YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 3

 முந்திய பாகத்தை காண



மூன்றாம் வீடியோ ஆரம்பம்

8.முஸ்லிம் தரப்பு நான்காம் அமர்வு

62.முஸ்லிம் தரப்பு வாதம்

-ஒப்பந்தத்திலே இல்லாதவாறு தலைப்பை தங்களிடமுள்ள தகவல்களுக்கேற்பட தலைப்பை விவாதத்தின் போது மாற்றியிருக்கிறார்கள் இந்த YDM குழு என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

உண்மையான தலைப்பு "இஸ்லாமா கிறிஸ்தவமா?" என்பது தான்.

இஸ்லாத்தின்மீது தீவிரவாத குற்றச்சாட்டை வைத்து , கிறிஸ்தவம் ரோமர்களின் கீழே பலவீனமான நிலையில் இருந்த போது போர் பற்றி கட்டளையில்லை என்பதால் அதை மட்டுமே வைத்து விவாதத்தை ஓட்டி விடுவதற்கு கள்ளத்தனமாக "அமைதிக்கும், நல்லொழுக்கதிற்கும் வழிகாட்டுவது " என்பதை சேர்த்திருக்கிறார்கள். இது இவர்களது கயமையை காட்டுகிறது.

(0:00:40)

-முஸ்லிம் தரப்பு இதுவரைக்கும் நல்ல முறையிலேயே பேசிய போதும், YDM குழுவோ "அல்லாஹ் விளையாடுறான்" என்பது போன்ற வார்த்தைகளை பாவித்திருப்பதை சுட்டிக்காட்டினர். (0:00:52)

-கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாதபோது சுட்டிக்காட்டியதற்கு, இன்னும் விவாதம் முடியவில்லை என்று போதகர் கூறியதையும், அதற்கு முன்பு அதே போதகர் முஸ்லிம் தரப்பை குறித்து பதில் தர திராணி இல்லை என்று முன்னுக்கு பின் முரணாக பேசியதை சுட்டிக்காட்டினர் (0:01:40)

அதாவது ydm வந்தா ரத்தம். மற்றவர்களுக்கு வந்த தக்காளி சாஸ்.

-போதகர் "இலேசாக அடியுங்கள்" என்பது பிராக்கட்டில் இவர்களாக சேர்த்தது என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு, விவாத ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பின் படி தான் கூறினோம் என்பதையும் கடுமையாக மனைவியை அடிப்பதை கண்டிக்கும் ஹதீஸாக புகாரி 6042ஐ சுட்டிக் காட்டினார்கள். (காயமேற்படாதவாறு இலேசாக அடியுங்கள் என்பதை தான் நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள் -முஸ்லிம் 2334)

(0:02:30)

-குர்ஆன் 9:111 இல் முஃமின்களின் உயிர்களை உடமைகளை சுவர்க்கத்திற்காக வாங்கிக்கொண்டான்  என்பதை குறித்து போதகர் இருட்டடிப்பு செய்த பகுதியான "அவர்கள் கொல்லப்படுகிறார்கள்" என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

(அதாவது போரில் முஸ்லிம்கள்னும் எதிரிகளை கொல்லுவார்கள். அவர்களும் முஸ்லிம்களை கொல்லுவார்கள்.

முதலில் போரை துவங்கியது காஃபிர்கள் தான் என்பதாலும் முஸ்லிம்களை எதிர்த்து போரிடுவோருடன் போரிடும்படியுமே இஸ்லாம் கட்டளையிட்டது-22:39-40,9:13, 2:190

அத்தகைய காஃபிர்கள் தமக்கு சக்தி இருந்தால், முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேறும் வரை போரிடுவார்கள் (2:217) என இறைவன் அறிவான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முஃமின்களின் உயிர்களையும், உடமைகளையும் சுவர்க்கத்திற்காக விலைக்கு வாங்கி கொண்டான் என்று கூறப்படுகிறது . இதில் எந்த தீவிரவாதமும் இல்லை)

(0:04:30)

-இந்த போதகர்கள் தம்மிடம் உருப்படியான வாதம் இல்லாமல், உசுப்பேத்துவதற்காகவே குரலை உயர்த்தி பேசும் நடைமுறை சுட்டிக்காட்டப்பட்டது.

-முஸ்லிம்கள் செய்யும்படி ஏவப்பட்ட யுத்தமானது வெறுமனே தாக்குதல் அல்ல. ஒடுக்கப்படும் முஸ்லிம்களான அப்பாவிகளை பலவீனர்களை பெண்களை பாதுகாப்பதற்கும் என்பதை குர்ஆன் 4:74-75 வசனங்களை வாசித்துக்காட்டி பதில் வழங்கப்பட்டது.

அதேபோல் முஸ்லிம்கள் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று சொன்னதற்காக அநியாயமாக தங்களின் வீடுகளை விட்டும் விரட்டப்ட்டதாகவும் அத்தகையவர்களுக்கு போர் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற கருத்துப்பட வரும் குர்ஆன் 22:39-40 வசனங்கள் வாசித்துக் காட்டப்பட்டு, உங்களை எதிர்த்து போரிடுவோரை நீங்களும் எதிர்த்து போரிடுங்கள் வரம்பு மீற வேண்டாம் என்று தொடங்கும் குர்ஆன் 2:190 வாசித்துக் காட்டப்பட்டு, வெறுமனே மதத்தை திணிக்க போர் என்று இந்த YDM தரப்பு வைத்த வாதம் தப்பு என்று நிரூபித்தனர்.

அத்தோடு YDM தரப்பு வைத்தே அதே குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் பொருந்தக்கூடிய பைபிள் வசனங்கள் வாசித்துக்காட்டப்பட்டது நினைவூட்டப்பட்டது.

(அதாவது YDM போதகரகளின் நிலைமை -மல்லாக்க படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போன்றது தான்)

(0:09:00)

-குர்ஆன் 9:23 முஸ்லிமல்லாதவரை பாதுகாவலராக எடுக்க கூடாது அவர்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் என்று வாதம்வைத்து உறவினரை பெற்றோரை பிரிக்க சொல்வதாக வைத்த வாதத்திற்கு, குர்ஆன் 60:8 வசனத்தை வாசித்து அது இறங்கிய சூழ்நிலையே முஸ்லிமல்லாத தாயை சேர்ந்து நடப்பதை அனுமதிப்பதற்காக தான் என்று புகாரி 5978,5979 ஹதீஸ் குறித்து கூறி, இணைவைக்கும் உறவினரையும் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு ஆதாரமாக புகாரி 5981வது ஹதீஸ் குறிப்பிடப்பட்டது.

(அப்போது இந்தப்போதகர்கள் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இதையாச்சும் உள்வாங்கினார்களா என்று தெரியாது) (0:10:00)

 

 

-சுதேசிக்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்க வேண்டும் என கர்த்தர் சொன்னதை எவ்வளவு சிறப்புக்குரிய போதனையாக போதகர் அறிவீனமாக வாசித்ததை சுட்டிக்காட்டி, அவ்வசனம் உண்மையில் அந்நியனது ஆணுறுப்பும் பாரபட்சம் பார்க்காமல் சுன்னத் செய்யப்பட வேண்டும், வேறு கடவுளை வணங்க கூடாது என்று கூறுவது தான். அதாவது அவனுக்கும் இவர்களது மதத்தை திணிப்பதை தான் போதகர் பெரிய நியாயம் போல நினைத்து பேசியது சுட்டிக்காட்டப்பட்டது

(0:10:30)

-மதத்திற்காக ஒடுக்கும்படி பைபிள் சொல்லவில்லை, இஸ்ரவேலர்கள் மாற்று கடவுளை வணங்கினால் தான் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என கர்த்தர் சொன்னார் என்று போதகர் உருட்டியதற்கு பதிலாக,

அவர்கள் வேறு மதத்தவர்கள் என்பதால் தான் அவர்களை ஊரைவிட்டே துரத்திவிட்டு இவர்களை மட்டும் இருக்கும்படி தேவன் சொல்லும் வசனமான யாத்திராகமம் 23:33 வாசித்துக் காட்டப்பட்டது.

அத்தோடு யாத்திராகமம் 34:15

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;

யாத்திராகமம் 34:12, 15

வாசித்துக்காட்டி, மதத்தை காரணம் காட்டி தான் அந்த மக்களையே துரத்திவிடும் படி கொல்லும்படி கர்த்தர் கட்டளையிடுவது சுட்டிக்காட்டப்பட்டு, மாற்று மதத்தவனுக்கு அவனது மதத்தை பின்பற்ற எந்த உரிமையுமே கர்த்தர் கொடுக்கவில்லை என வாதம் வைக்கப்பட்டது.

அதாவது சுதேசிக்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் என்பது இருவருமே கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும் அவருக்கு மட்டுமே பலி கொடுக்க வேண்டும் என்பது தான்..

தம் மதத்தில் அல்லாஹ்வை போல நிர்ப்பந்திப்பதில்லை என அவதூறாக சொல்லிய போதகர்களுக்கு, முகத்தில் கரியை பூசும் விதமாக , இஸ்ரவேலன் வேறொருத்தனை வணங்கினால் ஏன் அவனை கொல்ல சொல்ல வேண்டும்? இது நிர்ப்பந்தம் இல்லையா என்று எதிர்க் கேள்வி வைக்கப்பட்டது.

(தம் மதத்தை பற்றி ஞானசூனியம்களாக வந்துவிட்டு, குரலை உயர்த்துவதை மட்டுமே செய்துள்ளனர் YDM தரப்பு)

(0:16:20)

-ஒரே பிரமாணத்தின் லட்சணத்தை லேவியராகமம் 25:42-44, அந்நியனை தலைமுறை தலைமுறையாக அடிமையாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் இஸ்ரவேலனாகிய சகோதரனை அப்படி செய்ய கூடாது என்று தெளிவாக கூறப்பட்டதை குறிப்பிட்டு மூஞ்சில் மீண்டும் கரியை புசிவிட்டனர் முஸ்லிம் தரப்பு (0:17:30)

(குறிப்பாக இவர்கள் யுத்தத்திற்கு போய் சமாதானத்திற்கு வந்தால் கூட, அவர்களை அடிமைகளாக சேவகம் செய்ய வேண்டும் என்று தான் உபாகமம் 20:10-12 சொல்கிறது.

அதன்படியே யோசுவா , சாமாதானமானவர்களை அடிமைகளாக வைத்து வேலவாங்கினார்-யோசுவா 9:3-24)

முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு (0:17:48)

9.கிறிஸ்தவ தரப்பு ஐந்தாம் அமர்வு

63.மீண்டும் நேரத்தை வீணடித்துவிட்டனர் பதில் சொல்லவில்லை என சொன்னதை திருப்பிச் சொல்லும் கிளிபோல பேசுகிறார் போதகர்.

கணவன் குடிச்சுட்டு வந்து மனைவியை அடித்தால் என்ன தீர்வு என்பதற்கு, தேவனிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்கிறார். பக்தி இல்லாத அவிசுவாசியை குறித்து மனைவி பக்தியாக நடப்பதை பார்த்து திருந்துவான் என்று சொல்லப்பட்டதை, தீர்வு இல்லாமையினால் கூறுகிறார்.

கடவுளிடம் ஜெபம் செய்து கணவனை மாற்ற வேண்டும் என்கிறார். தேவன் அந்த ஜெபத்துக்கு பதில் கொடுக்காவிட்டால் என்ன செய்வது?

இவருடைய சகோதரிக்கோ மகளுக்கோ இப்படி ஒரு நிலை வந்தால், இவர் சொன்னது போல செய்யமாட்டார்.

 

64.குர்ஆனில் பிராக்கட்டில் "இலேசாக அடியுங்கள்" (4:34) என்று இல்லாததை போட்டிருப்பதாகவும், ஹதீஸில் இலேசாக அடிக்குமாறு இல்லை என்று வாதம் வைக்கவில்லை என்றும் பிராக்கட்டில் இருப்பது வஹியா என்று கேட்கிறார்.

இவர்களை போன்ற மடையர்கள் தப்பாக புரிந்துவிட கூடாது என்பதற்காக, முகம்மது நபி குர்ஆனின்படி வழிகாட்டியதிலிருந்து எடுத்து பிராக்கட்டில் போடுவது அவசியம் என்று கருதி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். அவ்வளவு தான்.

(24:00)

65.பேசும்போது பிஸ்கட் சாப்பிட்டது போதகருக்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. 9:111ஐ ஜிஸ்யா குறித்து சொன்னதென்றும், முஸ்லிம்கள் வெட்டினால் எதிரிகள் வெட்டாதிருப்பார்களா என கேட்கிறார்- (0:24:12)

தெளிவாக முஸ்லிம் நண்பர்கள் பதில் கொடுத்தார்கள், முஸ்லிம்கள் அநியாயம் செய்யப்பட்டு விரட்டப்பட்ட பின் தான் போர் கடமையானதோடு, பலவீனர்களை காப்பாற்றுவதற்காக போர் செய்வது பற்றிய வசனமான 4:74-75 வசனங்களை வாசித்துக்காட்டியிருந்தனர். இவர் உள்வாங்கவில்லை

ஆனால் பைபிள் பற்றி கர்த்தர் மதத்துக்காக கொலை பண்ண சொன்னது பற்றி கப்சிப். எல்லாம் அவர் சாப்பிட்ட பிஸ்கட்டின் மகிமை

 

66.கிறிஸ்தவத்தை ஏற்காத விட்டால் தூசி தட்டிவிட்டு போய்ட்டிருக்க இயேசு சொன்னார் என்கிறார்.

 சக்தி இல்லாத பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால் இயேசுவின் இரண்டாம் வருகையில் கொல்லுவார் அல்லவா?

முன்பே பழிவாங்குவதற்காக குழந்தைகளையும் கொல்ல சொன்னவர் அவரது தகப்பனா?(1 சாமுவேல் 15:2-3)

பவுலும் மாற்றுமத சிலைவணங்கியை விபச்சாரகனோடும் கொள்ளைக்காரனோடும் சேர்த்து கூறி அத்தகையவனோடு பழகவோ சேர்ந்து உண்ணவோ கூடாது என்றும் அவனை துரத்திவிடு என்கிறார் 1 கொரிந்தியர் 5:11,13

0:25:00

67.சுதேசிக்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் என்று போதகர் தப்பாக புரிந்து பேசியதற்கு பதிலாக, அது பாரபட்சம் பார்க்காமல் சுன்னத் செய்யனும் என்பதை தான் குறிக்கிறது என்று மூஞ்சியில் கரி பூசப்பட்டதால்,

சமாளிப்பதற்காக, அது வற்புறுத்தி செய்வதல்ல.. அவனாக விரும்பி பஸ்காவை கொண்டாட கேட்டதால் இப்படி செஞ்சுக்கணும் என்கிறார்.

இது தானே திணிப்பு.. அவன் இருக்கிற படியே கொண்டாட சொல்லியிருக்கலாமே என்ற புரிதல் கூட போதகருக்கு இல்லை... எல்லாம் பிஸ்கட் செயல்..

ஒரே பிரமாணம் ஒரே நீதி என்று ஆதாரமாக வைத்ததே சுக்குநூறாகி நாறிப்போனதை உணரவில்லை.

(0:26;00)

68.மீண்டும் பிஸ்கட் வேலை செய்கிறது.இவர் வைத்த  ஒரே பிரமாணத்தின் லட்சனம், யூத இஸ்ரவேல் அடிமையை அடிமையாக எப்போதும் ஒடுக்க கூடாது. ஆனால் அந்நியனை அப்படி அடிமையாக காலம்காலமாக அடிமைப்படுத்தலாம் என்ற லேவியராகமம் 25:42-44 வாசித்து மூஞ்சியில் கரி பூசப்பட்டதால்,

அதற்கு பதில் எனும் பெயரில் யாத்திராகமம் 21:2 வாசித்து, அதிலே எபிரேய (யூத இஸ்ரவேல்) அடிமை ஆறு வருசம் அடிமையாக இருக்கலாம். அதன் பின் விடுதலையாக வேண்டும் என்பதை வாசிக்கிறார். அது மதத்துக்காக அல்ல என்கிறார்.

அவர் வைத்த வாதமும் மறந்து எதிர்த்தரப்பு என்ன சொல்கிறார்கள் என்பதையும் உள்வாங்காமல் பிஸ்கட் சாப்பிட்டுள்ளார். இவருக்கு விவாதம் ஒரு கேடு.

எபிரேய யூத அடிமை ஆறு வருடம் தான் அடிமையாகலாம். ஆனால் அந்நியனை காலம் முழுதும் அடிமைப்படுத்தலாம் என்பதே குற்றச்சாட்டாக வைத்து இது தான் ஒரே பிரமாணமா என்பது தான் முஸ்லிம் தரப்பு கேட்டது.

இதிலே ஒரே பிரமாணம் இருப்பதாக உருட்டியதும் பல்லிளிக்குதே. (0:27:00)

69.பிஸ்கட்டில் ஏதாவது சரக்கை தொட்டு சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. மீண்டும் குடிகார கணவன் மனைவியை உதைத்தால், மனைவிக்கு என்ன நீதி என்று கேட்டால்,

முஸ்லிம் தரப்பு வெட்டிவிட பார்க்கிறது என்றும் அவளை விவாகரத்து செய்து வேறு பெண்ணை முடிக்க மற்ற பெண்ணின் மீதுள்ள மோகம் என்று உலருகிறார்.

அந்த பெண்ணுக்கு தீர்வு என்ன? இஸ்லாமிய அடிப்படையில், அவள் விவாகரத்தை கேட்டுப் பெற முடியும். உரிமை அவளுக்கு உண்டு. இதற்கும் மூன்றாம் தரப்பின் பெண் மோகத்திற்கும் என்ன சம்பந்தம்?

எல்லாம் பிஸ்கட் செய்யும் வேலை- (0:28:00)

70.இஸ்ரவேலர் மதத்தினால் செய்யும் தீவிரவாதத்தை பற்றி கேட்டால், அவர்கள் மனந்திரும்பியதால் கடவுள் அவர்களை மீண்டும் தேசத்துக்கு கொண்டுவந்தார். அதனால் கொல்கிறார்கள் என்பது போல உலருகிறார்.

நாட்டை பிடிப்பதற்கு சொந்த ஊர்மக்களை கொன்றும் விரட்டியும் தானே கர்த்தர் கைப்பற்ற சொன்னார் (எண்ணாகமம் 13&14) இது தீவிரவாதம் இல்லையா?

(0:29:00)

71.நிச்சயமாக பிஸ்கட்டை சாராயத்தில் தான் தொட்டிருப்பார். குர்ஆன் 2:190 உங்களுடன் போரிடுவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள் என்பதை "அல்லாஹ்வின் பார்வையில் போர் புரியுங்கள்" என்றும் "அல்லாஹ்வின் பார்வையில் போர் என்பது அவனது வார்த்தை மேலோங்க போரிடுவது தான்-புகாரி 7458" என்கிறார்.

என்ன டிசைன் விவாதம்னே தெரியல.. பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு சரியாக காதுகொடுக்காமலும் கண்ணை திறந்து சரியாக வாசிக்காமலும் உருட்டுகிறார்.

உங்களை எதிர்த்து போர் செய்வோருடன் போர் செய்யுங்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

வசனத்திலேயே போர் புரிவோருடன் போரிடுங்கள் என்று இருப்பதை படிக்காமல், தாக்க வருபவர்களையா எதிர்த்து போரிட்டார்கள் என்று கேட்கிறார்.

(0:30:00)

72.மீண்டும் அதே பிஸ்கட் வல்லமை. குர்ஆன் 9:29 இல் ஜிஸ்யா கொடுக்கும் வரை போர் செய்ய சொல்கிறது என்கிறார். இது தாக்க வந்தவர்களை தாக்குவதா என்று கேட்கிறார்.

தாக்க இருப்பவர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம் தானே. (ஏனெனில் காஃபிர்கள் தமக்கு சக்தி இருந்தால் முஸ்லிம்களை காஃபிராகும்வரைக்கும் யுத்தம் செய்வார்கள் (குர்ஆன் 2:217) என அல்லாஹ் அறிந்துள்ளான்).

இதை எப்படி நபியவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்?

முதலில் இஸ்லாத்தை எடுத்து சொல்வார்கள். அதை ஏற்க மறுத்தால் ஜிஸ்யா வரி கட்டுமாறு கூறுவார்கள்.. அதையும் ஏற்க மறுத்தால் தான் போர். (புகாரி 3159, முஸ்லிம் 3566)

அந்த வரியும் அவர்களது சக்திக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும் . அம்மக்களுக்கு பொறுப்பெடுத்த இஸ்லாமிய அரசு அவர்களை பாதுகாப்பதற்காகவும் போராட வேண்டும் (புகாரி 3052,3700)

அதனால் இது நீதமானது தான்.

ஆனால் பைபிளில் உபாகமமம் 20:10-12 கடவுள் சொல்லி அடிமைப்படுத்தி வரி வாங்குவது பற்றி கேட்கப்பட்டதற்கு பதில் வரவில்லை

(0:30:33)

73.மீண்டும் ஏற்கனவே வைக்கப்பட்ட ஹதீஸான, மனிதர்கள் "அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என கூறி தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுக்கும்வரை போரிடுமாறு ஏவப்பட்டுள்ளேன்"(புகாரி 25) ஹதீஸை குறிப்பிடுகிறார். இதே கருத்தில் வ்ந்த ஹதீஸுக்கு விளக்கம் ஏற்கனவே (60ம் குறிப்பு) எழுதியுள்ளேன் அதே இதற்கு பொருந்தும்)

*முதலாவது இதிலுள்ள வார்த்தை "அன் உகா(த்)தில" என்பது போர் செய்வதை குறிக்கிறது. போர்/சண்டை என்றாலே இரண்டு நபர்களோ இரண்டு கூட்டங்களோ ஒன்றை மற்றது எதிர்த்து போராடுவதை குறிக்கும்.

அதாவது இஸ்லாத்தை எத்தி வைக்கும்போது அதை எதிர்த்து நிற்போர் இருப்பதை குறிக்கிறது. அத்தகையோரே முஸ்லிம்களை "அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறியதற்காக வீடுகளிலிருந்து வெளியேற்றினார்கள் (குர்ஆன் 22:40)

*இந்த ஹதீஸில் உள்ள "அந்நாஸ் -இம்மனிதர்கள்" என்பது அரபு இணைவைப்பாளர்களை குறிக்கும்.  இதை தெளிவாக நஸாயீ 3966யும் அந்நாஸ் என்பதற்கு பதிலாக அல்முஷ்ரீகீன் என கூறுகிறது . இத்தகைய மக்களே முஸ்லிம்களையும் முகம்மது நபியையும் ஊரைவிட்டு வெளியேற்றி  தொடங்கி வைத்தவர்கள்.(குர்ஆன் 9:13)

*ஏனையோரை பொருத்தமட்டில், அவர்கள் இஸ்லாத்தை ஏற்கலாம். அல்லது ஜிஸ்யா கட்டலாம் (குர்ஆன் 9:29, புகாரி 3159, முஸ்லிம் 3566) ,ஜிஸ்யா கட்டுவோர் பாதுகாக்கப்படுவார்கள்.(புகாரி 3052) அவர்களை கொல்பவர்கள் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி 3166), அவர்களின் உரிமைகளில் குறைவைப்பவரும், அவரது சக்திக்கு மீறி சுமைகளை சுமத்துபவருமான மக்களுக்கு எதிராக நபிகளாரே வழக்காடுவேன் என்று கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 3052)

*இந்த ஹதீஸ் இஸ்லாத்தை தம் வைராக்கியத்திற்காக எதிர்த்து போர் செய்யும் மக்களான அரபு முஷ்ரிக்குகளுடன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை தொடருமாறு கட்டளையிடப்படுகிறது. (2:190-193). இல்லாவிட்டால், முஸ்லிம்களை காஃபிர்களாக ஆக்காமல் அவர்கள் விடமாட்டார்கள். அதுவரைக்கும் அவர்கள் தொடர்ந்து போர் புரிவார்கள்.(குர்ஆன் 2:217)

இத்தகைய நிலையில் நபியவர்கள் கட்டளையிடப்பட்டது போல செய்வதை தவிர வேறு ஏதாவது வழி உண்டா?

அப்படியானால்,  அவர்கள் அன்றே முஸ்லிம் அனைவரையும் காஃபிர்களாக ஆக்கி, அவர்களை போல ஆக்கியிருப்பார்கள்.

இதை ஐயாவுக்கு விமர்சிக்க தகுதி இருக்கிறதா?

ஐயா நம்பும் பைபிளிலோ, இவர்களின் ஊர் மக்கள் இவர்களது நம்பிக்கையை விட்டுவிட்டு , வேறு கடவுள்களை வணங்கினால், அந்த ஊர்மக்கள் அனைவரையும் வெட்டிக்கொன்று (குழந்தைகள் உட்பட), ஊரையே கொளுத்திப் போடுமாறு தேவன் சொல்லியுள்ளார். (உபாகமம் 13:12-16). இந்த வசனத்தை மூடி மறைத்து 13:10 வாசித்து வஞ்சகமாக நடித்துள்ளார் போதகர் சுதாகர்.

இவர்கள் வசிக்க தேவன் கொடுக்கும் ஊரிலுள்ள மக்கள் அனைவரையும் கொல்லுமாறு தேவன் சொல்லியுள்ளார். இல்லாவிட்டால் இந்த மடையர்கள் அந்த மக்களின் மதத்தை கற்றுக்கொள்வார்களாம்- உபாகமம் 20:16-18

அந்தளவுக்கு வாயில் விரல் வைத்தாலும் கடிக்க தெரியாதவர்கள் அல்லவா

 

(0:31:00)

74.போர் செய்வது உங்களாக்கு வெறுப்பானதாக இருந்தாலும் உங்கள் மீது போர் கடமையாக்கப்பட்டுள்ளது (குர்ஆன் 2:216) குறிப்பிடுகிறார்.

ஏனென்றால், காஃபிர்களான அவர்களின் எதிரிகள் முஸ்லிம்களை புனித மார்க்கத்திலிருந்து வெளியேற்றும்வரை போரிட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று அடுத்த வசனமான 2:217 இலேயே உள்ளது.

இப்படி போரிடக்கூடிய நபர்களோடு போரிடுவதை தவிர வேறு வழி உண்டா? அதனால் தான் சக்தியுள்ளவர் மீது கடமையாக்கப்பட்டது.

பைபிளில் மட்டும் விருப்பமில்லாத போது யுத்தம் செய்ய தேவையில்லை என்றா உள்ளது?

யுத்தம் செய்வதற்கு பயந்து மறுத்ததால், அவர்கள் அனைவரையும் கொன்று போட முடிவெடுக்கிறார்.

இஸ்ரவேலர் எதிரிகளை கொன்று நாட்டை பிடிக்க பயந்ததற்காக, பயந்தவர்களையே அழித்துப்போட முற்படுகிறார் கர்த்தர்.(எண்ணாகமம் 14:1-4,11-12)

இதை கண்ட மோசே, அப்படி செய்தால் உங்களுக்கு காப்பாற்ற வக்கில்லாமல் கொன்று போட்டீர் என்று எகிப்தியரும் மற்ற ஊராகும் சொல்லுவார்கள் இதனால் அசிங்கமாக போய்விடும் என்று மன்னிக்குமாறும் கேட்கிறார்(எண்ணாகமம் 14:13-16,19)

இதற்காக மனதை மாற்றிக்கொண்டு போகும் வழியிலேயே யுத்தம் செய்யாத இவர்களை படிப்படியாக கொன்று போட முடிவெடுக்கிறார் (எண்ணாகமம் 14:22-23)

ஆனால் யுத்தம் செய்து கொல்லுங்கள் என்று சொன்ன காலேபை தேவனாகிய தன்னை உத்தமமாக பின்பற்றியவன் என்கிறார் (எண்ணாகமம் 14:24)

அதாவது போர் செய்து கொல்ல நினைத்த இவன் தான் உண்மையான விசுவாசி. பயந்து ஓடியவர்கள் பாவிகள் என்று வெளிப்படுத்துகிறார் கர்த்தர்.

இதை வைத்துக்கொண்டு தான் இந்த எருமை மாடு கத்துகிறார்.

(0:32:00)

75.ஓமானின் சோஹார் கோட்டையில் முகம்மது நபி மிரட்டி எழுதிய கடிதம் இருப்பதாக சொல்கிறார். எல்லாம் அந்த பிஸ்கட் மகிமை

அந்த கடிதம்

"அளவற்ற அருளாளனும் பேரன்புடையவனுமான அல்லாஹ்வின் பெயரால் , அல்லாஹ்வின் தூதர் முகம்மதிடமிருந்து ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்திற்கு.  நேர்வழியை பின்பற்றுவோர் மீது ஸலாம் உண்டாவதாக! நான் உங்களிருவரையும் இஸ்லாத்திற்கு அழைக்கிறேன். நீங்களிருவரும் இஸ்லாத்தை ஏற்றால் அபயம் பெறுவீர்கள். நான் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். இஸ்லாம் மிகைக்கும் என்பதை எச்சரிக்கிறேன்.   நீங்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தால், உங்களது நாட்டை இழப்பீர்கள். எனது குதிரைவீரர்கள் உமது எல்லையை கைப்பற்றுவர். எனது தூதுத்துவம்  உமது நாட்டை ஆளுகை செய்யும். (அரபு மூலம் எனக்கு கிடைக்கவில்லை.. கூகுளில் இருந்த ஆங்கிலத்தை ஓரளவு முறையாக மொழிபெயர்த்துள்ளேன்)

இதிலே இந்த பிஸ்கட் போதகர் குற்றச்சாட்டும் அளவுக்கு எதுவும் இல்லை.

*முகம்மது நபி தன் தூதுத்துவத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதை அவர் செய்தார். எச்சரித்தார்.

*அவர் இஸ்லாத்தை ஏற்க மறுத்தால் கொல்லப்படுவாய் என சொல்லவில்லை. மாறாக ஆட்சியை இழப்பாய் என கூறப்படுகிறது. அதாவது முஸ்லிம்கள் அதை கைப்பற்ற முஸ்லிம்களுக்கு வரி செலுத்தும் நிலையே இவருக்கு ஏற்படும். அதன் ஆட்சிப் பொறுப்பை முஸ்லிம் கவர்னர் பெறுவார்.

இதிலே எந்த தவறும் இல்லை..

ஏனெனில் நாடுகளை பிடிப்பதற்கு மக்கள் யுத்தம் செய்த காலத்தில், இஸ்லாத்தை அழிக்க துடித்த காலத்தில் இதை தவிர வேறு தீர்வு இல்லை.

 

ஆனால் இந்த பிஸ்கட் போதகரின் வேதம், எதிரிகளை கொன்றோ துரத்தியோ விடுவதன் நோக்கமே, அவர்களது மதம் தான் என்பதை நம் நண்பர்கள் முந்திய அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(0:34:00)

76.போதையில், தாம் இறைவனுக்கு இணை வைக்கவில்லை என்றும் அவர்களின் கடவுளுக்கு சமானம் ஒன்றும் இல்லை என்றும் அல்லாஹ் கடவுளாக இருப்பதற்கு தகுதி இல்லை என்பதற்கு அவர் கொடுத்த போதனைகளே சான்று என்று உருட்டுகிறார்-

கடவுள் தன் மகனை தனக்கே நரபலியாக செலுத்தினார் என்பதை நம்புவது கடவுளை எத்தகைய மெண்டலாக சித்தரிக்கிறது?

இவர் வைத்த அத்தனை குற்றச்சாட்டுகளும் இவர்கள் நம்பும் அதே பைபிளில் இருந்து காட்டப்பட்டது. பிஸ்கட்டின் மகிமையால் அதை அவருக்கு புரியவில்லை

அதுமட்டுமா? இவர் இஸ்லாத்தின் மீது வைத்த அத்தனை குற்றச்சாட்டுகளும் islamophobesயின் இணையத்தளங்களில் இருந்து திருடியவை தான்

(0:35:20)

77.வாளின் நிழலின் கீழ் சொர்க்கம் என்று புகாரி 7457 கூறுகிறது. அது தீவிரவாதம் என்கிறார்.

குறிப்பிட்ட ஹதீஸ் இலக்கம் தவறானது.

ஆனால் பூரணமான ஹதீஸில்,

எதிரிகளை போரில் சந்திக்க ஆசைப்பட வேண்டாம் என்று தான் நபிகளார் வழிகாட்டினார்.

போர் செய்யும் நிலை ஏற்பட்டால், அப்போது வாள்களின் நிழலில் சுவர்க்கம் இருக்கிறது என்று கூறினார்

 

பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! (ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2966.

ஆகவே போதகர் எங்கிருந்தோ காப்பி அடித்து Print பண்ணிக்கொண்டு வந்து, வாசித்துக் கொண்டிருந்தார்.

கர்த்தரையே யுத்த நபராக தான் பைபிள் சித்தரிக்கிறது (யாத்திராகமம் 15:3).

கிறிஸ்தவ அமர்வு முடிவு  (0:35:40)

10.முஸ்லிம் தரப்பு ஐந்தாம் அமர்வு

78.முஸலிம் தரப்பு அமர்வு

-வாள்களின் நிழலின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது என்பதை பயங்கரவாத தாக்குதல் போல் சித்தரித்த முற்பட்ட போதகருக்கு, அதன் முழுமையான ஹதீஸிலே எதிரிகளை போர்க்களத்தில் சந்திக்க ஆசைப்பட வேண்டாம் என்றும் அல்லாஹ்விடம் பாதுகாக்குமாறு வேண்டுங்கள். எதிரிகளை சந்திக்க நேரிட்டால் அதன் துன்பங்களை பொறுத்துக்கொள்ளும்படியும் அதன் பின்பே நபிகளார் இந்த வாசகத்தை சொன்னார்கள் எனும் ஹதீஸை (புகாரி 3025) சுட்டிக்காட்டி, மடத்தனத்தை சுட்டிக்காட்டினர். (0:37:30)

 

-மதமாற்றுவதற்காக தான் இஸ்லாத்தின் போர் என்று முட்டாள் போதகர் வைத்த வாதத்திற்கு பதிலாக, புகாரி 4514 ஹதீஸ் வாசித்துக் காட்டப்பட்டு, இஸ்லாம் குறைவாக இருந்த போது முஸ்லிமான மனிதர் தன் மார்க்க விசயத்தில் குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று அவரை கொன்றார்கள் அல்லது துன்புறுத்தினார்கள் என்று குழப்பம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுக்கு ஆகும்வரை போரிடுதல் என்பதிலுள்ள குழப்பம் என்பது இது தான் என சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் புகாரி 5286 ஹதீஸை மேற்கோள்காட்டி, நபியவர்கள் காலத்தில் முஷ்ரிக்குகள் இருவகையினராக இருந்தனர் என்றும் ஒரு பிரிவினர் முஷ்ரிக்கான பகைவர்கள் நபியவர்களை எதிர்த்து யுத்தம் புரிந்தனர். நபியவர்களும் அவர்களை எதிர்த்து யுத்தம் புரிந்தனர். இரண்டாம் வகையினர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட முஷ்ரிக்குகள். இவர்கள் நபியவர்களும் யுத்தம் புரிய மாட்டார்கள். நபிகளாரும் அவர்களோடு யுத்தம் புரிய மாட்டார்கள் என்ற ஹதீஸை காட்டி , இந்த செய்தி மதமாற்றத்திற்காக யுத்தம் செய்வதாக போதகர் சொன்னது பொய் என நிரூபித்தனர்.

இதிலே மதமாற்றம் என்ற எதுவுமே இல்லை

(0:40:18)

-குர்ஆனில் இலேசாக அடியுங்கள் என்பதை பிராக்கட்டில் போட்டிருப்பது ஹதீஸ்களின் விளக்கத்தோடு தான் என்றும் குர்ஆனை மட்டும் வைத்து விவாதம் செய்ய வரவில்லை ஹதீஸையும் சேர்த்து தான் பேச வந்திருக்கிறோம் என்று கூறி அறிவீனமான போகரின் வாதம் துண்டிக்கப்பட்டது.

(0:40:30)

-பைபிளில் யூதர்களுக்கு ஹராமான இரத்தத்தை அந்நியன் சாப்பிட்டாலும் அவனும் ஜனத்திலிருந்து அறுப்புண்டு போக பண்ணுவேன் எனும் லேவியராகமம் 17:10 என்ற வசனத்தை காட்டி, அந்நியன் மீதும் தம் சட்டத்தை திணிப்பது பற்றி கேட்கப்பட்டது. (0:46:50)

-ஜிஸ்யா வரி முஸ்லிமல்லாதவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் சேர்த்து தான் வாங்கப்படுகிறது என்ற உண்மை எடுத்துச் சொல்லப்பட்டது. (உமர் (ர) இதை தான் தனக்கு பின் வரும் ஆட்சியாளர்களுக்கு உபதேசமாக சொன்னார்கள். -புகாரி 3052,3700) (0:50:45)

-புதிய ஏற்பாடு தள்ளிவிடுதலை (விவாகரத்து) விபச்சாரம் என்கிறது. விபச்சாரத்திற்காக தவிர வேறு எதற்காகவும் இதை செய்தால் அதை விபச்சாரம் என்கிறது. அவளை மறுமணம் செய்பவனும் விபச்சாரம் செய்கிறான் என்கிறது (மத்தேயு 5:32)

எந்த தப்பு பண்ணினாலும் அட்ஜஸ் பண்ணிக்கனும். ( அடி உதை , செலவுக்கு காசுகொடுக்கவில்லைனாலும் , உணவு கொடுக்கவில்லை என்றாலும் எதுவுமே செய்ய முடியாது.)

ஒருத்தன் விவாகரத்து செய்துவிட்டான் என்றால், அந்த பெண்ணுக்கு என்ன தீர்வு? அவளுக்கு வாழ்க்கை கொடுக்க திருமணம் செய்வதையும் விபச்சாரம் என்று சொல்லி , பொருந்தாத சட்டத்தை வழங்கியுள்ளது என்ற கருத்து சுட்டிக்காட்டப்பட்டது (0:52:00)

அதாவது ஒருத்தன் திருமணம் செஞ்சுட்டு , ஒருநாள் வாழ்ந்துட்டு விட்டுட்டு போய்ட்டால், பைபிள் பிரகாரம் அவளுக்கு எந்த தீர்வும் இல்லை. (ஜெபம் பண்ணிட்டு இருக்க வேண்டியது தான்) அதற்கும் சேர்த்து தான் விவாகரத்து கூடாது என்று கிறிஸ்தவம் போதிக்கிறது.

(பழைய ஏற்பாடு விவாகரத்தை அனுமதித்தது (உபாகமம் 24:1-3), ஆனால் இயேசுவோ இதயகடினத்திற்காக மோசே அனுமதித்தார் என்கிறார் (மத்தேயு 19:7-8). இதயகடினத்திற்காக விபச்சாரத்தை அனுமதிப்பது எந்த வகை மார்க்கம்?)

முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு (0:53:00)

11.கிறிஸ்தவ தரப்பு ஆறாம் அமர்வு

79.இரண்டாம் போதகர் உலர தொடங்குகிறார். கணவன் மனைவி எந்த கொடூரத்தை செய்தாலும் விவாகரத்து செய்யாமல் ஜெபம் தான் பண்ண வேண்டும் என்கிறார். அதாவது கணவன் விட்டுட்டு போனாலும் அவன் சாகும்வரை அவளுக்கு எந்த தீர்வும் இல்லை என்பதை உணர மறுக்கிறார்.

அடுத்ததாக ஒரு முஸ்லிம் நான்கு பெண்களை விவாகரத்து செய்துவிட்டால், ஐந்தாவது முடிக்கலாமா என்கிறார். இதுபோன்று தன் கணவன் சரியில்லை என்பதற்காக விவாகரத்து கேட்டு பெற முடியும் என்பதை உணர மறுக்கிறார்

ஒரு பெண் எந்த முகாந்திரமும் இல்லாமல் விவாகரத்து கோரினால், அவள் நரகவாசி எனும் கருத்தில் வரும் நபிமொழியை குறித்து கேட்கிறார். ஆனால் உருவத்தில் குறைபாடு, செலவுக்கு கொடுக்காமை,உரிமைகளை வழங்காமை, கொடுமைப்படுத்தல்,பாலியல் ரீதியாக குறை , தனக்கு விரும்பத்தகாத தோற்றம் போன்ற காரணங்களுக்காக இஸ்லாம் அனுமதிக்கின்றது. பைபிள் இவற்றையெல்லாமே விபச்சாரம் என்கிறது. எந்த காரணமும் இல்லாமல் செய்வதை இஸ்லாம் தவறாக பார்க்கிறது.

உண்மையில் இஸ்லாம் கணவன் மனைவி பிரிவை சைத்தானுக்கு மிகவும் விருப்பமான செயலாக தான் பார்க்கிறது.(முஸ்லிம் 5419)

ஆனாலும் நலன்கருதி இஸ்லாம் அதை அனுமதிக்கிறது. (0:55:30)

80.முஸ்லிம் தரப்பு பைபிள் வசனங்களை குறிப்பிடும்போது பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, அந்த வசனங்களை எதற்கு வைத்தார்கள் என்பதையே உணராமல் பதில் என்று உலர ஆரம்பிக்கிறார்.

மாற்றுமதத்தவனை குடியிருக்க வைக்காமல்   ஊரைவிட்டு துரத்தி விடு என்று மதத்துக்காக தானே யுத்தம் செய்ய சொல்லுதுனு யாத்திராகமம் 23:31-33ஐ முஸ்லிம் தரப்பு வைத்தது என்பதை உணராமல்,

பிஸ்கட் போதகரின் பதில்:அந்த வசனத்திலே இஸ்ரவேலனுக்கு கண்ணியாக இருக்கும் என்று இருக்கிறது. ஆனால் உங்கள் மதத்தில் மாற்று மதத்தவனுக்கு தான் கண்ணி என்று சொல்கிறார்.

அதாவது,இஸ்ரவேலனுக்கு கண்ணி என்று இஸ்ரவேலனை வேறு இடத்தில் குடியேறும் படியா சொன்னார்? மாற்றுமதத்தவர்களை யுத்தம்செய்து விரட்டிவிட்டு குடியேறும் படி அல்லவா சொல்கிறார். இது மதத்திற்கான போரும் நிர்ப்பந்தமும் இல்லையா?

அதாவது நாம் ஒன்று கேட்டால், அவர் தனக்கு வேறொரு கேள்வி கேட்டுக்கொண்டு, கற்பனையாக தனக்குத்தானே பதில் சொல்லிக் கொள்வார்

மாற்றுமதத்தவன் வேறு கடவுளை  வணங்கினால், இஸ்ரவேலனுக்கு கண்ணி என்பது போல பைபிளை தப்பாக வாசிக்கிறார் திரு. பிஸ்கட் கண்ணன்

ஆனால், இஸ்ரவேலன் மாற்றுமதத்தோடு சேர்ந்து வணங்கினால் , வணங்கிய இஸ்ரவேலனுக்கு கண்ணி என்று தான் அவர் குறிப்பிடும் வசனமே சொல்லுது (யாத்திராகமம் 23:33). இதற்காக தான் அவனை மாற்றுமதத்தவனை துரத்திவிட சொல்கிறது.

எல்லாம் பிஸ்கட் மகிமை (0:57:30)

81.திரும்பவும் யாத்திராகமம் 34:15 வசனத்தில், மாற்றுமத்தானோடு உடன்படிக்கை பண்ணாமல் துரத்த சொல்வது மதத்துக்கான போர் இல்லையா என்று கேட்டதற்கு, மாற்றுமதத்தவன் தன் கடவுளுக்கு பலியிட்டதை இஸ்ரவேலன் சாப்பிடுவான் அதனால் கண்ணியாக இருக்கும் என்பதை பதில் என்று திரு பிஸ்கட் கண்ணன்  உலருகிறார்.

இது மதத்துக்கான போர் தான் என்பதை அவரே ஒப்புக்கொள்ள மறுக்கிறார். காரணம் கிரகித்தல் இல்லை.

(0:58:20)

82.இஸ்ரவேலன் வேறு கடவுளை வணங்கினால் அவனை கொல்லு என்று சொல்வது குறித்து, இஸ்ரவேலன் ஏன் அப்படி வணங்க கூடாது என்றால், அது தேவன் கொடுத்த சட்டம் என்றும் உடன்படிக்கை என்றும் கூறுகிறார் திரு பிஸ்கட்.

அது மத நிர்ப்பந்தம் அல்லாமல் வேறு என்ன? மதத்திற்கான கொலை அல்லாமல் வேறு என்ன?

அத்தோடு , மாற்று மதத்தவர்  வேறு கடவுளை வணங்கினால் அவனை கொல்ல சொல்லவில்லை என்கிறார்.

ஆனால் பைபிளில் தெளிவாக, மற்ற மதத்தவர்களை கொன்று, அவர்களது சிலைகளை உடைத்து , தோப்புகளை வெட்டி, பலிபீடங்களை இடித்துப் போடுமாறு சொல்கிறார்.

யாத் 34:11-13, 15 IRVTam

11] இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன். [12] நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். [13] அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

[15] அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்;

https://bible.com/bible/1899/exo.34.11-15.IRVTam

ஊரில் மாற்றுமதத்தவனையே துரத்திவிட்டு, அவனது மத சின்னங்கள் அனைத்தையும் உடைத்தும் போட்ட பின்னால், அவன் எப்படி வணங்குவான்? வணங்குவதற்கு அவனும் இருக்கமாட்டான். அவனது மதமும் இருக்காது.

இதை உணராமல் வாய்க்கு வந்ததை உலரிக்கொட்டுகிறார்.

(0:59:30)

83.பிஸ்கட் சாப்பிட்ட போதை இன்னும் இறங்கவில்லை போலும்.

அல்லாஹ் வேறு கடவுளை வணங்கினால் கொல்ல சொல்கிறானாம். அதை தீவிரவாதம் என்கிறோமாம். (இதற்கு ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன்)

ஆனால் மாற்று தேவனை வணங்கினால் கல்லொறிந்து கொல்லும்படியும் (உபாகமம் 17:3-5), ஒரு ஊரில் வணங்கினால் அந்த ஊர்மக்கள் அனைவரையும் கூரான கத்தியால் வெட்டி கொன்று ஊரையே கொளுத்திப்போட வேண்டும் என்று (உபாகமம் 13:12-16) சொன்னதே இவர்கள் கூறும் பைபிள் தேவன் தானே.

அப்போது இது தானே பயங்கரவாதம் பிஸ்கட் போதகரின் பார்வையில்.

(0:59:45)

84.திரும்பவும் போதையில், "இலேசாக அடியுங்கள்" என்று குர்ஆனில் இல்லை என்று தான் சொன்னேன் ஹதீஸில் இல்லை என்று சொல்லவில்லை என்று கூறிவிட்டு, அதை நீங்கள் யூகித்து குர்ஆனில் இல்லாததை சேர்த்திருக்கிறீர்கள் என்கிறார்.

ஆனால் முஸ்லிம் தரப்பு தெளிவாக பதில் கொடுத்திருந்தனர், அதாவது ஹதீஸில் விளக்கம் கொடுக்கப்பட்டதிலிருந்து தான் அடைப்புக்குறிக்குள் மொழிபெயர்ப்பாளர் போட்டிருக்கிறார் . சுயமாக இட்டுக்கட்டி போட்டதல்ல என்று.

இவருக்கு விவாதம் ஒரு கேடு.

(1:00:30)

85.மீண்டும் குடிபோதையில், அடியுங்கள் என்றாலே முடிஞ்சுது. எப்படியும் அடிக்கலாம் என்கிறார். ஆனால் இந்த எருமைக்கு தெளிவாக ஹதீஸில் இருந்து வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. விளக்கம் கொடுக்கும் போது சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். பிறகு மீண்டும் பழையதையே உருட்டுவார்.

பிறகு குழந்தைகளை அடிக்கலாமாம். காரணம் பைபிள் அடிக்க சொல்கிறாதாம். (பைபிள் அடிக்க மட்டுமா சொல்லுது? பழிவாங்காவதற்காக குழந்தைகளையும் மிருகங்களையும் பெண்களையும் ஈவிரக்கமின்றி கொல்லும்படியும் கர்த்தர் சொன்னார் தானே- 1 சாமுவேல் 15:2-3)

ஆனால் மனைவி சரிக்கு சமனாக இருக்கிறாள் என்று பைபிள் சொல்கிறதாம். அவளோடு அன்பு கூற சொல்கிறதாம். இது எவ்வளவு அருமையான உபதேசம் என்று கேட்கிறார்.

ஆண்டவருக்கு கட்டுப்படுவது போல மனைவியர் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும், கணவன் தன் மனைவியின் ஆண்டவன் என்றும் தான் பைபிள் சொல்கிறது.

அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். 1 பேதுரு 3:6

 

ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். ஆதியாகமம் 18:12 

இதை தான் உதாரணமானதாக பேதுரு எழுதினார்.

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். எபேசியர் 5:22

பெண்களோடு நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என்று குர்ஆன் (4:19) கூறுகிறது. நபிகளாரும் மனைவியருடன்  எப்படி நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அடிக்க வேண்டி ஏற்பட்டாலும் காயம் ஏற்படாமல் அடிக்குமாறே வழிகாட்டின்ர்கள் (முஸ்லிம் 2334)

அத்தோடு தன் மனைவியரிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் என்றும் வழிகாட்டியுள்ளார்கள் (திர்மிதி 3895)

பெண்கள் பலவீனமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களை உடைத்துவிட வேண்டாம் என்ற கருத்துப்படவும் சொல்லியிருக்கிறார்கள். (புகாரி 3331)

1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843)

2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631))

3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946)

4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின் குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948)

5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763

6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர் விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176)

(1:01:10)

86.மீண்டும் முஸ்லிம் தரப்பு ஜிஸ்யா பாதுகாப்பு வரி என்ற உண்மையை சொன்னதை (புகாரி 3052) எதிர்த்து, குர்ஆன் 9:29 ஜிஸ்யா கொடுக்கும் வரை போரிட சொல்கிறது என்கிறார்.

அதை நபிகளார் எப்படி என்று நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளார்கள்?

*முதலில் இஸ்லாத்தை நோக்கி அழைப்பது. ஏற்க மறுத்தால் ஜிஸ்யா கட்டுமாறு கூறுவது. அதையும் ஏற்க மறுத்தால் யுத்தம் (முஸ்லிம் 3566, புகாரி 3159)

*ஜிஸ்யா வரியும் மக்களின் சக்திக்கு உட்பபட்டே இருக்கவேண்டும். அத்தோடு முஸ்லிம்கள் வரி கட்டும் அவர்களுக்காக போராட வேண்டும் (புகாரி 3052,3700)

*அப்படி முஸ்லிமல்லாத குடிமகன்களில் வரி செலுத்தாதவர்களை வெயிலில் நிக்க வைத்ததை கூட இஸ்லாமியர்கள் எச்சரித்துள்ளனர் (முஸ்லிம் 5096-5097)

*இப்படிப்பட்ட முஸ்லிம் அல்லாத பிரஜைகளை கொன்றவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் (புகாரி 3166)

ஏன் முஸ்லிம்கள் இப்படி போரிட வேண்டும் என்று ஏவப்பட்டனர்?

*இஸ்லாத்தை ஏற்ற காரணத்திற்காகவே முஸ்லிகள் கொல்லப்பட்டனர். வேதனை செய்யப்பட்டனர்-(புகாரி 4514),

*ஊரைவிட்டு விரட்டினர் (குர்ஆன் 22:39,9:13,60:1).

*இத்தகையவர்கள் தமக்கு சக்தி இருக்குமானால் முஸ்லிம்களை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும்வரை யுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள் (குர்ஆன் 2:217).

அதனால் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானதாக இருந்தது. மார்க்கத்தை மக்களுக்கு எத்தி வைப்பதற்கு இலகுவாக இருந்தது.

ஆனால் பைபிளோ, கப்பம் கேட்டு வேலைக்காரர்களாக ஆக்குமாறு சொல்லியுள்ளது -உபாகமம் 20:10-12. கடவுள் சொல்லி செய்வதே மதத்திற்கானது தான்.

(1:02:45)

87.புகாரி 7457 ஹதீஸை சுட்டிக்காட்டி, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காகவும், அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு போராடுகிறவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவிக்க பொறுப்பேற்றுள்ளான் என்ற பகுதியை வாசித்து மதத்துக்கான போர் என மீண்டும் உருட்டுகிறார்.

*முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றதற்காகவே இத்தகைய மக்கள் கொன்றார்கள். வேதனை செய்தார்கள் (புகாரி 4514)

*இத்தகைய மக்கள் தான் முஸ்லிமான ஒரே நோக்கத்திற்காக ஊரைவிட்டு விரட்டினார்கள் (22:39-40, 60:1, 9:13)

*இவர்களுக்கு சக்தி இருந்தால், முஸ்லிம்களை தம் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி மதம் மாற்றாமல் விடவே மாட்டார்கள் (2:217)

*தம்முடைய மார்க்கத்திற்காக அவர்களின் கடவுள்கள் வணங்கப்படுவதற்காக, பலவீனமான ஆண்களையும், பெண்களையும் வேதனை செய்தார்கள் (4:75-76)

இத்தகைய நிலையில் இறைவனது மார்க்கத்திற்காக, எளியவர்களை பாதுகாப்பதற்காக யுத்தம் செய்வோருக்கு இறைவன் சொர்க்கம் வழங்குவது நியாயம் தானே.

பைபிளிலோ கர்த்தர் பழிவாங்கும் போது கொல்லாமல் இருப்பவன் சபிக்கப்பட்டவன் என்றே எரேமியா 48:10 கூறுகிறது.

ஊரில் காலங்காலமாக வசித்துவந்த மக்களை யுத்தம் செய்து துரத்துவதற்கு பயந்தவர்களை தேவன் கொன்று போட முடிவெடுத்தார். கடைசியாக 40 வருடத்தில் படிப்படியாக கொல்லுவேன் என முடிவு செய்தார்.

ஆனால் இப்படி  போர் செய்ய முன்வந்த நபரை பாராட்டியுள்ளார்.(எண்ணாகமம் 14:1-24)

போதகர்  கூற்றுப்படி இது என்னவாம்?

மாற்றுமதத்தவர்களை ஊரில் வைக்காமல் போர் செய்து  துரத்தி விட வேண்டும் என்று  தானே பைபிள் சொல்கிறது (யாத்திராகமம் 34:11-15) இதெல்லாம் மதத்திற்காக அல்லாமல் வேறு எதற்கு?

(1:04:35)

88.புகாரி 3159 ஹதீஸை காட்டி, உமர் யுத்தம் இணைவைப்பவர்களோடு செய்வதற்காக பெரும் பெரும் நகரங்களுக்கு படைகளை அனுப்பி வைத்தார் என்றும் அந்த ஹதீஸிலேயே நீங்கள் ஒன்று அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் அல்லது ஜிஸ்யா செலுத்த வேண்டும் அல்லது போரிட வேண்டும் என்று வழிகாட்டியதை சுட்டிக்காட்டி மதம் பரப்ப போர் என்கிறார்.

இறைவனது தூய மார்க்கத்தை எத்திவைக்கும்போது முஸ்லிம்கள் கொல்லப்படுவர். வேதனை செய்யப்படுவர். ஊரைவிட்டு விரட்டப்படுவர்.

 இது போன்றவை நிகழாதிருப்பதற்கு,பேரரசுகளை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது அவசியம் .

அதற்காக தான் இந்த படைகள்.

அங்கே சென்று அவர்களை நிர்ப்பந்தித்து மதம் மாற்றவில்லை.

மாறாக ஜிஸ்யா கட்டும் தேர்வையும் கொடுத்தார்கள்.

அத்தகையவை, அவர்களின் சக்திக்கு உட்பட்ட அளவாக இருக்கவேண்டியதோடு, அந்த மக்களுக்காக இஸ்லாமிய அரசே பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்காக யுத்தம் செய்ய வேண்டும் என்பதை இதே உமர் (ர) வழிகாட்டி சென்றார்கள்.(புகாரி 3052)

இத்தகைய மக்களை கொல்லுபவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் புகாரி 3166 என்றும், அவர்களின் சக்திக்குமீறி சுமைகளை சுமத்தினாலோ உரிமைகளை பறித்தாலோ, மறுமையில் அப்படிச் செய்தவனுக்கு எதிராக நானே வழக்காடுவேன் என எச்சரிக்கை செய்துள்ளார் முகம்மது நபி அவர்கள்.(அபூதாவூத் 3052)

இதைவிட வேறு என்ன தீர்வு வேண்டும்?

மாற்றுமத கடவுளை இவர்களுக்கு கீழுள்ள ஊரில் வணங்கினால், அந்த மக்கள் அனைவரையும் கூர்மையான கத்தியால் வெட்டி, ஊரையே தீயிட்டு கொளுத்தி போடவேண்டும் என்று தேவன் வழிகாட்டினாரே (உபாகமம் 13:12-16).

இதற்கு பதில் பிஸ்கட் போதகர் சொல்லவேயில்லை. தன் குடும்பத்தில் அப்படி செய்தவனை கல்லெறிந்து கொல்ல சொல்கிறது (உபாகமம் 13:10) அவ்வளவு தான் என் எஸ்கேப் ஆகிவிட்டார். அதையும் சேர்த்து தானே மதத்திற்கான சண்டை என்ற வாதம் வருகிறது.

(1:05:40)

89.மீண்டும் அல்லாஹ்வின் பாதையிலே போராடுபவனே உண்மையான முஸ்லிம் என்று முன்பு வைத்த அதே வாதத்தை மீண்டும் வைக்கிறார்

*இஸ்லாத்தை ஏற்றதற்காக ஊரைவிட்டு விரட்டப்பட்டு (22:39-40, 9:13), வேதனை செய்து கொன்று (புகாரி 4514) , பலவீனர்களை வேதனை செய்து (4:75) , தமக்கு சக்தி இருந்தால் மதம் மாற்றும் வரை யுத்தம் செய்யக் கூடியவர்களாக எதிரிகள் இருக்கும்போது (குர்ஆன் 2:217),

*ஈமான் கொண்டு, எதிரிகளிடமிருந்து நாடு துறந்து, அவர்களை எதிர்த்து போராடுபவர்களும், அத்தகையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா மக்களும் உண்மையான விசுவாசிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

*பைபிளை போல சொந்த பகைக்காக குழந்தைகளை, மிருகங்களை ஈவிரக்கமின்றி கொல்லுமாறு சொன்னதை ( 1 சாமுவேல் 15:2-3), செய்யாத சவுல் ராஜாவை ராஜாவாக ஆக்கியதற்கே மனஸ்தாபப்பட்டார் கர்த்தர் (1 சாமுவேல் 15:11)

இதைவிட தீவிரவாதம் உண்டா?

 

90.ஒஸாமா பின்லேடன், ஐஎஸ்ஐஎஸ்,போக்கோ ஹராம் போன்றவர்கள் தீவிரவாதிகள் என்றும் உண்மையான முஸ்லிம்கள் என்றும் குடிபோதையில் உலருகிறார்.

ஐநாவுடன் சேர்ந்து நடப்பவர் எவ்வளவு தீவிரவாதம் செய்தாலும் தீவிரவாதி அல்ல. ஐநாவுடன் இல்லாதவர்கள் செய்தால் தீவிரவாதி என்பது தான் உலக மீடியாக்களின் அளவுகோல்.

கர்த்தர் தன் தீர்க்கதரிசி சாமுவேல் மூலமாக, நானூறு வருடங்கள் முன்பு செய்த தப்பிற்காக, குழந்தைகளையும் பெண்களையும் ஈவிரக்கமின்றி கொல்லும்படியும் சொன்னார் (1 சாமுவேல் 15:2-3)

இந்த தீவிரவாதிகள் என்று சொல்பவர்களும் கிறிஸ்தவர்கள் அமேரிக்கா , காபிர்கள் செய்தவற்றுக்கு பழிதீர்ப்பதாக சொல்லிக்கொண்டு தான் செய்கிறார்கள்.

இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

பைபிள் சொல்லும் தீவிரவாதம் ஓகே. பைபிளுக்கு வெளியில் ஐநாவுடன் இல்லாதவன் செய்தால் தீவிரவாதி இது தான் இவர்களின் அளவுகோல்.

கிறிஸ்தவ அமர்வு முடிவு.  

மூன்றாம் வீடியோவும் முடிவு (1:10:18)

To read next part

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 1