நல்வழி காட்டும் வேதம் குர்ஆனா? பைபிளா? YDM vs Rashad Khalifa Group 2

 


முந்தைய பாகம் part 1

29.குர்ஆன் நிர்ப்பந்த நிலையில் பொய் சொல்ல அனுமதிப்பதாகவும் (குர்ஆன் 16:106), பைபிளோ பொய்யர்கள் நரகம் போவதாகவும் (வெளி 21:8) கூறுகிறது . சாகும்வரை உண்மையாக இருக்குமாறு வெளி 2:10 கூறுகிறது

-பொதுவாக இஸ்லாம் பொய்யை பெரும் பாவமாகவே கருதுகிறது (முஸ்லிம் 144, புகாரி 6919)

-பொய் பேசி பொய்யை பரப்புபவனுக்கு நரகத்தில் வாய் கிழிக்கப்படும் தண்டனை வழங்கப்படுவதை நபிகளார் கண்டார்கள் (புகாரி 7047)

-ஆனால் மார்க்கத்தை விடுமாறு வேதனை செய்வதை தாங்கமுடியாத நிலையில் உள்ளவருக்கு வாயளவில் மார்க்கத்தை மறுத்துக்கொள்ளும் சலுகையை இறைவன் தன் கருணையின் காரணமாக வழங்கியதே குர்ஆன் 16:106 கூறுகிறது

இதை விமர்சிப்பது தற்குரித்தனமும் கயமையுமே ஆகும்.

-பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்கின்றார் பவுல் - 2 தெசலோனிக்கேயர் 2:11-12

-பொய் சொல்லும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்து ஆகாபை கொன்றார் (1 இராஜாக்கள் 22:19-23)

-பரிசுத்த ஆவியானவர் தாவீதின் மீது இறங்கிய பின்னர் (1 சாமுவேல் 16:13& சங்கீதம் 51:11), பைத்தியகாரனை போல பொய்யாக நடித்தார் (1 சாமுவேல் 21:13-15), ராஜாவின் மக்களையே கொள்ளையடித்து மக்களை பெண்களோடு சேர்த்து கொன்று யூதர்களை கொள்ளையடித்ததாக பொய் சொன்னார் (1 சாமுவேல் 27:9-12).

இப்படி செய்த தாவீதை உரியாவின் மேட்டரை தவிர வேறு பாவமே செய்யாமல் கர்த்தரின் பார்வையில் சரியாக நடந்தான் என்கிறது 1 இராஜாக்கள் 15:5.

இப்படி பொய் சொல்லி எதிரிகளை ஏமாற்றுவதை தேவனே செய்துள்ளார். தேவனது ஆவியை பெற்ற தாவீதும் செய்துள்ளார். தேவன் இனியும் செய்வார்.

ஆனால் வெளி 21:8 கூறும் பொய்யர்கள் இந்த பொய்யர்கள் அல்ல.. மாற்றுமத பொய்யர்கள். வெளி 2:10 கடவுளை ஏமாற்ற பார்க்காமல் உண்மையாக இருப்பதையே கூறுகிறது. மாற்றுமதத்தவர்களை அல்ல... அதனால் தான் தேவனே வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12

இறைவன் தன் கருணையால் , நிர்ப்பந்திக்கப்படும் மனிதனிற்கு வாயளவில் சத்தியத்தை மறுத்துக்கொள்ள கருணை காட்டினான். தாங்க முடியாத சுமையை அவன் மேல் சுமத்தாமலிருப்பது நல்வழி அல்லாமல் வேறென்ன?

ஆனால் பைபிளிலோ கர்த்தரே வஞ்சகத்தை அனுப்புவார் என்றும் பொய் சொல்லும் ஆவியை அனுப்பியதாகவும் தாவீதே பரிசுத்த ஆவி பெற்ற பின் நடித்து பொய் பேசியதாகவும் பைபிற் தான் கூறுகிறது.

 

30.முஃமினல்லாதோரை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள கூடாது நிர்ப்பந்த நிலையில் இது கூடும் (குர்ஆன் 3:28) என்பதும் விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுக்கு கனிவுடனும் காஃபிர்களுடன்  கண்டிப்புடனும் இருப்பார்கள் (5:54) குறித்து, எங்கு சென்றாலும் கொல்லப்படுவார்கள் பிடிக்கப்படுவார்கள் (குர்ஆன் 33:61),

-முஸ்லிம்களோடு யுத்தம் செய்யாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்யலாம்- குர்ஆன் 60:8

-அத்தகைய உறவினரை சேர்த்துக்கொள்ளலாம், உறவை பேணி வாழலாம்-புகாரி 5978-5979, 5981, 5990

-நட்பு பாராட்ட கூடாது என்பதற்கான காரணம்- எதிரிகள் தமக்கு சக்தி கிடைக்கும் போது நட்பையோ உறவையோ பேணமாட்டார்கள். தீங்கிழைப்பதில் குறைவைக்கவும் மாட்டார்கள் . பொதுவாக முஸ்லிம்களும் காஃபிர்களாக ஆகிவிட வேண்டும் என விரும்புவார்கள்(குர்ஆன் 60:2)

சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள் (குர்ஆன் 2:217)

நண்பர்களாக எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தம் இரகசியங்களை அவர்களிடம் கூற, அது பாதிப்பில் முடியும் (குர்ஆன் 60:1)

ஆக இத்தகைய தற்காப்பு நிலையில் அவர்களோடு நட்பு பாராட்டுவது அவர்களது பிழைகளை ஆதரிப்பதாக அமையும்.

ஆனாலும் அவர்களில் முஸ்லிம்களுக்கு எதிராக தீங்கிழைக்காதோருக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை (குர்ஆன் 60:8)

-அத்தோடு அவர்களின் உலக நலவுக்காகவும் நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம். நபிகளார் அவ்வாறு செய்தார்கள்-புகாரி 6397,4774

-அவர்களோடு வியாபாரம் செய்யலாம். அவர்களிடம் கடன் வாங்கலாம்- நபிகளார் மரணிக்கும் போது யூதரிடம் கடன் வாங்கி தன் கவசத்தை அடைமானம் வைத்திருந்தார்கள்-புகாரி 2916,2068,2096

*அவர்களுக்கு மாற்றம் செய்வதன் நோக்கம், நிராகரித்த மக்களுக்கு ஒப்பாக இருக்க கூடாது என்ற நோக்கில் தான். இல்லாவிட்டால் அவர்களை போலவே முஸ்லிம்களும் வழிதவறி போவார்கள்

அவர்களின் மீது சுமக்க முடியாதவற்றை சுமத்தி அவர்களின் உரிமைகளை பறித்தால் அத்தகையோருக்கு எதிராக நானே வழக்காடுவேன் என நபிகளார் கூறியுள்ளார்கள் அபூதாவூத் 3052.

அவர்களை அடிமைகளை போல நடத்துக்கூடாது என்றே இஸ்லாம் கருதுகிறது. அதனால் தான் புகாரி 3052 இற்கு இதே தலைப்பை இடுகிறார்.

அத்தகையோரை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் புகாரி 3166

-குர்ஆன் 33:61 முஸ்லிமாக நடித்துக்கொண்டு குழப்பத்தை உண்டாக்கிக்கொண்டிருப்போருக்கான எச்சரிக்கையே அது. ஆனாலும் அத்தகைய நயவஞ்சகர்கள் அப்படி கொல்லப்படவில்லை

-அவர்களோடு கண்டிப்பாக நடக்காமல் கனிவாக நடந்தால் , அவர்கள் செய்யும் செயல்களை ஆதரிப்பதாக அமையும்.

ஆனாலும் அவர்களுக்கு  அவர்கள் யுத்தம் செய்யாதபோது நலவு செய்வதை இஸ்லாம் தடுக்கவில்லை -குர்ஆன் 60:8

-தப்பான கொள்கையுடையவனுக்கு வாழ்த்து சொல்லவோ வீட்டுக்கு எடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அவர்களின் பாவங்களில் பங்காளியாக ஆவாய் (2 யோவான் 1:10-11)

2 யோவா 1:10-11 IRVTam

[10] ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். [11] அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

https://bible.com/bible/1899/2jn.1.10-11.IRVTam

-சிலைவணங்கியை விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து, அத்தகைய உறவினரோடு பழகவோ கூட்டாக உண்ணவோ கூடாது  அவனை துரத்திவிட வேண்டும்.(1 கொரிந்தியர் 5:11,13)

1 கொரி 5:11, 13 IRVTam

[11] நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.

[13] வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

https://bible.com/bible/1899/1co.5.11-13.IRVTam

-மாற்றுமதத்தவர்களை விட்டு வெளியேறி பிரிந்துவிட வேண்டும் (2 கொரிந்தியர் 6:17

2 கொரி 6:17 IRVTam

[17] எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

https://bible.com/bible/1899/2co.6.17.IRVTam  

இது அவர்களிடம் அதிகாரம் இல்லாத போது கூறப்பட்டவை

 

ஆனால் பழைய ஏற்பாட்டில் அவர்களுக்கு அதிகாரம் இருந்தபோது நலவு நாட கூடாது என்றும் துரத்திவிட வேண்டும் என்றும் கூறுகிறார் கர்த்தர்:

எஸ்றா 9:12 IRVTam

[12] ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

https://bible.com/bible/1899/ezr.9.12.IRVTam

-மாற்றுமதத்தை ஏற்றுக்கொள்ளாத படிக்கு அவர்களை கொன்று போட்டு விடுமாறும் சொன்னார்:

உபாகமம் 20:16-18 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். [18] அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

https://bible.com/bible/1899/deu.20.16-18.IRVTam  

இஸ்லாம் முஸ்லிம்கள் வழிதவறாதபடிக்கும் முஸ்லிமல்லாதோர் நேர்வழி அடையும்படிக்கும் இவ்வாறு சட்டங்களை கூறுகிறது. பைபிளோ அவர்களை அழித்து நரகத்தில் அனுப்ப வழிகாட்டுகிறது

 

31.யூதர்களை விசுவாசிக்குமாறு எச்சரிக்கை செய்வது (4:47)

யூதர்கள் விசுவாசிக்காவிட்டால் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள். அவ்வாறு ஆக கூடாதிருக்கும்விதமாக குர்ஆன் அவர்களை எச்சரிக்கிறது.

அதாவது விசுவாசிக்காவிட்டால்,  முகங்களை மாற்றி அவற்றை திருப்பிவிடுவதற்கு முன்பே அல்லது சனிக்கிழமைவாசிகளை சபித்தது போல சபிக்க முன்பே விசுவாசிக்குமாறு கட்டளையிடுகிறது.

முதலாவதின்படி விசுவாசிக்காவிட்டால், இறைவன் முகத்தை திருப்பி விடுவதால் இனி விசுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். இரண்டாவதின்படி அவர்கள் உருமாற்றப்பட்டு அழிக்கப்பட்டவர்களை போல சபிக்கப்படுவார்கள்.

ஆனாலும் அவர்கள் யுத்தம் செய்யாதபோது உலகப்பிரகாரமாக அவர்களை தண்டிக்கவில்லை ..

பைபிளிலே வேறு கடவுளை வணங்கினால் யூதர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றும் ஊராக சேர்ந்து வேறு கடவுளை வணங்கினால் ஊரையே கொளுத்தி மக்களை வெட்டிப்போட வேண்டும் (உபாகமம் 13:6-10& 13:12-16)

அத்தோடு சொந்த பிள்ளைகளின் இறைச்சியை சாப்பிட வைப்பேன் என்றும் எச்சரித்தார் (உபாகமம் 28:54-55)

மாற்றுமதத்தவர்களை உயிரோடு வைத்தால் அவர்கள் வழிகெடுப்பார்கள் என கூறி அவர்களை மூச்சு விடும் எதையும் உயிரோடு விடாமல் கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார் உபாகமம் 20:16-18

இத்தகைய எச்சரிப்புகள் ஓகேயா?

இஸ்லாம் நேர்வழிக்கு வரும்படி அதை அறிந்துகொண்டே மறுத்த யூதர்களை எச்சரிப்பதே அது. அதாவது அதுவும் நல்வழிகாட்டலே

 

32.சூரியனும் சந்திரனும் அதன் சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக்கிறது (குர்ஆன் 36:40) அவர்களது மொழிபெயர்ப்பு , கஃபாவை முன்னோக்கி தொழுவது அறிவியல் படி சாத்தியமில்லை என உருட்டல்

-சூரியனும் சந்திரனும் அதன் சுற்றுப்பாதையில் நீந்துகிறது (குர்ஆன் 36:40) , அதாவது இயங்குகிறது.  ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் 36:38 கூறுகிறது. அதாவது அவை இயங்குகிறது என்றும் அதன் சுற்றுப்பாதையில் இயங்குகிறது என்றும் சொல்கிறது.

இது நடைமுறையில் பாரிய உண்மைகளில் ஒன்றே.

-கஃபாவை நோக்கி தொழுவதென்பது அதன் நேரடி பயணப்பாதையின் திசையையே குறிக்கிறது. தொடலி திசையில் வரையும் நேர்கோடு என சொல்லப்படவில்லை.. ஏனெனில் பூமியில் மேடு பள்ளம் எப்போதும் இருந்தவொன்றே. அப்போது பள்ளத்தில் இருப்பவர் மேலே நோக்கியும் மேட்டில் இருப்பவர் கீழே நோக்கியும் தொழவில்லை... எல்லோரும் நேராக நின்றே தொழுதனர். இப்போதும் அப்படியே செய்கிறார்கள்.

சூரியனுக்கு வானத்தில் கூடாரம் செய்து வைத்திருப்பதாக சங்கீதம் 19:4 கூறுகிறது.

அதாவது சூரியன் மறையும்போது கூடாரத்திற்குள் போய்விடும். மறுநாள் வெளியே வரும். இது தான் அறிவியல்

அத்தோடு பகலையும் அதன் வெளிச்சத்தையும் முதலாம் நாளிலே படைத்த தேவன் பகல் உண்டாக காரணமான சூரியனை நான்காவது நாளில் படைத்தார் -ஆதியாகமம் 1:3-5. & 1:14-16

பூமி அந்தரத்தில் தொங்குகிறது (யோபு 26:7). பூமி தண்ணீரில் மேல் மிதந்துகொண்டிருக்கிறது (சங்கீதம் 136:6)

இப்படி அறிவுப்பூர்வமாக பைபிள் அநேக காரியங்களை நிரூபிக்கிறது.

அறிவியல் இருப்பதால் நல்வழிகாட்டுவதாக அர்த்தம் என எப்படி எடுத்தனர்? அப்படி பார்த்தாலும் குர்ஆன் சரியாக காட்டும்போது பைபிள் தப்பாக காட்டுகிறது

 

33.விந்து விலாவுக்கும் முதுகுக்கும் இடையிலிருந்து வெளிப்படுவது (86:5-7)

விந்து விதைப்பையில் உள்ள விதைகளில் உண்டாகினாலும் விதைகள் உண்டாகும் இடம் முதுகுக்கும் விலாவுக்கும் இடையிலுள்ள இடத்திலே ஆகும். குழந்தை பிறக்கும் தருவாயில் படிப்படியாத விதைப்பையினுள் இறங்கியிருக்கும்.

ஆக விந்து வெளிப்படும் இடமாக விதை உருவாகும் இடத்தையே குர்ஆன் கூறுகிறது. இது அறிவியல் ரீதியாக உண்மையும் ஆகும்.

 

 

 

34.தண்ணீர் ஆழத்திற்கு சென்றால் யார் கொண்டுவருவார் (67:30) அறிவியல் பிழை என உருட்டல்

தண்ணீர் கடவுளால் மட்டுமே கொண்டுவரக்கூடிய படைப்புகளால் கொண்டுவர முடியாத அளவு ஆழத்திற்கு சென்றுவிடுவதையே குறிக்கிறது.

ஏனெனில் கிணறுகள் தோண்டி நீர் எடுக்கும் வழமை அன்றும் இருந்துள்ளவொன்றே.

இங்கே கடவுளின் அருளை சொல்லிக் காட்டுவதாக இவ்வசனம் உள்ளது.

 

35.மலைகளை குறித்து பூமி உங்களுடன் அசைந்துவிடாதிருக்கும்பொருட்டு நிலைப்படுத்தும் மலைகளை ஆக்கியிருப்பதாக 16:15, மலைகளை பூமியில் போட்டோம் 50:7

மலைகள் பூமித் தட்டுகள் ஒன்றையொன்று நோக்கி நகர்ந்து மோதுவதனால் உண்டாவதாக அறிவியல் சொல்கிறது.

அதை செய்வித்தவன் இறைவனே என்பதாலேயே அவ்வாறு கூறப்படுகிறது

பூமித் தட்டுகள் முளைகள் (குர்ஆன் 78:7) போல் மலைகளால் இணைக்கப்பட்டு சடுதியான நகர்விலிருந்து பாதுகாக்கிறது

 

36.ஏசாயா 9:6 கடவுள் மனுசனாக வருவார் என சொல்கிறதாம். ஆனால் சிலைவணங்கிகள் படைப்புகளை வணங்குவதாக ரோமர் 1:23 உருட்டல்

இவ்வசனம் இயேசுவை குறிப்பதாக எந்த புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் குறிப்பிடவில்லை.  அது இயுசுவை குறிக்கும் என கருதியிருந்தால் குறிப்பிட்டிருப்பார்களே.

ஆகவே இதை இயேசுவை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் வாதிட கூடாது. காரணம் ஆவி தூண்டி எழுதியதாக நம்பும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் கண்ணுக்கு இவ்வசனத்தை தேவன் மறைத்திருப்பாரா என்ன?

-மத்தேயு கூட இயேசு ஊரு விட்டு ஊரு வந்து வசிப்பதற்காக இவ்அதிகாரத்தின் ஆரம்பத்தை குறிப்பிட்டார். அவர்கூட இவ்வசனம் (9:6) இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனம் என்பதை குறிப்பிட இயலவில்லை.

-அடுத்ததாக இவ்வசனம் இறந்த காலத்திலேயே இருக்கிறது. இதை எழுதும் காலத்திலேயே அக்குழந்தை பிறந்து விட்டான் . அவன் தான் எசேக்கியா ராஜா. இது எதிர்காலத்தை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களே பார்க்காத போது கிறிஸ்தவர்கள் எப்படி இதை இயேசுவை குறிப்பதென்று வாதிடமுடியும்?

-அந்த நபர் பிறப்புள்ள குழந்தை ஆவான். குழந்தை என்பது கடவுள் தன் படைப்பாகிய பெண்ணின் வயிற்றில் படைக்கும் படைப்பு ஆகும். அத்தகைய நபருக்கு தெய்வீகத்தில் எந்த பங்கும் இல்லை.

 

-அக்குழந்தைக்கு நான்கு பெயர்கள் சூட்டப்படும் என்று கூறப்படுகிறது. யாராவது பெயரை மொழிபெயர்ப்பு செய்வார்களா? உதாரணமாக ஆங்கிலத்தில் Mr.Black என்பவதை திரு.கறுப்பன் என மொழிபெயர்க்க முடியுமா?  ஒரு மொழியில் பெயர் எதுவோ அது தான் மற்ற மொழியிலும் பெயர்.

-அக்குழந்தைக்கு நான்கு கூறப்பட்ட நான்கு பெயர்களில் இரண்டு தெய்வீகப்பெயராக இருப்பதால் (எல்கிப்போர்-வல்லமையுள்ள தேவன் & அபிஆட்-நித்தியதகப்பன்) , அது தெய்வக் குழந்தை என கிறிஸ்தவர்கள் வாதிடுகிறார்கள்.  ஆனால் எந்த புதிய ஏற்பாட்டு ஆசிரியரும் இதை அப்படி பார்க்கவில்லை.

-பைபிளில் நபருக்கோ இடத்திற்கோ பொருளுக்கோ தெய்வீக பெயர்கள் இடப்படும் வழமை உள்ளது. அது சூட்டப்பட்டவர்களையோ அல்லது சூட்டப்பட்டவைகளையோ வர்ணிப்பவை அல்ல. மாறாக தேவனை வர்ணிப்பதும் தேவன் செய்யப் போவதை வர்ணிப்பதும் ஆகும்.

உதாரணமாக யாக்கோபு ஒரு பலிபீடத்திற்கு எல்எலோஹேயிஸ்ராஎல் - இஸ்ரேலின் வல்லமையுள்ளதேவன் என்றும் இன்னொரு பலிபீடத்திற்கு எல்பெத்தேல்-பெத்தேலின் தேவன் என்றும் பெயரிட்டார்-ஆதி 33:20,35:7

எருசலேமுக்கு யாஹ்வே_ட்ஸித்கேனு- நம் நீதியான யாஹ்வே(கர்த்தர்) என்று சொல்லப்படும் என்று எரேமியா 33:16 கூறுகிறது .

இதுபோன்றே யோதாம்-கர்த்தர் பரிபூரணர் அதுபோன்ற பல பெயர்கள் மனிதர்கள் சூட்டப்பட்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் கடவுளை வர்ணிப்பதாகவே அமைகிறது. அந்த குறித்த நபரையோ அல்லது குறித்த பொருளையோ வர்ணிப்பவை அல்ல.

ஆகவே இந்த நபர் தேவன் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. குறிப்பாக அது இயேசு என்பதற்கும் சான்று இல்லை.

-ஒரு பேச்சுக்கு இது அந்த நபரை வர்ணிப்பதாக அமைய வேண்டுமாயின் , அவரது நாமம்(பெயர்) என்பதற்கு பதிலாக அவர் இப்படி இருப்பார் என்று அடைமொழியாக இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி இல்லை.

 

-அடுத்ததாக, அவை அந்த நபரை குறிப்பதாக இருக்கும்பட்சத்தில் (அதாவது இவை பெயர் அல்ல என்றும் அவருக்கான அடைமொழி என இருக்கும்பட்சத்தில்), இதன் அர்த்தம் மாறிவிடும்.

உதாரணமாக

-தேவன் (எலோஹிம்) உலகத்தை படைத்ததாக ஆதி 1:1 சொல்கிறது. ஆனால் மோசேயை குறித்து பார்வோனுக்கு தேவன் (எலோஹிம்) என்றும் ஆரோனுக்கு தேவன் (எலோஹிம்) என்றும் தேவன் ஆக்கியதாக யாத் 4:16,7:1. அதே தேவன் தன்னை தவிர வேறு தேவன் (எலோஹிம்) இல்லை என்கிறார் (ஏசாயா 45:5).

இதிலிருந்து மோசே தான் ஒரே தேவன் என்று வாதிட முடியுமா?

முடியாது. காரணம் மோசே மனிதன் என்பதால் அதிகாரம்கொடுக்கப்பட்ட நபர் என்ற அர்த்தத்தில் அவரை வர்ணிக்கிறது. ஆனால் தேவனை வர்ணிக்கும் போதோ அவரை கடவுள் என்ற அர்த்தத்தில் வர்ணிக்கிறது.

-அதுபோன்றே எல்கிப்போர்-வல்லமையுள்ள_தேவன் என்பது தேவனை குறிக்கும் போது அவர் கடவுள் என்ற அர்த்தத்தில் வர்ணிக்கிறது. ஆனால் அதுவே ஒரு மனிதருக்கு/பெண் பெற்றெடுத்த குழந்தைக்காக பாவிக்கப்படும்போது வல்லமையான பராக்கிரமசாலி என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படுகிறது. இது என் சொந்த உருட்டு அல்ல.

மாறாக இவ்வாறே கிறிஸ்தவர்களும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்."”

  — Ezekiel         32:21 (TBSI)

எசேக்கியேல் 32:21 இல் இதே "எல்கிப்போர்-வல்லமையுள்ள தேவன்" என்பதன் பன்மைச்சொல் "எலே-கிப்போரிம்- வல்லமையுள்ள தேவர்கள்" என்பது கொல்லப்பட்ட நபர்களை குறித்து பேசுகிறது. இங்கே பராக்கிரமசாலிகளில் வல்லவர்கள் என மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

ஆகவே எல்கிப்போர் என்பது பிறந்த நபர்களை குறிக்கும் போது அவர்களுக்கு தெய்வீகத்தை நாடாது.

-அடுத்தது அபிஆட் என்பது நித்தியபிதா என்பதாகும்.  இதிலுள்ள ஆட் (עד) என்பது மனிதனோடு சம்பந்தப்பட்டு வரும்போது நீண்ட ஆயுளை அல்லது ஆயுட்காலத்தை குறிக்கும். என்றென்றும் உண்டான நித்தியத்தை அல்ல.  இதுவும் என் சொந்த உருட்டு அல்ல.

உதாரணமாக சங் 61:8இல் தாவீது கர்த்தரின் நாமத்தை என்றென்றும் (ஆட்) கீர்த்தனம் பண்ணுவேன் என்கிறார்.  இது தாவீதின் ஆயுள் உள்ளவரைக்குமான காலத்தை குறிக்கிறது. காரணம் இறந்தவர்கள் கர்த்தரை துதிப்பதில்லை என்கிறது பைபிள்

இதேபோல் சங் 89:29, 112:3,9, 119:44,

132:12, 145:1, 148:6, நீதிமொழி 29:14, ஆகியவற்றிலும் இதுபோன்று பாவிக்கப்படுகிறது.

ராஜாக்கள் ஆசாரியர்கள் அந்த ஜனத்தின் தகப்பர்கள் என்று கூறப்படுகிறது. உதாரணமாக ஏசாயா 22:20-21

அந்த அடிப்படையில் இந்த நபர் நீண்ட ஆயுளுள்ள தகப்பன் அல்லது ஆயுளுள்ளவரை தகப்பனாக இருப்பான் என்பதாகும்.

மற்றபடி இதில் தெய்வீகம் கிடையாது.

 

ஆகவே கடவுள் மனிதனாக பிறப்பார் என்பதற்கோ கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதற்கோ இது ஆதாரம் கிடையாது..

 

37.குர்ஆன் 2:230 விவாகரத்து சட்டத்தை கேவலமாக பேசினர்

-விவாகர்த்து செய்வதும் சேர்த்துக்கொள்வதுமாக  மனைவி பழிவாங்கப்படாமல் இருப்பதற்காக ஆண்களுக்கான விவாகரத்து செய்து மீண்டும் சேர்த்துக்கொள்ளும் உரிமையை இரண்டு தடவையே இஸ்லாம் வழங்கியுள்ளது.

இல்லாவிட்டால் அவளோடு வாழாமலும் அவளை வாழவிடாமலும் இருப்பதற்காக விவாகரத்து செய்வதும் அவளது காத்திருப்புக்காலம் முடியும்போது மீண்டும் சேர்த்துக் கொள்வதும் பிறகு மீண்டும் விவாகரத்து செய்வதும் என தொடர்ந்து செய்து அவள் பாதிக்கப்படாது இருக்கும்படி இத்தகைய சட்டத்தை இஸ்லாம் வழங்கியது.

மூன்றாம் தடவை விவாகரத்து செய்துவிட்டால் அவளோடு மீண்டும் சேரமுடியாது. அவள் வேறு திருமணம் முடித்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு அவளுடைய இரண்டாம் கணவனும் விவாகரத்து செய்தால் அதன் பின் வேண்டுமானால் முதல் கணவருக்கு இவளை திருமணம் முடிக்க முடியும் அவளுக்கு சம்மதம் இருந்தால்.

முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076)

 

பைபிள் கற்பழிப்பையே திருமணம் முடிப்பதற்கு சட்டமாக கொடுத்துள்ளது-

உபா 22:28-29 IRVTam

 

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam

இதை வச்சுக்கிட்டு இஸ்லாத்தை விமர்சிக்கலாமா?

விபச்சாரம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்றும் சாதாரணமாக விபச்சாரம் செய்வது விபச்சாரம் என்கிறார் இயேசு- மத்தேயு 19:9. இருதய கடினத்திற்காக மோசே இதை அனுமதித்தார் என்கிறார் இயேசு- மத்தேயு 19:8

அப்படியானால் விபச்சானத்தையே அனுமதித்தது எப்படி சரியாகும்?

 

பெண்கள் விவாகரத்து மூலம் பழிவாங்கப்படாமல் இருப்பதற்கான ஒரு சட்டமே இது. ஆகவே குர்ஆன் நல்வழிகாட்டுவதாகவே உள்ளது.

பைபிளோ கற்பழிக்கவும் வழிகாட்டுகிறது

 

38.அப்போஸ்தலர் 5:3-4 பரிசுத்த ஆவியை கடவுள் என கூறியிருப்பதாகவும் லூக்கா 2:10-11 இதே இயேசுவை கர்த்தர் என சொல்லியிருப்பதாகவும் உருட்டல்

அப்போஸ்தலர் 5:3-4 இலே பேதுருவிடம் பொய் சொன்னதை தான் பரிசுத்த ஆவியிடம் பொய் சொன்னாய் என்றும் தேவனிடம் பொய் சொன்னாய் என்றும் கூறப்படுகிறது

அப் 5:3-4 IRVTam

[3] பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? [4] அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

https://bible.com/bible/1899/act.5.3-4.IRVTam

பரிசுத்த ஆவியை பெற்றவனிடம் பொய் சொல்வது பரிசுத்த ஆவியிடம் பொய்சொல்வதும் பரிசுத்த ஆவியிடம் பொய் சொல்வது அதை கொடுத்த தேவனிடம் பொய்சொல்வதுமாகும் என்பதே இதன் அர்த்தம்....  பரிசுத்த ஆவியை எங்கேயும் தேவன் என கூறப்பட்டதேயில்லை!

-இயேசுவை கர்த்தர் (lord ) என லூக்கா 2:10-11 கூறுவதன் விளக்கம் அப்போஸ்தலர் 2:36 இலே உள்ளது.

அப்போஸ்தலர் 2:36 IRVTam

[36] ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று (Lord) இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.

https://bible.com/bible/1899/act.2.36.IRVTam

அதாவது தேவன் தான் இயேசுவை கிறிஸ்துவாகவும் ஆண்டவராகவும் ஆக்கியவர்.

ஆண்டவராக ஆக்கப்பட்டவர் தேவனல்ல.. ஆக்கியவரே தேவன்.

 

39குர்ஆன் 23:14 அல்லாஹ்வை படைப்பாளர்களில் சிறந்தவன் என்கிறதால் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் என்றும் குர்ஆன் 112:3 யாரையும் பெறவும் பெறப்படவுமில்லை என கூறினாலும் அல்லாஹ் வாரிசாக ஆவான் என குர்ஆன் 15:23,21:89,3:180)

*சகலத்தையும் படைத்தவன் அல்லாஹ்வாகிய ஒரே இறைவன் (குர்ஆன் 6:102, 13:16,39:62, 40:62).

*அவனது படைப்புகளின் செயல்களை படைப்பவனும் அவனே (37:96).

*அவனுடைய படைப்புகளில் அவனுடைய அனுமதியால் படைப்பவர்கள் இருப்பார்கள். உதாரணமாக வாகனங்களை படைப்பார்கள்,கட்டிடங்களை உண்டாக்கும்வர்கள், இயந்திரங்களை உண்டாக்குவோர் இருப்பர். இப்படி படைக்கும் படைப்பாளர்களில் இறைவனே அழகான படைப்பாளன் என்கிறது குர்ஆன். அத்தோடு அவர்களது செயல்களை படைப்பவனும் அவனே (37:96)

-இறைவன் வாரிசாக ஆவான் என்பது, ஆரம்பத்தில் அல்லாஹ் மட்டுமே இருந்தான் (புகாரி 3191), உலகத்திலுள்ள அனைவரும்  அழிந்து போவார்கள் (குர்ஆன் 55:26).. இறைவன் மட்டுமே எஞ்சுவான்.(முஸ்லிம் 5375-5377) அவனுக்கே உரியதாக அனைவரும்  மரணித்தவர்களாக போய்விடுவார்கள் என்பதையே குறிக்கிறது.

அனைத்தையும் படைத்தவனும் அவனே (குர்ஆன் 6:102), அனைத்தும் அவனுக்கே உரியன (குர்ஆன் 2:284, 3:109,129...), அவனிடமே அனைவரும் மீள்பவர்கள் (3:83,5:18,10:56). அதனால் இறுதியில் அவனே உரிமை கொள்வான். வாரிசாக ஆவான்.

 

 

பைபிளிலோ, வானத்திலும் பூமியிலும் பலதேவர்கள் இருந்தாலும் நமக்கு பிதாவாகிய ஒரே தேவன் இருக்கிறார் என்கிறார் பவுல் -1 கொரிந்தியர் 8:5-6).. இப்படி பல தேவர்களில் ஒருவராக தான் பிதாவை பைபிள் தான் சொல்கிறது - இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு தேவனே கிடையாது (குர்ஆன் 2:163,255.…..)

 

குர்ஆன் சகலத்தையும் படைத்தவன் அல்லாஹ் என்றும் அவனது படைப்புகளிலும் படைப்பவர்கள் இருப்பர்.  அதுவும் அவனது படைப்புகளே. அதனால் தான் படைப்பாளர்களில் சிறந்தவன் என்கிறது. இறுதியில் அனைவரும் அழிந்து  அனைத்தும் இறைவனிடமே எஞ்சியிருப்பதால் அவனே வாரிசு என்கிறது

 

பைபிளோ பல கடவுள்களில் கிறிஸ்தவர்களின் ஒரே கடவுள் என பிதா என்கிறார் பவுல்.

 

40.குர்ஆன் 2:230-232 இலே விவாகரத்து செய்வதற்கான காரணம் கூறப்படவில்லை என்றும் ஆனால் இயேசாவோ விபச்சாரம் செய்தாலே தவிர விவாகரத்து செய்ய கூடாது (மத்தேயு 5:32)

விவாகரத்து முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.

விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

அதாவது மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332

அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)

அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்

அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம்.

இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229). ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது.

மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2)

மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது

மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20)

அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ). அதற்காக அவள் காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.) கண்டிக்கப்ப

மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)

அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்..

அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை  கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)

தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236).

இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)

*விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில் சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது.

 *இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள். ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது.

1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)

2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)

3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.

4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.

5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே

இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்!

இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம். ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)). தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும்.

தோராவில் விவாகரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது (உபாகமம் 24:1-3).. ஆனாலும் அதை கர்த்தர் வெறுக்கிறார் என மல்கியா 2:16 என்கிறார். ஆனால் தடை செய்யவில்லை காரணம் தோரா அனுமதித்துள்ளது.. ஆனால் புறஜாதி மாற்றுமதப்பெண் என்றால் அது ஓகே (எஸ்ரா 10:3,11)

ஆனால் புதிய ஏற்பாடு எந்த காரணத்துக்காகவும் விவாகரத்து செய்வதை தடுக்கிறது. குடிச்சுட்டு வந்து அடித்தாலும், ஆண்மை இல்லாதிருந்தாலும்,  கஞ்சா கடத்துபவனாக இருந்தாலும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தாலும் இதே நிலை தான்.

அத்தோடு விவாகரத்து செய்ய விரும்புபவனுக்கு தன் மனைவி மீது விபச்சார அவதூறு சொல்வதற்கும் வழியாக இது அமைகிறது.

காரணம் கூறப்பட்டால் விவாகரத்து செய்ய அனுமதி இருக்கும்போது மட்டுமே அவர்களது மானம் பாதுகாக்கப்படும்.

விவாகரத்திற்கு காரணம் கேட்காதது ஆண் பெண் தரப்பின் மானத்தை பாதுகாப்பதாகவும் குறைகளை மறைப்பதாகவும் உள்ளது. அத்தோடு இதனால் பெரு நலவுகளே உள்ளன

ஆனால் பைபிளோ விபச்சாரம் செய்தால் தவிர விவாகரத்து செய்ய கூடாது என்பதன் மூலம் விவாகரத்து செய்ய விரும்புபவனுக்கு தன் துணையின் மீது அவதூறு கூறி மானத்தை வாங்க வழியாக உள்ளது.

இதிலே எது நல்வழி?

 

41.திருமணத்திற்கு வெளியே வலக்கரம் சொந்தமான பெண்களுடன் தாம்பத்யம்

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது.

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

 

தன் சொத்தாக உள்ள அடிமைப் பெண்ணுடன் தாம்பத்யத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதித்தது. ஆனாலும் அவளை கற்பித்து விடுதலை செய்து திருமணமும் செய்து கொண்டால் இருமடங்கு நன்மை உண்டு என வழிகாட்டுகிறது -புகாரி 97

 

42.ஆது கூட்டம் மீது அனுப்பப்பட்ட காற்று ஒரு நாள் (குர்ஆன் 54:19) என்றும் ஏழு இரவு எட்டு பகல் (69:7) முரண்பாடு என்றனர்

அவர்களுக்கு துர்பாக்கியமான ஒரு நாளில் காற்று அனுப்பப்பட்டது. அது ஏழு இரவு எட்டுப் பகல் தொடர்ந்து வீசியது.  ஒரு நாள் மட்டுமே வீசியது என கூறப்படவில்லை

சொலமோனின் கடல் தொட்டிகள் எவ்வளவு நீர் பிடிக்கும்?

1.இரண்டாயிரம் தண்ணீர் குடம் (1 இராஜாக்கள் 7:26)

1 இராஜா 7:26 IRVTam

[26] அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது 2,000 குடம் தண்ணீர் பிடிக்கும்.

https://bible.com/bible/1899/1ki.7.26.IRVTam

2.மூவாயிரம் தண்ணீர் குடம் (2 நாளாகமம் 4:5)

2 நாளா 4:5 IRVTam

[5] அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

https://bible.com/bible/1899/2ch.4.5.IRVTam

முரண்பாடு ரா இப்படி இருக்க வேண்டும்.

43.இத்தா நான்கு மாதம் பத்து நாட்கள் (2:234), மூன்று மாதங்கள் (65:4)

குர்ஆன் 2:234 கணவன் மரணித்த பெண்ணின் இத்தாவை கூறுகிறது. அது நான்கு மாதமும் பத்து நாட்கள்

குர்ஆன் 65:4 விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் இத்தாவை கூறுகிறது. மாதவிடாய் ஏற்படாதோருக்கும் நின்றுவிட்டவர்களுக்கும் இத்தா மூன்று மாதங்கள்

இதிலே முரண்பாடு எதுவுமே இல்லை. தற்குறித்தனமான வாதமே இது.

முரண்பாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து சொலமோன் ராஜா வரை எத்தனை வருடங்கள்?

-476 வருடம் (ஆலயம் கட்டியது நான்காம் ஆண்டு 480)

1 இராஜாக்கள் 6:1 IRVTam

[1] இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

https://bible.com/bible/1899/1ki.6.1.IRVTam

-570+ வருடங்கள்

அப்போஸ்தலர் 13:17-22 IRVTam

[17] இஸ்ரவேலராகிய இந்த மக்களுடைய தேவன் நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாக வாழ்ந்தபோது அவர்களை உயர்த்தி, தமது வல்லமையுள்ள கரத்தினால் அங்கிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, [18] நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து, [19] கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து, [20] பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார். [21] அதற்குப்பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாக அவர்களுக்குக் கொடுத்தார். [22] பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார்.

https://bible.com/bible/1899/act.13.17-22.IRVTam

40 வருடம் அலைந்து திரிதல்+ 450 வருடங்கள் சாமுவேல் வரை+ 40 வருடம் சவுல் ஆட்சி +பின்பு தாவீது.. அவரும் 40 வருடம் (1 நாளாகமம் 29:27 என பழைய ஏற்பாடு  சொல்கிறது

கூட்டினால்,570 வருடங்கள்.

இதை நியாயாதிபதிகள் கூறும் கணக்குகளோடு பார்த்தால் வேறொரு கணக்கு வரும்.

 

44.விபச்சாரம் செய்தவர்களை வீடுகளில் தடுத்து வைக்க வேண்டும் (4:15), நூறு கசையடி (24:2)

ஆரம்பத்தில் தண்டனை நிறைவேற்றும் சக்தி இல்லாதபோது விபச்சாரம் செய்தால் பெண்ணை வீட்டில் தடுத்து வைப்பார்கள். அவ்வசனத்திலேயே அல்லாஹ் வேறு வழியை கொண்டு வரும்வரை என்பதும் கூறப்படுகிறது:

உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

(அல்குர்ஆன் : 4:15)

மரணிக்கும் வரை அல்லது அல்லாஹ் அப்பெண்களுக்கு வேறு வழியை ஏற்படுத்தும் வரை தடுத்து வைக்குமாறு கூறுகிறது.

இறைவன் ஏற்படுத்திய வேறு வழி தான் குர்ஆன் 24:2

விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

(அல்குர்ஆன் : 24:2)

இதை முஸ்லிம் 3489-3490 (1690) இலே தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ் அப்பெண்களுக்கு ஒரு வழியை உண்டாக்கிவிட்டான் என கூறி, திருமணமானவருக்கு கல்லெறி தண்டனையும், திருமணமாகாதவருக்கு நூறு கசையடி தண்டனையும் கொடுக்கப்படும் என்ற சட்டம் குறித்து கூறியுள்ளார்கள்

 

 

 

 

முரண்பாடுனா எப்படி இருக்க வேண்டும்?

யாக்கோபின் பெயரை இஸ்ரேல் என மாற்றி இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரேல் எனப்படுவாய் என்றார் கர்த்தர்

ஆதி 32:28 IRVTam

[28] அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.

https://bible.com/bible/1899/gen.32.28.IRVTam

இரண்டாம் தடவையாக

ஆதி 35:9-10 IRVTam

[9] யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, அவனை ஆசீர்வதித்து: [10] “இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.

https://bible.com/bible/1899/gen.35.9-10.IRVTam

பிறகு இவரே பெயரை மாற்றியதை மறந்துவிட்டார். யாக்கோபு என அழைக்கப்படாமல் இஸ்ரேல் என அழைக்கப்படுவார் என்று தானே சொன்னார்.

ஆனால் கர்த்தரோ இஸ்ரேல் என அழைக்காமல் யோக்கோபே யாக்கோபே என அழைத்தார்:

ஆதி 46:2 IRVTam

[2] அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்; அவன் இதோ, “அடியேன்” என்றான்.

https://bible.com/bible/1899/gen.46.2.IRVTam

ஆக முரண்பாடுனா இப்படி இருக்க வேண்டும்.

 

45.குர்ஆன் 31:34 அல்லாஹ் கருவறையில் உள்ளவற்றை அறிகிறான்

-அல்லாஹ் வெளிப்படுத்தாமல் எதுவும் யாருக்கும் தெரியாது.

கர்ப்பத்திலுள்ள சிசுவிடம் வானவர் அனுப்பி வைக்கப்பட்டு அவரிடம் அக்குழந்தை பற்றி அனைத்தும் எழுதப்படும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 6595)

மழை பெய்விக்கும் வானவர்களுக்கு இறைவன் கட்டளையிட்ட படி அறிந்துகொள்வார்கள்

உயிரை கைப்பற்றும் வானவருக்கோ மனிதன் மரணிக்க முன் எங்கே மரணிக்க போகிறான் என அறிவிக்கப்பட்ட படி தான் உயிரை எடுப்பார்.

சிலபோது  வானவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு ஜின்கள் சில மறைவானவற்றை அறிந்துகொள்வது போல (புகாரி 7561, முஸ்லிம் 4487 (2229 ஆங்கிலம்)), 

இறைவன்  அறிவிப்பதாலும் உழைப்பு மற்றும் முயற்சியாலும் சிலவற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில்

கர்ப்பப்பையிலுள்ளதை கருவிகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடிய நேரம் வரும் வரை அது ஆணா பெண்ணா கறுப்பா வெள்ளையா என அறியமுடியாது. படைப்பு அதன் பூரண நிலையை அடைந்த பின்பே இதை அறிய முடியும்.  ஆனால் இறைவனுக்கு மட்டுமே படைப்பு முழுமையடைய முன்பே அறிய முடியும். அதாவது இறைவன் வெளிப்படுத்திய பின்னரே ஏனையோருக்கு அறிய முடியும். அப்போதும் கருவிகளால் தவறுகள் ஏற்படவும் முடியும். இக்கருவிகளால் வயிற்றிலுள்ள சிசுவின் எல்லாவற்றையும் அறிய முடியாது . அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவே அதனாலும் முடிகிறது.-- இதுகூட இறைவன் வெளிப்படுத்தியது தான் (மனிதனின் செயல்களை படைப்பவனும் இறைவன் தான்-37:96)

அத்தோடு மழை வருவதை அதன் அடையாளங்கள் மேகங்களின் நகர்வுகளை வைத்து கணிப்பதன் மூலம் ஊகித்து கணிக்க முடியும். ஆனால் பூரணமாக அறிய முடியாது. சிலநேரம் கணிப்பு தவறாகவும் போகலாம்.

ஆகவே அவற்றை பூரணமாக இறைவனை தவிர வேறு யாரும் அறிய முடியாது என்பது உண்மையே. இறைவன் வெளிப்படுத்தும்போதே ஏனையோருக்கு அறிய முடியும்

பைபிள் படி கர்த்தருக்கு எல்லாமே தெரியுமா?

மனிதனை படைத்த போது நல்லதாக கண்டார்

ஆதியாகமம் 1:31 TAERV

[31] தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.

https://bible.com/bible/3154/gen.1.31.TAERV

மனிதன் குழப்பம் பண்ணியதாலும் அவனது எண்ணம் எல்லா காலத்திலும் தீயதாகவும் இருப்பதால் படைத்ததற்காக வருத்தப்பட்டார்

ஆதியாகமம் 6:5-7 TAERV

[5] பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். [6] கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். [7] எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.

https://bible.com/bible/3154/gen.6.5-7.TAERV  

பிறகு அவனது எண்ணம் எப்போதும் தீயது தான் என்பதை உணர்ந்துகொண்டு இனிமேல் அழிக்க மாட்டேன் என முடிவெடுக்கிறார்:

ஆதியாகமம் 8:21 TAERV

[21] கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன்.

https://bible.com/bible/3154/gen.8.21.TAERV  

எப்படி ஞானம்? செமயாக இருக்குல்ல?

 

இதனால் பைபிள் நல்வழி காட்டுவதாகவும் குர்ஆன் காட்டவில்லை என்றாகுமா?

 

46.அல்லாஹ் சதி செய்கிறான் (86:15-16,8:30) பைபிள் சாத்தானை தந்திரமுள்ளவன் (2கொரி2:11,எபே6:11) வஞ்சிக்கிறவன் (2கொரி11:3)

அவர்கள் சதி செய்கிறார்கள். நானும் சதி செய்கிறேன் என்பது இறைவன் அப்பாவிகளுக்கு எதிராக செய்வது அல்ல... சதி செய்பவர்களுக்கு எதிராக அவர்களை இறைவன் தண்டிக்கும் விதமே அது.

அவர்களது சதி முறியடிக்கப்பட்டு, தோல்வியுறச் செய்வதும் தண்டிப்பதையும்  குறிக்கிறது

இறைவன் யாருக்கும் அநீயிழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40)

இது போன்றவற்றில் தனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

 

சாத்தான் வஞ்சிக்கிறவன். தேவன் பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை அனுப்புபவர் (2 தெசலோனிக்கேயர் 2:11-12)

சாத்தான் தந்திரமுள்ளவன். தேவனும் தந்திரமாக ஆகாபை கொள்ளுவதற்காக பொய் சொல்லும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்து தந்திரமாக கொள்ள திட்டமிட்டார்- 1 இராஜாக்கள் 22:19-23

ஆக கண்ணாடியை பார்த்து துப்பிக்கொள்ளவும்.

இவர்கள் வாதப்படி பைபிள் தான் நல்வழி காட்டவில்லை என்றாகும்.

 

47.அல்லாஹ் வழி தவறிச் செய்தவனுக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை (குர்ஆன் 18:17), கர்த்தரது வேதம் வழிகாட்டுகிறது (சங்கீதம் 119:105, நீதிமொழி 8:32) கோணலானவைகளை செவ்வையாக்குபவர் (ஏசாயா 45:2),  தாமதிப்பதன் நோக்கம் எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் (2 பேதுரு 3:9)

இறைவன் ஆத்மாவுக்கு அதன் நன்மையையும் கெடுதியையும் அறிவித்துள்ளான் (குர்ஆன் 91:7-10), மனிதர்களுக்கு வழியையும் காட்டியுள்ளார் (76:3)

அப்படியிருந்தும் தெளிவான பின்பும் தூதருடன் முரண்பட்டு  விசுவாசிகளின் வழியல்லாததை பின்பற்றுகிறானோ அவனை அவன் திரும்பிய வழியிலேயே திருப்பி விடுவோம்-குர்ஆன் 4:115, சத்தியம் தெளிவான பின் அவர்கள் சறுகிய போது அவர்களது உள்ளங்களை அல்லாஹ் சறுகச்செய்தான் (குர்ஆன் 61:5), உங்கள் முகங்களை திருப்பி விடுவதற்கு முன் நாம் இறக்கியதை விசுவாசியுங்கள் (குர்ஆன் 4:47)

இப்படி சத்தியத்தை அறிந்து கொண்டே மறுப்பவனை அத்தகையவன் தேர்ந்தெடுத்த  வழிகேட்டில்  இறைவன் விட்டுவிடுகிறான்.

அப்படி இறைவன் வழிகேட்டில் விட்டவனை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

ஆனால் அவனாக திருந்திக்கொண்டு விசுவாசித்தால் அல்லாஹ் மன்னித்து அவனது பாவங்களையும் நன்மைகளாக மாற்றிவிடுவான் (குர்ஆன் 25:68-70), அவ்வாறு தன் அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் அனைத்து பாவங்களையும் மன்னித்து விடுவான் என்றும் (குர்ஆன் 39:53), மறுமை வரும் முன்னே திருந்தி விடுமாறும் அங்கே வந்து கைசேத்ப்பட வேண்டாம் என்றும் எச்சரிக்கிறான் -குர்ஆன் 39:54-59

அப்படி விசுவாசித்தால் இறைவன் நேர்வழியை அதிகப்படுத்துவான்-19:76.

ஆக விரும்பினால் விசுவாசிக்கலாம். விரும்பினால் நிராகரிக்கலாம். ஆனால் நிராகரித்தால் நெருப்பினால் தண்டனை உண்டு நரகத்தில்- குர்ஆன் 18:29

-கர்த்தர் ஜீவனில்லாத கட்டளைகளை கொடுத்து பிள்ளைகளை நரபலி கொடுக்க வைத்து தீட்டுப்படுத்தினார் - எசேக்கியேல் 20:25-26

-மக்களின் இருதயத்தை கடினப்படுத்தி வழிதப்பிப்போகப்பண்ணினார்- ஏசாயா 63:17, யோவான் 12:40

கர்த்தர் வர தாமதிப்பதே அதிகமான மக்கள் நரகம் செல்வதற்கு காரணமாக இருக்கிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எழுதியுள்ளார் பேதுரு.

கிபி 70இற்கு முன் இயேசு வந்திருந்தால், அவிசுவாசிகள் அப்போது இருந்தது சொற்பமாக இருந்திருப்பார்கள். இப்போதோ அவர்கள் தொடக்கம் இன்றுவரை பல ஆயிரம் மடங்கு அவிசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிய இருக்கிறது. இதன்படி நரகத்தையும் நிரப்பும் அளவுக்கு தாமதிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது

-வேடிக்கையாக இயேசுவின் வாக்குறுதி பொய்யானது என இதனாலே நம்பி அவிசுவாசியாக கெட்டுப்போகிறவர்கள் இன்னும் அதிகரிக்கின்றனர்

-தேவன் அவிசுவாசிகள் விசுவாசிப்பதற்காக பரிசுத்த ஆவியை அவர்கள் மீது அனுப்புவதில்லை.. மாறாக பொய்யை விசுவாசிக்கும்படி வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12

இது தான் தேவன் ஒருவரும் கெட்டுப்போகாதபடி தாமதிப்பது.

 

இது போன்றவற்றில் தனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

 

இவர்கள் வாதப்படி பைபிள் தான் நல்வழி காட்டவில்லை என்றாகும்.

 

48..குர்ஆன் போரிட்டு கொல்லப்படுபவர் சுவர்க்கம் போவர் (4:74) பைபிளோ கொலைகாரன் நரகம் போகிறவன் (வெளி 21:8) கெட்டவர்கள் தான் கொல்லுவார்கள் (யேவான் 16:2-3), சாத்தானே ஆதிமுதல் கொலைகாரன் (யோவான் 8:44), ஏற்காதோரை காலை உதறிவிட்டு செல்ல வேண்டும் (மாற்கு 6:11)

-இஸ்லாம் கொலை செய்வதை பெரும்பாவமாக பார்க்கிறது (குர்ஆன் 17:33, 25:68)

-போர்க்களத்தில் கூட பெண்கள் சிறுவர்கள் போரிடாத கூலியாட்களை கொல்லக்கூடாது (புகாரி 3014& அபூதாவூத் 2669) என்கிறது இஸ்லாம்

-இஸ்லாத்தை ஏற்றதற்காக முஸ்லிம்களை கொன்றும் வேதனை செய்தும் இருந்தனர் காஃபிர்கள் (புகாரி 4514), ஊரைவிட்டு வெளியேற்றினார்கள் (குர்ஆன் 22:39-40,9:13,60:1)

-தமக்கு சக்தி இருந்தால் முஸ்லிம்களோடு அவர்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள் என்று இறைவன் அறிந்துள்ளதால் (குர்ஆன் 2:217) அதை தடுப்பதற்கும் மார்க்கத்தை பாதுகாக்கவும் போர் புரிவது அவசியமானதாக இருந்தது.

அத்தகைய போரில் இறைவனுக்காக கொல்லப்படுபவரை இறைவன் சுவர்க்கம் போக வைப்பது நியாயம் தானே

-கர்த்தரே கொலைகாரன் (உபாகமம் 32:39, 1 சாமுவேல் 2:6)

-குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கட்டளையிட்டவர் (1 சாமுவேல் 15:2-3

-தம் நாட்டிலுள்ள மாற்றுமதத்தவர்களை ஈவிரக்கமின்றி மூச்சுவிடும் எதையும் விடாமல் கொல்லுமாறு கர்த்தர் சொன்னார் (உபாகமம் 20:16-18)

-அதிகாரம் இல்லாதபோது காலை உதறிவிட்டு போக சொன்னவர் அதிகாரத்தோடு வரும்போது ஈவிரக்கமின்றி கொல்லுவார் (வெளி 2:23, 19:18-21)

-நரகம் போகிற கொலைகாரன் என பைபிள் சொல்வது விசுவாசிகளை கொன்ற அவிசுவாசிகளே ஆவர்.

அவிசுவாசிகளை கொல்லச்சொன்னதே தேவன் தான் (உபாகமம் 13:6-10,& 13:12-16, 17:2-5)

இவர்கள் வாதப்படி பைபிள் தான் நல்வழி காட்டவில்லை என்றாகும்.

 

49.குர்ஆன் இறைவனை பெருமைப்படுத்துமாறு கூறுகிறது (17:111) பைபிளிலே கடைசிகால மிருகத்திற்கு பெருமையானதையும் தூசத்தையும் பேசும் வாய் கொடுக்கப்பட்டது (வெளி 13:5)

இறைவன் மிக பெரியவன் என புகழுவது தான் அவனை பெருமைப்படுத்துவது

படைத்தவன் அனைத்தையும் விட பெரியவனாக இருப்பதால் அவன் பெருமை கொள்ளலாம். அவன் மட்டுமே அதற்கு தகுதியானவன்.

ஆனால் படைப்புகளோ பெருமை கொள்ளுவதானது , நரகத்திற்குரிய செயலாக இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 147 (91a))

-பைபிளிலே கர்த்தர் தன்னை தவிர வேறு தேவன் இல்லை என்கிறார் . தன்னை சகலத்திலும் உயர்த்தி பேசுகிறார்.

இயேசு தன்னை யோனாவிலும் பெரியவர் சொலமோனிலும் பெரியவர் என்கிறார் (மத்தேயு 12:41-42) இது பெருமைல்லாது வேறு என்ன?

அத்தோடு கர்த்தரது தூசன வார்த்தைகள் எசேக்கியேல் 23:20 இலே அருமையாக உள்ளது

எசேக் 23:20 IRVTam

[20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள்.

https://bible.com/bible/1899/ezk.23.20.IRVTam

 

50.பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியவற்றின் பெயரால் என ஒருமையில் இருப்பதால் திரித்துவத்திற்கு ஆதாரம் என மத்தேயு 28:19ஐயும் அடைப்புக்குள் புகுத்தப்பட்ட 1 யோவான் 5:7 இலே வார்த்தை பிதா ஆவி மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பதையும் ஆதாரம்னு கூறினர்

பெயர்கள் என கூறாமல் பெயர் என கூறுவது அவர்கள் மூவரும் கடவுளாயிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

பைபிளிலே பெயர் (שם) என்பது பலருக்கும் ஒருமையிலேயே எபிரேயத்தில் பாவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக மூவரினதும் பெயர் என 1 சாமுவேல் 17:13 ஒருமையில் எபிரேய பாசையில் கூறுகிறது

அத்தோடு என்னை தவிர வேறு கடவுள் இல்லை (உபாகமம் 32:39, ஏசாயா 45:5-7,22) அவரை தவிர வேறு கடவுள் இல்லை (உபாகமம் 4:39), நீர் மட்டுமே தேவன் /கர்த்தர் (சங்கீதம் 86:10,நெகேமியா 9:6) என கூறி கர்த்தரின் எண்ணிக்கை ஒரே நபர் மட்டுமே என் தெளிவாக கூறியுள்ளது. அவரோடு வேறு நபர்கள் பங்காளிகளாக உள்ளார்கள் என்று கிடையாது.

1 யோவான் 5:7 பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வசனம் என்பதால் அதை அடைப்புக்குறிக்குள்ளே போட்டிருக்கிறார்கள். அதன்படி கூட மூவரும் கடவுளாக இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது. இயேசுவும் சீடர்களும் எப்படி ஒன்றாக இருப்பதற்காக இயேசு பிதாவிடம் வேண்டினார் (யோவான் 17:21-22) இயேசுவும் பிதாவும் எப்படி ஒன்றாக இருக்கிறார்களோ அதுபோல சீடர்களும் ஒன்றாக இருப்பதற்கு இயேசு பிதாவிடம் வேண்டினார் (யோவான் 17:22-23).. ஆக ஒன்று என்பது ஒரே தேவனாக மூவரும் இருப்பது அல்ல... மாறாக ஒற்றுமையாக ஐக்கியத்தில் இருப்பதையே குறிக்கும்... அதனால் தான் பிதா ஒருவரே மெய்யான தேவன் என இயேசு சொன்னதோடு (யோவான் 17:3), தனக்கும் சீடர்களுக்கும் அந்த தேவனே பிதாவாகவும் தேவனாகவும் இருக்கிறார் (யோவான் 20:17) என்றார். அதாவது இயேசுவுக்கே பிதா தான் தேவன் .

(உடனே எபிரேயர் 1:8 இலே பிதா இயேசுவை தேவன் என்றார் என உருட்டி கூடாது. மோசேயையும் தேவன் என தேவன் சொல்லியுள்ளார் (யாத்திராகமம் 7:1,4:16), அதே எபிரேயர் 1:9 இலே இயேசுவை இயேசுவின் தேவன் தான் அவருடைய சோகதரர்களுக்கு மேலாக அபிசேகம் செய்தார் என்றும் கூறி இயேசு அத்தகைய மெய் தேவன் இல்லை என்பதையும் அதிகாரம் கொடுக்கப்பட்டு நபர் என்பதே அதன் அர்த்தம் என்றும் தெளிவாக்கிவிட்டார். காமெடியான விசயம் என்னவென்றால் இவ்வசனம் பிதா சொன்ன ஒன்றே கிடையாது. சங்கீதம் 45இலே தன் ராஜாவை புகழும் பாடகரின் பாட்டு. சங்கீதத்திலே பாடுவது தேவன் என நினைத்து இவர் கம்பி கட்டியுள்ளார்)

 

51.பைபிளிலே பரலோக வாழ்க்கையில் திருமணம் இல்லை (மத்தேயு 22:29-30) என்றும் பரிபூரண இன்பம் உண்டு (சங்கீதம் 16:11) என்றும் உள்ளதென்றும் ஆனால் குர்ஆனோ ஹூருல் ஈன் மனைவிகளும் மதுவும்  வேலைசெய்ய வேலைக்காரர்களும் உண்டு என கூறுகிறது (78:31-34& 37:46-49, 56:13-17)

-சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)

-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)

-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)

வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது. மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.

(ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும்.  ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை..

இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.

இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு..)

-உலகத்தில் போதை மது குடிக்க அனுமதித்து (உபாகமம் 14:26), தன் கூடப்பிறந்த சகோதரிகளை மணந்து பிள்ளை பெற வைத்ததை நம்பிக்கொண்டு இதை விமர்சிக்கலாமா?

இவர்கள் தங்கள் மகள்மாருக்கு திருமணம் செய்து வைப்பதில்லையா? அப்படியானால் இவர்கள் விபச்சார விடுதி நடத்தி ஒரு ஆணுக்கு கூட்டிக்கொடுக்கிறார்கள் என்று திருமணத்தை பேசினால் ஒப்புக்கொள்வார்களா?

 

 

 

52.ரசாது கலீஃபாவும் புதிய ஏற்பாடும் பரிசுத்தவான்களும்

 ரசாது கலீஃபா இளம் பெண்ணின் மார்பை தடாவினர் என்பதையும் ரசாது கலீஃபா முகம்மது நபியை குறித்து குர்ஆன் பேசுவதை தன்னை குறித்து பேசுவதாக பொய் சொன்னதையும் சுட்டிக்காட்டினர்..

ஆனால் பரிசுத்த ஆவியானவர் இறங்கி தங்கியிருந்த தாவீது (சங்கீதம் 51:11,& 1சாமுவேல் 16:13) கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவன் (அப்போஸ்தலர் 13:22,& 1சாமுவேல் 13:14) அத்துடன் தீர்க்கதரிசி (அப்போஸ்தலர் 2:30) மாற்றான் மனைவியான பேரழகி குளிப்பதை கண்டு படுக்கைக்கு கூப்பிட்டு விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) . அதாவது ஆவியானவர் இருக்கும்போதே விபச்சாரம்.. அதனால் ஆவியானவரின் உரிமையாளரான தேவனோ அவர்பாட்டிற்கு தாவீதின் மனைவிகளை பக்கத்துவீட்டுக்காரனுக்கு சப்லை செய்து விபச்சாரம் செய்விப்பேன் என்றார்- 2 சாமுவேல் 12:11-12.  இதேபோல் சிம்சோனை ஆவியானவர் ஏவத்தொடங்கிய பின்பே (நியாயாதிபதிகள் 13:24-25), பிலிஸ்திய பேரழகியுடன் காதலில் விழுந்தார் (நியாயாதிபதிகள் 14:1-3), இந்த காதலில் விழுந்த செயல் தெய்வீகச் செயல்/தெய்வீக காதல் (நியாயாதிபதிகள் 14:4). இப்படி ஆவியானவர் இருந்த போதே இவ்வளவு கேவலமாக நடந்தும் அவரே நடப்பித்தும் இருக்கும்போது , பொய்யன் ரசாது கலீஃபா செய்தது நத்திங்.

அத்தோடு புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இஸ்ரேலை எகிப்திலிருந்து கூட்டிவந்ததை (ஓசியா 11:1) , இயேசுவை எகிப்திலிருந்து கூட்டி வருவார் என்ற முன்னறிவிப்பு என்றார்களே (மத்தேயு 2:15), பாபிலோனியர்களால் சிறைபிட்க்கப்பட்டுப்போகும் இஸ்ரவேலை/எஃபராயீமை குறித்து எரேமியா 31:15-16 புலம்பியதை இயேசு காலத்தில் பெத்லகேமில் ஏரோது கொன்றதால் அழுவதை குறிக்கிறது என்று புரூடா விட்டாரே (மத்தேயு 2:16-18). அதுவும் பெத்லகேமுக்கும் ராகேலுக்கும் சம்பந்தமே இல்லை.. கதறுவதாக இருந்தால் லேயாள் தான் கதற வேண்டும் என்ற லாஜிக் கூட தெரியாமல் காப்பியடித்து பொய்சொல்லியுள்ளார் மத்தேயு. இதே வழிமுறையை பின்பற்றி ரசாது கலீஃபா எழுதியுள்ளார்.

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1