|
1.தேவன் மனிதனை செம்மையானவனாக
உண்டாக்கினாராம். மனிதர்கள் பல வழிகளை தேடிக்கொண்டார்களாம்- பிரசங்கி 7:29 |
|
*அனைவரும்
இயற்கையான மார்க்கத்திலேயே பிறக்கிறார்கள். அவர்களது
பெற்றோர் தான் அவர்களை வழி மாற்றுகிறார்கள் (புகாரி 1385) என்று தான்
இஸ்லாம் கூறுகிறது. *ஆதம் வழி தவறாது
இருப்பதற்காக, சைத்தானை
அடையாளப்படுத்தி இவன் உமக்கும் உம் மனைவிக்கும் எதிரி என்றும் அவன் உங்களை
சுவர்க்கத்தில் இருந்து வழிகெடுத்து வெளியேற்றிவிட வேண்டாம் என எச்சரிப்பும்
வழங்கினான் (குர்ஆன் 20:117 & 7:22) *ஆதம்
வழி தவறிய போது அவருக்கு பாவமன்னிப்பு கேட்பதையும் கற்றுக்கொடுத்து, அவரை
மன்னித்து நல்வழி காட்டினான். அத்தோடு தன்னிடமிருந்து நேர்வழி வரும்
என்றும் அதை பின்பற்றுவோர் வழிதவற மாட்டார் என்றும் அதை மறுப்போர் நரகம் புகுவர்
என எச்சரித்தான்(குர்ஆன் 2:37-39 & 20:122-124) இதை படிப்பினையாக கொண்டு, ஆதமுடைய
பிள்ளைகளை நோக்கி, உங்கள் பெற்றோரை
சைத்தான் ஏமாற்றி சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றியது போல உங்களை குழப்பி விட
வேண்டாம் என நமக்கு வழி காட்டுகிறான் (குர்ஆன் 7:27) இதிலிருந்து
இறைவன் எதை சொன்னாலும் அதிலே நலவே இருக்கும் என்பதையும் அதற்கு கீழ்படிந்தால்
சுவர்க்கம் கிடைக்கும் என்பதையும் இறைவன் சொன்னதை மீறி நடந்தால் அது நல்லது
போன்று சைத்தான் காட்டினாலும் அது கெடுதியிலேயே முடியும் என்பதை படிப்பினையாக்கி
வழிகாட்டுகிறது குர்ஆன் -கர்த்தர் ஆதாம்
ஏவாளை நன்மை
தீமையை அறியாதோராக அம்மணமாக இருப்பதை கூட தெரியாதவராக படைத்தார் (ஆதி
2:25 & 3:22) இது தான் செம்மையா? -இதனால் பாம்பு
அவர்களை ஏமாற்றிப்போட்டது (நன்மைதீமை அறிய வழிகாட்டியது) (ஆதி 3:1-4,22) பாம்பு
சொன்னதை கேட்டதால் ,மனிதன்
நன்மை தீமை அறிந்துகொண்டு தேவனை போல ஆகிவிட்டான் என தேவனே வாக்குமூலம்
கொடுக்கிறார். இதனால் அவன்
என்றென்றும் உயிரோடு இருந்துவிட கூடாது என்பதற்காகவே அவனை தோட்டத்திலிருந்து
விரட்டினார் (ஆதி
3:22) ஆனால் பாம்பை குறித்து எச்சரிப்பு
வழங்கப்படவுமில்லை. நல்லது கெட்டது அறியாதவர்களாக படைத்து விட்டு
பேசும் தந்திரமான பாம்பை உள்ளே விட்டு இதனால் குழந்தை போன்றவர்கள்
ஏமாற்றப்படுவது தப்பா? ஏமாற்ற
விட்டவரின் தப்பா? (ஒருவேளை
பாம்பு இல்லாவிட்டால் இன்றும் இவர்கள் அம்மணமாக தான் அழைந்து திரிவார்கள். .
ஆனால் குர்ஆன் படி அங்கே ஆடை அணிவிக்கப்படிருந்தனர். அதை கழற்றுவதற்காகவும் சுவர்க்கத்தில்
இருந்து வெளியேற்ற வைப்பதற்காககவும் தான் சைத்தான் அவர்களை ஏமாற்றினான். அதுவும்
இறைவனால் எதிரி என ஆதமுக்கு அறிவிக்கப்பட்ட பின்னால் (குர்ஆன் 20:117-118 & 7:20,22,27) *காமெடியான
விசயம் என்னவென்றால், கடவுளுக்கு முன்னறிவு உண்டு. ஆதாமை படைத்து பாம்பை உள்ளே விட்டு
மேஜிக் மரத்தையும் படைத்த போதே ஆதாம் சாப்பிடுவார் என்பதையும் கடவுள் அறிவார். அப்படி சாப்பிட்டால் பிற்காலத்தில் தன் மகனை தனக்கே பலியிட
வேண்டும் என்பதையும் பலியிடாமல் அவரால் மன்னிக்க முடியாது என்பதையும் அவர்
அறிவார். அப்படி அறிந்திருந்தே
இப்படி படைத்தால், தன் மகனை தனக்கு நரபலியிட்டு இரத்த வெறியை தீர்த்துக்
கொள்வதற்காகவே படைத்தார் என தெளிவாக வந்துவிடும். |
|
ஆக உண்மையில் பைபிள் செம்மையாக மனிதனை
படைத்ததாக கூறினாலும் அதை செம்மையாக கருத முடியாத நிலையிலேயே ஆதி மனிதனின்
வரலாறு பைபிளில் உள்ளது. அதைவிட
முக்கியமானது: முன்னறிவுள்ள
தேவன் இப்படி செய்தார் என்பதே தன் மகனை தனக்கு நரபலியிட போட்ட மாபெரும் திட்டம்
என்றும் புரிகிறது. குர்ஆனோ ஆரம்பம் முதல் ஆதமுக்கு வழிகாட்டி எதிரியை
அடையாங்காட்டி , தவறு
செய்தபோதும் மன்னித்து வழிகாட்டினார் என கூறுகிறது. இதிலே பைபிள் மனிதனை நேர்வழிப்படுத்துகிறது
என்றாகிவிட்டதா? |
|
|
|
2.எல்லோரும் வழி விலகி ஏகமாக
கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் ஒருவனாகிலுமில்லை. (சங்கீதம் 14:3) என
அனைவரும் வழிதவறி போனதாக பைபிள் சொல்கிறதாம் |
|
-உலதத்தில்
அதிகமானோரை பின்பற்றினால் அவர்கள் உம்மை நேர்வழியை விட்டும் வழிகெடுத்து
விடுவார்கள். காரணம் அவர்கள் வெறும் யூகங்களை பின்பற்றுவதாலும் பொய்யான
கற்பனைகளில் மூழ்கி கிடப்பதாலும் தான்- (குர்ஆன்
6:116) இறைவனிடமிருந்து வந்த நேர்வழியை பின்பற்றுவோரே
நேர்வழியில் இருப்பர் (குர்ஆன் 2:38) இறுதி சமூதாயத்திடமாகிய எம்மிடம் நன்மையை ஏவி
தீமையை தடுக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கட்டளையிடுகிறது குர்ஆன் (குர்ஆன் 3:104) *உண்மையில்
சங்கீதம் 14:3 தாவீது தன் மாற்றுமத எதிரிகளை குறித்து சொன்ன பாட்டு ஆகும். அதே
அதிகாரத்திலே ,அப்பத்தை
விழுங்குவது போல என் மக்களை விழுங்குகிறார்கள் என்றும் அவர்கள் யெகோவாவை
தொழுதுகொள்வதில்லை என்றும் தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறார் என்றும்
சீயோனிலிருந்து இஸ்ரேலுக்கு இரட்சிப்பு வரவேண்டுதல் செய்து சிறையிருப்பை
திருப்பினால் இஸ்ரவேலருக்கு சந்தோசமுண்டாகும் என்கிறார் (சங்கீதம் 14:4-7) *இத்தகைய
மாற்றுமத மக்களை ஈவிரக்கமின்றி கொன்றுபோடுமாறும் அவர்களை உங்களோடு தங்குவதற்கு
அனுமதிக்க வேண்டாம் என்றும் இதே கர்த்தரே சொன்னார் . இல்லாவிட்டால்
அவர்களுடன் சேர்ந்து இஸ்ரவேலரும் கெட்டுப் போவார்கள் என்கிறார் (உபாகமம் 20:16-18, யாத்திராகமம்
23:31-33) அத்தோடு இஸ்ரவேலரை கெடுத்துப்போட்டு குழந்தைகளை நரபலி கொடுக்க
வைத்து தீட்டுப்படுத்தியதும் கர்த்தர் தான் என்கிறார் கர்த்தர் (எசேக்கியேல்
20:26) *மனிதனை நன்மை
தீமை அறியாத தற்குறியாக படைத்து , பேசும்
பாம்பை உள்ளே விட்டால் அவன் கெட்டுப்போகாமல் இருப்பானா? நல்லது
கெட்டது தெரியாதவர் செய்வதை தப்பு என்று சொல்வதே தப்பு. (ஆனால்
குர்ஆனோ ஆதமிடம் அந்த சைத்தான் உனக்கும் உன் மனைவிக்கும் எதிரி என அறிவித்து
அவன் சொல்வதை கேட்காதே என்பதை சொல்லிக்கொடுத்தார். அவர் பாவத்தால் விழுந்தபோது
கூட மன்னிப்புக் கேட்பதற்கும் கற்பித்து , மன்னித்து
நலவழிகாட்டினான்- குர்ஆன் 20:117-122) |
|
மாற்றுமத
எதிரிகள் வழிகெட்டுப்போனதை தாவீது பாடுவதை எல்லோரும் வழிகெட்டதாக உருட்டுகிறார்.
அத்தோடு சொந்த மக்களையே வழிகெடுத்ததே கர்த்தர் தான் என கர்த்தரே வாக்குமூலமும்
கொடுக்கிறார். இதன்
மூலம் பைபிள் மனிதனை நல்வழிப்படுத்துகிறது என்றாகிவிட்டதா? |
|
|
|
3.கர்த்தர் தாமதிப்பது ஒருவரும்
கெட்டுப்போகாமல் மனந்திரும்ப வேண்டியே தாமதிக்கிறார்- 2 பேதுரு 3:9 |
|
*-இறைவன்
காஃபிர்களுக்கு மறுமை வருமுன்னே திருந்தி விடுமாறு அழைப்பு விடுக்கிறார்: 54.ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு
வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே
முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு
நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். 55.நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். 56.“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; 57.அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; 58.அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; 59.(பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.” (குர்ஆன் 39:54-59) இப்படி
மறுமையில் கைசேதப்பட்டுவிடாமல் இருப்பதற்காக அழைப்பு விடுக்கிறது. *அத்தோடு, இறைவனின்
அருளின் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் அனைத்து பாவங்களையும்
மன்னித்துவிடுவான் என்று ஆர்வமூட்டி அழைக்கிறது (குர்ஆன் 39:53) *அத்தோடு
மரணம் வரை திருந்துவதற்கு பாவமன்னிப்புக்கான வாசலை இறைவன் திறந்துவைத்து
காத்திருக்கிறான்- ( குர்ஆன்
4:17-18) *ஆனால் இயேசு
தன்னை ஏற்காதோர் திருந்தி விடவோ மன்னிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே உவமையாக
பேசினேன் என்கிறார்: மாற்கு 4:11-12 IRVTam [11] அதற்கு
அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு
அருளப்பட்டது; வெளியே
இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12] “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள்
அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள்
கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும்
உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச்
சொல்லப்படுகிறது” என்றார். https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam -தேவன் தான்
விசுவாசிக்காதபடிக்கு கண்களை குருடாக்கி இருதயத்தை கடினமாக்குபவர்: யோவான் 12:40 IRVTam [40] அவர்கள்
கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச்
சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள்
இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam -அவிசுவாசிகளை
திருத்த விடமாட்டார். மாறாக வஞ்சகத்தை அனுப்பி பொய்யை விசுவாசிக்க வைப்பார்: 2 தெசலோனிக்கேயர் 2:11-12
IRVTam [11] ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற
எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
[12] அவர்கள்
பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு
அனுப்புவார். https://bible.com/bible/1899/2th.2.11-12.IRVTam -இஸ்ரவேல் மக்களை
இவர் தான் கர்த்தர் என் அறிய வைப்பதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்க வைத்து
தீட்டுப்படுத்தினேன் என்கிறார்: எசேக்கியேல்
20:26 IRVTam [26] நான்
யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு
முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த
விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன். https://bible.com/bible/1899/ezk.20.26.IRVTam -சிலைவணங்கி
அவிசுவாசிகளை காம இச்சைகளுக்கும் பொல்லாத பாவங்களுக்கும் தேவனே
ஒப்புக்கொடுக்கிறார்: ரோமர் 1:24, 26-28 IRVTam [24] இதனால் அவர்கள்
தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை
அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். [26] இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு
ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக
மாற்றினார்கள். [27] அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள்
அடைந்தார்கள். [28] தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க
அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். https://bible.com/bible/1899/rom.1.24-28.IRVTam இப்படி இவரே வழிகெடுத்து வஞ்சகத்தை அனுப்பும் போது எவன்
விசுவாசிப்பான்? *பழைய
ஏற்பாட்டிலோ, மாற்றுமத சிலை
வணங்கிகளை நாடு பிடிப்பதற்காக ஈவிரக்கமின்றி கொன்றுபோடுமாறும் துரத்தி
விடுமாறும் கூறுகிறார் கர்த்தர்: உபாகமம்
20:16-18 IRVTam [16] உன்
தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்
என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17]
அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள்
தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய
உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப்
பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும். https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam இத்தகைய சிலை வணங்கிகளின் இடம் எரிநரகம்
(வெளி 21:8) ஆக பேதுரு
இயேசுவின் வருகை தாமதமாவதை நியாயப்படுத்த கூறும் ஒரு காரணமே இது. ஆனால்
காலம் தாமதிக்க தாமதிக்க அவிசுவாசிகள் அதிகமதிகம் பலுகி பெருகி மேலும் நரகம்
தான் போவார்கள் (அதாவது
கி.பி. 70 இற்கு முன்பே இயேசு வந்திருந்தால், அதன்
பின் வந்தவர்களில் பல நூறு கோடிப்பேர் நரகம் போவார்களா?) என்பதை
கூட அறியாத பாமரனாக பேதுரு எழுதியுள்ளார். (பொய்யை
விசுவாசிக்க வஞ்சகத்தை அனுப்புபவரும் தேவன் தான் என் பவுல் ஐயா எழுதியுள்ளார்.) |
|
இஸ்லாமும் மறுமைக்கு முன்பும் மரணத்திற்கு
முன்பும் திருத்துவதற்கு அவகாசம் கொடுத்து காத்திருக்கிறான் என்பதையும் இறைவனது
கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் மன்னிப்பான் என்றும்
அழைக்கப்படுகிறது. பைபிளிலே கர்த்தர் பழைய ஏற்பாட்டில்
அவிசுவாசிகளை கொன்றொழித்து நரகத்துக்கு அனுப்புவதும் , தான்
கர்த்தர் என் காட்டுவதற்காக மக்களை வழிகெடுத்து தீட்டுப்படுத்துவதும் வஞ்சகத்தை
அனுப்பி பொய்யை விசுவாசிக்க செய்வதாகவும் நல்வழி காட்டுகிறது. பேதுருவோ
சாதாரண பாமரனை போல பேசி தேவன் மக்கள் கெட்டுப் போவதை விரும்பாமல் தாமதிக்கிறார்
என்கிறார். அவர் தாமதிக்க தாமதிக்க புது இனப்பெருக்கம் நடந்து மேலும்
கெட்டுத்தான் போகிறார்கள். |
|
|
|
4.துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும்
பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டு திரும்பி பிழைப்பது
அல்லவோ எனக்கு பிரியம்?
(எசேக்கியேல் 18:23) |
|
-அல்லாஹ்
உங்களுக்கு நேர்வழி காட்டவும் தெளிவுபடுத்தவும் மன்னிக்கவுமே நாடுகிறான் - குர்ஆன் 4:26-27 26.அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத்
தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்தவர்கள் சென்ற (நேரான) வழிகளில்
உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே
விரும்புகிறான். இன்னும் அல்லாஹ்
நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும்
இருக்கின்றான். 27.மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் : 4:26-27) அடியான்
மனந்திரும்பி பாவமன்னிப்புத் தேடி மீளும்போது இறைவன் பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை
கண்டடையும்போது சந்தோசப்படுவதை விட அதிகம் சந்தோசப்படுகிறான் (புகாரி 6308- 6309) -பாவிகள்
திருந்தி மீளும்போது அவர்களின் பாவங்களையும் நன்மைகளாக்குவான் 68.அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப்
பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த
மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். 69.கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவார் 70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 25:68-70) *அத்தோடு
மறுமையில் கைசேதப்படுமுன்னே நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கப்படுகிறது (குர்ஆன் 39:54-59) (மூன்றாம்
குறிப்பிலே முழுமையாக வசனத்தை எழுதியுள்ளேன்) -400 வருடம் பழைய
பகைக்காக எதிரிகளின் குழந்தைகளையும் பெண்களையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்ன
பிரியம் எதுவோ? 1 சாமுவேல் 15:2-3
IRVTam [2] சேனைகளின்
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள்
எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை
மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும்
நீ போய், அமலேக்கைக்
கொன்று, அவனுக்கு
உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று
சொன்னான். https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam அவர்களுக்கு
திருந்த வாய்ப்பளித்தாரா? -திருந்தாதபடி
இருதயத்தை கடினமாக்குபவரே அவர் தான் .-(யோவான் 12:40) -எதிரியின்
குழந்தைகளை கொல்ல வைப்பதற்கு அவர்களின் ராஜாவின் இருதயத்தை கடினமாக்குபவர் உபாகமம் 2:30-35
IRVTam [30] ஆனாலும்
தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில்
இருக்கிறதுபோல, உன்
தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார். [31] அப்பொழுது யெகோவா என்னை
நோக்கி: இதோ, சீகோனையும்
அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல்
அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள்
என்றார். [32] சீகோன்
தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு
வந்தான். [33] அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும்
அவனுடைய மகன்களையும், அனைத்து
மக்களையும் தோற்கடித்து, [34] அக்காலத்தில்
அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும்
மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம். [35] மிருகஜீவன்களையும், நாம் பிடித்த
பட்டணங்களில் கொள்ளையடித்த பொருட்களையும் மாத்திரம் நமக்கென்று
வைத்துக்கொண்டோம். https://bible.com/bible/1899/deu.2.30-35.IRVTam -நரபலி
கொடுக்கவைத்து தீட்டுப்படுத்தியவரும் அவரே- எசேக்கியேல் 20:26 (3ம் குறிப்பில்
வசனத்தை பூரணமாக பதிந்துள்ளேன்) இந்த வெறியில் தன் மகனையே தனக்கு
நரபலியிட்டார் என ரோமர் 8:3 கூறுகிறது. அதாவது
அவரால் இரத்தம் சிந்தாமல் மன்னிக்க முடியாது என்ற திட்டத்தை முன்கூட்டியே
போட்டது தன் மகனை நரபலியிடும் ஆசையில் என்பதையும் இது காட்டுகிறது |
|
இஸ்ரவேல் கார பாவி திருந்த வேண்டும் என
எதிர்பார்க்கும் அதே கர்த்தரே மற்ற இனத்து சிலை வணங்கிகளின் குழந்தைகளையும்
கொன்று போடவும், தன்
இஸ்ரவேல் இனத்தவரையே அவர் தான் கர்த்தர் என் காட்டுவதற்காக தீட்டுப்பட வைத்து
நரபலி கொடுக்க வைத்தவரே என்பதையும் அதே பைபிளே கூறுகிறது. அத்தோடு
தன் மகனை தனக்கே நரபலி இட்டவர் (ரோமர் 8:3) என்கிறது. ஆனால் இஸ்லாமோ நேர்வழியில் பால் அழைத்து
மன்னிக்க இறைவன் விரும்புவதை தெளிவாக்குகிறது |
|
|
|
5.கர்த்தர் வேதத்தை முக்கியப்படுத்தி தன்
கட்டளைகளை எழுதிக் கொடுத்தார் (ஏசாயா 42:21, ஓசியா 8:12) கூறியதாக இது வழிகாட்டுது என்கிறார் |
|
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.(அல்குர்ஆன் : 17:9) இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும்
(கருணை), அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.(அல்குர்ஆன் : 17:82) (அதாவது அக்கிரமக்காரனுக்கு கருணையும் மருந்தும் கூட
நஷ்டத்தையே உண்டாக்கும்) இறைவனுக்கு இணைவைக்காதிருக்கவும் பெற்றோருக்கு
உபகாரம் செய்யவும், வீண்விரயம்
செய்யக்கூடாது என்றும் குழந்தைகளை
வறுமைக்கு பயந்து கொல்லக்கூடாது விபச்சாரத்தை நெருங்கவே கூடாது, இறைவன்
தடுத்த உயிரை கொல்ல கூடாது, அநாதையின்
சொத்துக்களை நியாயமின்றி அனுகக்கூடாது ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும், அளவுநிறுவைகளிலே
சரியாக நடந்துகொள்ள வேண்டும் ,அறிவில்லாத விசயத்தை பின்பற்ற (பேச) கூடாது, பூமியில்
கர்வமாக நடக்க கூடாது (குர்ஆன்
17:23-37) எப்போதும் மனிதர்களுடன் பேசும்போது
நல்லவார்த்தைகளையே பேசவேண்டும் (குர்ஆன் 17:53) இப்படி தேவையான
நல்லுபதேசம் அனைத்தையும் வேதத்தின் மூலம்
இஸ்லாம் வழிகாட்டுகிறது கர்த்தருடைய
வேதம் எப்படி வழிகாட்டுவது? -ஆபாச
பேச்சுகளை கர்த்தர் கூறுவதாக பைபிள் காட்டுகிறது எசேக்கியேல்
தீர்க்கதரிசியின் புத்தகம் 16:25-26 TAERV [25] ஒவ்வொரு
சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய்.
அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது
பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின்
அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். [26] பிறகு நீ
எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு
இருந்தது. எனக்குக்
கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். https://bible.com/bible/3154/ezk.16.25-26.TAERV எசேக்கியேல்
தீர்க்கதரிசியின் புத்தகம் 23:3, 20-21 TAERV [3] அவர்கள்
இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில்
அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர். [20] கழுதைக்
குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற
தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள்
நினைத்துக்கொண்டாள். [21] “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில்
உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள். https://bible.com/bible/3154/ezk.23.3-21.TAERV இவரே இப்படி ஆபாசமாக பேசுவதாக வரும்போது மற்றவர்களிடம் ஒழுக்கமாக
பேசுவதை எதிர்பார்க்க முடியும்? -அவருடைய
வேதத்திலேயே காதலர்கள் தம் காம உணர்வை பரிமாறி காதலியின் முலை தொடை வயிறு
இடுப்பு என்பதையெல்லாம் வர்ணிப்பதுமாக எழுதப்பட்டுள்ளது சாலொமோனின்
உன்னதப்பாட்டு 4:5 TAERV [5] உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும்
வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன. https://bible.com/bible/3154/sng.4.5.TAERV (வாவ்) சாலொமோனின்
உன்னதப்பாட்டு 7:1-3, 7-8 TAERV [1] இளவரசியே!
மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன.
உன் இடுப்பின்
வளைவுகள் ஒரு தொழில்
கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது. [2] உன் தொப்புள் திராட்சைரசம்
நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள்
சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது. [3] உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு
குட்டிகள் போன்றுள்ளன. [7] நீ பனை
மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப்
போன்றுள்ளன. [8] நான்
இம்மரத்தில் ஏற விரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது
உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும், உன்
சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக. https://bible.com/bible/3154/sng.7.1-8.TAERV சாலொமோனின்
உன்னதப்பாட்டு 8:1-2 TAERV [1] நீர்
என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று இருந்தால் நான் உம்மை
வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும். இதனைத்
தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள். [2] நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன். நான் உமக்கு மாதளம்
பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன். கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்
கொடுப்பேன். (இது பச்சை
கள்ளக்காதல் என தெளிவாக புரிகிறது. கணவனாக
இருந்தால் முத்தமிட யாராவது விமர்சிப்பார்களா? https://bible.com/bible/3154/sng.8.1-2.TAERV |
|
கர்த்தர்
வேதத்தை கொடுத்தார் என்பதனால் பைபிள் மனிதனுக்கு நல்வழி காட்டுகிறது
என்பதாகிவிடாது.. விவாதத்தில் எங்கேயும் பைபிள் காட்டும் நல்வழி ஒன்றை கூட
கூறவில்லை . மாறாக
பைபிளிலே கர்த்தர் பேசுவதே ஒருமாதிரியாக காட்டப்படுகிறது . அத்தோடு
ரசாது கலீஃபா குரூப் குர்ஆன் காட்டும் நல்வழிகளை குர்ஆனிலிருந்து வாசித்து
காட்டினர்.. |
|
|
|
6.இயேசு
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாகவும் (மத்தேயு 11:28-29), தன்னை
உலகத்துக்கு ஒளி என்றும் தன்னை பின்பற்றுவோர் ஜீவ ஒளியை
அடைவான் (யோவான் 8:12) என
சொல்வதாக கூறகிறார் |
|
-குர்ஆன் முகம்மது நபியை இறைவனையும் மறுமையையும் ஆதரவு
வைத்து இறைவனை அதிகம் நினைவுகூறுவோருக்கு முன்மாதிரி இருப்பதாக கூறுகிறது (குர்ஆன் 33:21) *பணிவின்
அடையாளமே இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது தான். முன்பின்
பாவங்களை மன்னித்து விட்டேன் (குர்ஆன் 48:2)
என கூறிய பின்பும் நபிகளார் தினமும் எழுபது முறைக்கு மேல் பாவமன்னிப்பு
தேடுவார்கள் (புகாரி 6307), இரவில் தன்
கால்கள் வீங்கும் அளவுக்கு இறைவனை நின்று வணங்குவார்கள் (புகாரி 4837). இதுபோன்று முழு
வாழ்விலுமே பிரார்த்தனைகளோடும் பாவமன்னிப்பு கேட்பதோடும் நபிகளார் இருந்தார்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுக்கும்போது கூட பெண்களின்
கைகளை தொடமாட்டார்கள் . வாய்மூலமே
எடுப்பார்கள் (புகாரி 7214) -தன்னை காலம்
முழுதும் தொந்தரவு செய்துகொண்டிருந்த வஞ்சகனை கூட
இறைவன் மன்னிக்க வேண்டும் என விரும்பி பாவமன்னிப்பு கேட்டார்கள் (புகாரி 1366) யுத்தத்தில் கூட சிறுவர்கள் பெண்கள் (புகாரி 3014,3015), போர் செய்யாத
கூலியாட்கள் (அபூதாவூத் 2669) போன்றோரை கொல்லக்கூடாது என தடுத்தார்கள்
. ஆனால் கர்த்தரோ பழைய பகைக்காக குழந்தைகளை பெண்களை ஈவிரக்கமின்றி
கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி மூலம் ஏவினார்-1 சாமுவேல் 15:2-3 *இஸ்லாமிய அரசின்
கீழிருக்கும் முஸ்லிமல்லாத
பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின்
வாடையை கூட நுகரமாட்டான் (புகாரி 3166), அத்தகையோரின் உரிமைகளை பறித்து சுமக்க முடியாதவற்றை
சுமத்தினால் மறுமையில் நானே அவர்களுக்காக வாதிப்பேன் (அபூதாவூத் 3052) என நபிகளார் எச்சரித்தார். அத்தோடு மரணத்தருவாயில் உள்ளவர்களிடமும் போய் மார்க்கத்தை
ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார் (புகாரி 5657, 1360) காரணம்
அவர்கள் மறுமையில் ஈடேற்றம் பெறவேண்டும் என ஆசையே. *கஷ்டப்படுவோரின்
சுமைகளை சுமந்துகொள்பவராக இருந்தார் (புகாரி 3) இதுபோன்று
சகலத்திலும் நபிகளார் ஆன்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உலகியல்
ரீதியாகவும் முன்மாதிரியாக இருந்தார். அதனால் குர்ஆன்
அவரையும் ஒளி என்கிறது (குர்ஆன் 33:46) -இயேசு தன்னை
ஏற்றுக்கொள்ளாத மக்கள் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது என்ற கொடூர
அன்புள்ளவராகவே பைபிள்
சொல்கிறது: மாற்கு 4:11-12 IRVTam [11] அதற்கு
அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு
அருளப்பட்டது; வெளியே
இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12] “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள்
கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும்
உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச்
சொல்லப்படுகிறது” என்றார். https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam இயேசு எந்த விதத்தில் முன்மாதிரியாக
இருந்தார்? *தன்னிடம் பாவம்
இல்லை என்றார். முடிந்தால் ஒரு
பாவத்தையாவது காட்டுங்கள் என்றார்- யோவான் 8:46. அதே இயேசு
பரிசேயனை குறித்து இப்படி சொல்கிறார்: லூக்கா 18:11-14
IRVTam [11] பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள்
ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு
நன்றி செலுத்துகிறேன். [12] வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என்
சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே
ஜெபம்பண்ணினான். [13] வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும்
வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே!
பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். [14] அவனல்ல, இவனே
நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். https://bible.com/bible/1899/luk.18.11-14.IRVTam அவன் தன்னை தாழ்த்தவில்லை என்பதால் அவன்
நீதிமானாக்கப்படவில்லை என்கிறார். இதே வேலையை தானே தன்னிடம் பாவமில்லை இயேசு
சொல்வதிலும் உள்ளது *இயேசு
பெண்களால் தொடப்பட்டு தலைமுகளால் தடவப்பட்டு வாயினால் பாதங்களிலே
முத்தமிடப்பட்டார்- லூக்கா 7:38 இதிலே என்ன
முன்மாதிரி உள்ளது? மதபோதகர் மற்ற
பெண்களை ஆசீர்வதிக்கிறேன் மன்னிக்கிறேன் என கூறி தொட அனுமதிப்பதில்லையே *கடவுள் மனிதனாக
வந்து வாழ்ந்தால், அவருக்கு
இச்சையோ பாவ எண்ணமோ இருக்காது. அப்படிப்பட்ட
குறை இல்லாதவர் பாவ இச்சையுள்ள மனிதர்களுக்கு என்ன முன்மாதிரியை காட்டுவார்? இருவரது
தராதரம் வேறுபட்டிருக்கிறது.!! அப்படி முன்மாதிரியாக வாழ வந்து பெண்களை
முத்தமிட அனுமதிப்பது எப்படி சரியாகும்? இதை தானே தற்போது போதகர்கள் அடித்துவிட்டு formal kiss, casual
kiss என
கதை விடுகிறார்கள் |
|
இயேசு மனிதனாக இருந்தார் என்பதிலே
மனிதர்களுக்கு முன்மாதிரி எடுக்க முடியாது. காரணம் 1.அவர் தன் போதனைப் படியே தன்னை
தாழ்த்தவில்லை. மாறாக பாவமில்லை என்று உயர்த்துகிறார். 2.கடவுள்
மனிதனாகி வந்து மற்ற பெண்களை தன்னை தொட அனுமதிப்பதும் அவர் தொடுவதும் அவரை போல
மற்றவர்கள் தொடுவதற்கு முன்மாதிரியாக உள்ளது. (இதனால்
கள்ள உறவுகள் அநேகம் பிடிபட்டது என்பதையும் அறிந்திருக்கிறோம்) 3.கடவுள்
மனிதனாக வந்தார் என்றாலே அவரிடம் எந்த முன்மாதிரியையும் எடுக்க முடியாது. காரணம்
அவருக்கு இச்சைகள் இருக்காது. இச்சையில்லாதவர் எப்படி இச்சையுள்ளவனுக்கு
வழிகாட்டுவார்? (குருடர்
பார்வையுள்ளவனுக்கு எப்படி பார்க்க சொல்லிக் கொடுப்பார்?) ஆனால் நபிகளாரோ, முன்பின்
பாவம் மன்னிக்கப்பட்டும் மிகவும் தன்னை
இறைவனிடம் தாழ்த்தி, மார்க்க ஒப்பந்தம் எடுக்கும்போது கூட
பெண்களை தொடாமல் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக
இருந்தார்கள். |
|
|
|
7.மனிதனுடைய
இருதயத்திலிருந்து பொல்லாத இச்சைகளும் பாவங்களும் புறப்படுவதாக இயேசு சொன்னார் (மாற்கு 7:22-23) இதனால்
பைபிள் வழிகாட்டுதாம் |
|
-இஸ்லாம் மனதை
சுத்தமாக வைக்க வழிகாட்டுவது போன்றே உடலியல் சுத்தத்தையும் வழிகாட்டுகிறது (குர்ஆன் 74:1-5) *சுத்தம் இறை
நம்பிக்கையின் பாதி (முஸ்லிம் 381 (ஆங்கில 223)) 7.ஆத்மாவின்
மீதும், அதை
ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- 8.அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். 9.அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். 10.ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். (அல்குர்ஆன் : 91:7-10) *மற்றவர்களை
குறித்து தப்பெண்ணம் வைப்பதை இஸ்லாம் தடுக்கிறது . அதை பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானது என்றும் மற்றவர்களை
துருவி துருவி ஆராயாதீர்கள் என்றும் ஒட்டுக் கேட்காதீர்கள், ஒருவரோடொருவர்
பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாக ஆகிவிடுங்கள் (புகாரி 5143&5144) என வழிகாட்டுகிறது. *பாவம் செய்யும்
எண்ணம் ஏற்பட்டு அந்த பாவத்தை செய்யாவிட்டால் அதற்காகவும் நற்கூலி உண்டு
என்கிறது இஸ்லாம் (புகாரி 6491). இவ்வாறு
உள்ளத்திலேற்படும் அசுத்தத்தை நிறைவேற்றாமல் இருக்க வழிகாட்டுகிறது சிறுநீர் , மலம் கழித்தால்
கூட சுத்தம் செய்வதை கட்டளையிடுகிறது இஸ்லாம்தான் . -கைகழுவாமல் சாப்பிடுவதாக குற்றஞ்சாட்டப்படும்போது அதை ஏற்றுக் கொள்வதை
விட்டுவிட்டு , இருதயம் சரியாக இருந்தால் போதும் என கூறினால் சரி வருமா? மாற்கு 7:5, 14-15 IRVTam [5] அப்பொழுது, அந்தப்
பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன்
கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். [14] பின்பு
அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான்
சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். [15] மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத்
தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத்
தீட்டுப்படுத்தும். https://bible.com/bible/1899/mrk.7.5-15.IRVTam இயேசுவும் கைகழுவாமலே சாப்பிடுவார் (லூக்கா 11:38) *சிலைவணங்கிகளை
இத்தகைய அசுத்தத்திற்கு தள்ளுவதே தேவன் தான் என்கிறார் பவுல்: ரோமர் 1:24, 26-28 IRVTam [24] இதனால்
அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை
அவமானப்படுத்துவதற்காக தேவன்
அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். [26] இதனால் தேவன்
அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே
அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.
[27] அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல்
ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய
தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். [28] தேவனைத்
தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல்
இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். https://bible.com/bible/1899/rom.1.24-28.IRVTam *பைபிளின் புனிதர்களுக்கு ஆவியானவர் ஏவத்தொடங்கிய பின்பே
காமகளியாட்டங்களில் மற்றவன் மனைவியை அபகரிப்பது, வேசிகளோடு உறவை பேணுவது போன்றவை ஏற்பட்டுள்ளது உதாரணமாக தாவீதின் மீது ஆவியானவர் அன்றுமுதல்
வந்து இறங்கியிருந்தார் (1 சாமுவேல் 16:13 சங்கீதம் 51:11). இதனை தொடர்ந்து நூறு
பேரின் ஆணுறுப்பு நுனித்தோல் கேட்டபோது இருநூறு ஆணுறுப்பு நுனித்தோலை எண்ணி
செலுத்தினான்.இதனால் கர்த்தரே
தாவீதோடு இருக்கிறார் என சவுல் உணர்ந்தானாம் (1 சாமுவேல் 18:25-28). இதன்பின்
குளிக்க சென்ற பெண்ணை கள்ளத்தனமாக உறவு கொண்டார் (2 சாமுவேல் 11:2-4). இதேபோன்று சிம்சோன் என்பவர் மீது கர்த்தரின் ஆவியானவர் இறங்கினார்
(நியாயாதிபதிகள் 13:25) இதன்பின் கர்த்தரின் ஸ்கெட்ஷ் படியே பிலிஸ்திய பெண்ணின்
மீது காதலில் விழுகிறான். இது கர்த்தருடைய ஸ்கெட்ச் என அவனது பெற்றோர்
உணரவில்லையாம் (நியா 14:1-4 குறிப்பாக 4வது வசனம்). இதன்படி ஆவி இறங்கினால்
காதலும் வருமா? கர்த்தருடைய ஆவி
இறங்கியதால் சும்மா இருந்த பிலிஸ்தியரில் முப்பது பேரை கொலைசெய்து அவர்களின்
சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் (நியா 14:19)
- இதிலிருந்தே
தெரிய வேண்டாமா ஆவியின் இலட்சனத்தை? பிறகு வேசியை
கண்டு அவளிடம் இரவில் சென்றார் (நியா 16:1) பிறகு வேறொரு
பெண்ணுடன் affair இல் இருந்தார்.
அவள் இவருடைய முடியை வெட்டிய பின்பே கர்த்தர் (ஆவியானவர்) அவரைவிட்டு விலகினார்
(நியா 16:15,19,20 குறிப்பாக
20வது வசனம்) பிறகு கோவிலில்
தேவனிடம் ஜெபம் செய்து தற்கொலை தாக்குதல் நடத்த உதவுமாறு வேண்டி பிறகு தற்கொலை
தாக்குதல் செய்து 3000 ஆண்பெண்களை கொன்றார் (நியா 16:28-30) |
|
பாவங்கள் உள்ளத்திலிருந்து வரும் என்பதால்
பைபிள் வழிகாட்டுகிறது என்றாகிவிடாது. உடலியல் சுத்தத்தை இங்கே வழிகாட்டுவதை
தவிர்க்கிறார். அத்தோடு
கேடான சிந்தனைகளுக்கு ஒப்புக்கொடுத்ததே தேவன் தான் என்கிறது பைபிள். ஆவியை
அனுப்பி காதலில் விழ வைத்ததே தேவன் தான் என்பதையும் ஆவி வந்த பின்பே கள்ள உறவில்
தாவீது ஈடுபட்டார் என்பதையும் பைபிள் சொல்கிறது. இந்த ஆவியால் ஏவப்பட்ட பைபிள் வழிகாட்டுமா? சிந்திக்க
வேண்டும்!! |
|
|
|
8.பவுல்
தனக்கு லாபமாக இருப்பவற்றை இயேசுவுக்காக நஷ்டமென்று எண்ணினார் பிலி 3:7, இயேசு
பாவிகளை ரட்சிக்க வந்தார் என பவுல் சொல்கிறார் (1 தீமோத்தேயு 1:15) |
|
இஸ்லாம் இறைவன்
மனந்திருந்துமாறும் மன்னிப்பதற்கும்
அழைக்கிறான் (குர்ஆன் 4:26-27, 39:53) அடியான்
மனந்திரும்பி பாவமன்னிப்புத் தேடி மீளும்போது இறைவன் பாலைவனத்தில் தன் வாகனத்தை
தொலைத்தவன் அதை கண்டடையும்போது சந்தோசப்படுவதை விட அதிகம் சந்தோசப்படுகிறான்
(புகாரி 6308- 6309) எல்லா
மதத்துக்காரரும் தன் மதத்திற்காக தியாகம் செய்வர். இதற்காக அம்மதம்
சரி என்றாகிவிடாது. யூதர்களை
கிறிஸ்தவத்திற்கு மதமாற்றுவதற்காக கொன்ற போது அவர்களும் தம் மதத்தில் உறுதியாக
தானே இருந்தனர். -கடவுள் பாவத்தை
மன்னிப்பதற்காக இரத்தத்தை சிந்தி நரபலி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால்
அவர் எத்தகைய வழிகாட்டியாக இருப்பார்? கடவுள் தன் மகனை
தனக்கே நரபலி கொடுக்கிறார் என்றால் (ரோமர் 8:3) எவ்வளவு கொடூரம்? |
|
கடவுள்
தன் மகனை தனக்கே நரபலி கொடுக்கும் கொடூரத்தை அன்பு என பேசுவது சரியான வழியா? யாரையும்
பலி கேட்காமல் மனந்திருந்துவதையே மன்னிப்புக்கு அடிப்படையாக கேட்பது சரியான
வழியா? தன்
மகனை தனக்கு நரபலி இடுவதென்பதே கடவுளை பைத்தியமாக (1 கொரிந்தியர் 1:25) சித்தரிக்கிறது. |
|
|
|
9.குர்ஆன்
கெட்டவர்களை வழிநடத்துவதில்லை (குர்ஆன் 9:24,5:108,) என்கிறது, பைபிளோ
துன்மார்க்கன் கர்த்தரிடம் திரும்ப வேண்டும் என்றும் அப்போது அவர் மனதுருகுவார் (ஏசாயா 55:7) என்கிறது |
|
தீயவர்களை இறைவன் வழிநடத்துவதில்லை என்றால்
தீயவனாக இருக்க கூடாது என எச்சரிப்பதே அது. ஏனெனில் இறைவன்
மனிதனுக்கு நலவு எது தீமை எது என அறிவித்துக்கொடுத்தே உள்ளான் (குர்ஆன்
91:7-10). அத்தோடு
அவனுக்கு வழியையும் காட்டியுள்ளார் (குர்ஆன் 76:3) தமக்கு தாமே அநீதியிழைத்துக்கொண்ட அடியார்களை தன்
கருணையின் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் சகல பாவங்களையும்
மன்னிப்பான் என்றும்
(குர்ஆன் 39:53), மனந்திருந்தி
விசுவாசித்து நற்செயல் செய்தால் முந்திய பாவங்களை நன்மைகளாக ஆக்கி விடுவதாகவும்
வாக்களிக்கிறான் (குர்ஆன் 25:68-70). ஆகவே
கெட்டவன் தன்னை திருத்திக் கொண்டால் இறைவன் மன்னிப்பான். மனந்திருந்துவதை குறித்து மிகவும் மகிழ்ச்சியும் அடைபவனே
இறைவன் (புகாரி
6308-6309) ஆகவே கெட்டவனாக
வாழாமல் திருத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான் (குர்ஆன் 3:89,4:16&146, 5:39, 6:54, 16:119) இவன் தீமையை கைவிடாமல் மறுத்துக்கொண்டே
இருந்தால், இறைவன்
அவனை நிர்ப்பந்தித்து மாற்றுவதில்லை.. அவன் தான் தன் குற்றங்களை சீர்செய்து
இறைவனிடம் மீள வேண்டும். கர்த்தர் கெட்டவர்களை வழிநடத்துவாரா? -பொய்யை
விசுவாசிக்கும்படி மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார்- 2
தெசலோனிககேயர் 2:11-12 -ஆகாபை வஞ்சித்து
கொல்வதற்காக பொய் சொல்லும் ஆவியை தீர்க்கதரிசிகளின் வாய்களிலே கட்டளையிட்டார் (1 இராஜாக்கள்
22:19-23) -இஸ்ரவேலரை நரபலி
கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தியதும் அவரே (எசேக்கியேல் 20:26) மக்களின் இருதயங்களை தனக்கு பயப்படாத படி கடினப்படுத்தி
வழி தப்பி போகப் பண்ணினார் (ஏசாயா 63:17, யோவான் 12:40) துன்மார்க்கன்
அவனாகவே திருந்தினால் தான் கர்த்தர் மனதுருகுவார். ஆனால்
திருந்தாவிட்டால் இவராக நிர்ப்பந்தித்து திருத்துவதில்லை. சிலபோது அவன் திருந்தவே கூடாது மன்னிக்கப்படவே கூடாது
எனும் கடும் அன்பாளராக இயேசு உள்ளார்- மாற்கு 4:11-12 அத்தோடு பார்வோன் ராஜா
திருத்த கூடாது என்பதற்காக அவனது இருதயத்தை கடினமாக்கினார்- யாத்திராகமம் 4:21,10:1, 11:10,14:4&17 இதை
வைத்துக்கொண்டு குற்றப்படுத்தலாமா? இது
போன்றவற்றில் தனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23 IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக
இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ
அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு
எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப்
பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன்
ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல்
அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது
கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத்
தெரிவிக்கவும், [23] தாம்
மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின்
செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு
ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய
சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam |
|
இறைவன்
கொடுமைக்காரர்களை வழிகாட்டுதலில்லை. அவர்கள் தம்மை தாமே சீர்படுத்தி திருத்திக்
கொண்டால் இறைவன் மன்னிப்பான். இது தீயவனாக இருக்க கூடாது என்பதை கண்டிக்கும்
வசனமேயன்றி அவன் திருந்தவே கூடாது என்பதல்ல. சரி
இதனால் பைபிள் மனிதர்களுக்கு எந்த வழியை காட்டியது? |
|
|
|
10.திருடுகிறவன் இனி திருடாமல்
குறைச்சலுள்ளவனுக்கு கொடுக்கும்படி உழைக்க வேண்டும் என பவுல் (எபேசியர் 4:28) கூறுகிறார் |
|
இஸ்லாம் திருடன்
திருடியின் கைகளை வெட்டுமாறு கூறுகிறது (குர்ஆன் 5:38) மற்ற
திருடர்களுக்கு முன்மாதிரியாக இல்லாதபடிக்கு தண்டனை வழங்கப்படும்போது அதை
செய்யும் அளவு சடுதியாக குறையும். (பசிக்காக உணவை
திருடியதற்கு இப்படி தண்டனை இல்லை. காரணம்
மற்றவர்கள் தாம் அவனுக்கு உதவ வேண்டும்) எகிப்தியரின்
சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு தேவன் வழிகாட்டினார் (யாத்திராகமம் 3:22) பவுல் இங்கே
கூறிய விடயம் அக்காலத்திற்கு நல்லதே. |
|
இரு
மதங்களும் திருடுவதை தடுக்கிறது.. |
|
|
|
11.குர்ஆன் 3:7 இலே எல்லோராலும் புரிய இயலாத வசனங்கள் உள்ளதாக
கூறவதால் அது வழிகாட்டாது என்கிறார் |
|
குர்ஆனுடைய
அடிப்படையான வசனங்கள் சட்டங்கள் நேர்வழிகாட்டல்கள் எச்சரிப்புகள்
புரிதலுள்ளோரால் தெளிவாக புரிக்கூடியவையே. (குர்ஆன் 3:7) இரண்டாம் வகை வசனங்கள் வெறுமனே இறைவன் கூறியபடி
நம்புவதற்கானது. நம் புரிதல்
சக்திக்கு அப்பாற்பட்டது. இத்தகைய வசனங்களை கோணலுள்ளவர்கள் தம் விளக்கத்தை
திரித்து பின்பற்றுவர் (உதாரணமாக
அல்லாஹ் ஒருவனே மெய்யான கடவுள் என்றும் தொழவேண்டும் நன்மை செய்ய வேண்டும் நல்லதை
ஏவி தீயதை தடுக்கவேண்டும் போன்றவை எல்லேருக்கும் புரியும் வசனம். ஆனால் ஈஸா
அல்லாஹ்வின் வார்த்தை அல்லாஹ்வின் உயிர் என கூறும்போது வழிகேட்டிலே உள்ளவர்கள்
அதை தம் கெட்ட விளக்கத்திற்கேற்ப பின்பற்றுவர். இவை போன்றதே
முதசாபிஹாத் வசனங்கள்) இவற்றை உள்ளதை உள்ளபடி நம்பினாலே நேர்வழி தான். இப்படி
முன்கூட்டியே வழிகாட்டுவதே குர்ஆன் இதென்ன பிரமாதம், பவுலுடைய வார்த்தைகளே சரியாக புரிந்துகொள்ள
சிரமம் என்கிறது பேதுரு 2 பேதுரு 3:15-16 IRVTam [15] மேலும் நம்முடைய
கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட
ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; [16] எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப்
பேசியிருக்கிறான்; அவன்
சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற
வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும்
புரட்டுகிறார்கள். https://bible.com/bible/1899/2pe.3.15-16.IRVTam |
|
குர்ஆன்
அதிலுள்ள வசனங்களை எத்தகையது என்பதையும் தெளிவாக கூறி எத்தகைய வசனங்களை பின்பற்ற
வேண்டும் எத்தகையதை இருப்பதை உள்ளபடி நம்ப வேண்டும் என வழிகாட்டியுள்ளது. ஆனால்
பவுல் எழுதிய கடிதங்களே புரிவதற்கு கடினம் என பேதுரு சொல்லி இவர்களை ஆஃப்
செய்துள்ளார். |
|
|
|
12.கர்த்தர் உத்தமரும் நல்லவருமாக இருக்கிறார். ஆகையால்
பாவிகளுக்கு நல்வழிகளை அறிவிக்கிறார் (சங்கீதம் 25:8) |
|
குர்ஆனும் இறைவன் நல்லது எது தீயது எது மனிதனுக்கு
அறிவித்து கொடுத்திருப்பதாகவும், நன்றி
செலுத்தவும் மறுக்கவும் என இரு வழிகளையும் காட்டி தேர்ந்தெடுக்கும் உரிமையை
வழங்கியிருப்பதாகவும் கூறுகிறது (குர்ஆன் 91:7-10, 76:3) முதல் மனிதர் பாவம் செய்தபோது , அவருக்கு மன்னிப்புக் கேட்கும் வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, மன்னித்தான் என்றும் அவரை தேர்ந்தெடுத்து நல்வழி காட்டினான் (குர்ஆன்
20:121-122 & 2:37) அதன் பின்பும் மரணம் வரை
பாவமன்னிப்புக்கு அவகாசம் கொடுத்து (குர்ஆன் 4:17-18), தன் கருணையில்
நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் சகல பாவங்களையும் மன்னிப்பான் என்றும்
(குர்ஆன் 39:53), மறுமையில்
கைசேதப்படாதபடிக்கு விசுவாசித்து இறைவனுக்கு கட்டுப்படுமாறும் (குர்ஆன்
39:54-59) அழைக்கிறது. இங்கே கூறப்பட்ட பாவி தாவீது ஆவார். தன்னை
தான் பாவி என்று கூறி தனக்கு தேவன் வழிகாட்டுவதை துதித்து பாடுகிறார். ஆனால் தன்னை
விசுவாசிக்காத பாவிகளை குறித்தோ, அவர்களின் இருதயங்களை கடினப்படுத்தி கண்களை
குருடாக்குபவர் (யோவான் 12:40), பொய்யை
விசுவாசிக்க வைப்பதற்காக மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார்- (2
தெசலோனிக்கேயர் 2:11-12) இச்சைக்கு
ஒப்புக்கொடுப்பார் (ரோமர் 1:24-28) அத்தோடு இஸ்ரவேலரை
கெடுத்துப்போட்டு குழந்தைகளை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தியதும் அவரே எசேக்கியேல் 20:26 *தன்னை
வணங்காத மாற்றுமத புறஜாதிகளுக்கு வழிகாட்டாமல் கொன்று போடும் படியே
ஈவிரக்கமின்றி குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரையும் கொல்லுமாறு கூறினார் (1 சாமுவேல் 15:2-3
& உபாகமம் 20:16-18) |
|
கடவுள் திருந்த நினைக்கும் பாவிகளை
மன்னித்து வழிகாட்டுவார். அதற்காக பைபிள் நல்வழி காட்டுகிறது என்றாகுமா? அதே கடவுள் வழிகெடுத்து பொய்யை விசுவாசிக்க
வஞ்சகத்தை அனுப்புவதாகவும் நாசமாக்குவதாகவும் பைபிள் தான் கூறுகிறது |
|
|
|
13.குர்ஆன் 4:11-12 இலே
கூறப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு பெண்பிள்ளைகள் (⅔ பங்கு), கணவன் (¼ பங்கு) தாய் (⅙ பங்கு), தந்தை (⅙ பங்கு) போன்றோருக்கு 12 ரூபாயை
எப்படி பிரிப்பது என கேட்டனர் |
|
இறைவன் சட்டத்தை அனைத்திற்கும் பொதுவாக வழங்கியுள்ளான்.
மேலதிகமாக எஞ்சுவது எப்படி நெருங்கிய ஆண் உறவினருக்கு கொடுக்கப்பட வேண்டும் என நபிகளார்
சொன்னார்களோ, அதுபோன்று
குறைவாக வரும்போது மற்றவர் பாதிக்கப்படாதவாறு பங்கிடப்பட வேண்டும் . ஏனெனில் பாதிக்கப்படாத விதத்திலேயே நடக்க வேண்டும் என்று
அதே 4:12 கூறுகிறது. அதற்கேற்ப, இரு மகள்கள் ⅔= (8/12) கணவன் ¼=
(3/12) தாய் ⅙= (2/12) தந்தை ⅙=(2/12) மொத்தம் 15/12 அனைவரும் பாதிக்கப்படாதிருக்க ஒவ்வொரு
பங்கையும் இந்த 15/12 ஆல் வகுக்க வேண்டும் அதன்படி இரு மகள்கள் (8/12) ÷ (15/12)= (8/15) கணவன் (3/12)÷ (15/12) = (3/15) தாய் (2/12)÷(15/12)=
(2/15) தந்தை (2/12)÷(15/12)=
(2/15) இப்படி செய்தால் 12 ரூபாயில் இரு
மகள்களுக்கும் 6.40 ரூபாயும், கணவனுக்கு
2.40
ரூபாயும் தாய்க்கு 1.60 ரூபாயும் தந்தைக்கு 1.60 ரூபாயும் வரும் . மொத்தம் 12
ரூபாய். சட்டத்தை குழந்தைகளிடம் வழங்கினால் பிரச்சினை என்று
சொல்லலாம். புத்தியுள்ளவர்களுக்கு சட்டத்தை வழங்கும்போது அவன் ஆராய்ந்து மற்றவர்
பாதிக்கப்படாதவாறு பங்கிட வேண்டும் . ஒவ்வொருவருக்குமே தனித்தனியாக எப்படி பங்கிட வேண்டும் என
சொல்வதற்கு 2 வசனங்கள் போதாது. நூறு வசனங்களாவது தேவைப்படும். ஆனால் இறைவன்
அனைத்திற்கும் பொருந்தும் விதமாக இரண்டு வசனங்களிலே கூறி முடித்தார். அதை
அடிப்படையாக வைத்து நமக்கு வழங்கிய மூளையை பாவிக்க வழிகாட்டியுள்ளது இஸ்லாம். பைபிளிலே பழைய
ஏற்பாட்டில் ஆண்பிள்ளைகளிடம் மட்டுமே சொத்து பங்கிடப்படும். ஆண்பிள்ளை
இல்லாதபோது பெண்பிள்ளைகளுக்கு சொத்து போகும். அவர்களும்
இல்லாதபோது சகோதரனுக்கும் அவனும் இல்லாதபோது தந்தையின் சகோதரனுக்கும் அப்படியும்
இல்லாதபோது நெருங்கிய கோத்திர உறவினருக்கு செல்லும் எண்ணாகமம்
27:4-11 IRVTam [4] எங்களுடைய
தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல்
அற்றுப்போகலாமா? எங்கள்
தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்”
என்றார்கள். [5] மோசே அவர்களுடைய
நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான். [6] அப்பொழுது யெகோவா மோசேயை
நோக்கி: [7]
“செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே
சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன்
பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய். [8] மேலும் நீ இஸ்ரவேல்
மக்களை நோக்கி: ஒருவன்
மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய
சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும். [9] அவனுக்குக்
மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய
சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். [10] அவனுக்குச்
சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை
அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். [11] அவன்
தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய
சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச்
சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல்
மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார். https://bible.com/bible/1899/num.27.4-11.IRVTam புதிய
ஏற்பாட்டிலோ எதுவுமே கூறப்படவில்லை. மாறாக இருப்பதை விற்று தரித்திரனுக்கு
கொடுத்து தரித்திரனாக தான் வழிகாட்டுகிறது |
|
இஸ்லாம் பெண்களுக்கும் சொத்துரிமை
வழங்குவதால் அதற்கேற்றபடி சட்டம் வழங்கும்போது விரிவாக கூறினால் பல
பக்கங்களுக்கு வசனம் இறக்க வேண்டிவரும். அதை மிகவும் சுருக்கமாகவும்
பொருத்தமாகவும் இறைவன் வழங்கியுள்ளான். அதிலே சக உறவினர் பாதிக்கப்படாத படிக்கு
பங்கு வைக்க சற்று மூளை இருந்தாலே போதுமானது. ஆனால் பைபிளிலோ ஆண்பிள்ளை இருக்கும்போது
பெண்ணுக்கு சொத்துரிமை இல்லை என்பதாலும் வெறும் பிள்ளைகளுக்கு மட்டுமே சொத்து
என்பதாலும் அதை இதனுடன் ஒப்பிட முடியாது |
|
|
|
14.குர்ஆன் 2:30 பூமியில் பிரதிநிதியை ஆக்கப்போவதாக உள்ளது
ரசாது கலீஃபா குரூப் இதை தற்காலிக கடவுளை ஆக்கப்போவதாக மொழிபெயர்த்திருப்பதை
காட்டி இங்கே ஏகத்துவம் இல்லை என்றும் ஆதமுக்கு சிரம்பணிய சொன்னதால் (2:34,18:50) சொன்னதாலும்
இங்கே ஏகத்துவம் இல்லை என்றனர். |
|
இறைவனுக்கு
யாரும் பிரதிநிதி கிடையாது. இங்கே கலீஃபா
என்பது சந்ததியாக செல்லும் தலைமுறையை குறிக்கும். (ரசாத்
கலீஃபா என்கிற பொய்யர் தற்காலிக கடவுள் என மொழிபெயர்த்திருப்பது பைபிள்
மொழிரீதியானது ஆகும். அங்கே மோசேயை பிர்அவ்னுக்கு தெய்வமாக ஆக்கியதாகவும்
ஹாரூனுக்கும் தெய்வம் என்றும் கர்த்தரே சொன்னதாக உள்ளது (யாத்திராகமம் 7:1, 4:16) இதன்படி
மோசேயும் கடவுள் லிஸ்டில் சேர்த்து நான்கு கடவுள் என்றாகிவிடும் என எடுக்கலாமா?)) -இங்கே ஆதமுக்கு
சிரம்பணியச்சொன்னது ஆதமை கண்ணியம் படுத்துவதற்காக ஆகும். அதனால் தான் சைத்தான்
சிரம்பணியாததற்கு காரணம் அவர் மண்ணால் படைக்கப்பட்டவர் நானோ நெருப்பால்
படைக்கப்பட்டவன் ஆகவே நானே சிறந்தவன் என கருதியதாலும் தான் (குர்ஆன்
38:75-76& 7:12). அத்தோடு
தன்னைவிட இவர் கண்ணியப்படுத்தப்பட்டார் என்றே அவன் இறைவனிடம் கூறினான் (குர்ஆன் 17:62) ஆக இறைவன் சொல்லும்படி செய்வதே இறைவனை வணங்குவதாகும். இஸ்லாத்தில் நபிகளார் மனிதர்களுக்கு சிரம்பணிவதை தடை
செய்துவிட்டார்கள். அதற்கு முந்தைய காலத்தில் யூசுஃப் நபியிற்கு அவரது
பெற்றோரும் சகோதரர்களும் சிரம் பணிந்தனர் (குர்ஆன் 12:100) பைபிளிலேயே யாக்கோபு ஏசாவை வணங்கினான் (ஆதியாகமம் 33:3) சாலமோன் ராஜாவையும் கடவுளையும் மக்கள் தொழுது கொண்டனர் (1
நாளாகமம் 29:20) ஆனால் இறைவனுக்கு செய்ய வேண்டிய சிரவணக்கம்
கடவுள் என்பதால் செய்யப்படுவதும் மற்றவர்களுக்கு மரியாதைக்காக
செய்யப்படுவதுமாகும் |
|
இதனால் குர்ஆன் நல்வழி காட்டவில்லை
என்றாகிவிட்டதா? அல்லது
பைபிள் வழிகாட்டிவிட்டது என்றாகிவிட்டதா? |
|
|
|
15.இறைவனை நம்பிக்கைகொள்ளாதோருடன் ஜிஸ்யா
கொடுக்கும்வரை போரிட வேண்டும் 9:29 குறித்து |
|
இஸ்லாம் ஆன்மீகமும் நீதித்துறையும்
ஆட்சியதிகாரமுடைய மார்க்கமாகும். எந்த ஆட்சியும் குடிமக்களிடம் வரி
வாங்குவர் *குர்ஆன்
9:29ஐ நபிகளார் நடைமுறைப்படுத்திய விதமானது, யுத்தத்திற்கு
சென்றால் முதலில் இஸ்லாத்தை நோக்கி அழைப்பார்கள். அதை அவர்கள் மறுத்தால், அவர்களிடம்
வரி செலுத்துமாறு கோருவார். அதையும் மறுத்தாலே யுத்தம் நிகழும் (முஸ்லிம் 3566
(1731a,b) , அபூதாவூத் 2612,புகாரி 3159) இதன் நோக்கம், இஸ்லாத்தை
திணிப்பது அல்ல.. காஃபிர்களான எதிரித்தலைமைகள் தமக்கு சக்தியிருந்தால்
முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள் (குர்ஆன்
2:217, 60:2). ஏற்கனவே
செய்து கொண்டும் இருந்தார்கள். அந்நிலைமை
ஏற்படாதிருக்க, ஆட்சியும்
ஆன்மீகமும் உடைய இஸ்லாமிய அரசு இவ்வாறே செய்ய வேண்டியதாக இருந்தது -இத்தகையோரை அடிமைகளாக நடத்த கூடாது என்பதையே இமாம் புகாரி
3052வது ஹதீஸுக்கு தலைப்பாக போடுகிறார். (ஆனால் பைபிளோ
அடிமைகளாக வேலைக்காரராக ஆக்கிக்கொள்ளுமாறே கூறுகிறது. இரண்டும் நேரெதிரான து) -இத்தகைய மக்களுக்காக இஸ்லாமிய அரசு இம்மக்களின்
எதிரிகளுக்கு எதிராகவும் போரிடுவதோடு, அம்மக்களின்
மீது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது என்கிறது (புகாரி 3052,3700) -இத்தகையோரின் உரிமைகளில் குறைவைத்தாலோ
அவர்களது சக்திக்கு மீறி எதையாவது சுமத்தினாலோ, அம்மக்களுக்காக
அத்தகையவனுக்கு எதிராக நானே இறைவனிடம் வாதிடுவேன் என நபிகளார்
எச்சரித்துள்ளார்கள்- (அபூதாவூத் 3052) -வரி செலுத்தாததற்காக அவர்களை நியாயமின்றி வேதனை
செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-முஸ்லிம் 5096-5097 -இத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட
நுகரமாட்டான் -புகாரி 3166 எந்தளவுக்கென்றால் யூதரிடம் தன் கவசத்தை அடைமானம் வைத்து கடன்
வாங்கும் அளவுக்கு நபிகளார் நடந்துகொண்டார்கள்-புகாரி 2096,2068,2916 இப்படி வரி
செலுத்தும் வேதக்காரர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் பாதுகாப்பையும்
உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியது. அதிகாரம் இருந்தபோது, இஸ்ரவேலரோடு
சமாதானமான மக்களிடம் கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்
என்கிறது பைபிள்- உபாகமம் 20:10-11 இவ்வாறே யோசுவா
நபி தன்னோடு சமாதானமான அப்பாவி மக்களை வேலைக்காரர்களாக ஆக்கிக் கொண்டதாக யோசுவா
9:15-21 கூறுகிறது. இதேபோல் தாவீதும் அயல்நாட்டவர்களை வேலைவாங்கினான்-1 நாளாகமம்
22:2 (அத்தோடு அருகிலுள்ள மாற்றுமதத்தவர்களை கொன்றுபோட்டுவிட்டு
குடியேறுமாறும் , துரத்தி
விட்டு அவர்களது ஆலயங்களை உடைத்து போடுமாறும் கர்த்தரே சொன்னார் -உபாகமம்
20:16-18, யாத்திராகமம்
23:31-33,&23:24 இது மாற்றுமதத்தவனை மனிதனாக கூட
மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது) -புதிய ஏற்பாட்டிலோ, மாற்றுமத
சிலைவணங்கி உறவினருடன் சேர்ந்து பழகவோ ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை
துரத்திவிட வேண்டும் என்றும் (1கொரிந்தியர்5:11,13), அவர்களைவிட்டு பிரிந்து வாழுமாறும் (2 கொரிந்தியர்
6:17), அத்தகையவனுக்கு
வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது என்றும் (2யோவான்
1:10-11) கூறுகிறது. வெறும் ஆன்மீகம்
மட்டுமேயுள்ள இந்த மதமே இப்படி பேசும்போது இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டுவது
அபத்தமே! |
|
தம்
சக்திக்கு ஏற்ற வரியை விதித்து அவர்களுக்கு பாதுகாப்பையும் அவர்களின்
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கும்போது பழைய ஏற்பாடு அழித்துப்
போடவும் கூலியற்ற வேலைக்காரர்களாக /அடிமைகளாக நடத்தவும் வழிகாட்டுகிறது |
|
|
|
16.இன்ஜீலையுடையவர்கள் அதிலே அல்லாஹ் இறக்கியதை
கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று 5:47 சொல்வதாகவும், ரசாது
கலீஃபா மொழிபெயர்ப்புப்படி 5:48 குர்ஆன்
முந்திய வேதங்களை உறுதிப்படுத்துவதும் அவற்றை ரத்து செய்வதுமாக உள்ளது |
|
குர்ஆன் கூறும் இன்ஜீல் என்பது ஈஸா நபியிற்கு
இறைவனால் கற்றுக்கொடுக்கப்பட்ட வேதம் (குர்ஆன் 3:48, 5:110) அதாவது இயேசுவின் வம்சவயாலாறு முதல் மரணம் வரை
கூறும் சுயசரிதை அல்ல! -இன்ஜீலை கொண்டு
தீர்ப்பளிக்க வேண்டியது முகம்மது நபிக்கு முன்புள்ள காலத்தில் ஆகும்.ஏனெனில் முகம்மது
நபியிற்கு பிறகு அவரை பற்றி கேள்விப்பட்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ மரணிப்பவர்
நரகம் புகுவார் (முஸ்லிம் 240) -இன்ஜீலை கொண்டு
தீர்ப்பளித்தல் என்பது, எதிரியை
மன்னிப்பது கொலைகாரனை மன்னிப்பது கெடுதல் செய்பவனை மன்னிப்பது பழிக்கு பழி
வாங்காதிருப்பது போன்றதாகும். அதுவே அவர்களின் சட்டம். இன்றும் அவர்களின்
நூல்களில் இச்சட்டம் உள்ளது (மத்தேயு 5 & லூக்கா 6) -குர்ஆன் முந்திய
வேதங்களில் கூறப்பட்ட ஏகத்துவம், நற்செயல்
செய்வது, தீமையை விட்டு
விலகுவது, பெற்றோருக்கு
உபகாரம் புரிவது, தீர்க்கதரிசிகளுக்கு
(நபிமார்களுக்கு) கீழ்படிவது
போன்ற கருத்தை மெய்ப்பித்து , அவை முன்னறிவித்த கடைசி நபி முகம்மது நபியே என கூறி அவரை
பின்பற்ற அழைக்கப்படுகிறது. இதுவே அவற்றை
மெய்ப்பிப்பதாகும். அத்தோடு இவர்கள்
தம் கைகளால் பொய்யாக இட்டுக்கட்டி வேதமாக எழுதியுள்ளனர் என்பதையும் குர்ஆன் 2:79 கூறுகிறது. இதனால் அவர்கள்
வேதமென சொல்வதை நம்பவோ மறுக்கவோ செய்யாமல் ,இறைவன் இறக்கியதை நம்புகிறோம் என்று சொல்லி விடுமாறு
நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 7542), அத்தோடு
அவர்களிடம் எதையும் கேட்க வேண்டாம் ஏனெனில் அவர்கள் வேதத்தை மாற்றி இறைவன்
இறக்காததை இறைவன் இறக்கியதாக பொய் சொல்கிறார்கள் என அல்லாஹ்வே சொல்லியுள்ளார் என
இப்னு அப்பாஸ் (ர) கூறுகிறார்கள் (புகாரி 7523) |
|
இதனால்
பைபிள் நல்வழி காட்டுகிறது என்றாகுமா? |
|
|
|
17.கர்த்தர் ஒருவரே (உபாகமம் 6:4) இலுள்ள எக்ஹாத் (אחד) என்றால் ஒன்றுக்கு மேற்பட்டதை உள்ளடக்கிய ஒன்று என உருட்டி ஆதி 2:24,11:6 ஐ கூறினார் |
|
ஹீப்ரு பாசையில்
ஒன்று என்பதை குறிக்க பாவிக்கப்படும் சொல்லே இந்த எகாத் (அரபியில் வாஹித்)
சொல்லாகும். ஒரே சாட்சி (உபாகமம் 17:6) என்பதை குறிக்க
இதே வார்த்தை தான் பாவிக்கப்பட்டுள்ளது இது எண்ணிக்கை
ஒன்று என கூறுவதே ஆகும். ஒரு குடும்பம் என்றால் அதிலே அங்கத்தவர் பலர் இருப்பர். ஆனால் ஒரு
மனிதன் என்றால் அது ஒரே ஒரு மனிதன் தான். இதிலே கடவுள்
குடும்பம் போன்ற எண்ணிக்கை ஒன்றா? அல்லது நபர்களின் எண்ணிக்கை ஒன்றா என பார்க்க வேண்டும். பைபிளில்
தெளிவாக, என்னை தவிர வேறு
கடவுள் இல்லை (உபாகமம் 32:39, ஏசாயா 45:5-7,22) அவரை தவிர வேறு
கடவுள் இல்லை (உபாகமம் 4:39), நீர் மட்டுமே தேவன் /கர்த்தர்
(சங்கீதம் 86:10,நெகேமியா 9:6) என கூறி கர்த்தரின் எண்ணிக்கை ஒரே நபர் மட்டுமே
என் தெளிவாக கூறியுள்ளது. அவரோடு வேறு நபர்கள் பங்காளிகளாக உள்ளார்கள் என்று
கிடையாது |
|
நேரடியாக
திரித்துவம் இல்லை என்றதாலும் கடவுள் ஒருவரே என்பது அவர்களுக்கு சிக்கலாக
இருப்பதாலும் ஒன்று என்றால் மூவர் கலவையான ஒன்று என கதை விடுவதற்காக இதுபோன்ற
அறியாமை வாதங்களை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் |
|
|
|
18.குர்ஆன் 6:114 முற்றிலும்
விவரிக்கப்பட்ட குர்ஆன் என்கிறது ஆனால் 8:49 இலே
வசனம் பூரணமாக இல்லை என்கிறார் |
|
குர்ஆனுடைய
வசனங்கள் மிகவும் தெளிவாக தான் உள்ளது. குர்ஆன் 8:49 , "எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ, நிச்சயமாக
அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கிறான்" - இறைவன் மீது
நம்பிக்கை வைத்தால் அவனுக்கு என்ன நடக்கும் என்பதை சொன்னால் தான் தெளிவான வசனம்
என்றாகுமா? இறைவன் எத்தகையவன் என
அறிமுகப்படுத்துவதிலிருந்தே அதை புரிந்துகொள்ள முடியும் (இவை வெறும்
ஐந்து வயது பிள்ளைகளுக்கு இறங்கிய வசனம் அல்லவே . அத்தகைய
பிள்ளைகளுக்கு கதை சொல்ல வேண்டும் என்றால் தான் இவர்கள் கூறுவது போல கூறவேண்டும்) பைபிளிலே எல்கானா கோலியாத்தை கொன்றதாக
எபிரேயம் சொல்வதை கோலியாத்தின் சகோதரனை கொன்றான் என மொழிபெயர்த்து பித்தலாட்டம்
செய்வது தான் தெளிவான வழிகாட்டலா? (இதை சரியாக
மொழிபெயர்த்த தமிழாக்கம்: சாமுவேலின்
இரண்டாம் புத்தகம் 21:19 TAERV [19] மீண்டும்
பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின்
குமாரனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய
(காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது
ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது. https://bible.com/bible/3154/2sa.21.19.TAERV உண்மையில் கோலியாத்தை கொன்றது தாவீது என்று அதே பைபிள்
சொல்கிறது (1 சாமுவேல் 17:50-51,&21:9) இதை
சமாளிப்பதற்காக பிற்காலத்தில் 1 நாளாகமத்தை எழுதியவர் எல்கானா கொன்றது இவனது
தம்பி லக்மீ என்பவனை என்று கதைவிடுகிறார்-1 நாளாகமம் 20:5 |
|
இதிலிருந்தே
தெரிகின்றது வழிகாட்டும் லட்சனம். |
|
|
|
19.குர்ஆன் 12:41 ஐ
ரசாது கலீஃபாவிடமிருந்து தமிழில் மொழிபெயர்த்தோர் சிலுவையில் அறையப்படுவார் என
மொழிபெரத்திருப்பதை வைத்து வரலாற்றுப் பிழை என்றனர் ஆனால் சங்கீதம் 22:16 இலே
சிலுவையில் அறையப்படுவது சரியாக முன்னறிவித்திருப்பதாக உருட்டுகிறார் |
|
(صلب) என்பது
கழுவேற்றும் தண்டனையை குறிக்கிறது. பேரீச்சமர
தண்டில் கழுவேற்றுவதாக ஃபிர்அவ்ன்
எச்சரித்ததாகவும் குர்ஆன் 20:71 இவ்வசனத்திற்கும் சிலுவைக்கும்
சம்பந்தமில்லை... சிலுவையில்
அறைந்து கொல்லுவதற்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் யூசுஃப் நபி காலத்தில் இருந்தது சிலுவை அல்ல..
மரத்தில் கழுவேற்றுவது கொல்லுவது சங்கீதம் 22:16
இலே க-அரீ (כארי) எனும் சொல்லே
உள்ளது. அதன் அர்த்தம் சிங்கத்தைப்போல என் கைகளையும் கால்களையும் சூழ
சிங்கத்தைப்போன்று தீயவர்கள் இருக்கிறார்கள் . இவர்கள் கூறுவது
போல வேண்டுமானால் காரூ-(כרו) என்று
வரவேண்டும். இங்கே மேலதிகமாக
அலிஃப் (א) உள்ளது. கஅரூ
எனும் அத்தகைய சொல் எபிரேய அகராதியிலேயே இல்லை. வேடிக்கையாக சில
பிரதிகளில் யொத் (י) என்பது சற்று
கீழிறங்கி வாவ் (ו) போல்
காணப்படுகின்றன. அதனாலும்
அர்த்தம் மாறாது. காமெடியாக
அத்தகைய பிரதிகளில் "யதய்-என்கைகள் (ידי)"
என்பதற்கு பதிலாக "யதேய்ஹா-அவளுடையை
கைகள் (ידיה)" என்றே உள்ளன. அதாவது
அவர்களின் விளக்கப்படி அவளுடைய (இஸ்ரேலின் பிள்ளைகளின்) கைகளையும்
கால்களையும் சூழ தீயவர்கள் சிங்கம் போல் இருக்கிறார்கள் என்று தான் வரும் இங்கே தாவீது
தன்னை குறித்து தேவனிடம் பாடுவதே இது. தன் சந்ததியில் ஒருவனுக்கு இப்படி
நடக்கும் என்றோ எதுவுமில்லை |
|
இவர்களின்
மொழிபெயர்ப்பு தில்லுமுல்லுகளில் ஒன்றே இது. இந்த வசனம் இயேசுவை பற்றி கூறுவதாக
புதிய ஏற்பாட்டில் யாருமே கூறவில்லை. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட பின்
கிறிஸ்தவர்களால் திணிக்கப்பட்ட பொய்யே இவ்வாறான உருவக்குத்தினார்கள் என்ற
பொய்யான மொழிபெயர்ப்பு சரி
இதனால் பைபிள் மனிதர்களுக்கு எந்த வழியை காட்டியது? |
|
|
|
20.அல்லாஹ் வழிதவறச்செய்வதாகவும் சைத்தானையும்
அவனே வழிதவறி செய்தான் என்றும் குர்ஆன் 15:39,2:26,14:4 ,16:37 ,30:29 ஆகியவற்றை குறிப்பிட்டு ஆனால் கர்த்தரோ
ஒருவரும் கெட்டுப்போக விரும்புவதில்லை என்பதாலே தாமதிக்கிறார் என்று 2 பேதுரு 3:9 குறிப்பிட்டனர் |
|
--மனிதனுக்கு
இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன்
நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக
இருக்கிறான் (குர்ஆன் 76:3) --மனிதனுடைய
ஆத்மாவுக்கு நன்மையையும் தீமையையும் அறிவித்துக் கொடுத்துள்ளான். அதை பரிசுத்தப்படுத்திக்கொள்பவர்
வெற்றிபெற்றவர்-குர்ஆன் 91:7-10 -இறைவன் ஒரு
கூட்டத்தையும் அவர்களுக்கு நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்துகொள்ள
வேண்டியவற்றை தெளிவாக்காமல் வழிதவறச்செய்வதில்லை (குர்ஆன் 9:115) அல்லாஹ் வழி தவற செய்வதன் விளக்கம் -அவர்கள்
சத்தியத்தை அறிந்துகொண்டே சறுகியபோது அல்லாஹ் அவர்களது இதயங்களை சறுக செய்தான் (குர்ஆன் 61:5) -நேர்வழி
இன்னதென்று தெளிவான பின்பு இத்தூதருடன் முரண்பட்டு விசுவாசிகளின் வழியல்லாததை
எவர் பின்பற்றுகிறாரோ அவனை அவன் திரும்பிய வழியிலேயே திருப்பி விட்டு நரகத்தில்
நுழைவிப்போம் (குர்ஆன் 4:115) -ஸமூது
கூட்டத்தினருக்கு நல்வழி காட்டினோம். ஆனாலும் அவர்கள் குருட்டுத்தன்மையை
விரும்பினார்கள் (குர்ஆன் 41:17) இப்படி இறைவன் நேர்வழியை காட்டிய பின்பு, வழி
கேட்டை தெரிவு செய்பவனையும், சத்தியத்தை அறிந்துகொண்டே மறுப்பவனையும்
இதுபோன்ற குற்றவாளிகளையும் பொய்யர்களையும் இறைவன் அவர்கள் தேர்ந்தெடுக்கும்
வழியிலே விட்டுவிடுகிறான். *இதற்கு
முழு குற்றமும் அத்தகைய செயல்களை செய்யும் மக்களேயன்றி இறைவன் அல்ல. அதனால் தான் நரகம்
செல்லும் பாவிகள் தம் பாவங்களை ஒப்புக்கொள்வதோடு (குர்ஆன் 67:11), நாங்கள்
தாம் மறுத்தோம் என்றும் தூதர்கள் சொல்வதை நாம் கேட்டு சிந்தித்தித்திருந்தால்
நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் என்றும் (குர்ஆன் 67:9-10), அநியாயக்காரனாகியவன் மறுமையில், நானும்
அத்தூதருடன் நேரான வழியை எடுத்திருக்க கூடாதா? என்னை
நல்லுபதேசம் வந்த பின் வழிகெடுத்த அவனை
நண்பனாக எடுத்திருக்காதிருக்க வேண்டாமா? என
புலம்புவான் (குர்ஆன்
25:27-29), அத்தோடு
நரகத்தில் முகங்கள் புரட்டப்படும்நாளில் , நாங்கள்
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு கட்டுப்பட்டிருக்க
வேண்டுமே! என் கூறுவார்கள் என்றும் நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (அதிகாரிகளுக்கும்), எங்கள்
பெரியவர்களுக்கும் (அறிஞர்கள்/மதகுருக்கள்) கட்டுப்பட்டோம். அவர்கள்
எங்களை வழிகெடுத்துவிட்டார்கள் என்றும் கூறுவார்கள் (குர்ஆன்
33:66-67) ஆகவே முழு குற்றமும் அதை செய்தவர்கள் மீதே -இறைவன்
வழிகெடுக்கிறான் என்பது இறைவனே சர்வக்தியுடையவன் என்பதாலும் அவன் அறியாமல்
அனுமதிக்காமல் எதுவுமே நடக்காது என்பதாலும் அவனே சுயதேர்வை கொடுத்து வழிகேட்டை
தெரிவு செய்யும் உரிமையும் வழங்கி , அதனை
செயற்படுத்த ஆற்றலையும் வழங்கியிருக்கிறான் என்பதினாலாகும். மற்றபடி அவன்
யாரையும் நிர்ப்பந்தித்து வழி கேட்டை திணிப்பதில்லை. இங்கே இறைவனது முன்னறிவின்படியான விதி, சட்டரீதியான
விதி என இரண்டு உள்ளது. தன் முன்னறிவின் படி வழிகெட்டுப்போகிறவனை
வழிகெட்டு போக அனுமதிப்பான். அது
அவனது அநீதி அல்ல. ஏனெனில் யாருக்கும் அவன் அநீதி இழைக்க மாட்டான்(குர்ஆன்
4:40,10:44,18:49). தான்
விரும்பியோரை நேர்வழியில் செலுத்துவான் அது அவனது கருணை. ஆனால் சட்டரீதியான தீர்மானத்தின்படி
நேர்வழியை நோக்கி அழைப்பான் தூதர்களை அனுப்பி நேர்வழி தெளிவாக்குவான்(குர்ஆன்
10:74,16:36, 35:37) அநேக
வசனங்கள்).. அதன்படியே
குற்றவாளிகளை சிலபோது இம்மையிலும் நிச்சயமாக மறுமையிலும் தண்டிப்பான். இதன்காரணமாகவே தன் கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம்
என்றும் அனைத்து பாவங்களையும் மன்னித்து விடுவேன் என்று அழைப்பதோடு மறுமை
வருமுன் அல்லது அழிவு வருமுன் திருந்தி வருமாறு அழைக்கிறான் (குர்ஆன் 39:53-59), அவன் நேரான வழியில் செலுத்தவும் மன்னிக்கவுமே
விரும்புகிறான் (குர்ஆன் 4:26-27). குற்றவாளிகள் திருந்தி வருவதற்காகவே இவ்வுலகிலே தண்டனை
வழங்குவதாகவும் (குர்ஆன் 32:21), இதுபோன்றே ஃபிர்அவ்னும் திருந்தி வரவேண்டும் என்பதற்காகவே
அவனிடமும் தூதரை அனுப்பி நளினமாக பேசவைத்து (குர்ஆன் 20:44), அவன் மறுத்து பெருமையடித்தபோதும் திரும்பி வருவதற்காக தண்டனைகளை
அனுப்பியதாக (குர்ஆன் 43:48) குர்ஆன் கூறுகிறது . ஆக
வழிகேட்டுக்குத்தகுதியானவனை அவனது சுய தேர்வின் படி வழிகெட்டுப்போவதற்கு
அனுமதிக்கிறார். நேர்வழியில்
இருப்பவரை அநீதமாக வழிகெடுப்பதில்லை. அவனாக தப்பான வழியை தேர்ந்தெடுக்கும் போது
அவனை வழிதவறி செய்கிறான். அதற்கு முன்பு அவன் மீது வழிகேட்டை திணிப்பதில்லை! சைத்தானை வழிகெட செய்ததும் அவ்வாறே. அவன்
ஸுஜூத் செய்யுமாறு கட்டளையிடும் பட்டு சோதிக்கப்பட்டபோது, அவன்
தன் சுய தேர்வின் படி மறுத்தான் பெருமையடித்தான். இறைவன் அவ்வாறு நடக்கும் என
அறிந்தும் கட்டளையிட்டான். இதன்மூலம் அவனது வழிகேடு வெளிரங்கமானது. அதனாலே
சைத்தான் இறைவனிடம் நீ என்னை வழிதவறி செய்தாய் என்று சொன்னான். காரணம் முழு
அதிகாரமும் ஞானமும் இறைவனிடமே உள்ளது என்பதாலும் இவன் வழிதவறுவான் என அறிந்தும்
சிரம்பணியுமாறு கட்டளையிட்டான் என்பதையே குறிக்கிறது -கர்த்தர்
வர தாமதிப்பதே அதிகமான மக்கள் நரகம் செல்வதற்கு காரணமாக இருக்கிறது என்கிற
அடிப்படை அறிவு கூட இல்லாமல் எழுதியுள்ளார் பேதுரு. கிபி 70இற்கு முன் இயேசு வந்திருந்தால், அவிசுவாசிகள் அப்போது இருந்தது சொற்பமாக
இருந்திருப்பார்கள். இப்போதோ அவர்கள் தொடக்கம் இன்றுவரை பல ஆயிரம் மடங்கு
அவிசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிய இருக்கிறது. இதன்படி நரகத்தையும் நிரப்பும்
அளவுக்கு தாமதிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது -வேடிக்கையாக
இயேசுவின் வாக்குறுதி பொய்யானது என இதனாலே நம்பி அவிசுவாசியாக
கெட்டுப்போகிறவர்கள் இன்னும் அதிகரிக்கின்றனர் -தேவன் அவிசுவாசிகள்
விசுவாசிப்பதற்காக பரிசுத்த ஆவியை அவர்கள் மீது அனுப்புவதில்லை.. மாறாக பொய்யை
விசுவாசிக்கும்படி வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12 இது தான் தேவன்
ஒருவரும் கெட்டுப்போகாதபடி தாமதிப்பது. -இஸ்ரவேலரை
நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தியதும் அவரே எசேக்கியேல் 20:26. இது தான் கெட்டுப்போகாதபடி தாமதிப்பது -விசுவாசிக்காதபடி
இருதயத்தை கடினப்படுத்தி வழி தப்பி போகப் கட்டுவதும் அவரே- ஏசாயா 63:17, யோவான் 12:40 இது தான்
கெட்டுப்போகாதபடி தாமதிப்பது -தன்னை
ஏற்காத யூதர்களை இயேசு திருந்தாமல் மன்னிக்கப்படாமல் இருக்க விரும்பி உவமையாக
பேசுவதாக அவரே வாக்குமூலம் கொடுக்கிறார் - மாற்கு 4:11-12 ஆக என்னவோர்
நல்லெண்ணம். இது
போன்றவற்றில் தனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23 IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக
இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ
அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு
எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப்
பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன்
ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல்
அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது
கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத்
தெரிவிக்கவும், [23] தாம்
மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின்
செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு
ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய
சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam |
|
தேவன்
தாமதிப்பதாலே கெட்டு போவோர் அதிகரிக்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்
பேதுரு எழுதியதோடு, தேவனே
வழிகெடுக்கிறார் வஞ்சிக்கிறார் என்ற பைபிள் வசனங்களை தெரியாமல் பேதுரு எழுதியதை
வாதமாக வைத்துக்கொண்டு சர்வஞானியான இறைவன் வழி கேட்டை தெரிவு செய்பவனை வழி
கேட்டில் விட்டுவிடுவதை விமர்சிக்கலாமா? இதனால்
பைபிள் மனிதர்களுக்கு நல்வழி காட்டியதாக ஆகிவிட்டதா? |
|
|
|
22.குர்ஆன் 33:52 அவர்களது
அழகு உம்மை கவர்ந்த போதிலும் திருமணம் முடிக்க கூடாது என்று கூறப்பட்டதை
முகம்மது நபியிற்கு பெண்களை பார்த்து திரிவதற்கு அனுமதிக்கிறது என உருட்டினர் |
|
உண்மையில்
அவ்வசனம் அப்படி சொல்லவில்லை. மாறாக வேறு திருமணம் முடிக்க கூடாது என்றே
கூறுகிறது. அதாவது தற்செயலாக ஒரு பெண் மீது பார்வை விழுந்து அப்பெண்ணின் அழகு
கவர்ந்தாலும் கூடாது என்பதே இது கூறும் கருத்து நபிகளார் எப்படி
நடந்து கொண்டார்கள் என்றால், உடன்படிக்கை எடுக்கும்போது கூட ஆண்களிடம் கையை பிடித்து
வாங்குபவர் பெண்களை தொடாமல் வாயளவிலேயே உடன்படிக்கை எடுப்பார் (புகாரி 7214,4891,2713). அத்தோடு
எதேச்சையாக பார்வை விழுந்தால் உடனே பார்வையை திருப்பிக் கொள்ள வேண்டும்
என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (முஸ்லிம் 4363 (2159), அபூதாவூத்
2148)... அத்தோடு தற்செயலாக விழும் முதல் பார்வை குற்றமில்லை அதை மீண்டும் பார்ப்பதே குற்றம்
என நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2149 பைபிளில் கன்னியுடன் விபச்சாரம் செய்தால்
தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் மஹரை கொடுத்துவிட்டு போகுமாறு சொன்னதை வைத்து, ஒரு
கன்னியின் அழகு கவர்ந்தால் அவளை கரெக்ட் பண்ணி விபச்சாரம் செய்ய பைபிள் வழிகாட்டுகிறது
என சொல்லலாமா? யாத்திராகமம்
22:16-17 IRVTam [16] திருமணத்திற்கு
நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத்
திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று
சொன்னால், கன்னிகைகளுக்காகக்
கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும். https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam -கன்னியை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக்காசுகளை கொடுத்து
திருமணம் செய்து காலம் முழுதும் கற்பழிக்க வழிகாட்டும் வசனத்தை வைத்து, கன்னியின்
அழகு கவர்ந்தால் கற்பழிக்க ஐடியா கொடுப்பதாக பேசட்டுமா? உபாகமம்
22:28-29 IRVTam [28] “நிச்சயிக்கப்படாத
கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன்
உறவுகொள்ளும்போது, அவர்கள்
கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது
வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு
மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது. https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam இதுபோல்
பெண்களால் கவரப்பட்டு கற்பழித்த உன்னதமான கதைகளையும் பைபிள் கூறுகிறது 1.அம்னோன்
என்பவன் தன் தங்கச்சியை
பனியாரம் சுடவைத்து ,அவள் அருகே
வந்ததும் கற்பழித்தான்- இதை விரிவாக ஆராய்ச்சி செய்து பைபிள் 2 சாமுவேல் 13
கூறுகிறது 2.தாவீது ராஜா
குளிக்கும் பெண்ணின் அழகில் மயங்கி அவளை கூப்பிட்டனுப்பி அவளை புணர்ந்தார் (2
சாமுவேல் 11:2-4). பிறகு அவளையே மனைவியாக்கி புணர்ந்த போது பிறந்த குழந்தையை
கடவுளே நேசித்தார்-(2 சாமுவேல் 12:24) இதிலே என்
தாவீதை கண்டுபிடித்தேன் என அருமையாக பேசுகிறார் (சங்கீதம் 89:20) 3.யூதா என்பவனோ
தன் மருமகளை வேசி என நினைத்து பேய்மண்ட் கொடுத்து விபச்சாரம் செய்தான் (அவள்
பேய்மண்ட் எடுக்காமல் போய்ட்டாள்)(ஆதி 38:14-20). இதற்கு முன் இவனது மகன் விந்தை
உள்ளே விடாததற்காக தேவன் கொன்றார் (ஆதி 38:8-10). ஆனால் இவனோ விபச்சாரம்
செய்தும் உள்ளே விட்டதால் தேவன் கண்டுக்கவில்லை போலும். இவனது வம்சத்தில் தான்
தாவீதும் வந்தார் 4.யாக்கோபின்
மகனும் யூதாவின் அண்ணனுமானவன் தன் தகப்பனின் வப்பாட்டியை புணர்ந்தான் (ஆதி 35:22) வெறுமனே
திரும்பிப் பார்த்த லோத்துவின் மனைவியை உப்புச்சிலையாக்கிய தேவன் இதை
கண்டுக்கவேயில்லை 5.உன்னதமான மோசே
அவர்களின் பிறப்பு கூட அவரது தகப்பன் தன் தந்தையின் சகோதரியிடமே பெற்றார் அதாவது
அத்தையும் மறுமகனுக்கும் பிறந்தவனே -யாத்திராகமம் 6:20.. இவர் இங்கே legalஆக பிள்ளை
பெற்றார் இவற்றில்
எதையுமே கர்த்தர் அவை நடந்தபோதோ அதன் பின்போ கண்டிக்கவில்லை (உடனே தோரா இந்த
கள்ள உறவுகளை ஏற்கவில்லை தடை செய்கிறது என கூறலாம். ஆனால் தோரா வந்ததே இந்த
உறவுகளில் தான் என்கிறது பைபிள்) |
|
இதனால்
குர்ஆன் நல்வழி காட்டவில்லை என்றாகிவிட்டதா? பைபிள் காட்டிய வழி அதிசிறப்பாகிவிட்டதா |
|
|
|
23.இயேசுவே தனக்கு வெளிப்படுத்தினார் என பவுல்
சொன்னாராம் கலா 1:12 |
|
முகம்மது
நபியிற்கு இறைவனே குர்ஆனை/வேதத்தை
இறக்கினான் ( குர்ஆன் 3:7) முகம்மது
நபியின் மீது வஹீ இறங்குவதை தோழர்கள் நேரடியாக அடையாளத்தை வைத்து உணர்ந்து
கொண்டுள்ளார்கள் (புகாரி 2,2661,4141,2832,4592,1536, முஸ்லிம் 4660, முஸ்னத் அஹ்மத்
24868, திர்மிதீ 3173) தற்கால
போதகர்கள் தம் மனதில் எழும் எண்ணத்தை ஆவியானவர் தம்மோடு பேசினார் என உருட்டுவது
போன்றே பவுல் அவர்களும் தம் மனதில் எழும் வெளிப்பாடுகளை இயேசு வெளிப்படுத்தியதாக
சொல்கிறார். அவருக்கு பழைய
ஏற்பாட்டில் எந்த முறையான ஞானமும் இல்லை என்பதை பழைய ஏற்பாட்டை மேற்கோள்
காட்டுவதிலேயே புரிந்துவிடும். உதாரணமாக, சந்ததி என ஒருமையில் இருப்பதால் அது ஒருவரையே குறிக்கும்
என்றும் அவரே இயேசு என்றும் கலாத்தியர் 3:16. ஆனால்
எபிரேயத்தில் சந்ததி/வித்து என்பது
எப்போதும் ஒருமையில் தான் இருக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்
அதிலிருந்து தத்துவம் பேசுகிறார். |
|
இயேசு
தனக்கு வெளிப்படுத்தியதாக பவுல் சொன்னால் அதனால் பைபிள் நல்வழி காட்டுவதாக
ஆகிவிடுமா? |
|
|
|
22.குர்ஆன் 9:125 தம் இதயங்களில்
நோயுள்ளவர்களுக்கு குர்ஆன் அசுத்தத்திற்கு மேல் அசுத்தத்தை அதிகமாக்கியது, 3:178 அவர்கள்
பாவங்களை அதிகப்படுத்துவதற்காக அவகாசம் அளிப்பது, |
|
விசுவாசிகளுக்கு
விசுவாசத்தை அதிகரிக்க செய்யும். (9:124), உள்ளத்தில்
சந்தேக நோயுள்ளவர்களுக்கு அசுத்த்திற்கு மேல் அசுத்தத்தை அதிகமாக்குகிறது.
ஏற்கனவே சந்தேகத்தில் இருப்பவனுக்கு மேலதிகமாக இன்னும் கூறும்போது அவற்றிலும்
சந்தேகம் ஏற்பட்டு அதிகரிக்கும். அதையே அவ்வசனம் கூறுகிறது. அதாவது அவிசுவாசிகளுக்கு உள்ளத்தில் நோயுள்ளவர்களுக்கு
நேர்வழிகாட்டுவதும் நோய்நிவாரணியும் கூட அசுத்தத்தை நோயையும் அதிகரிக்கும். ஆனால் உண்மையில் குர்ஆனானது
விசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும், நோய் நிவாரணியாகவும் உள்ளது (குர்ஆன் 41:44& 17:82) -குர்ஆன் 3:178 குறித்து, பாவம் செய்வான்
என்றும் திருந்த மாட்டான் என்றும் அறியப்பட்ட குற்றவாளிக்கு அவகாசம் அளித்தால் , அது அவனது பாவத்தை அதிகமாக்குவதற்காக தானே அமையும்... ஆனாலும் அனைவரையும் திருந்தி வருமாறே இறைவன் அழைக்கிறான் (குர்ஆன் 39:53,54-59) -பரிசுத்த
ஆவியானவரின் வருகையே பாவத்தை செய்விப்பதும் அறிவீனமாக நடப்பதுமாகவே பைபிளில்
காட்டப்பட்டுள்ளது. *ஆவியானவர் இறங்க
முன் தாவீது நன்றாக இருந்தான். ஆவியானவர் வந்த பின்போ (1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11)
, குளிக்கிற
பெண்ணை பார்த்து காமங்கொண்டு விபச்சாரம் செய்தார்(2 சாமுவேல் 11:2-4) *சிம்சோனை
ஆவியானவர் ஏவத்தொடங்கினார் (நியாயாதிபதிகள் 13:24-25), அதன் பின் அவனோ
பிலிஸ்திய பெண்ணை பார்த்ததும் காதலில் விழுந்தான் (நியா 14:1-3), இப்படி காதலில்
விழ வைத்ததே தேவனது செயல் தான் என்கிறது பைபிள் (நியாயாதிபதிகள் 14:4). இதன்பின்
வேசியுடன் படுத்தார் (நியா 16:1) *மோசேயின் மீது
ஆவியானவர் வந்த பின்போ, தேவனை
விசுவாசிக்காமல் போனார் (உபாகமம் 32:50-51, எண்ணாகமம் 20:12) *சவுலின் மீது
ஆவியானவர் இறங்கினார். இதனால் கோபம் ஏற்பட்டு மாட்டை வெட்டிப் போட்டான் -1
சாமுவேல் 11:6-7. இந்த ஆவியானவர் இருக்கும்போது தான் கர்த்தர் சொன்னபடி
கேட்காமல் அமெலேக்கிய ராஜாவையும் நல்ல மிருகங்களையும் உயிருடன் விட்டான் (1
சாமுவேல் 15:8-11), இதன் பின்பே
ஆவியானவர் இவனை விட்டு போய் தாவீதின் மீது இறங்கினார்( 1 சாமுவேல் 16:13-14). இதன்பின் தாவீது விபச்சாரம் செய்தார். ஆக இப்படி
பரிசுத்த ஆவியே அசுத்தத்தை வழிகாட்டும் போது, பைபிள் சுத்தத்தை காட்டுமா? -கர்த்தரே
இஸ்ரவேலரை கெடுத்து நரபலி கொடுக்க வைத்ததாக எசேக்கியேல் 20:26 கூறுகிறது |
|
அவிசுவாசிக்கு
சந்தேகமுள்ளவனுக்கு வழிகாட்டி கூட வழிகேடாக அமையும். நோய் நிவாரணி கூட
அசுத்தத்தை அதிகமாக்கும். பரிசுத்த ஆவியானவர் வருமுன் நல்லோராக
இருந்தவர்கள் ஆவியானவர் வந்த பின் பெரும்பாவங்களை செய்ததாக பைபிள் கூறுகிறது. இந்த
பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு பைபிள் எழுதப்பட்டிருந்தால் வழிகாட்டியாக அமையும்
என எதிர்பார்க்க முடியுமா? |
|
|
|
25.பைபிளிலே கர்த்தர் அருவருப்புகளை கற்று
கொள்ளாத படிக்கு கொன்று போட சொன்னது ஓகேயாம். ஆனால்
போரிட்ட காஃபிர்களை எதிர்த்து போரிட 8:39,9:73, கூறுவது தப்பாம் |
|
-இஸ்லாத்தை ஏற்ற
ஒரே காரணத்துக்காக ஏற்றவர்களை கொன்றார்கள் வேதனை செய்தார்கள் காஃபிர்கள் (புகாரி 4514). ஊரைவிட்டு
வெளியேற்றினார்கள் (குர்ஆன்
22:39-40, 9:13, 60:1) -தமக்கு சக்தி
இருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள்
என இறைவன் அறிந்திருந்தான் (குர்ஆன் 2:217) இந்த நிலையில்
அவர்களின் யுத்தத்தை எதிர்த்து யுத்தம் செய்து அவர்களை மேற்கொள்ளாவிட்டால், இறைவனது
மார்க்கம் அழிந்துவிடும். அத்தோடு இறை மார்க்கத்தை ஏற்காதோரும் நரகம் புகுவர். -ஆனாலும்
பெண்களையோ சிறுவர்களையோ யுத்தம் செய்யாத கூலியாட்களையோ கொல்ல வேண்டாம் என்று
போர்க்களத்திலேயே நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 3014,3015, அபூதாவூத் 2669) அதாவது இதன்படி
யுத்தம் செய்யக்கூடிய எதிரியோடு மட்டுமே யுத்தம் செய்ய நபிகளார் ஏவப்பட்டார்கள். ஆனால் கர்த்தரோ
நானூறு வருடம் முன் எதிர்த்து யுத்தம் செய்ய வந்ததற்காக அவர்களின்
பிள்ளைகளிலுள்ள குழந்தைகளையும் பெண்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி
கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி மூலம் ஏவினார்-1 சாமுவேல் 15:2-3 இதை வைத்து
கொண்டு பேச வெட்கப்பட வேண்டும் மாற்று மத்தவனை உயிரோடு விட்டால் அவனை போல
இவர்களும் வழிகெட்டு போவார்கள் என்பதற்காக அவர்களை ஈவிரக்கமின்றி கொல்லுமாறு
கர்த்தர் சொல்லுகிறார் . மூச்சு
விடும் எதையும் உயிரோடு விட கூடாது என்கிறார். உபாகமம் 20:16-18 IRVTam [16] உன்
தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்
என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17]
அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள்
தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய
உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப்
பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும். https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam இதைவிட கொடூரம்
வேறென்ன? இவர்கள் கிறிஸ்தவத்தை மக்களுக்கு
போதிப்பார்கள் என்பதற்காக இந்துக்களோ முஸ்லிம்களோ யூதர்களோ இவர்களை கொன்றால்
ஏற்றுக்கொள்வார்களா? இதை
தானே கர்த்தரே சொன்னார்! |
|
நியாயமாக
போரிடுபவனை எதிர்த்து போரிடுவதையும் சிறுவர்கள் பெண்கள் போரிடாத கூலியாட்களை
கொல்லக்கூடாது என்றும் போதிப்பது வழிகாட்டல் இல்லையாம். ஆனால் இவர்கள் மதமாறி
போகாதபடிக்கு புறஜாதியாரை கொல்ல சொன்னது வழிகாட்டலாம். அதுவும்
உயிருள்ள எதையும் விடாமல் கொல்ல வேட்டுமாம். இதே
செயலை RSS சங்கபரிவாரர்கள்
இவர்களுக்கு செய்தால் ஏற்றுக்கொள்வாய்களா? |
|
|
|
26.ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டாது என்று
கூறுவதற்கு முரணாக 29:13,5:29 |
|
பொதுவாக ஒருவர்
பாவத்தை மற்றொருவர் சுமக்க மாட்டார். ஆனால்
வழிகெடுத்தால் வழிகெடுத்த பாவத்திற்கு தண்டனையாக , கொலை செய்தால் அதற்குரிய தண்டனையாக, பாவத்தில்
முன்மாதிரியாக இருந்தால் அதற்கான தண்டனையாக அதற்கேற்ற பாவங்கள் சுமத்தப்படும்.
அதுவும் அவர்களது பாவங்களுக்கான தண்டனை.- வழிகெடுத்த
பாவத்தை பொருத்தமட்டில் வழிகெடுக்கப்பட்டவனின் பாவம் நீங்கி விடாது.
வழிகெடுக்கப்பட்டவனும் தன் பாவத்தை சுமப்பான். வழிகெடுத்தவனும் அதேயளவு பாவத்தை
சுமப்பான். காரணம் அவன் மூலமாகவே அது நடந்தது. இப்படி தாவீது
செய்த பாவத்துக்கு தண்டனையாக பொது ஜனங்களுக்கு தண்டனையை வருவிக்கிறார். அதிலே
தேவன் கொடுத்த தேர்வு, ஏழு வருடம் பஞ்சம் வரவேண்டுமா மூன்று மாதம்
எதிரிகள் வச்சு செய்ய வேண்டுமா அல்லது மூன்று நாட்கள் நோயால் தேவன் வச்சு செய்ய
வேண்டுமா என்பதே அதன் தேர்வுகள்- 2 சாமுவேல் 24:13 மூன்று வருடம் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதம்
எதிரிகள் வச்சு செய்ய வேண்டுமா அல்லது மூன்று நாட்கள் நோயால் தேவன் வச்சு செய்ய
வேண்டுமா என்பதே அதன் தேர்வுகள்- 1 நாளாகமம் 21:11-12 இதே தேவன் தான்
பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும் என்கிறவர் (எசேக்கியேல் 18:4,20). ஆனால்
இங்கே தாவீதின் பாவத்திற்காக இஸ்ரவேலருக்கு தண்டனை கொடுத்து கொன்றார் (1
நாளாகமம் 21:14, 2சாமுவேல்
24:15) முரண்பாடுனா
இப்படி இருக்க வேண்டும். |
|
மக்களை
வழிகெடுத்தாலோ கொன்றாலோ தண்டனையாக அவர்களது பாவங்களையும் சுமக்க வேண்டி வரும்
என்பது வழிகாட்டல் தானே. ஆனால் பைபிளோ
தாவீது செய்த பாவத்திற்காக இஸ்ரவேலரை தண்டித்து அதிலும் முரண்படுகிறது பைபிள். இது வழிகாட்டலா? |
|
|
|
27.முதலாவது கொலைசெய்த ஆதமின் மகனுக்கு உடலை
புதைப்பதற்கு கற்றுக்கொடுத்ததை 5:30-31 குறையாக
பேசுகிறார் |
|
-முதவாவது
மரணித்தவனது உடலை புதைக்க இறைவன் கற்றுக்கொடுக்காமல் வேறு எப்படி அவன்
அறிந்துகொள்வான்? அப்போது வெறுமனே
ஆதமும் ஹவ்வாவும் இந்த கொலைகாரனும் அவரது மனைவியும் தான் உயிரோடே இருந்தனர்.
அக்காலத்தில் தண்டனை சட்டங்கள் இறைவன் கொடுத்திருக்கவில்லை. ஆனாலும் இப்படி
அவர் செய்த காரணத்தினால் அவருக்கு பின் யாரெல்லாம் கொலை செய்கிறார்களோ அவர்களின்
பாவத்தையும் கொலைகாரன் தன் பாவத்தை சுமப்பது போல இவரும் சுமப்பார்.(புகாரி 6867). கொலை
செய்யப்பட்டவரின் பாவத்தையும் தண்டனையாக சுமப்பான் என்றும் அவன் நஷ்டமடைந்தவனாக
ஆகிவிட்டான் என்றும் கைசேதப்படுபவனாக ஆகிவிட்டான் என்றும் அவனது செயலின்
பாரதூரத்தை குர்ஆன் எச்சரிக்கிறது (5:29-31) -பைபிளிலே அவன்
எப்படி புதைக்க கற்றுக்கொண்டார் என்ற தகவல் இல்லை. ஆனாலும் யாருமே
இல்லாத காலத்தில் அவனை யாரும் அடையாளம் கண்டு கொல்லாமலிருக்க அவன் மீது
அடையாளத்தை கர்த்தர் போட்டு காப்பாத்தினார்-(ஆதி 4:14-15) அவனை
கொல்லுவதற்கு அவனது பிள்ளைகளால் தான் முடியும். காரணம் வேறு யாரும் இருக்கவில்லை. ஆதாமும் கொல்லமாட்டார் . சரி இங்கே அந்த
கொலைகாரனை காப்பாற்றி விட்டதே கர்த்தர் தானே! (பிறகு இதே
கர்த்தர் குழந்தைகளையும் கொல்ல சொன்னார் -1 சாமுவேல் 15:2-3) |
|
குர்ஆன்
முதல் கொலைகாரனுக்கு இறைவன் பிணத்தை புதைக்க கற்றுக்கொடுத்ததாக குறை சொல்பவர்கள்
அதன் பாரதூரத்தை குர்ஆன் எச்சரிப்பதை கண்டுகொள்ளவில்லை . அத்தோடு இறந்த பிணத்தை
புதைப்பதை கூட நல்வழியாக இங்கே முதல் பிணத்தின்போதே காட்டினான் பைபிளில்
இந்த காயீனை கொல்லாதபடி அவனுக்கு அடையாளத்தை கொடுத்ததும் குழந்தைகளை கொல்ல
சொன்னதுமான விடயங்கள் இவர்களின் மனதில் எழவில்லை போலும் |
|
|
|
28.முகம்மது நபியிற்கு தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கேட்குமாறு
கூறும் 40:55,47:19 ஐ குறிப்பிட்டு அவரை பாவியென சித்தரிக்க
முயன்றனர் |
|
-மனிதர்கள்
இறைவனிடம் தம்மை தாழ்த்தி பணிவாக இருக்க வேண்டும். அதிலே
முதன்மையானது பாவமன்னிப்பு கேட்பதுவே. அதற்கு
முன்மாதிரியாக நபிகளார் இருக்க வேண்டும். அதற்காக
நபிகளார் பாவமன்னிப்பு கேட்கவேண்டும். யாருடைய
பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனே பாவியானவன். ஆனால் முகம்மது
நபியின் முன்பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (குர்ஆன் 48:2) அப்படியிருந்தும்
ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு அதிகமாக இறைவனிடம் மீள்பவராகவும் பாவமன்னிப்பு
கேட்பவராகவும் இருந்தார்கள்-புகாரி 6307 காரணம் அவர்
பாவம் செய்பவர்கள் இறைவனிடம் மீளுவதற்கும் பாவமன்னிப்பு கேட்பதற்கும் நன்மை
செய்வதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் என சகலத்திற்கும் அழகிய முன்மாதிரியாக
இருக்கிறார்.(33:21) -பைபிளிலே
மோசேயின் மீது பரிசுத்த ஆவியானவர் இருந்தும், தேவனை பரிசுத்தம்பண்ணும்படி விசுவாசிக்கவில்லை (எண்ணாகமம்
20:12, உபாகமம் 32:50-51) -ஆரோனை தேவன்
தேர்வு செய்திருந்தும் அவர் மாட்டுக்கன்றை செய்து சிலை வணங்க வைத்தார்
(யாத்திராகமம் 32:1-6) -தாவீதின்மீது
பரிசுத்த இறங்கிய பின் (1 சாமுவேல் 16:13), அந்த ஆவியானவர் அவளுக்குள்ளே நீங்காமல் இருந்தும்
(சங்கீதம் 51:11), குளிக்கும்
பெண்ணின் அழகில் மயங்கி அவளை கூப்பிட்டனுப்பி மாற்றான் மனைவி என அறிந்தும்
விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4)- ஆவியானவர்
கண்டித்து உணர்த்தாமல் என்ன பண்ணீட்டிருந்தார்? -சிம்சோனை
ஆவியானவர் ஏவ தொடங்கினார்(நியாயாதிபதிகள் 13:24-25), அதன் பின்
பிலிஸ்திய பெண்ணின் அழகில் மயங்கி காதலில் விழுந்தார் (நியாயாதிபதிகள் 14:1-3), இந்த காதல் தேவனது செயல் (நியாயாதிபதிகள் 14:4) இப்படி
ஆவியானவரை பெற்ற இத்தகையவர்களே இப்படி இருந்துள்ளனர். இதே ஆவியானவர் இயேசுவின்
மீதும் இறங்கினார் (மத்தேயு 3:16-17), இதன்பின் இயேசுவும் பாவியான பெண்ணிடம் முத்தம் வாங்கி
தலைமுடிகளால் தடாவப்பட்டார்-லூக்கா 7:38. அத்தோடு தன்
இறுதி காலத்தில் தேவன் மீதே நம்பிக்கை இழந்தார். அதாவது என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர் (மாற்கு 15:34, மத்தேயு 27:46) என கதறினார். இதை தீர்க்கதரிசன
நிறைவேற்றம் என சமாளிக்க பார்ப்பார்கள். ஆனால்
தீர்க்கதரிசனம் நிறைவேற்றுவதற்காக பொய்யாக கைவிடாத தேவனை ஏன் கைவிட்டீர் என கேட்டால் தேவன்
மீதே அவதூறு எனும் பாவம் தானே வரும். இதை சமாளிக்க லூக்காவும் யோவானும் இயேசு
அப்படி கதறாமல் என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறேன் என்றும் முடிந்தது என்றும்
கூறியதாக எழுதியுள்ளனர். ஆனால் நபிகளாரோ
இறைவனை ஒருபோதும் நம்பாமல் இருக்கவில்லை. உடன்படிக்கை
எடுக்கும்போது கூட பெண்களின் கைகளை தொடமாட்டார்கள் (புகாரி 7214) ஆக உண்மையான
பாவிகள் யார்? |
|
இறைவன்
தேர்வு செய்த நபி முதலாவது பாவமன்னிப்பு தேடி முன்மாதிரியாக இருக்க வைத்து
எமக்கு நல்வழி காட்டுவதாக குர்ஆன் உள்ளது. பைபிளிலோ
ஆவியானவர் வந்த பின்பே மோசே தாவீது சிம்சோன் பரிசுத்தவான்கள் பாவம் செய்தனர். ஆக
இதே ஆவியானவர் தூண்டி எழுதியதாக நம்பப்படும் பைபிள் வழிகாட்டுவதாக அமையுமா? |
No comments:
Post a Comment