகாரி 5133,5134, 5156,5158,)

இது சம்பந்தமாக விரிவாக previous part #102 இல் காணலாம்

 

0:23:50

 

123.ஆயிஷா அவர்களை பெண்கேட்டது பற்றி அரைகுறையாக படித்துவிட்டு பேசுகிறார். அத்துடன் 53 வயது பெரியவர் ஆறு வயது குழந்தை என்று பேசுகிறார்

இதன் உள்நோக்கம் கொச்சைப்படுத்துவதற்கே..

பிறந்தவுடனும் பெண் கேட்கலாம் நியமித்து வைக்கலாம். ஆனால் தாம்பத்யத்திற்கான உடல்தகுதியும் மனதகுதியும் அடைந்த பின்பே தாம்பத்யத்தில் ஈடுபட முடியும். அத்துடன் அப்போது அந்த திருமணத்தில் இணைவதற்கு பெண்ணின் சம்மதமும் அவசியம்.

நபியவர்களுக்கு முன்பே ஆயிஷா (ர) அவர்களை ஜுபைர் இப்னு முத்யிம் என்பவருக்கே பேசப்பட்டிருந்தார் (பைஹகீ 13863, அஹ்மது 25769, தாரீஃகுல்இஸ்லாம் 1/280.  இது அவர்களது கலாச்சாரத்தில் உள்ள ஒன்று. அக்கால கட்டத்தில் 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் இருந்தனர் (புகாரி 2664 இற்கு முந்திய தலைப்பு)

 

அன்னையவர்கள் தாம்பத்யத்திற்கு  உடல்தகுதியும் மனதகுதியும் உடையவர் என்பதால் தான் அவரது தாய் அலங்கரித்து அனுப்பி வைத்தார். அவரை அலங்கரித்த பெண்களும் வாழ்த்து சொன்னார்கள் (புகாரி 5156,3894,)

அத்துடன் இதே அன்னை ஆயிஷா அவர்கள் தான் நபிகளாரை குறித்து, நபிகளாரை விட தன் இச்சையை கட்டுப்படுத்துபவர் இல்லை என்பதை கூறியிருக்கிறார் (புகாரி 302)

அந்த அளவுக்கு எப்படி நடக்கவேண்டுமோ அவ்வாறு நடந்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக விரிவாக previous part #102 இல் காணலாம்

(0:26:10)

124.பார்வையை தாழ்த்திக்கொள்ள சொன்னது நல்ல சட்டம் தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, ஒருவேளை ஒரு முஸ்லிம் அழகான பெண்ணால் ஈர்க்கப்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார். அவளை திருமணம் செய்யலாமா என்று கேட்கிறார்.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதற்கு நிபந்தனையே அவர்கள் மத்தியில் நீதியாக நடக்க சக்தி இருந்தால் மட்டுமே (4:3)

ஒரு பெண்ணால் கவரப்பட்டால், தன் மனைவியிடம் போய் தன் இச்சையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இதை தான் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

ஆனால் பைபிளோ, கற்பழித்தாலே ஐம்பது வெள்ளிக்காசை கட்டி திருமணம் முடித்துக்கொள் என்கிறது(உபாகமம் 22:28-29)

அதாவது ஒரு பெண்ணால் கவரப்பட்டால், அவளுக்கு இஷ்டம் இல்லை என்றால் அவளை அடைய ஒரு வழியாக இதை பயன்படுத்த வழங்கப்பட்ட ஆலோசனையாக இதை எடுக்கலாமா?

 

(0:27:10)

125.நபியவர்கள் தன் பார்வையை தாழ்த்தாமல் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றார் என்பதை சுட்டிக்காட்டி முகம்மது நபி தம் பார்வையை தாழ்த்தவில்லை என்கிறார் திரு பிஸ்கட்.

 

எதேச்சையாக பார்வை விழுவது நிகழும் ஒன்று தான். வேண்டுமென்று பார்ப்பதல்ல.

*அப்படிப்பட்ட நிலையில் தன் மனைவியிடம் சென்றுவிட்டு, இதே போல் உங்களுக்கு நிகழ்ந்தாலும் உங்கள் மனைவியிடமே செல்ல வேண்டும் என்று வழிகாட்டினார்கள் (முஸ்லிம் 2718,2719,)

*பைபிளிலோ என்றால் கன்னிப் பெண்ணை ஆசைவார்த்தை கூறி அவளோடு விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு தர விருப்பம் இல்லையென்றால் தகப்பனிடம் பரிசம் கொடுத்தால் போதுமானது என யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது.

*இதன்படி பார்த்த பெண் கன்னிப்பெண் என்றால் அவளையே ஆசைவார்த்தை கூறி செய்வதற்கு வழிகாட்டும் போது, நபிகளாரோ சொந்த மனைவியரிடமே அவரவர் போகவேண்டும் என்று வழிகாட்டினார்கள்.

0:28:20)

126.பைபிள் ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் என்கிறது என்கிறார். முகம்மது நபி அதை செய்தார் என்கிறார்.

எதேச்சையாக பார்வை விழுவது மனிதனின் கட்டுப்பாட்டில் கிடையாது.

ஆனால் பைபிளில் கன்னிப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தாலும் தகப்பனுக்கு பரிசம் கொடுத்துவிட்டு போகுமாறு தான் சொல்கிறது -யாத்திராகமம் 22:16-17

அத்தோடு அவளை கற்பழித்தாலோ, ஐம்பது வெள்ளிக் காசு கொடுத்து காலம் முழுதும் செய்வதற்கு வழிகாட்டுகிறது-உபாகமம் 22:28-29

இஸ்லாமும் தப்பான பார்வை கண்ணின் விபச்சாரம் என்று கண்டிக்கிறது (புகாரி 6243, 6612)

(0:28:40)

 

127.பைபிளில் தாவீது செய்த பலதாரமணத்தை கர்த்தர் அங்கீகரிக்கவில்லை என்கிறார். அத்துடன் பைபிள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தான் சொல்வதாக 1 தீமோத்தேயு 3:2ஐ குறிப்பிடுகிறார். பின்பு ஆதியாகமம் 2:18இல் ஆதாமுகக்கு ஏற்ற துணையை உண்டாக்குவதாக தான் சொல்லப்பட்டது. துணைகள் என்று அல்ல என்கிறார். இதன் மூலம் பலதாரமணம் கூடாது என பைபிள் தடுப்பதாக கூறுகிறார் திரு பிஸ்கட். அடுத்ததாக தாவீது மனந்திரும்பியதற்காக தான் பலதாரத்தில் பிறந்த மகனை நேசித்ததாக ரீல் விடுகிறார்.

 

*ஆனால் 2 சாமுவேல் 12:8இலோ கர்த்தரோ நானே ஆண்டவரின் மனைவிகளை உன் மடியில் தந்தேன் என்கிறார். (பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாகவோ வப்பாட்டியாகவோ கொடுப்பதை தான் குறிக்கிறது ஆதியாகமம் 16:5) அத்துடன் தாவீது பல மனைவிகளையும் வப்பாட்டிகளையும் உடையவனாக இருந்து (2சாமுவேல் 5:12-14), கர்த்தரும் அவர் செய்தது உரியா விசயத்தில் தவிர மற்ற அனைத்தும் அவருடைய பார்வைக்கு சரியானது என்று 1 இராஜாக்கள் 15:5 சொல்கிறது. அந்த பெண்ணுக்கே பிறந்த மகனை தான் கர்த்தர் நேசித்தார் என்று 2 சாமுவேல் 12:24 சொல்கிறது.

*அத்துடன் இரண்டு திருமணம் ஆண் எப்படி நடக்க வேண்டும் என்றே சட்டம் உபாகமம் 21:15-17 கூறுகிறது. அதாவது கர்த்தர் அனுமதித்ததால் தான் சட்டம் கூறுகிறார்.

ஆகவே தேவனே அதை ஆதரித்திருக்கிறார். செய்வித்திருக்கிறார்.

 

*புதிய ஏற்பாட்டில் பவுல் ,இயேசு என்போர் உலகத்திலிருந்து விலகி துறவற வாழ்வை போதிப்பதாகவே கூறுகிறது.  துறவறத்தை போதிக்கும் போது தன் சபையின் கண்காணி பலதார மணம் செய்திருப்பதை ஆதரபிப்பாரா? அதை தான் பவுல் 1 தீமோத்தேயு 3:2 இல் எழுதியுள்ளார்.

*அடுத்து, ஆதாமுகக்கு ஒரே துணை இருப்பதற்கு காரணம் தேவன் பலதாரத்தை வெறுத்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சட்டத்தை விரும்புவதால் அல்ல.. அனைவருக்கும் ஒரே தாய் தகப்பன் இருப்பதற்காக தான்.

அதனால் தான் ஆதாமின் பிள்ளைகளில் அண்ணன் தன் சொந்த தங்கச்சியை திருமணம் முடித்து ஜனத்தை பெருக்கினார்கள். போதகர் சொல்வது போன்றே சொல்லவேண்டுமானால், கூடப்பிறந்தவளை புணர்வதை தேவன் விரும்பியுள்ளார் சட்டமாக்கியுள்ளார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.

அத்தோடு பிள்ளையை நேசிக்க காரணம் தாவீது மனந்திரும்பயதற்காக என்கிறார். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.... விபச்சாரம் செய்த ஜோடியினருக்கு கிடைக்கும் குழந்தையை நேசித்தார் என்றால் மீண்டும் அவர்கள் உறவு கொண்ட உறவை கர்த்தர் ஒப்புக்கொண்டார் என்று தானே விளங்குகிறது..

குறிப்பாக பைபிளே சொல்லியது தாவீது உரியா விசயத்தில் அவனை போட்டுத்தள்ளியதை தவிர மற்ற அனைத்திலும் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான் என்று. (1 இராஜாக்கள் 15:5)

ஆக கொஞ்சம் கூட பைபிளை கூட அறியாமல் விவாதம் என்று உலருகிறார்.

(0:31:05)

128.பைபிள் திருமணத்துக்கு பல சட்டங்களை கொடுப்பதாகவும் மனைவியின் சகோதரியை முடிக்க வேண்டாம் என்று சொல்வதாகவும் இஸ்லாம் கணக்கில்லாமல் முடிக்க சொல்வதாகவும் உலருகிறார்.

ஆனால் குர்ஆனும் யார் யாரை முடிக்க கூடாது என குர்ஆன் 4:22-23இலே சொல்லுவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதற்கு கூட மனைவிகளிடையே நீதமாக நடப்பதற்கு முடிந்தால் மட்டுமே அனுமதிக்கிறது (4:3)

 ஆனால் இவர் எதை 144 என்று சொன்னாரோ அந்த புத்தகத்தை தவிர, புதிய ஏற்பாட்டில் யாரை முடிக்கலாம் யாரை முடிக்க கூடாது என எந்த வழிகாட்டலும் கிடையாது.

இது சம்பந்தமாக விரிவாக previous part #110 இல் காணலாம்

(0:32:25)

 

129.மீண்டும் விவாகரத்து பற்றி பேசுகிறார்.

இஸ்லாத்திற்கு முன்பே விவாகரத்து இருந்தது. அதை இஸ்லாம் நெறிமுறைகள் படுத்தியது.

அதாவது ஒத்துப்போகாதவர்களை நிர்ப்பந்தித்து அவர்களது வாழ்வை நரகமாக்க இஸ்லாம் விரும்பவில்லை. அதற்குரிய சட்டங்களை போட்டு ஒழுக்காமக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது.

ஆனால் பைபிள் அதை தள்ளிவிடுதலையும் தள்ளிவடப்பட்ட பெண்ணை முடிப்பதையும் இயேசு விபச்சாரம் என்கிறார் (மத்தேயு 19:9)

ஆனால் பழைய ஏற்பாடு இந்த இரண்டையும் அனுமதிக்கிறது.(உபாகமம் 24:1-3)

ஆக விபச்சாரத்தை தேவன் அனுமதித்தாரா?

 

(0:34:00)

130.போறபோக்கில் வாதங்களை வைக்கிறார்

இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் வேறு எந்த பாவமும் செய்துகொள்ள விபச்சாரம் செய்துகொள்ள திருட அனுமதிக்கிறது என அபாண்டத்தை கூறுகிறார்

இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவும் கூடாது என்றும் அநியாயமாக மனித உயிர்களை கொல்லக்கூடாது என்றும் (17:32-33), திருடனின் கையை வெட்டும்படி வழிகாட்டி திருடர்களுக்கு திருடுவதற்கே அச்சத்தை ஏற்படுத்துகிறது (5:38)

மறுமையிலும் இத்தகைய குற்றங்கள் தண்டிக்கப்படும் நிரந்தர நரகம் உண்டு என இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.(25:68-69),

புகாரி 7439 பாவம் செய்த முஃமின்கள் நரகம் போவார்கள் என்றும் அவர்கள் பரிந்துரை மூலம் வெளியேற்றப்படுவார்கள்.

இறைவனுக்கு இணை வைப்பதே மிகப்பெரிய பாவமும் அநீதியும். அதை செய்யாதோரை இறைவன் மன்னித்தால் இவர்களுக்கு என்ன?

 

திருமணத்திற்கு அப்பால் உறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பதாக அவதூறு செய்கிறார் பிஸ்கட் போதகர்

ஆனால் மனைவியிடமும் வலக்கரம் சொந்தமான சொந்த அடிமையுடனும் ம்ட்டுமே தாம்பத்யத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கின்றது (70:28-30, 23:5-7) (அடிமைகள் விசயமாக மீண்டும் கீழே கூறப்படும்)

(அடிமைகள் விசயமாக https://answeringchristian.blogspot.com/2025/09/blog-post.html?m=1 இல் காணலாம்)

 

தன் மகள் ஃபாத்திமா விசயத்தில் மறுமகன் அலீயிற்கு இரண்டாம் திருமணம் முடிப்பதை தடைசெய்ததை குறித்து கேட்கிறார்.

ஆனால் நபியவர்கள் ஹலாலை ஹராம் ஆக்கவில்லை என்று அதே ஹதீஸில் சொல்லியுள்ளார்கள்.(புகாரி 3110)

ஃபாத்திமா இருக்க அபூஜஹ்லின் மகளை முடிப்பது ஃபாத்திமாவை நோகடிக்கும்.  காரணம் நபியவர்களின் கடும் பகைவனின் மகள். ஃபாத்திமாவை நோகடிப்பது நபியை நோகடிப்பது. அது முஃமின்களுக்கு தகாது.. அத்தோடு ஃபாத்திமா அவர்களின் அந்தஸ்து உயர்வானது. அவர் மார்க்கத்தில் குழப்பத்துக்கு உள்ளாவதை நபியவர்கள் பயந்தார்கள் (புகாரி 3110)

இதை அலீ (ர) அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.  இதனால் போதகருக்கு என்ன பிரச்சினை?

 

18.முஸ்லிம் தரப்பு ஒன்பதாம் அமர்வு

131.முஸ்லிம்தரப்பு வாதம்.

-தாவீது செய்தது தப்பு என்று போதகர் உருட்டியதற்கு பதிலாக 1 இராஜாக்கள் 15:5 இலே கர்த்தர் பார்வைக்கு செம்மையானதையே செய்துவந்தான் என்ற வசனத்தை காட்டி மூக்குடைத்தனர். அத்தோடு தாவீது ஏற்கனவே பல பெண்களை மணந்தவர் தான் என்பதற்கு 2 சாமுவேல் 5:13 வசனத்தை காட்டி, அதை 1 இராஜாக்கள் 15:5 இன்படி கர்த்தரின் பார்வைக்கு செம்மையானது தான் என நிரூபித்தனர்.

அத்தோடு, பாத்சபாவுடன் முறைகேடான உறவில் பிறந்த குழந்தையை அடித்தார். ஆனால் மனந்திருந்திய பின் அவளுக்கு மீண்டும் பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் (2 சாமுவேல் 12:24). இதன் மூலம் கர்த்தருக்கு தப்பாக தெரிந்தது உடலுறவு நடந்த விதம் தான் என காட்டி, கர்த்தர் இதை ஆதரித்தார் என புரிய வைத்தனர்.

நுனித்தோல் மேட்டரை செய்து முடித்தவரும் தாவீது தான்

 (0:38:20)

-53வயதில் 6வயது பெண்ணை முடித்தால் மட்டுமல்ல, அறுபது வயதில் இருபது வயது பெண்ணை முடித்தாலும் இந்த போதகர்கள் மனோயிச்சைப்படி விமர்சிக்கத்தான் செய்வர். அதனால் வயது வரம்பை யார் தீர்மானிப்பது? பைபிளில் இருந்து வயது வரம்பை காட்டுமாறு மீண்டும் கேட்கப்பட்டது. (0:40:00)

-ரோட்டில் போற பெண்ணை தப்பாக நபிகளார் பார்த்தார் என்று வைத்த அறிவு கெட்ட வாதத்திற்கு, நபிகளாரும் மனிதர் தான். மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படி, ஒருவரின் பார்வை ஒரு பெண் மீது விழுந்துவிட்டால், மனைவியிடம் தான் செல்லவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்து , அவ்வாறு வழியும் காட்டினார் என்று பதில் கொடுக்கப்பட்டது.

(பைபிளில் கன்னிப் பெண்ணை கற்பழித்துவிடலாம்.. அப்போது அவளை காலம் முழுதும் கற்பழிக்க வழிகாட்டப்பட்டுள்ளது -உபாகமம் 22:28-29)

(0:43:40)

-ஆயிஷா (ர) அவர்களை பெண் கேட்டதாக வரும் செய்தியில் போதகர் புணைந்து "அவள் குழந்தையாக இருக்கிறாளே என்று அபூபக்ர் சொல்ல, முகம்மது நபி அது எனக்கு ஹலால்" என்று சொன்னதாக உருட்டியதற்கு, அப்படியொரு அதிலே இல்லை என்பதும், உண்மையில் அபூபக்ர் (ர) அவர்கள் "நீங்கள் என் சகோதரர் அல்லவா" என்பதை தான் கேட்டார்கள். அதற்கு நபிகளார் "மார்க்க ரீதியான சகோதரர்" என்பதை தெளிவுபடுத்தி, அதில் தவறில்லை என்பதை தான் சொன்னார்கள் என்பது பதிலாக கொடுக்கப்பட்டது

(அக்கால நடைமுறையில் அது இல்லையானால், அவள் சிறுபிள்ளை என்பதையும் சொல்லியிருப்பார்கள். அத்துடன் ஆயிஷா அவர்களை இதற்கு முன் ஜுபைர் இப்னு முத்யிம் என்பவருக்கு திருமணம் பேசியிருந்ததாகவும் அறிவுப்புகள் உள்ளன (பைஹகீ 13863, அஹ்மது 25769,தாரீஃகுல்இஸ்லாம் 1/280)

 

-தனக்கு சொத்தாக உரிமையாகவுள்ள அடிமைப்பெண்ணுடன் தாம்பத்யத்தில் ஈடுபடுவதை குறித்து பேசிய போதகருக்கு, பைபிளில் தீர்க்கதரிசிகளும் நியாயாதிபதிகளும் இப்படி வப்பாட்டி எனும் அடிமைகளுடன் குடும்பம் நடத்துவது குறித்த நடைமுறை சுட்டிக்காட்டப்பட்டது.

உதாரணமாக ஆபிரகாமுக்கு (தீர்க்கதரிசி மற்றும் தேவனது நண்பர் வப்பாட்டி கள் பலர் இருந்தனர் (ஆதி 25:6), கிதியோன் எனும் நியாயாதிபதி (நியா 8:31,) தாவீது (கர்த்தரின் இருதயத்திற்கேற்றவன் மற்றும் தீர்க்கதரிசி) பல மனைவிகளையும் வப்பாட்டிகளையும் வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதை தேவன் விபச்சாரம் என சொல்லவும் இல்லை.. அதற்காக அவர்களை கண்டிக்கவும் இல்லை.. அதை தப்பு என்று சொல்லவும் இல்லை..

 

-விவாதத்தில் பலதாரமணம் ஒழுக்கக்கேடு எனும் வாதத்தை வைத்துவிட்டு அதை நியாயப்படுத்துவதற்காக, தாவீது செய்தது தப்பு என்று பைபிளுக்கே முரணான வாதத்தை வைத்தது குறித்து போதகர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அது தவறென்றால் அதற்கு மனந்திருந்தியதாக பைபிளில் எங்கே இருக்கிறது என்றும் கேட்கப்பட்டது.

(0:51:30)

-இஸ்லாம் ஹராம் எது ஹலால் எது என்று தெளிவாக சொல்லியுள்ளது. ஆனால் பைபிளிலோ இப்படி கிடையாது. குறிப்பாக பலதாரமணம் கூடாது என்று பைபிளில் எங்கேயும் கூறப்படவில்லை... மாறாக கண்காணியாக இருப்பவன் ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும் என்பதை தான் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். ஏனையவர்கள் ஒரே மனைவியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று எழுதவில்லை என்பன சுட்டிக்காட்டப்பட்டன.( பழைய ஏற்பாட்டிலோ அதற்கு மாற்றமாகவே உள்ளது)

-நபியின் மகள் ஃபாத்திமா அவர்களுடன் இன்னொரு திருமணம் முடிப்பது குறித்து, நபிகளாரின் எதிரியின் மகளை முடிப்பது குறித்தே காரணம் கூறப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு.

19.கிறிஸ்தவ தரப்பு பத்தாம் அமர்வு

 

132.இரண்டாம் போதகர் , தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லக்கூடாது தங்களை போல ஏதாவது வாய்க்கு வந்ததை உருட்ட வேண்டும் என்கிறார்.

 அதாவது இவர்கள் பைபிள் கூறும் அற்புதமான சட்டம் வழிகாட்டல் என சொன்னவை அத்தனையுமே தப்பாக படிச்சுட்டு சொன்னதுடன், குர்ஆன் மற்றும் ஹதீஸ் மீது வைத்த வாதங்களும் ஒழுங்காக படிக்காமல் இஸ்லாமோஃபோப்களின் வெப்சைட்டுகளிலிருந்து திருடி வாசித்தவை தான்... மற்றவன் எழுதிய கதைகளை வாசித்துவிட்டு, தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக்கொள்வதற்கு உதாரணமே இவர்கள் தான்.

(0:54:40)

 

133.ஸஹீஹ் ,ளயீஃப் எல்லாம் தங்கள் இஷ்டத்துக்கு முஸ்லிம்கள் செய்வதாகவும், தங்களுக்கு ஒத்து வந்தால் ஸஹீஹ். ஒத்துவரலனா ளயீஃப் என்பதாக உலருகிறார்.

உண்மையில் சில அமைப்புகள் அப்படி செய்வது உண்மை தான். ஆனால் உண்மையில் ஸஹீஹ் ,ளயீஃப் என்பன ஹதீஸ் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ,மனத்தன்மை ,அறிவிப்பாளர் தொடர்ச்சி போன்றவற்றோடு தொடர்பு பட்டது.

உண்மையில் இந்த போதக கும்பல் தான் அப்படி செய்கிறார்கள்., தமக்கு தேவைப்பட்டால் பழைய ஏற்பாட்டை காட்டுவர். அதிலுள்ள தீவிரவாதம்,கொடூரம்,அநீதி ,அறியாமை என்பவற்றை சுட்டிக்காட்டினால், அது 144 சட்டம் போன்றது என் கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

கண்ணாடியை பார்த்து சொல்ல வேண்டியதை எதிரணியை பார்த்து சொல்கிறார்.

(144 சட்டம் என்பது அப்பாவிக் குழந்தைகளை கொல்லுவதோ (1 சாமுவேல் 15:2-3), மாற்றுமதத்தவர்களை கொல்லுவதோ (உபாகமம் 13:12-16, 20:16-18) அல்ல.... இந்த சட்டம் 144 அல்ல 288 என்றிருந்தாலும் தப்பு தானே இவர்களின் இஸ்லாம் குறித்த அதே அளவுகோலின்படி.)

(0:55:10)

134.மீண்டும் இந்த இரண்டாம் முட்டாள் போதகர், முகம்மது நபி அந்நிய பெண்ணை பார்த்து இச்சிப்பதற்கு காரணம் அவர் மனிதர் என முஸ்லிம் தரப்பு சொன்னதாக உலருகிறார். அத்தோடு இச்சையை அடக்க முடியாதவர் என்பதை ஒப்புக் கொண்டதாக உலருகிறார்.

ஆனால் முஸ்லிம் தரப்பு அப்படி இச்சித்ததாக செல்லவில்லை.. அப்படி இச்சித்தால் மனைவியிடம் செல்லாம் அப்பெண்ணிடம் அல்லவா சென்றிருப்பார்கள். கிரகிக்கும் திறன் இவ்வளவு தான். இதில் விவாதம் ஒரு கேடு.

மனிதன் என்பதால் திடீரென்று பார்வை மற்றவர் மீது விழ தான் செய்யும் . அது குறித்து தான் மனிதர் என்று சொன்னார்கள். அப்படி பார்வை  விழுந்தாலும் தன் இச்சையை கட்டுப்படுத்தியதால் தான் ,தன் மனைவியிடம்  சென்றார்கள்.

அதுமட்டுமின்றி நபிகளாரின் மனைவி நபிகளாரை குறித்து, அவரைவிட இச்சையை கட்டுப்படுத்துபவர் யாரும் இல்லை என்பதை கூறியிருக்கிறார்கள் (புகாரி 302)

ஆனால் பைபிளிலோ, கன்னிப் பெண்ணை கற்பழித்தால், காலம் முழுதும் அவளை கற்பழிக்க வழிகாட்டியுள்ளது. அதாவது அவளை திருமணம் செய்து ஒருபோதும் தள்ளிவிட கூடாதாம்.(உபாகமம் 22:28-29). அதாவது தன்னை கெடுத்தவனுக்கே அடிபணிந்திருக்க அவளுக்கு வழிகாட்டுகிறது  (0:56:10)

135.முட்டாள் போகரிடம், பெண்ணின் திருமண வயது என்ன என்று கேட்டால், லேவியராகமம் 21:13ஐ குறிப்பிட்டு, அதிலே "அவன் கன்னிகையான பெண்ணையே விவாகம் பண்ணவேண்டும் " என்பதை குறிப்பிட்டு, அவள் குழந்தையாக இருக்க கூடாது. கன்னியாக இருக்க வேண்டும் என்கிறார். அத்தோடு அவள் பூப்படைந்து 13 அல்லது 15 அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறி இது தான் ஜட்டம் என்கிறார்.

ஆனால் இந்த மடையர்கள் பைபிளையும் ஒழுங்காக படிக்க மாட்டார்கள். அதிலே பிரதான ஆசாரியனாக ஆகப்போகிறவன் விதவையை முடிக்காமல் கன்னியை முடிக்க வேண்டும் என்று சொல்வதாகும்.

அத்தோடு பிறந்த குழந்தை கூட கன்னி தான். 90 வயதான கன்னியும் இருக்க முடியும்..  ஆணுடன் உடலுறவு நடக்காத பெண்ணையே கன்னி என்பர். இங்கே பூப்படைந்திருக்க வேண்டும் அப்போது தான் கன்னி என்று அர்த்தம் வைக்க முடியாது.

ஆகவே வசனத்தையும் தப்பாக காட்டி, விளக்கத்தையும் தப்பாக கூறுகிறார்.

(0:56:50)

 

136.தாவீது ஆணுறுப்பு நுனித்தோலை மஹராக கொடுத்தது, சவுல் ராஜா கேட்டதால் தான். தேவன் அப்படி சொல்லவில்லை என்கிறார்.

தேவன் சொன்னதாக முஸ்லிம் தரப்பு சொல்லவில்லை.... தேவனின் உதவியுடன் தான் இதை செய்தார். அதை தான் சவுல் அறிந்துகொண்டான் என 1 சாமுவேல் 18:27-28.

அத்தோடு தாவீது செய்த அத்தனையும் கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதாகவே இருந்தது (1 இராஜாக்கள் 15:5) என்பதில் இதுவும் அடங்கும்.

இரும்பு மோதிரம் மஹராக கொடுங்கள் பேரீச்சம்பழத்தை மஹராக கொடுங்கள் என்று சொல்லாதிருக்க, அப்படி தன் வசதிக்கேற்ப கொடுத்ததை கேலி செய்யும் இவர்களுக்கு, இந்த ஆணுறுப்பு நுனித்தோலை மஹராக கொடுத்தது குறித்து கேலி செய்யப்படுவது நியாயம் தானே.. இதுபோன்ற அசிங்கமான மஹர் கதைகளை ஏன் பைபிள் கூற வேண்டும்? அதை தப்பு என எங்கும் சொல்லவில்லையே...

0:58:15)

136.ஒரு மனைவியை தான் முடிக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக ஆதாமுக்கு ஒரு மனைவியை தானே கொடுத்தார் என்பதை போதகர் வைத்ததற்காக, நியாயப்பிரமாணம் இல்லாத காலத்தில் செய்ததை சட்டம் என்பதுபோல போதகர் கொண்டுவருகிறதை சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கும் விதமாக,

சங்கீதம் 128:3, நீதிமொழிகள் 5:18-19 என்பவற்றில் "உன் மனைவி" என்று ஒருமையில் தான் உள்ளது. "உன் மனைவிகள்" என்று இல்லை... ஆகவே பழைய ஏற்பாட்டிலேயும் ஒருத்தனுக்கு ஒருத்தி தான் என்கிறார் பிஸ்கட் போதகர்.

ஆனால் இது தான் சட்டமாக இருந்தால், உபாகமம் 21:15-16 இல் இரண்டு மனைவிகளுடையவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற சட்டமே தேவையில்லை. அத்துடன் தாவீதுக்கு பல மனைவிகளும் வப்பாட்டிகளும் இருந்ததோடு (2 சாமுவேல் 5:13-14), இதையும் சேர்த்தே தேவனுக்கு ஏற்றபடி சரியாக நடந்தான் என (1 இராஜாக்கள் 15:5) சொல்லியிருக்காது. மாறாக உரியாவின் சங்கதியிலும் பல பெண்களை மணந்ததிலும் தவிர மற்றையதில் தேவனது பார்வைக்கு சரியாக நடந்தான் என்று வந்திருக்கும். அப்படி இல்லையே.. மாறாக உரியாவின் சங்கதியை தவிர மற்ற அனைத்திலும் தேவனது பார்வைக்கு சரியாக நடந்துகொண்டார் என்று தான் உள்ளது.

அத்துடன் தாவீதுக்கு இதற்கு மேலதிகமாக ஆண்டவரின் மனைவிகளை மடியில் கொடுத்ததே நான் தான் என்கிறார் கர்த்தர்.(2 சாமுவேல் 12:8). ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக அல்லது வப்பாட்டியாக கொடுப்பதையே குறிக்கும் (ஆதி 16:5).

இப்படி பலதாரமணத்தை கர்த்தர் ஆதரித்து சட்டம் கொடுத்துள்ளதோடு, தாவீதுக்கு செய்தும் கொடுத்துள்ளார். மற்றும் சரியும் கண்டார்.

அப்படியானால் போதகர் சொல்லும் வசனங்களான சங்கீதம் 128:3, நீதிமொழிகள் 5:18-19 என்பவற்றின் அடிப்படை என்ன?

பொதுவாக பேச்சு வழக்கில் முன்னிலையிலுள்ள அல்லது படர்க்கைரிலுள்ள  (2nd person or third person) ஓர் ஆணை நோக்கி பேசும்போது, "உன் மனைவி " என்று ஒருமையில் சொல்ல காரணம், அனைவரும் பலதாரமணம் செய்திருக்க மாட்டார்கள் என்பதாலும் குறைந்த பட்சம் ஒரு மனைவியையாவது உடையவனாக இருப்பான் என்பதால் தான்.

அதனால் சபிக்கப்படும் ஒருவனைக்குறித்தும் அவன் 109:9இலும் இவ்வாறே

அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.

சங்கீதம் 109:9

 

இவ்வாறே ஹதீஸ்களிலும் ஒருமையில் இவ்வாறு பேசும்போது "உன் மனைவி" என ஒருமையிலேயே கூறப்பட்டிருக்கும்.

உதாரணமாக,

"இறைவனின் திருப்தியை நாடி நீ எதைச் செலவு செய்தாலும், அதற்காக கூலி வழங்கப்படுவாய். *உன் மனைவியின்* வாயில் நீ ஊட்டிவிடும் ஒரு கவள உணவு உட்பட." (புகாரி 56)

இதற்கெல்லாம் காரணம் குறைந்த பட்சமாக ஒரே ஒரு மனைவியயாவது உடையவனாக இருப்பான் என்பதால் தான். பிற்காலத்தில் பவுலும் இயேசுவும் அதையும் நீக்கி திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு என்றனர்.

ஆகவே இவையும் ஒருத்தனுக்கு ஒருத்தி தான் சட்டம் என்பதற்கு ஆதாரம் அல்ல

இதே போல தற்குறித்தனமாக முடிவெடுப்பதாயின் ஏசாயா 54:5இலே உன் கணவன் என்பதை எபிரேயத்தில் உன் கணவர்கள் என்றும், ஏசாயா 65:21 இலே உன் மக்கள் (sons) உன்னை மணந்து கொள்வார்கள் என்றும் உவமையாக கர்த்தர் கூறுகிறார். இதை வைத்து பைபிளின் படி மகன்கள் தம் தாயை திருமணம் முடிப்பதும், பல கணவர்களை வைத்துக் கொள்வதும் கர்த்தரின் விருப்பம் என்பார்களா?

(1:00:00)

 

137.முகம்மது நபியிற்கு பல மனைவிகள் வப்பாட்டிகள் இருக்கும்போது ஏன் ஆறு வயது பெண்ணை முடிக்க வேண்டும் என்று லூசுத்தனமாக கேட்கிறார்.

ஆனால் அன்னை ஆயிஷா(ர) அவர்களை மணம் முடித்து இல்லறத்தில் ஈடுபடும் காலத்தின்போது ஒரு விதவை மனைவி (ஸவ்தா) மட்டும் தான் இருந்தார்..

தாம்பத்யத்திற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியாக இருந்ததாலும், அவர்களது உரிமை எதுவும் பாதிக்கப்படாதிருக்க அதை குறைசொல்ல என்ன இருக்கிறது?

பைபிள் படி திருமண வயது என்ன என்று கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை.

அதுவும் வசனத்தை தப்பாக வாசித்து தம் சொந்த உருட்டாக 13 வயது என்று சொன்னார்கள்.(135வது குறிப்பு)

(1.00:50)

138.மீண்டும் இந்த பிஸ்கட் போதகர், அபூபக்ர் (ர) அவர்கள் நபியவர்களை தன் சகோதரன் என்று சொல்லி எப்படியாவது அனுப்பிவிட பார்த்தார் என்றும் ஆட்சியாளர் தலைவர் என பயந்து இப்படி நடந்துகொண்டார் என்றும் உருட்டுகிறார்.

இது இவர்களின் லட்சணம் என்ன என்பதை காட்டுகிறது. அப்போது நபிகளாரும் அபூபக்ரும் ஆட்சியாளர்களாக இருக்கவில்லை.. மக்காவில் பலவீனமாக இருந்தார்கள்.

ஆனால் நபியவர்களிடம் தன் சந்தேகத்தை தான் கேட்டார். அதாவது நீங்கள் என் சகோதரராயிருக்கிறீரே என்று சொன்னார். இரத்த சம்பந்தமான சகோதரனுக்கு தான் அவ்வாறு இரத்த  சகோதரனின் மகளை முடிப்பது கூடாது.

அத்துடன் நபியவர்கள் பெண் கேட்ட போது, அவர் சிறுபிள்ளை என்ற பேச்சே பேசப்படவில்லை.... காரணம் தாம்பத்யத்திற்கேற்ற  உடல்தகுதியும் மனத்தகுதியும் அடைந்த பின்னரே குடும்ப வாழ்வில் இணைவார்கள். மற்றவை ஒப்பந்தம் மட்டுமே.

அத்துடன் பைபிள் தகப்பனுக்கு தன் சொந்த மகளை விற்பதற்கு அனுமதி கொடுக்கிறது.யாத்திராகமம் 21:7-10.. அதுபோன்று இஸ்லாம் அனுமதிக்க வில்லை..

இது சம்பந்தமாக விரிவாக previous part #102 இல் காணலாம்

(1:01:50)

139.ஈஸாக் 40 வயதில் திருமணம் முடித்திருக்கிறார் என இருப்பதை வைத்து மாட்டிக் கொண்டதால்,  வயது முதிர்ந்து திருமணம் முடிப்பது தப்பல்ல என்று கூறும் போதகர் , பல மனைவிகளும் வப்பாட்டிகளும் வைத்துக்கொண்டு ஆறு வயது பெண்ணை மணந்ததையே தப்பு என்கிறோம் என்கிறார் பிஸ்கட் போதகர்.

அதாவது ,முதலில் 53வயது ஆறு வயது என்று பேசியவர், தற்போது இத்தனை மனைவிகளை வப்பாட்டிகளை வைத்துக்கொண்டு முடிந்ததால் தப்பு என்பதாக கூறுகிறார். ஏனெனில் ஈசாக்கு ரிஃப்கா (ரெபேக்கா) பாட்டியை எப்போது முடித்தார் என்றால் இரண்டு விதமான கருத்துக்கள் யூதர்கள் மத்தியில் உள்ளன.

1. அப்போது ரிப்கா பாட்டியிற்கு மூன்று வயது  (பழைய யூதர்கள்  Seder olam rabbah அத்தியாயம் 1, Genesis Rabbah 57:1, ஆதியாகமம் 25:20இற்குரிய Rabbi Rashi அவர்களின் விளக்கம் ,Tosafot on Yevamot 61b)

2.அப்போது ரிப்கா பாட்டியிற்கு 13 வயது.(நவீன யூதர்களின் விளக்கம்)

எப்படி பார்த்தாலும் குறைந்தது  40 வயது 13 வயது என இவர்களுக்கு பிரச்சினை உள்ளது... அதை சமாளிப்பதற்காக தான் பல மனைவிகள் பல வப்பாட்டிகள் இருக்கும்போது இப்படி செய்தது தப்பு என்கிறோம் என்கிறார்.

ஆனால் அன்னை ஆயிஷா அவர்களை மணம் முடிக்கும்போது ஒரே மனைவி மட்டுமே இருந்தார். அடிமைகளோ வேறு மனைவிகளோ இருக்கவில்லை.

இது சம்பந்தமாக விரிவாக previous part #102 இல் காணலாம்

(1:03:30)

140.மீண்டும் இந்த பிஸ்கட் போதகர், முகம்மது நபி குர்ஆனின் கட்டளையை மீறி அந்நிய பெண் வரும்போது தன் கண்ணை மேய விட்டார் என்றும் அதை நினைத்து தன் மனைவியிடம் உறவு கொள்ளும் அளவுக்கு நடந்துகொண்டார் என்கிறார் முட்டாள் போதகர்.

எதேச்சையாக பார்வை விழுந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அழகான வழிகாட்டலே இது.

தன் மனதில் விழுந்த பார்வையின் எண்ணம் நிலைத்திராதிருக்கும்படி தன் மனைவியிடம் கூடி விடுவதற்கு முன்மாதிரியாக வழிகாட்டப்படுகிறது.

இவர்கள் நீலப்படம்  பார்த்துக்கொண்டு அந்த எண்ணத்தில் தன் மனைவியிடம் கூடும் வழக்கம் அல்லது சுயஇன்பம் காணும் பழக்கம் நிச்சயம் இந்த போதகருக்கு இருக்கும். அதனால் தான் இப்படி அசிங்கமாக பேசுகிறார்.

ஒழுக்கமான எவரும் இவரை போல பேச மாட்டார்.

(1:06:00)

 

141.மீண்டும் தாவீது செய்தது தப்பு என்று உருட்டுகிறார். அதற்கு ஆதாரமாக உபாகமம் 17:17ஐ குறிப்பிடுகிறார்.. அத்தோடு சாலமோன் ராஜா கர்த்தர் சொன்னதை மீறி பலதாரமணம் செய்ததை தப்பு என பைபிள் கண்டிப்பதாக 1 இராஜாக்கள் 11இலுள்ள வசனத்தை (வசன எண்ணை கொடுக்காமல்) வாசித்து, பைபிளில் எப்போதும் பலதாரமணம் அனுமதிக்கப்படவில்லை என பைபிளை படிக்காமல் உலருகிறார் இந்த பிஸ்கட் போதகர்.

*ஆனால், தாவீதுக்கு ஆண்டவரின் மனைவிகளை மடியில் கொடுத்ததே நான் தான் என்றும் (2 சாமுவேல் 12:8), உரியா மேட்டர் தவிர, தாவீது செய்த அனைத்தும் கர்த்தர் பார்வைக்கு சரியானது என்று (1 இராஜாக்கள் 15:5)  தாவீது செய்த பல திருமணங்களையும் வைத்திருந்த பல வப்பாட்டிகளையும் (2 சாமுவேல் 5:13-14) ஓகே என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறது பைபிள். அத்துடன் இரண்டு மனைவிகளுடையவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சட்டத்தையே உபாகமம் 21:15-16 இல் வழங்கி, பலதாரமணம் ஓகே என கர்த்தர் ஆதரித்துள்ளார்.

 

*ராஜாவுக்கு அதிக மனைவிகள் வைத்திருப்பது தான் கூடாது. அதற்கான காரணம் அவனது இருதயம் பின்வாங்காமல் இருப்பதற்காக என உபாகமம் 17:17 சொல்கிறது. அதாவது தன் சக்திக்கு அப்பாற்பட்ட அளவுக்கு அதிகமான மனைவிகளை வைத்திருப்பதையே இது குறிக்கிறது.

*ஏனெனில் தாவீதுக்கு இருந்த அநேக மனைவிகள் கர்த்தரிடம் இருந்து அவனது இருதயத்தை பின்வாங்க வைக்கவில்லை. அதையும் சேர்த்து தான் 1 இராஜாக்கள் 11:4,6 கூறி, தாவீதைப்போல சாலமோன் இருக்கவில்லை என்கிறது.

அதாவது இங்கே மேட்டர் தேவனை விட்டு பின்வாங்கியது தானே அல்லாமல் அநேக மனைவிகள் என்பது அல்ல.

9ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

10அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

11ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.

1 இராஜாக்கள் 11:9-11

இங்கே கர்த்தர் கற்பித்தது தன்னை தவிர வேறு கடவுளை பின்பற்ற கூடாது என்பதை தான். அதை சாலமோன் மீறினார் என்றே இவை சொல்கின்றன.

உருட்டும் போதகர் சொல்வதை போல, அதிக திருமணத்தை குறித்து இங்கே கண்டிக்கப்படவே இல்லை!! குறிப்பாக மாற்றுமத பெண்களை திருமணம் முடிப்பதை தோரா தடுத்திருக்க (யாத்திராகமம் 34:16,உபாகமம் 7:3, யோசுவா 23:12-13), அவர்களில் அதிகமானோரை சாலமோன் மணந்ததாக தான் 1 இராஜாக்கள் 11:1 சொல்கிறது.

(1:07:40)

142.மீண்டும் இந்த பிஸ்கட் போதகர், இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரிக்கிறது. ஒரு மனைவி இருக்க இன்னொரு மனைவியை கூட்டி வருவது விபச்சாரம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறார்.

*இந்த முட்டாளுக்கு பைபிளில் தேவனே தாவீதுக்கு ஆண்டவருடைய மனைவிகளை மடியில் கொடுத்தார்.(2 சாமுவேல் 12:8), பெண்களை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக வப்பாட்டியாக கொடுப்பது தான் (ஆதி 16:5).

*அத்துடன் இரண்டு மனைவிகளுடையவனுக்கு சட்டம் கூறி, அதை கர்த்தர் ஆதரித்துள்ளார் (உபாகமம் 21:15-16)

*அதுமட்டுமின்றி தாவீதுக்கு பல வப்பாட்டியும் பல மனைவிகளும் இருந்தும் (2 சாமுவேல் 5:13-14), உரியா விசயத்தில் தவிர வேறு தவறு செய்யாமல் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என கூறி (1 இராஜாக்கள் 15:5) அதையும் சேர்த்து சரி கண்டது பைபிள்.

*அத்துடன் தாவீது மனந்திரும்பி மீண்டும் அதே உரியாவின் மனைவியோடு தாவீது உடலுறவு கொண்டு பிறந்த இரண்டாம் பிள்ளையை தேவன் நேசித்து, (2 சாமுவேல் 12:24), இங்கே மேட்டர் உடலுறவு அல்ல.. சுத்தமான உறவா கள்ள உறவா என்பது தான் என்பதை பைபிள் தெளிவாக கூறியிருக்க, இதையெல்லாம் உணராமல் லூசு போல பேசியுள்ளார் போதகர்.

இதற்கு மேலதிகமாக சில பைபிள் சட்டங்கள் பலதாரமணத்திற்கு வழிவகுக்கிறது.

1.அண்ணனுக்கு சந்ததி இல்லாமல் அவன் மரணித்தால், அவனுடைய மனைவியை தம்பி முடித்து முதல் பிள்ளைக்கு அண்ணனின் பெயரை வைக்க வேண்டும் (உபாகமம் 25:5-10). தம்பி ஏற்கனவே திருமணம் செய்திருக்க அண்ணன் சந்ததியில்லாமல் இறந்தால், அவன் பலதாரமணத்தை செய்வது அவன்மீது கடமையாகிவிடுகிறது.

2.ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றுப் போட்டால், வாங்கியவன் அவளை தனக்கு மனைவியாக/வப்பாட்டியாக நியமித்துக்கொள்ளலாம் (யாத்திராகமம் 21:7-10) . இந்த சட்டப்படி, ஏற்கனவே திருமணமானவனுக்கு தன் மகளை விற்றால், அப்போது அவன் தனக்கு நியமித்துக்கொண்டால், அது பலதார மணமாக ஆகிவிடும்.

3.ஒருவன் ஒரு கன்னிப் பெண்ணை கற்பழித்தால், தகப்பனுக்கு ஐம்பது காசை கொடுத்து அவளை திருமணம் செய்வது கடமை.(உபாகமம் 22:28-29)

 ஏற்கனவே திருமணமானவன் கற்பழித்தால், அப்போது அவனுக்கு பலதாரமணமாக ஆகிவிடும்.

(திருமணமான அல்லது நியமிக்கப்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொண்டால் தான் தண்டனை.. கன்னியிடம் செய்தால் அதிஷ்ட லொத்தர்)

இப்படி சட்டம் இருப்பதையே தெரியாமல் ஏதோ பிடுங்கி மாதிரி உலரி வைத்துள்ளார்.

(1:08:10)

143.காமுகர்கள் விரும்பக்கூடிய பலதாரமணம் என கூறி ஆயிஷா அவர்களின் "உங்கள் விருப்பங்களை அல்லாஹ் விரைவாக பூர்த்தி செய்வதை பார்க்கிறேன்" என்ற ஹதீஸை வாதமாக வைத்ததாகவும் அதற்கு முஸ்லிம் தரப்பு பதில் தரவில்லை என்கிறார்.

 

இந்த ஹதீஸில் கூட, நபியவர்கள் தன் விருப்பத்திற்காக இட்டுக்கட்டுகிறார் என அவரை நன்கு அறிந்த மனைவி கருதவில்லை.... மாறாக இறைவனே நபிகளாரது விருப்பத்தை நிறைவேற்றுவதாக சொல்கிறார்கள்.

இறைவன் தன் தூதருக்கு விரும்பியதை தேர்வு செய்ய உரிமை கொடுத்து, அவர் எதை தெரிவு செய்தாலும் குற்றமில்லை எனும் விதமாக 33:51 இறக்கினான்

அதாவது அவர் விரும்பினால், அவரது மனைவியரில் சிலரை ஒதுக்கி வைக்கலாம். அல்லது அவர்களை சேர்த்துக்கொள்ளலாம். விரும்பினால் அவர் ஒதுக்கியவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என தேர்வை வழங்கினான்.

இது குறித்து தான் அன்னை ஆயிஷா அவர்கள் கூறினார்கள் (புகாரி 4788)

இப்படி தன் தூதர் நேர்மையாக தான் நடப்பார் என அறிந்ததால் இறைவன் தேர்வை வழங்கியுள்ளான்.

அப்படி தேர்வு வழங்கப்பட்ட பின்பும் நபிகளார் அதை பயன்படுத்தவில்லை என்பதை அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார் - புகாரி 4789

இது குறித்து குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை...

பலதாரமணத்தை கர்த்தர் ஆதரித்தார் என்ற மேட்டரே தெரியாமல் உலரியவையே இவை.

1:08:30

144.கணவன் இருக்கும் பெண் அடிமையாக பிடிபட்டால் அவளோடு உறவு கொள்ளலாம் என்பது 4:24 குறிப்பிட்டு, கற்பழிப்பை சட்டமாக்கியதாக உலரி இதற்கு பதில் தரவில்லை என்கிறார்

முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு தோற்று, போரில் அடிமையாக பிடிக்கப்பட்டால், அப்போது போரிட்ட நபர்களுக்கு இவர்கள் பிரித்து சொத்தாக கொடுக்கப்படுவார்கள்.

அத்தகைய பெண்களோடு, குடும்ப வாழ்வில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதுவல்லாத அனைத்து கணவனுடைய பெண்களும்  திருமணத்திற்கு  தடைசெய்யப்பட்ட பெண்கள் எனும் லிஸ்டில் தான் வருவர் (குர்ஆன் 4:24)

உண்மையில் இது கற்பழிப்பு அல்ல.... உரிமையுள்ளவர் தன் சொத்தாக உள்ள அடிமையுடனே உரிமையுடன்  சேர்வதால் அது கூடும்.

சரி பிழையை தீர்மானிக்க தன் மனோயிச்சையை உபயோகிக்க இயலாது.

அத்தோடு, போரில் பிடிபடும் கைதிகளை கண்டபடி நடத்துவதும் கற்பழிப்பதும் காலம்காலமாக இருந்துவரும் நடைமுறை..

ஆனால் இஸ்லாம் இதை சீர்செய்து, முறையாக பங்கு வைக்கப்பட்ட பின், அவள் அவனுடைய சொத்து என்று ஆகிய பின்,  ஒரு குறித்த அடிமைப் பெண்ணுடன் அந்த  ஆணுக்கு மட்டுமே உறவுகொள்ள அனுமதிக்கிறது.  அதாவது ஒரு தடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரையும் கர்ப்பிணி பிள்ளை பெறும்வரையும் உறவு கொள்ள முடியாது அபூதாவூத் 2157.  அத்தோடு அடிமைப்பெண்ணுக்கு நல்லொழுக்கத்தை கற்பித்து அவளை விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால் அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் புகாரி 97.

உண்மையில் கற்பழிப்பை சட்டமாக்காவது பைபிள் தான்.

அதாவது கன்னிப் பெண்ணை கற்பழித்தால், அவளுடைய தகப்பனுக்கு 50 காசை கொடுத்து அவளை திருமணம் முடிப்பதை கடமை என்கிறது -உபாகமம் 22:28-29.

அவளுக்கு விருப்பம் இல்லை என்பதால் தான் கற்பழிப்பே நிகழுது.. அவனுடைய தலையிலேயே அவளை நிர்ப்பந்தித்து மீண்டும் மீண்டும் கற்பழிக்க வழியாக இது அமைந்துள்ளது.

1:08:55

145.மீண்டும் பிஸ்கட் போதகர், குர்ஆன் 70:30 இலே திருமணத்துக்கு வெளியே அடிமைகளுடன் உறவு கொள்வதை அனுமதிக்கிறது. அது ஒழுக்கக்கேடு என்கிறார். அதற்கு பதில் சொல்லவில்லை என்கிறார் .

பைபிள் பல வப்பாட்டி வைத்த தாவீதையும் ( 2 சாமுவேல் 5:13-14) கர்த்தருடைய பார்வையில் அனைத்திலும் சரியாக நடந்துகொண்டார் என கூறி (1 இராஜாக்கள் 15:5) அவர் திருமணத்திற்கு வெளியே வைத்த உறவையும் தேவன் சரிகண்டே உள்ளார்.

இஸ்லாம் மனைவியுடனும், தனக்கு சொந்தமான உரிமையான அடிமைப்பெண்ணுடனும் குடும்ப வாழ்வில் ஈடுபட அனுமதிக்கிறது.

அடிமை என்பது எஜமானின் சொத்து... தன் சொத்தாக இருப்பவருடன் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதை எந்த விதத்திலும் குற்றப் படுத்த முடியாது. ஆனாலும் அடிமைப்பெண்ணுக்கு கற்றுக்கொடுத்து,விடுதலை செய்து திருமணமும் செய்து கொண்டால் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் புகாரி 97.

1:09:45

 

146.முஸ்லிம் 2846 ஹதீஸை குறிப்பிட்டு விந்தை வெளியே பாச்ச வேண்டாம் உள்ளே பாச்சுங்கள் என்று சொன்னதாக சொல்லி, விபச்சாரத்தை அனுமதிப்பதாக சொல்கிறார்.

இதுவும் அடிமை விசயமானது தான். போரில் எதிர்த்தரப்பை சிறைபிடித்து அடிமையாக பிடிப்பது அப்போது இருந்த வழமை... அதை முஸ்லிம்கள் செய்யாவிடில், அவர்களின் எதிரிகளுக்கு தான் வசதியாக இருக்கும்.

அதனால் போரில்  அவ்வாறு சிறை பிடிப்பதை செய்வதை தவிர வேறு வழியில்லை..

அப்படி பிடிக்கப்பட்ட கைதிகள் பங்குவைக்கப்பட்டு, கையளிக்கப்பட்ட பின் அவர்களோடு தாம்பத்யத்தில் ஈடுபட அனுமதிக்கிறது.,.... காரணம் அப்போது எஜமான் அடிமை என உறவு உண்டாகிவிட்டது. (அப்படி பங்காக கிடைக்கும் பெண்கள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை உறவு கொள்ள கூடாது என்றும் மற்ற பெண்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது என்றும் அபூதாவூத் 2157)

அது குறித்து தான் இந்த ஹதீஸில், கர்ப்பம் அடையாமல் இருப்பதற்காக அஸ்ல் செய்தனர். அது அவசியமில்லை என்பதையும் மனிதனால் நினைத்தபடி இது நடந்துவிடாது என்பது குறித்தே கூறுகிறது.

 

விந்தை வெளியே விட்டதற்கான அக்கபோர் பைபிளில் தான் உள்ளது.

தாமார் என்ற தன் அண்ணீயை கர்ப்பமாக்காமல் இருப்பதற்காக விந்தை வெளியே விட்டதற்காக கர்த்தர் ஓனான் என்பவனை கொன்றார். ஆனால் தாமாரின் மாமா யூதா தன் மருமகள் என அறியாமல் அவளை வேசி என நினைத்து விபச்சாரம் செய்து கர்ப்பமாக்கியது குறித்து கர்த்தர் எதுவுமே சொல்லவும் இல்லை.. அங்கே கண்டிக்கவும் இல்லை. (ஆதியாகமம் 38:8-10, 14-30)

திருமண உறவில் விந்தை வெளியே விட்டதற்கு கொன்றவர், விபச்சாரத்தில் விந்தை உள்ளே விட்டதற்காக எந்த கண்டிப்பும் இல்லை

1:11:45

கிறிஸ்தவ அமர்வு முடிவு

20.முஸ்லிம் தரப்பு பத்தாம் அமர்வு

147.முஸ்லிம் தரப்பு அமர்வு

-ஃபாத்திமா (ர) அவர்கள் விசயமாக, அவரின் கணவருக்கு இரண்டாம் மனைவியை முடிப்பதை தடை செய்தார் என்பது சம்பந்தமாக, அப்பெண் நபியின் எதிரியாக இருந்த நபரின் மகள் என்பதால் (அதனால் மார்க்கரீதியாக குழப்பத்திற்கு ஃபாத்திமா ஆகாதிருக்க) ஒரே நேரத்தில் இருவரையும் மனைவியாக கொள்ள முடியாது என்றும் வேண்டுமென்றால் ஃபாத்திமாவை தலாக் விட்டு , அப்பெண்ணை முடிக்குமாறு சொன்னது சுட்டிக்காட்டப்பட்டது.

-பிஸ்கட் போதகர் ஹதீஸில் இல்லாத தன் சொந்த சரக்குகளை போட்டு வாதமாக வைப்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது அபூபக்ர் தன் மகளை கொடுக்காமல் இருப்பதற்காக முயற்சி செய்தார் என்றும் அதை அவர் விரும்பவில்லை என்றெல்லாம் போதகர் சொந்தமாக உருட்டியது சுட்டிக்காட்டப்பட்டது.

-விபச்சாரத்தை அல்லாஹ் செய்யச் சொன்னதாக போதகர் உருட்டிய பொய்யிற்கு, தேவன் தானாக முன்வந்து விபச்சாரம் செய்விப்பேன் அதை மக்கள் பார்க்க செய்விப்பேன் என கூறிய வசனம் சுட்டிக்காட்டப்பட்டு, இது புளூ ஃபிலிம் போன்றது தானே என் உணர்த்தப்பட்டது

2 சாமுயேல் 12:11-12 TCV

[11] “மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான். [12] நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்என்று சொல்கிறார்என நாத்தான் சொன்னான்.

https://bible.com/bible/2730/2sa.12.11-12.TCV

 

இப்படி விபச்சாரம் செய்விப்பேன் என அவர் சொன்ன வசனம் உள்ளது.

இதுபோன்றே தாவீதுக்கு நெருக்கமான அவரது மகன் அப்சலோம் தாவீதின் வப்பாட்டிகளோடு மக்கள் பார்க்கும் விதமாக உறவு கொண்டான் என சொல்லப்பட்டுள்ளது

2 சாமுயேல் 16:21-22 TCV

[21] அதற்கு அகிதோப்பேல், “அரண்மனையைப் பராமரிக்க உமது தகப்பன் வைப்பாட்டிகளை விட்டுப் போயிருக்கிறார்; அவர்களுடன் நீர் உறவு வைத்துக்கொள்ளும். இவ்வாறு நீர் செய்து உம்மை உமது தகப்பனுக்கு வெறுப்புக்குரியவனாக்கின செய்தியை இஸ்ரயேலர் எல்லோரும் கேள்விப்படுவார்கள். அப்போது உம்மோடிருப்பவர்கள் இன்னும் பெலப்படுவார்கள்என ஆலோசனை சொன்னான். [22] எனவே அரண்மனையின் கூரையின்மேல் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் அமைத்தார்கள். அப்சலோம் இஸ்ரயேல் மக்களனைவரின் முன்னிலையிலும் தன் தகப்பனின் வைப்பாட்டிகளுடன் உறவுகொண்டான்.

https://bible.com/bible/2730/2sa.16.21-22.TCV

(அதுமட்டுமின்றி விபச்சார நேர்முக வர்ணனையும் பைபிளில் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்த கிறிஸ்தவ அமர்வுகளின் கீழ் சுட்டிக் காட்டுகிறேன்)

(1:22:40)

-இந்த முட்டாள் போதகர்கள் முதலில் வயது சென்று திருமணம் முடிப்பது தப்பு என சொன்னார்கள்,பிறகு ஈஸாக் யாக்கோபு நாப்பது வயதிலும் அதன் பின்பும் முடித்தது சுட்டிக்காட்டப்பட்டபோது, எத்தனை வயதிலும் முடிக்கலாம் என ஒப்புக்கொண்டு மாற்றியது சுட்டிக்காட்டப்பட்டது

-மஹர் விசயமாக நூறு ஆணுறுப்பு நுனித்தோல் கேட்டு தாவீது கொடுத்ததை  (1 சாமுவேல் 18:24-28) சுட்டிக்காட்டி, கர்த்தரின் பார்வைக்கு இதுவும் செம்மையானது தான் என்பதை 1 இராஜாக்கள் 15:5 மூலம் காட்டப்பட்டது. அத்தோடு கர்த்தர் இதை தடுக்கவும் இல்லை... (தாவீதுக்கு பரிசுத்த ஆவி வந்த பின் தான் இந்த நிகழ்வு நடந்தது 1 சாமுவேல் 16:13..... ஆவியானவர் இருக்கும் நிலையில் தான் இந்த நிகழ்வு)

-பலதாரமணத்தை குறித்து தாவீது ஏற்கனவே செய்ததையும் சேர்த்து தான் தேவன் பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என சொல்லப்பட்டிருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. (விரிவாக நான் மேலே எழுதியுள்ளேன்)

-உபாகமம் 17:17 இலே அநேக பெண்களை ராஜா முடிக்க வேண்டாம் என்று இருப்பது குறித்து, அவை ஒன்றுக்கு மேல் என்பதாக எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பது கேட்கப்பட்டது.

(மேலே இதுகுறித்து எழுதியுள்ளேன்)

(1:26:40)

முஸ்லிம் அமர்வு முடிவு... ஐந்தாம் வீடியோவும் முடிவு

to read next part 

 

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1