குர்ஆன் கூறும் இறைவன் YDM vs TNTJ 1

 


1.அல்லாஹ் ஒருவன் என்கிறார்கள். ஆனால் குர்ஆனோ அல்லாஹ் படைப்பாளர்களில் சிறந்தவன்  (23:14) என்கிறது. ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்பாளர்/கடவுள் இருப்பதாக கூறுகிறது

*சகலத்தையும் படைத்தவன் அல்லாஹ்வாகிய ஒரே இறைவன் (குர்ஆன் 6:102, 13:16,39:62, 40:62).

*அவனது படைப்புகளின் செயல்களை படைப்பவனும் அவனே (37:96).

*அவனுடைய படைப்புகளில் அவனுடைய அனுமதியால் படைப்பவர்கள் இருப்பார்கள். உதாரணமாக வாகனங்களை படைப்பார்கள்,கட்டிடங்களை உண்டாக்கும்வர்கள், இயந்திரங்களை உண்டாக்குவோர் இருப்பர். இப்படி படைக்கும் படைப்பாளர்களில் இறைவனே அழகான படைப்பாளன் என்கிறது குர்ஆன். அத்தோடு அவர்களது செயல்களை படைப்பவனும் அவனே (37:96)

 

பைபிளிலோ, வானத்திலும் பூமியிலும் பலதேவர்கள் இருந்தாலும் நமக்கு பிதாவாகிய ஒரே தேவன் இருக்கிறார் என்கிறார் பவுல் -1 கொரிந்தியர் 8:5-6).. இப்படி பல தேவர்களில் ஒருவராக தான் பிதாவை பைபிள் தான் சொல்கிறது - இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு தேவனே கிடையாது (குர்ஆன் 2:163,255.…..)

 

2.போரில் கைப்பற்றப்பட்ட பொருளில் அல்லாஹ்வுக்கும் முகம்மது நபியிற்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும் என சொல்வதிலிருந்து அல்லாஹ்வுக்கு தேவையுண்டு என்றனர்

அந்த பங்கு அல்லாஹ் எடுத்துச்செல்வதல்ல.. மாறாக நபிகளார் தன் குடும்பத்தின் உணவுச் செலவுக்கு  எடுத்துவிட்டு மிகுதியை முஸ்லிம்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதே (அபூதாவூத் 2694,நஸாயீ 4138, அஹ்மத் 22699,22718). இதிலே அல்லாஹ்வுக்கு எதுவும் செல்வதில்லை.. மாறாக அனைத்தும் அவனுக்கே உரியது என்பதையே அது குறிக்கிறது.

நபிகளார் தன்னிடம் உஹது மலையளவு தங்கம் இருந்தாலும் மூன்று நாட்களுக்கு ஒரு தங்கக்காசு மீதமிருப்பதையும் விரும்பாதவர் (புகாரி 7228& 1407,1408)

அதனால் தான் தன் குடும்ப உணவுக்காக யூதரிடம் தன் கவசத்தை அடைமானம் வைத்த நிலையில் மரணித்தார்கள் (புகாரி 2069).

அநேக போர்கள் வென்றிருந்தும் ஜிஸ்யா வரி மூலம் அநேக செல்வங்கள் கிடைத்திருந்தும் அதை நபிகளார் தனக்கென பதுக்கவில்லை.

 

பைபிளில் கர்த்தர் தனக்கு யுத்த பொருளில் பங்கு கேட்டுள்ளார்: அதை பலியாக கொடுக்க வேண்டுமாம்.

எண் 31:28-29, 31, 41 IRVTam

[28] மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் யெகோவாக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி, [29] அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும்.

[31] யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.

[41] யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.

https://bible.com/bible/1899/num.31.28-41.IRVTam  

தனக்கு தகனபலியாக மதமாறியவர்களின் சொத்துக்களை தரவேண்டும் என்கிறார்:

உபாகமம் 13:16 TAERV

[16] பின் நீங்கள் அங்கு கைப்பற்றிய அனைத்துப் பொருட்களையும், விலையுயர்ந்தப் பெருட்களையும், நகரத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்து நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யும் தகனபலியாகும், அந்த நகரமானது வெறும் வெற்றிடமாக மண்மேடாகவே என்றென்றும் இருக்கும். அந்த நகரம் மீண்டும் கட்டப்படவே கூடாது.

https://bible.com/bible/3154/deu.13.16.TAERV  

-கர்த்தருக்கு இஸ்ரவேலர் 1/10 கொடுக்க அதை அவர் லேவியருக்கு கொடுப்பாராம். ஆனால் லேவியர் அதிலே 1/10 கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டும்

எண்ணாகமம் 18:26-28 TAERV

[26] “லேவியர்களிடம் இவற்றை கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குத் தருவார்கள். அவை லேவியர்களுக்கு உரியதாகும். ஆனால், நீங்கள் அதில் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். [27] அறுவடையானதும் தானியத்தையும், திராட்சை ரசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்த வேண்டும். [28] இவ்வாறு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் செய்வது போலவே, நீங்களும் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தவேண்டும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கு உங்களுக்குரியது. உங்களுக்குக் கொடுக்கப்படும் பத்தில் ஒரு பங்கில், கர்த்தருக்கு ஒரு பங்கைத் தரவேண்டும். பிறகு ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அதில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கவேண்டும்.

https://bible.com/bible/3154/num.18.26-28.TAERV

கர்த்தருக்கு தகனபலி ரொம்ப பிடிக்கும்.. அதன் இரத்தம் செம வாசமாம்

ஆதியாகமம் 8:20-21 TAERV

[20] பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான். [21] கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன்.

https://bible.com/bible/3154/gen.8.20-21.TAERV

 

லேவியராகமம் 17:4-6 TAERV

[4] அவன் அந்த மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அவன் சிந்தியவனாகிறான். எனவே, தனது அன்பளிப்பை கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் அம்மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்லவில்லையெனில் அவன் தனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும். [5] விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். [6] பிறகு ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு முன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். கொழுப்பை நறுமணமிக்க வாசனையாக எரிக்க வேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்.

https://bible.com/bible/3154/lev.17.4-6.TAERV

 

தன் சொந்த மகனையே தனக்கு நரபலியிட்டு கொள்ளும் கோடூர ரத்த தேவையுள்ளவர்

ரோமர் 8:3 IRVTam

[3] அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.

https://bible.com/bible/1899/rom.8.3.IRVTam

எபேசியர் 5:2 IRVTam

[2] கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.

https://bible.com/bible/1899/eph.5.2.IRVTam

1 யோவான் 4:10 IRVTam

[10] நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

https://bible.com/bible/1899/1jn.4.10.IRVTam

இப்படி தனக்கு தன் மகனையே நரபலி கொடுக்கும் தேவையுள்ளவராக பைபிள் காட்டுகிறது

ஆனால் இஸ்லாத்தில் இறைச்சியோ இரத்தமோ இறைவனை அடையாது என்றும் இறையச்சமே அவனை அடையும் என்கிறது (குர்ஆன் 22:37)

3.அல்லாஹ் நிகரற்றவன் என்பதை கேலி செய்யும் விதமாக, சூழ்ச்சி செய்வதில் வழிகெடுப்பதில் நரகத்திற்கு கொண்டு செல்வதில் நிகரற்றவன் என்கிறார்.

 

**முதலில் இறைவன் செய்வது பற்றி அவன் யாராலும் விசாரணை செய்யப்பட மாட்டான். மாறாக படைப்புகளான இவர்கள் தான் இறைவனால் விசாரணை செய்யப்படுவர் (குர்ஆன் 21:23), அத்தோடு யாருக்கும் அவன் சிறிதளவும் அநீதி இழைக்க மாட்டான். (குர்ஆன் 4:40)

*எந்தளவுக்கென்றால் இறைவனை நிராகரித்தவன் நற்செயல் செய்தால் கூட அவற்றுக்குரிய கூலியை பூரணமாக இவ்வுலகிலேயே கொடுத்துவிடுவான் (முஸ்லிம் 5408,5409, (2808a,2808b). தனக்கு பிள்ளையிருப்பதாக அவதூறு மூலம் நோவினை செய்யும் மனிதர்களுக்கு கூட இவ்வுலகில் அவன் உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்கி மிக மிக பொறுமையுடையவனாக இருக்கிறான் (புகாரி 6099,7378, முஸ்லிம் 5401,5402 (2804a,b & 2804c)..

ஆனால் பைபிளில் தான் தேர்வு செய்த ஜனத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காக, நானூறு வருடம் கழித்து வாழும் மாற்றுமத அமெலேக்கியரை ஈவிரக்கமின்றி குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் மிருகங்கள் என அனைத்தையும் கொன்று போட சொல்கிறார் (1 சாமுவேல் 15:2-3)

*இறைவன் அனைவருக்கும் நல்லது எது கெட்டது எது என அவர்களின் மனங்களிலே தெளிவாக அறிவித்து கொடுத்துள்ளான்.அதை பரிசுத்தப்படுத்திக்கொள்பவர் வெற்றிபெற்றவர், அதை பாவத்தில் புகுத்திக்கொண்டவன் தோல்வியடைந்தவன் (குர்ஆன் 91:8-10).

*அல்லாஹ் ஒருவரை வழிகெடுக்கிறான் என்றால், இறைவனுக்கு பூரண ஞானம் இருப்பதாலும் (குர்ஆன் 6:59, 2:29), அநீதியாளர்களையும் நன்கறிந்தவன் (குர்ஆன் 2:95) என்பதாலும், உள்ளத்தில் இருப்பதை நன்கறிந்தவன் (3:119,154,..) என்பதாலும் யாருக்கும் அநீதி இழைக்காதவன் (குர்ஆன் 4:40, 3:108, 10:44, 40:31) என்பதாலும் , வழிகேட்டுக்கு தகுதியானவனையே வழிதவறச்செய்கிறான்.

அத்தோடு உலகத்தில் இறைவனை மிஞ்சிய சக்தி இல்லை என்பதால், ஒருவர் வழிகெட்டாலோ பாவம் செய்தாலோ தன் இச்சைப்படியே நடந்தாலும் இறைவன் அனுமதித்து அதற்குரிய ஆற்றலையும் சுதந்திரத்தையும் அவனுக்கு  வழங்காமல் நிகழவே  முடியாது...  அதனால் தான் இறைவன் வழிதவறச்செய்கிறான் நேர்வழி காட்டுகிறான் என்று இறைவன் மீது சேர்க்கப்படுகிறது.

*இறைவன் சதி செய்கிறான் என்பது காஃபிர்கள் செய்த சதிகளுக்கு பதிலடியாக இறைவன் செய்வதே (குர்ஆன் 3:54,8:30,27:50-51). அதாவது தன் தகுதிக்கும் ஞானத்திற்கும் ஏற்ப குற்றவாளிகளை தண்டிப்பதற்காக இறைவன் செய்வதே அது.

நல்லவனுக்கு எதிராக செய்யப்படும் சதியே விமர்சனத்திற்குரியது. குற்றவாளிக்கு எதிராக செய்யப்படுவது அத்தகையதல்ல.

(கர்த்தரது சதி 1 இராஜாக்கள் 22:18-23 அடுத்த columnஇலுள்ளது)

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

கர்த்தரே வஞ்சகத்தை அனுப்புவர்-

2 தெச 2:12 IRVTam

[12] அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

https://bible.com/bible/1899/2th.2.12.IRVTam

-கர்த்தர் ஜனங்களை வழி கெடுத்து நரபலி கொடுத்து தீட்டுப்பட வைத்தார்

எசேக் 20:25-26 IRVTam

[25] ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். [26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.25-26.IRVTam

-பொய்சொல்லும் ஆவியை அனுப்பி பொய் சொல்ல வைத்தார்-

1 இராஜாக்கள் 22:21-23 IRVTam

[21] அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. [22] எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். [23] ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

https://bible.com/bible/1899/1ki.22.21-23.IRVTam

-இது போல கண்களை குருடாக்கி இருதயத்தை கடினமாக்குவார். அதனால் அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள்

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

-தன் தீங்கு செய்யும் பொல்லாத ஆவியை அனுப்புவார். இதனால் சவுல் தாவீதை கொல்ல பார்த்தான்

 

1 சாமு 18:10-11 IRVTam

[10] மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. [11] அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.

https://bible.com/bible/1899/1sa.18.10-11.IRVTam

(எபிரேயத்தில் ருஆக் எலோஹிம் ராஆ என்றுள்ளது. அதன் அர்த்தம் தேவனின் பொல்லாத ஆவி... அதாவது தேவனுக்கு நல்ல ஆவி மட்டுமல்ல பொல்லாத ஆவியும் உண்டு)

ஆக இது தற்குறித்தனமானது

4.குர்ஆன் 4:95 இல் போருக்கு செல்லாதவர்களும் செல்பவர்களும் சமமாக மாட்டார்கள் என்று இறங்கியபோது , குருடரான மனிதர் தனக்கு முடியாதே என சொன்னபோது தக்க காரணமுடையோரை தவிர என மேலதிகமாக இறங்கியதாக கூறி, இறைவன் இப்படி இருக்க கூடாது என்கிறார்.

 

முதலில் இறைவன் செய்வது குறித்து விசாரணை செய்யப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்க படுவார்கள் (குர்ஆன் 21:23).

றைவன் விரும்பியதை கட்டளையிடுகிறான்/சட்டமாக்குகிறான் (குர்ஆன் 5:1)

இறைவன் விரும்பியதை செய்வான் (2:253,3:40, 22:14,18)

இறைவன் விரும்பியதை படைக்கிறான் (3:47,5:17, 24:45...)

ஒரு வசனத்தை மாற்றினாலோ அல்லது மறக்க வைத்தாலோ அதைவிட சிறந்ததையோ அதைப்போன்றதையோ கொண்டுவரக்கூடியவனே இறைவன் (2:106)

*இறைவன் சகலத்தையும் முன்கூட்டியே அறிந்தவனும் அவற்றை  படைக்க முன்பே எழுதிவிட்டவனும் ஆவான் (புகாரி 3409, குர்ஆன் 57:22)

இறைவன் கேள்வி கேட்பது கூட அவன் அறிந்துகொண்டே கேட்பான் (புகாரி 3223)

-இறைவன் அடியார்களோடு நடந்துகொள்வது அடியார்களின் அறிவிற்கேற்பவே இருக்கும்.

உதாரணமாக , தன் படைப்பில் சிலர் விசுவாசிக்கவே மாட்டார்கள் என முன்பே அறிந்தாலும் அவர்களிடமும் தன் அத்தாட்சிகளை அனுப்பிவைத்து விசுவாசிக்குமாறு அழைப்பான். உதாரணமாக ஃபிர்அவ்னும் அவனது கூட்டமும் நேர்வழியிற்கு திரும்ப வேண்டும் என்பதற்காக அவர்களை  தணடனைகளால் பீடித்தோம் (43:48), அத்தோடு சிறுதண்டனைகளால் உலகில் தண்டிப்பதும் அவர்கள் திரும்பி வருவதற்காகவே (32:21)

*சக்திக்கு மீறி யாரையும் இறைவன் நிர்ப்பந்திப்பதோ பொறுப்புச்சாட்டப்படுவதோ இல்லை (குர்ஆன் 2:233,286, 65:7).

அதுபோன்றே இறைவன் வஹீ இறக்குவதும் மனிதர்களின் அறிவுக்கேற்பவே நடந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலளித்தான்.

 

-ஆகவே இறைவன் விரும்பியபடி நடந்துகொள்வான். இப்படி தான் அவன் நடந்துகொள்ள வேண்டும் என அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவன் அறிந்துகொண்டே இவ்வாறு நடந்துகொள்கிறான்

  பைபிளில் கடவுள் அறிவில் பூரணமில்லாதவர் போல சித்தரிக்கும் அநேக வசனங்கள் உள்ளன.

1.தான் ஒரு செயலை செய்துவிட்டு , பின்பு தான் செய்ததற்காக மனஸ்தாபப்படுதல்

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

2 சாமுவேல் 24:15

தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

2 சாமுவேல் 24:16

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

1 சாமுவேல் 15:10-11

2.மனிதனை படைத்துவிட்டு அவன் கொடூரமாக நடந்தபோது அவனை படைத்ததற்தாக மனஸ்தாபப்பட்டார்.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

ஆதியாகமம் 6:5-6

3.இஸ்ரவேலர் தப்பு செய்தபோது அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்து மோசேயை மட்டும் பெரிய ஜாதியாக ஆக்க நினைத்து மோசேயிடம் சொன்னார். மோசேயோ தேவன் அப்படி செய்தால், தேவனுக்கு காப்பாற்ற இயலாமல் கொன்றுபோட்டார் என பேசுவார்கள் என்றும் முன்பு ஆபிரகாமுக்கு செய்த சத்தியத்தை நினைவூட்டி வேண்டினார். அப்போது மனதை மாற்றிக்கொண்டார்:

10.ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

11.மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

12. மலைகளில் அவர்களைக்கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்

.13.உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

14.அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

யாத்திராகமம் 32:10-14

இதேபோல் மீண்டும் பல தடவை நடந்தது .. இவர் அவசரப்படுவார். மோசே அவர் செய்த சத்தியத்தை நினைவூட்டுவார். பிறகு மனஸ்தாபப்படுவார் (எண்ணாகமம் 14:12-20

 

4.எசேக்கியா ராஜா பிழைக்காமல் அதே நோயில் செத்துப் போவான் என கர்த்தர் சொன்னார். பிறகு அவன் ஜெபித்ததால், மனஸ்தாபப்பட்டு சாகமாட்டான் என்றும் 15 வருடம் ஆயுள் கூட்டப்படும் என்றார்.

1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

3 கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

4அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:

5 நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

ஏசாயா 38:1-5

 

5.இதேபோல் தேவன் வாக்குக் கொடுத்துவிட்டு, மக்கள் மாறினால் கர்த்தரும் மாறுவார் என கூறுகிறார்:

7.பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

8.நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

9.கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

10.அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

எரேமியா 18:7-10

 

இப்படி கர்த்தரே தான் செய்த செயலுக்கு மனஸ்தாபப்படுவதும், தன் மனதை மாற்றிக்கொள்வதுமாக இருப்பதாக பைபிள் கூறுவதை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை மட்டும் இப்படி பேசலாமா?

5.ஆயிஷா(ர) அவர்களின் போர்வைக்குள் இருக்கும்போது வஹீ வந்ததை குறித்து உடலுறவின் உச்சத்தில் வஹீ இறக்கியதாக பொய்யாக அடித்து விடுகிறார்.

 

ஜிப்ரீல் ஆயிஷா (ர) முறையாக ஆடை அணியாத நிலையில் வரமாட்டார் என நபிகளார் கூறியுள்ளார்கள் முஸ்லிம் 1774

ஆகவே இது இவர்களின் ஆபாசப் புத்தியை காட்டுகிறது.

(மற்ற மனைவியரோடு நபிகளார் இருக்கும்போது இப்படி வஹீ வந்ததில்லை என்கிற ஆயிஷா (ர) அவர்களின் தனிச்சிறப்பை கூறவே இத்தகவலை நபிகளார் கூ இல்றினார்கள்

கர்த்தரின் காமம் சொட்டும் வசனங்கள் சில:

உன் 7:7-8 IRVTam

[7] உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. [8] நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.

https://bible.com/bible/1899/sng.7.7-8.IRVTam

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 16:25-26 TAERV

[25] ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். [26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய்.

https://bible.com/bible/3154/ezk.16.25-26.TAERV

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 23:3, 20-21 TAERV

[3] அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர்.

[20] கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக்கொண்டாள். [21] “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள்.

https://bible.com/bible/3154/ezk.23.3-21.TAERV

இதை வைத்து காதலி காதலனின் விந்தை வெளியேற்றிவிடும் காட்சியின் தீர்க்கதரிசனம் என எடுக்கலாமா?

நாகூம் 3:5 TAERV

[5] சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன். நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன். அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.

https://bible.com/bible/3154/nam.3.5.TAERV

இப்படி செமயாக பேசியிருப்பது ஓகே.. கணவன் மனைவி முறையாக ஆடை அணிந்திருக்கும் போது வஹீ வருவது கொச்சையானதாம்.

6.ஆயிஷா()வுக்கு மாதவிடாய் நேரத்தில் அவரது மடியில் தலை வைத்து குர்ஆன் ஓதினார்கள் என புகாரி 297 ஐ கொச்சையாக பேசுகிறார்.

*மாதவிடாய்  என்பது ஆபாசமோ இழிவோ அல்ல. மாறாக ஆதமுடைய பெண் பிள்ளைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய ஒரு காரியம் (புகாரி 294)

*அது ஒரு உபாதை அல்லது தொந்தரவு என்றே கூறுகிறது (குர்ஆன் 2:222)

*அத்தகைய நேரத்தில் உடலுறவில் இருந்து விலகியிருக்குமாறும் மற்ற அனைத்திலும் அவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்பதை குர்ஆன் 2:222 இற்கு விளக்கமாக நபிகளார் கூறியுள்ளார்கள் (முஸ்லிம் 507 (302 ஆங்கிலம் அரபு))

*இறைவனுடைய வசனங்களை மாதவிடாய் பெண்ணின் மடியில் படுத்தபடி ஓதுவதால் இறைவன் கோபப்படுவதில்லை . அதன் புனிதம் கெடுதலும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதாவது மாதவிடாய் பெண் என்பதால் அவளை ஒரு பன்றி போல பைபிள் கருதுவது படி இஸ்லாம் நடக்கவில்லை

 

பைபிளிலோ மாதவிடாய் பெண்ணின் முழு உடலுமே தீட்டு. அவளை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவள் படுக்கும் இடமும் அமரும் இடமும் தீட்டுப்படும். அவளது படுக்கையை ,அமரும் ஆசனத்தை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவளது ரத்தம் ஒர்த்தன் மேல் பட்டால் அவன் ஏழுநாட்களுக்கு தீட்டுப்படுவான். எவ்வளவு காலம் ரத்தம் வந்துகொண்டிருந்தாலும் அத்தனை காலத்திற்கும் இப்படி அவள் தீட்டுப்படுவாள். இரத்தம் நின்று ஏழாம் நாள் தான் அவள் சுத்தமாவாள் (லேவியராகமம் 15:19-28) இப்படி அவளை ஒட்டுமொத்த அசுத்த பிராணியாக ஆக்கியுள்ளது பைபிள். பன்றி போன்ற அசுத்தமான பிராணிகளை தொட்டால் தோராவின்படி மாலைவரை தீட்டுள்ளது போல இந்த பெண்ணை தொட்டாலும் மாலைவரை தீட்டு.

*தற்குறித்தனமாக இது பெண்ணுக்கு ஓய்வு கொடுப்பதற்கு என்பார்கள். ஓய்வுகொடுக்க வேண்டும் என்றால் "அக்காலத்திலே ஓய்வு எடுங்கள்/எடுக்க விடுங்கள்" என்று இலகுவாக சொல்லிவடலாமே. ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்?

(அத்தோடு விந்து கழிந்தவனுக்கும் மாலைவரை தீட்டு என அதே அதிகாரம் கூறுகிறது. (லேவியர் 15:16-18) இதனால் விந்து கழிந்தவன் ஓய்வெடுக்க இந்த சட்டத்தை கொடுத்தார் என சொன்னால் காரி துப்ப மாட்டார்கள்??

7.அபூஹுரைரா தன்மீதிருந்த துணியை விரித்து வைத்து நபிகளார் கூறிமுடித்த பின் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டதாகவும் அதன் பின் எதுவும் மறக்கவில்லை என்றும் அப்போது அவர்மீது அந்த ஒரு ஆடையே இருந்தது என கூறிய புகாரி 2350 ஹதீஸை கொச்சையாக சித்தரிக்கப்பார்க்கிறார்.

 

*ஹதீஸ்களிலே அது போர்வை (நமிரா-نمرة) என உள்ளது.(புகாரி 2350),

*அத்தகைய ஒரே போர்வையால் இறந்தவர்களில் இரண்டு பேரை சுற்றி அடக்கமும் செய்துள்ளனர் (புகாரி 1347-1348) எனும் அளவுக்கு விசாலமானது.

*அத்தோடு இந்த ஹதீஸிலே முழு ஆடையையும் கழற்றி நிர்வானமானார் என்று எதுவும் கிடையாது.

*குறிப்பாக இஸ்லாத்தில் ஒரு ஆணின் மறைவிடத்தை வேறொரு ஆண் பார்க்க கூடாது என்றும் ஒரு பெண்ணின் மறைவிடத்தை வேறொரு பெண் பார்க்க கூடாது என்றும் இரு ஆண்கள் ஒரே ஆடைக்குள் தூங்க கூடாது என்றும் இரு பெண்கள் ஒரே ஆடைக்குள் தூங்க கூடாது என்றும் தெளிவாக இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 565 (338a), அபூதாவூத் 4018, திர்மிதீ 2793,இப்னுமாஜா 661)

அதினாலே நிர்வாணம் தெரிந்தது என கூறுவது இவர்களின் வானவில் 🌈 புத்தி

*பைபிளில் கர்த்தரே தன் தீர்க்கதரிசிக்கு ஆடையின்றி மூன்று வருடம் நடக்கப் சொன்னார்:

ஏசாயா 20:2-3 IRVTam

[2] யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான். [3] அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,

https://bible.com/bible/1899/isa.20.2-3.IRVTam

*இதேபோல் தீர்க்கதரிசி மீகா தான் அம்மணமாக நடப்பேன் என்கிறார்:

மீகா 1:8 IRVTam

[8] இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

https://bible.com/bible/1899/mic.1.8.IRVTam

*அத்தோடு கர்த்தரே ஊர்களை பெண்ணாக உருவகித்து அம்மணமாக ஓடு என்றும் பாவாடையை தூக்கி காட்டுவேன் என்றெல்லாம் கூறுவதாக உள்ளது

ஏசா 47:2-3 IRVTam

[2] இயந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் நிர்வாணத்தொடையுமாக ஆறுகளைக் கடந்துபோ. [3] உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் அவமானம் காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.

https://bible.com/bible/1899/isa.47.2-3.IRVTam

மீகா 1:11 IRVTam

[11] சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது.

https://bible.com/bible/1899/mic.1.11.IRVTam

நாகூம் 3:5 IRVTam

[5] இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,

https://bible.com/bible/1899/nam.3.5.IRVTam

எருசலேமை பெண்ணாக உருவகித்து அவளுடைய பாவாடையை முகம்வரை தூக்குவேன் என்கிறார் கர்த்தர் :

எரேமியா 13:26 IRVTam

[26] உன் மானம் காணப்பட நான் உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை எடுத்துப்போடுவேன்.

https://bible.com/bible/1899/jer.13.26.IRVTam

*கர்த்தர் அந்தரங்க ஆணுறுப்பை வர்ணிப்பவராகவும் , அதிலுருந்து வரும் கஞ்சை வர்ணிப்பவராகவும் பெண்களின் முலைகளை வர்ணிப்பவராகவுமே பைபிள் காட்டுகிறது:

எசேக்கியேல் 23:20-21 IRVTam

[20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

https://bible.com/bible/1899/ezk.23.20-21.IRVTam

இப்படி எப்போதும் நிர்வாணம் பற்றி பைபிளில் நிறையவே காணப்படும்.

பைபிளில் எங்கேயும் நிர்வாணமாக இருக்க கூடாது என்றோ ஒருவன் மற்றவனின் அந்தரங்க உறுப்பை பார்க்க கூடாது என்றோ எங்கேயும் கிடையாது.

8.குர்ஆன் 4:24 இலே மனைவியிடம் சுகமனுபவித்தால் அதற்கான மஹரை கொடுத்துவிடுங்கள் என சொல்வதை வேசியாக நடத்துவதை போல கூறுகிறார். மஹராக இரும்பு மோதிரம் செருப்பு குர்ஆன் வசனத்தை கற்றுக் கொடுத்தல் என்பவற்றையும் ஆக்கியுள்ளதே என கூறி இது தான் பாதுகாப்பா என வயோதிப போதகர் கேட்கிறார்.

*பெண்களுக்கு ஆண்கள் திருமணக் கொடையை கொடுக்குமாறு குர்ஆன் கூறுகிறது (குர்ஆன் 4:4)

*எப்போது இந்த மஹரை கொடுப்பது கட்டாயம் ஆகிறது என்றால், கணவன் மனைவி உடலுறவு நடந்துவிட்டால் அப்போது மஹரை கொடுப்பது கடமையாகிவிடும். அதை தான் குர்ஆன் 4:24 கூறுகிறது.

*அத்தோடு மஹரை நிர்ணயித்த பின் உடலுறவு நடக்காமலே விவாகரத்து நடந்துவிட்டால், அப்போது மஹரின் பாதியை கொடுக்க வேண்டும் என்கிறது குர்ஆன் -2:237

ஆகவே மஹர் கடமையாகும் தருணமே தாம்பத்யம் நிகழ்தல்

*வசதியில் குறைந்தவர்களும் திருமணம் முடிக்க வேண்டும் என்பதற்காக அவரவர் வசதிக்கேற்ப மஹர் கொடுக்கலாம். இரும்பு மோதிரத்தையும் வழங்கலாம். தங்கக்குவியலையும் கொடுக்கலாம்.

இவர்கள் பேசுவதுபோல் கூறுவதானால்

கன்னியுடன் விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது மஹரை தகப்பனிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு வேசியிடம் பேய்மன்ட் கொடுப்பதற்கு ஒப்பாக பைபிள் கூறுகிறது என்று சொல்லலாமா?

யாத் 22:16-17 IRVTam

[16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam

அத்தோடு கன்னிப் பெண்ணை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக்காசுகளை கொடுத்து அவளை காலம் முழுதும் கற்பழிப்பதற்கு பைபிள் வழிகாட்டியுள்ளது என்று சொல்லலாமா?

உபாகமம் 22:28-29 TAERV

[28] “ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால், [29] அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.

https://bible.com/bible/3154/deu.22.28-29.TAERV

இதை வைத்து கற்பழிக்க ஐடியா கொடுப்பதாக எடுக்கலாமா?

9.குர்ஆன் 2:196 இலே ஹஜ்ஜுக்கு சென்று தடுக்கப்பட்டால்,தியாகம் பிராணியை அறுப்பதற்கு அனுப்பி விடுமாறு கூறுவதால், அல்லாஹ் சர்வசக்தியுள்ளவன் இல்லை என்கிறார். 

-இறைவன் போதனைகளை கட்டளைகளை வழங்கும் போது , படைப்புகளின் சக்திக்கு ஏற்ப தான் வழங்குவான். (குர்ஆன் 4:28)

-அத்தோடு தண்டனைக்காக குறித்த நேரத்தை இறைவன் நிர்ணயித்து விட்டதால் தான் இறைவனாக உடனடியாக தண்டிப்பதில்லை (குர்ஆன் 29:53)

*உடனுக்குடன் பாவத்திற்காக இறைவன் தண்டித்தால் சகல உயிரினமும் அழிந்திருக்கும் . ஆனாலும் குறித்த காலம் வரை பிற்படுத்துகிறான் (குர்ஆன் 16:61, 35:45)

*குற்றவாளிகளை இறைவனுக்கே தண்டித்து விட முடியும். ஆனாலும் சிலரை கொண்டு சிலரை சோதிப்பதற்காக இவ்வாறு ஆக்கியுள்ளான் (குர்ஆன் 47:4)

ஆக இதில் இறைவனின் பலவீனம் என்பது இவர்களின் அறிவீனம்.

 

-பைபிளில் கர்த்தர் யூதாவோடு கூட இருந்தும் எதிரிகளிடம் இரும்பு தேர்கள் இருந்தபடியால் முடியாமல் போய்விட்டது

நியாயாதிபதிகள் 1:19 IRVTam

[19] யெகோவா யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.

https://bible.com/bible/1899/jdg.1.19.IRVTam

10.பிள்ளைகளை கொல்வது பெண்களை கொல்வது மிருகங்களை கொல்வது எல்லாம் சங்காரம் செய்யும்போது நிகழுவது தானே என் கேட்டு, முகம்மது நபி கறுப்பு நாயை சைத்தான் என கூறி கொல்லச்சொல்லவில்லையா என்கிறார்.

*இஸ்லாம் போர்க்களத்தில் கூட சிறுவர்களை,பெண்களை கொல்லக்கூடாது என்று (புகாரி 3014,3015) கூறுகிறது

*தாகித்த நாய்க்கு நீர் புகட்டியதற்காக  இறைவன் அந்த நபருக்கு நன்றிகூர்ந்தான் (புகாரி 173). அத்தோடு உயிருள்ள எந்த மிருகம் விசயத்திலும் அவற்றுக்கு நலவு செய்தால் நற்கூலி உண்டு என்கிறது (புகாரி 2363)

*பூனையை கட்டிவைத்து பட்டினியால் சாகடித்த பெண் நரகத்தில் வேதனை செய்யப்படுவதை கண்டார்கள் நபிகளார் (புகாரி 2365)

இப்படி ஜீவகாருண்யத்தை இஸ்லாம் போதித்தாலும், தீங்கிழைக்கும் மிருகங்களை பிராணிகளை கொல்லுவதற்கு இஸ்லாம் ஏவியுள்ளது.

அந்த வகையில் கறுப்பு நாயை சைத்தான் தீங்கிழைக்க பயன்படுத்துவான் என்பதை அறிந்த நபிகளார் அவற்றை கொல்லுமாறு ஏவினார்கள்.

 

-வெறும் நானூறு வருட பகைமைக்காக, ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஆடுமாடுகள் ஒட்டகங்கள் கழுதைகள் அனைத்தையும் கொன்று போடுமாறு கர்த்தரே சொன்னார் :

1 சாமுவேல் 15:2-3 IRVTam

[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam

-அத்தோடு இஸ்ரவேலர் குடியேறுவதற்கு கொடுக்கும் ஊரில் மூச்சு விடும் எதையும் விடாமல் கொல்லுமாறு கர்த்தர் சொல்லுகிறார்:

உபாகமம் 20:16-17 IRVTam

[16] உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், [17] அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய்.

https://bible.com/bible/1899/deu.20.16-17.IRVTam

*மாடு முட்டி அடிமை செத்தால் மாட்டை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்

யாத்திராகமம் 21:32 IRVTam

[32] அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.

https://bible.com/bible/1899/exo.21.32.IRVTam

ஆனால் சுதந்திரமானவனை முட்டினால் எஜமானையும் சேர்த்து கொல்ல வேண்டும் (29வது வசனம்)

இப்படி மனிதனிடமும் இரக்கம் காட்டாமல் மிருகத்திடமும் இரக்கம் காட்டாமல் பைபிள் போதித்துள்ளது. இதை நம்பிக்கொண்டு ஐஸ்ஐஸ் தற்குறிகளை கூட விமர்சிக்கும் தகுதி இவர்களுக்கு இல்லை

11.குர்ஆன் மாதவிடாய் பெண்ணை விட்டு ஒதுங்கியிருக்க சொல்கிறது ஆனால் முகம்மது நபியோ கட்டி அணைத்தார் என்றும் இது குர்ஆனுக்கு முரணாக நடப்பதாக கூறுகிறார்.

*நபிகளார் குர்ஆனை விளக்கும்படிக்கு தான் குர்ஆன் அவர்மீது இறக்கப்பட்டது (குர்ஆன் 16:44)

*அந்தப்படியே நபிகளார் குர்ஆன் 2:222இற்கு விளக்கமாக உடலுறவை தவிர மற்ற அனைத்திலும் சேரத்துக்கொள்ளலாம் என்பதை வழி காட்டினார் (முஸ்லிம் 507 (302 அரபு ஆங்கிலம்))

-ஆகவே மாதவிடாய் பெண்ணை விட்டு ஒதுங்கியிருக்க சொல்வது உடலுறவை மட்டுமே.

பைபிள் ஒட்டுமொத்தமாக அசுத்தமாக அவளை ஆக்குவதை ஏற்றுக்கொண்டதாலே இவ்விமர்சனம் (லேவியாரகமம் 15:19-28)

 

12.அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என முஸ்லிம்கள் கூறுகிறார்கள் ஆனால் அல்லாஹ் தனக்கு உதவி புரிந்தால் அவனும் உதவி புரிவான் என குர்ஆன் 47:7 கூறுகிறது என்கிறார் வயோதிப போதகர். அதோடு அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார் என குர்ஆன் 2:245 கூறுகிறது என்கிறா

இறைவனுடைய விசயத்திற்கு அவனுடைய மார்க்கத்திற்கு உதவி புரிவதையே அல்லாஹ்வுக்கு உதவி செய்வதாக குறிக்கிறது. .

அப்படி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் என்பதை சேர்த்தே கூறுகிறது (47:7, 22:39&40)

உண்மையில் இறைவனுக்கு எதுவும் தேவையில்லை காரணம் அவனுக்கு தன்னை நிராகரித்தவர்களை நேரடியாக தண்டித்து விட முடியும் ஆனாலும் அவன் சோதிப்பதற்காக இவ்வாறு ஆக்கியுள்ளான் (47:4).

அத்தோடு பொறுமையாளர்களையும் இறைவனின் பாதையில் போரிடுவோரையும் வெளிப்படையாக அறிந்துகொள்ளவும் (குர்ஆன் 3:142) இவ்வாறு செய்வது அவசியமானது.

(மற்றபடி அகிலத்தாரைவிட்டும் அவன் தேவையற்றவன் (குர்ஆன் 3:97,

அத்தோடு அல்லாஹ்வுக்கு யாராலும் எந்த தீங்கையோ நலவையோ இழைக்க முடியாது.சகல மனிதர்களும் இறையச்சமுடைய ஒரே மனிதரை போல ஆகிவிட்டாலும் அதனால் இறைவனது ஆட்சியில் எதையும் அது அதிகரிக்காது. சகலரும் ஒரு தீய மனிதனாக மனிதனை போல ஆகி விட்டாலும் அதனால் இறைவனது ஆட்சியில் எதையும் குறைக்காது (முஸ்லிம் 5033 (2577a)

அத்தோடு கடன் என்பது அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதையே குறிக்கும். அதை கடனாக இறைவன் பார்க்கிறான். அதை இருமடங்காக்கி பலமடங்காக்குவான் என்று கூறி,அல்லாஹ் தான் செல்வத்தை பெருக்கியும் சுருக்கியும் தருபவன் என்பதையும் 2:245 கூறுகிறது.

அத்தோடு உங்களிடமிருப்பது தீர்ந்து போகும்.அல்லாஹ்விடமிருப்பதே நிலையானதாகும் (குர்ஆன் 16:96)

உலகில் வாழ்ந்த வாழுகிற  அனைவரும் ஒன்றுசேர்ந்து இறைவனிடம் தம் தேவைகளை கேட்டாலும் அதை அவன் வழங்குவான். அதனால் அவனிடத்தில்  உள்ள எதையும் குறைந்து விடாது கடலில் நுழைவித்து எடுக்கப்பட்ட ஊசி அதன் தண்ணீரில் குறைக்கும் அளவை தவிர (முஸ்லிம் 5033 (2577a))

 

-கிறிஸ்தவ நம்பிக்கைப் பிரகாரம், இரத்தம் இன்றி தேவனால் மன்னிக்கவே முடியாது

எபிரேயர் 9:22 IRVTam

[22] நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

https://bible.com/bible/1899/heb.9.22.IRVTam

 

13.புகாரி 7420 இலே ஸைதும் ஸைனபும் கணவர் மனைவியாக இருந்தபோது 33:37 இறங்கியதாக தற்குறித்தனமாக தப்பு தப்பாக வாசிக்கிறார்

*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிந்து கொள்வதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.

*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 2212)

இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.

*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)

இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார்

*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:

"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே.  மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்"

அதாவது சொந்த மகனின் முன்னால் மனைவியரை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.

*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420).

எவரும்  தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?

இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.

(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.  ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.

இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)

இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!!

 

*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :

ஆதி 16:5 IRVTam

[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள்.

https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam

(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)

 

*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

2 சாமு 12:14-15, 24 IRVTam

[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam

இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)

இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா

14. போதகர் முஸ்லிம் 2718 காட்டி அதிலே முகம்மது நபி மற்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் போய் உறவு கொண்டதாக கூறும் செய்தியை ஆபாசமாக சித்தரிக்கிறார்.

 

*இஸ்லாம் பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறே கூறுகிறது (குர்ஆன் 24:30-31)

*எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும், அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் என்றே நபிகளார் கூறினார்கள் (முஸ்லிம் 4363 (2159 ஆங்கிலம் அரபு), அபூதாவூத் 2148)

*எதேச்சையாக பார்வை விழுவது தப்பு அல்ல. மாறாக அதை இரண்டாவதாகவும் பார்ப்பதே தப்பு என்கிறது இஸ்லாம் (அபூதாவூத் 2149)

*இப்படி பார்வை தற்செயலாக விழுந்து அதனால் ஈர்க்கப்பட்டால், அந்த ஈர்ப்புக்கு  காரணம் ஹோமோன்கள் தான்.  அது அந்த நபரின் சக்திக்கு அப்பாற்பட்டது.

ஆனாலும் தன் சக்திக்குட்பட்டதான பேச்சையோ வேறு தவறான செயலையோ செய்தாலே விமர்சனத்திற்குரியதாக மாறும்

ஆனால் நபிகளாரோ , தன் இச்சையை கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மனைவியிடம் சென்று அவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார்கள் .

இதுவே சிறந்த முன்மாதிரியுமாகும்.

(உடனே திருமணமாகாதவன் எங்கே போக வேண்டும் என்று தற்குறித்தனமாக கேட்டால், அவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணமானவனோ தன் உணர்வை மனைவியிடம் தீர்த்துக் கொள்ளலாம்)

*ஆனால் பைபிளிலே கர்த்தரின் தீர்க்கதரிசி என்றும் இதயத்திற்கேற்ப செம்மையாக நடந்தவன் என கூறும் தாவீதோ அழகான பெண்ணை கண்டபோது கள்ளத்தனமாக விபச்சாரம் செய்தார்:

 

2 சாமுவேல் 11:2-4 IRVTam

[2] ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். [3] அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். [4] அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள்.

https://bible.com/bible/1899/2sa.11.2-4.IRVTam

(அத்தனைக்கும் தாவீதுக்குள் பரிசுத்த ஆவி இறங்கியிருந்தார்- 1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11....  )

*சிம்சோன் என்ற நியாயாதிபதி வேசிகளோடு உறவு வைத்தார் அவரிடமும் ஆவியானவர் பலமாக இறங்குவார். (நியா 14:6,19& 15:14) யெகோவா அப்போதும் அவனோடு கூட இருந்தார். ஆனால் தலைமுடியை வெட்டியவுடன் யெகோவா போய்ட்டார்:

நியா 16:1, 4, 19-20 IRVTam

[1] பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.

[4] அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.

[19] அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது. [20] அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

https://bible.com/bible/1899/jdg.16.1-20.IRVTam

(இவனை புகழ்ந்து எபிரேயர் 11:32 பேசுகிறது)

*உடனே இந்த தீர்க்கதரிசிகளும் நியாயாதிபதிகளும் கர்த்தர் கூட இருந்தாலும் ஆவியானவர் உள்ளே இருந்தாலும் விபச்சாரம் செய்வார்கள் தான். ஆனால் எங்களுக்கு அவர்கள் முன்மாதிரி இல்லை.. இயேசு தான் முன்மாதிரி என கதை விடுவார்கள்

இவர்கள் பார்வையில் இயேசு கடவுள். கடவுள் மனிதனாக வந்தால் அவர் பாவம் செய்வாரா? அவருக்கு பாவம் செய்யும் இச்சை இருக்குமா?  இப்படி இச்சையே இல்லாத நபர் இச்சையுள்ள மனிதர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருப்பார்?

கர்த்தர் தேர்வு செய்த தீர்க்கதரிசியும் நியாயாதிபதியும் பரிசுத்த ஆவி அருளப்பட்டவர்களும் யெகோவா கூட இருந்தும் இப்படி தரங்கெட்ட செயலில் ஈடுபடுகிறார்களே. அப்படியானால் அவர்களை அறியாமல் தேர்வு செய்தாரா? அறிந்தே தேர்வு செய்தாரா? அப்போ முழு தவறும் கர்த்தர் மீது தானே விழுகிறது.

(ஆனால் முகம்மது நபியோ உடன்படிக்கை எடுக்கும்போது கூட எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை (புகாரி 7214,2713). அத்தோடு எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்து, ஹோமோன்கள் (hormones) காரணமாக ஈர்ப்பு ஏற்பட்டபோது கூட தன் சொந்த மனைவியிடமே சென்றார்.(முஸ்லிம் 2718). அனைவரும் தன் சொந்த மனைவியிடமே செல்லவேண்டும் என்றும் வழிகாட்டினார் (முஸ்லிம் 2719). தற்செயலாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும் அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் (முஸ்லிம் 4363) என்றெல்லாம் வழிகாட்டினார்.

ஆனால் இயேசுவோ மற்ற பெண்கள் தன் காலை முத்தமிட வைத்து தலைமுடியால் வருட அனுமதித்து தைலமும் பூச அனுமதித்தார்- லூக்கா 7:38

வழிகாட்ட முன்மாதிரியாக வந்தவர் மற்ற பெண்களை தொட அனுமதித்தால், போதகர்கள் இவ்வாறு செய்ய வழிகாட்டலாக தானே இருக்கும்))

15.அபூதாவூத் 4484 இலே ஒரு குடிகாரன் மூன்றுமுறை தண்டிக்கப்பட்டும் திருந்தாவிட்டால் நான்காவது முறையில் அவனை கொன்று விடுமாறு கூறுகிறது என்பதை குற்றச்சாட்டாக வைக்கிறார்

*பல அறிஞர்கள் இந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று கருதுகிறார்கள்.

ஏனெனில் நபிகளார் குடிப்பவர்களுக்கு  கசையடிகளை நிர்ணயித்தார்கள். அபூபக்ர் அதை நாப்பதாக நிர்ணயித்தார். உமர் (ர) அவர்கள் தன் ஆட்சிக்காலத்தில் குடிகாரன் குடிச்சு விட்டு அவதூறும் பேசுவதால் என்பது கசையடிகளாக அதிகப்படுத்தினார்கள்.  அவர்களில் யாரும் மரணதண்டனை நிறைவேற்றியதாக எந்த தகவலும் இல்லை

*ஒரு பேச்சுக்கு இது செல்லுபடியான சட்டம் எனின், மது குடிப்பதை முற்றாக ஒழிக்கும் செயற்பாடாகவே இருக்கிறது.

இதை அநியாயமாக குழந்தைகளை கொல்லுமாறு சொல்லும் பைபிளோடு ஒப்பிடலாமா?

*பைபிள் குழந்தைகளையே வெறும் பகைமைக்காக கொல்லுமாறு கர்த்தர் சொன்னார். (1 சாமுவேல் 15:2-3).

*கர்த்தர் குடித்து சந்தோசமாக இரு என்று சொன்னதாக பைபிள் சொல்வதால் தானோ இதை விமர்சிக்கிறார்கள்?

உபாகமம் 14:26 IRVTam

[26] அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக.

https://bible.com/bible/1899/deu.14.26.IRVTam

(இங்கே குடிக்க சொல்லவில்லை. சாப்பிடத்தான் சொல்கிறது என சமாளிக்க பார்க்கலாம். ஆனால் உணவுகளோடு குடிபானத்தையும் சேர்த்து வரும்போது சாப்பிடுதல் என்பதை தான்   கூறும் (உதாரணமாக ஆதி 18:8 ))

*சோகத்தில் இருப்பவன் சரக்கு அடிக்கலாம் :

நீதி மொழிகள் 31:6-7 IRVTam

[6] மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; [7] அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.

https://bible.com/bible/1899/pro.31.6-7.IRVTam  

இப்படி மது குடிப்பதற்கு பைபிள் முற்றாக தடுக்கவில்லை என்பதாலும் அடிமையாகாத அளவுக்கு குடித்துக் கொள்ளலாம் என்று நம்புவதால் இது தப்பாக படுதோ?

(குழந்தைக்கொலைகளை (1 சாமுவேல் 15:3) ஏற்றுக்கொண்டு குடிக்கு அடிமையானவனுக்கு மீண்டும் மீண்டும் குடித்து அகப்பட்டால் நான்காவது தடவை மரண தண்டனை கொடுப்பதும் ஒன்றா?)

16..புகாரி 3401 இலே சிறுவன் காஃபிராக இருந்து தன் பெற்றோர் முஃமின்களாக இருந்தனர் என கூறப்படுகிறதை சுட்டிக்காட்டி இங்கேயும் குழந்தை கொலை உள்ளதே என்றார்

-முதலில் அவன் காஃபிராக இருக்கிறான் (புகாரி 3401) என்பதிலேயே அவன் குழந்தை அல்ல என்றும் தன் செயலுக்கு பொறுப்பான வயதை அடைந்தவன் என்பதை காட்டுகிறது

*அவன் தன் முஃமினான பெற்றோரை நிராகரிப்பிலும் வரம்பு மீறுவதிலும் தள்ளுவான் என (குர்ஆன் 18:80) கூறுகிறது. இதனால் தான் அவன் தண்டிக்கப்பட்டான்... அதாவது அவனது நல்ல  பெற்றோரை பாதுகாப்பதற்காக தான் இது.

*ஆனால் நபிகளாரோ போர்க்களத்திலும் சிறுவர்களை பெண்களை ,போரிடாத கூலியாட்களை கொல்லுவதை தடை செய்தார்கள் (புகாரி 3014-3015 & அபூதாவூத் 2669)

*பைபிளும் பெற்றோருக்கு கீழ் படியாத பிள்ளைகளை கொல்ல சொல்கிறது:

மாற்கு 7:9-10, 13 IRVTam

[9] பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது. [10] எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

[13] நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

https://bible.com/bible/1899/mrk.7.9-13.IRVTam

*அடங்காத சொந்த மதத்துக்காரனான மகனை கொல்ல வேண்டும் -கர்த்தர்

உபாகமம் 21:18-21 IRVTam

[18] “தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால், [19] அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: [20] எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக. [21] அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.

https://bible.com/bible/1899/deu.21.18-21.IRVTam

*ஆனால் மாற்றுமதத்துகாரனின் குழந்தைகளை கூட வெறும் பகைமைக்காக கொல்ல சொன்னார்:

1 சாமுவேல் 15:2-3 IRVTam

[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam

இப்படி ரண கொடூரமாக போதித்த கர்த்தரின் போதனையை சரி கண்டுகொண்டு, புத்தியை அடைந்தவனும் பிற்காலத்தில் தன் பெற்றோரை பெரும்பாவத்தில் தள்ளுபவனுமானவனை முன்பே ஒரே ஒரு நபர் ஒரே ஒரு தடவை தண்டித்ததை எப்படி குறை சொல்லலாம்?)

17.அல்லாஹ் நரகத்திற்கென்றே பலரை படைத்திருப்பதாக குர்ஆன் 7:179 ஐ குறிப்பிட்டு அநீதி என்கிறார். அத்தோடு 11:118,119 ஐ காட்டி மனிதர்கள் ஒரே கூட்டமாக இருப்பதை விரும்பவில்லை என்கிறார்

 

இறைவனுக்கு தன் படைப்புகளை படைக்க முன்பே அவர்கள் எப்படி நடப்பார்கள் எங்கே செல்வார்கள் என பூரணமாக அறிந்தே படைத்தான்

-அத்தோடு அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40)

-இந்த வசனத்திலேயே அவர்கள் நரகம் போவதற்கான காரணம், அவர்கள் கண்களிருந்தும் பார்க்காமலும் காதுகளிருந்தும் கேட்காமலும் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காமலும் இருந்ததால் தான் என அவ்வசனமே சொல்கிறது. (7:179)

-நரகத்தில் பாவிகள் தம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்பே நுழைவார்கள் (39:71,40:11,67:11,6:30). அத்தோடு தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40)

-நரகத்திற்கென்றே படைத்திருப்பதென்பது, இறைவனது முன்னறிவினால் அவர்கள் தம் பாவங்களால் நரகத்நிற்கே செல்வார்கள் என அறிந்து படைத்ததாலும், இறைவன் அனுமதியின்றி அவன் ஆற்றல் வழங்காமல் எதையும் யாருக்கும் செய்ய முடியாது என்பதால் மட்டுமே. ஆனாலும் அவனவன் தன் சுய தேர்வின் படியே தன் விருப்பத்தின் படியே பாவம் செய்கிறான். நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம் செய்வதில்லை!

-11:118 குறித்து, இறைவன் விரும்பினால் அனைவரையும் ஒரே மார்க்கத்தில் நிலைத்திருக்க செய்ய முடியும். காரணம் அவன் சர்வ சக்தியுள்ளவன். ஆனால் மனிதர்களுக்கு சுயதேர்வையும் அதன்படி நடக்கும் ஆற்றலையும் இறைவன் வழங்கியுள்ளான் சோதனைக்காக. (67:2, 6:165, ). அதன்படி அவன் குற்றவாளிகளை தண்டிப்பான் நல்லவர்களை மன்னிப்பான்.

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

பைபிளிலும் கர்த்தரே விசுவாசிக்காதபடி இருதயத்தை கடினப்படுத்துபவர்

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

பொய்யை விசுவாசிக்கவேண்டி வஞ்சகத்தையும் அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12).  நியாயமின்றி உத்தமமான யோபுவை நிர்மூலமாக்க சாத்தான் ஏவியதை செய்தவர் (யோபு 2:3).. அத்தோடு தம் பிள்ளைகளை நரபலி கொடுக்க வைத்து வழிகெடுத்தவரும் அவரே(எசேக்கியேல் 20:25-26). ஜனங்களை வழி தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17,) கெடுதியை படைத்தவர் (ஏசாயா 45:7), கெடுதியாக நடந்துகொள்ள வைப்பவர் (சங்கீதம் 105:25) பொல்லாத ஆவியை அனுப்பி ஜனங்களை பாவம் செய்ய வைப்பவர் (1 சாமுவேல் 18:10, 19:9, 1 இராஜாக்கள் 22:18-23) இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

ஆதலால் இது தற்குறித்தனமானது

18.பாவம் செய்யாவிட்டால் அல்லாஹ் உங்களை போக்கி விட்டு பாவம் செய்கிற மற்றொரு சமூதாயத்தை கொண்டாவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவார்கள். அவன் அவர்களை மன்னிப்பான்  எனும் முஸ்லிம் 5304 ஐ குறிப்பிட்டு , அல்லாஹ் பாவம் செய்வதை விரும்புவதாகவும் பரிசுத்தவான்களை வெறுப்பதாகவும் கூறுகிறார்.

 

இறைவன் படைப்பை படைக்க முன்பே மனிதர்கள் பாவம் செய்வார்கள் என அறிந்தே படைத்தான். அதற்கு பிராய்ச்சித்தமாக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹ் மன்னிக்க விரும்புகிறான்

பாவம் செய்யாதிருக்கும் மக்களானால் மனிதர்கள் தம்மை தாமே பரிசுத்தவான்கள் என கருதி பெருமையடித்து பெரும்பாவத்திலேயே விழுந்து விடுவார்கள்.. அதனால் இறைவன் அவர்களை அழித்து விடுவான். பாவம் செய்து இறைவனிடம் மீளும் பணிவுள்ள அடியார்களை இறைவன் கொண்டு வருவான்.

இங்கே இறைவன் பாவம் செய்ய வேண்டும் என சொல்லவில்லை... மனிதன் பாவம் செய்பவனாகவே படைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு அவன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு பணிவாக நடந்துகொள்ளவேண்டும் என்பதையுமே வழிகாட்டுகிறார்..

பொதுவாக பாவம் செய்யாத மனிதன் இல்லை.

ஒரு பேச்சுக்காக அப்படி இருந்தால், பாவம் செய்யாத மனிதனுக்கு இறைவன் தேவைப்பட மாட்டான்.  பாவம் செய்யும் மனிதனுக்கு தான் தன்னை மன்னிப்பதற்கு இறைவன் தேவை.

இறைவன் மீது தேவைப்படாத மனிதர்களை இறைவன் ஏன் வைக்க வேண்டும்? அத்தோடு பாவம் செய்யாதவனாக இருந்தால் தன்னை குறித்து யோக்கியன் என கருதி தற்பெருமையடித்துக்கொள்வான் . இதனால் வேறொரு பெரும்பாவம் ஏற்பட்டு அழிவையே சந்திப்பான்.

ஆனால் இறைவனோ அப்படி பாவம் செய்து திருந்துவோரை மன்னிக்கவே நாடுகிறான். அதை தான் முஸ்லிம் 5304 கூறுகிறது.

.

 இதிலே எந்த நியாயமான விமர்சனமும் இல்லை.

பைபிளிலே கர்த்தரே பாவத்தை செய்வித்துள்ளார்:

எசேக் 20:25-26 IRVTam

 

[25] ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். [26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.25-26.IRVTam

19.குர்ஆன் 33:52 இலே "அவர்களின் அழகு உம்மை கவர்ந்த போதிலும் வேறு பெண்களை மணக்கவோ இருக்கும் மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் முடிகாகவோ கூடாது" என்பதை குறிப்பிட்டு முகம்மது  எல்லா பெண்களையும் பார்த்துதிரிவதாக கூறுகிறது என்கிறார் வயோதிப போதகர்.

உண்மையில் அவ்வசனம் அப்படி சொல்லவில்லை. மாறாக வேறு திருமணம் முடிக்க கூடாது என்றே கூறுகிறது. அதாவது தற்செயலாக ஒரு பெண் மீது பார்வை விழுந்து அப்பெண்ணின் அழகு கவர்ந்தாலும் கூடாது என்பதே இது கூறும் கருத்து

நபிகளார் எப்படி நடந்து கொண்டார்கள் என்றால், உடன்படிக்கை எடுக்கும்போது கூட ஆண்களிடம் கையை பிடித்து வாங்குபவர் பெண்களை தொடாமல் வாயளவிலேயே உடன்படிக்கை எடுப்பார் (புகாரி 7214,4891,2713). அத்தோடு எதேச்சையாக பார்வை விழுந்தால் உடனே பார்வையை திருப்பிக் கொள்ள வேண்டும் என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (முஸ்லிம் 4363 (2159), அபூதாவூத் 2148)... அத்தோடு தற்செயலாக விழும்  முதல் பார்வை குற்றமில்லை அதை மீண்டும் பார்ப்பதே குற்றம் என நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2149).

-பைபிளில் கன்னியுடன் விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் மஹரை கொடுத்துவிட்டு போகுமாறு சொன்னதை வைத்து, ஒரு கன்னியின் அழகு கவர்ந்தால் அவளை கரெக்ட் பண்ணி விபச்சாரம் செய்ய பைபிள் வழிகாட்டுகிறது என சொல்லலாமா?

யாத்திராகமம் 22:16-17 IRVTam

[16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam

-கன்னியை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக்காசுகளை கொடுத்து திருமணம் செய்து காலம் முழுதும் கற்பழிக்க வழிகாட்டும் வசனத்தை வைத்து, கன்னியின் அழகு கவர்ந்தால் கற்பழிக்க ஐடியா கொடுப்பதாக பேசட்டுமா?

உபாகமம் 22:28-29 IRVTam

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam

இதுபோல் பெண்களால் கவரப்பட்டு கற்பழித்த உன்னதமான கதைகளையும் பைபிள் கூறுகிறது

1.அம்னோன் என்பவன் தன்  தங்கச்சியை பனியாரம் சுடவைத்து ,அவள் அருகே வந்ததும் கற்பழித்தான்- இதை விரிவாக ஆராய்ச்சி செய்து பைபிள் 2 சாமுவேல் 13 கூறுகிறது

2.தாவீது ராஜா குளிக்கும் பெண்ணின் அழகில் மயங்கி அவளை கூப்பிட்டனுப்பி அவளை புணர்ந்தார் (2 சாமுவேல் 11:2-4). பிறகு அவளையே மனைவியாக்கி புணர்ந்த போது பிறந்த குழந்தையை கடவுளே நேசித்தார்-(2 சாமுவேல் 12:24)

 இதிலே என் தாவீதை கண்டுபிடித்தேன் என அருமையாக பேசுகிறார் (சங்கீதம் 89:20)

3.யூதா என்பவனோ தன் மருமகளை வேசி என நினைத்து பேய்மண்ட் கொடுத்து விபச்சாரம் செய்தான் (அவள் பேய்மண்ட் எடுக்காமல் போய்ட்டாள்)(ஆதி 38:14-20). இதற்கு முன் இவனது மகன் விந்தை உள்ளே விடாததற்காக தேவன் கொன்றார் (ஆதி 38:8-10). ஆனால் இவனோ விபச்சாரம் செய்தும் உள்ளே விட்டதால் தேவன் கண்டுக்கவில்லை போலும். இவனது வம்சத்தில் தான் தாவீதும் வந்தார்

4.யாக்கோபின் மகனும் யூதாவின் அண்ணனுமானவன் தன் தகப்பனின் வப்பாட்டியை புணர்ந்தான் (ஆதி 35:22)

வெறுமனே திரும்பிப் பார்த்த லோத்துவின் மனைவியை உப்புச்சிலையாக்கிய தேவன் இதை கண்டுக்கவேயில்லை

5.உன்னதமான மோசே அவர்களின் பிறப்பு கூட அவரது தகப்பன் தன் தந்தையின் சகோதரியிடமே பெற்றார் அதாவது அத்தையும் மறுமகனுக்கும் பிறந்தவனே -யாத்திராகமம் 6:20.. இவர் இங்கே legalஆக பிள்ளை பெற்றார்

இவற்றில் எதையுமே கர்த்தர் அவை நடந்தபோதோ அதன் பின்போ கண்டிக்கவில்லை (உடனே தோரா இந்த கள்ள உறவுகளை ஏற்கவில்லை தடை செய்கிறது என கூறலாம். ஆனால் தோரா வந்ததே இந்த உறவுகளில் தான் என்கிறது பைபிள்)

20.புகாரி 5255 இலே முகம்மது நபி ஜாவ்ன் குல பெண்ணை தொட்டதாக தப்பாக பேசுகிறார்.

அதற்கு முந்திய ஹதீஸிலே அந்த பெண் நபியின் மனைவி என தெளிவாக உள்ளது (புகாரி 5254).  அந்த பெண்ணின் மனம் மாறி விருப்பமில்லாத போது கூறிய வார்த்தைகளே புகாரி 5255 இலே உள்ளது. அப்போது அவரை சமாதானப்படுத்துவதற்கு தொட போனார். அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவே நபிகளார் விட்டுவிட்டார்கள் அத்தோடு இரண்டு சணல் ஆடைகளை நன்கொடையாக கொடுத்தார்கள். இதை இமாம் புகாரி விவாகரத்து எனும் தலைப்பின் கீழ் தான் கொண்டு வருகிறார். அதாவது இதை விவாகரத்து தான். குறிப்பாக அங்கே அந்த பெண்ணின் செவிலித்தாயும் இருந்தார்.

இந்த ஹதீஸ் நபிகளாரின் முன்மாதிரிக்கு தான் ஆதாரம். அவர் அவளை பலவந்தப்படுத்தியிருந்தால் அதை விமர்சிப்பதற்கும் யாரும் இல்லை என்றிருக்க நபிகளார் மிகவும் ஒழுக்கமாக அப்பெண்ணிற்கு நன்கொடை கொடுத்து அனுப்பினார். (ஆனால் பைபிளிலோ பலவந்தப்படுத்தி உடலுறவு கொண்டால் அவளை காலம் முழுதும் பலவந்தப்படுத்திக்கலாம்/மனைவியாக்கலாம் உபாகமம் 22:28-29.... இதன்படி நபிகளார் நடக்காததால் இவர்கள் காண்ட் ஆகிறார்களா?)

ஆனால் பைபிள் பிரகாரம், கன்னியை பலவந்தப்படுத்தி புணர்ந்தாலே அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம் என காண்பிக்கப்படுகிறது (உபாகமம் 22:28-29). இது போன்று நபிகளார் நடக்கவில்லை

ஆனால் பைபிளிலோ உரியாவின் மனைவியை இரண்டாவது தடவையாக புணர்ந்ததை கர்த்தர் சரி கண்டு அதில் பிறந்த குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24) 

21.புகாரி 314இலே மாதவிடாயிலிருந்து சுத்தமான பெண் எப்படி குளிக்க வேண்டும் என்று கூறப்படும் செய்தியை கொச்சையாக பேசுகிறார்.

இது மார்க்க வழிகாட்டலில் எப்படி குளிக்க வேண்டும் என்பதை குறித்தே கூறப்படுகிறது.  கல்வியை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வெட்கப்பட தேவையில்லை!

பொதுவாக குளிப்பது எல்லோரும் அறிந்தாலும் மார்க்க வழிகாட்டலில் மாதவிடாயிலிருந்து சுத்தமானதும் குளிப்பதை நபிகளாரிடம் கேட்ட போது கற்பித்ததே அது..

அந்த ஹதீஸிலே நபிகளார் அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு மிக நாகரீகமாக பதில் கூறினார்கள் . வெட்கப்படும் விசயத்தை நபிகளார் கூறவில்லை.. அதை அவரது மனைவியே தெளிவு படுத்தினார் அந்த பெண்ணுக்கு.

 

கர்த்தரோ விபச்சார வர்ணனையே செய்கிறார் சிலை வணக்கத்தை கண்டிக்கும் பெயரில்:

எசேக்கியேல் 23:3 IRVTam

[3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.

https://bible.com/bible/1899/ezk.23.3.IRVTam

எசேக்கியேல் 23:20-21 IRVTam

[20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

https://bible.com/bible/1899/ezk.23.20-21.IRVTam

இப்படி கர்த்தர் சொன்னது ஓகேயாம். ஆனால் அந்தரங்க உறுப்பை வாசணைத்திரவியத்தை பயன்படுத்தி சுத்தம் செய்ய சொன்னது அசிங்கமாம்....... சுத்தமும் விபச்சாரமும் ஒன்றா ப்ரோ.

22.முஸ்லிம் 2827 இலே யூதர்கள் கூறிவந்த கருத்தான "மனைவியின் பிறப்புறுப்பில் பின்பக்கமாகவிருந்து உறவு கொண்டால் குழந்தை மாறுகண்ணுடையதாக பிறக்கும்" என்ற கருத்தை மறுத்து உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலம். உங்கள் விளைநிலத்திற்கு விரும்பியபடி செல்லுங்கள் என குர்ஆன்  2:223 கூறுவதை தற்குறித்தனமாக விமர்சிக்கிறார்

இஸ்லாம் வெறுமனே ஆன்மீகத்தை மட்டுமே உடைய மார்க்கம் அல்ல.. மாறாக இல்லறம் சமூகவியல் ஆட்சியதிகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மார்க்கம்

*அதனால் இல்லறம் பற்றி பொய்யான அறிவீனமான தகவல் பரவும் போது அதை தெளிவு படுத்திக் கொடுப்பதும் நல்ல விடயமே.

*இதை தெளிவு படுத்தா விட்டால், மாறுகண்ணுடன் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் இவ்வாறு தான் உறவு கொண்டனர் என்ற கருத்து பரவி, அவர்களை குற்ற உணர்ச்சியோடு வாழவைக்கும் அறிவீனம் பரவிவிடும்.

ஆணுறுப்பு வர்ணனை உடலுறவு வர்ணனைகளை கூறும் வசனங்களை வைத்தால் கொண்டு இதை விமர்சிக்கலாமா?

மாரபகங்கள் அமுக்கப்பட்டு முலைக்காம்புகள் தொடப்பட்டது என்றும் காதலர்களின் ஆணுறுப்பு கழுதை ஆணுறுப்பு என்றும் அவனுடைய விந்து குதிரை விந்து என்றும் பச்சையாக ஆபாசமாக இருப்பதை வேதம் என வைத்துக்கொண்டு இதை பேசலாமா (எசேக்கியேல் 23:3,20-21)

23..புகாரி 2229 இலே போர் கைதிகளுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும்போது விந்தை வெளியே சிந்துவது குறித்து அப்படி செய்வதால் எதுவும் பிரயோசனம் இல்லை எனும் கருத்துப்படி வருவதை வைத்து ஆபாசமாக சித்தரிக்க பார்க்கிறார்.

போரில் அடிமைகளாக பிடிக்கப்படும் வழமை பலகாலமாக இருந்தவொன்று தான்.

முஸ்லிம்கள் அவர்களை சிறையில் அடைக்காமல் தமக்கிடையே பங்கிட்டு அவர்களிடம் வேலை வாங்குவதும் பெண் அடிமைகளுடன் தாம்பத்யத்தில் எஜமானர்கள் ஈடுபடுவதும் அன்றைக்கு சாதாரணமானதே. காரணம் அப்போது அவர்கள் எஜமானின் சொத்துக்கள்.

ஆனாலும் இஸ்லாம் இதை ஒழுங்குபடுத்தி கர்ப்பிணியான பெண்ணோடு அவள் குழந்தையை பெற்றெடுக்கும்வரையிலும் ஏனைய பெண்களாயின் மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமாகும் வரையிலும் தாம்பத்யத்தில் ஈடுபடுவது கூடாது என தடை விதிக்கிறது (அபூதாவூத் 2157)

இப்படி தாம்பத்யத்தில் ஈடுபடும்போது கர்ப்பமாகாமல் இருப்பதற்காக விந்தை உட்செலுத்தாமல் இருப்பது குறித்தே இந்த ஹதீஸ் பேசுகிறது.

(பைபிளில் மனைவியின் நிலையே இஸ்லாத்தில் அடிமையின் நிலை.. காரணம் இருவருக்கும் சொத்துரிமை இல்லை ஆனால் பெற்றெடுக்கும் குழந்தைக்கு உண்டு.. ஆனால் இஸ்லாத்தில் மனைவியருக்கு சொத்துரிமை பேச்சுரிமை உண்டு. பைபிளில் இல்லை)

 பைபிளிலே வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் வழமை இருந்தது. அதை தப்பு என பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது. 

மாறாக தாவீதுக்கு பல வப்பாட்டிகள் வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:12-13).

உரியாவின் மேட்டரில் தவிர தாவீது பாவமே செய்யவில்லை என்று 1 இராஜாக்கள் 15:5 கூறுகிறது. அதன்படி கர்த்தரின் பார்வையில் வைப்பாட்டி வைத்ததும் தப்பாக பாவமாக தெரியவில்லை என காட்டுகிறது.

 

*அத்தோடு தேவனின் நண்பர் என அழைக்கப்படும் ஆபிரகாம் கூட பல வைப்பாட்டிகளை வைத்திருந்தார் என ஆதியாகமம் 25:6 கூறுகிறது . இந்த ஆபிரகாமும் அனைத்திலும் கர்த்தர் கட்டளையிட்ட படி விலகாமல் இருந்தார் என்கிறது பைபிள். (ஆதி 26:4-5) அதன்படி வைப்பாட்டி வைப்பதும் நியாயப்படுத்தப்படுகிறது.

 

24.முஸ்லிம் 2909 இலே போரிலிருந்து வரும்போது ஊரிலுள்ள தம் மனைவியரை தலைவாரி சவரக்கத்தியால் தயார்படுத்திக் கொள்ளுமாறு செய்தியனுப்பிவிட்டு இரவாகி செல்லுங்கள் என ஆண்களிடம் கூறப்பட்டதை தப்பாக விமர்சிப்பதற்காக மற்றவர் மனைவியர் எப்படி இருந்தால் இவருக்கென்ன என்று கேட்கிறார்

மற்ற தோழர்கள் அவரவர் தன் சொந்த மனைவியரோடு தாம்பத்யத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தான் அவ்வாறு வழிகாட்டினார்கள்.

சாதாரணமாக அவர்கள் அலங்கோலமாக இருக்கும்போது கணவர்கள் சென்றால் வெறுப்பு தானே ஏற்படும். அதற்கு நல்ல பாடத்தை நபிகளார் காட்டுகிறார்கள்

இங்கே நபிகளார் பெண்களிடம் இப்படி நடக்கட்டும் என கூறவில்லை... மாறாக அவர்களின் கணவர்களிடம் தாமதித்து போனால் அப்பெண்களே அவ்வாறு தயாராகிக்கொள்வார்கள் என கருத்தை சொல்கிறார்கள்.

இதை விமர்சிக்க ஏதாவது தகுதி இருக்கிறதா?

 

இதென்ன பிரமாதம் கர்த்தரே சேவிங் பண்ணுவிப்பாராம்

ஏசாயா 7:20 IRVTam

[20] அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் சிரைத்துப்போடுவிப்பார்.

https://bible.com/bible/1899/isa.7.20.IRVTam

கால் மயிறு என்பது அந்தரங்க உறுப்பின் மயிரை தான் என் நேரடியாகவே NIV மொழியாக்கம் சொல்கிறது:

Isaiah 7:20 NIV

[20] In that day the Lord will use a razor hired from beyond the Euphrates River—the king of Assyria—to shave your heads and private parts, and to cut off your beards also.

https://bible.com/bible/111/isa.7.20.NIV

அத்தோடு ஆபாச விபச்சார வர்ணனைகளை வைத்துக்கொண்டு குடும்பவாழ்க்கைக்கு வழிகாட்டும் இஸ்லாத்தை கேலி செய்யலாமா?

எசேக்கியேல் 23:3,20 என்பன கள்ள காதலியின் முலையமுக்குவதையும் கழுதை ஆணுறுப்பு என காதலனின் ஆணுறுப்பை வர்ணித்து அவனுடைய விந்தை குதிரை விந்து என்றும் இன்னொரு இடத்தில் பெருத்த ஆணுறுபுபுடையவனுக்கு விரித்துக் கொடுத்தாள் என்றும் சொல்வதை வைத்துக்கொண்டு இதை விமர்சிக்க முடியாது

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 16:26 TAERV

[26] பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய்.

https://bible.com/bible/3154/ezk.16.26.TAERV

 

25.முஸ்லிம் 4464  ஹதீஸை குறிப்பிட்டு முறையாக வாசிக்காமல் அதிலே தொற்றுநோய் கிடையாது என அறிவியலுக்கு முரணாக பேசுவதாக வயோதிப போதகர் கூறுகிறார்.

அந்த ஹதீஸிலேயே ஆரோக்கியமாகவுள்ள ஒட்டகத்தை நோயுள்ள ஒட்டகத்திடம் கொண்டு சென்றால் அதற்கும் நோய் வருகிறதே என நபிகளாரிடம் கேட்டதற்கு, முதல் ஒட்டகத்நிற்கு நோயை கொடுத்தது யார் என கேட்டார்கள்.

அதாவது நோயை கொடுப்பவன் இறைவன் தான் என்ற இறையியலை குறிப்பிடுகிறார்கள். கிருமிகளால் நோய் ஏற்பட்டாலும் அதை படைத்ததும் இறைவன் என்பதாலும் இறைவனின் அனுமதியின்றி எதுவும் நிகழாது எனும் அர்த்ததிலே தான் கூறுகிறார்கள்.

நோயுள்ள ஒட்டகத்திடம் ஆரோக்கியமான ஒட்டகம் சென்றால் அதற்கும் நோய் ஏற்படுவதை நபிகளார் மறுக்கவில்லை.

இறைவன் தான் நோயை கொடுக்கிறான் என்றே சொல்கிறார்கள்.

அதனால் தான் தொழுநோயாளியை கண்டால் சிங்கத்தை கண்டு விரண்டோடுவது போல ஓடிவிடும் படியும் (புகாரி 5707), நோயில்லாத ஒட்டகத்தை நோயுள்ள ஒட்டகத்தோடு சேர்க்க வேண்டாம் என்றும் கூறினார்கள் (புகாரி 5774).

இயக்குபவர் இறைவனே என்ற அடிப்படையை போதிப்பதே இந்த ஹதீஸ்

அறிவியலுக்கு முரணாக பைபிளில் அநேகம் உள்ளன

இரவு பகலை சூரியனை படைக்க முன்பே உண்டாக்கிவிட்டாராம். அதாவது சூரியன் நான்காம் நாளில் படைக்கப்பட்டதாம். அதற்கு முன் மூன்று காலைகளும் மூன்று மாலைகளும் ஏற்பட்டுவிட்டன என்கிறது பைபிள் (ஆதியாகமம் 1:3-16)

 

இரத்தத்தில் நோய்க்கிருமிகள் இருக்கும்போது , அதை தெளித்து சுத்தம் செய்வது எத்தகைய அறிவியல்?

லேவியராகமம் 14:50-53 TAERV

[50] அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். [51] பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். [52] குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். [53] பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.

https://bible.com/bible/3154/lev.14.50-53.TAERV

26.மண்ணறையில் அடக்கப்பட்ட யூதப்பெண்ணுக்காக அவளது வீட்டில் அழுதுகொண்டிருப்பதையும் அவளோ கல்லறையில் வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருப்பதையும் கூறும் புகாரி 1288 ஹதீஸை குறிப்பிட்டு இங்கு அழுதால் அங்கே வலிக்கும் என்பது எந்த அறிவியல் என்கிறார்

 

மரணித்தவர்கள் தம் பாவத்திற்காக வேதனை செய்யப்படுகிறார்கள் என்பது அறிவியலாக தான் இருக்க வேண்டுமா?

 

இரத்தம் பாவத்தை போக்கும் என்பது எந்த வித அறிவியல்?

 

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 9:22 TAERV

[22] அனைத்தையும் இரத்தத்தால் சுத்தப்படுத்த முடியும் என்று சட்டம் சொல்கிறது. இரத்தம் இல்லாமல் எவ்வித பாவங்களும் மன்னிக்கப்படமாட்டாது.

https://bible.com/bible/3154/heb.9.22.TAERV

27.மலம் கழித்தால் கல்லால் சுத்தம் செய்வதும் ஒற்றைப்படையில் சுத்தம் செய்வதையும் குறித்து தற்குறித்தனமாக கேட்கிறார்

 

அந்தக்காலத்தில் இருந்த டாய்லட் பேப்பர் தான் கற்கள். அதனாலாவது சுத்தம் செய்வதற்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

ஒற்றைப்படையில் குறைந்தது மூன்றாவது வரும் விதமாக நபிகளார் ஒற்றைப்படையில் செய்ய சொன்னார்கள். (புகாரி 156) .அத்தோடு நபிகளார் ஒற்றைப்படையை விரும்பினார்கள்

 காரணம் இறைவன் ஒற்றையானவன். ஆக இது ஆன்மீகத்தோடும் மாம்சத்தோடும் கலந்தது.

(உதாரணமாக ஆறு கற்களில் சுத்தமாகி விட்டால், ஏழாவது கல்லினால் மீண்டும் சுத்தம் செய்தால் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அது நல்லது தானே!!)

பைபிளில் இதற்கான வழிகாட்டல்கள் கிடையாது.

குழிதோண்டி ஆய்போகுமாறு வேண்டுமானால் கூறப்பட்டுள்ளது இல்லாவிட்டால் பீ நாற்றத்தினால் தேவன் சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது

உபாகமம் 23:12-14 IRVTam

[12] “உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும். [13] உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும். [14] உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.

https://bible.com/bible/1899/deu.23.12-14.IRVTam

28.காலத்தை திட்டுவதால் இறைவன் புண்படுத்தப்படுவதாக இறைவன் கூறியதாக புகாரி 4826 ஐ குறிப்பிடுகிறார்

இது இறைவனின் அறியாமையை வெளிப்படுத்தும் ஒன்றல்ல..

மாறாக மனிதன் இறைவனின் அதிகாரத்தில் விமர்சிப்பது இறைவனை ஏசுவதும் நோவினைப்படுத்துவது தான்.

ஆனால் பைபிளிலோ தன் செயலுக்காக தேவன் மனஸ்தாபப்படுகிறார் வருத்தப்படுகிறார். அவர் செய்த செயலுக்கு அவர் வருத்தப்படுவது தானே அறிவீனம்?

 

-தேவனை வேதனைப்படுத்தி எரிச்சலூட்டினர்

சங் 78:40-41 IRVTam

[40] எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள். [41] அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.

https://bible.com/bible/1899/psa.78.40-41.IRVTam

-மனவேதனை அடைந்த தேவன்

எசேக்கியேல் 6:9 IRVTam

[9] என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து,

https://bible.com/bible/1899/ezk.6.9.IRVTam

படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டதும் சவுலை ராஜாவாக்கியதற்கு மனஸ்தாபப்பட்டதும்

ஆதி 6:6 IRVTam

[6] தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.

https://bible.com/bible/1899/gen.6.6.IRVTam

1 சாமுவேல் 15:11 IRVTam

[11] நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.

https://bible.com/bible/1899/1sa.15.11.IRVTam

இதை வைத்து கொண்டு பேசலாமா?

 

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1