குர்ஆன் இறைவேதமா IPC vs TNTJ 3

Part 1

 Part 2



41.வலக்கரம் சொந்தமான அடிமைப்பெண்களுடன் உறவு கொள்வதை குர்ஆன் அனுமதிக்கிறது -23:6 என்றார், பிறகு புகாரி 2229 குறிப்பிட்டார்

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது.

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

 

தன் சொத்தாக இருக்கிற அடிமைப்பெண்ணுடன் அவளுடைய எஜமான் உறவு கொள்வது கணவன் தன் மனைவி மீதுள்ள உரிமை அதிகாரம் ஆகியவற்றை விட அதிகமானது. இதன்காரணமாக அத்தகைய உறவை அனுமதித்ததால் இறைவேதம் இல்லை என்றாகுமா?

42.குர்ஆன் 46:15 மனிதன் 40 வயதை அடைந்து இறைவனிடம் பிரார்த்திப்பான் என்கிறது. அப்படி செய்யாதவர்கள் உள்ளனரே என்றார்

குர்ஆன் மற்றும் ஹதீஸின் நடைமுறையில் உள்ள ஒரு விசயம் தான் ஏவலை படர்க்கை நிகழ்காலத்தில் குறிப்பிடுவதும்.

உதாரணமாக அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள் . மூடர்கள் அவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால் "ஸலாம்" என்று கூறுவார்கள் (25:63 தொடக்கம்) 

ஒரு முஃமின் ஒரே பொந்தில் இருதடவை தீண்டப்பட மாட்டான் (புகாரி 6133)

இவை இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதற்கு இவ்வாறு நடப்பார்கள் என கூறுகிறது.

அதுபோன்றே 46:15 ஒரு மனிதன் 40 வயதை அடைந்தால் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டலே இது. தீர்க்கதரிசனம் அல்ல!!

பொய்யான வாக்குறுதி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

விசுவாசிகள் விசத்தை குடித்தாலும் விச ஜந்து கடித்தாலும் எந்த பாதிப்பும் வராது என இயேசு சொல்கிறார்:

மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:17-18 TAERV

[17] விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், [18] அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.

https://bible.com/bible/3154/mrk.16.17-18.TAERV 

இதை நம்பி அநேக விசுவாசிகள் செத்து போகின்றனர்... இதற்காகவே சிலர் இதை உவமை என்று கதை விடுவார்கள்.

-பழைய ஏற்பாட்டு பொய் வாக்குறுதிகள்

நீதிமொழிகள் 10:3-4, 27, 30 IRVTam

[3] யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். [4] சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

[27] யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

[30] நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

https://bible.com/bible/1899/pro.10.3-30.IRVTam

இயேசுவே பசியால் வாடி அத்திமரத்தில் பழம் இல்லாத காலத்தில் பழம் தேடி போனார். உலகில் அநேக குழந்தைகள் பசியால் இறக்கின்றன.  எத்தனையோ பக்திமான்கள் குறுகிய ஆயுளில் இறந்து போகிறார்கள். எத்தனையோ திருடர்களும் விபச்சாரகர்களும் நீண்ட ஆயுள் வாழ்கின்றனர்.. எத்தனையோ சோம்பேறிகள் செல்வந்தர்களாக உள்ளனர். சுருசுருப்பான எத்தனையோ வேலைக்காரர்கள் உணவின்றி அலைகிறார்கள்.

குர்ஆனின் நடைமுறை இவர்களுக்கு புரியாததால் அது இறைவேதம் இல்லை என்றாகுமா?

43.குர்ஆன் 2:125,3:97,28:57 போன்றன மக்கா, கஃபா பாதுகாப்பான இடம் என்கிறது. ஆனால் யுத்தம் கொலைகள் விபத்துகள் நடந்துள்ளன என்றார்
 

இது சட்டமாகும். அதாவது அங்கே யுத்தம் செய்யவோ கொலை செய்யவோ கூடாது அபயம் கொடுக்க வேண்டும் என்பதே அதன் கருத்து

அதை நபிகளாரது கருத்து தெளிவாக விளக்கியுள்ளது.

இங்கே கொலை செய்ய கூடாது யுத்தம் செய்ய கூடாது எனக்கு முன் யாருக்கும் இங்கே யுத்தம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. எனக்கும் பகலின் சிறு நேரமே அனுமதிக்கப்பட்டது. எனக்கு பின்பு யாருக்கும் இங்கே யுத்தம் செய்ய அனுமதி இல்லை. இதன் முட்செடிகள் அகற்றப்பட கூடாது மரங்கள் வெட்டப்பட கூடாது. ஆனால் கொலை செய்யப்பட்டால் உறவினர் பழிவாங்குவது அல்லது நட்டயீடு பெறுதல் ஆகியவற்றில் ஒன்றை தெரிவு செய்துகொள்ளலாம் (புகாரி 112,மேலும் இதே கருத்தில் புகாரி 1349,1833,1834,2090,2434,3189,4313,6880)

கொலை நடக்காது என்றோ யுத்தம் நடக்காது என்றோ விபத்துக்கள் நடக்காது என்றோ கூறப்படவில்லை.

கள்ள தீர்க்கதரிசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தாவீதின் வம்சத்தில் எப்போதும் ஆட்சி இருந்துகொண்டே இருக்கும். அரசர் வந்துகொண்டே இருப்பார் என்றார் கர்த்தர்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:16 TAERV

[16] உனது குடும்பத்தினர் ராஜாக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறுஎன்றார்.

https://bible.com/bible/3154/2sa.7.16.TAERV 

ஆனால் கி.மு. 586 இதே சேதேக்கியா என்ற தாவீது மகனான ராஜாவை பாபிலோனியர் பிடித்து சென்ற பின் இதுவரை 2611 வருடமாகிவிட்டது. தாவீதின் வம்சத்தில் எந்த ராஜாவும் இப்போது இல்லை.

இனி இயேசு ராஜாவாக வந்து ஆயிரம் வருடம் ஆட்சி செய்வார் என கதைவிட கூடாது . ஏனெனில் 2600+ வருடங்களாக தேவன் கூறியது நிறைவேறவில்லை.

 

 

குர்ஆனின் சட்டங்கள் குறித்து இவர்களுக்கு தெரியாததால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

44.குர்ஆன் 22:18 வானங்களிலும் பூமியிலுள்ளவர்களும் சூரியன் சந்திரன் மலைகள் மனிதர்களில் அதிகமானோர் அவனுக்கே ஸுஜூத் செய்கின்றன என்கிறது. ஆனால் நெருப்புவணங்கிகள் போன்றோர் செய்வதில்லை என்கிறார்.

அனைவரும் இறைவனது நியதிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ அடிபணிந்தே இருக்கின்றன. (3:83) விரும்பியோ விரும்பாமலோ ஸுஜூத் செய்கிறார்கள் (குர்ஆன் 13:15). அதாவது உடலால் முற்றிலும் இறைவனுக்கு அடிபணிந்தே இருப்பர். அனைத்தும் இறைவனது கட்டளைப்படியே இயங்கும்.... அதுவே அவற்றின் ஸுஜூத்.

குர்ஆன் 22:18 கூறும் மனிதர்களில் அதிகமானோர் என்பது விருப்பத்துடன் ஸுஜூத் செய்வோரை குறிக்கிறது. இவர்கள் உடலாலும் மனதாலும் செய்வோர்.

அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ இறைவனுக்கு ஸுஜூத் செய்வர். அதாவது இறைவனின் பூரண ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார்கள்.. அதிகமானோர் விருப்பத்தோடு ஸூஜூத் செய்கிறார்கள்.

பைபிளில் கர்த்தர் சாத்தானின் விருப்பப்படியே செயற்படுகிறார் என காட்டப்படுகிறது

யோபு 1:6-12 IRVTam

 

[6] ஒருநாள் தேவதூதர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். [7] யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். [8] யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். [9] அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? [10] நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது. [11] ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். [12] யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு இருக்கிறவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

https://bible.com/bible/1899/job.1.6-12.IRVTam

யோபு 2:1-6 IRVTam

 

[1] பின்னொருநாளிலே தேவபுத்திரர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றான். [2] யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். [3] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். [4] சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். [5] ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். [6] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார்.

https://bible.com/bible/1899/job.2.1-6.IRVTam

அனைத்தும் இறைவனுக்கு அடிபணிகின்றன ஆனால் பைபிளிலோ கர்த்தர் சாத்தானுக்கு அடிபணிவதாக சித்தரிக்கப்படுகிறது.

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

45.வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொல்லாதீர்கள். நாமே உணவளிக்கிறோம்-6:151. ஆனால் பட்டினியால் அநேகர் சாகிறார்கள் என்கிறார

வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொல்லக்கூடாது. நாமே உணவளிக்கிறோம் என்றால் யாருமே பசியோடு இருக்க மாட்டார்கள் என்பதல்ல..

உணவளிக்கும் பொறுப்பு மனிதர்களுடையது அல்ல.. இறைவனுடையது என்பதும் எதிர்பாராதவிதமாக இறைவனால் உணவளிக்க முடியும் என்பதற்குமான விளக்கமாகும்.

அதாவது மனிதன் தன் அறிவினாலோ உழைப்பாலோ பெறுவதல்ல.. அறிவிருக்கும் எத்தனையோ பேர் பட்டினியில் இருப்பர். முட்டாள்கள் அநேகர் வயிறு நிறைய உண்பர். அதேபோல் கடினமாக உழைப்பவர்கள் கூட பட்டினியில் இருப்பர்.

காரணம் அவை இறைவன் ஒவ்வொருவருக்கும் அளந்த விதத்திலே கிடைப்பதோடு, அதற்காக நல்ல முறையில் முயற்சிக்குமாறு வழிகாட்டுகிறது

இதே விசயம் பைபிளிலும் உள்ளது

நீதிமொழிகள் 10:3 IRVTam

[3] யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்

நீதிமானான இயேசுவே பசியில் வாடி அத்திமரத்திற்கு ஓடினார்.

குழந்தைகள் பட்டினாயால் சாகின்றனர்.

-பறவைகளுக்கு பிழைப்பூட்டும் பரம பிதா

மத் 6:25-26 IRVTam

 

[25]  ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? [26] வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

https://bible.com/bible/1899/mat.6.25-26.IRVTam

கோடிக்கணக்கான பறவைகள் பசியால் உணவின்றி இறந்து போகின்றன.. இவைகளை வைத்துக்கொண்டு பேசலாமா?

உணவளிக்கும் பொறுப்பு மனிதர்களுடையது அல்ல அது இறைவனுடையது என சொல்வதால் இறைவேதம் இல்லை என்றாகுமா? அதை தானே பைபிளும் சொல்கிறது

46.யுகமுடிவுநாள் ஒரு மக்களை குறித்து அவர்களின் சிறியவர் வயோதிபத்தை அடையுமுன் வந்துவிடும் என கூறினார்கள்-முஸ்லிம் 5555

மறுமை நாள் எப்போது நிகழும் என்பது முகம்மது நபி அறியமாட்டார் .(7:187, 31:34)

இங்கே ஹதீஸில் அந்த மக்களுக்குரிய நேரத்தை குறித்தே நபிகளார் கூறியுள்ளார்கள்.

அதாவது அவர்களிலுள்ள பிள்ளை வயேதிபம் அடைய முன்பு நபிகளாரிடம் வந்த அந்த கூட்டத்தாரின் நேரம் வந்துவிடும். அதாவது மரணித்து விடுவர் என்பதாகும்.

அவற்றில் தெளிவாக ஸாஅதுகும் (ساعتكم) -உங்களுடைய நேரம் என தெளிவாக உள்ளது (புகாரி 6511). இதை அன்னை ஆயிஷாவிடமிருந்து தன் தகப்பன் வழியாக அறிவிக்கும் ஹிஷாம் அவர்களே இது அவர்களின் மரணம் என்பதை குறிப்பிடுகிறார்கள். அந்த ஹதீஸின் கீழேயே உள்ளது.

எருசலேமில் யூதர்களை நட்ட பின்பு மீண்டும் பிடுங்கப்பட மாட்டார்கள் என பைபிள் சொல்கிறது

ஆமோ 9:14-15 IRVTam

 

[14] என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள். [15] அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.

https://bible.com/bible/1899/amo.9.14-15.IRVTam

இது சென்றபின் எஸ்றா காலத்திலே நட்டப்பட்டனர். பிறகு மீண்டும் ரோமர்களால் 2000 வருடங்கள் பிடுங்கப்பட்டு பொய்யாகிப்போனது.

மீண்டும் வந்திருக்கிறார்கள். திரும்பவும் பிடுங்கப்படுவார்கள்.

நபிகளார் தம்மிடம் கேள்வி கேட்டவருக்குற்ப தகுந்த பதிலை கொடுத்தால், அது இவர்களுக்கு புரியாவிட்டால் இறைவேதம் இல்லை என்றாகுமா?

47.குர்ஆன் 2:223 உங்கள் மனைவியர்  உங்கள் விளைநிலங்கள் என்பது போகப்பொருளாக சித்தரிப்பதாக கூறுகிறார் பிறகு இறுதி வீடியோவில் புகாரி 5228 இலே விரும்பும்விதமாக உறவுகொள்ளலாம் என்பதாக கூறுகிறார்

-மனைவியர் தம் கணவர்களிற்கு விளைச்சலை (பிள்ளையை) கொடுப்பதால் விளைநிலத்திற்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தற்குறிகள் தம் தாய்மாரிடமா பிள்ளை பெறுகிறார்கள்?

பைபிள் மனைவியை கனிதரும் திராட்சை செடியாக வர்ணிக்கிறதே

சங்கீதம் 128:3 IRVTam

[3] உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

https://bible.com/bible/1899/psa.128.3.IRVTam  

இதை வைத்து பைபிள் மனைவியை மரமாக பார்க்கிறது என சொல்லலாமா?

-முஸ்லிம் 2827 ஹதீஸிலே மனைவியரிடம் விரும்பியபடி செல்லுங்கள் என்பது உறவு கொள்ளவேண்டிய இடத்திற்கு விரும்பிய பக்கத்திலிருந்து ஈடுபடலாம் என தெளிவு படுத்தப்படுகிறது. காரணம் பின்னால் இருந்து இல்லறத்தில் ஈடுபட்டால் குழந்தை மாறுகண்ணுடையதாக பிறக்கும் என யூதர்கள் கூறிவந்தனர். அதை தெளிவுபடுத்தும் ஹதீஸே அது

ஆணுறுப்பு வர்ணனை உடலுறவு வர்ணனைகளை கூறும் வசனங்களை வைத்தால் கொண்டு இதை விமர்சிக்கலாமா?

மாரபகங்கள் அமுக்கப்பட்டு முலைக்காம்புகள் தொடப்பட்டது என்றும் காதலர்களின் ஆணுறுப்பு கழுதை ஆணுறுப்பு என்றும் அவனுடைய விந்து குதிரை விந்து என்றும் பச்சையாக ஆபாசமாக இருப்பதை வேதம் என வைத்துக்கொண்டு இதை பேசலாமா (எசேக்கியேல் 23:3,20-21)

 

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா

48.குர்ஆன் 2:229 இஷ்டத்துக்கு திருமணம் செய்து விவாகரத்து செய்வதற்கு வாழி காட்டுகிறது என்கிறார

விவாகரத்தும் முகம்மது நபியிற்கு முன்பேயிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.

விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

அதாவது

*மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332

*அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)

அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்

அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம்.

இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229).

ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது.

மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2)

 

முதல் கணவனுக்கு ஆகுமாக திட்டமிட்டு திருமணம் செய்து விவாகரத்து செய்வதை (நிகாஹ் ஹலாலா) சாபத்திற்குரிய செயலாக நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 2076)

மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது

மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20)

அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி ).

 அதற்காக அவள் காரணத்தை சொல்ல தேவையுமில்லை. (எந்த நியாயமான காரணமுமின்றி செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.)

மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)

அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்..

அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)

தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236).

இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)

*விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பதும் இஸ்லாத்தில் சர்வசாதாரணமானது. ஆனால் புதிய ஏற்பாடு அதையும் விபச்சாரமாக கருதுகிறது.

 *இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள்.

ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது.

1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)

2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)

3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.

4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.

5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே

இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்!

இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம்.

 ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)).

தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும்.

பைபிளும் விவாகரத்தும்

தோரா விவாகரத்து செய்வதை அனுமதிக்கிறது -உபாகமம் 24:1-3.

ஆனால் இயேசுவோ விவாகரத்தை விபச்சாரம் அல்லாத காரணத்திற்காக செய்வது விபச்சாரம் என சொன்னதாக மத்தேயு 19:9.  ஆனால் மோசே அதை யூதர்களின் இதய கடினத்தின் காரணமாக அனுமதித்தார் என இயேசு சொல்கிறார் (மத்தேயு 19:8). அப்படியானால் இதய கடினத்திற்காக விபச்சாரம் கூடுமா? வேடிக்கையாக இயேசு காலத்தில் கூட யூதர்களின் இதயம் கடினமாக இருந்ததாக தான் யோவான் 12:40 சொல்கிறது. அப்படி பார்த்தால் இயேசு விவாகரத்தை தடை செய்வதே அறிவீனமாக தென்படுகிறது.

 

அத்தோடு விபச்சாரம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்று சட்டம் போடும்போது, தன் மனைவியை பிடிக்காது போனவன் தன் மனைவி மீது விபச்சார அவதூறு சொல்லி விவாகரத்து பெறுவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இஸ்லாமோ காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் தம்பதியினர் பிரியும்போதும் அவர்களது privacy மீதான அவதூறுகள் கூறும் வாய்ப்பை இதன்மூலம் இல்லாமலாக்கியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்ய இயலாததால் கொலை செய்வது என்பனவும் நம் காலத்தில் காணப்படுகின்றன. அதற்கு மேலும் வழிவகுக்கும் காரணியாக பைபிளின் போதனை உள்ளது. இஸ்லாமே அதற்கும் சரியான தீர்வை காட்டுகிறது.

49.விபச்சாரத்தின் பங்கை அடைவதை அல்லாஹ் விதியாக்கியுள்ளான் (புகாரி 6612,6243) என்பதை குறித்த போதகரின் விமர்சனம்

-அல்லாஹ் படைப்புகளை படைக்க முன்பே அவற்றை பற்றி நன்கறிந்தவன். அவன் அறிந்ததையே எழுதினான்.

-ஆகவே ஒவ்வொரு மனிதனும் விபச்சாரத்தின் ஒரு பங்கை அடைவான் என்பதை இறைவன் அறிந்ததால் தான் விதித்தான். அதன்படி மனிதன் அடைந்து கொள்வான். அதாவது தப்பான பார்வை ,தப்பான பேச்சு, தப்பான இடத்திற்கு செல்லுதல், தப்பான தொடுகை போன்றவை அந்தந்த உறுப்புகளின் விபச்சாரம் என ஹதீஸ் கூறுகிறது.

இவற்றை அடைபவன் நிர்ப்பந்திக்கப்பட்டு அடைபவனல்ல.. மாறாக அந்த மனிதன் தன் சுயதேர்வில் சுய இச்சையின் படியே நடக்கிறான்.  -யாரும் என்னை மீறி அந்நிய பெண்ணை தப்பான எண்ணத்தில் பார்த்தேன் என கூறமுடியாது. காரணம் அவனாக இஷ்டப்பட்டே அதை செய்கிறான்.

-ஆக இறைவன் தன் ஞானத்தால் முன்னறிவின் படி விதித்ததை குறை காண முடியாது. காரணம் அது இறைவனுடைய முன்னறிவினாலே விதித்தான். மனிதன் தன் சுயதேர்வின்படி தேர்ந்தெடுத்து நடக்கிறான். அதனாலே தண்டிக்கப்படுவான்.

அதன்காரணமாக தான் விபச்சாரம் செய்தவர்கள் திருமணமாகாதவர்களாயின் நூறு கசையடிகளும் ஒருவருட நாடுகடத்தலும், திருமணமானவனாயின் கல்லெறிவதன் மூலம் மரண தண்டனையும் விதித்துள்ளது இஸ்லாம் (புகாரி 6831-6833, 6812,6814)

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

-கர்த்தர் விபச்சார வர்ணனை எனும் ஆபாசப் பேச்சை பேசுவதாக பைபிள் சித்தரிக்கிறது

[3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.

[20] கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். [எசேக் 23:21 IRVTam

[21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

https://bible.com/bible/1899/ezk.23.21.IRVTam 

இத்தகைய பேச்சை வாயின் விபச்சாரம் என இஸ்லாம் கூறுகிறது

-கர்த்தர் விபச்சாரத்தை தண்டனையாக செய்விப்பார்

 

*பைபிள் தேவனும் விபச்சாரத்தை விதியாக்கிய கதை பைபிளுலும் உள்ளது

இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.ஆமோஸ் 7:16-17

அதாவது தீர்க்கதரிசனம் சொல்லாதே என்பதால், இதற்காக வேசியாக்குவதாக சொல்கிறது.

அத்தோடு விபச்சாரம் செய்விப்பேன் என்றும் சொல்லியுள்ளார்

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.2 சாமுவேல் 12:11

 

*இதுமட்டுமல்லாமல் அவிசுவாசிகளை ஓரினச்சேர்க்கை செய்ய வைப்பதும் அவரே:

ரோமர் 1:24-31 IRVTam

[24] இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். [25] தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். [26] இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். [27] அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். [28] தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்..

https://bible.com/bible/1899/rom.1.24-31.IRVTam  

ஆகவே இந்த ஹதீஸை குற்றம் சாட்ட போதக கும்பலுக்கு எந்த தகுதியும் இல்லை!!!

இறைவன் தன் பூரண ஞானத்தின் படி விதிப்பதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

50.குர்ஆன் 2:249 ஒருவரையொருவர் அல்லாஹ் சண்டையிட வைப்பேன் என்பதாக கூறுகிறது என்கிறார்.

இவர் கூறும் வசனத்தில் இவர் கூறும் விதமாக எதுவும் இல்லை!

பூமியில் சிலரை கொண்டு சிலரை தடுக்காவிட்டால் பூமி சீர்கெட்டு போய்விடும் (குர்ஆன் 2:251)

மனிதர்களில் சிலரை கொண்டு சிலரை தடுக்காவிட்டால் ஆசிரமங்களும்,கிறிஸ்தவ கோயில்களும், யூத ஆலயங்களும், இறைவனை அதிகம் நினைவுகூறும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும் (குர்ஆன் 22:40)

இதனால் தான் பூமி சீர்கெடாமல் இருப்பதற்காக சில யுத்தங்களைக்கொண்டு இறைவன் சிலரை சிலரால் தடுக்கிறான்.

கர்த்தரே போரில் குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் மிருகங்கள் ஆகியவற்றையும் உயிரோடு விடாமல் கொல்லுமாறு சொன்னார் (1 சாமுவேல் 15:2-3)

பாபிலோனிய ராஜாவை தூண்டிவிட்டு கெடுதல்  செய்விப்பேன் என கர்த்தரே சொன்னார்:

எரேமியா 25:9 IRVTam

[9] இதோ, நான் வடக்கேயிருக்கிற எல்லா வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்திற்கு விரோதமாகவும், இதின் குடிமக்களுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா மக்களுக்கும் விரோதமாகவும் வரச்செய்து, அவைகளை அழிவுக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய பழி போடுதலாகவும், நிலையான வனாந்திரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

https://bible.com/bible/1899/jer.25.9.IRVTam

இதேபோல் ராஜாக்களின் இதயங்களை கடினப்படுத்தி அவர்களை யுத்தத்திற்கு வரவைத்து பிள்ளைகளையும் பெண்களையும் கொல்ல வைத்தார்

உபா 2:30-34 IRVTam

[30] ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார். [31] அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார். [32] சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான். [33] அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து, [34] அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.

https://bible.com/bible/1899/deu.2.30-34.IRVTam

இதையெல்லாம் வைத்துக்கொண்டு பேசலாமா

 

தகுந்த காரணத்திற்காக யுத்தம் செய்ய வேண்டி ஏற்படும்போது இறைவன் அதை செய்ய அனுமதித்தார் என்பதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

பைபிளிலும் அப்படியே உள்ளதே!

51.கார்ஆன் 3:178 பாவங்களை அதிகப்படுத்துவதற்காக விட்டு வைத்திருப்பதாக கூறுகிறது என்கிறார்

*திருந்தாத குற்றவாளிக்கு அவனது பாவத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் அதனால் கடுமையாக தண்டிக்கவும் செய்வான். குற்றம் செய்பவன் தன் சுயதேர்விலேயே செய்கிறான். அதனால் இறைவன் நிந்திக்கப்படுபவனல்ல.

ஆனால் நல்லவர்களுக்கோ தம்மை திருத்திக்கொள்ள  அவகாசமாக இருக்கும்

இவர்களது வாதம் எவ்வளவு வேடிக்கையானது எனில்,

இறைவன் என்றாலே அவன் எதிர்காலத்தை அறிந்தவனாகவே இருப்பான். குற்றம் செய்பவனுக்கு தண்டனையை பிற்படுத்தினால், அவன் இன்னும் அதிகம் செய்வான் என அறிந்தே பிற்படுத்துவதாக தானே இருக்கும். அப்படி செய்தால் பாவத்தை நிறைவாக்குவதற்காக தானே பிற்படுத்துகிறான் என்று தெளிவாகவே வந்து விடுமே

ஆனாலும் குற்றவாளி தன் குற்றச் செயல்களுக்கே தண்டிக்கப்படுவான். நிர்ப்பந்திக்கப்பட்டதினால் அல்ல.

 

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

அதே அல்லாஹ், தமக்கு தாமே அநீதி இழைத்துக் கொண்ட அடியார்களை அழைத்து அவனுடைய கருணையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவன் அனைத்து பாவங்களையும் (திருத்திக் கொண்டால்) மன்னித்துவிடுவான் என அழைக்கப்படுகிறது (குர்ஆன் 39:53)

அத்துடன் தன்னிடம் நேர்வழியை கேட்குமாறும் அப்படி கேட்டால் நேர்வழி காட்டுவதாகவும் வாக்களிக்கிறான் (முஸ்லிம் 5033)

உயிர் தொண்டைக்குழியை அடையும்வரை மனந்திருந்தி மீளுவோரை மன்னிக்க காத்திருக்கிறான் (குர்ஆன் 4:17-18, திர்மிதீ 3537, இப்னுமாஜா 4253)

ஆக ஆயுட்காலம் முழுவதும் மனம் திருந்துவதற்கும் பாவத்தை அதிகப்படுத்துவதற்கும் அவகாசம் உண்டு.  பாவத்தை அதிகப்படுத்துபவன் அதை அதிகப் படுத்திக் கொள்ளலாம். தன்னை திருத்திக்கொள்ளாதவர்களுக்கு ஆயுள் கூட கூட பாவம் அதிகரிக்க தானே செய்யும். அது அவன் சம்பாதிப்பது தானே தவிர நிர்ப்பந்திக்கப்படுவதல்ல!

இதே போல் இன்னும் குற்றம் பெருகும் படி தேவனே அவகாசம் கொடுத்ததாக பைபிள் கூறுகிறது:

ஆதி 15:16 IRVTam

[16] நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லைஎன்றார்.

https://bible.com/bible/1899/gen.15.16.IRVTam 

முழு இனத்தையும் அழித்துப் போடுவதற்காக கர்த்தர் அதன் ராஜாவின் இருதயத்தை கடினப் படுத்தினார். இதை காரணமாக வைத்து பிள்ளைகளையும் கொன்றார்கள்:

உபா 2:30-34 IRVTam

[30] ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார். [31] அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார். [32] சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான். [33] அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து, [34] அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.

https://bible.com/bible/1899/deu.2.30-34.IRVTam  

 

*பைபிளும் இதே நோக்கத்துக்காக தான் கூறுகிறது:

வெளிப்படுத்தின விசேஷம் 22:11 IRVTam

[11] “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

https://bible.com/bible/1899/rev.22.11.IRVTam

(பேதுரு கூறுவது தேவன் தாமதிப்பதற்கு பாசிடிவ் காரணம் கூறுகிறார்.  இயேசு உடனே வந்துவிட்டால் இயேசுவின் செய்தி கேள்விப்படாதோரும் அழிவார்களே. அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதாக கூறுகிறார்.

*உண்மையில் இயேசு அப்படி கருதவில்லை.. மாறாக தன்னை ஏற்காதவன் திருந்தவோ மன்னிக்கப்படவோ கூடாது என்ற கடும் அன்பாளர்:

மாற்கு 4:11-12 IRVTam

[11] அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. [12]  அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறதுஎன்றார்.

https://bible.com/bible/1899/mrk.4.11-12.IRVTam

*துன்மார்க்கனை படைத்ததே தீங்கு நாளுக்காக தான்

நீதிமொழிகள் 16:4 IRVTam

[4] யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

https://bible.com/bible/1899/pro.16.4.IRVTam

இந்த லட்சனத்துல இப்படி உருட்டலாமா?

 

இறைவன் மனிதன் பாவம் செய்வான் என அறிந்தும் வாழ வைத்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

52.உள்ளத்தில் நோயுள்ளவர்களுக்கு அல்லாஹ் நோயை அதிகமாக்கிவிடுவதாக குர்ஆன் 2:10 கூறுவது

சந்தேகம் எனும் உள்ளத்தில் நோயுள்ளவர்களுக்கு தண்டனையாக அதை இறைவன் அதிகமாக்கி விடுவான்.

அது இறைவனின் நியாயத்தீர்ப்பு.

இறைவனுக்கு இப்படி தண்டிக்க உரிமை இல்லையா?

இறைவன் செய்வதை பற்றி கேட்கப்பட மாட்டான் (குர்ஆன் 21:23)

கர்த்தர் பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார்

2 தெசலோனிக்கேயர் 2:11-12 IRVTam

[11] ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, [12] அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

https://bible.com/bible/1899/2th.2.11-12.IRVTam

இங்கே உண்மையை விசுவாசிக்காததால் பொய்யை விசுவாசிக்க வைப்பதற்கு வஞ்சகத்தை அனுப்புவார்.

இதை வைத்துக்கொண்டு பேசலாமா?

இறை மார்க்கத்தின் மீது சந்தேக நோயுள்ளவர்களுக்கு அவர்கள் சந்தேகிப்பதால் அதை அதிகப்படுத்துவான் என்பதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

அப்படி பார்த்தால் முழு பைபிளும் அந்த லிஸ்டில் தான் வரும்.

53.அல்லாஹ் மனிதர்களிடையே பகைமையை ஏற்படுத்திவிடுவதாக குர்ஆன் 5:14,64 சொல்வதாக உருட்டுகிறார்

வேதம் கொடுக்கப்பட்ட யூதரும் கிறிஸ்தவரும் சத்தியத்தை புறக்கணிப்பதால் அவர்களிடையே பகைமையை இறைவன் ஏற்படுத்தியதாக கூறுகிறான்.

அதனால் தான் கிறிஸ்தவர்களுக்குள் ஒரு சபை மற்றைய சபையையும் யூதர்களிலுள்ள ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரையும் பகைப்போராக இருந்து வந்தனர்.

இதுபோன்று முஸ்லிம்களும் முரண்படும் போது அவர்களுக்குள்ளும் அதே பகைமை காணப்படும். அது இறைவனின் தீர்ப்பு.

கர்த்தர் பொல்லாப்பு செய்யும் ஆவியை அனுப்பி பொல்லாப்பு செய்ய வைத்தார்:

நியாயாதிபதிகள் 9:23 IRVTam

[23] அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனிதர்களுக்கும் நடுவே தீங்கை உண்டாக்கும் ஆவியை தேவன் வரச்செய்தார்.

https://bible.com/bible/1899/jdg.9.23.IRVTam

பொல்லாத ஆவியை சவுலின் மேல் வரவைத்தார். அதனால் அவன் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே தாவீதை கொல்ல பார்த்தான்

1 சாமுவேல் 18:10-11 IRVTam

[10] மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. [11] அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.

https://bible.com/bible/1899/1sa.18.10-11.IRVTam

முதலில் பாம்பிற்கும் பெண்ணிற்கும் பகையை ஏற்படுத்தியதே தேவன் தான் (ஆதி 3:15)

இதை வைத்துக்கொண்டு பேசலாமா

இறைவன் குற்றவாளிகளுக்குள்ளே பகைமையை ஏற்படுத்துவான். அது அவனது நீதி. இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

54.மனிதர்களை முரண்பட்டவர்களாக இருப்பதற்காக படைத்ததாக 11:118 கூறுவதாக உருட்டுகிறார், 7:179 மனிதர்களில் அதிகமானோரை நரகத்திற்கென்றே படைத்ததாக , 11:119 இலே மனிதர்களால் நரகத்தை நிரப்புவதாக கூறுகிறது

இறைவனுக்கு தன் படைப்புகளை படைக்க முன்பே அவர்கள் எப்படி நடப்பார்கள் எங்கே செல்வார்கள் என பூரணமாக அறிந்தே படைத்தான். அதன்படி முரண்படுவார்கள் என்று அறிந்தே படைத்தால், அதற்காக படைத்தான் என்று சொல்வது சரி தானே

-அத்தோடு அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40)

-இந்த வசனத்திலேயே அவர்கள் நரகம் போவதற்கான காரணம், அவர்கள் கண்களிருந்தும் பார்க்காமலும் காதுகளிருந்தும் கேட்காமலும் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காமலும் இருந்ததால் தான் என அவ்வசனமே சொல்கிறது. (7:179)

-நரகத்தில் பாவிகள் தம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்பே நுழைவார்கள் (39:71,40:11,67:11,6:30). அத்தோடு தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40)

-நரகத்திற்கென்றே படைத்திருப்பதென்பது, இறைவனது முன்னறிவினால் அவர்கள் தம் பாவங்களால் நரகத்நிற்கே செல்வார்கள் என அறிந்து படைத்ததாலும், இறைவன் அனுமதியின்றி அவன் ஆற்றல் வழங்காமல் எதையும் யாருக்கும் செய்ய முடியாது என்பதால் மட்டுமே. ஆனாலும் அவனவன் தன் சுய தேர்வின் படியே தன் விருப்பத்தின் படியே பாவம் செய்கிறான். நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம் செய்வதில்லை!

-11:118 குறித்து, இறைவன் விரும்பினால் அனைவரையும் ஒரே மார்க்கத்தில் நிலைத்திருக்க செய்ய முடியும். காரணம் அவன் சர்வ சக்தியுள்ளவன். ஆனால் மனிதர்களுக்கு சுயதேர்வையும் அதன்படி நடக்கும் ஆற்றலையும் இறைவன் வழங்கியுள்ளான் சோதனைக்காக. (67:2, 6:165, ). அதன்படி அவன் குற்றவாளிகளை தண்டிப்பான் நல்லவர்களை மன்னிப்பான்.

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

பைபிளிலும் கர்த்தரே விசுவாசிக்காதபடி இருதயத்தை கடினப்படுத்துபவர்

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

பொய்யை விசுவாசிக்கவேண்டி வஞ்சகத்தையும் அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12).  நியாயமின்றி உத்தமமான யோபுவை நிர்மூலமாக்க சாத்தான் ஏவியதை செய்தவர் (யோபு 2:3).. அத்தோடு தம் பிள்ளைகளை நரபலி கொடுக்க வைத்து வழிகெடுத்தவரும் அவரே(எசேக்கியேல் 20:25-26). ஜனங்களை வழி தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17,) கெடுதியை படைத்தவர் (ஏசாயா 45:7), கெடுதியாக நடந்துகொள்ள வைப்பவர் (சங்கீதம் 105:25) பொல்லாத ஆவியை அனுப்பி ஜனங்களை பாவம் செய்ய வைப்பவர் (1 சாமுவேல் 18:10, 19:9, 1 இராஜாக்கள் 22:18-23) இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

ஆதலால் இது தற்குறித்தனமானது

இறைவன் தன் ஞானத்தால் முன்பே அறிந்தே படைத்தான் என்றால் நரகம் புகுவோரை நரகத்திற்காகவும் சுவர்க்கம் புகுவோரை சுவர்க்கத்திற்காகவும் படைத்தான் என்பது யதார்த்தமான உண்மை தானே. ஏன் கர்த்தருக்கு தெரியாது என இவர்கள் சொல்வார்களா?

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

55.குர்ஆன் 33:64 மனிதர்களுக்காக நரகத்தை படைத்ததாக கூறுகிறது

அல்லாஹ் காஃபிர்களை சபித்து அவர்களுக்காக நரகத்தை தயார் செய்துள்ளார் (குர்ஆன் 33:64)

நரகத்தை தன்னை நிராகரித்தவர்களுக்காக தயாரித்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

பைபிளின் படி நரகத்தில் யாரும் நுழைய மாட்டார்களா?

 

நரகத்தில் நுழைபவனுக்காக நரகத்தை தயார் செய்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

56.காஃபிர்களாக மரணிப்பதையே விரும்புகிறான் என 9:85 கூறுவதாக உருட்டு

ஏற்கனவே காஃபிராகி மறுத்தவனை காஃபிராக மரணிக்கப்போகிறவனை காஃபிராக  மரணிப்பதையே இறைவன் விரும்பினால் என்ன தவறு?

ஒருவன் காஃபிராக மரணிப்பான் என்பதை இறைவனுக்கு முன்கூட்டியே தெரியுமே.

அப்படி மரணிக்க இருப்பவனை அவ்வாறே மரணிக்க வைக்க இறைவன் விரும்புவது அவனது நீதியே.

கர்த்தரே பொய்யை விசுவாசிக்க வைப்பதற்கு வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12

இதை வைத்துக்கொண்டு உருட்டலாமா?

ஒருவன் காஃபிராக மரணிப்பான் என இறைவன் அறிந்து அவ்வாறே மரணிக்க செய்ய நாடினால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

57.பாவம் செய்யாவிட்டால் அவர்களை போக்கிவிடுவதாக முஸ்லிம் 5302, 5034

இறைவன் படைப்பை படைக்க முன்பே மனிதர்கள் பாவம் செய்வார்கள் என அறிந்தே படைத்தான். அதற்கு பிராய்ச்சித்தமாக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹ் மன்னிக்க விரும்புகிறான்

பாவம் செய்யாதிருக்கும் மக்களானால் மனிதர்கள் தம்மை தாமே பரிசுத்தவான்கள் என கருதி பெருமையடித்து பெரும்பாவத்திலேயே விழுந்து விடுவார்கள்.. அதனால் இறைவன் அவர்களை அழித்து விடுவான். பாவம் செய்து இறைவனிடம் மீளும் பணிவுள்ள அடியார்களை இறைவன் கொண்டு வருவான்.

இங்கே இறைவன் பாவம் செய்ய வேண்டும் என சொல்லவில்லை... மனிதன் பாவம் செய்பவனாகவே படைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு அவன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு பணிவாக நடந்துகொள்ளவேண்டும் என்பதையுமே வழிகாட்டுகிறார்..

பொதுவாக பாவம் செய்யாத மனிதன் இல்லை.

ஒரு பேச்சுக்காக அப்படி இருந்தால், பாவம் செய்யாத மனிதனுக்கு இறைவன் தேவைப்பட மாட்டான்.  பாவம் செய்யும் மனிதனுக்கு தான் தன்னை மன்னிப்பதற்கு இறைவன் தேவை.

இறைவன் மீது தேவைப்படாத மனிதர்களை இறைவன் ஏன் வைக்க வேண்டும்? அத்தோடு பாவம் செய்யாதவனாக இருந்தால் தன்னை குறித்து யோக்கியன் என கருதி தற்பெருமையடித்துக்கொள்வான் . இதனால் வேறொரு பெரும்பாவம் ஏற்பட்டு அழிவையே சந்திப்பான்.

ஆனால் இறைவனோ அப்படி பாவம் செய்து திருந்துவோரை மன்னிக்கவே நாடுகிறான். அதை தான் முஸ்லிம் 5304 கூறுகிறது.

.

 இதிலே எந்த நியாயமான விமர்சனமும் இல்லை.

பைபிளிலே கர்த்தரே பாவத்தை செய்வித்துள்ளார்:

எசேக் 20:25-26 IRVTam

 

[25] ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். [26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.25-26.IRVTam 

இறைவன் தன் ஞானத்தால் தன்னை தேவையில்லாதவர்களை போக்கி விட்டால் அதினாலே குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

58.அல்லாஹ் மனிதர்களை வஞ்சிப்பதாகவும் சூழ்ச்சி செய்வதாகவும் (7:99,10:29,3:54)

**முதலில் இறைவன் செய்வது பற்றி அவன் யாராலும் விசாரணை செய்யப்பட மாட்டான். மாறாக படைப்புகளான இவர்கள் தான் இறைவனால் விசாரணை செய்யப்படுவர் (குர்ஆன் 21:23), அத்தோடு யாருக்கும் அவன் சிறிதளவும் அநீதி இழைக்க மாட்டான். (குர்ஆன் 4:40)

*எந்தளவுக்கென்றால் இறைவனை நிராகரித்தவன் நற்செயல் செய்தால் கூட அவற்றுக்குரிய கூலியை பூரணமாக இவ்வுலகிலேயே கொடுத்துவிடுவான் (முஸ்லிம் 5408,5409, (2808a,2808b). தனக்கு பிள்ளையிருப்பதாக அவதூறு மூலம் நோவினை செய்யும் மனிதர்களுக்கு கூட இவ்வுலகில் அவன் உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்கி மிக மிக பொறுமையுடையவனாக இருக்கிறான் (புகாரி 6099,7378, முஸ்லிம் 5401,5402 (2804a,b & 2804c)..

ஆனால் பைபிளில் தான் தேர்வு செய்த ஜனத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காக, நானூறு வருடம் கழித்து வாழும் மாற்றுமத அமெலேக்கியரை ஈவிரக்கமின்றி குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் மிருகங்கள் என அனைத்தையும் கொன்று போட சொல்கிறார் (1 சாமுவேல் 15:2-3)

*இறைவன் அனைவருக்கும் நல்லது எது கெட்டது எது என அவர்களின் மனங்களிலே தெளிவாக அறிவித்து கொடுத்துள்ளான்.அதை பரிசுத்தப்படுத்திக்கொள்பவர் வெற்றிபெற்றவர், அதை பாவத்தில் புகுத்திக்கொண்டவன் தோல்வியடைந்தவன் (குர்ஆன் 91:8-10).

*அல்லாஹ் ஒருவரை வழிகெடுக்கிறான் என்றால், இறைவனுக்கு பூரண ஞானம் இருப்பதாலும் (குர்ஆன் 6:59, 2:29), அநீதியாளர்களையும் நன்கறிந்தவன் (குர்ஆன் 2:95) என்பதாலும், உள்ளத்தில் இருப்பதை நன்கறிந்தவன் (3:119,154,..) என்பதாலும் யாருக்கும் அநீதி இழைக்காதவன் (குர்ஆன் 4:40, 3:108, 10:44, 40:31) என்பதாலும் , வழிகேட்டுக்கு தகுதியானவனையே வழிதவறச்செய்கிறான்.

அத்தோடு உலகத்தில் இறைவனை மிஞ்சிய சக்தி இல்லை என்பதால், ஒருவர் வழிகெட்டாலோ பாவம் செய்தாலோ தன் இச்சைப்படியே நடந்தாலும் இறைவன் அனுமதித்து அதற்குரிய ஆற்றலையும் சுதந்திரத்தையும் அவனுக்கு  வழங்காமல் நிகழவே  முடியாது...  அதனால் தான் இறைவன் வழிதவறச்செய்கிறான் நேர்வழி காட்டுகிறான் என்று இறைவன் மீது சேர்க்கப்படுகிறது.

*இறைவன் சதி செய்கிறான் என்பது காஃபிர்கள் செய்த சதிகளுக்கு பதிலடியாக இறைவன் செய்வதே (குர்ஆன் 3:54,8:30,27:50-51). அதாவது தன் தகுதிக்கும் ஞானத்திற்கும் ஏற்ப குற்றவாளிகளை தண்டிப்பதற்காக இறைவன் செய்வதே அது.

நல்லவனுக்கு எதிராக செய்யப்படும் சதியே விமர்சனத்திற்குரியது. குற்றவாளிக்கு எதிராக செய்யப்படுவது அத்தகையதல்ல.

(கர்த்தரது சதி 1 இராஜாக்கள் 22:18-23 அடுத்த columnஇலுள்ளது)

இது போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ரோமர் 9:18-23 IRVTam

[18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam

கர்த்தரே வஞ்சகத்தை அனுப்புவர்-

2 தெச 2:12 IRVTam

[12] அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

https://bible.com/bible/1899/2th.2.12.IRVTam

-கர்த்தர் ஜனங்களை வழி கெடுத்து நரபலி கொடுத்து தீட்டுப்பட வைத்தார்

எசேக் 20:25-26 IRVTam

[25] ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். [26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.25-26.IRVTam

-பொய்சொல்லும் ஆவியை அனுப்பி பொய் சொல்ல வைத்தார்-

1 இராஜாக்கள் 22:21-23 IRVTam

[21] அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. [22] எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். [23] ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

https://bible.com/bible/1899/1ki.22.21-23.IRVTam

-இது போல கண்களை குருடாக்கி இருதயத்தை கடினமாக்குவார். அதனால் அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள்

யோவான் 12:40 IRVTam

[40] அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்என்றான்.

https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam

-தன் தீங்கு செய்யும் பொல்லாத ஆவியை அனுப்புவார். இதனால் சவுல் தாவீதை கொல்ல பார்த்தான்

 

1 சாமு 18:10-11 IRVTam

[10] மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. [11] அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.

https://bible.com/bible/1899/1sa.18.10-11.IRVTam 

(எபிரேயத்தில் ருஆக் எலோஹிம் ராஆ என்றுள்ளது. அதன் அர்த்தம் தேவனின் பொல்லாத ஆவி... அதாவது தேவனுக்கு நல்ல ஆவி மட்டுமல்ல பொல்லாத ஆவியும் உண்டு)

ஆக இது தற்குறித்தனமானது

இறைவன் தன் ஞானத்தால் குற்றவாளிகளை ஏமாற வைத்தாலோ வழிதவற செய்தாலோ குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

59.ஸஃபிய்யா () அவர்களுடனான திருமணம் பற்றிய விமர்சனம்

-நபிகளார் அன்னை ஸஃபிய்யாவை விடுதலை செய்து திருமணம் செய்துகொண்டார்கள்- (புகாரி 371,947)

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம் (புகாரி 5136, 6966,6968) ஆகவே அன்னை ஸஃபிய்யாவின் சம்மதம் இல்லாமல் இது நடக்காது

-இஸ்லாத்தில் போரில் பிடிபட்ட பெண்ணின் இத்தா அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரையும் , கர்ப்பிணி அல்லவென்றால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமாகும் வரையிலும் ஆகும் (அபூதாவூத் 2157)

இதன்படி ஸஃபிய்யா () அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமான பின்பே நபிகளார் இல்லறத்தில் ஈடுபட்டார்கள் (புகாரி 2235,2893)

-முதலில் ஸஃபிய்யா () அவர்களை திஹ்யா எனும் நபித்தோழருக்கு கொடுத்தார்கள். ஆனால் மக்கள் இவர் நபியவர்களுக்கு தான் பொருத்தமானவர் என்றும் குரைளா நளீர் கோத்திரத்தலைவி என நபிகளாரிடம் கூறியபோதே தனக்கு தேர்ந்தெடுத்தார்கள் (புகாரி 371)

அத்தோடு அன்னையவர்களின் அழகும் நபிகளாருக்கு கூறப்பட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன (புகாரி 2235).

அதாவது நபிகளாருக்கு மட்டுமே இவர் பொருத்தமானவர் என கூறிய பின்பே தேர்ந்தெடுத்து திருமணம் செய்தார்கள். 

 

இதிலே கற்பழிப்போ கள்ள உறவோ எதுவும் கிடையாது.

ஆனால் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவரான (1 சாமுவேல் 13:14, அப்போஸ்தலர் 13:22) தாவீதோ அழகான பெண் குளிப்பதை கண்டபோது அவளை கூப்பிட்டு விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4)

இதன்பின் இவளை தன் மனைவியாக்கி மீண்டும் பாலுறவு கொண்டபோது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் (2 சாமுவேல் 12:24)

இதையெல்லாம் நம்பிக்கெண்டு நபிகளார் முறையாக திருமணம் செய்ததை விமர்சிக்கலாமா?

முகம்மது நபி போரில் பிடிபட்ட பெண்ணை விடுதலை செய்து திருமணமும் செய்து கொண்டால் அதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

60.அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் மரணித்தவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும் சுவர்க்கம் போவான் அல்லது நரகம் போகமாட்டார் என்பது பற்றிய விமர்சனம்

-திருடனின் கை துண்டிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை குர்ஆன் வழங்குகிறது-5:38

-விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்றும் (குர்ஆன் 17:32), அவ்வாறு விபச்சாரம் செய்தவர் திருமணமாகாதவர் எனின் 100 கசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும் தண்டனையாக கிடைப்பதோடு திருமணமானவர் எனின் கல்லெறிவதன்மூலம் மரணதண்டனை கிடைக்கும் (புகாரி 2695-2696,2724-2725,)

-மறுமையிலும் இதுபோன்று குற்றம் செய்த முஸ்லிம்கள் நரகத்தில் தம் பாவத்திற்கேற்ப தண்டனை பெற்று வெளியேறுவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன (புகாரி 44,7439,7440,6550 முஸ்லிம் 326 (193e), 322 (193a,b), 316 (191a), 306-310, (185a),302 இப்னுமாஜா 60) அத்தோடு ஏகத்துவவாதிகளை இறைவன் நகரத்திலிருந்து தண்டனை முடிந்து வெளியேற்றுவான் (திர்மிதீ 2597)

இப்படி பாவங்களினால் நரகம் போகிறவர்கள் இருப்பார்கள். ஆனால் அதிலே நிரந்தரமாக இருக்கமாட்டார்கள் என்பதால் தான் நரகம் புக மாட்டார்கள் என்றும் சுவர்க்கம் புகமாட்டார்கள் என்றும் கூறுகிறது. ஏனெனில் அவர்கள் தற்காலிகமாக தண்டிக்கப்படுவார்கள் என்பதே இதன் விளக்கம்

-ஏன் முஸ்லிம்களை மன்னிக்க வேண்டும்?

ஒரு கணவனுக்கு கட்டுப்படாமல் மாறு செய்யும் மனைவியானவள் ஒழுக்க விசயத்தில் அவனை தவிர வேறு யாருக்கும் எந்த இடமும் கொடுக்காமல் இருக்கிறாள் என்பதை அக்கணவன் அறிந்தவனாக இருக்கிறான் என்றால் அக்கணவன் அவளை மன்னிக்காமல் இருப்பானா?

அதுபோன்றே தன் கணவனுக்கு அனைத்திலும் கீழ்படியும் மனைவியானவள் உடலுறவிலும் காதலிலும் தன் கணவன் அல்லாத வேறொருவனுடன் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை அறிந்த கணவன் அவளை பொருந்திக் கொள்வானா?

கணவனை விட ரோசமுள்ள இறைவன் தன் படைப்பு விசயத்தில் இப்படி நடப்பதை விமர்சிக்க முடியாது

 

-பைபிளில் கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் பரிசம் கொடுத்தால் போதுமானது என கூறுவதால் நன்றியுடன் விபச்சாரம் கூடும் என எடுத்துக்கலாமா?

யாத்திராகமம் 22:16-17 IRVTam

[16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam  

-இதேபோல் கன்னியை கற்பழித்தால் ஐம்பது வெள்ளிக்காசுகளை கொடுத்து அவளை காலம் முழுதும் பலவந்தப்படுத்திக்கலாம்/திருமணம் செய்து உறவு கொள்ளலாம் என சட்டம் கூறுவதால், கன்னியை கற்பழிப்பை தேவன் சரி காண்கிறார் என எடுத்துக்கலாமா?

உபாகமம் 22:28-29 IRVTam

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam 

-அத்தோடு எகிப்தியரின் சொத்துக்களை கொள்ளையடிக்க தேவன் சொன்னதால் கொள்ளையடிப்பதை தேவன் சரி காண்கிறார் என எடுத்துக்கலாமா?

யாத்திராகமம் 3:21-22 IRVTam

[21] அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. [22] ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்என்றார்.

https://bible.com/bible/1899/exo.3.21-22.IRVTam 

*பைபிளில் சுவர்க்கம் நரகம் பற்றி விரிவாக இல்லை என்பதால் , அதை ஆதாரமாக எடுத்து இஸ்லாத்தை விமர்சிப்பது தற்குறித்தனமில்லையா?

தனக்கு இணைவைக்காதவனை இறைவன் மன்னித்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

61.புகாரி 526 இலே முத்தமிட்டுவிட்டு வந்தவரிடம் பரிகாரமாக தொழுகையை நிலைநாட்ட சொன்னது குறித்து விமர்சிக்கிறார்

-இஸ்லாம் அந்நிய பெண்ணை (மனைவி மற்றும் நெருங்கிய உறவினரான தாய்,மகள் சகோதரி மாமி போன்ற உறவினர் அல்லாதோரை) உரிமையின்றி தொடுவதை விட இரும்பு ஊசியால் தலை துளைக்கப்படுவது சிறந்தது என எச்சரித்துள்ளது இஸ்லாம் -ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா 226

-அது போன்று அந்நிய பெண்ணுடன் தனித்திருக்க கூடாது என்றும் அவர்களிடம் ஆண் உறவினர் இல்லாத நேரத்தில் செல்லக்கூடாது என்றும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது (புகாரி 5233,3006,5232)

-அத்தோடு ஆண்கள் தம் பார்வைகளை தாழ்த்தியும், பெண்கள் தம் பார்வைகளை தாழ்த்தி அலங்காரங்களை மறைத்து உடையணிந்து கொள்ளவும் வழிகாட்டியுள்ளது (குர்ஆன் 24:30-31)

-அத்தோடு விபச்சாரம் செய்தவர் திருமணமாகாதவராயின் நூறுகசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும், திருமணமானவராயின் கல்லெறிந்து மரணதண்டனையும் இஸ்லாம் கூறுகிறது (புகாரி 6633,6634)

-ஆனாலும் இப்படி விபச்சாரம் செய்யாமல் முத்தமிட்டதற்காக அதன்பின் மனம்வருந்தி பரிகாரம் கேட்டு வந்தவரிடமே அவ்வாறு தொழுகை அதற்கு பரிகாரம் என கூறப்பட்டது. ஏனெனில் அவர் பரிகாரம் கேட்டு வருவதே தவறை உணர்ந்து மனந்திருந்தி வருவது தான்.

இது போன்று நடக்காத இருப்பதற்கு தான் நெருங்கிய ஆண் உறவினர் இல்லாத நேரத்தில் பெண்களிடம் செல்ல கூடாது என்றும் அவர்களோடு தனித்திருக்க கூடாது என்றும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

-பைபிளிலே கன்னியை கற்பழித்தால், 50 சேக்கல் வெள்ளியை அவளது தகப்பனுக்கு கொடுத்து அவளை திருமணம் செய்ய சொல்கிறது- உபாகமம் 22:28-29

இதை வைத்து பைபிள் கற்பழிப்போருக்கு தண்டனை கொடுக்காமல் பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறது என சொல்லலாமா?

-கன்னியோடு விபச்சாரம் செய்தால் தகப்பனுக்கு இஷ்டம் இல்லை என்றால் தகப்பனிடம் மஹரை கொடுத்துவிட்டு செல்லலாம்-யாத்திராகமம் 22:16-17

இதை வைத்து, பைபிள் கன்னியுடன் விபச்சாரம் செய்துவிட்டு , கூலி கொடுத்து புது பிஸ்னஸை காட்டுது என சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

காரணம் இதற்கு கண்டிப்போ தண்டனையோ அங்கே கூறப்படவில்லையே

பெரும்பாவம் அல்லாததை செய்துவிட்டு மனந்திருந்தி வருவோருக்கு மன்னிப்பை பெற முகம்மது நபி வழி காட்டியதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

62.சுவர்க்கத்தில் மது கன்னியர் கொடுக்கப்படுவதை ஆசைகாட்டி அழைப்பது ஒழுக்கக்கேடு என்கிறார்

-சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19)

-கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254)

-சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246)

78:33 இலுள்ள "கவாயிப்" என்பது கூட முலைகள் முகிழ்ந்த வயதுள்ள பெண்களை குறிக்கும்.  அங்கே முலை வர்ணனை எதுவும் இல்லை. அதுவும் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அவ்வார்த்தையை பாவிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தவொன்றே.

அதனையே இணைவைப்பாளர்கள் உஹதைவிட்டு திரும்பியபோது அவர்கள் கூறியதாக வருவதில்" நீங்கள் முகம்மதை கொல்லவும் இல்லை. கவாயிபை (78:33 இலுள்ள வாசகம்)- இளம்பெண்களை சிறைபிடிக்கவுமில்லை. நீங்கள் செய்தது மிகவும் கெட்டது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது

(ولا محمدا قتلتم.

ولا الكواعب أردفتم

(சுனனுல் குப்ரா (இமாம் நஸாயீயுடையது) 11083,தபரானீ (11/247) 11632)

வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது. மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோருக்கு இறைவனின் கூலி. அங்கே ஆன்மீக இன்பம் உடலியல் இன்பம் என இரண்டும் கலந்தே இருக்கும்.

(ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் கணவர்களாக கிடைப்பார்கள் என்பது தற்கால தற்குறிகளின் கருத்தேயாகும்.  ஹூருல்ஈன் என்போர் பெண்கள் மட்டுமே.. ஆண்களில் அப்படி இல்லை..

இவ்வுலகில் நல்ல கணவன் மனைவியாக இருந்தால் அதே பெண்ணுக்கு அதே நபர் கணவராக கிடைப்பார். அதனால் தான் நபிகளாரின் மனைவியர் சுவர்க்கத்திலும் அவரது மனைவியர் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறே நபித்தோழர்களும் புரிந்து கொண்டனர்.

இவ்வுலகில் விபச்சாரத்தை தடைசெய்த இறைவன் சுவர்க்கத்தில் அனுமதிக்கிறான் என கூறுவது இவர்களின் வேசித்தன ஆவியின் வெளிப்பாடு.. அத்தகையோர் பெண்கள் விசயத்தில் அசிங்கப்பட்டுப்போனார்கள் என்பது வரலாறு..)

-உலகத்தில் போதை மது குடிக்க அனுமதித்து (உபாகமம் 14:26), தன் கூடப்பிறந்த சகோதரிகளை மணந்து பிள்ளை பெற வைத்ததை நம்பிக்கொண்டு இதை விமர்சிக்கலாமா?

இவர்கள் தங்கள் மகள்மாருக்கு திருமணம் செய்து வைப்பதில்லையா? அப்படியானால் இவர்கள் விபச்சார விடுதி நடத்தி ஒரு ஆணுக்கு கூட்டிக்கொடுக்கிறார்கள் என்று திருமணத்தை பேசினால் ஒப்புக்கொள்வார்களா?

இறைவனுக்காக வாழ்ந்தவர்களுக்கு இறைவன் கூலி கொடுத்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா??

63.முகம்மது நபி தன் பார்வையை தாழ்த்தாமல் அந்நிய பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் போய் உறவு கொண்டார் என்று வாதம் வைத்து இது தான் முன்மாதிரியா என்கிறார்

பாதையில் சென்ற பெண்ணை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் சென்றதாக வரும் ஹதீஸ் -முஸ்லிம் 2718

*இஸ்லாம் பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறே கூறுகிறது (குர்ஆன் 24:30-31)

*எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும், அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் என்றே நபிகளார் கூறினார்கள் (முஸ்லிம் 4363 (2159 ஆங்கிலம் அரபு), அபூதாவூத் 2148)

*எதேச்சையாக பார்வை விழுவது தப்பு அல்ல. மாறாக அதை இரண்டாவதாகவும் பார்ப்பதே தப்பு என்கிறது இஸ்லாம் (அபூதாவூத் 2149)

 

*இப்படி பார்வை தற்செயலாக விழுந்து அதனால் ஈர்க்கப்பட்டால், அந்த ஈர்ப்புக்கு காரணம் ஹோமோன்கள் தான். அது அந்த நபரின் சக்திக்கு அப்பாற்பட்டது.

ஆனாலும் தன் சக்திக்குட்பட்டதான பேச்சையோ வேறு தவறான செயலையோ செய்தாலே விமர்சனத்திற்குரியதாக மாறும்

ஆனால் நபிகளாரோ , தன் இச்சையை கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மனைவியிடம் சென்று அவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார்கள் .

இதுவே சிறந்த முன்மாதிரியுமாகும்.

(உடனே திருமணமாகாதவன் எங்கே போக வேண்டும் என்று தற்குறித்தனமாக கேட்டால், அவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணமானவனோ தன் உணர்வை மனைவியிடம் தீர்த்துக் கொள்ளலாம்)

* பைபிளிலே கர்த்தரின் தீர்க்கதரிசி (அப்போஸ்தலர் 2:30) என்றும் இதயத்திற்கேற்ப செம்மையாக நடந்தவன் (அப்போஸ்தலர் 13:22) என கூறும் தாவீதோ அழகான பெண்ணை கண்டபோது கள்ளத்தனமாக விபச்சாரம் செய்தார்:

 

2 சாமுவேல் 11:2-4 IRVTam

[2] ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். [3] அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். [4] அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள்.

https://bible.com/bible/1899/2sa.11.2-4.IRVTam  

(அத்தனைக்கும் தாவீதுக்குள் பரிசுத்த ஆவி இறங்கியிருந்தார்- 1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11.... )

*சிம்சோன் என்ற நியாயாதிபதி வேசிகளோடு உறவு வைத்தார் அவரிடமும் ஆவியானவர் பலமாக இறங்குவார். (நியா 14:6,19& 15:14) யெகோவா அப்போதும் அவனோடு கூட இருந்தார். ஆனால் தலைமுடியை வெட்டியவுடன் யெகோவா போய்ட்டார்:

நியாயாதிபதிகள் 16:1, 4, 19-20 IRVTam

[1] பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.

[4] அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.

[19] அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது. [20] அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

https://bible.com/bible/1899/jdg.16.1-20.IRVTam 

(இவனை புகழ்ந்து எபிரேயர் 11:32 பேசுகிறது)

இவர்மீது ஆவியானவர் இறங்கி ஏவத்தொடங்கியவுடன் பிலிஸ்திய பெண்ணின் மீது காதலில் விழுந்தார்.  அதுல பைபிள் வச்சுது ட்விஸ்டு. அது கர்த்தர் போட்ட ஸ்கெட்ச்

நியா 14:3-4 IRVTam

[3] அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான். [4] அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது யெகோவாவின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

https://bible.com/bible/1899/jdg.14.3-4.IRVTam

*உடனே இந்த தீர்க்கதரிசிகளும் நியாயாதிபதிகளும் கர்த்தர் கூட இருந்தாலும் ஆவியானவர் உள்ளே இருந்தாலும் விபச்சாரம் செய்வார்கள் தான். ஆனால் எங்களுக்கு அவர்கள் முன்மாதிரி இல்லை.. இயேசு தான் முன்மாதிரி என கதை விடுவார்கள் .

இவர்கள் பார்வையில் இயேசு கடவுள். கடவுள் மனிதனாக வந்தால் அவர் பாவம் செய்வாரா?

அவருக்கு பாவம் செய்யும் இச்சை இருக்குமா?

 இப்படி இச்சையே இல்லாத நபர் இச்சையுள்ள மனிதர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருப்பார்?

கர்த்தர் தேர்வு செய்த தீர்க்கதரிசியும் நியாயாதிபதியும் பரிசுத்த ஆவி அருளப்பட்டவர்களும் யெகோவா கூட இருந்தும் இப்படி தரங்கெட்ட செயலில் ஈடுபடுகிறார்களே. அப்படியானால் அவர்களை அறியாமல் தேர்வு செய்தாரா? அறிந்தே தேர்வு செய்தாரா? அப்போ முழு தவறும் கர்த்தர் மீது தானே விழுகிறது.

(ஆனால் முகம்மது நபியோ உடன்படிக்கை எடுக்கும்போது கூட எந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை (புகாரி 7214,2713). அத்தோடு எதேச்சையாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்து, ஹோமோன்கள் (hormones) காரணமாக ஈர்ப்பு ஏற்பட்டபோது கூட தன் சொந்த மனைவியிடமே சென்றார்.(முஸ்லிம் 2718). அனைவரும் தன் சொந்த மனைவியிடமே செல்லவேண்டும் என்றும் வழிகாட்டினார் (முஸ்லிம் 2719). தற்செயலாக ஒரு பெண்ணின் மீது பார்வை விழுந்தாலும் அப்போதும் பார்வையை திருப்பிக் கொள்ளவேண்டும் (முஸ்லிம் 4363) என்றெல்லாம் வழிகாட்டினார்.

ஆனால் இயேசுவோ மற்ற பெண்கள் தன் காலை முத்தமிட வைத்து தலைமுடியால் வருட அனுமதித்து தைலமும் பூச அனுமதித்தார்- லூக்கா 7:38

வழிகாட்ட முன்மாதிரியாக வந்தவர் மற்ற பெண்களை தொட அனுமதித்தால், தற்காலத்தில் பரிசுத்த ஆவி இறங்கிய போதகர்கள் இவ்வாறு செய்ய வழிகாட்டலாக தானே இருக்கும்.  ஆவியானவர் இறங்கியிருந்த தாவீதும் ஆவியானவர் ஏவத்தொடங்கிய சிம்சோனும் என்ன செய்தனர் என்பதை பைபிளே கூறிவிட்டது. பிறகு பரி.ஆவி இறங்கினால் இத்தகைய போதகர்கள் ஆபாசமாக பேசுவதில் நபிகளாரை கொச்சைப்படுத்துவதில் மாற்றான் பொண்டாட்டிகளை படுக்கைக்கு கூப்பிடுவதில் ஆச்சரியம் இல்லையே. இத்தகையோரும் ஒருநாள் சிக்குவர். அப்போது இருக்கு..

 

பைபிளில் கூறப்பட்ட படி கற்பழித்து 50 சேக்கல் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாரா (உபாகமம் 22:28-29)

நபிகளார் தன் மனைவியிடம் சென்று முறையாக நடந்துகொண்டால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

64.சிறுமியை திருமணம் முடித்தததாக போற போக்கில் வாதம் வைக்கிறார்

 

-நபிகளாருக்கு அன்னை ஆயிஷா திருமணம் பேசப்படும் முன்பே முத்யிம் இப்னு அதீ என்பவருடைய மகனுக்கு பேசப்பட்டிருந்தார்-- அத்தகைய திருமணப்பேச்சு செய்த காலத்தில் தான் நபிகளார் திருமணம் பேசினார்கள் (முஸ்னத் அஹ்மத் 25769)

-அக்காலத்தில் 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் இருந்தனர் (புகாரி 2664 இன் தலைப்பு)

-ஆயிஷா () அவர்களை 6 வயதில் திருமணம் செய்து ஒன்பதாம் வயதில் தான் நபிகளாரின் வீட்டுக்கு வந்து தாம்பத்யம் நிகழ்ந்தது(புகாரி 5133,5158)

-குடும்பவாழ்வுக்கு ஏற்ற உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் (அபுதாவுத் 3903, இப்னுமாஜா 3324

-அவரை அவரது தாய் அலங்கரிக்க அனுப்பிய போது அலங்கரித்த பெண்களும் வாழ்த்து கூறினார்கள் (புகாரி 5156). காரணம் அவர்குடும்பவாழ்வுக்கு தகுதியாக இருந்ததால் தான்.

-இதனால் அன்னை ஆயிஷா () பாதிக்கப்படவோ உரிமைகள் பறிக்கப்படவோ இல்லை... மாறாக அதன் பின்பும் தன் தோழியருடன் விளையாடுபவர் ஆக விடப்பட்டார் (புகாரி 6130), விரும்பும் அளவுக்கு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236), அவருடன் ஓட்டப்பந்தயம்த்தில் ஈடுபடும் அளவுக்கு நபிகளார் வயதிற்கேற்ப நடந்தார்கள்- அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979. அத்தோடு அவரையோ வேறு மனைவியையோ நபிகளார் அடித்ததேயில்லை என கூறுபவரும் அன்னை ஆயிஷா தான் (அபூதாவூத் 4786, இப்னுமாஜா 1984). அத்தோடு நபிகளாரை விட தன் இச்சையை கட்டுப்படுத்த வேறு யாராலும் முடியாது என்று கூறும் அளவுக்கு நபிகளார் நடந்தார்கள் (புகாரி 302,1927)

-ஆயிஷா () அவர்கள் நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவும் அவர் விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா அவர்களே இருந்தார்கள் (புகாரி 4789,6024,6030,6004)

ஆக இப்படி அன்னை ஆயிஷா அவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ அக்கால மக்களுக்கோ இதில் பிரச்சினை இல்லாதபோது ஏன் இவர்கள் கதற வேண்டும்?

அத்தோடு இளவயது திருமணங்கள் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றே:

. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.

https://cyh.rrchnm.org/primary-sources/24.html#:~:text=By%201880%2C%20the%20first%20date,of%2012%20or%2013%20years 

.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது

https://www.asahi.com/sp/ajw/articles/14934890 

.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்

https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent 

ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?

-கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (புகாரி 5136,6946,6948)

சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.

பைபிளில் தான் சொந்த மகளை விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது யாத்திராகமம் 21:7-10

பைபிளில் எங்கேயும் எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை. மாறாக சொந்த மகளையே விற்பனை செய்வதை கூட கர்த்தர் ஆதரித்துள்ளார்-யாத்திராகமம் 21:7-10

-பைபிளிலே ஆகாஸ் ராஜா 11 வயதிலேயே அப்பாவாக ஆகியுள்ளார். அவன் 36 வயதில் இறந்தார் (2 இராஜாக்கள் 16:2), அவன் மரணித்த பின் அவனது மகன் எசேக்கியா ராஜாவானான் (2 இராஜாக்கள் 16:20) அப்போது அவனின் வயது 25 (2 இராஜாக்கள் 18:2). 

(உடனே அவன் கெட்டவன் என்று கதைவிட கூடாது. இப்படி திருமண வயது எதுவும் இருக்கவில்லை என்பதற்கு ஆதாரமே இது)

-ரிஃப்கா பாட்டியை ஈசாக்கு தாத்தா முடித்த போது அவரது வயது 3 என யூத அறிஞர் ராசி ஆதியாகமம் 25:20இற்கு விளக்கம் கூறுகிறார்.(https://www.sefaria.org/Rashi_on_Genesis.25.20.2?lang=en  ) இது இன்றும் யூதர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே

-9வயது ஆண் பிள்ளையும், மூன்றுவயது பெண்குழந்தை உடலுறவுக்கு தகுதியானவர்கள் என தல்மூத் கூறுகிறது (avodah zarah 37a :1-2 (https://www.sefaria.org/Avodah_Zarah.37a.1?lang=en  )

-அத்தோடு மரியாள் கர்ப்பமானது 12-14 வயதிலே என கத்தோலிக்க என்சைக்லோபீடியா கூறுகிறது https://www.newadvent.org/cathen/15464b.htm   (தலைப்பு Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph ))

மல்லாக்கப் படுத்துக் துப்பும் நிலமை தான் இவர்களுடையது.

குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற பெண்ணை நபிகளார் திருமணம் முடித்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

65.மறுமகளை விவாகரத்து செய்ய வைத்து திருமணம் முடித்தார் என்று அடித்து விடுகிறார்.

புகாரி 7420 இலே மொழிபெயர்ப்பாளர் 33:37 யார் விசயத்தில் இறங்கியதாக கூறுவதை மொழிபெயர்த்த போது தம்பதியாக இருந்த ஸைத் ஸைனப் விசயத்தில் இறங்கியது என அடைப்புக்குறியுடன் போட்டு விட்டனர். இதை அரைகுறைகள் பிடித்துக்கொண்டு கணவன் மனைவியாக இருந்தபோதே இவ்வசனம் இறங்கியது போன்று தற்குரித்தனமான விவாதங்களில் சித்தரித்தனர். இவற்றுக்கான பதில்

*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிய வைப்பதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள்.

*ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக ஆலோசனை செய்தார். அப்போது நபிகளார் "உன் மனைவியை உன்னோடு வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்றே சொன்னார் (திர்மிதீ 3212)

இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி ஸைத் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது.

*விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம் -மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் காலம்) முடிந்த பின், ஸைதை ஸைனபிடம் அனுப்பியே நபிகளாருக்கு பெண் பேசினார்கள். அதிலே ஸைத் தனக்கு ஸைனபின் மீது மரியாதை அப்போது அதிகரித்துவிட்டது என்கிறார். அதன் பின்பே 33:37இன் இறுதிப்பகுதியான "ஸைத் அவளை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் உமக்கு அவளை திருமணம் செய்து வைத்தோம்." என்பது இறங்கியது (முஸ்லிம் 2798)

இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார்

*இந்த திருமணத்தின் நோக்கம் என்ன என்பதை குர்ஆன் 33:37இன் இறுதிப்பகுதி கூறுகிறது:

"ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" (33:37)

அதாவது சொந்த மகனின் விவாகரத்து செய்த மனைவியரையோ அவனுடைய விதவையான மனைவியரையோ மகனின் தந்தை திருமணம் செய்ய முடியாது (குர்ஆன் 4:23). ஆனால் வளர்க்கப்பட்டவர்கள் அத்தகைய மகன்கள் அல்ல என்பதால், அவர்கள் விவாகரத்து செய்தால் அப்பெண்ணை அந்த நபரை வளர்த்த நபர் முடிப்பதில் தவறில்லை என்பதை செய்வித்து காட்டுவதற்காக நிகழ்ந்ததோடு, இறைவனது கட்டளையும் ஆகும்.

*அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420).

எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட மாட்டார் அல்லவா?

இதிலே வளர்ப்பு மகனின் மனைவியை அபகரித்தது என்று கூற எந்தவித நியாயமும் இல்லை.

(ஒரு பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,, அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே. அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது. அப்போதுகூட நபிகளார் தம் தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன. (இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன் 33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன.

 

இந்த கதைகளின் படி கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.)

இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!

*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த அவரது ஆண்டவரின் மனைவிகளையும் தேவனே மடியில் கொடுத்தார்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

(வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பில் உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் கொடுத்தேன் என உள்ளது. ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாக கொடுப்பதையே குறிக்கும் :

ஆதி 16:5 IRVTam

[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராகஎன்றாள்.

https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam

(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??)

 

*இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக கர்ப்பமாக்கியதால் , அக்குழந்தையை தண்டித்தார். ஆனால் அவளை இவர்கள் பாசையில் சொல்வதென்றால் ஆட்டையப் போட்டு புணர்ந்த போது பிறந்த குழந்தையை தேவன் நேசித்தார் -2 சாமுவேல் 12:14-15,24

2 சாமு 12:14-15, 24 IRVTa

[14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.

[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam  

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது

இது தாவீதின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கிய பின்பே நடந்தது. (1 சாமுவேல் 16:13)- ஆவியானவர் உள்ள போதே காமம் தலைக்கேறி குளிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு படுக்கையறைக்கு அழைப்பித்து விபச்சாரம் செய்தார் (2 சாமுவேல் 11:2-4) என்பதை இது காட்டுகிறது

இதற்காக தேவனோ தாவீதின் மனைவியை பக்கத்திலிருப்பவனுக்கு கொடுத்து இஸ்ரவேலர் பார்க்க பட்டப்பகலில் விபச்சாரம் செய்விப்பதாக சொல்கிறார் (2 சாமுவேல் 12:11-12)-ஃபிலிம் எடுக்கிறாரா?

இப்படி கள்ள உறவை சட்டபூர்வமாக ஆட்டையப் போட்டபோது தேவன் தன் நேசரின் செயலை கண்டிக்காமல் ஆதரித்தார். பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5)

இதை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபிகளார் செய்ததை விமர்சிக்கலாமா

அத்தனைக்கும் ஆவியானவர் இறங்கிய பின் விபச்சாரம் செய்ததும், ஆவியையுடைய தேவனே அவரது மனைவியரை விபச்சாரம் செய்விப்பேன் என சொல்வதும் எதையோ சொல்கிறது. ஆவி தானே பிரச்சினை

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக திருமணம் செய்ததால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?


end


Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1