குர்ஆன் இறைவேதமா 2015 IPC vs TNTJ 2

 முந்தைய பாகம் part 1



21.அரேபிய தீபகற்பத்தில் இருந்து இணைவைப்பாளர்களையும் யூத கிறிஸ்தவர்களையும் வெளியேற்றுவேன் என நபிகளார் சொன்னது

அரேபிய தீபகற்பம் என்று நபியவர்கள் கூறியது ஹிஜாஸ் மாநிலத்தை குறிக்கும். அதாவது மக்கா,மதீனா,யமாமாவும் அதன் சூழ்ந்த பகுதிகளும்.

இதனால் தான் உமர் (ர) அவர்கள் யூதர்களை ஹிஜாஸிலிருந்து  தைமாவுக்கும், அரீஹாவுக்கும் (ஜெரிகோ) நாடுகடத்தினர்.(புகாரி 2338,3152)

இறுதியாக கைபரிலிருந்து தான் யூதர்களை உமர் (ர) அவர்கள் வெளியேற்றினார்கள். அதுவும் அவர்கள் அவருடைய மகனின் கையின் மூட்டுகளை  பிசகச்செய்ததன் பின்னரே நிகழ்ந்தது.. அதுவரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.(புகாரி 2730). நபியவர்களுக்கு அவர்கள் சேர்ந்து விசம் தடவிய இறைச்சியை சாப்பிட கொடுத்ததன் பின்னரும் அங்கே விடப்பட்டிருந்தார்கள் (புகாரி 3169)

யுத்தங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்த அந்த  காலகட்டத்தில் யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் இணைவைப்பவர்களாலும் புனித பூமிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்காகவும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் இவர்களின் வைராக்கிய துர்ப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதை தடுப்பதற்கும் இதை தவிர வேறு வழி இல்லை!  அதனால் தான் நபிகளார் மரணிக்கும் முன் அதை உபதேசமாக கூறினார்கள்.(முஸ்லிம் 3626)

அவர்கள் ஒரேயடியாக துரத்தப்படவுமில்லை.... துரோகங்கள் செய்தபோது தான் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர் (புகாரி 4028)

பொதுவாக அரசுகள் தமக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது கொலை செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும். ஆனால் இஸ்லாமோ அவர்களுக்கு வேறு இடத்தில் குடியமர்த்தியது.

ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் வசிக்கலாம். அப்படி வசிக்கும் போது  கூட , முஸ்லிம்கள் அவர்கள் மீது நல்ல முறையில் நடந்துகொண்டு, அம்மக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் யுத்தம் செய்யும்படி வழிகாட்டப்பட்டிருந்தார்கள்.(புகாரி 3052,3700).

-அதிகாரம் இருந்த காலத்தில், கர்த்தர் மாற்றுமதத்தவர்களை தம் வசிப்பிடத்திலிருந்து துரத்திவிட வேண்டும் என்றும் உங்களின் ஊர்களில் வசிக்க விட கூடாது என்றும் , இல்லாவிட்டால் உங்களை வழிகெடுத்துவிடுவார்கள் என்கிறார்

யாத் 23:31-33 IRVTam

[31] செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். [32] அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. [33] உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும் என்றார்.

https://bible.com/bible/1899/exo.23.31-33.IRVTam

யாத் 34:12-16 IRVTam

[12] நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். [13] அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள். [14] யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். [15] அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்; [16] அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.

https://bible.com/bible/1899/exo.34.12-16.IRVTam

 

-அதிகாரம் இல்லாதபோது கூட, அவர்களில் இருந்து வெளியேறி விடுமாறும் (2 கொரிந்தியர் 6:17),  அத்தகைய குடும்பஸ்தனை விபச்சாரகனோடும் திருடனோடும் சேர்த்து கூறி அத்தகையவனோடு பழகவோ சேர்ந்து ஒன்றாக சாப்பிடவோ கூடாது என்றும் அவனை துரத்தி விட வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 5:11,13).. இயேசுவை முறையாக ஏற்றுக்கொள்ளாதவனை வஞ்சகன் என்றும் அத்தகையோரை வீட்டுக்கு எடுக்கவோ வாழ்த்து சொல்லவோ கூடாது என்றும் அப்படி செய்தால் அவர்களது பாவங்களில் பங்காளிகளாகிவிடுவீர் என்றும் 2 யோவான் 1:7,10-11 கூறுகிறது.

மல்லாக்கப் படுத்து துப்பி விடவும்

புனித பூமிக்கு அச்சுறுத்தல் இல்லாமலும் மார்க்கத்தில் குழப்பம் ஏற்படாமலும் இருப்பதற்காக தூதர் இவ்வாறு கட்டளையிட்டால் அது எப்படி இறைவேதம் இல்லை என்றாகும்?

இதே வேலையை பைபிளே முதலில் சொல்லியுள்ளது.

22. முஸ்லிம் 33, புகாரி போன்றவற்றில் "மக்கள் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என கூறும் வரை போரிடுமாறு ஏவப்பட்டுள்ளேன்" என ஹதீஸ். மற்றும் குர்ஆன் 9:5 குறிப்பிட்டனர்

*ஆரம்பத்தில் தங்களுக்கு தொந்தரவு செய்து வேதனை செய்து கொலை செய்த எதிரிகளை (புகாரி 4514) மன்னிக்குமாறே நபிகளார் ஏவப்பட்டார்கள். போர் செய்ய வேண்டாம் என்று ஏவப்பட்டார்கள்-(நஸாயீ 3086, புகாரி 4566, குர்ஆன் 2:109,3:186))

*பிறகு போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்ட போது அனுமதி வழங்கப்பட்டது (குர்ஆன் 22:39-40)

*முதலில் இதிலுள்ள வார்த்தை اقاتل-உக்காத்தில- (நான் போரிடுவதற்கு) என்பது இரு தரப்பு சண்டையிடுவதையே குறிக்கும் . அதாவது முஸ்லிம்களை எதிர்த்து அவர்களும் போரிடும் நிலையில் முஸ்லிம்களும் போரிடவேண்டும்

*இங்கே மனிதர்கள் என்பது இணைவைப்பாளர்களை குறிக்கும். அதற்கு ஆதாரமாக தெளிவாக நஸாயீ 3966 ஹதீஸிலேயே உள்ளது. ஆனால் யூத கிறிஸ்தவர்களை பற்றியோ குர்ஆன் 9:29 ஜிஸ்யா வரி வாங்குவதே கூறப்பட்டுள்ளது. அதேபோல் நபிகளார் மஜூஸிகளிடம் (நெருப்பு வணங்கிகள்) ஜிஸ்யா வாங்கி இருக்கிறார்கள் .

*பொதுவாக இணைவைப்பாளர்கள் முஃமின்களை மிகவும் பகைமை காட்டுவோராகவும் (குர்ஆன் 5:82), சக்தியிருந்தால் முஸ்லிம்களை எதிர்த்து இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும்வரை போரிட்டுக்கொண்டே இருப்பார்கள் (குர்ஆன் 2:217). ஆகவே தான் இத்தகையோர் இஸ்லாத்தை ஏற்கும் வரை போரிட நபிகளார் ஏவப்பட்டார்கள்.

--சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் வரை போரிடக்கூடிய மனிதர்களை இஸ்லாத்தை ஏற்கும் வரை போரிட ஏவப்படுவதை எப்படி தவறு என்று கூறமுடியும்??--

--ஆனாலும் அவர்களிலுள்ள பெண்களோ குழந்தைகளோ கூலித்தோழிலாளர்களோ (உதாரணமாக மேய்ப்பர்கள்) தாக்கப்படவோ கொல்லப்படவோ மாட்டார்கள். காரணம் அவர்கள் போரிடுவதில்லை--(அபூதாவுத் 2669, புகாரி 3014,3015, முஸ்லிம் 3587,3588 (1744a,1744b)), அத்துடன் உறுதியற்ற கிழவர்களையும் கொல்லுவதை அபூபக்ர் () தடை செய்தார்கள் (முவத்தா மாலிக் பாடம் ஜிகாத் (21) ஹதீஸ் 10), போர் செய்யாத துறவிகளையும் கொல்லுவதை நபிகளார் தடுத்தார்கள் (முஸ்னத் அஹ்மத் 2728).

--அதாவது எதிரிகளில் போரிடக்கூடியவர்களுடன் தான் போரிடுதல் நடைபெறும். பலவீனர்களுடன் அல்ல!!--  அதனால் தான் குர்ஆன் 2:190 கூறும்போது, "உங்களுடன் போரிடுவோருடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். வரம்பு மீறாதீர்கள்" என்று கூறுகிறது .  எதிரி அபயம் கோரினாலும் அபயம் கொடுக்கும் படியும் (குர்ஆன் 9:6), அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் சமாதானத்தின் பக்கம் சாய்வீராக என்றும் (குர்ஆன் 8:61) கூறுகிறது.

முஸ்லிம்களோடு போரிடாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை (குர்ஆன் 60:8)

ஆக போரிடும் காஃபிர்களுடன் தான் போர்.

கர்த்தரையன்றி வேறு கடவுளை ஊராக சேர்ந்து வணங்கினால் அவர்களின் ஊரைலுள்ள எதையும் உயிரோடு வைக்காமல் அழித்து ஊரையே கர்த்தருக்காக கொளுத்தி போடவேண்டும் -உபாகமம் 13:12-16

கானானிய மக்களை உயிரோடு விட்டால் மதமாற்றிவிடுவர் என கூறி அவர்களை ஈவிரக்கமின்றி குழந்தைகள் உட்பட மூச்சு விடும் எதையும் உயிரோடு வைக்காமல் அழித்துப் போடுமாறு கர்த்தர் சொல்லுகிறார் -உபாகமம் 20:16-18

-பழைய பகைக்காக குழந்தைகளை பெண்களை ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொன்னார் -1 சாமுவேல் 15:2-3

மாற்றுமதத்தவர்களுக்கு நலவு நாடக்கூடாது என கர்த்தரே சொன்னார்

எஸ்றா 9:12 IRVTam

 

[12] ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

https://bible.com/bible/1899/ezr.9.12.IRVTam

போரிடும் காஃபிர்களுடன் எதிர்த்து போரிடுமாறு நபிகளார் சொன்னதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

ஆனால் கர்த்தரே ஈவிரக்கமின்றி குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் போன்றோரை கொல்லுமாறு சொன்னதை வைத்துக்கொண்டு பேசலாமா?

23.குர்ஆன் 2:256 மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்கிறது. ஆனால் தொழாதவனுக்கு நரகம் என குர்ஆன் 74 சொல்கிறது. ஸகாத் கொடுக்காதவனுக்கு நரகம் என்கிறது. ஆகவே முரண்பாடு என்கிறார்.

மார்க்கத்தை நிர்ப்பந்தித்து ஏற்க வைக்க கூடாது. இது எப்போது இறங்கியது

பனூநளீர் யூதர்கள் யுத்தம் செய்ததால் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் (புகாரி 4028). அவர்களிடையே முஸ்லிம்களின் பிள்ளைகளில் அவர்கள் முஸ்லிமாக முன்பு யூதமதத்திற்காக நேர்ந்துவிடப்பட்டு யூதராக்கப்பட்டவர்கள் இருந்தனர். அவர்களை தடுத்து வைத்துக்கொள்ள முஸ்லிம்கள் நினைத்த போது தான் "மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை-குர்ஆன் 2:256" எனும் வசனம் இறங்கியது -(அபூதாவூத் 2682)

அதற்கு மறுமையில் தண்டனை கொடுப்பது நிர்ப்பந்தம் அல்ல!!!  தன் சுயதேர்வின்படி செய்த செயலுக்கேற்ற கூலியே அந்த தண்டனை.

போர் செய்யாதவனை கொல்லுவதற்கு முடிவெடுத்தவர் தானே அவர்.

எந்தளவு ரத்த வெறி பிடித்தவர் என்றால், மோவாபியரை கொல்லாமல் அவர்களது இரத்தத்தை சிந்தாமல் கத்தியை பிடித்திருப்பவன் சபிக்கப்பட்டவன் என்கிறார்.

கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை (மனிதனை வெட்டும்கத்தி) அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன். எரேமியா 48:10

*இதைவிட பெரிய அக்கப்போரொன்றை போர் செய்யாததற்காக கர்த்தர் செய்துள்ளார்.

அதாவது , இஸ்ரவேலர் எதிரிகளை கொன்று நாட்டை பிடிக்க பயந்ததற்காக, பயந்தவர்களையே அழித்துப்போட முற்படுகிறார் கர்த்தர்.(எண்ணாகமம் 14:1-4,11-12)

இதை கண்ட மோசே, அப்படி செய்தால் உங்களுக்கு காப்பாற்ற வக்கில்லாமல் கொன்று போட்டீர் என்று எகிப்தியரும் மற்ற ஊராகும் சொல்லுவார்கள் இதனால் அசிங்கமாக போய்விடும் என்று மன்னிக்குமாறும் கேட்கிறார்(எண்ணாகமம் 14:13-16,19)

இதற்காக மனதை மாற்றிக்கொண்டு போகும் வழியிலேயே யுத்தம் செய்யாத இவர்களை படிப்படியாக கொன்று போட முடிவெடுக்கிறார் (எண்ணாகமம் 14:22-23)

ஆனால் யுத்தம் செய்து கொல்லுங்கள் என்று சொன்ன காலேபை தேவனாகிய தன்னை உத்தமமாக பின்பற்றியவன் என்கிறார் (எண்ணாகமம் 14:24)

அதாவது போர் செய்து கொல்ல நினைத்த இவன் தான் உண்மையான விசுவாசி. பயந்து ஓடியவர்கள் பாவிகள் என்று வெளிப்படுத்துகிறார் கர்த்தர்.

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

24.குர்ஆன் 5:35 இலே "வஸீலாவை தேடிக்கொள்ளுங்கள்" என உள்ளது. வஸீலா என்றால் குர்ஆன் ஹதீஸ் படி என்ன என்று கேட்கிறார்.

வஸீலா என்றால் நெருங்குவதற்கான வழி. ஊடகம்.

இறைவன் கட்டளையிட்டவற்றின் படி செயல்படுவதே அதற்கான வழியாகும்.

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

25.குர்ஆன் 4:43, 5:6 தண்ணீர் இல்லாதபோது மண்ணை கொண்டு சுத்தம் செய்யுமாறு கூறுகிறது. மண் உடலை எவ்வாறு சுத்தம் செய்யும் என கேட்கிறார்.

-ஆன்மீக வணக்க வழிபாட்டுக்கான சுத்தமே இது.

இறைவன் கட்டளையிட்ட படி செய்வது அனைத்தும் பகுத்தறிவிற்கு உட்பட்டதாக இருக்கவேண்டியதில்லை!!

கர்த்தர் ரத்தத்தால் சுத்தம் செய்ய சொன்னாரே

இரத்தத்தில் நோய்க்கிருமிகள் இருக்கும்போது , அதை தெளித்து சுத்தம் செய்வது எத்தகைய அறிவியல்?

லேவியராகமம் 14:50-53 TAERV

[50] அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். [51] பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். [52] குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். [53] பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்என்று கூறினார்.

https://bible.com/bible/3154/lev.14.50-53.TAERV 

 

 

ஆன்மீக சட்டங்கள் இருப்பதால் இறைவேதம் இல்லை என்றாகுமா?

26.முஸ்லிம் 3184,1385 இரவில் ஒரு நேரம் உள்ளது அதிலே ஒரு முஸ்லிம் பிரார்த்தித்துக் கேட்டால் அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை . முஸ்லிம் 1543,1544 இதே வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் உண்டு. அதிலே கேட்டால் பதில் கிடைக்கும் என்று இருப்பதால் அவை எந்த நேரங்கள் என கேட்கிறார்

இரவின் கடைசி பகுதி  மூன்றிலொரு பகுதியிலே இறைவன் கீழ் வானத்திற்கு இறங்குவான். அதுவே இரவின் அந்த நேரம் (முஸ்லிம் 1390)

(இறைவன் காலம் இடம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டவன். ஆக அவன் தன் கண்ணியத்திற்கு தகுந்தவாறு இறங்குவான். அது 24 மணிநேரம் தொடர்ந்திருந்தாலும்)

-வெள்ளிக்கிழமையின் அந்த நேரம் இமாம் சொற்பொழிவு மேடையில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று முஸ்லிம் 1546 (853) என தெளிவாக உள்ளது.

அந்த நேரத்தை தெளிவாக குறிப்பிடாவிட்டால் இறைவேதம் இல்லை என்றாகுமா? அதை கண்டடைவதற்காக முயற்சிக்க வேண்டுமா? சரியான தற்குறியாகவே உள்ளனர்.

27.குர்ஆன் 9:124-125 இலே குர்ஆன் விசுவாசிகளுக்கு விசுவாசத்தை அதிகரிப்பதாகவும் , மனதில் நோயுள்ளவர்களுக்கு அசுத்தத்தை அதிகப்படுத்துவதாகவும் கூறுகிறது. குர்ஆன் 2:26 தீயவர்களை வழிதவறச்செய்வதாக கூறுவதாகவும் உருட்டுகிறார்.

விசுவாசிகளுக்கு விசுவாசத்தை அதிகரிக்க செய்யும். (9:124), உள்ளத்தில் சந்தேக நோயுள்ளவர்களுக்கு அசுத்த்திற்கு மேல் அசுத்தத்தை அதிகமாக்குகிறது. ஏற்கனவே சந்தேகத்தில் இருப்பவனுக்கு மேலதிகமாக இன்னும் கூறும்போது அவற்றிலும் சந்தேகம் ஏற்பட்டு அதிகரிக்கும். அதையே அவ்வசனம் கூறுகிறது.

அதாவது அவிசுவாசிகளுக்கு உள்ளத்தில் நோயுள்ளவர்களுக்கு நேர்வழிகாட்டுவதும் நோய்நிவாரணியும் கூட அசுத்தத்தை நோயையும் அதிகரிக்கும்.

ஆனால் உண்மையில் குர்ஆனானது விசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும், நோய் நிவாரணியாகவும் உள்ளது (குர்ஆன் 41:44& 17:82) மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாக உள்ளது (குர்ஆன் 2:185)

-நேர்வழிகாட்டிகூட தீயவர்களுக்கு தப்பான வழியையே காண்பிக்கும்.

அவை அவர்களது தவறே.

-பரிசுத்த ஆவியானவரின் வருகையே பாவத்தை செய்விப்பதும் அறிவீனமாக நடப்பதுமாகவே பைபிளில் காட்டப்பட்டுள்ளது.

*ஆவியானவர் இறங்க முன் தாவீது நன்றாக இருந்தான். ஆவியானவர் வந்த பின்போ (1 சாமுவேல் 16:13, சங்கீதம் 51:11) , குளிக்கிற பெண்ணை பார்த்து காமங்கொண்டு விபச்சாரம் செய்தார்(2 சாமுவேல் 11:2-4)

*சிம்சோனை ஆவியானவர் ஏவத்தொடங்கினார் (நியாயாதிபதிகள் 13:24-25), அதன் பின் அவனோ பிலிஸ்திய பெண்ணை பார்த்ததும் காதலில் விழுந்தான் (நியா 14:1-3), இப்படி காதலில் விழ வைத்ததே தேவனது செயல் தான் என்கிறது பைபிள் (நியாயாதிபதிகள் 14:4). இதன்பின் வேசியுடன் படுத்தார் (நியா 16:1)

*மோசேயின் மீது ஆவியானவர் வந்த பின்போ, தேவனை விசுவாசிக்காமல் போனார் (உபாகமம் 32:50-51, எண்ணாகமம் 20:12)

*சவுலின் மீது ஆவியானவர் இறங்கினார். இதனால் கோபம் ஏற்பட்டு மாட்டை வெட்டிப் போட்டான் -1 சாமுவேல் 11:6-7. இந்த ஆவியானவர் இருக்கும்போது தான் கர்த்தர் சொன்னபடி கேட்காமல் அமெலேக்கிய ராஜாவையும் நல்ல மிருகங்களையும் உயிருடன் விட்டான் (1 சாமுவேல் 15:8-11), இதன் பின்பே ஆவியானவர் இவனை விட்டு போய் தாவீதின் மீது இறங்கினார்( 1 சாமுவேல் 16:13-14). இதன்பின் தாவீது விபச்சாரம் செய்தார்.

ஆக இப்படி பரிசுத்த ஆவியே அசுத்தத்தை வழிகாட்டும் போது, பைபிள் சுத்தத்தை காட்டுமா?

-கர்த்தரே இஸ்ரவேலரை கெடுத்து நரபலி கொடுக்க வைத்ததாக எசேக்கியேல் 20:26 கூறுகிறது

தீயவர்களுக்கு நேர்வழிகாட்டி நோய் நிவாரணி கூட அசுத்தத்தையும் வழிகேட்டையும் அதிகமாக்குகிறது. இது அவர்களின் தீய மனநிலையின் வெளிப்பாடே.

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

28.குர்ஆன் 4:48 இணைவைப்பை மன்னிக்க மாட்டான் என்கிறது. குர்ஆன் 4:153 காளைக்கன்றை வணங்கிய யூதர்களை மன்னித்ததாக கூறுகிறது முரண்பாடு என்கிறார்

இணைவைத்தல் உட்பட எல்லா பாவத்தையும் மனந்திருந்தி பாவமன்னிப்பு கேட்கும்போது இறைவன் மன்னிப்பான் (25:68-71), இஸ்ரவேலர்களும் மாட்டுக்கன்றை வணங்கியபோது, மூஸா நபி கட்டளையிட்ட பிரகாரமாக பாவமன்னிப்பு கேட்டார்கள். அதனாலே மன்னித்தான் (2:54, 7:149&153) இதையே 4:153 சுருக்கமாக மன்னிததாக கூறுகிறது.

4:48&116 மனந்திருந்தாமல் இணைவைத்த நிலையில் இறைவனை சந்திப்பவர்களை குறிக்கிறது. அவர்களுடைய அப்பாவத்தை இறைவன் மன்னிக்க மாட்டான். இணைவைக்காத நிலையில் இறைவனை சந்திப்பவர்களுக்கு ஏனைய பாவங்களை நாடியவர்களை மன்னிப்பான்.

ஆனால் மனந்திருந்தி மரணத்தின் முன்பே மன்னிப்புக்கேட்போரை மன்னிப்பான்! (25:68-71, 39:53)

.அகசியா ராஜாவான போது எத்தனை வயது?

1.22 வயது

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 8:26 TAERV

[26] அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி ராஜாவின் குமாரத்தி.

https://bible.com/bible/3154/2ki.8.26.TAERV

2. 42 வயது

Divrei-HamYamim Bet (2 Ch) 22:2 CJB 2 நாளாகமம் 22:2

 

[2] Achazyah was forty-two years old when he began his reign, and he ruled for one year in Yerushalayim. His mother’s name was ‘Atalyahu the daughter of ‘Omri.

https://bible.com/bible/1275/2ch.22.2.CJB

எபிரேயத்தில் 42 என்றே உள்ளது.. தமிழ் மொழிபெயர்ப்புகளில் உட்பட அநேக மொழிபெயர்ப்புகளில் இது மாபெரும் தவறு என்பதால் 2 இராஜாக்கள் 8:26 கூறும் வயதான 22ஐயே மாற்றி எழுதியுள்ளனர்

காரணம் இவனுடைய தந்தை 40 வயதில் இறந்தார் (1நாளாகமம்21:20) என்று கூறிவிட்டு , அவனுடைய மகனான இவனுக்கு 42 வயது என்றால் தகப்பனையே இரண்டு வருடம் முந்தி விட்டான் என்று கேலிக்கூத்து வரும் அல்லவா? அதற்காக மாற்றியுள்ளனர்.

இதை எபிரேயத்தில் மொழிபெயர்ப்புடன் பார்க்க:

(https://biblehub.com/text/2_chronicles/22-2.htm )

(சிலர் இதை சமாளிப்பதற்காக இந்த வயது என்பது ஆகாப் ராஜாவானதிலிருந்து உள்ள காலம் என வாயில் வடை சுடுகிறார்கள். இது பொய் என அந்த வசனத்தின் எபிரேய முதல் வார்த்தையே காட்டிக்கொடுக்கிறது. அதாவது "பென்-பையன்" என்றே சொல்கிறது. அதாவது 42 வயது பையனாக இருந்தான் என்றே சொல்கிறது. ஆட்சியை "பென்-பையன்" என சொல்வதில்லை!!-இதனாலே இந்த வாதத்தை அப்போலிஜிஸ்ட்களிலே பெரும்பாலானோர் ஏற்பதில்லை.. தற்குறிகள் மட்டுமே உருட்டுவர்!)

ஆக இது காமிடியான முரண்பாடு!

குர்ஆனில் முரண்பாடு இல்லை.. பைபிளில் உண்டு

29.குர்ஆன் 6:101 அவனுக்கு மனைவி இல்லாதிருக்க எப்படி பிள்ளை உண்டாக முடியும் என்கிறது. அப்படியென்றால் மரியமுக்கு கணவன் இல்லாமல் எப்படி பிள்ளை வரும் என கேட்கிறார்.

மர்யமுக்கு கணவன் இல்லாமல் பிள்ளை உண்டானது இறைவன் படைத்ததால் (குர்ஆன் 3:47,59)

இறைவனுக்கு பிள்ளை உண்டாக வேண்டுமானால் மனைவி இருக்க வேண்டும். மனைவி பெற்றெடுப்பது தான் பிள்ளை. அவன் படைத்தது அவனது படைப்பு. இறைவனுக்கு மனைவி இல்லாததுபோல அவனுக்கு பிள்ளையும் இல்லை!!

முரண்பாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?

தாவீதை ஜனங்களை கணக்கெடுக்க ஏவியபடி கணக்கிட்டபோது பட்டயம் தூக்கும் இஸ்ரேல் ஜனத்தார் 8 லட்சமும், பட்டயம் தூக்கும் யூதா ஜனத்தார் 5 லட்சம் பேர் இருந்தனர் (2 சாமுவேல் 24:1,9)

இதே தாவீதை ஏவியது சாத்தான் தான். அப்போது கணக்கிட்ட போது, பட்டயம் தூக்கும் இஸ்ரேல் ஜனத்தார் 11 லட்சம், பட்டயம் தூக்கும் யூதா ஜனத்தார் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் (1 நாளாகமம் 21:1,5)

8,00,000 & 5,00,000 & தேவனா?, 11,00,000& 4,70,000 & சாத்தானா?

முரண்பாடு குர்ஆனில் இல்லை.. பைபிளில் உண்டு

30.கைபரில் யூதர்கள் மீது அவர்கள் வயல்களுக்கு செல்லும்போது முகம்மது நபி அவர்களும் படையினரும் அவர்களுக்கு முன் தோன்றியதை காட்டிவிட்டு திடீர் தாக்குதல் என்கிறார்

திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதெல்லாம் குற்றம் செய்த கைபர் வாழ் யூதர் மீதும் , போருக்கு தயாராகிக்கொண்டிருந்த பனுமுஸ்தலிக் மீதும் தான். அப்போது கூட அவர்களில் போர் செய்யும் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்(புகாரி 2541,610,947)

முகம்மது நபியை கண்டவுடன் அவர்கள் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர்.(புகாரி 2991, 3637)

போரிட்டவர்களையே தாக்கினார்கள் (புகாரி 4200)

அதன்பின் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது. அதையும் முறித்து நடந்தபோது உமர் () காலத்தில் வேறு இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்.(புகாரி 2730)

இதிலே விமர்சிக்கப்பட என்ன இருக்கிறது?

பழைய பகைக்காக குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் மிருகங்கள் அனைத்தையும் கொன்று போடுமாறு கர்த்தர் தன் தீர்க்கதரிசி சாமுவேல் மூலம் சொன்னாரே

1 சாமுவேல் 15:2-3 IRVTam

[2] சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். [3] இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.

https://bible.com/bible/1899/1sa.15.2-3.IRVTam

 

குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொன்னதை நம்பிக்கொண்டு துரோகிகள் மீது திடீரென தோன்றி, போரிடுவோரிடம் போரிட்டதை எப்படி விமர்சிக்க முடியும்?

இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

31. புகாரி 402, 4483 இலே உமர் () , "நான் சொல்வதை கேட்டு அல்லாஹ் வஹீ இறக்கியதாக சொன்னதாக போதகர் உருட்டுகிறார்.

இதை சொல்லும் உமர் () அவர்கள் கூட, மூன்று விசயங்களில் என்னுடைய இறைவனுடன் நான் ஒன்று பட்டேன் என்று தான் கூறுகிறார்கள்.(புகாரி 402..)

இறைவன் ஏற்கனவே இறக்கிவைக்க இருந்துடன் ஒத்துப்போகும் விதமாக உமர் () அவர்கள் மூன்று விடயங்களில் கருத்து சொன்னார்கள். அவ்வளவு தான்.

யோசேப்பு வம்ச பெண்களின் சொல்கேட்டு சட்டம் போட்ட கர்த்தர்

எண்ணாகமம் 27:1-8 IRVTam

[1] யோசேப்பின் மகனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் மகனாகிய மாகீரின் மகனான கிலெயாத்திற்குப் பிறந்த எப்பேருக்குப் மகனாயிருந்த செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து, [2] ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று: [3] “எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் யெகோவாவுக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை. [4] எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்என்றார்கள். [5] மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான். [6] அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: [7] “செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய். [8] மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும்.

https://bible.com/bible/1899/num.27.1-8.IRVTam

பிறகு மீண்டும் அதே பெண்கள் விசயமாக மீண்டும் கேட்க அதன்படி இன்னொரு சட்டத்தையும் வழங்குகிறார் கர்த்தர்.

எண்ணாகமம் 36:2-7 IRVTam

[2] “சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்களுடைய ஆண்டவனுக்குக் யெகோவா கட்டளையிட்டாரே; அன்றியும், எங்களுடைய சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் மகள்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்களுடைய ஆண்டவனுக்குக் யெகோவாவாலே கட்டளையிடப்பட்டதே. [3] இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் மக்களுடைய வேறொரு கோத்திரத்தின் ஆண்களுக்கு மனைவிகளானால், அந்த மகள்களுடைய சுதந்தரம் எங்கள் முற்பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்களுடைய சுதந்தரத்திற்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இல்லாமல் அற்றுப்போகுமே. [4] இஸ்ரவேல் மக்களுக்கு யூபிலி வருடம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமேஎன்றார்கள். [5] அப்பொழுது மோசே யெகோவாவுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் மக்களை நோக்கி: “யோசேப்பு சந்ததியாரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே. [6] யெகோவா செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும். [7] இப்படியே இஸ்ரவேல் மக்களின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்திற்குப் போகாமல் இருக்கும்; இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முன்னோர்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.

https://bible.com/bible/1899/num.36.2-7.IRVTam

 

உமர் () மூன்று விசயத்தில் இறைவன் இறக்கிவைக்கவிருந்த வசனத்துக்கு ஒத்துப்போகும் கருத்தை பேசினார் என்பதால் இறைவேதம் இல்லை என்றாகுமா?

ஆனால் பைபிளிலோ யோசேப்பு வம்ச பெண்களும் அவர்களின் கோத்திரத்தாரும் கூறிய கருத்திற்கேட்ப அதன் பின்பே கர்த்தர் சட்டம் கொடுத்தார் என்பதை பார்க்க மறந்துவிட்டனர்.

32. புகாரி 4990 இலே போருக்கு செல்வோரும் செல்லாதோரும் சமமாக மாட்டார்கள் என வசனம் இறக்கிவிட்டு, குருடர் கேள்வி  கேட்டதிற்கிணங்க மேலதிகமாக "தகுந்த காரணமின்றி" என்பதை இறக்கியதாகவும் அது அறிவீனம் என்கிறார்.

முதலில் இறைவன் செய்வது குறித்து விசாரணை செய்யப்பட மாட்டான். இவர்கள் தான் விசாரிக்க படுவார்கள் (குர்ஆன் 21:23).

றைவன் விரும்பியதை கட்டளையிடுகிறான்/சட்டமாக்குகிறான் (குர்ஆன் 5:1)

இறைவன் விரும்பியதை செய்வான் (2:253,3:40, 22:14,18)

இறைவன் விரும்பியதை படைக்கிறான் (3:47,5:17, 24:45...)

ஒரு வசனத்தை மாற்றினாலோ அல்லது மறக்க வைத்தாலோ அதைவிட சிறந்ததையோ அதைப்போன்றதையோ கொண்டுவரக்கூடியவனே இறைவன் (2:106)

*இறைவன் சகலத்தையும் முன்கூட்டியே அறிந்தவனும் அவற்றை  படைக்க முன்பே எழுதிவிட்டவனும் ஆவான் (புகாரி 3409, குர்ஆன் 57:22)

இறைவன் கேள்வி கேட்பது கூட அவன் அறிந்துகொண்டே கேட்பான் (புகாரி 3223)

-இறைவன் அடியார்களோடு நடந்துகொள்வது அடியார்களின் அறிவிற்கேற்பவே இருக்கும்.

உதாரணமாக , தன் படைப்பில் சிலர் விசுவாசிக்கவே மாட்டார்கள் என முன்பே அறிந்தாலும் அவர்களிடமும் தன் அத்தாட்சிகளை அனுப்பிவைத்து விசுவாசிக்குமாறு அழைப்பான். உதாரணமாக ஃபிர்அவ்னும் அவனது கூட்டமும் நேர்வழியிற்கு திரும்ப வேண்டும் என்பதற்காக அவர்களை  தணடனைகளால் பீடித்தோம் (43:48), அத்தோடு சிறுதண்டனைகளால் உலகில் தண்டிப்பதும் அவர்கள் திரும்பி வருவதற்காகவே (32:21)

*சக்திக்கு மீறி யாரையும் இறைவன் நிர்ப்பந்திப்பதோ பொறுப்புச்சாட்டப்படுவதோ இல்லை (குர்ஆன் 2:233,286, 65:7).

அதுபோன்றே இறைவன் வஹீ இறக்குவதும் மனிதர்களின் அறிவுக்கேற்பவே நடந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலளித்தான்.

 

-ஆகவே இறைவன் விரும்பியபடி நடந்துகொள்வான். இப்படி தான் அவன் நடந்துகொள்ள வேண்டும் என அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவன் அறிந்துகொண்டே இவ்வாறு நடந்துகொள்கிறான்

 

  பைபிளில் கடவுள் அறிவில் பூரணமில்லாதவர் போல சித்தரிக்கும் அநேக வசனங்கள் உள்ளன.

1.தான் ஒரு செயலை செய்துவிட்டு , பின்பு தான் செய்ததற்காக மனஸ்தாபப்படுதல்

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

2 சாமுவேல் 24:15

தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

2 சாமுவேல் 24:16

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

1 சாமுவேல் 15:10-11

2.மனிதனை படைத்துவிட்டு அவன் கொடூரமாக நடந்தபோது அவனை படைத்ததற்தாக மனஸ்தாபப்பட்டார்.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

ஆதியாகமம் 6:5-6

3.இஸ்ரவேலர் தப்பு செய்தபோது அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்து மோசேயை மட்டும் பெரிய ஜாதியாக ஆக்க நினைத்து மோசேயிடம் சொன்னார். மோசேயோ தேவன் அப்படி செய்தால், தேவனுக்கு காப்பாற்ற இயலாமல் கொன்றுபோட்டார் என பேசுவார்கள் என்றும் முன்பு ஆபிரகாமுக்கு செய்த சத்தியத்தை நினைவூட்டி வேண்டினார். அப்போது மனதை மாற்றிக்கொண்டார்:

10.ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

11.மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

12. மலைகளில் அவர்களைக்கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்

.13.உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

14.அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

யாத்திராகமம் 32:10-14

இதேபோல் மீண்டும் பல தடவை நடந்தது .. இவர் அவசரப்படுவார். மோசே அவர் செய்த சத்தியத்தை நினைவூட்டுவார். பிறகு மனஸ்தாபப்படுவார் (எண்ணாகமம் 14:12-20

 

4.எசேக்கியா ராஜா பிழைக்காமல் அதே நோயில் செத்துப் போவான் என கர்த்தர் சொன்னார். பிறகு அவன் ஜெபித்ததால், மனஸ்தாபப்பட்டு சாகமாட்டான் என்றும் 15 வருடம் ஆயுள் கூட்டப்படும் என்றார்.

1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

3 கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

4அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:

5 நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

ஏசாயா 38:1-5

 

5.இதேபோல் தேவன் வாக்குக் கொடுத்துவிட்டு, மக்கள் மாறினால் கர்த்தரும் மாறுவார் என கூறுகிறார்:

7.பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

8.நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

9.கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

10.அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

எரேமியா 18:7-10

 

இப்படி கர்த்தரே தான் செய்த செயலுக்கு மனஸ்தாபப்படுவதும், தன் மனதை மாற்றிக்கொள்வதுமாக இருப்பதாக பைபிள் கூறுவதை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை மட்டும் இப்படி பேசலாமா?

இறைவன் இவ்வாறு தன் கருணையை வெளிப்படுத்தும்போது அது இறைவேதம் இல்லை என்றாகுமா? ஆனால் கர்த்தருக்கு தன் படைப்பு பற்றியே அறிவில்லாதவராக பைபிள் தான் சித்தரிக்கிறது.

33.குர்ஆன் 20:122 ஆதாமை தேர்ந்தெடுத்து மன்னித்து நேர்வழி காட்டினான் என்கிறது. குர்ஆன் 2:38 இங்கிருந்து அனைவரும் இறங்கிவிடுங்கள் என்று சொல்கிறது. மன்னித்தால் ஏன் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றனும் என்றும் ஆதம் ஹவ்வா செய்ததற்கு பிள்ளைகளை ஏன் தண்டிக்கனும் அது ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பதற்கும் முரண்படுவதாக உருட்டினார்.

-பூமியில் தலைமுறையை உண்டாக்குவதே இறைவனின் திட்டம் (குர்ஆன் 2:30). இறைவனுக்கு கட்டுப்படாமல் சைத்தானுக்கு கட்டுப்பட்டால் ஏற்படும் விளைவை வெளிக்காட்டி சைத்தான் எத்தகைய எதிரி என்பதை உணர்த்தும் பாடமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுவர்க்க வாழ்க்கை .

-இறைவன் ஆதமின் பாவத்தை மன்னித்து வழிகாட்டினான். சுவர்க்க வாழ்க்கையை நற்செயல் செய்து மரணத்திற்கு பின் உயிர்த்தெழுதலின் பின்பே அடையும்படி வைத்துள்ளான்.

இந்த ஆதமே மறுமையில் தன் சந்ததிகளை  நரகத்திற்கு உரியவர்களை பிரிப்பார் (புகாரி 3348).

-ஆதம் ஹவ்வா இருவரும் பூமியிலேயே இனப்பெருக்கம் செய்தனர். அதனால் தான் அவர்களின் பிள்ளைகள் பூமியில் பிறந்தனர். இங்கே அப்பிள்ளைகள் தண்டிக்கப்படவில்லை!!..அவர்களும் விசுவாசம் கொண்டு நற்செயல்கள் செய்தே சுவர்க்கத்தை அடைய முடியும் (2:25,82, 4:57....)

முரண்பாடு எப்படி இருக்க வேண்டும்?

பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும்.(எசேக்கியேல் 18:4)

ஆதி மனிதன் பாவம் செய்ததால் பாவம் செய்யாதோரும் சாகவேண்டி ஏற்பட்டது (ரோமர் 5:14)

ஆதாம் ஏவாள் இருவரும் நன்மை தீமை அறியாதோராக இருந்தனர். பழத்தை சாப்பிட்ட பின்பே நன்மை தீமையை அறிந்து தேவனை போல ஆனார்கள் (ஆதி 3:22). நன்மை தீமை அறியாதோர் செய்ததை தப்பு என்று சொல்வதே தப்பு

முரண் பைபிளில் தான் உள்ளது.

34.குர்ஆன் 4:3 மனைவியரிடையே நீதம் செலுத்த முடியாது என அஞ்சினால் ஒரு பெண்ணையோ அல்லது வலக்கரம் சொந்தமான பெண்ணையோ தான் திருமணம் முடிக்கவேண்டும் என்கிறது. 4:129 நீங்கள் எவ்வளவு முயன்றாலும் மனைவியரிடையே நீதமாக நடக்க முடியாது என்கிறது முரண் என்கிறார். அத்தோடு புகாரி 3775 இல் மக்கள் ஆயிஷா () அவர்களிடம் தங்கும் நாளையே அன்பளிப்பு வழங்க தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டார்

குர்ஆன் 4:3 கூறுவது மனிதனால் இயன்ற நீதம். அதாவது உணவு ,உடை, நேரம் போன்றன.

குர்ஆன் 4:129 கூறுவது அவனது சக்திக்கு மீறிய அன்பு விறுப்பு வெறுப்பு ஆகியவற்றிலுள்ள நீதம்.  அதனால் நபிகளார் தன் மனைவியரிடையே நேரத்தை பங்கிட்டு விட்டு, "இறைவா! என்னால் இயன்றவற்றில் என்னுடைய பங்கீடே இது. உன்னால் முடிந்ததும் என்னால் முடியாததுமான விசயத்திற்காக என்னை குற்றம் பிடித்து விடாதே! என் கூறுவார்கள் (திர்மிதீ 1140, அபூதாவூத் 2134)

ஆக இரண்டுமே வெவ்வேறு நீதங்களை குறிக்கிறது. ஒன்று முடியுமான நீதம். மற்றது சக்திக்கு மீறிய நீதம். இதிலே முரணில்லை.

மக்கள் ஆயிஷா () அவர்களின் வீட்டில் நபிகளார் உள்ளபோது அன்பளிப்பு கொடுப்பதை விரும்பினால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

 

 

முரண் பாடுனா எப்படி இருக்க வேண்டும்?

5.யெகோவா (கர்த்தர்) என்ற பெயர் மோசேக்கு முன்பு வேறு யாருக்காவது தெரியுமா?

1.தெரியாது.

யாத்திராகமம் 6:3 IRVTam

[3] சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

https://bible.com/bible/1899/exo.6.3.IRVTam

2.தெரியும்

தேவனை யெகோவா என் ஆபிரகாம் கூப்பிட்டார் சொன்னார்!

ஆதியாகமம் 14:22-23 IRVTam

[22] அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; “ஆபிராமை செல்வந்தனாக்கினேன் என்று நீர் சொல்லாமலிருக்க நான் ஒரு நூலையாகிலும் காலணியின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் ஒன்றையாகிலும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று, [23] வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய யெகோவாவுக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.

https://bible.com/bible/1899/gen.14.22-23.IRVTam

ஆதியாகமம் 15:2 IRVTam

[2] அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானேஎன்றான்.

https://bible.com/bible/1899/gen.15.2.IRVTam

கர்த்தரே தன்னை கர்த்தர் (யெகோவா) என ஆபிராகாமிடம் சொன்னார்:

ஆதியாகமம் 15:7 IRVTam

[7] பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானேஎன்றார்.

https://bible.com/bible/1899/gen.15.7.IRVTam

சாராவுக்கும் இந்த பெயரால் தேவனை தெரியும் (ஆதி 16:2)

ஆபிரகாம் இந்த பெயரை இணைத்து மலைக்கும் பெயரிட்டுள்ளார்:

ஆதி 22:14 IRVTam

[14] ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

https://bible.com/bible/1899/gen.22.14.IRVTam

யாக்கோபுக்கு யெகோவா எனும் பெயராலேயே தரிசனம் ஆகியுள்ளார்:

ஆதி 28:13 IRVTam

 

[13] அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

https://bible.com/bible/1899/gen.28.13.IRVTam

இந்த பெயராலே யாக்கோபு தேவனை அழைத்தார்:

ஆதி 32:9 IRVTam

[9] பின்பு யாக்கோபு: “என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாக இருக்கிறவரே: உன் தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடன் சொல்லியிருக்கிற யெகோவாவே,

https://bible.com/bible/1899/gen.32.9.IRVTam

ஆதி 17:1 மட்டும் படித்துவிட்டு யாத்திராகமம் புத்தகத்தை யாரோ தப்பு தப்பாக எழுதியுள்ளனர் என புரிகிறது

ஆக இது தெளிவான முரண்!

 

முரண் பைபிளில் தான் உள்ளது.

35.ஸகாத் கொடுக்காதவர்களுக்கு எதிராக அபூபக்ர் யுத்தம் செய்வேன் என சொல்லி யுத்தம் செய்ததை குறிப்பிடுகிறார்.

மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு அதன் கடமையை மறுத்து மார்க்கத்தை சிதைக்க முற்பட்டால் அதன் தலைவராக இருப்பவர் வேறு எதை செய்வார்?

இஸ்லாம் ஆன்மீகமும் ஆட்சி அதிகாரமும் நீதித்துறையும் உள்ளடக்கிய மார்க்கம் என்பதால் அதற்கேற்ப தண்டனையும் ஆட்சித்தலைமை மூலம் வழங்கப்படும்.

ஊர் பிடிப்பதற்காக கொலை செய்து போரிட சொன்னாரே கர்த்தர். அதை வைத்துக்கொண்டு பேசலாமா?

யாத்திராகமம் 23:23-24, 27, 31-33 IRVTam

[23] என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன். [24] நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும்.

 

[27] எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன்.

 

[31] செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். [32] அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. [33] உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்என்றார்.

 

https://bible.com/bible/1899/exo.23.23-33.IRVTam

ஆட்சித்தலைவர் குழப்பவாதிகளுடன் அவர்கள் மார்க்கத்தை குழப்பாமல் பாதுகாப்பதற்காக யுத்தம் செய்தால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

 

36.உமர் () பெரும் பெரும் நகரங்களுக்கு படைகளை அனுப்பி ஒன்று இஸ்லாத்தை ஏற்கவேண்டும் அல்லது ஜிஸ்யா வரி கட்ட வேண்டும் என்றும் அதையும் ஏற்க மறுத்தால் போரிடுவதற்கு அனுப்பியதாக புகாரி 3159 ஐயும், முஸ்லிம்கள் அரேபிய தீபகற்பத்தையும் ரோம் பாரசீகர்களையும் வெற்றி கொள்வார்கள் என நபிகளார் சொன்னதாக முஸ்லிம் 5557

இஸ்லாத்தில் ஆரம்பத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் , காஃபிர்களால் அவர் கொல்லப்படுவார் அல்லது குழப்பத்திற்குள்ளாக்கப்படுவார் (புகாரி 4514,4650,4651). சமூகபகிஷ்கரிப்பு செய்து சகலத்திலும் ஒதுக்கி வைத்தனர் (புகாரி 1590,3058).

-இஸ்லாத்தை ஏற்றதற்காக கடுமையாக வேதனை செய்தார்கள் காஃபிர்கள் (புகாரி 3612,3852,3522).

-இஸ்லாத்தை ஏற்றதற்காக வேதனை செய்ததால், முஸ்லிம்கள் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக தப்பியோடினர்(புகாரி 3900,4312). இப்படி தப்பியோடுவோரை கூட தடுத்து பிடித்துக்கொள்வதற்கு முயற்சித்தார்கள் (புகாரி 3906,3922)

-இஸ்லாத்தை எத்திவைக்க சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள் (புகாரி 2801,3064),

-ஆனாலும் இஸ்லாம் இத்தகைய காஃபிர்களை மன்னித்துவிடுமாறு ஆரம்பத்தில் கூறியது (நஸாயீ 3086)

-உறுதியான நிலையை அடைந்த பின், போரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. காரணம் அவர்கள் நியாயமின்றி, ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதும், இவ்வாறு அல்லாஹ் சிலரை கொண்டு சிலரை தடுக்காவிட்டால், யூத கிறிஸ்தவ ஆலயங்களும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டுப்போயிருக்கும்- குர்ஆன் 22:39-40

-பலவீனமான முஸ்லிம்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் வேண்டியிருந்தது. அதற்காகவும் இறைவன் போரிடுமாறு கூறினான்-குர்ஆன் 4:75)

-அத்தோடு காஃபிர்கள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்ஙளோடு அவர்களையும் காஃபிராக்கும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்-குர்ஆன் 2:217, 60:2

இதன்காரணமாக ஜிஹாதை இஸ்லாம் கடமையாக்கியது.

*அப்போது கூட, பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்றும் (புகாரி 3014,3015), போரிடாத கூலியாட்களை (மந்தை சேர்ப்பார்,விவசாயி) கொல்லக்கூடாது (அபூதாவூத் 2669), வயது முதிர்ந்த உறுதியற்ற வயோதிபரை கொல்லக்கூடாது (முஅத்தா மாலிக் பாடம் ஜிகாத் 21 ஹதீஸ் 10), ஆலயங்களில் அடைக்கலம் புகுந்த துறவிகளை கொல்லக்கூடாது (முஸ்னத் அஹ்மத் 2728) என ஒழுங்குமுறை விதித்தது.

இதைத்தவிர மற்றவர்கள் போரிடக்கூடிய ஆண்கள் மட்டுமே. அத்தகையோருடனே போர் நிகழும். (பைபிளை போல குழந்தைகளை கொல்லு குழந்தையை கல்லில் மோதியடித்து கொல்பவன் பாக்கியவான் என இஸ்லாம் சொல்லவில்லை)

-அத்தோடு இஸ்லாம் தோன்றிய காலத்தில் சிற்றரசுகளும் பேரரசுகளும் கோத்திரங்களும் மற்றவர்களை கீழ்ப்படுத்தி ஆக்கிரமிப்பதை வழமையாக கொண்டிருந்தனர். அத்தருணத்தில் மார்க்கத்தை பாதுகாக்கவும் அவர்களுக்குள்ளும் மார்க்கத்தை கொண்டு செல்லவும் அவர்களை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை. -இல்லாவிட்டால் தமது ஆட்சிக்கு அச்சுறுத்தல் என அவ்வரசுகள் கருதினால் அப்போதே இஸ்லாம் முடிந்திருக்கும்.

ஆனாலும் இதை நபிகளார் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்

-அதாவது அக்கூட்டங்களுக்கு படைகளை அனுப்பி இஸ்லாத்தை நோக்கி அழைப்பர். அதை ஏற்க மறுத்தால் வரி கட்டுமாறு கோருவர். அதையும் மறுத்து போருக்கு தயாரானால் போர் நிகழும்-முஸ்லிம் 3566 (1731a,b), அபூதாவூத் 2612, புகாரி 3159)

இதன் நோக்கம், இஸ்லாத்தை திணிப்பது அல்ல.. காஃபிர்களான எதிரித்தலைமைகள் தமக்கு சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217, 60:2). ஏற்கனவே செய்து கொண்டும் இருந்தார்கள்.

அந்நிலைமை ஏற்படாதிருக்க,   ஆட்சியும் ஆன்மீகமும் உடைய இஸ்லாமிய அரசு இவ்வாறே செய்ய வேண்டியதாக இருந்தது

-இத்தகையோரை அடிமைகளாக நடத்த கூடாது என்பதையே இமாம் புகாரி 3052வது ஹதீஸுக்கு தலைப்பாக போடுகிறார். (ஆனால் பைபிளோ அடிமைகளாக வேலைக்காரராக ஆக்கிக்கொள்ளுமாறே கூறுகிறது. இரண்டும் நேரெதிரான து)

-இத்தகைய மக்களுக்காக இஸ்லாமிய அரசு இம்மக்களின் எதிரிகளுக்கு எதிராகவும் போரிடுவதோடு, அம்மக்களின் மீது சக்திக்கு மீறி எதையும் சுமத்த கூடாது என்கிறது (புகாரி 3052,3700)

-இத்தகையோரின் உரிமைகளில் குறைவைத்தாலோ அவர்களது சக்திக்கு மீறி எதையாவது சுமத்தினாலோ, அம்மக்களுக்காக அத்தகையவனுக்கு எதிராக நானே இறைவனிடம் வாதிடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்- (அபூதாவூத் 3052)

-வரி செலுத்தாததற்காக அவர்களை நியாயமின்றி வேதனை செய்வதையும் இஸ்லாமிய அரசு கண்டித்துள்ளது-முஸ்லிம் 5096-5097

-இத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டான் -புகாரி 3166

எந்தளவுக்கென்றால் யூதரிடம் தன் கவசத்தை அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு நபிகளார் நடந்துகொண்டார்கள்-புகாரி 2096,2068,2916

இப்படி வரி செலுத்தும் வேதக்காரர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் பாதுகாப்பையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியது.

ஆனாலும் கண்ணியமும் மரியாதையும் இறைவனுக்கும் தூதருக்கும் விசுவாசிகளுக்குமே உரியது. காரணம் அவர்கள் நிரந்தர நரகத்தில் விழாதிருக்கும்படி சத்தியத்தை உணர்வதற்கே இது. (ஏனெனில் அதிகாரத்தோடும் கண்ணியத்தோடும் இருக்கும்போதும் சத்தியத்தை உணரும் வாய்ப்பு குறைவு)

ஆட்சியதிகாரம் உள்ள மதத்தை வெறும் ஆன்மீகம் மட்டுமேயுள்ள மதத்தை வைத்து விமர்சிக்க முடியாது

பைபிளில் கர்த்தர் இஸ்ரவேலருக்கு கொடுக்கும்  மாற்றுமத நாடுகளிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்று போட வேண்டும் என்றார் கர்த்தர் -உபாகமம் 20:16-18

-தூரத்திலுள்ள நாடுகளுக்கோவென்றால், அவர்களை கப்பம் வாங்கி வேலைக்காரர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதை அவர்கள் ஏற்க மறுத்தால் ஆண்களை கொன்று சொத்துக்களை சூறையாட வேண்டும் என்கிறார் கர்த்தர் -உபாகமம் 20:10-15

-வெறும் பகைக்காக கூட கர்த்தர் குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு தன் தீர்க்கதரிசி மூலம் அவர்களின் ராஜாவுக்கு சொன்னார். ராஜா செய்யாததால் அவனை ராஜாவாக்கியதற்கே மனஸ்தாபப்பட்டார்- 1 சாமுவேல் 15:2-3&11

-இஸ்ரவேலர் போர் செய்ய பயந்ததால், முழு இஸ்ரவேலர்தளையும் கொன்று போட முடிவெடுத்தார். நல்லவேளையாக மோசே அவருக்கு அட்வைஸ் பண்ணி, மனதை மாற்றினார்(எண்ணாகமம் 14:11-19). பிறகு அவர்களை நாப்பது வருடத்தில் கொன்று போட முடிவெடுத்தார். அத்தோடு போர் செய்ய பயப்படாத காலேபை தன்னை முறையாக பின்பற்றியவன் என்றார்(எண்ணாகமம் 14:22-24). ஏனெனில் கர்த்தரை யுத்த வீரன் என்கிறது பைபிள் (யாத்திராகமம் 15:3).

-மோவாபியருடன் யுத்தத்தில் இரத்தம் சிந்தாதவன் சபிக்கப்பட்டவன் என்றும் எரேமியா 48:10 .

*அத்தோடு இவர்களின் குழந்தையை கொல்லும் வெறி காலம் காலமாக இவர்களின் மனதில் இருந்து வந்ததொன்றே.

-அதனால் , பாபிலோனியர்களை பழிவாங்கும் நோக்கில், அவர்களின் குழந்தைகளை கல்லில் மோதியடிப்பவன் பாக்கியவான் என்கிறது சங்கீதம் 137:9

*இவையனைத்தும் கர்த்தரின் வழிகாட்டலில் உள்ள ஈவிரக்கமற்ற செயலே (1 சாமுவேல் 15:3, உபாகமம் 20:16-17)

இது தான் பழைய ஏற்பாட்டு நிலை..

*புதிய ஏற்பாட்டில் ஆட்சியதிகாரம் இல்லாததால் ஆன்மீகம் மட்டும் பேசப்பட்டு இருக்கிறது

ஆனால் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவர் அதிகாரத்தோடு வருவதால்,

-அவரும் இப்படி ஈவிரக்கமின்றி கொலை பண்ணுவார்-வெளி 19:18-21

-அத்தோடு குழந்தைகளையும் கொல்லுவேன் என்கிறார் இயேசு-வெளி 2:23

அதனாலோ தெரியவில்லை பாலஸ்தீனத்தில் கொலை செய்யும்போது எவான்ஜலிஸ்டுகள் ஆதரித்து நியாயப்படுத்துகிறார்கள்.

(நேர்மையானவர்களும் உள்ளனர்)

*இவற்றை சரி கண்டுவிட்டு ஐஸ்ஐஸ் போகோஹராம் போன்ற தற்குறிகளை விமர்சிப்பதற்கு கூட இவர்களுக்கு தகுதி இல்லை. அவர்களைவிட கேவலமாக நடந்துகொள்ள பைபிள் சொல்லியுள்ளது.

 

குறிப்பு: பைபிள் எதிரிகளை நரகத்தில் தள்ளுவதற்காக போர் செய்யும்படி சொன்னது. அதாவது அவர்கள் சிலைவணங்கிகளாக இருந்தனர். அவர்களை கொன்றால் அத்தகைய கொல்லப்பட்டவர்கள் போகுமிடம் நரகமே (காரணம்:விக்கிரக ஆராதனைக்காரன் நரகத்தில் தள்ளப்படுவான் -வெளி 20:8, 1கொரிந்தியர் 6:9)

ஆனால் இஸ்லாமோ சுவர்க்கத்தை நோக்கி அழைப்பதற்காக மார்க்கத்தை கெடுங்கோலர்களிடமும் கொண்டு சேர்க்க போரை பயன்படுத்தியது.

 

இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய அரசுக்கும் அச்சுறுத்தலாக இல்லாதபடிக்கு அதன் ஆட்சியாளர்கள் சூழவிருந்த அரசுகளை தம் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

37.இரவு நேரதாக்குதலில் சிறுவர்களும் பெண்களும் பாதிக்கப்படுவார்கள் என்றிருந்தாலும் தாக்குதல் நடத்தலாமா என கேட்டதற்கு நபிகளார் அவர்களும் அந்த எதிரிகளான ஆண்களை சேர்ந்தவர்களே என்று சொன்னதை குறிப்பிட்டனர்

-பொதுவாக இஸ்லாம் பெண்களை சிறுவர்களை கொல்லக்கூடாது என்றே சொல்கிறது (புகாரி 3014,3015)

-ஆனால் இரவு நேரத்தில் போர்செய்யவேண்டி ஏற்பட்டபோது, குதிரைகளின் கால்களில் சிக்கி குழந்தைகளும் பெண்களும் பாதிப்படைவார்கள் என்பதை குறித்தே அவ்வாறு பரவாயில்லை என நபிகளார் கூறியுள்ளார்கள் -திர்மிதீ 1570

இது வேண்டுமென்றே தாக்குவதோ கொல்லுவதோ அல்ல... மாறாக விபத்து.. அதாவது குதிரையின் காலில் மிதிபட்டு பாதிப்படைதலை குறித்ததே. தற்குறித்தனமான தாக்குதல் அல்ல!!. அதை காரணமாக வைத்து எதிரிகளை தண்டிக்காமல் விட கூடாது அல்லவா. அதற்காகவே அப்போது அவ்வாறு கூறினார்கள்.

இதை வைத்து குழந்தைக்கொலைவெறி பிடித்த இவர்களுக்கு பேச தகுதி இல்லை!

-பைபிள் கர்த்தர் பெண்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் வெறும் பகைமைக்காக ஈவிரக்கமின்றி கொல்லும்படி சொன்னார்-1 சாமுவேல் 15:2-3

-பாபிலோனிய எதிரிகளின் குழந்தைகளை கல்லில் மோதியடிப்பவன் பாக்கியவான் என சங்கீதம் 137:9 கூறுகிறது

இப்படி குழந்தை பெண்களை கொல்லுவதை பொழுதுபோக்காக கூறும் பைபிளை வைத்து தற்குறித்தனமாக பேச கூடாது .

இரவு நேரத்தில் யுத்தம் செய்யவேண்டி ஏற்பட்டபோது குதிரை மிதித்து பாதிக்கப்படுவதால் யுத்தத்தை தள்ளிப்போட முடியாத சூழ்நிலையில் அது பரவாயில்லை என்று நபிகளார் சொன்னதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

பைபிள் தான் குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர்களையும் மிருகங்களையும் ஈவிரக்கமின்றி கொல்லுமாறு கர்த்தர் சொன்னார் என்கிறது. நபிகளார் கொல்ல கூடாது என்றார்கள்.

38.குர்ஆன் 34:14 ஜின்கள் மறைவானவற்றை அறியமுடியாது என்கிறது. குர்ஆன் 2:30 இதே மனிதனை படைக்க முன்பே இரத்தம் சிந்தி குழப்பம் செய்வோரையா படைக்கப்போகிறாய் என மலக்குகள் கேட்டனர். ஆகவே முரண்பாடு என்கிறார்  மேலதிகமாக குர்ஆன் 72:19 இலே மறைவானவற்றை தூதரை தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்

ஜின்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். (மலக்குகள் போசுவதை ஒட்டுக் கேட்டால் மட்டுமே நாம் கேட்டதை மட்டும் அறிவார்கள். மறைவானவற்றை அறியமாட்டார்கள்)

மனிதர்கள் குழப்பம் செய்வதை மலக்குகள் அறிந்தது இறைவன் அறிவித்துக்கொடுத்ததால் தான். அதனால் தான் குர்ஆன் 2:31 "நீ எங்களுக்கு கற்றுத்தந்ததை தவிர வேறு அறிவு எமக்கு இல்லை" என வானவர்கள் கூறினார்கள்.

குர்ஆன் 72:19 மனிதர்கள் மற்றும் ஜின்களை பற்றி பேசுகிறது. அவர்களிலுள்ள தன் தூதருக்கு மட்டுமே அறிவித்து கொடுப்பான். வானவர்களை பற்றி இவ்வசனம் பேசவில்லை!

முரண்பாடு எப்படி இருக்க வேண்டும்?

6.யாக்கோபு இனி யாக்கோபு என அழைக்கப்படுவானா?

1.இல்லை!

ஆதி 32:28 IRVTam

[28] அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயேஎன்றார்.

https://bible.com/bible/1899/gen.32.28.IRVTam

ஆதி 35:10 IRVTam

[10] “இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல்என்று பெயரிட்டார்.

https://bible.com/bible/1899/gen.35.10.IRVTam

2.ஆம்! -பெயரை மாற்றிய கர்த்தரே கான்பீஸ் ஆகிட்டார்:

ஆதி 46:2 IRVTam

 

[2] அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: “யாக்கோபே, யாக்கோபேஎன்று கூப்பிட்டார்; அவன் இதோ, “அடியேன்என்றான்.

https://bible.com/bible/1899/gen.46.2.IRVTam

இதன் பின்பும் 300 தடவைக்கு அதிகமாக இந்த யாக்கோபு எனும் பெயராலே கூப்பிடப்பட்டுள்ளார்.

வேடிக்கையாக பெயரை மாற்றியவரே மோசேயிடம், இஸ்ரேலின் தேவன் என சொல்லாமல் யாக்கோபின் தேவன் என்றே அறிமுகப்படுத்தினார்- யாத்திராகமம் 3:6,16

ஆக இதுவும் தெளிவான முரண்பாடு!

முரண்பாடு பைபிளில் தான் உள்ளது.

39.குர்ஆன் 30:24 வானம் பூமியிலுள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே கீழ்படிகின்றன என்கிறது. குர்ஆன் 33:72 வானங்கள் பூமியிடம் மலைகளிலும் அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டிய போது அவை சுமக்க பயந்து மறுத்தன என்பது முரண் என்றும் அமானிதம் என்பதிலேயே கருத்துவேறுபாடு உள்ளது என்கிறார்

-வானம் பூமியிலுளளவை இறைவன் அவற்றுக்கு விதித்த தீர்மானத்தின்படியே முற்றிலும் இயங்குகின்றன. அடிபணிகின்றன

-

படைப்புகளையும் படைப்புகளின் செயல்களையும் படைப்பவனே இறைவன் (குர்ஆன் 37:96)

வானங்கள் பூமி மற்றும் மலைகளுக்கு சுமந்து கொள்ளும்படி கட்டளையிடவில்லை. மாறாக எடுத்துக் காட்டினான். அவை பயந்ததால் தான் சுமந்து கொள்ள மறுத்தன-33:72.

அதாவது அவற்றிற்கு  தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டது. அவைகளின் தேர்வு சுமக்காதிருத்தல் என்பதே. காரணம் பயம்.

ஏனெனில் அதை சுமந்து கொண்டால் அதிலே  உண்மையான விசுவாசிகளாக இருப்போரை மன்னித்து நயவஞ்சகர்களையும் இணைவைப்பாளர்களையும் தண்டிப்பான்-குர்ஆன் 33:73. அதனால் அதை பொறுப்பெடுத்து செயல்பட அவை பயந்தன

மற்றபடி அல்லாஹ் கட்டளையிட்டாலே ஆகிவிடும் (குர்ஆன் 2:117, 3:47,59..)

(இங்கே அமானா என்பது விசுவாசித்தால்  மன்னிப்பும் நிராகரித்தால் தண்டனையும் உண்டு என்று பொறுப்பேற்று செயற்படுவதை குறிக்கிறது என்பதை 33:73 தெளிவாக காட்டுகிறது)

பைபிளில் சாத்தானே கர்த்தரை தூண்டிவிட்டு யோபுவின் மீது தீங்குகளை வரவழைத்தான்:

யோபு 2:3-7 IRVTam

[3] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். [4] சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். [5] ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். [6] அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார். [7] அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

https://bible.com/bible/1899/job.2.3-7.IRVTam   

 

இறைவன் தன் படைப்புக்கு தேர்வு செய்யும் உரிமை வழங்கினால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?

சாத்தான் சொல் கேட்டே நடித்துள்ளார் என பைபிள் கூறும்போது இதெல்லாம் ஒரு வாதமாக?

40.குர்ஆன் 9:51 அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் நடக்காது. ஹதீஸ்களிலும் சுவர்க்கவாசி நரகவாசி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருப்பதாக கூறுகிறது. ஆனால் கெட்டசெயல்களுக்காக தண்டனை உண்டு என கூறுவதுடன் முரண் என்கிறார்

-இறைவன் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்தவன்.

அவன் அறிந்ததையே விதித்துள்ளான்.

ஒருவன் தன் செயல்களால் நரகம் போவானா சுவர்க்கம் போவானா என முன்கூட்டியே அறிந்துள்ளான் இறைவன். அறியாவிட்டால் அவன் இறைவனாக முடியாது.

அவ்வாறு இறைவன் அறிந்ததை விதித்தான். அதுவே நிகழ்கிறது

தேவனே மக்களை தீட்டுப்பட செய்து நரபலி இடவைத்தார்

எசேக்கியேல் 20:26 IRVTam

[26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

https://bible.com/bible/1899/ezk.20.26.IRVTam

இதை வைத்துக்கொண்டு பேசலாமா

இறைவன் சகலத்தையும் அறிந்து அதை விதித்தான் என்பதால் குர்ஆன் இறைவேதம் இல்லை என்றாகுமா?


Part 3

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1