YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் பாகம் 4

 முந்திய பாகத்தை காண



12.முஸ்லிம் தரப்பு ஆறாம் அமர்வு

91.முஸ்லிம் தரப்பு அமர்வு

-முஸ்லிமல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி என்ற வாதத்திற்கு, காலங்காலமாக மக்கள் ராஜாவுக்கோ அரசுக்கோ வரி கட்டும் நிலை இருந்துகொண்டே இருந்தது.  பைபிளிலும் ராஜாக்களும் தலைவர்களும் வாங்கியிருக்கிறார்கள் (யோசுவா 16:10,17:13, நியா 1:28,30,33,35, 1இரா9:20-21,2நாளா8:8,) தேவனும் வாங்கும்படி சொல்லியிருக்கிறார் (உபாகமம் 20:10-12) என்ற வாதம் வைக்கப்பட்டது

-ஜிஸ்யா எப்படி வாங்குவது என்பதை நபிகளார் செல்லிக்காட்டிய முறையான, போரில் எதிரியை சந்தித்தால், எதிரிகளை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்து, அதை மறுத்தால் ஜிஸ்யா கட்டுமாறு கூறும்படியும், அதையும் மறுத்தாலே போர் எனும் கருத்தில் வரும் முஸ்லிம் 3566 ஹதீஸ் வாசித்துக் காட்டப்பட்டு, 9:29இன் அர்த்தம் இதுதான் என்பது தெளிவு படுத்தினார்கள்.

அதாவது ஏற்கனவே ஜிஸ்யா கட்டும் குடிமக்களுடன் போர் செய்ய சொல்லவில்லை என்பது தெளிவு படுத்த்ப்பட்டது (0:4:0)

-நான்கு பெண்களையும் ஒன்றன் பின் ஒன்றாக தலாக் சொன்னால், ஐந்தாவது முடிக்கலாமா ? இது பெண்மோகத்தினால் வருவது என்று அடிப்படையறிவின்றி கேட்ட இரண்டாம் போதகருக்கு ,செருப்படி பதில் கொடுக்கப்பட்டது (0:5:40)

-பிராக்கட்டில் "இலேசாக அடியுங்கள்" என்பது வஹியா என்று கேட்ட போதகருக்கு, வஹியின் அடிப்படையில் தான் அதாவது ஹதீஸின் விளக்கத்தில் இருந்து தான் இதை வைக்கப்பட்டுள்ளது என்று தெளிவு படுத்தப்பட்டது (0:6:20)

-யாத்திராகமம் 34:15 குறித்து, புற ஜாதிகள் என்போர் மாற்று மதத்தவர்கள் தான் என்பது நிரூபித்தனர். மதத்திற்கான தான் அவர்களை துரத்தும் படியும், அவர்களது மத சடங்குகளை செய்ய அவர்களுக்கும் அனுமதி இல்லை என்றே காட்டுகிறது என்பதாக தெளிவுபடுத்தினர்-

(0:7:11)

-வரி வாங்குதல் உடனும் பைபிளில் மதம் சம்பந்தப்பட்ட இருக்கிறது. அதாவது புறஜாதிகளிடம் தான் வரி வாங்கப்பட்டிருக்கிறது என்பதை புரியவைத்தனர் (0:7:30)

-தன்னை வணங்காவிட்டால் வேறு கடவுளை வணங்கினால் உலகில் உன்னை கொல்லுவேன் கொல்லும்படி சட்டம் கொடுப்பேன் என்று உடன்படிக்கை எடுப்பது எந்த வகை உடன்படிக்கை என்று நாக்கு புடுங்கும்படி கேட்கப்பட்டது (0:16:30)

-பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போல தப்பிக்க பார்க்கும் இந்த போதக கும்பலுக்கு, அவர்களின் மதப்படி இரண்டுமே கடவுள் தானே கொடுத்தாரு என்பதை உணர்த்தி மூக்கை உடைத்தனர்.

(0:16:45)

-இஸ்ரவேல் தேசத்துக்கு தனிச் சட்டம் என்று பீலா விட்டு முட்டுக் கொடுப்பவர்கள், இஸ்லாமிய அரசு என்று வரும்போது அதைவிட சிறந்த போதனைகளை ஏன் எதிர்க்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது-

00:17:10

-பைபிளில் மதத்துக்காக மதச்சட்டத்துக்காக கொலை செய்யும்படி கர்த்தரே சொன்னவற்றை மேற்கோள் காட்டப்பட்டது.

ஓய்வு நாளை கடைபிடிக்காதவன் (யாத்தி 31:15), சூனியக்காரி (யாத்தி 22:18) வேறு கடவுள்களுக்கு பலியிடுபவன் (யாத்தி 22:20), கர்த்தரை திட்டுபவன் (லேவி 24:16)

இப்படி சுட்டிக்காட்டி, இதெற்கெல்லாம் கொல்லனும் என்று சொன்னதை ஏற்றுக்கெண்டு , இஸ்லாத்தை குறைசொல்ல தகுதியிருக்கா என கேட்கப்பட்டது

(0:24:15)

-மாற்றுமதத்தவர்களின் ஆலயங்களை உடைப்பதற்கு கர்த்தர் கொடுத்த சட்டம் வாசித்துக் காட்டப்பட்டது.  (யாத் 34:13, லேவி 26:30, எண் 33:52,உபாகமம் 7:5, 12:3, நியா 6:28) அதாவது புறஜாதிகளின் மத ஆலயங்களை உடைத்தும் போட தான் கர்த்தர் வழிகாட்டியுள்ளார். இதை வைத்துக்கொண்டு ஹதீஸை தப்பாக வாசிப்பது குர்ஆனை அறியாமல் உலருவதற்கு இவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பது நினைவு படுத்தப்பட்டது

<0:26:10)

-பைபிள் இஷ்டமில்லாத திருமணத்தையும் நிர்ப்பந்தித்து செய்ய வைக்கிறது. அதாவது பெண்ணின் கணவன் இறந்தால், அவளை கணவனின் தம்பி முடிப்பது கடமையாம். செய்ய மறுத்தால், பப்லிக்கில் மூஞ்சில் காறித்துப்பி, செருப்பால் அடிக்க வேண்டுமாம்- உபாகமம் 25:7-11 என்ற அருமையான சட்டம் காட்டப்பட்டது.

0:29:30)

-கன்னிப்பெண்ணோடு விபச்சாரம் செய்ததற்கு பின், தகப்பனுக்கு அவளைதர விருப்பம் இல்லைனா பைசா மட்டுமே போதும் என்பதும் அவளது சம்மதமே இதற்கு தேவையல்ல என்ற அருமையான போதனையை வாசித்து காட்டப்பட்டது -யாத்திராகமம் 22:16-17

(0:30:15)

-தன் மனைவியை வெறுத்து அவளிடம் கன்னித்தன்மை இருக்கவில்லை என அவதூறு சொல்லப்பட்டால், அவளது பெற்றோர் அதற்கான ஆதாரமான துணியை விரித்து ஊர் பெரிவர்ககளிடம் காட்டவேண்டுமாம். அவளது கணவனோ 100 காசு தகப்பனுக்கு கொடுத்து அவளை காலம் முழுதும் வைத்திருக்க வேண்டுமாம் (உபாகமம் 22:13-19) என்ற அருமையான சட்டத்தை காட்டி , இங்கு கூட அப்பெண் அவனுக்கு மனைவியாக இருக்கும்படி நிர்ப்பந்திக்க படுகிறாள் என்று வாதம் வைக்கப்பட்டது.

(இங்கே கூட தகப்பனுக்கு தான் காசு. அத்துடன் சில பெண்களுக்கு முதலிரவில் ரத்தம் வராது . இந்த மேட்டர் தெரியாதவர்களை இன்றுவரை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வசனமே இது.)

(0:31:50)

இதுபோன்ற வாதங்களை வைக்க காரணம், அவை எக்காலத்திற்கும் பொருந்தாதவை. மனித அமைதிக்கோ ஒழுக்கத்துக்கோ வழிகாட்டாதவை என்பத காட்டுவதற்காக தான் என் கூறப்படுகிறது

(0:32:30)

முஸ்லிம் அமர்வு முடிவு (0:33:45)

 

13.கிறிஸ்தவ தரப்பு ஏழாம் அமர்வு

91.ஒரே அமர்வில் பதில் சொல்ல இயலாத அளவுக்கு முஸ்லிம் தரப்பு கேள்விகள் கேட்கிறது என்று சொல்கிறார். உண்மையில் வசனத்தை வாசித்து தான் வாதம் வைத்தனர் . அவர்களது வாதங்களுக்கு மறுப்பு சொன்னனர்.

அடுத்ததாக, ஒரே விதமான தவறை பல குறைவிடுவார்களா என்று கேட்டதாக கூறி, அல்லாஹ் தான் மூன்று முறை தவ்ராத் இன்ஜீல் ஸபூர் வேதங்களை பாதுகாப்பதில் தோற்றுபோனார் என்கின்றனர். இதற்கு பதில், அல்லாஹ் அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை அந்த மக்களிடம் (இஸ்ரவேலர்) தான் கொடுத்தான். அவர்கள் அதிலே குறைவிட்டனர்.

0:35:15

92.முஸ்லிம் தரப்பு வாதம் வைக்கும்போது தூங்கிக்கொண்டிருந்தாரா பிஸ்கட் போதகர்? மீண்டும் சுதேசிக்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் என்று பலி விசயமாக கூறும் எண்ணாகமம் 15:15-16 வசனத்தை காட்டி ஒரே சட்டம் ஒரே வரி என கதை விடுகிறார். அதாவது தேவனுக்கு பலி செலுத்தும் போது யூதர்களுக்கு என்ன சட்டதிட்டம் கூறப்பட்டதோ அதையே அந்நியனும் பின்பற்ற வேண்டும் என்று அவன் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

அதாவது, இவர் கூறும் வசனத்துக்கும் இவர் வைத்த ஒரே சட்டம் ஒரே வரி என்பதற்கும் சம்பந்தமே இல்லை.

காரணம் இஸ்ரவேலனுக்கு வரி கிடையாது

முஸ்லிம் தரப்பினரால் ஏற்கனவே, அப்படியொரு சமத்துவமான சட்டம் கூறப்படாமல் , அந்நியனை சதா காலம் முழுவதும் அடிமையாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் இஸ்ரவேலனையோ அப்படி செய்ய கூடாது என்ற சட்டத்தை (லேவியர் 25:42-46) வாசித்துக்காட்டி மூக்கை உடைத்திருந்தனர்.

பதில் சொல்லப்படாதது போல அதையே உலருகிறார்.

(0:38:20)

93.ஜிஸ்யாவும் சகாத்தும் ஒரேயளவு என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிறார் திரு பிஸ்கட்.

இரண்டுமே அவரவர் வசதித்தன்மைக்கு ஏற்ப மாறுகிறது.

அவர்களின் சக்திக்கு உட்பட்டவாறு தான் ஜிஸ்யா வரி வசூலிக்க வேண்டும் (புகாரி 3052, அபூதாவூத் 3052)

இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிம் அல்லாதவரை அடிமையாக நடத்த கூடாது எனும் தலைப்பில் தான் புகாரி பதிவு செய்கிறது.

ஆனால் பைபிள் தெளிவாக அத்தகையவர்களை கப்பம் வாங்கி சேவகம் செய்ய வைக்கவேண்டும் என்று தெளிவாக உபாகமம் 20:10-12 கூறுகிறது.

(0:38:40)

94.இஸ்ரவேலருக்கும் அந்நியனுக்கும் ஒரே வரி என்பதை சம்பந்தமே இல்லாத வசனத்தை காட்டிவிட்டு, புறஜாதிகளிடம் வரி வாங்கியதை மாற்று மதத்தவர் என்பதை முஸ்லிம் தரப்பு guessing அடிப்படையில் தான் சொன்னார்கள் என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்கிறார் போதகர். புறஜாதி என்பது மாற்றுமதத்து ஜாதிகளான எமோரியர் எபூசியர் போன்றவர்கள் தான் (2 நாளாகமம் 8:8) அவர்களை துரத்த சொன்னதும் அழிக்க சொன்னதுமே அவர்கள் மாற்று மதத்தவர்கள் என்பதற்காக தான் (உபாகமம் 20:16-17, நியாயாதிபதிகள் 2:2-3, 3:5-7)

(0:39:10)

95.ஜிஸ்யா வரி என்பது அல்லாஹ்வை ஏற்காதவர்களுக்கு பாதுகாப்பான வரி அல்ல என்றும் அவர்களுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதற்காக அதிகபட்ச வரி என கதை விடுகிறார். உண்மையில் இவர் தான் guessing செய்து ஆதாரம் இல்லாமல் உலருகிறார்.

உண்மையில் அவர்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்காக போராடுவதற்கும் அவர்களின் சக்திக்கு மீறி வரி சுமத்தாதிருப்பதற்கும் தான் இஸ்லாமிய அரசு வழிகாட்டுகிறது (புகாரி 3052)

(0:40:20)

96.அந்நிய தேவர்களுக்கு பிள்ளைகளை பலியிடுவது போல் தனக்கு பலியிட வேண்டாம் என்று கூறும் உபாகமம் 12:31 வசனத்தை சம்பந்தமே இல்லாமல், இதற்கு தான் அந்நிய தேவர்களை வணங்க கூடாது என்கிறார். அப்படினா சூரியனை வணங்கியதற்காகவும் கல்லால் அடித்து கொல்ல சொல்கிறாரே (உபாகமம் 17:3-5)

அந்நியனை துரத்துவதும் அவனது மதத்துக்காக தானே.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு இஸ்லாத்தை குறை சொல்லலாமா என்று கேட்டதற்கு பதில் இது தான் கூற முடிந்தது.

(44:30)

-பெண்கள் சபையில் பேசுவது அயோக்கியம் என்றும் பேச கூடாது என்றும் பைபிள் (1 கொரிந்தியர் 14:34-35) சொல்வதை கேட்டால், பெண் ஊழியக்காரி இருந்தாள் மிரியாம் தீர்க்கதரிசியாளாக இருந்தாள். தெபோரா இருந்தாள் என்பதாக கதை விடுகிறார்.

அவர்களெல்லாம் இருக்கட்டும்... பேச கூடாதுனும் அதை அயோக்கியம் என்றும் சொன்னதற்கு பதில் இதுவல்லவே.. பெண் ஊழியக்காரிக்கும் தான் பேச அனுமதி இல்லை என்கிறார்.

(0:46:10)

97.அவிசுவாசி பிரிந்து போனால் பிரிந்து போகட்டும் என்று பவுல் 1 கொரிந்தியர் 7:14-15 இல் சொல்வதை, குடிகாரனுக்கு மேட்ச் பண்ணுகிறார். வேசித்தனத்திற்காக அல்லாமல் தள்ளிவிடுதல் விபச்சாரம் என்பதை இயேசுவே சொல்லியிருக்கிறார்.(மத்தேயு 19:9)

இயேசுவின் போதனை கடைசியில் பொருந்தாது என்பதை ஒப்புக்கொண்டு, பவுல் சொல்லாத கருத்தை பவுலின் மீது திணிக்கிறார்.

உண்மையில், பவுல் அவிசுவாசியை தள்ளிவிடாதே என்று தான் சொல்கிறார். அவிசுவாசியான அவன் தானாக பிரிந்து போனால் , அப்போது அது ஓகே என்கிறார்- 1 கொரிந்தியர் 7:12-15

அதாவது பவுலும் இந்த தள்ளிவிடுதலை ஏற்காத போது, இயேசு கூறியது பொருந்தாது என்பதால், பவுலின் வாயில் பொய்யை பேசி தப்பிக்க பார்க்கிறார் போதகர்

 -0:47:40

98.முஸ்லிம் தரப்பு பைபிள் மதத்துக்காக கொலைசெய்ய சொல்லும் வசனங்களை காட்டி கேட்டதற்கு , பைபிளில் ஆன்மீக சட்டம் தேசிய சட்டம் என இரண்டு இருப்பதாகவும், அதனை மீறும் போது கொல்லப்படுவார்கள் என்பதாக கூறுகிறார். அதை தானே குற்றச்சாட்டாக வைத்தார்கள். மதத்திற்கான கொலையை தேவன் ஆதரித்திருக்க இப்ப பேசலாமா என்று?

மீண்டும் லூசுத்தனமாக மதத்திற்காக தேவன் கொல்ல சொன்னதை தேசிய சட்டம் என்கிறார்.

(0:48:50)

99.மதத்திற்கான கொலைகளை கர்த்தர் செய்ய சொன்னார் என்பதை நிரூபித்தவுடன், அல்லாஹ்வும் ஓய்வு நாளில் மீன்பிடித்தவர்களை குரங்குகளாக பன்றிகளாக ஆக்கினானே என்கிறார்.

இறைவன் நேரடியாக தண்டிப்பதும், மனிதனை வைத்து கொலை செய்ய சொல்வதும் ஒன்றா?

இஸ்லாம் மதத்துக்காக கொல்ல சொல்கிறது அது தீவிரவாதம் என்று கூறியதற்காக தான் மதத்திற்கான கொலைகளை தேவனே செய்ய சொல்லியிருக்கிறார் என்பதை காட்டுவதற்காக முஸ்லிம் தரப்பு வாதங்களை வைத்தனர்.

பேசும்போது பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு இப்படி உலருகிறார்.

0:49:50)

100.மாற்றுதமத்தவர்களது ஆலயங்களை உடைக்க சொன்ன யாத்திராகமம் 34:13 காரணம் நரபலி என்கிறார்.

ஆனால் அடுத்த வசனத்திலேயே அவர்கள் பலி கொடுத்து உனக்கு சாப்பாடு போடுவார்கள் அதை நீ திண்பாய் என்பதும் கர்த்தர் எரிச்சலுள்ளவர் என்பதும் தான் சொல்லப்பட்டுள்ளது.... அதாவது உடைக்க காரணம் நீ போய் அவர்களின் சாப்பாட்டில்  கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு

உபாகமம் 12:31 அவர்களை துரத்திய பின்பு , கர்த்தருக்கு அவர்கள் தம் தேவர்களுக்கு செய்தது போல (நரபலி போன்று) செய்ய வேண்டாம் என்று தான் கூறப்படுகிறது.

இஸ்ரவேலரை நரபலி கொடுக்க வைத்ததும் கர்த்தர் தான் என்கிறார் கர்த்தர் -எசேக்கியேல் 20:25-26

 ஆனால், கர்த்தரோ தனக்கு நரபலியை அவரே தன் மகனை பலியிட்டு நரபலி கொடுத்துக் கொள்வார்.(ரோமர் 8:3,3:26, எபிரேயர் 9:14, 1 யோவான் 2:2, எபேசியர் 5:2)

0:50:25)

14.முஸ்லிம் தரப்பு ஏழாம் அமர்வு

101.முஸ்லிம் தரப்பு வாதம்

-பைபிள் மதத்துக்காக கொல்லச்சொன்னவைகள் அரசாங்கம் செய்வது தனிநபர் செய்வதல்ல என்று போதகர் உருட்டியதற்கு பதிலாக, கர்த்தர் எழுப்பிய நியாயாதிபதியான எகூத் தனி நபராக போய் கொலை பண்ணியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது(நியா 3:20-22)

0:56:50

-பிள்ளைகளை பலி கொடுப்பதால் தான் புறஜாதிகளை கொல்ல சொன்னதாக விரட்ட சொன்னதாக போதகர் உருட்டியதற்கு பதிலாக, வேறு கடவுளை சேவிப்போம் என்று கூறி ஒரு தீர்க்கதரிசியோ சொப்பனக்காரனோ சொன்னாலும் அவனையும் கொல்ல வேண்டும் என்று அல்லவா கூறுகிறது (உபாகமம் 13:1-6) (அத்தோடு ஊராக சேர்ந்து இப்படி வேறு கடவுளை வணங்கினால் அவர்கள் அனைவரையும் வெட்டி கொன்று ஊரை கொளுத்த வேண்டும் என்றும் 13:12-16 இலே சொல்லப்பட்டுள்ளது) என்ற தகவல் கூறப்பட்டு போதகரின் உருட்டு வெளிப்படுத்தப்பட்டது.

(அதுமட்டுமின்றி தனக்கு நரபலி கொடுக்கப்படும் போது அதை அவர் தடுக்கவில்லை.நியாயாதிபதிகள் 11:25-40

அத்துடன் தன் மகனையே தனக்கே நரபலி கொடுத்தார் என்று கிறிஸ்தவம் நம்புகிறது. (ரோமர் 8:3,3:26, எபிரேயர் 9:14, 1 யோவான் 2:2, எபேசியர் 5:2, ) . இப்படியிருக்க போதகரின் உருட்டு அபத்தமே!

(1:00:30)

-இஸ்ரவேல் தேசத்தில் அவர்களது ஆட்சிக்குள் மதத்துக்காக கொல்லும்படி இருப்பவற்றை அவர்களுக்கு மட்டும் தேவன் கொடுத்தது என சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு, இஸ்லாம் என்று வரும்போது இறைவன் முழு மனிதர்களுக்கும் சட்டத்தை வழங்கினால், அதை மனோயிச்சை அடிப்படையில் சரியில்லை என்று வாதிடுவது எப்படி சரியாகும் என்றும், கடவுள் தானே சரி பிழையை தீர்மானிக்க முடியும் என்பது நினைவு படுத்தினர்.

(1:03:15)

-இவர்களுக்கு தேவைப்படும்போது பழைய ஏற்பாட்டை காட்டுவதும், பழைய ஏற்பாட்டின் மூலமே மூக்குடைபடும்போது அதை பழைய சட்டம் என கூறி எஸ்கேப் ஆகும் இரட்டை நிலை பற்றி கேட்கப்பட்டது. (1:03:50)

-அரபு தீபகற்பத்திலிருந்து யூத கிறிஸ்தவர்களை துரத்தும் படி சொன்னதை குற்றம் பிடிக்கும் இவர்கள், யாத்திராகமம் 23:31 வசனமானது

31.சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

32அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

யாத்திராகமம் 23:31-32

இந்த எல்லைக்குள் உள்ள மாற்றுமத புற ஜாதிகளை துரத்திவிடும்படி சொல்கிறாரே. இதை ஏற்றுக்கொண்டு இஸ்லாம் கூறுவதை மட்டும் விமர்சிக்கலாமா என மூக்கை உடைத்தனர். (1:04:40)

 

-பழைய ஏற்பாட்டு தீவிரவாதங்கள் அந்த காலத்துக்கு மட்டும் என்கின்றது YDM. அதனால் தான் அது எக்காலத்துக்குமே பொருந்தாது என்கிறோம் என்பதாக சொல்லப்பட்டது

(1:06:00)

-ஆண்பெண்ணை சமமாக நடத்துவதாக போதகர் உருட்டியதற்கு பதிலாக, தகப்பன் தன் மகளை அடிமையாக விற்றுப் போட்டால் ஆண் அடிமையை போல விடுதலை பெற்று போக கூடாது என்று தெளிவாக யாத்திராகமம் 21:7, கணவன் தன் மனைவியை பிடிக்கலனா அவளை தள்ளி விடலாம் (விவாகரத்து) செய்யலாம் என உபாகமம் 24:1 கூறுவதை காட்டி , சமத்துவம் என்று இவர்கள் உருட்டுவது போலி என நிரூபித்தனர்-

1:09:00

முஸ்லிம் தரப்பு அமர்வு முடிவு

 

 

 

15.கிறிஸ்தவ தரப்பு எட்டாம் அமர்வு

102.கிறிஸ்தவத்திலோ பைபிளிலோ எந்த உருப்படியான வழிகாட்டல் என்று எதையும் காட்ட முடியாததால், கடைசியில் 53 வயது முதியவர் 6வயது சிறுமியை திருமணம் செய்தது பொருந்துமா என்று கேட்கிறார் இரண்டாம் போதகர்.

இதற்கு பதில் வெறி சிம்பிள்.

-நபிகளாருக்கு அன்னை ஆயிஷா திருமணம் பேசப்படும் முன்பே முத்யிம் இப்னு அதீ என்பவருடைய மகனுக்கு பேசப்பட்டிருந்தார்-- அத்தகைய திருமணப்பேச்சு செய்த காலத்தில் தான் நபிகளார் திருமணம் பேசினார்கள் (முஸ்னத் அஹ்மத் 25769)

-அக்காலத்தில் 21 வயதில் பாட்டியாகிய பெண்களும் இருந்தனர் (புகாரி 2664 இன் தலைப்பு)

-ஆயிஷா () அவர்களை 6 வயதில் திருமணம் செய்து ஒன்பதாம் வயதில் தான் நபிகளாரின் வீட்டுக்கு வந்து தாம்பத்யம் நிகழ்ந்தது(புகாரி 5133,5158)

-குடும்பவாழ்வுக்கு ஏற்ற உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் (அபுதாவுத் 3903, இப்னுமாஜா 3324

-அவரை அவரது தாய் அலங்கரிக்க அனுப்பிய போது அலங்கரித்த பெண்களும் வாழ்த்து கூறினார்கள் (புகாரி 5156). காரணம் அவர்குடும்பவாழ்வுக்கு தகுதியாக இருந்ததால் தான்.

-இதனால் அன்னை ஆயிஷா () பாதிக்கப்படவோ உரிமைகள் பறிக்கப்படவோ இல்லை... மாறாக அதன் பின்பும் தன் தோழியருடன் விளையாடுபவர் ஆக விடப்பட்டார் (புகாரி 6130), விரும்பும் அளவுக்கு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236), அவருடன் ஓட்டப்பந்தயம்த்தில் ஈடுபடும் அளவுக்கு நபிகளார் வயதிற்கேற்ப நடந்தார்கள்- அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979. அத்தோடு அவரையோ வேறு மனைவியையோ நபிகளார் அடித்ததேயில்லை என கூறுபவரும் அன்னை ஆயிஷா தான் (அபூதாவூத் 4786, இப்னுமாஜா 1984). அத்தோடு நபிகளாரை விட தன் இச்சையை கட்டுப்படுத்த வேறு யாராலும் முடியாது என்று கூறும் அளவுக்கு நபிகளார் நடந்தார்கள் (புகாரி 302,1927)

-ஆயிஷா () அவர்கள் நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவும் அவர் விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா அவர்களே இருந்தார்கள் (புகாரி 4789,6024,6030,6004)

ஆக இப்படி அன்னை ஆயிஷா அவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ அக்கால மக்களுக்கோ இதில் பிரச்சினை இல்லாதபோது ஏன் இவர்கள் கதற வேண்டும்?

அத்தோடு இளவயது திருமணங்கள் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றே:

. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.

https://cyh.rrchnm.org/primary-sources/24.html#:~:text=By%201880%2C%20the%20first%20date,of%2012%20or%2013%20years

.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது

https://www.asahi.com/sp/ajw/articles/14934890

.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்

https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent

ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?

-கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (5136,6946,6948)

சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.

பைபிளில் தான் சொந்த மகளை விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது யாத்திராகமம் 21:7-10

பெண்ணுக்கு கணவனை தேர்வு செய்வதற்கு உரிமையே கிடையாது.

பைபிளிலே ஆகாஸ் ராஜா 11 வயதிலேயே அப்பாவாக ஆகியுள்ளார். அவன் 36 வயதில் இறந்தார் (2 இராஜாக்கள் 16:2), அவன் மரணித்த பின் அவனது மகன் எசேக்கியா ராஜாவானான் (2 இராஜாக்கள் 16:20) அப்போது அவனின் வயது 25 (2 இராஜாக்கள் 18:2). 

(உடனே அவன் கெட்டவன் என்று கதைவிட கூடாது. இப்படி திருமண வயது எதுவும் இருக்கவில்லை என்பதற்கு ஆதாரமே இது)

-ரிஃப்கா பாட்டியை ஈசாக்கு தாத்தா முடித்த போது அவரது வயது 3 என யூத அறிஞர் ராசி ஆதியாகமம் 25:20இற்கு விளக்கம் கூறுகிறார்.(https://www.sefaria.org/Rashi_on_Genesis.25.20.2?lang=en) இது இன்றும் யூதர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே

-9வயது ஆண் பிள்ளையும், மூன்றுவயது பெண்குழந்தை உடலுறவுக்கு தகுதியானவர்கள் என தல்மூத் கூறுகிறது (avodah zarah 37a :1-2 (https://www.sefaria.org/Avodah_Zarah.37a.1?lang=en)

-அத்தோடு மரியாள் கர்ப்பமானது 12-14 வயதிலே என கத்தோலிக்க என்சைக்லோபீடியா கூறுகிறது https://www.newadvent.org/cathen/15464b.htm (தலைப்பு Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph))

மல்லாக்கப் படுத்துக் துப்பும் நிலமை தான் இவர்களுடையது.

தகப்பனின் சுய விருப்பத்தின்படி மட்டுமே திருமணம் செய்விக்கலாம் (யாத்திராகமம் 22:16-17, யாத்திராகமம் 21:7-10, 1 கொரிந்தியர் 7:36)

அவளை கற்பழித்தால் கூட, கற்பழித்தவனுக்கே கழுத்தை நீட்ட வேண்டும் (உபாகமம் 22:28-29)

இந்த நிலையில் போதகர் கதருகிறார்.

(1:10:00)

103.குர்ஆனும் ஹதீஸும் இருக்கும் வரை உலகில் தீவிரவாதம் தொடரும் என்கிறார் மடையர். இது அவரது வெறுப்பையும் பகைமையையும் காட்டுகிறது.

இஸ்லாம் எதிரியை போர்க்களத்தில் சந்திக்க ஆசைப்படாமல் ,நிம்மதியான வாழ்வை கேட்கும்படியே கூறப்படுகிறது.

ஆனாலும் எதிரியை போரில் சந்திக்க ஏற்பட்டால் அதன் துன்பங்களை பொறுத்துக்கொண்டு யுத்தம் செய்யும்படி கூறுகிறது

தன்னுடன் யுத்தம் செய்யாமல் சமாதானமாக இருக்கும் மக்களுக்கோ, ஜிஸ்யா வரியை அவர்களது சக்திக்கு உட்பட்ட அளவில் வசூலித்து, அவர்களின் பாதுகாப்புக்காக யுத்தம் செய்ய வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்றும், அத்தகைய பிரஜையை கொல்பவன் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார் என்பதோடு அவர்களின் உரிமையை பறிப்பவர்களுக்கும் சுமக்க முடியாத சுமைகளை சுமத்துபவர்களுக்கும் எதிராக நானே வாதாடுவேன் என நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.

அத்தோடு முஸ்லிம்களோடு யுத்தம் செய்யாத மக்களுக்கு நல்லது செய்வதையோ நீதியாக நடப்பதையோ அல்லாஹ் தடுக்கவில்லை என குர்ஆன் 60:8 கூறுகிறது.

(முன்பு எழுதியவைகளும் இதற்கு பொருந்தும்)

1:11:50

 

104.முஸ்லிம்கள் பேசும்போது பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு, பதில் சொன்னதையே திருப்பி கேட்பதும் வசனத்தை வைத்து மூக்குடைபட்ட பின்னரும் அதே வசனத்திலேயே குறிப்பிடுகிறார். அதாவது சுதேசிக்கும் அந்நியனுக்கும் ஒரே சட்டம் என்று. (எண்ணாகமம் 15:15-16). இது பலி விசயத்தில் கூறப்பட்டது என்பதை முந்தைய வசனத்தை படித்து அறியாமலும், அந்நியனை அடிமையாக காலம் காலமாக வைக்கலாம் என்றும் இஸ்ரவேலனான சுதேசியையோ அப்படி நடத்த கூடாது என்று கூறும் லேவியர் 25:42-46 வசனத்தை குறிப்பிட்டே பதிலடி கொடுக்கப்பட்ட பின்பும் ஏமாற்றுவதற்காக அதையே மீண்டும் மீண்டும் வைக்கிறார்.

*ஜிஸ்யா எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக தெளிவாக சொல்லப்பட்ட பின்னாலும் (புகாரி 3052,3700), முஸ்லிம்களிடம் ஏன் வேறு விதமாகவும் காஃபிர்களிடம் வேறு விதமாகவும் எடுக்கப்படுகிறது என்கிறார்.

*முஸ்லிம்களிடம் ஸகாத் வசூலிப்பது மார்க்க கடமை என்றும் அதை முஸ்லிம்களுக்கே செலவழிக்கப்படும். ஜிஸ்யாவோ அதை இஸ்லாமிய அரசு வசூலித்து அதற்கு பகரமாக அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

*ஸகாத் தங்கம் வெள்ளியில் 2.5% உம் விளைச்சலில் நீருக்காக செலவு இல்லாதபோது 10%உம், செலவு இருக்கும் பட்சத்தில் 5%உம், புதையலில் 20%உம், கால்நடைகளில் குறைந்த பட்சமாக 5 ஒட்டகத்திற்கு 1 ஒட்டகமும், 40-120 வரையான ஆடுகளுக்கு ஒரு ஆடும் என இதுபோன்று வசூலித்து ஏழைகளுக்கும், பரம ஏழைகளுக்கும், கடனாளிகளுக்கும், வசூலிப்பவர்களுக்கும் என 8 பிரிவினருக்கு வழங்குகிறது (quran 9:60)

*ஜிஸ்யாவையோ வசதியை பொறுத்து வசூலித்துள்ளனர். வசதியாக இருந்த சிரியாவில் வருடத்திற்கு ஒரு நபரிடம் 4 தங்கக்காசுகளும், அவர்களைவிட வசதி குறைந்தவர்களான எமன் மக்களிடம் வருடத்திற்கு 1 தங்கக்காசுகளும் இஸ்லாமிய அரசு அறவிட்டுள்ளது. (புகாரி 3156க்கு முன்புள்ள தலைப்பு)

*ஜிஸ்யா காட்டாதவர்களை  வெயிலில் நிற்கவைத்தற்காக கூட இஸ்லாமிய அரசு அது தவறு என்றும் மனிதர்களை வேதனை செய்பவர்களை தான் அல்லாஹ் வேதனை செய்வான் என்று எச்சரிக்கை செய்துள்ளது (முஸ்லிம் 5096-5097)

*அத்தோடு பெண்கள் சிறுவர்கள் தொழிலற்றவர்களிடம் ஜிஸ்யா வாங்கியதில்லை

இதைவிட வேறு என்ன நீதியை செய்துவிட முடியும்?

1:13:20

105.ஏகூத் தனிமனிதனாக போய் கொலைசெய்தானே என்று கேட்டால், அதற்கு அவன் நியாயாதிபதி. கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தலைவன் என்கிறார்.

இதுவே மத யுத்தம் என்பதை மறைமுகமாக போட்டுடைத்துவிட்டார். இதை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை குறை சொல்லலாமா?

(1:14:00)

106.தேவன் மதத்துக்காக கொல்லச்சொன்னது ஊர்க்குடிமக்களை ஊரைவிட்டு துரத்தி குடியேற சொன்னது எல்லாம் தற்காலிகமாக கொடுத்த சட்டம் என்கிறார். அது தற்காலிகமானது என அங்கே சொல்லப்படவில்லை.

ஒரு பேச்சுக்கு தற்காலிகம் என்று எடுத்துக்கொண்டாலும், கடவுள் செய்யச் சொன்னாரா இல்லையா? அப்படியிருக்க அதை வைத்துக்கொண்டு, கடவுள் இஸ்லாத்தில் ஒரு சட்டத்தை கொடுத்ததற்காக ஏன் விமர்சிக்க முடியும்?

1:15:00

107.பைபிள் மாற்றுமதத்தவர்களை கொல்லவும் விரட்டவும் சொன்னது 144 தடைச்சட்டம் போன்றது என்கிறார்.

*144 தடைச்சட்டத்தில் குழந்தைகளை பிளான் பண்ணி கொல்ல சொல்லுவார்களா?  (1 சாமுவேல் 15:3-5, உபாகமம் 20:16-17))

*தனக்கு கீழுள்ள ஊர்மக்கள் மாற்று கடவுளை வணங்கினால் அவர்களை கூரான வாளால் வெட்டி கொன்று ஊரையே கொழுத்துவது 144ஆ? (உபாகமம் 13:12-16)

*மாற்று மதத்தவர்களின் ஆலயங்களை இடித்து ஊரைவிட்டு துரத்துவது 144ஆ? (யாத்திராகமம் 23:23-25, 34:11-15...)

*144இல் கற்பழித்தால் கற்பழிச்சவுனுக்கே பெண்ணை கொடுக்க வேண்டும் என்று சொல்லலுமா? (உபாகமம் 22:28-29)

இவையெல்லாம் 144 அல்ல.. 420...

*அதை தற்காலிக சட்டம் என எங்கும் பழைய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. அது குறித்து வெட்கப்பட்டு அது தற்காலிகம் என கதை விடுகிறார்.  அவர்கள் பலத்தோடு இருந்ததால் இந்த கொலைவெறித் சட்டம். அடிமையானதால் வேறு வழி இல்லாமல் அமைதிப் பேச்சு. ஆனால் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரும் வல்லமையோடு வருவதால் கொலை தான் பண்ணுவார்.(வெளி 19:20-21)

எனவே அடிப்படையறிவின்றி உலரிக்கொண்டிருக்கிறார்.

இதே வாதத்தை இஸ்லாத்திற்கும் வைக்க முடியும் தானே... எதிரிகளால் அச்சுறுத்தல் நீங்கும்போது சமாதான சட்டமும், அவர்கள் எதிர்த்து போரிட்டால், அமைதிக்கு ஒத்துவராத விட்டால், அப்போது போர். இதை வேண்டுமானால் போதகர் சொன்னபடி 144 என சொல்லலாம்.

1:16:00

108. போதகர் இதை தற்காலிக சட்டம் என்பதாக கூறி, இஸ்லாத்திலும் ஆரம்பத்தில் மது குடிப்பது அனுமதியாக இருந்தது. பிறகு தடைசெய்யப்பட்டது என்று இருக்கிறது. அது போன்று தான் இது என்கிறார்.

பழைய ஏற்பாட்டில் அவை தற்காலிக சட்டம் என எங்கும் கூறப்படவில்லை....

ஆட்சியிழந்து வரி செலுத்தும் காலத்தில் எதிர்த்து போராட சக்தியில்லாத காலத்தில் தற்காலிகமாக யுத்தமில்லாமையும், இயேசு மீண்டும் வரும்போது எதிரிகளை மீண்டும் போரிட்டு  கொன்று அளிப்பார் என்பதும் உள்ளது தான் (வெளி 19:20-21)

வேண்டுமானால் சமாதானப் பேச்சை வரி செலுத்தும் பலவீன காலத்திற்கு மட்டும் தற்காலிகமானது என்று எடுக்கலாம்.

 

109ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே சட்டம் என தான் சொல்லவில்லை என்றும் கர்த்தர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்து அவர்களிருவரையும் தான் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொன்னார் என்கிறார் (ஆதி 1:29). ஆனால் ஏவாள் பாவம் செய்ததால் அவளாகவே தண்டனையை வருவித்துக்கொண்டாள் என்றும் கடவுளிடம் அநீதியில்லை என்கிறார்.

ஆனால் அதற்காகவே பெண்ணை சபையில் பேசக்கூடாது என்றும் கற்பிக்க கூடாது என்றும் கர்த்தருக்கு கட்டுப்படுவது போல கணவனுக்கு கட்டுப்படுங்கள் என்றும் உள்ளதே.

(1:17:35)

110.ஒரு ஆணுக்கு இரண்டு திருமணத்திற்கான ஒழுக்கக் கேடான அனுமதியை கொடுத்திருப்பதாக சொல்கிறார்.இது காமுகர்கள் தான் விரும்புவார்கள் என்கிறார்.

*உண்மையில் ஆபிரகாமின் சந்ததிகளில் பலதாரம் பரவலாக காணப்பட்ட ஒன்று தான். இஸ்லாம் அதற்கு நான்கு என்று வரையறை அளித்ததோடு, மனைவியரிடையே நீதி செலுத்த முடியாது எனில் ஒரே திருமணமே செய்ய வேண்டும் என்று கட்டளை விதிக்கிறது (4:3)

முகம்மது (ﷺ) வழியாக இஸ்லாம் வருவதற்கு முன்பே பலதாரமணம் உலகிலும் அரேபியாவிலும் இருந்ததுஇஸ்லாம் அதை செவ்வையாக்கி அதிகபட்சமாக நான்கு வரைக்கும் அனுமதித்ததோடு நிபந்தனையும் விதித்தது. அதாவது மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே அனுமதி (குர்ஆன் 4:3)

-பலதாரமணம் இயற்கைக்கு ஒத்துப் போகிறதும் பயனுள்ளதுமாகும்

இயற்கையாகவே ஆணுக்கு பலதாரமணம் செய்யும் விதமாகவே மனிதயினம் படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓர் ஆண் ஒரே வருடத்தில் நான்கு மனைவியரோடு சேர்ந்து நான்கு பேரையும் பிள்ளை பெற வைக்க முடியும். ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை சேர்ந்தாலும் ஒருத்தனுக்கே பிள்ளை பிறப்பதோடு அதை கண்டுபிடிக்க வேறு பரிசோதனைகளும் செய்ய வேண்டி வரும்..

அத்தோடு குடும்பம் நிலைபெறவும் மனித இனம் நிலைபெறவும் அடிப்படையான அம்சம் இனப்பெருக்கமாகவுள்ளதுஇதை விரைவுபடுத்துவதற்கு ஒரு முறையே பலதாரமணம்.

-பலதாரமணத்தினால் முதல் மனைவி பாதிக்கப்படுதலும் பெரு நன்மைக்குள் சிறு தீமையும்

இதனால் முதல் மனைவியின் கணவன் மீதான உரிமை குறைவடைவதால் பாதிக்கப்படுகிறாள் என தற்குரித்தனமாக பேசுவதாயின், இரண்டாம் மூன்றாம் குழந்தைகளை பெற்றோர் ஈன்றெடுக்கும்போது முதல் குழந்தைக்கு பெற்றோர் மீதான உரிமையும் சொத்தின் மீதான உரிமையும் குறைந்து பாதிப்படைவானே. அப்படி பார்த்தால் ஒரு தம்பதியினர் ஒரே குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறவேண்டும்

அத்தோடு எந்த பெரிய  நலவுக்குள்ளும் சிறு தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக பிள்ளையை பெற்றெடுக்கும் போது தாய் பெரும் வேதனையை அடைகிறாள். சிலபோது குழந்தை பெறும்போதே உயர்ந்த அன்னை இறக்கிறாள். இதனால் உயர்ந்த தாயினம் பாதிக்கப்படுகிறது என குழந்தை பெறுவதை எந்த தற்குரியாவது நல்லதல்ல என்பானா? அதே போன்று தான் பலதாரமணமும் சமூக ஒழுக்கம் கருதி ஒப்பற்ற இறைவன் அனுமதித்தான்.

-பலதாரமணமும் விதவைகளும்

பலதார மணம் இல்லாத மக்களிடையே விதவை இல்லற மறுவாழ்வு மிகவும் குறைவாகவே காணப்படும். இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரித்ததன் மூலம் விதவை மறுவாழ்வை இயல்பானதாக தொடரச்செய்ததுபலதாரமணமில்லாத மக்களிடையே விதவையை மணப்பதை ஏதோ ஆணின் தியாகம் போன்று சித்தரித்து விதவையை அற்பமாக கருதக்காரணமாகவுள்ளது

-பலதாரமணமும் விபச்சாரமும்

விலைமாதுக்களிடம் செல்வோரில் அநேகர் திருமணமான ஆண்களாக இருப்பர். இதிலே ஆண் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை இல்லாததாலும்  , அந்த பெண்கள் முறையாக கணவனெனும் ஆணின் கீழே இல்லாததாலுமே அதை தொழிலாக செய்கின்றதோடு ஆண்களும் விரும்பிச் செல்கின்றனர். அதனால்  இஸ்லாம் இவற்றை நெறிப்படுத்தும் ஒரு வழியாக பலதாரமணத்தை அனுமதித்தது.

ஆனாலும் நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே பலதாரமணம் கூடும் (குர்ஆன் 4:3)

(இதற்கு மீறிய விபச்சாரத்திற்கு இஸ்லாம் தண்டனை வழங்குகிறது)

இதை தவறு என்று சொல்ல முகாந்திரமும் இல்லை!

இதை ஒழுக்க்கேடு என்று போதகர் உருட்ட காரணம், புதிய ஏற்பாடு துறவறத்தை ஊக்குவிப்பதால் தான்

*ஆனால் பைபிளிலே தாவீது ராஜாவுக்கு அவரது ஆண்டவரின் மனைவிகளை மடியில் நானே கொடுத்தேன் என்றும், இது போதாவிட்டால் இன்னும் தருவேன் என்றும் சொல்லியுள்ளார் (2 சாமுவேல் 12:8)

*ஒரு பெண்ணை மடியில் கொடுத்தல் என்பது மனைவியாகவோ வப்பாட்டியாகவோ கொடுப்பதை தான் குறிக்கிறது

* அதை தான் சாரா ஆகாரை ஆபிரகாமின் மடியில் தந்ததாக கூறப்படுகிறது (ஆதி 16:5)

*அத்தோடு இரண்டு மனைவிகளை உடையவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உபாகமம் 21:15

*தாவீது ராஜா தன்னுடன் கர்த்தர் இருக்கிறார் என்று அறிந்த பின்பு  பல மனைவிகளையும் வப்பாட்டிகளையும் ஏற்படுத்திக்கொண்டார். (2 சாமுவேல் 5:12-13)

*தாவீது செய்தவை அனைத்தும் தன் இருதயத்திற்கு ஏற்றபடியே செய்தான் உரியாவின் விசயத்தை தவிர என்கிறது  (1 இராஜாக்கள் 15:5) . அதாவது இதெல்லாம் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றதாகவே சொல்கிறார்.

அப்படியென்றால் கர்த்தரே ஒழுக்கக்கேட்டை செய்வித்தார்.

(1:20:30)

111.நிகாஹ் என்றாலே உடலுறவு தான் என்பதாக பிதற்றுகிறார். மொழிரீதியாக இந்த அர்த்தம்  இருந்தாலும், குர்ஆன் மற்றும் ஹதீஸில் திருமண உடன்படிக்கையையே குறிக்கிறது. குர்ஆன் 2:221,232, 33:49, போன்ற வசனங்களில் அது திருமணத்தையே குறிக்கிறது. குறிப்பாக 33:49.  அதனால் சொல்லும் இடத்தையும் சூழலையும் வைத்து தான் அர்த்தத்தை தீர்மானிக்க வேண்டும்.... அதனால் தான் தற்போது திருமணம் என்பதை நிகாஹ் என்றே முஸ்லிம்கள் பாவிக்கிறார்கள்.

 

112.இந்த மனநோயாளி , புகாரி 4788 ஐ குறிப்பிட்டு, தப்பான மனித இச்சைகளை நிறைவேற்றுவதற்கு சட்டம் கொடுப்பதாக உலருகிறார்.

*நபிகளாருக்கு தேர்வு செய்யும் உரிமையை பூரணமாக கொடுத்ததால் அன்னை ஆயிஷா அவர்கள் , உங்கள் இறைவன் உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறான் என கருத்துப்பட சொன்னார்கள்.

*ஆனாலும் நபிகளார்  இறைவன் தேர்வு கொடுத்த பின்பும், அதை பயன்படுத்தவில்லை அப்படி யாரையும் ஒதுக்கி வைக்கவும் இல்லை. ! அதை அன்னை ஆயிஷா (ர) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள் பார்க்க புகாரி 4789... அதாவது தடியன் குறிப்பிட்ட ஹதீஸுக்கு அடுத்த ஹதீஸ்.

*தாவீதுக்கு அவருடைய ஆண்டவனுடைய மனைவிகளை மடியில் கொடுத்திருக்கிறாரே.(2 சாமுவேல் 12:8). வேண்டுமானால் இன்னும் தருவேன் என்று அவருடைய இச்சையை ஆசையை நிறைவேற்றுவதற்காக சொன்னாரே.

1:22:00

113.தன் வசதிக்கேற்ப அதிக திருமணங்கள் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதாக போதகர் உலருகிறார்

ஆனால் உண்மையில், மனைவியரிடையே நீதமாக நடக்க முடியுமாக இருந்தால் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை முடிக்கலாம். (4:3)

அதுவும் அதிகபட்சமாக 4 மட்டுமே.

அதாவது ஏற்கனவே மக்களிடையே இருந்த பலதார மணத்தை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது

(1:22:50)

114.எந்த காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்ய ஆண்களுக்கு அனுமதிப்பதாக போதகர் உலருகிறார்.

விவாகரத்து முன்பியிருந்துள்ள ஒரு விடயம் தான். அதை இஸ்லாம் ஒழுங்கு படுத்தியது.

விருப்பம் இல்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழ வைக்க இஸ்லாம் விரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் சேர்ந்து போவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

அதாவது மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதிலிருந்து உடலுறவு கொள்ளாத போதே தலாக் சொல்லலாம்.(முஸ்லிம் 2918, புகாரி 5332

அதன்பின் அவளது காத்திருப்புக்காலமான மூன்று மாதவிடாய் காலங்கள் (2:228) தன் கணவன் வீட்டிலேயே இருக்கவேண்டும். அவனே அவளுக்கு உணவும் உறையுளும் வழங்க வேண்டும்.(65:1,6-7) தலாக் சொன்ன கணவன் மனது மாறினால் சேரத்துக்கொள்ளலாம் (2:228)

அதன் பின்பும் சேராதபோது பிரிவார்கள்

அதன் பின்பும் சேர்ந்து வாழ விரும்பினால் , திரும்பவும் புதிதாக திருமணம் செய்து வாழலாம்.

இப்படி இரண்டு தடவைகள் அனுமதிக்கிறது.(2:229). ஏனெனில் மனைவியை பழிவாங்குவதற்காக அவளோடு சேர்ந்து வாழாமலும், அவளை வேறு திருமணம் செய்ய விடாமலும் இருப்பதற்காக ஒரு ஆண் தொடர்ந்து செய்துவிட கூடாது என்பதற்கான சட்டமே இது.

மூன்றாவதாக மறுபடியும் இப்படி நடந்தால், அப்போது அவளை வேறொருவன் மணந்து , தாம்பத்யமும் நிகழ்ந்து பிறகு அவனுக்கும் வெறுத்து தலாக் சொன்னால், மீண்டும் சேர இருவரும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்.(2:230). அதற்கு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2)

மீண்டும் சேர்ந்து வாழ்வதானாலும் பிரிந்துவிடுவதானாலும் அவளோடு நல்ல முறையில் இரக்கமாக நடந்துகொள்ளுமாறே குர்ஆன் 2:231 சொல்கிறது

மஹராக பொற்குவியலை கொடுத்திருந்தாலும் அதில் சிறிதும் மீள எடுக்க கூடாது (4:20)

அதுபோன்றே பெண்களுக்கும் தன் கணவனை பிடிக்காத போது , உரிமைகள் மீறப்படும் போது தன் கணவனிடமிருந்து தலாக்கை கேட்டு பெற அனுமதி உண்டு.(2:229 இன் இறுதி )

மீளமுடியாத தலாக்காக இருந்தாலும் ,கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலூட்டும் தாயாக இருந்தாலோ, அப்போதும் அவளுக்கு உடையும் உணவும் செலவும் கொடுக்க வேண்டும் (2:233, 65:6-7)

அதற்கு பின் பிள்ளைக்கு செலவழிப்பதும் ஆணின் மீது கடமை. அந்த ஆண் மரணித்தால், அவருடைய சொத்தில் ஏனைய பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பது போல இப்பிள்ளைக்கும் கிடைக்கும்..

அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான கொடையை  கணவன் தன் வசதிக்கேற்ப வழங்க வேண்டும் என்றும் குர்ஆன் வழிகாட்டுகிறது (2:241,236)

தாம்பத்யம் நடக்காமலே விவாகரத்து நடந்தாலும் இவ்வாறு கொடையை வழங்குவது ஆணின் மீது கடமை. (2:236).

இதன்படி நபிகளார் திருமணம் செய்து தனக்கு நபிகளாரை பிடிக்காமல் பாதுகாப்பு தேடிய பெண்ணுக்கும் இவ்வாறு கொடையாக சணல் ஆடைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.(புகாரி 5255)

இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம்.

ஆனால் புதிய ஏற்பாடு எந்த காரணத்துக்காகவும் விவாகரத்து செய்வதை தடுக்கிறது. குடிச்சுட்டு வந்து அடித்தாலும் இதே நிலை தான்.

.1:23:50

 

115.அல்லாஹ் விவாகரத்து செய்வதை கண்டிப்பதில்லை என கூறி 4:20ஐ குறிப்பிடுகிறார். விவாகரத்து செய்துவிட்டு மஹரை திருப்பி கொடுங்கள் என சொல்வதாகவும் பிதற்றுகிறார்.

அது எந்த மஹர் என்றால் பேரிச்சம்பழம் இரும்பு மோதிரம் என்கிறார்

மேலும் ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவள்) இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)க்கொள்ள நீங்கள் நாடினால் (நீக்கிவிட விரும்பும்) அவர்களில் ஒருத்திக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்தபோதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள், அபாண்டமாகவும், பகிரங்கப் பாவமாகவும் (வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள்(திருப்பி) எடுக்கிறீர்களா?4:20

இதிலே தெளிவாக பொற்குவியலை மஹராக கொடுத்திருந்தாலும், அதில் எதையும் திருப்பி எடுக்க கூடாது என்று கூறுகிறது.

பெண்ணுக்கு மஹராக எதை கேட்கிறாரோ அதையே கொடுக்க வேண்டும்.

அது பெண் தரப்பு உடன்படுவதை பொறுத்து.

விருப்பமில்லாதவர்களை நிர்ப்பந்தித்து வாழவைக்க இஸ்லாம் வழிகாட்டவில்லை..

ஒரு கணவன் தன் மனைவிக்கு செலவு கொடுக்காவிட்டாலோ,தாம்பத்யம் நடத்தாவிட்டாலோ கூட அவளுக்கு எந்த தீர்வும் இல்லை. அதேபோல் மனைவி தன் கணவனுடன் தாம்பத்யத்துக்கு ஒத்துக்கொள்ளாவிட்டாலும் காலம் முழுதும் துறவிகள் போல இருப்பதை தவிர வேறு வழியை புதிய ஏற்பாடு வழங்கவில்லை

1:24:50

116.குடியை நிறுத்தச் சொன்னதற்காக ஒரு பெண்ணை இந்தியாவில் குடிமகன் தலாக் சொன்னதாக கூறி, இது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்.

-இஸ்லாம் விவாகரத்து சொல்லப்பட்ட பெண்ணுக்கு மறுமணம் செய்வதற்கு அனுமதிக்கிறது.

-அத்தோடு விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கணவன் தரப்பு கொடை கொடுப்பது கடமை .

அவர்களது பிள்ளைகளுக்கான செலவை பருவ வயதை அடையும்வரை  விவாகரத்து செய்தவர் செலவுக்கு கொடுக்க வேண்டும். வாரிசுரிமையும் பிள்ளைக்கு கிடைக்கும்.

அவளது வாழ்க்கை இதனால் பாதிக்கப்படும் என்று சொல்ல முடியாது. காரணம் கணவன்  இறந்து விட்டாலும் இதே நிலைமை தான்.

இந்த பெண்ணின் செலவை அந்த பெண்ணின் குடும்பத்தினர் தான் பார்க்க வேண்டும். ஏனெனில் அப்பெண்ணுக்கு அவரது பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் செல்லும் சொத்தில் பங்குண்டு.

உணவளிக்கும் பொறுப்பு இறைவனை சார்ந்தது. அந்த பெண் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். மறுமணம் செய்யலாம். அல்லது விவாகரத்து செய்த கணவனோடே மீண்டும் சேர்ந்தும் வாழலாம்.

இப்படி நிறைய தீர்வுகள் உள்ளன

*இதன்மூலம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தற்குறித்தனமாக பேசுவார்கள். ஆனால் இஸ்லாம் அப்பெண்கள் பாதிக்கப்படாத விதத்திலேயே அதை ஆக்கியுள்ளது.

1.அவர்களுக்கு மணக்கொடையாக தங்கக்குவியலை கொடுத்திருந்தாலும் எதையும் திருப்பி எடுக்க கூடாது (குர்ஆன் 4:20)

2.விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கணவர்மீது தன்னால் இயன்ற நன்கொடையை வழங்குவதை கடமை என்கிறது (குர்ஆன் 2:236,241). அவள் கர்ப்பிணியாகவோ பாலூட்டும்தாயாகவோ இருந்தால், அப்போது அவளுக்குரிய செலவினங்களை கணவன் கொடுக்க வேண்டும் (குர்ஆன்65:6-7, 2:233)

3.அத்துடன் குழந்தைக்கான செலவு தந்தையின்மீதே உண்டாகும்.

4.அப்பெண்ணுக்கு மறுமணம் செய்வதும் சர்வசாதாரணமாக ஆக்கியுள்ளது.

5.அத்தோடு பெண்களுக்கு சொத்துரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் உண்டு என்பதால் பாதிப்பு என கூறுவது தற்குரித்தனமானதே

இதே நிலை தானே கணவன் நிரந்தர நோயாளியாகவோ இறந்துவிட்டாலுமோ ஏற்படும்!

இப்படி ஒழுங்கின்றி இருந்த விவாகரத்தை மிகவும் தூய்மையாக ஒழுங்குபடுத்தியுள்ளது இஸ்லாம். ஆனாலும் கணவன் மனைவி பிரிவதே சைத்தானுக்கு மிகவும் விருப்பமானது என்றும் இஸ்லாம் கூறுகிறது (முஸ்லிம் 5419 (2813b)). தகுந்த காரணங்களுக்காக செய்வதை தவிர மற்றையவை வெறுக்கப்பட்டதும் சைத்தானுக்கு விருப்பமானதும் ஆகும்

 

பைபிள் தான் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை மணப்பதை விபச்சாரம் என்று கூறுகிறது.

பைபிளும் பழைய ஏற்பாட்டில் விவாகரத்தை அனுமதிப்பதால், இதே கேள்வியை அக்கால மக்களுக்கும் பொருத்திப் பார்த்து கேட்டுக்கொள்ளவும் .

 

விவாகரத்தை தடைசெய்த கிறிஸ்தவத்தில் தான் இஸ்லாத்தைவிட அதிக விவாகரத்துக்கள் நடக்கின்றன

 

1:25:33

 

117.கற்பழிப்பை அல்லாஹ் விதியாக்கி வைத்திருப்பதாக கூறி குர்ஆன் 4:24ஐ குறிப்பிடுகிறார் . அதாவது கணவனுள்ள அடிமைப் பெண்ணை நிகாஹ் செய்ய அனுமதித்திருப்பதாக உலருகிறான். 

(1:26:45)

எதிரிகளுடன் போர் செய்து போரில் அடிமையாக பிடிக்கப்பட்ட பெண், அப்போது கணவனிருந்தாலும் அந்த திருமணம் துண்டித்துவிடும்.(முஸ்லிம் 2885,2887). ஏனெனில் அப்போது அவர்களது சொத்தாக ஆகிவிடுவார்.

ஆனால் மற்ற கணவனுள்ள பெண்களோ (4:24),  அல்லது அடிமையான பின் திருமணம் செய்து கணவன் உடைய  அடிமை பெண்ணோ ( எனில், அதற்கு அனுமதி கிடையாது.

அத்துடன் தன் அடிமைப்பெண் அல்லாமல் தன் மனைவியின் அடிமைப்பெண்ணோடு சேர்ந்தால் கூட அதை விபச்சாரம் என்று தான் பார்க்கிறது இஸ்லாம் (புகாரி 2290)

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது.

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

பைபிள் கர்த்தர் கற்பழிப்பை விதியாக்கிய விதம் பின்வருமாறு

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:11-12 TAERV

 

[11] “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! [12] நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்என்றார்என்றான்.

https://bible.com/bible/3154/2sa.12.11-12.TAERV

இதற்கு முன்பு சவுலின் மனைவிகளையும் தாவீதுக்கு கொடுத்தார்:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:8 TAERV

 

[8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.

https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV

-கற்பழிப்பதற்கே ஐடியா கொடுக்கும் விதமாக, கற்பழித்தவனுக்கே கன்னியை கொடுக்க வேண்டும் என்று உபாகமம் 22:28-29 கூறுகிறது

இது தானே கற்பழிப்பையே சட்டமாக்குதல்.

நான்காம் வீடியோ முடிவு

to read next part

Comments

Popular posts from this blog

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

குர்ஆனா பைபிளா Dr Fazl vs YDM 1

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 1